Friday, January 1, 2010

ஜனவரி 2010

2.1.2010 மனிதநேய நண்பர்கள் குழு

சென்னை மனிதநேய நண்பர்கள் குழு சார்பில் (ழரஅயளைவ குசநைனேள குடிசரஅ) சென்னை காஸ்மாபாலிட்டன் கிளப்பில் நடைபெற்ற விழாவில் சிறந்த சாதனையாளர்களாக நீதியரசர் பி. இராஜேந்திரன், பட்டயக் கணக்காயர் டி.என். மனோகரன், மருத்துவர் எம்.எஸ். இராமச்சந்திரன், மயிலை நா. கிருஷ்ணன் (அவரது வாழ்விணையர் பரமேஸ்வரி) ஆகியோர் பாராட்டப்பட்டனர். திராவிடர் கழகக் தலைவர் கி. வீரமணி தலைமையேற்றார். குழுவின் பொருளாளர் வழக்குரைஞர். கோ. சாமிதுரை (பொருளாளர், தி.க) நன்றி உரையாற்றினார். நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம், மூத்த வழக்குரைஞர் தியாகராஜன். மருத்துவர் ஏ. ராஜசேகரன், ஆடிட்டர் கந்தசாமி, கவிஞர். கலி. பூங்குன்றன் (பொதுச்செயலாளர்) ஆகியோர் பாராட்டுரை நிகழ்த்தினர்.

4.1.2010 சேது சமுத்திர திட்டம் - பிரச்சாரப் படைகள்

சேதுசமுத்திரத் திட்டம் - பிரச்சாரப்படைகள்- சேதுசமுத்திரத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டங்கள் 4.1.2010 முதல் 12.1.2010 வரை மூன்று குழுக்களாக நடத்தப்பட்டன. முதற்குழு: கன்னியாகுமரி முதல் மதுரை வரை சிறப்புரை: பூவை. புலிகேசி கலைநிகழ்ச்சி: திருத்துறைப்பூண்டி சுரேஷ் முரளி, மன்னை முருகராசு ஒருங்கிணைப்பாளர்: வன்னிப்பட்டு செ. தமிழ்ச்செல்வன். இரண்டாம்குழு: ராமேஸ்வரம் முதல் மதுரைவரை: சிறப்புரை: இராம. அன்பழகன், கலைநிகழ்ச்சி: திருத்தணி பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர்: சாமி. திராவிடமணி (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) மூன்றாம் குழு: நாகை முதல் மதுரை வரை: சிறப்புரை: இரா. பெரியார்செல்வன் கலைநிகழ்ச்சி: சு. சிங்காரவேலர் ஒருங்கிணைப்பாளர்: தஞ்சை இரா. ஜெயக்குமார் (மாநில இளைஞரணி செயலாளர்.) நிறைவு விழா: 11.1.2010 மதுரை நேதாஜி சிலை அருகில். சிறப்புரை: தமிழர் தலைவர் கி. வீரமணி, வீதிநாடகம்: ச. சித்தார்த்தன்- பெரியார்நேசன் குழுவினர்.

11.1.2010 சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்ட விழிப்புணர்வுப் பயண நிறைவு விழா

சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் இருந்து விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட குழுக்கள் மதுரையில் சங்கமிக்கும் நிறைவுப் பொதுக்கூட்டம் கழக சட்டத்துறை செயலாளர் கி.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கழகக் தலைவலர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

17.1.2010 சிவகாசியில் பெரியார் மய்யம் அடிக்கல் நாட்டுவிழா

சிவகாசி காமராசர் பூங்கா அருகில் பெரியார் படிப்பகம், நூலகம், பெரியார் சிலையுடன் கூடிய பெரியார் மய்யம் கட்டு வதற்கான அடிக்கல்லை அ. சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் தமிழர் தலைவர் கி. வீரமணி திறந்து வைத்தார். பெரியார் மய்யத்திற்கான இடத்தினை சுபாஷ்சந்திரபோஸ் (காஞ்சனா போஸ் குடும்பத்தினர் அளித்துள்ளனர்)

21.1.2010- 24.1.2010 பெரியார் வீரவிளையாட்டுக் கழகம் நடத்திய சடுகுடு போட்டி

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 77ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டும் பெரியார் வீர விளையாட்டுக் கழகம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்திய (ஹ ழுசுஹனுநு) சடுகுடு போட்டி திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி வளாகத்தில் தொடங்கியது.

