மு.வீ.சோமசுந்தரம்
ஏ! ஏதென்ஸ் நாட்டு வாலிபர்களே! இந்தக் கிழவன் உங்களை அழைக் கிறான். அறிவாயுதம்! அறிவாயுதம்!! அறிவாயுதத்தை ஏந்துங்கள்!
நாகரிகத்தின் தொட்டில், கேள்வி யறிவின் பிறப்பிடம் என்று பாராட்டப்படும் கிரேக்க நாட்டின் வீதிகளில் அறிவு உரை வீச்சை வீசி வந்த சாக்ரடீஸ், அடக் கத்தின் இலக்கணம். பகுத்தறிவின் இமயம். அவரின் வீதி முழக்கமே மேலே உள்ள வரிகள்.
இந்த அறிஞர் சாக்ரடீசுக்கு இணை யாக ஒருவரை உலகப் பார்வையில் கொண்டு வந்து நிறுத்த அய்.நா. யுனெஸ்கோ மன்றம் அலசியபோது, மன்றத்தின் பார்வைக்குள் வந்தவர் நமது பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். பெருமை அடைகிறேன். மகிழ்ச்சியால் பூரித்துப் போகிறேன்.
கிரேக்க நாட்டின் மாசிடோனியா வின் மன்னன் பிலிப்புக்கு, ஆண் மகன் அலெக்ஸாண்டர் பிறந்தான். தத்துவ மேதை அரிஸ்டாட்டில், மன்னன் பிறப் புக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினான். மன்னன், அரிஸ்டாட்டிலுக்கு செய்தி அனுப்பினான்.
எனக்கு மகன் பிறந்தது பெரு மகிழ்ச்சியல்ல. நான் பெரிதும் மகிழ்வது, என் மகன் நீங்கள் வாழும் காலத்தில் பிறந்ததுள்ளானே என்பது தான், என்று பதில் கடிதம் எழுதினான். அந்த வகையில் தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் நான் பிறந்தேன், அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தேன் என்று கூறிக்கொள்வதில் பெருமை அடை கிறேன்.
பெரியார் பிறந்து வாழ்ந்த காலத்தில் பல லட்சம் பேர் பிறந்து வாழ்ந்து கொண் டிருப்பர். என்னைப் போல் அவர்களும் பெருமைப்படுவது நியாயமே! அவர் களுக்கு வாழ்த்துகள்.
நான் பெருமைப்படுகிறேன் என்று கூறிக்கொள்வதோடு, அவர் தொண் டினால் பலனும் அடைந்துள்ளேன் என் பதையும் நன்றியுடன் பதிவு செய்வது முக்கியம்.
மனிதன் தன்னை அறிந்து கொள்ள வேண்டும். மற்ற மனிதர்களையும் மதிக்க வேண்டும். விலங்குகளுக்கு இல்லாத பகுத்தறிவு மனிதனுக்கு உண்டு. அந்தப் பகுத்தறிவைப் பயன்படுத்தும்போதுதான் மனிதன் விலங்குகளிடமிருந்து மாறுபட் டவன் என்பதை உணர்ந்து வாழ்க்கையை அறிய முடியும். சுயமரியாதை உணர்வு மனிதனின் சொத்து.
பிறப்பும், இறப்பும் இயற்கையே. இவற்றிற்கு இடைப்பட்ட வாழ்நாளில், இயன்ற வகையில் பிறர் பழிக்கும்படி இழி செயல்களைச் செய்யாது, வாய்ப்புள்ள வகையில் வசதிக்கேற்ப, வாழும் சமூகத்துக்கு தொண்டறம் ஆற்ற வேண்டும்.
ஆடம்பரம், கருமித்தனம், சிக்கனம், இந்த சொற்களின் பொருளை யும், வேறுபாட்டையும் அறிந்து வாழ்க் கையை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வாழ்க்கை நெறிகளின் சீர்மையை நான் அறிந்து கொண்டதே பெரியாரால் நான் அடைந்த பலன் என்று கூறமுடியும்.
