Wednesday, July 21, 2010

அவாள் சாமியார்கள்


அவாள் சாமியார்கள்

மனிதர்களை நல்வழிப்படுத்த உருவாக்கப்-பட்டதே மதங்கள்; இதிலும் எங்களது இந்துமதம் இருக்கிறதே அதன் பெருமைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது; பாரத வர்தத்தில் தோன்றிய வேதகால மதமான இந்துமதத்திற்கு பெருமை சேர்ப்பவை புராணங்-கள், இதிகாசங்கள், வேதங்கள், மடங்கள் அதன் சாமியார்கள்; இவர்கள்-தான் மனுஷாளுக்கு முன் மாதிரிகள் என்றெல்லாம் கதாகாலட்சேபம் நடத்தி தமது மதத்தை காப்-பாற்றி வருகிறது ஆரியம்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட காட்டுமிராண்டிக்கால சமூக வழக்கங்களை இன்றும் பிடித்துக் கொண்டு தொங்கி தமது சமூக நலனைப் பேணிவரு-கிறார்கள்.
வெள்ளைக்காரன் கொடுத்த விஞ்ஞானக் கொடைகளையெல்லாம் வெட்கமில்லாமல் ஏற்றுக் கொண்டு (அவாள் பாஷையில் சொல்-வதானால் மிலேச்சர்கள்) இந்துமதப் பெருமை-களைப் பீற்றிக்கொள்வதும், பிரச்சாரம் செய்-வதும் அவாளின் பணி.
கால மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு புதிய புதிய உத்திகளைக் கடைப்பிடித்து தம்-மைத் தக்கவைத்துக் கொள்ளும் ஆரியம், தமது ஆதிக்கத்தை மட்டும் விட்டுவிடாது. எந்தச் சூழலி-லும் சமூக அரசியல் தளத்தில் உச்சத்தில் இருப்பது, மதத்தின்பெயரால் மூட-நம்பிக்கை-களைப்பரப்புவது, பெண்ணடிமையைத் தொடர்ந்து வலியுறுத்துவது, இந்த மண்ணின் மைந்தர்களை இணையவிடாமல் பிரித்து வைத்-திருக்க ஜாதியின் சூழ்ச்சி செய்வது இவை-யெல்லா-வற்றையும் செய்து கொண்டே எங்கே பிரா-மணன்? என்று எக்காளம் பேசுவது _ இதுதான் ஆரியம்.
இந்த ஆரியம் இப்படி இறுமாப்போடு வாய்ச்-சவடால் அடித்தாலும் ஆண்டுக்-கொரு-முறை அதன் நாற்றம் வெளியே வந்து விடுகிறது. மௌ-டீக மகான்களான அவாள் வகையரா சாமியார்கள் அடித்த லௌகீகக் கூத்துகள் அம்பலத்துக்கு வந்து விடுகின்றன.
காஞ்சி ஜெயேந்திர சங்கராச்சாரி அப்படித்-தான் மாட்டினார். கொலை வழக்கில் கைதான-வரின் கதையைத் தோண்டித் துருவிய போது பாலி-யல் சல்லாபங்கள் சதிராடின. இதே வழி-யில் காஞ்சியிலேயே ஒரு பார்ப்பன அர்ச்சகர் தேவனாதன் கடந்த மாதம் மாட்டி இப்போது கம்பி எண்ணிக்-கொண்டிருக்-கிறார்.
இவருக்கு அடுத்து புதிதாய் ஒருவர் விசா-ரணை வளையத்தில் இருக்கிறார். அவர் பெயர் ஈஸ்வரஸ்ரீகுமார் சாமியார். இவரும் அவாள் வகையறாதான் என்று அடையாறு பகுதி மக்கள் கூறுகின்றனர். இன்னும் ஒரு கொசுறுத் தகவல், இந்த ஈஸ்வர ஸ்ரீகுமார் சாமியார் காஞ்சி சங்கர மடத்துக்கு மிகவும் நெருக்கமானவர் என்கிறது பத்திரிகையாளர்கள் வட்டாரம். எப்படி மாட்டினார் இந்த சாமியார்? சென்னை அடையாறு சர்தார்பட்டேல் சாலையில் சக்தி விலாஸ் மெஷின் என்ற நிறுவனம் நடத்தி வந்தாராம். அங்கு வேலைக்கு ஆள் எடுப்பது அறிந்து சென்ற தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஹேமலதா என்ற பெண், நல்ல வேலை கிடைக்கும்கிற கனவோட அங்க போனேன். ஆனா அந்த சாமியாரால் என் வாழ்க்கையே நடுத்-தெருவுக்கு வரப்போகுங்கிறது அப்ப எனக்கு தெரியாமல் போச்சு, என்று அழுகிறார்.