பிப்ரவரி 2010

2.2.2010 கார்க்கரேயைக் கொன்றது - யார்?

சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகமும், பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழாவில் மகாராட்டிர காவல்துறை அதிகாரி (ஓய்வு பெற்ற அய்.ஜி) எஸ்.எம். முஷ்ரிஃப் எழுதிய கார்க்கரேயைக் கொன்றது யார்? (றுழடீ முஐடுடுநுனு முஹஹசுமுஹசுநு?) என்று நூலினை கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட, கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை பெற்றுக் கொண்டார். ப.க. பொதுச் செயலாளர் வீ. குமரேசன் வரவேற்புரையும், நூலாசிரியர் எஸ்.எம். முஷ்ரிஃப் ஏற்புரையும் வழங்கினர். இவ்விழாவில், கழகத் தலைவர் தொகுத்தளித்த வன்முறையின் மறுபெயரே சங்பரிவார்க் கும்பல் என்னும் நூலினை தலித் வாய்ஸ் ஆசிரியர் வி.டி. ராஜசேகர் வெளியிட, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க. சண்முகம் பெற்றுக் கொண்டார்.

12.2.2010 துபாயில் தமிழர் தலைவர்

துபாயில் அமீரகத் தமிழர்கள் சார்பில் தமிழரங்கம் - 2010 என்ற நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு உரையாற்றினார்.

16.2.2010 ஈழத்தமிழர்க்கு வாழ்வுரிமை கோரி - ஆர்ப்பாட்டம்

ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரிமைகளை மீட்க மத்திய அரசினை வலியுறுத்தியும், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கவும் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை மெமோரியல் ஹால் முன்பு கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகப் பொருளாளர். கோ. சாமிதுரை, பொதுச் செயலாளர் கவிஞர். கலி. பூங்குன்றன், தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ் உள்ளிட்ட தலைமைக் கழக பொறுப்பாளர்களும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களின் கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர்.
23.2.2010-சென்னையில் மத்திய அரசின் புதிய கல்வி மசோதாவை எதிர்த்து மாணவர் பேரணி- மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கொண்டுவந்துள்ள தேசிய உயர்கல்வி ஆணையத்தின் சட்டமுன்வடிவினை எதிர்த்து, திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், மனிதநேயகழகம் (முஸ்லிம்லீக்) புரட்சிகர இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களும், அமைப்புசாரா மாணவர்களும் பேரணி நடத்தினர். பேரணியை தொடங்கிவைத்து திராவிடர் கழக பொதுச்செயலாளர் கவிஞர். கலி. பூங்குன்றன் உரையாற்றினார்.

மார்ச் 2010

11.3.2010 காமலீலை சாமியார்களை தண்டிக்க வேண்டும் - தி.க. ஆர்ப்பாட்டம்

காமலீலை சாமியார்களின் கபட நாடகத்தை தோலுரித்துக் காட்டுவதற்கும், காவல்துறையினர் அவர்களை தனிப்பிரிவு அமைத்து கண்காணித்து குற்றவாளிக் கூண்டிலே ஏற்றி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும், மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில், மெமோரியல் ஹால் முன்பு கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை, கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களும், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் ஆகியோரும் பங்கேற்றனர்.

16.3.2010 அன்னை மணியம்மையார் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு
பேரா. முனைவர் ந.க. மங்களமுருகேசன் எழுதிய தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் என்னும் நூலினை சென்னை பெரியார் திடலில், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் மேனாள் தலைவர் முனைவர் கு.ம. இராமாத்தாள் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி வெளியிட்டார். கழகத் தலைவர் கி.வீரமணி நிறைவுரையாற்றினார்.

ஏப்ரல் 2010

14.4.2010 பெரியார் ஒளி - அம்பேத்கர் சுடர் விருதுகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை மறைமலை நகரில் விருதுகள் வழங்கும் மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு பெரியார் ஒளி விருது வழங்கப்பட்டது. முதல்வர் கலைஞருக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது.

