Thursday, July 21, 2011

கருநாடக மாநிலத்தில் கீதை கட்டாய பாடமாம்! ஜாதி தர்மம் தலை தூக்குகிறது பா.ஜ.க. ஆட்சியில்!


பெங்களூரு, ஜூலை 21- பாரதீய ஜனதா கட்சி ஆளும் கருநாடக மாநிலத்தில் நால் வருணம் பேசும் கீதை கட்டாயப் பாடமாக்கப்பட்டதால், சிறுபான் மையினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

கருநாடக மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி செய்கிறது. தென் மாநிலங்களில் கருநாடக மாநிலத்தில் முதன்முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைத்த காலம் முதல் மதவாதங்களும், ஊழல் புற்றுநோயும் தலை தூக்கி நிற்கின்றன.

பா.ஜ.க. தலைமை முதலமைச்சர் எடியூரப்பாமீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தொடை நடுங்கி நிற்கிறது. என்னை நீக்கிப் பாருங்கள் என்று டில்லியிலேயே செய்தியாளர்களை அழைத்துச் சவால் விட்டவர் இந்த எடியூரப்பா.

மதக் கிறுக்கும், பக்திக் கிறுக்கும் பிடித்த எடியூரப்பா, தான் சேர்ந்த இந்து வெறிக் கட்சியான பா.ஜ.க.வின் கொள்கைப்படி இப்பொழுது கீதை கட்டாயமாக சொல்லிக் கொடுக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். (9.6.2011). சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் என்று கீதையில் கிருஷ்ணன் சொன்னதாகக் கூறப்பட்டுள்ளது. நான்கு வகையான வருணங்களையும் நானே படைத்தேன் என்று கிருஷ்ணன் கூறுகிறான். அதை உண்டாக்கிய நான் நினைத்தாலும், அதனை மாற்றியமைக்க முடியாது என்று கிருஷ்ணன் கூறுவதாக அந்தக் கீதை கூறுகிறது.

பெண்கள் மீது இழிவு


பெண்களைப் பொருத்த வரையில் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்றும் கீதை கூறுகிறது.

இந்த அயோக்கியத்தனமான இந்து மத நூலை மதச்சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமாகப் பாடத் திட்டத்தில் புகுத்துவதற்குக் கருநாடகத்தில் கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியுள்ளது.

இந்த ஆணையை எதிர்த்து பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளது. மற்ற எதிர்க் கட்சிகளும் பா.ஜ.க. ஆட்சியின் ஆணைக்கு எதிர்ப்பைத் தெரிவித் துள்ளன.

எரியும் நெருப்பில் எண்ணெய்!

இந்த நிலையில் கரு நாடக மாநிலக் கல்வி அமைச்சர் லிங்கேஸ் வர ஹெக்டே காகேரி தெரிவித்துள்ள கருத்து எரியும் நெருப்பில் எண் ணெய்யை ஊற்றுவது போலாகிவிட்டது.

இந்தியர்கள் ஒவ் வொருவருக்கும் பகவத் கீதை புனிதமான நூல்! சூரியனைப் போன்ற அந்த நூலின் போதனைகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டியது அவசியம். இதை எதிர்ப்பது தேவை யற்றது. கீதையைப் பாடமாக வைப்பதை எதிர்ப்ப வர்கள் நாட்டை விட்டே வெளியேறிவிடலாம். அவர்களுக்கு இந்தியவில் இடம் இல்லை என்று பேசியிருக்கிறார்.

இப்படிப் பேசியுள்ள அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் சம்மேளனத்தின் சார்பில் ஆளுநரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

சம்மேளனத் தலைவர் முகம்மது இம்தியாஸ் கூறுகையில்,

அமைச்சர் அரசமைப்புச் சாசனத்தை மீறி விட்டார். அவரைப் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று மனுவில் கூறியுள்ளோம் என்று குறிப் பிட்டார்.

பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் மனுதர்மம்- பார்ப்பனீயம் தலை தூக்கி ஆடும் என்பதற்கு அடையாளம்தான் கீதையைக் கட்டாயப்பாடமாக ஆக்கியிருப்பது என்ற கருத்து பொது மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...