நாகப்பட்டினத்தில் திராவிடர் மாணவர் கழக இன எழுச்சி மாநில மாநாடு ஆகஸ்ட் 13 அன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார். பொதுப்பட்டியலிலிருந்து கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அகில இந்திய அளவில் மருத்துவக் கல்வியில் பொது நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்து இட ஒதுக்கீட்டுக்கு கேடு விளைக்கும் மத்திய அரசின் போக் கினைக் கண்டித்தும், தமிழின மாணவர் களை பான்பராக், புகைப்பழக்கம், மது, சினிமா, கிரிக்கெட், மதம் என பல்வேறு போதைகளிலிருந்து பாதுகாக்கவும் திராவிடர் மாணவர் கழகம் நாகையில் இன எழுச்சி மாநில மாநாட்டினை நடத்து கிறது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந் தும் பல்லாயிரக்கணக்கில் மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.
காலை நிகழ்ச்சி காலை 9 மணிக்கு புத்தூர் அண்ணா சிலை அருகிலுள்ள புனித ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் சுயமரியாதை சுடரொளிகள் பருத்தியூர் அய்யாசாமி, நுழைவு வாயில் கொட்டாரகுடி எம்.ஆர். பொன்னுசாமி நினைவரங்கத்தில் கலை மாமணி திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. காலை 9.30மணிக்கு குருதிக் கொடை விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது. இதற்கு வேளாங்கண்ணி திராவிடர் உணவகம் மு. அந்தோணி சின்னராசு தலைமை தாங்குகிறார். திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி தொடங்கி வைக்கிறார்.
மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப் பாளர் இல. மேகநாதன், தி.மு.க. இளை ஞரணி நாகை மு.க.ஜீவா, வேளாங் கண்ணி செம்மீன் உணவகம் எம். ஆரோக் கியசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் ப. கதிர் நிலவன், ஒன்றிய தி.க தலைவர் வீ. இராஜ மாணிக்கம், ஒன்றிய தி.க செயலாளர் பி. செல்வராசு ஆகியோர் முன்னிலை வகிக் கின்றனர். குருதிக் கொடை முகாமினை இரா. சேதுராமன் ஒருங்கிணைக்கிறார்.
காலை 10 மணிக்கு திராவிடர் கழகக் கொடியினை ஏற்றி வைத்து வேலூர் மண்டல மாணவரணி செயலாளர் கே.சி.ஏ. சிற்றரசு உரையற்றுகிறார். திருவாரூர் மண்டல மாணவரணி செயலாளர் ஆர்.சுரேஷ் வரவேற்று பேசுகிறார். காலை நிகழ்ச்சிகளுக்கு மாநில மாணவரணி துணைச் செயலாளர் ச.சீ.இளந்திரையன் தலைமை தாங்குகிறார். மாநில தி.க. சட்டத்துறை தலைவர் வழக்கறிஞர் கி.மகேந்திரன் தொடக்க உரை ஆற்று கிறார்.
தொடர்ந்து தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், அறிஞர் அண்ணா, புரட்சி கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் படங்களைத் திறந்து வைத்து மாணவர் கழக பொறுப்பாளர்கள் முறையே தென்காசி மானவீரன், சென்னை ம.வீ. கனிமொழி, பழனி பொன். அருண் குமார், புதுக்கோட்டை கு. கருணாகரன் ஆகியோர் பேசுகின்றனர்.
இன்றைய தமிழின இளைஞர்களின் வாழ்விற்கும், உயர்விற்கும் பெரிதும் தேவை - பகுத்தறிவே, இன உணர்வே, மொழியுணர்வே எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற இருக்கிறது. இதற்கு முனைவர் அதிரடி.க. அன்பழகன் நடுவராகவும் பகுத்தறிவே எனும் அணியில் இராம. அன்பழகன், கோவி. பெரியார் முரசு, மாங்காடு மணியரசன் ஆகியோரும் இனஉணர்வே எனும் அணியில் வழக்குரைஞர் சு. சிங்காரவேலர், தி. என்னாரெசு பிராட்லா, வீர. சிற்றரசு ஆகியோரும் மொழியுணர்வே எனும் அணியில் வழக்குரைஞர் பூவை. புலிகேசி, யாழ். திலீபன், வழக்குரைஞர் சு. விஜய குமார் ஆகியோரும் வாதிடுகின்றனர்.
பகல் 12.45 மணியளவில் மாநாட்டில் மிக முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப் பட இருக்கின்றன. மதியம் 1 மணியளவில் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கருத்துரை ஆற்றுகிறார். நாகை மாவட்ட மாணவரணி செயலாளர் நா. பொன்முடி நன்றி கூறுகிறார். காலை நிகழ்ச்சிகளை மருதூர் சு. செம்மொழிமணி தொகுத்து வழங்குகிறார். மாணவர்கள் அணிவகுப்பு மற்றும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி
மாலை 4 மணியளவில் புத்தூர் நான்கு சாலை சந்திப்பிலிருந்து திராவிடர் மாண வர்களின் தீரமிக்க அணி வகுப்பு மற்றும் மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி நடைபெறுகிறது. பேரணிக்கு கடலூர் மண்டல மாணவரணி செயலாளர் தா.தம்பி பிரபாகரன் தலைமை தாங்குகிறார். மாநில தி.க இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார் தொடங்கி வைக்கிறார். அலகுகுத்தி கார் இழுத்தல், நாக்கில் சூடம் கொளுத்துதல், தீச்சட்டி எடுத்தல், அரி வாள் மீது ஏறுதல் உள்ளிட்ட மூடநம் பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகள் இடம் பெறு கின்றன.
