நாகையிலே திராவிடர் கழக மாநில மாணவர் அணி மாநாட்டு ஏற்பாடுகள் (ஆகஸ்டு 13) வாயு வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எங்கு பார்த்தாலும் மாநாட்டின் வருகையை முன் கூட்டியே பறையடித்து விளம்பரப்படுத்தும் சுவர் எழுத்துகள்.
இப்பொழுதே களை கட்டிவிட்டது.
நாகை என்றால் சாதாரணமா? எத்தனை எத்தனைக் கழகக் கல்வெட்டு மாநாடுகளாக பரிணமித்திருக்கிறது.
இப்பொழுது நாகையில் நடக்கவிருக்கும் இதே அவுரித் திடலில்தான் 1954 ஜனவரி 27, 28 ஆகிய இரு நாள்களிலும் முப்பெரும் மாநாடுகள் - சென்னை மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாநாடு, தஞ்சாவூர் மாவட்ட பெண்கள் மாநாடு, தஞ்சை மாவட்ட திராவிடர் கழக மாநாடுகள் என்று முப்பெரும் மாநாடுகள் நடைபெற்றன.
சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த நேரம். அரை நேரம் படித்தால் போதும், மீதி அரைநேரம் அப்பன் தொழிலை பிள்ளை செய்ய வேண்டும் என்ற சதித் திட்டம்!
தந்தை பெரியார் தணல் புயலாய், வெகுண்டெழுந்து, திராவிடர் கழகம் தீப்பிழம்பாய்க் கொந்தளித்துக் கிளர்ந்தெழுந்த காலகட்டம்.
அதற்கு இரு நாள்கள் முன்னர்தான் ஈரோட்டிலே புத்தர் கொள்கைப் பிரச்சார மாநாடும் (ஜனவரி 23), குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு மாநாடும் (ஜனவரி 24) நடைபெற்றன. இலங்கையிலிருந்து டாக்டர் ஜி. மல்லலசேகரா, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அருமருந்தன்ன தளபதி ராஜ்போஜ் எம்.பி. முதலியோர் வந்து பங்கேற்றனர்.
அதற்கு முந்தியதாக 1953 அக்டோபர் 10, 11 ஆகிய இரு நாள்களிலும் சேலம் ஆத்தூரிலே சுயமரியாதை திராவிடர் மாநாடு.
திராவிடத் தோழர்களே, கத்தியை வைத்துக் கொள்வீர்! தாக்குவதற்காக அல்ல - தற்காப்புக்காக! ஆத்தூர் மாநாட்டிலே இவ்வாறு அரிமா குரல் கொடுத்தார் அய்யா.
பார்ப்பானே வெளியேறு! திராவிடனே தயாராக இரு! என்று விடுதலை, வீரக் குரல் கொடுத்தது.
ஆரியனை வெளியேற்றும் இந்தக் கிளர்ச்சிக்குப் பெரியார் நாள் குறிப்பிடுவார். பார்ப்பன விசுவாசிகள் எப்படியோ போகட்டும், பார்ப்பனத் துவேஷிகள் தயாராக இருங்கள் என்றது விடுதலை.
அப்படிப்பட்ட ஆவேசமான கால கட்டத்தில்தான் நாகை மாநாடு, 30 ஆயிரம் பேர் அந்தக் கால கட்டத்தில் கூடினர் என்றால் சாதாரணமா? புலிக்குட்டிகள், சிங்கக் குட்டிகள் ஆயிற்றே!
மாநாட்டின் சிறப்பு என்ன தெரியுமா?
நாகையிலிருந்து சென்னையை நோக்கி ஒரு படை. ஆச்சாரியார் புதிய கல்வித் திட்ட எதிர்ப்புப் படை என்று பெயர் சூட்டினார் பெரியார்.
மாநாடு ஜனவரி 27, 28 ஆகிய தேதிகளில் நடந்தது என்றால் ஒரே ஒரு நாள் இடைவெளியில் ஜனவரி 30 ஆம் தேதியிலிருந்து புறப்பட்டது தான் பெரியாரின் கருஞ்சட்டைப்படை.
இதே ஆகஸ்டு முதல் தேதியன்றுதானே (1938) தமிழர் பெரும்படை இந்தி திணிப்புப் போராட்டத்தை முன்னிறுத்தி திருச்சியிலிருந்து புறப்பட்டது!
திராவிடர் கழக வழிநடைப் படை என்றால் வரலாற்றில் அதற்கென்று கம்பீரமாக முத்திரை உண்டு. இந்த வகையில் திராவிடர் கழகத்திற்கு ஈடாகவோ, இணையாகவோ, ஏன் அருகே நெருங்கி வரக்கூட எந்தக் கட்சிக்கும், அமைப்புக்கும் தகுதி கிடையாதே.
நாகையில் புறப்பட்ட இந்த இலட்சிய வீரர்களைக் கொண்ட படைக்கு வழி நெடுக வரவேற்பு - பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள்.
மார்ச் 30இல் கீழ்வேளூரில் புறப்பட்ட இந்தச் சீறிடும் சிங்கப்படையின் சுற்றுப்பயண விவரத்தை விடுதலை நாள்தோறும் வெளியிட்டு வந்தது. ஒவ்வொரு ஊரிலும் கழகத் தோழர்களும், பொதுமக்களும் போட்டி போட்டுக் கொண்டு வரவேற்று உபசரிப்பு மழையால் நனைத்தனர்.