16.4.2010 திராவிடர் கழக மாணவர் எழுச்சி மாநாடு

சென்னை பெரியார் திடலில் மாநில திராவிடர் கழக மாணவர் எழுச்சி மாநாடு நடைபெற்றது. வரவேற்புரை: சிவகாசி மா. கதிரவன் (மாநில மாணவரணி துணைச் செயலாளர்) தலைமை: நம்பியூர் மு. சென்னியப்பன் (மாநில மாணவரணி துணைச் செயலாளர்) கொடியேற்றம்: வீர. சுவீன் (தென்சென்னை மாவட்ட மாணவரணித் தலைவர்) சுயமரியாதைச் சுடரொளிகள் படத்தினை கழகப்பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை திறந்து வைத்தார். மாநாட்டுத் திறப்புரை: கவிஞர் ஈரோடு தமிழன்பன் த.சீ. இளந்திரையன் (மாநில மாணவரணி துணைச் செயலாளர்) ஏ.பி. இளங்கவின் (பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவி) ஆகியோர் உரைக்குப்பின் கழகத் தலைவர் உரையாற்றினார். விவாதப்போர்: கழகப் பேச்சாளர் அதிரடி அன்பழகன் தொடுத்த வினாக்களுக்கு கழகப் பொதுச்செயலாளர்கள் கவிஞர் கலி.பூங்குன்றன், சு. அறிவுக்கரசு, பிரச்சார செயலாளர் அ. அருள்மொழி , துணைப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் ஆகியோர் விடையளித்தனர். மாலையில் மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ் தலைமையில் பெரியார் திடலில் இருந்து புறப்பட்டு புரசைவாக்கம், தாணா தெரு சென்றடைந்தது. தாணா தெருவில் நடைபெற்ற திறந்த வெளிமாநாட்டிற்கு வரவேற்புரை: திருத்துறைப்பூண்டி மாணவரணி அமைப்பாளர் க. மணிகண்டன். மாநில மாணவரணி செயலாளர் ரெ. ரஞ்சித்குமார் தலைமையேற்றார். குடிஅரசு தொகுதிகளை வெளியிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. மேயர் மா. சுப்பிரமணியன், எஸ்.பி. கூரியர் உரிமையாளர் நாவங்கனி ஆகியோரின் உரைக்குப்பின் தமிழர் தலைவர் கி.வீரமணி நிறைவுரையாற்றினார். தாம்பரம் மாவட்ட மாணவரணித் தலைவர் தி. இர. சிவசாமி நன்றியுரை ஆற்றினார்.

25.4.2010 பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பிய பாவிகள் யார்?

சென்னை பெரியார் திடலில் பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பிய பாவிகள் யார்? என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கவிஞர் கலி. பூங்குன்றன் வரவேற்புரை ஆற்றினார், சுப. வீரபாண்டியன், தொல். திருமாவளவன், கழகத் தலைவர் கி. வீரமணி ஆகியோர் உரையாற்றினர்.

25.4.2010 திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் உதயம்

சென்னை பெரியார் திடலில் கூடிய கூட்டத்தில் திராவிடர் இனம்பற்றியும், திராவிடர் இயக்கம் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளவும், திரிபுவாதங்களுக்கு மறுப்புக் கூறவும் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.

மே 2010

2.5.2010 இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் பெரியார் மய்யம் திறப்பு விழா!

ஜஸோலாவில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பெற்ற பெரியார் மய்யத்தைத் தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில் தமிழக முதலமைச்சர் மானமிகு கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார்கள். விழாவில் மத்திய அமைச்சர்கள் திரு. ஜி.கே.வாசன், திரு.பரூக் அப்துல்லா, மேனாள் கல்வி அமைச்சர் திரு.டி.பி.யாதவ், திரு.தொல். திருமாவளவன், வரியியல் அறிஞர் திரு. ச.ராசரத்தினம், மானமிகு. வீ.அன்புராஜ், முனைவர் நல்.இராமச்சந்திரன் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழியர்கள், தோழர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
10.5.2010 ஜாதிவாரி கணக்கெடுப்பு - திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!

