அண்மையில் வாரணாசி நிகழ்ச்சி களில் கலந்து கொண்டு திரும்பும்போது, டில்லி விமான நிலையத்தில் நாசிம் நிக்கோலஸ் தலெப் என்ற மாறுபட்ட சிந்தனையாளர் ஒருவர் எழுதி, வெளி வந்துள்ள The Bed of Procrustes (புரோ கிரஸ்ட்டின் படுக்கை என்ற தலைப்பில் உள்ள) ஆங்கில நூலை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன் என் னுடன் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத் துணை வேந்தர் டாக்டர் நல். இராமச்சந்திரனும் இருந்தார்.
என்ன தலைப்பு விசித்திரமாக உள்ளதே என்று யோசிக்கிறீர்களா?
கிரேக்க புராணங்களில் வரும் மாஜி கடவுள்களின் கதை (இப்படித்தான் அறிஞர் அண்ணா அன்று விரிவாக ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையே எழுதியிருந் தார்) மிகவும் வேடிக்கையாகவும், சுவை யாகவும், சில பாடங்களைப் புகட்டு பவைகளாகவும் இருக்கும்!
அதில் ஒரு கதையின் நாயகனை வைத்து, தமது தத்துவ, முத்துக்களுக்கு இத்தலைப்பை வைத்துள்ளார் புத்தகா சிரியர்.
கிரேக்கத்தின் அடிக்கா என்ற ஒரு பகுதியில் உள்ள ஊர் கோரிடாலஸ் என்பது. அங்கே புரோகிரஸ்டஸ் என்ற ஒரு கொடியவன் ஒரு குறுநிலப் பகுதியை வைத்திருந்தான் - ஏதென்ஸ் நகரத் திற்கும் எலுசிஸ் என்ற நகரங்களுக்கும் இடையில்! இங்கு சில அதிசய சடங்குகள் நிகழ்ந்தன என்று பிரபலமாக்கப்பட்டது.
இந்த புரோகிரஸ்டஸ்க்கு ஒரு விசித்திர குணம் உண்டு. வழிப் போக்கர்களை கடத்திக் கொண்டு சென்று அங்கே அவனது பங்களாவில் அவர்களை வைத்து சிறப்பான விருந்து அளித்து விட்டு, தன்னிடம் உள்ள விசேஷமான ஒரு சிறப்புப் படுக்கையில் அந்த வழிப்போக் கனைப் படுத்து உறங்கச் செய்வானாம்!
அந்தப் பயனாளிக்கு அந்தப் படுக்கை சரியானதாக இருக்க வேண்டும் என்ற ஒரு காரணம் காட்டி, கடத்தப்பட்ட வழிப் போக்கனை விருந்து கொடுத்து முடித்து, இரவு படுக்க வைத்துவிட்டு பிறகு அங்கே வந்து பார்க்கையில், அவருக்கு அந்தப் படுக்கை சரியாக இல்லாவிட்டால் - அதாவது குட்டையாக இருந்தால் ஆசாமி களை நீட்டும் வேலை செய்து உபாதையை உண்டாக்கி மகிழ்வானாம்!
வந்தவருக்கு படுக்கை குட்டையாக இருக்குமேயானால் அவரது கால்களை தனது அரிவாளால் அதற்கேற்ப வெட்டி விடுவானாம்! (புரோகிரஸ்டஸ் என்ற செல்லுக்கே பொருள் நீட்டுபவர் (Stretcher என்பதுதானாம்)
பல வீரர்களைக் கொண்ட ஒரு வீரனான தேசஸ் (Thesus) என்பவன் இந்தக் கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைக்க அங்கு சென்று அவனது வக்கிரப் புத்தியை தனது அறிவின் திறத்தால் ஒழித்துக்கட்டி வழிப் போக்கர்களைக் காப்பாற்றினானாம்!
அந்த புரோகிரஸ்டஸ் என்பவனையே அந்தப் படுக்கையில் படுக்க வைத்தே அவனுக்குத் தகுந்த பாடம் புகட்டி விட்டானாம்!
அங்கே உள்ள ரகசியம் என்னவென் பதை தேசஸ் முதலில் கண்டறிந்து விட்டான்!
புரோகிரஸ்டஸ் இரண்டு படுக்கை களைத் தயாரித்து தனித்தனியே வைத் திருப்பானாம்!
உயரமானவர்களை குட்டையான படுக்கையில் படுக்க வைத்து கால்களை வெட்டுவது, குட்டையானவர்களை நீளமான படுக்கையில் படுக்க வைத்து கால்களை நீட்டுவது (Stretcher) என்ற சூழ்ச்சியை இந்த வீரன் தேசஸ் புரிந்து கொண்டு புரோகிரஸ்டஸ் படுக்க வைத் துப் பழி வாங்கிய பாடம் புகுத்தினான் என்பது கிரேக்க புராணம்!
இந்தக் கதையை மேற்கோளாக்கிக் கொண்டு தன்னுடைய புதுவகை சிந்தனைகளை மிகவும் நகைச்சுவை உணர்வு பொங்க இந்த ஆசிரியர் விளக்குகிறார். அந்தப் புத்தகம் நம் சிந்தனைகளை சிறகடித்துப் பறக்க வைக்கக் கூடியதாய் உள்ளது.
இன்றைய உலகின் நவீன வேக வாழ்வில் நம்மில் பலர் கிரேக்கக் கொடுமைக்காரனான புரோமித்தியஸ் படுக்கை போல நமது சிந்தனைகளை யும் செயலாக்கங்களையும் அதன் இயல்புப்படி சுதந்திரமாக வளரும்படி விடாமல், அதனை வேண்டுமென்றே குறுக்கியோ, நீட்டியோ நமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப செய்து கொண்டு அவதியுறுகிறோம். இது தேவையற்ற செயல் என்ற பாடத்தை இதன்மூலம் சொல்லுகிறார் இந்த நூலாசிரியர்.
நல்ல குழந்தைகள், அறிவுள்ள குழந்தைகளைப் பெற வேண்டும் என்ப தற்கு பல பெண்களை மருந்துகள் பல வற்றைத் தந்து கருத்தரித்த நிலையில், சங்கடப்படுத்துவது ஒரு பழக்கம்!
குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ப சுதந்தரமாக அவர்களை வளர, சிந்திக்க விடாமல் - நமது ஆணைகளுக்கேற்ப அவர்கள் நடந்து கொள்ள வேண்டு மென்று நினைப்பவர்கள் கிரேக்க புரோகிரட்டஸ் படுக்கையில் போடுவது போன்ற கொடுமையான பெற்றோர்கள் தானே!
நம்மைப் பழி வாங்குவோர் திட்ட மிட்டே நமக்கு இந்த இருவகை படுக் கைகளில் ஒன்றை அளித்து ஒழித்துக் கட்ட நினைப்பார்கள். நாம்தான் கவனத் துடன் இருந்து அந்த சூழ்ச்சியை வென்று மீள வேண்டும்! இல்லையா?

No comments:
Post a Comment