தான் எப்படி அவமானப்படுத்தப்பட்டேன் என்பதை ஹேமலதா கூறுகிறார்:-_
இண்டர்வியூவில் சிவப்பு உடையில் இருந்த சாமியாரைப் பார்த்ததும் மரியாதையாகக் கும்பிட்டேன். ரொம்ப அன்பா என்னைப் பத்தி விசாரிச்சார். பிறகு உனக்கு என் நிறுவனத்தில் சூப்பர்வைஸர் வேலை போட்டுத்தர்றேன். எங்க நிறுவனத்தின் முழுப்பொறுப்பும் உன் கையில்-தான் இருக்கும். கொஞ்சநாள் இங்க வேலை பார்த்தபின் சிங்கப்பூரில் நம்ம பிராஞ்ச்-சைப் பார்த்துக்கணும். பெரிய சம்பளத்தில் வேலை போட்டுதர்றேன் என்று சாமியார் சொல்ல சொல்ல... பூரிச்சுப் போய்வட்டேன். சரி வேலைக்-கான ஆர்டரைத் தர்ரேன். வாங்கிட்டுப் போம்-மான்னு ஒரு அறையில் என்னை உட்காரச்-சொல்லிட்டு சாமியாரே காபி போட்டுக் கொண்-டு-வந்தார். அதைக் குடிச்ச நான்... அப்படியே மயக்கமாயிட்டேன்.
எனக்கு நினைவு திரும்பியபோது... என் ஆடைகள் அலங்கோலமா இருப்பதைப் பார்த்து பதட்டமா எழுந்திரிச்சி உட்கார்ந்தேன். பக்கத்தில் அந்த சாமியார் சிரித்தபடியே உட்-காந்திருந்தான். மயக்கத்தில் இருந்தபோது என்-னை இந்த சாமியார் சூறையாடியிருக்கான் என்று புரிஞ்சிபோச்சு... அடப்பாவி இப்படிப் பண்ணி-ட்டியேடான்னு சத்தம் போட்டேன். அந்த சாமி-யாரோ பதட்டமே இல்லாம... மயக்கத்-திலேயே உன்னை முழுசா படமெடுத்துட்டேன். சும்மா சொல்லக்கூடாது. உனக்கு அட்டகாச-மான உடம்பு. நீ சத்தம்போட்டு ஊரைக்கூட்-டினா... இங்க நான் மட்டும் பார்த்த உன் வெத்து-டம்-பை... உலகமே பார்க்கும்படி இண்டர்-நெட்டில் போட்டுடுவேன்னு மிராட்டினான். சாமியார் வேசம் போட்டு இப்படிப் பண்ணிட்-யேடா.. நீ நல்ல இருக்கமாட்டேன்னு... திட்டிட்டு வீட்டுக்கு வந்தேன். (நன்றி : நக்கீரன்)
பலமுறை இதேபோல மிரட்டியே பாலியல் வன்முறை செய்ததாக ஹேமலதா குற்றம் சாட்டி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
பகலில் சாதாரண உடையிலும் மாலை நேரங்களில் சாமியார் உடையிலும் இருப்பது ஈஸ்வர ஸ்ரீ குமாரின் வழக்கமாம். பெரிய தொழிலதிபர்களுக்காக சிறப்பு பூஜைகள் நடத்துவதும் இவரது தொழில் என்கிறார்கள். மத்திய அரசின் தொழிலாளர் நலக்குழுவின் உறுப்பினராக உள்ள இந்த ஈஸ்வரஸ்ரீகுமார், இந்த பதவியைக் காட்டி தன்னையாரும் நெருங்க முடியாதபடி அரண் அமைத்துக் கொண்டுள்-ளார்.
