மேடையின் பின்புறம் அய்.நா. மன்றக் கட்டட வடிவமும், பன்னாட்டுக் கொடிகள் பறக்கும் காட்சியும் சித்திரிக்கப்பட்டு இருந்தது அல்லவா!
அந்த வரிசையில் தமிழனுக்கென்று ஒரு சுதந்திர நாட்டின் கொடி பறக்கவேண்டும் என்ற உணர்வின் அடிப் படையில் கொடியேற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
பல லட்ச மக்களும் மிக ஆர்வமுடன் அந்தக் காட்சி யைக் காணும் ஆவலில் இருந்தனர்.
கருஞ்சிறுத்தையும், விடுதலைச் சிறுத்தையும் இணைந்து தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகி யோரின் இலட்சியங்களை முன்னெடுத்துச் செல்ல களப் பணி ஆற்றும் என்று தமிழர் தலைவர் கூறியுள்ளார். அதற் கான அடையாளம்தான் இந்தக் காட்சி! இந்த மாநாட்டுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை மட்டுமே அழைத்த தற்கும் அதுதான் காரணம்.
இப்பொழுது தமிழர் தலைவர் உலகத் தமிழர்களுக் கென்று ஒரு நாடு - தமிழர்களுக்கென்று ஒரு தாயகம் வேண்டும். தமிழன் கொடி அய்.நா.வில் பறக்கவேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்தும் முகமாக தமிழர்களின் சுதந்திரத் தாகத்தை வெளிப்படுத்தும் கொடியை ஏற்றி வைப்பார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் அறிவித்தபோது, எழுந்த கரவொலியும், ஆர்ப்பரிப்பும் அப்பப்பா, வார்த்தை கட்டுக்குள் அடங்காது.
தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தோழர் தொல். திருமாவளவன் அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று ஒரு கயிறைத் தமிழர் தலைவரும், இன்னொரு புறம் தொல். திருமாவளவன் அவர்களும் இணைந்து தமிழர்களின் சுதந்திர தாகக் கொடியை மக்கள் கடலின் இடி முழக்கத்திற்கிடையே ஏற்றி வைத்தனர்.
அந்த சில மணித்துணிகள் வரலாற்றில் மிக முக்கியமானவை - பிற்கால வரலாற்றில் பேசப்படும் மிக உயர்ந்த நேரம் அது!
சிவப்பு, மஞ்சள், குறுக்கே நீலம், இடையில் நட்சத்திரம்
என்ற வடிமைப்பைக் கொண்டது அந்தக் கொடி!
சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் கொடிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடியின் நட்சத்திரமும் இணைந்த கொடியாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது என்று கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்தார்.
No comments:
Post a Comment