Wednesday, June 1, 2011

விடுதலை நாளேடு 77 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது


தமிழர் தம் போர் வாளாகிய விடுதலையின் பிறந்த நாள் இந்நாள் (1935).

76 முடிந்து விடுதலை தன் விவேகமும், வீரமும் பொருந்திய பொன்னடியை 77 ஆம் ஆண்டில் பதிக்கிறது.

இந்த 77 ஆம் ஆண்டில் அது சந்தித்த சர்ப்பங்கள் எத்தனை - விலாக் குத்துகள் எத்தனை! முதுகு பக்கம் குத்தியவர்கள் எத்தனை எத்தனைப் பேர்!

ஆனால், விடுதலையோ நேர்மையான போரை நடத்தி வந்திருக்கிறது. எதிர்வரும் அம்புகளை தன் மார்ப்புரத்தில் தாங்கி இருக்கிறது.

தமிழர்களின் மூச்சுக்காற்றான விடுதலை நிறுத்தப்படாததற்குக் காரணம் நமது மானமிகு ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். இதனை நாம் சொல்லவில்லை - அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களே அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார் (விடுதலை, 10.8.1962).

விடுதலையின் ஆசிரியராக 50 ஆம் ஆண்டில் அவர் அடியெடுத்து வைக்கும்போது (2012) வீட்டுக்கு வீடு விடுதலை விநியோகம் ஆகிறது என்ற நிலையை உருவாக்குவோம்! அதன்மூலம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் விடுதலை பணிமனை திறப்பு விழாவிலே (1965) கூறினார்களே - அதன்படி தமிழன் வீடு என்பதற்கான அடையாளத்தை ஏற்படுத்துவோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...