Friday, July 9, 2010

அசத்திய சூரிய கிரகணம் அகன்ற மூடநம்பிக்கைகள்



1. அழைப்பு மணி, 2. அல்லிப்பூ, 3. உமி, நெல், 4. கீரை விதை, 5. அரிசிச் சோறு, 6. வயிறு, 7. கண்கள், கைகள், விரல்கள், நாக்கு, 8. பாகற்காய், 9. வானில் நிலா, 10. ஊமத்தம் பூ சூரிய கிரகணம் எனப்படும் சூரியன் மறைப்பு என்பது வானில் நடக்கும் இயல்பான நிகழ்வுகளில் ஒன்றாகும். தத்தமது வட்டப்பாதையில் சுற்றிவரும் சூரியன், சந்திரன், பூமி இவை மூன்றும் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை ஒரே நேர்கோட்டில் வரும். அவ்வாறு வரும்போது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு வந்தால், பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியனின் ஒளியை நிலவு மறைக்கும். இதுவே சூரிய கிரகணம் எனப்படும்.

சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி வந்தால், பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும். இம்மறைப்பை சந்திர கிரகணம் என்கிறோம். இது மிகவும் இயல்பான நிகழ்வு ஆகும். ஆனால், ஒளிவீசி நிற்கும் கதிரவனின் ஒளி பகல் வேளையிலேயே மறைவது என்பது ஆச்சரியப்படத்தக்க ஒன்றாகும். அதனால் தான் சூரிய கிரகணம் பெரிதும் எதிர்பார்ப்போடு நோக்கப்படுகிறது. இவ்வாறு நிகழும் கிரகணங்கள் பூமியின் ஒரு பகுதியில் முழுமை யாகவும், மற்ற பகுதிகளில் பாதி மறைப்பாக வும், அதற்கும் குறைவாகவும் தெரியும். இம்முறை சூரிய கிரகணம் இந்தியாவின் வட பகுதிகளில் தெரிந்தது. தமிழ்நாட்டில் பகுதி மறைப்பாகத் தெரிந்தது.

ஆதிகாலத்தில், இது பற்றிய அறிவற்ற மனித இனம், வழக்கமான இரவு, பகல் என்பது மட்டுமல்லாமல், பகல் வேளையிலேயே திடீரென நடக்கும் இரவு போன்ற இந்நிகழ்வைக் கண்டு அஞ்சியது. அதனால், இதற்குக் காரணமாக பல்வேறு மூடநம்பிக்கை கள் உருவாயின. சூரியனை பறவை ஒன்று மறைப்பதாக தென் அமெரிக்காவிலும், சூரியனை டிராகன் மறைப்பதாக சீனாவிலும், ராகு, கேது என்ற பாம்புகள் சூரியனையும், சந்திரனையும் விழுங்குவதாக இந்து மதத்திலும், இன்னும் இது போன்ற மூட நம்பிக்கைகள் எங்கும் நிறைந்தன. அறிவு வளர்ந்த இக்காலத்திலும், இத்தகைய மூடநம்பிக்கைகள் பெருகி, அதற்குப் பெரு விளம்பரமும் கிடைத்துவிடுகிறது. சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் வெறுங்கண் ணால் சூரியனை பார்த்தால் திடீரென வெளிச்சக் குறைவும், மிகுதியும் மாறி மாறி ஏற்படுவதால் விழித்திரை பாதிக்கப்படும் என்பதால் அறிவியலாளர்கள் எச்சரிக்கை வெளியிட்டனர். ஆனால் மூடநம்பிக்கை வியாபாரிகளோ, இதுதான் சமயமென்று தங்கள் கொள்ளையைத் தொடங்கி விடுகின்றனர்.

சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் மீண்டும் சுனாமி ஏற்படும் என்று ஒரு ஜோதிடர் புருடா கிளப்பிவிட்டார். அதை அனைத்து பத்திரிகைகளும் பெரிதாய் வெளியிட்டன. இயற்கை நிகழ்வான சூரிய கிரகணம் ஏன் நடக்கிறது என்றும் இவர்களுக்குத் தெரிவ தில்லை; இயற்கைப் பேரழிவான சுனாமி எப்படி ஏற்படுகிறது என்றும் இவர்களுக்குத் தெரிவதில்லை. ஆனால், ஏதாவதொன்று கிடைத்தால் போதுமென்று மூடநம்பிக்கை சரக்கை மட்டும் அவிழ்த்துவிட்டுவிடுவார்கள்.

இது மட்டுமல்ல... சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் சாப்பிடக்கூடாது என்றும் ஒரு மூட நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட நமது ஆசிரியர் தாத்தா கி.வீரமணி அவர்கள் என்ன செய்தார் தெரியுமா? சென்னை பெரியார் திடல், தஞ்சையில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், திருச்சி உள்ளிட்ட பிற இடங்களில் உள்ள பெரியார் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் 2009 சூலை 22-ஆம் தேதி சூரியகிரகணம் நிகழ்ந்த அதே காலை 6 மணி முதல் 7.30 மணி வரையிலான நேரத்தில் காலை சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்தார். வேடிக்கையாக அதற்கு உண்ணும் விரதம் என்றும் பெயரிட்டார்.

இவையெல்லாம் மூடநம்பிக்கைகள் என்று சொல்லிக்காட்டுவதைக் காட்டிலும், அதை முறியடிக்கும் விதமாக செய்முறை விளக்கம் தந்தால் தானே சரியாக இருக்கும். அதிலும் கரும்புதின்னக் கூலியா என்று கேட்பதைப்போல, மூடநம்பிக்கையை முறியடிக்க சிற்றுண்டி என்றால் சும்மாவா? 22-ஆம் தேதி காலையில் மூடநம்பிக்கை யாளர்களெல்லாம் வீட்டுக்குள் பசியுடன் முடங்கிக் கிடக்க, பெரியார் திடலிலும், பெரியார் கல்வி நிறுவனங்களிலும், இனிப்புடன் கூடிய சிற்றுண்டியை சுவைத்து மகிழ்ந்தார்கள்.
ஜூலை 22-ஆம் தேதி நமது பெரியார் பிஞ்சு ஒருவருக்கும் பிறந்தநாள். வடசென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தோழர் பிரபாகரன் - லதா இணணயரின் மகனான அந்த பெரியார் பிஞ்சுக்கு அறிவுச் செல்வன் என பெயர் சூட்டி, பிறந்த நாள் கேக்கினை வெட்டி ஊட்டினார் ஆசிரியர் தாத்தா.

மூடநம்பிக்கையை முறியடிக்க நடைபெற்ற வித்தியாசமான இந்த உண்ணும் விரதம் குறித்து செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள் வந்திருந்தவர்களைப் பார்த்து பிரமித்தார்கள். ஆசிரியர் தாத்தாவிடமும் மற்றும் பிறரிடமும் இந்நிகழ்ச்சி குறித்து பேட்டியெடுத்தார்கள். செய்தியாளர்களையும் உணவருந்தச் சொன்ன ஆசிரியர் தாத்தா, "தைரியமா சாப்பிடுங்க... நாங்கள்லாம் சாப்பிட்டுட்டு நல்லாத் தானே இருக்கோம். பயப்படாதீங்க!" என்று அழைத்து, மேலும், "நாளைக்கு கூட வந்து பாருங்க.. நாங்கள்லாம் நல்லாத்தான் இருப்போம்." என்றார் பாருங்க.. அன்னைக்கு காலையில சிற்றுண்டி சாப்பிட்ட நானும் நல்லா இருக்கிறதினால்தானே இப்போ இதை எழுதியிருக்கேன்....!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...