Monday, January 3, 2011

இந்தியா

இந்தியாவில் 77 விழுக் காடு மக்கள் நாள் ஒன் றுக்கு 20 ரூபாய் கூட செல வழிக்க இயலாதவர்களாக இருப்பதாக இந்திய அர சால் நியமிக்கப்பட்ட அர் ஜுன் சென்குப்தா அறிக்கை கூறுகிறது.


அதே நேரத்தில் இந்தி யாவின் கோயில்களில் சொத்துகள் குவிந்து கிடக் கின்றன. நகைகளின் மதிப்பு சொல்லியடங்காது. நேற்று ஒரு தகவல். ஜனவரி முதல் தேதி திருப்பதியில் கூடிய பக்தர்களின் எண் ணிக்கை ஒன்றேகால் லட் சமாம். அவர்களின் மூலம் கிடைத்த உண்டியல் வசூல் மட்டும் 3.80 கோடி ரூபா யாம். இது அல்லாமல் பல் லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளன. திருப் பதி கோயிலுக்குச் சொந்த மான தங்கக் கட்டிகளும் வங்கிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த வருமானம் போதாது என்று வேறு மாநிலங்களிலும் திருப்பதி கோயிலுக்குக் கிளைகள் உண்டாக்கப் பட்டு வருகின்றன.முதலாளிகளில் பெரிய ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் போன்றவற்றுக் குப் பல ஊர்களிலும் கிளைக் கடைகள் (Branches) வைப்பது இல்லையா? கோயிலும் வியாபார நிலை யம்தானே? அதனால்தான் கிளைக் கடைகளை நடத்தி வருகின்றனர்.


ஊட்டச் சத்துக் குறை வால் அவதிப்படும் 3 வய துக்கு உட்பட்ட குழந்தை கள் இந்தியாவில் 46 விழுக் காடு. கிழக்கு - ஆப்பிரிக் காவைச் சேர்ந்த குழந்தை களின் விகிதத்தை விட இது அதிகம் (அங்கு 35-40 விழுக்காடுதான்)


அய்.நா.வின் யுனி செஃப் அமைப்பும், இந்தி யாவின் சுகாதார அமைச் சகமும் இணைந்து தந்த புள்ளி விவரம் இது.


மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜாம்புவார் மாவட் டத்தில் மட்டும் கடந்த இரு மாதங்களில் ஊட்டச் சத் துக் குறைவு காரணமாக 28 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனவாம்.


1997-2001 ஆம் ஆண்டு களில் இந்தியாவில் கடன் தொல்லையால், விவசாயி கள் 1,99,132 பேர் தற் கொலை செய்து கொண் டுள்ளனர்.


1991-2001 ஆம் ஆண்டு களில் 80 லட்சம் விவசாயி கள் இந்தியாவில் விவசா யத்தை விட்டு வெளியேறி யுள்ளனர்- என்று பன் னாட்டு உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


உண்மையிலே இந்தியா வறுமை நாடா? இயற்கை வளங்கள் இல்லாத நாடா? என்றுகேட்டால், இல்லை என்பதுதான் அழுத்தமான பதிலாக இருக்க முடியும்.


கோயில்களில் முடங் கிக் கிடக்கும் தங்கங் களையும், வைரங்களையும் பறிமுதல் செய்து ரிசர்வ் வங்கிக்குக் கொண்டு வர வேண்டும். கோயில்க ளுக்கு வைப்பு நிதி ஏன்? கோயில் சாமிகள் சாப்பிடு கின்றனவா? - அசைகின் றனவா? அவற்றிற்கு எதற்காக இந்தத் திரண்ட சொத்துகள்? அவற்றை அரசுடைமை ஆக்கி மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தினால் தலை கீழான பொருளாதார மாற்றம் ஏற்பட வாய்ப்பு ஏற்படுமே! அரசு செய்யுமா?
- மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...