ஜாதி வாரியாகக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழகமெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.கழகத்தலைவர் தஞ்சையில் பங்கேற்றார். சென்னையில் வழக்கறிஞர் சாமிதுரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர். கலி. பூங்குன்றன், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி ஆகியோர் உரையாற்றினர். தலைமைநிலையச் செயலாளர் வீ. அன்புராஜ் முன்னிலை வகித்தார்.

20.5.2010 தூத்துக்குடியில் தந்தை பெரியார் சிலை திறப்பு
தூத்துக்குடியில் தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலையினை சிலை அமைப்புக்குழு புரவலரும், தமிழ்நாடு சமூகநலத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் தமிழர் தலைவர் கி. வீரமணி திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர். கலி.பூங்குன்றன், தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ், மாவட்ட தி.மு.க செயலாளர் என். பெரியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயதுரை, சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் கங்காரி தங்கம் ஆகியோர் பங்கேற்றனர். மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியும் நடைபெற்றது.

19-22.5.2010 குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாம்

குற்றாலத்தில் 33 ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சி முகாம் மே மாதம் 19 முதல் 22 ஆம் தேதிவரை நடைபெற்றது. பயிற்சிப் பட்டறை, பேச்சுப்பயிற்சி குறும்படங்கள், பெரியார் திரைப்படம் ஒளிபரப்பு, பெரியாரியல் வகுப்புகள் என நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடத்தப்பட்டன. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்கள் கவிஞர். கலி. பூங்குன்றன், சு. அறிவுக்கரசு, துணைப் பொதுச் செயலாளர்கள் துரை. சந்திரசேகரன், டாக்டர் பிறைநுதல்செல்வி மற்றும் டாக்டர் கவுதமன் ஆகியோர் வகுப்புகள் எடுத்தனர். நிறைவு விழா நிகழ்ச்சியில் புதுயுகப் புரட்சியாளர் பெரியார் என்ற விசாகப்பட்டினம் ஜெயகோபால் தெலுங்கில் எழுதி, கோரா தமிழில் மொழிபெயர்த்த நூலின் குறுந்தகட்டினை கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட பொருளாளர் கோ. சாமிதுரை பெற்றுக்கொண்டார்.

24.5.2010 பெரியார் திரைப்படப் பாடல் - தெலுங்கு மொழி குறுந்தகடு

ஆந்திர மாநில பகுத்தறிவாளர்கழகம் சார்பில் பெரியார் திரைப்படத்தின் தெலுங்கு மொழி மாற்றப் பாடல்கள் குறுந்தகட்டினை அய்தராபாத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா வெளியிட்டார்.

ஜூன் 2010

5.6.2010 சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிட ரயில் மறியல் போராட்டம்

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழகமெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தடையை மீறிய பல்லாயிரவர் கைதாயினர்.சென்னையில் கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பாப்புலர் ஃபிரண்ட், சமாஜ்வாடிகட்சி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையினர் பங்கேற்றனர். கழகப்பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் போராட்டத்தின் நோக்கத்தினை விளக்கிப் பேசினார். தமிழர் தலைவர் சென்னையில் 47ஆம் முறையாக கைதானார். விழுப்புரத்தில் கழகப் பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசு தலைமையிலும், திருச்சியில் தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையிலும் போராட்டம் நடை பெற்றது. 30.6.2010 நெய்வேலியில் ஆர்ப்பாட்டம்- நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் போக்கினைக் கண்டித்து நெய்வேலி நகரம் பெரியார் சதுக்கத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசு தலைமையில், துணைப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜூலை 2010


2.7.2010 தமிழர் தலைவர் கார்மீது தாக்குதல்

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களது இல்லத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவரது காரினை ஒரு காலிக் கும்பல் தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டது. 3- 4.7.2010 -

பெரியாரியல் பயிற்சி முகாம்

பொள்ளாச்சியில் 3,4.7.2010 தேதிகளில் பெரியாரியல் பயிற்சி முகாம் நடைபெற்றது. கழகத் தலைவர் கி.வீரமணி, கழகப் பொதுச் செயலாளர்கள் கவிஞர். கலி. பூங்குன்றன், சு.அறிவுக் கரசு, துணைப்பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன், ஆகியோர் பயிற்சி வகுப்பெடுத்தனர்.