நான் கூறியுள்ளவை ஒரு மிளகு அளவு நன்மையே. பெற்ற படிப் பினை, அறிந்து கொண்ட உண்மைகள், அறிவு உரை வாதங்கள், தியாக உணர்வு ஏராளம்! ஏராளம்!! தாகம் தீர்ந்ததாகக் கூறமுடியாது. தன்னையே முழுமையாக, பெரியார் பாதையில், தொண்டறப் பணி யில் சங்கமமாக்கிக் கொண்ட மானமிகு ஆசிரியரே இன்னமும் பெரியாரைப் படித் துக் கொண்டு வருகிறார். நான் எம் மட்டோ?
வயது 80 என்றாலும், உள்ளத்தில், உணர்வில் 35, 40 ஆகத்தான் உணர் கிறேன். பெரியாரின் சிந்தனையை அசை போடுதல் காரமாண இருக்கலாம். 60 ஆண்டுகளுக்கு முன், பெரியார், கொள் கைக் குருகுலக் கோயில், உற்சவர் அறி ஞர் அண்ணாவின் பேச்சு, புத்தகங்கள் மூலம் மாணவப் பருவத்தில் ஈர்க்கப்பட்டு, 5,6 ஆண்டுகளுக்குப் பிறகு மூலவர் சன்னிதியின் மாண்பை உணர்ந்து, பெரி யாரைப் பேணாதொழுகிற் வாழ்க்கை பிழைபட்டதாகிவிடும் என்ற மனநிலை ஏற்பட்டது.
இளமைக் காலத்தில் 45 ஆண்டுகளுக்கு முன், பெரியார் வழங்கிய அறிவாயுதம், வாழ்க்கை அரணாக அமைந்துவிட்டது. பெரியாரின் கருத்து, காந்த சக்தியால் ஈர்க்கப்பட்ட காளை யர்கள், கன்னியாகுமரியிலிருந்து வட சென்னை வரை, பெரியாரின் கொள்கைத் தூதுவர்களாக சூறாவளியாக, சுயநல மின்றி பணியாற்றுவது திராவிட இனம் தழைக்க நம்பிக்கை நடவு செய்கின்றனர். அன்னை மணியம்மையார் பாதையில் மகளிர் பட்டாளம் பல்வகை அறிவு பூர்வமான திட்டமிட்ட நிகழ்ச்சிகளும் திராவிடர் கழகத்திற்கு வலிமை சேர்த்து வருகிறது.
இத்தனையும் இங்கு எழுதுவது, ஆகஸ்ட் 13 ஆம் தேதி இளைஞர் நாகையில் நடைபெற உள்ள மாணவ, மாநாடு, திராவிட, மாணவரிடையே ஒரு விழிப்பையும், எழுச்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்ற விழைவால். இன்று நம்மிடையே உள்ள, இனமானப் பேராசிரியர் முதற்கொண்டு ஒரு மாணவர் படையே எழுச்சி பெற்றது.
மானமிகு கலைஞர், இளைஞர் உலகத்தின் பெரியார் பட்டாளத்தின் முன்மாதிரித் தொண்டராக இன்றும் விளங்குவதைக் கருத்தில் கொண்டு, கும்பமேளா கூட்டம் தலை குனியும் வகையில் நம் இளைஞர்கள் பொங்கி எழுந்து வரவேண்டாமா? மாநாடு பயிற்சிப் பட்டறையாக அமையும்.
புடம் போட்ட பகுத்தறிவாளர்களாகத் திகழ நல்ல வாய்ப்பு. பட்டை தீட்டப்பட்ட பெரியார் இளைஞர் தொண்டராகத் தொண்டு செய்து வலம் வர வழி கோலும். நம் தமிழர் தலைவர், குடி அரசு இதழில், 1944 இல், பெரியார் அவர்கள், இளைஞர்களுக்கு வழங் கிய சிந்தனை முத்துக்களை, 2-8-2011 விடுதலை இதழில் சுட்டிக்காட்டி யுள்ளார்.
அதனைப் படியுங்கள். பெரி யாரின் கொள்கைப் புயலாக, செயல் வீரர்களாக, ஒழுக்க சீலர்களாக வெளி வந்து, பெரியார் தத்துவத்தை, தொண் டினை உலகறியச் செயல்படுங்கள். தமிழர் தலைவர் மிக விரைவு வேகத் திட்டங்களுக்குத் துணை நில்லுங்கள்.

No comments:
Post a Comment