மாநாட்டுப் பேரணி புத்தூர் அண்ணா சிலை மேல கோட்டை வாசல், சி.எஸ்.அய். பள்ளி, நான்கு கால் மண்டபம், எல்.அய்.சி. வழியாக அவுரித் திடலை வந்தடையும். மாநாட்டு பேரணியை நான்கு கால் மண்டபம் அருகில் அமைக்கப்பட்டு உள்ள தனி மேடையில் இருந்து தமிழர் தலைவர் கி. வீரமணி பார்வையிடுகிறார்.
மாநாடு - உரையரங்கம்
நாகை அவுரித்திடலில் மாலை 5 மணிக்கு தோலி. ஆர். சுப்ரமணியம் நினைவரங்கத்தில் பாப்பாநாடு எஸ்.பி. பாஸ்கரின் பல்சுவை நிகழ்ச்சியுடன் மாநாட்டின் மாலை நிகழ்ச்சிகள் தொடங்கு கின்றன. சடையார் கோவில் நாராயண சாமி குழுவினரின் வெள்ளிவிழா கோலாட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து மாநில மாணவரணி துணைச் செயலாளர் நம்பியூர் மு. சென்னியப்பன் அனைவரை யும் வரவேற்றுப் பேசுகிறார்.
தலைவரை முன்மொழிந்து அத்திவெட்டி வீ. வீரமணி, வழிமொழிந்து சி. பாலமுரளி கிருஷ்ணா பேசுகின்றனர். மாநாட்டிற்கு மாநில மாணவரணி செயலாளர் ரெ. ரஞ்சித் குமார் தலைமை தாங்குகிறார். மாநாட்டினை தொடங்கி வைத்து திராவிடர் கழகத் தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ் உரையாற்று கிறார்.
தொடர்ந்து ஆரியர்-திராவிடர் போராட்ட களத்தில் திராவிடர் கழகம் எனும் தலைப்பில் உரையரங்கம் நடை பெறுகிறது. பார்ப்பன ஊடகங்களின் சூழ்ச்சிகளும், பாழாகும் தமிழர்களின் உரிமைகளும் எனும் தலைப்பில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், சமூக நீதிக்கு எதிரான நுழைவுத் தேர்வும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றிட வேண்டிய கல்வித் திட்டமும் எனும் தலைப்பில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் சு. அறிவுக் கரசு, சங்கராச்சாரி முதல் நித்யானந்தா வரை, சாமியார்களும் - கேலிக் கூத்தாகும் மதச்சார்பின்மையும் எனும் தலைப்பில் திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், ஈழத்தமிழர்களின் பிரச்சினையும் - இன்றைய நிலையும் எனும் தலைப்பில் திராவிடர் கழகப் பேச்சாளர் இரா. பெரியார் செல்வன் ஆகியோர் பேசுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து நாகை நகர செயலாளர் சோ.ம.வீரமணி, நகர தலைவர் மா. குஞ்சுபாபு, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சி.பி.க நாத்திகன், நாகை மாவட்ட செயலாளர் தெ. செந்தில்குமார், நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி. அழகப்பன், திருவாரூர் மண்டல செயலா ளர் கோட்டூர் பா. அசோகன், திருவாரூர் மண்டல தலைவர் எஸ்.எஸ். மணியம், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, துணைப் பொதுச் செயலா ளர் உரத்தநாடு இரா. குணசேகரன், பொருளாளர் கோ. சாமிதுரை, செயலவைத் தலைவர் இராசகிரி கோ. தங்கராசு ஆகியோர் உரையாற்றுகின்றனர். நிறை வாக இரவு 9 மணியளவில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் மாநாட்டு இன எழுச்சிப் பேருரை ஆற்றுகிறார்.
இறுதி யாக மாநில மாணவரணி துணைச் செயலாளர் ம. திராவிட எழில் நன்றி கூறுகிறார். நிகழ்ச்சியினை சென்னை சட்டக் கல்லூரி மாணவர் ச. மலர்மன்னன் தொகுத்து வழங்குகிறார்.
மாநாட்டுக்கு வருகை தரும் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு மாவட்ட திரா விடர் கழகம் சார்பில் கீழ்வேளூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து சுவரெழுத்துகள், தட்டி விளம்பரங்கள், கல்லூரிகள், பள்ளிகள் முன்பு வாயில் கூட்டங்கள் தெருமுனைக் கூட்டங்களை திராவிடர் மாணவர் கழக தோழர்கள், மாவட்ட ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
விழிப்புணர்வு முகாம்
திராவிடர் மாணவர் கழகம் மற்றும் பெரியார் மருத்துவமனை குழுமங்களின் சார்பில் நடைபெறும் குருதி வழங்கும் விழிப்புணர்வு முகாமில் சிறப்பு ஏற்பாடாக எடை மற்றும் உயரம் சரிபார்த்தல் குருதிப் பிரிவு, சர்க்கரை அளவு, இரத்த அணுக்கள் அளவு, சிறுநீரில் சர்க்கரை மற்றும் உப்பு அளவு ஆகிய பரிசோத னைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
Thursday, August 11, 2011
ஆகஸ்ட் 13: நாகப்பட்டினத்தில் திராவிடர் மாணவர் கழக இனஎழுச்சி மாநில மாநாடு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுச்சி உரை ஆற்றுகிறார்
Subscribe to:
Post Comments (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று, அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் ...
-
கொள்கைகள், லட்சியங்களைக் கொண்ட எந்த ஓர் இயக்கமும் வரலாற்றில் பல்வேறு கட்டங்களைக் கடந்துதான் வெற்றி வாகை சூடிட முடியும். அதிலும் மிகவும் கடி...
No comments:
Post a Comment