6.7.2010 - கரூரில் கழக மண்டல மாநாடு

மறைந்த தி.மு.க. மாவட்டச் செயலாளர் வாசுகி முருகேசன் நினைவு வளைவு, பெரியார் சிந்தனையாளர் வழக்குரைஞர் பி.ஆர் குப்புசாமி நினைவு மாநாட்டு அரங்கம். தலைமை: கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்புரை: வழக்குரைஞர் மு.க.ராசசேகரன் (மாவட்ட தி.க.தலைவர், கரூர்) தொடக்கவுரை: பரமத்தி சண்முகம் (தி.மு.க. கொள்கை பரப்பு இணைச்செயலாளர்) கொடியேற்றம்: கழகத் தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ், தீர்மானங்கள் முன்மொழிதல்: துரை. சந்திரசேகரன் (தி.க.துணைப் பொதுச் செயலாளர்.) உரை: கவிஞர். கலி. பூங்குன்றன் (பொதுச் செயலாளர்) சு.அறிவுக்கரசு (பொதுச்செயலாளர், தி.க) டாக்டர் பிறைநுதல்செல்வி (துணைப் பொதுச் செயலாளர் தி.க) கே.சி. பழனிசாமி (முன்னாள் நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்) நன்னியூர் கா. ராஜேந்திரன் (மாவட்ட தி.மு.க. செயலாளர்) நன்றியுரை: ம. காளிமுத்து (கரூர் மாவட்ட தி.க. செயலாளர். கரூரில் கழகச் சொற்பொழிவாளர்கள் கலந்துரையாடல் கூட்டம். கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

14.7.2010 நாகையில் கழகத்தின் எழுச்சி ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவது, கொல்லப்படுவது, மானபங்கப்படுத்தப்படுவது உள்ளிட்ட செயல்களைக் கண்டித்தும், இனி இவ்வாறு நடவா திருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தியும் நாகை, காரைக்கால், திருவாரூர் மாவட்டக் கழகங் களின் சார்பில் மாபெரும் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 2010

2.8.2010 தி.மு.க.வுக்கு அறிவுரை-

முக்கிய பதவி நியமனங்களில் பார்ப்பனர்களை நியமிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தி.மு.க.வுக்கு அறிவுரை கூறினார்.

7.8.2010, 8.8.2010 பெரியாரியல் பயிற்சி முகாம்

வேலூர் மாவட்டம் வாலாஜாவில் பெரியாரியல் பயிற்சி முகாம் நடைபெற்றது. தி.க. தலைவர் கி.வீரமணி, பொதுச் செயலாளர்கள் கலி.பூங்குன்றன், சு. அறிவுக்கரசு, துணைப் பொதுச் செயலாளர்கள் துரை. சந்திரசேகரன், டாக்டர் பிறைநுதல்செல்வி, டாக்டர் இரா. கவுதமன், பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் ஆகியோர் வகுப்புகள் எடுத்தனர். புரபசர் பழ.வெங்கடாசலம் மந்திரமா, தந்திரமா நிகழ்ச்சிகளை நடத்தினார். 200 மாணவர்கள் பங்கேற்றனர்.

8.8.2010 வாலாஜாவில் மண்டல மாநாடு

வாலாஜாவில் திராவிடர் கழக மண்டல மாநாடு மண்டலத் தலைவர் செய்யாறு பா. அருணாசலம் தலைமையில் நடை பெற்றது. மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்துக்கு கே.கே.சி. எழிலரசன் தலைமை வகித்தார். மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பொதுச் செயலாளர்கள் கலி.பூங்குன்றன், சு.அறிவுக்கரசு, துணைப் பொதுச் செயலாளர்கள் துரை.சந்திர சேகரன், டாக்டர் பிறைநுதல்செல்வி, உரத்தநாடு இரா. குண சேகரன், முகம்மது சகி (தி.மு.க. மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர்) முதலியோர் கலந்துகொண்டனர். குடிஅரசு தொகுதிகள் (1933,1934) இரண்டினை பெரியார் பெருந் தொண்டர் வேல்.சோமசுந்தரம் வெளியிட்டார். 28.8.2010, 29.8.2010- பெரியாரியல் பயிற்சி முகாம் விழுப்புரம் மாவட்டம் கல்லக் குறிச்சியை அடுத்த கோமுகி அணைக்கட்டில் நடைபெற்றது.