இந்த நிலையில் ஹேமலதா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரின் பேரில் மாம்பலம் காவலர்கள் ஈஸ்வரஸ்ரீகுமாரின் மீது கற்பழிப்பு மற்றும் கொலைமிரட்டல் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி-யுள்ளனர். ஹேமலதாவை மருத்துவ பரி-சோதனை செய்ய காவல்துறை முடிவுசெய்து சென்னை அரசு பொதுமருத்துவமனையிலும், எழும்பூர் மகப்பேறு மருத்துவ மனையிலும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்-பட்-டுள்ளன. புகார் கொடுத்த ஹேமலதா உள்பட 4 பேரிடம் இதுவரை விசாரித்துள்-ளோம். விசா-ரணை முடிந்த பிறகுதான் சாமியார் ஸ்ரீகுமாரை கைது செய்வது பற்றி முடிவு செய்யப்படும் என்று சென்னை காவல் ஆணையர் ராஜேந்-திரன் கூறியுள்ளார்.
ஹேமலதா மீதான வன்தாக்குதல் தவிர சிங்கப்பூரில் உள்ள இந்த சாமியாரின் வீட்டில் வேலை பார்த்த லூசி என்ற கேரள பெண்ணை ஆபாச படம் என்று பலமுறை நாசம் செய்த-தா-கவும், அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்-டதாகவும், இந்த விவகாரத்தில் சிங்கப்பூர் காவல்-துறை சாமியார் சிக்கியதாகவும் ஹேமலதா குற்றம் சாட்டியுள்ளார்.
யாரும் எந்த வாழ்க்கை நிலையிலும் எந்த வயதிலும் திடீரென காவி அணிந்து மடம் அமைத்து சாமியார் என தன்னைப் பறை சாற்றிக் கொள்ள இந்து மதம் லைசன்ஸ் அளித்-துள்ளது. மதரீதியாக இந்துமதத்தலைவர்-கள் வழி-காட்டிகள் என்று கூறிக் கொள்ளும் ஆச்-சார்யார்கள் இந்தச் செயல்களைச் கண்டிப்-ப-தில்லை. இதனால்தான் 10 வயது குட்டி சாமி-யாரில் தொடங்கி குமரிகளைக் களங்கப் படுத்தும் குடுகுடு கிழட்டு சாமியார்கள் வரை படை-யெடுக்கிறார்கள்.
பொது நலம் சார்ந்தாவது ஒழுக்க நெறிகளை மீறும் இத்தகைய பேர்வழிகளை இந்துமத அபி-மானிகளோ, இந்துத்துவம் ஒரு வாழ்வியல் வழி முறை என்று சொல்லிக்கொள்வோர்களே கண்டிப்-பதில்லை. கோயில் கருவறையில் சரச சல்லாபம் நடத்திய அர்ச்சகர் தேவநாதனையோ, அரசுக் குழு ஒன்றின் உறுப்பினர், ஒரு வி.அய்.பி என்ற போர்வையிலும் இந்துமதம் வழங்கிய சாமியார் லைசன்சுடனும் இருக்கும் ஈஸ்வர ஸ்ரீகுமாரையோ கண்டித்து இந்துத்துவாக்கள் இதுவரை ஒரு வார்த்தைகூட உதிர்க்கவில்லை.
மனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்ற மனப்பான்மையில்தான் பார்ப்பனீயம் இன்னும் இருக்கிறது. ஊரு உலகத்துக்கெல்லாம் நியாயம் பேசும் சோவானவர் வாய்மூடிக்கொண்டு பேனாமூடியைத் திறக்காமல்தான் உள்ளார். பார்ப்பனப் பத்திரிகைகளும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை, இதுதான் அவாள் தர்மம்.
இத்தகைய சாமியார்கள் மீது புகார்கள் எழும் போதெல்லாம் பொது மக்களிடம் இருந்து ஒரு குரல் எழுகிறது. சாமியார்களும் மடங்கள் நடத்துவோர்களும் தொடர்ந்து கண்காணிக்கப் படவேண்டும் என்றே அந்தக் குரல் ஒலிக்கிறது.
- மணிமகன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...