வருணாசிரமக் கல்வியை ஒழிப்பதற்காக வரலாறு ஒரு படையை அனுப்பிக் கொண்டிருந்தது என்று பொருள் அல்லவா!
சென்னைக்கு அருகே படை வந்தபோது தந்தை பெரியார் அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களும் படையை எதிர்கொண்டு அழைத்துப் பாராட்டினர்.
மார்ச் 30 இல் புறப்பட்ட இந்தப் பிரச்சாரப் புலிப்படை 500 மைல்கள் நடந்து ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னையில் தனது வரலாற்றுப் பொன்னடியைப் பதித்தது.
என்ன ஆச்சரியம்! இந்தப் படை சென்னைக்கு வந்து சேர்ந்ததும், ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டம் ஒழிந்ததும் பொருத்தமாகவே அமைந்துவிட்டது.
15 ஆயிரம் பேர் திரண்ட சென்னைக் கடற்கரைப் பொதுக் கூட்டத்தில் படை வீரர்களை தந்தை பெரியார் அறிமுகப்படுத்தினார். அதைவிட அந்தப் படை வீரர்களுக்கு வேறு என்ன புகழ் மாலையும், கிரீடமும் வேண்டும்?
அவ் வரவேற்புப் பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் பேசினார்:
இந்தத் தோழர்கள் சென்னை வந்து போராடி சிறை செல்லலாம் என்று எண்ணினார்கள். பாவம், ஏமாந்தார்கள். காமராசர் இவர்களை ஏமாற்றி ஆச்சாரியார் திட்டத்தை ஒழித்துவிட்டார் என்று பேசினார்.
இருள் கவ்விற்றோ தமிழரின் வாழ்வை? மீண்டும் வருணாசிரம நச்சுப் பாம்பு தன் விஷப் பையைத் திறந்து தமிழரின் வாழ்வைப் பலி கொண்டுவிட்டதோ என்ற அச்சம் தமிழர்களை உலுக்கிக் கொண்டிருந்த அந்தக் கால கட்டத்தில் நாகை மாநாடும், பிரச்சாரப் படையும், தமிழரின் வாழ்வில் ஒளியேற்றிய ஒப்பற்ற நிகழ்ச்சிகளாகும்!
நாகை ஆர்.வி. கோபால், நாகை மணி, நாகை கணேசன், நாகை எஸ்.ஆர். ஆறுமுகம் என்று எண்ணற்ற போர் வீரர்களை ஈன்று புறந்தந்த கொள்கைப் பாடி வீடு நாகை!
அந்தப் பாடி வீட்டிலே மாணவரணி மாநாடு என்கிறபோது உடல் அணுக்கள் எல்லாம் சிலிர்க்கின்றன.
திராவிடர் கழகம் முதியோர் கட்சி என்று ஒரு கால கட்டத்தில் நகையாடியதுண்டு. இன்றைக்கு இளைஞர்களும், மாணவர்களும், மகளிர் பாசறைகளும் தோள் தூக்கி நிற்கும் பாசறையாக அல்லவோ கழகம் செம்மாந்து நிற்கிறது!
சீரழியும் கலாச்சார நோயில் கவிழ்ந்து படுத்திருக்கும் தமிழின இளைஞர்களுக்கு இலட்சியப் பாட்டையில் புதுக்குருதியைப் புகுத்தி, புது மனிதர்களாக செதுக்கி, புலிக் குட்டிகளாக உருவாக்கும் ஒரு பெரும் பணியில் கழகம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
அன்று குலக்கல்வித் திட்ட காலகட்டத்தில் நாகை மாநாடுகள் என்றால், சமச்சீர் கல்விக்குக் குழி வெட்டி அதன் மேல் குலக் கல்விக் கள்ளியைப் பயிரிட நினைக்கும் சக்திகளுக்கு எச்சரிக்கை மணியடிக்கும் மாநாடாக இக்கால கட்டத்தில் இது நடைபெற உள்ளது.
இதில் கட்சி இல்லை; ஜாதி இல்லை; அரசியல் இல்லை; மானவாழ்விற்கான சங்கம் - சங்கமம்!
பேரணி உண்டு, கருத்தரங்கம் உண்டு, வரலாறு படைக்கும் தீர்மானங்கள் உண்டு.
எல்லாவற்றிற்கும் மேலாக தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளைத் தோளில் சுமந்து வெற்றி நடை போடும் நமது தலைவர் அவர்களின் வீரமணி ஓசை உண்டு! உண்டு!! உண்டு!!!
பட்டாளமாய்ப் படையெடுத்து வாரீர்!
குடும்பம் குடும்பமாய் வாரீர்! வாரீர்!!
கத்தும் கடல் சூழ்ந்த
நாகை கருஞ்சட்டைக் கழக வீரர்களின்
கர்ச்சனையைக் கேட்டு
காதடைத்துப் போகட்டும்!
காலத்தின் அழைப்பு இது
கடமையாற்றிட வாரீர்! வாரீர்!!

மின்சாரம்
No comments:
Post a Comment