செப்டம்பர் 2010


1.9.2010- திருச்சி அண்ணா நகரில் தந்தை பெரியார் சிலையை சில காலிகள் சேதப்படுத்தியதை அடுத்து அன்று இரவு அதே இடத்தில் புதியதாக தந்தை பெரியார் சிலை நிறுவப்பட்டது.

5.9.2010 பேச்சுப் போட்டி
தந்தை பெரியாரின் 132ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பெரியாரால் வாழ்கிறோம் என்ற பேச்சுப்போட்டி நிகழ்ச்சி தமிழகம் முழுக்க எழுச்சியுடன் நடைபெற்றது.

7.9.2010 - திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் தொடக்கவிழா சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற விழாவின் போது பேராசிரியர் க.அன்பழகன் கலந்து கொண்டு சிறப்புரை.

26.9.2010 - தஞ்சை வல்லத்தில் குழந்தைகள் பழகு முகாம், தமிழகம் முழுவதும் இருந்து குழந்தைகள் பங்கேற்பு.

27.9.2010 - சீர்காழியில் மண்டல மாநாடு, தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை நாணயம் வழங்குதல். அக்டோபர் 2010

7.10.2010 - நாமக்கல்லில் தந்தை பெரியார் படிப்பகம் திறப்பு விழா, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் செ.காந்திசெல்வன் திறந்து வைத்தார்.

10.10.2010 - சென்னை தாம்பரம் பெரியாரியல் பயிற்சி முகாம்.

15.10.2010 - குவைத்தில் பெரியார் பிறந்தநாள் விழா, சமூக நீதிக்காக வீரமணி விருது அளிப்பு விழா, இராவண காவிய சொற்பொழிவு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் கலந்து கொள்ளல்.

18.10.2010 - துபாயில் பெரியார் பன்னாட்டு மய்யம் கிளை உருவாக்கம் - தமிழர் தலைவர் பங்கேற்பு.

23.10.2010 - திருப்பத்தூரில் வேலூர் மண்டல திராவிடர் எழுச்சி மாநாடு மற்றும் திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம்

நவம்பர் 2010

8.11.2010 திருவரங்கத்தில் திருச்சி மண்டல திராவிடர் எழுச்சி மாநாடு

பார்ப்பனர்களை பல்லக்கில் தூக்கி சுமக்கும் போக்கை தடுத்து நிறுத்துவோம் என தமிழர் தலைவர் அறிவிப்பு.

13.11.2010 - ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் சிறப்புக் கூட்டம் - தமிழர் தலைவர் பங்கேற்பு.

20.11.2010 சென்னை பெரியார் திடலில் நீதிக்கட்சியின் 95ஆம் ஆண்டு விழா நிதி அமைச்சர் பேரா.க.அன்பழகன் கலந்து கொள்ளல். நீதிக்கட்சித் தலைவர்களுக்கு சிலை வைக்கப்படும் என தமிழர் தலைவர் அறிவித்தார்.

24.11.2010 - சர்.பி.டி. தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்ற ஆ.இராசா மீது சில ஊடகங்களின் வேட்டை ஏன்? ஊடகத் துறை பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை.

26.11.2010 வைக்கத்தில் விழா

வைக்கம் சத்தியாக்கிரக 85ஆம் ஆண்டு விழா வைக்கத்தில் நடைபெற்றது - செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம் வழுதி தமிழர் தலைவர் கலந்து கொள்ளல்.

டிசம்பர் 2010

2.12.2010 தமிழர் தலைவர் பிறந்தநாள்விழா

தமிழர் தலைவரின் 78ஆம் ஆண்டு பிறந்தநாள் - நாடெங்கும் குருதிக்கொடை, நோயாளிகளுக்கு உணவு, இலவச மருத்துவ முகாம்.

5.12.2010 -சிறப்பு இணைய தளம்

உலக நாத்திகர் மாநாட்டையொட்டி சிறப்பு இணைய தளத்தை மதுரை மாநாட்டில் தமிழர் தலைவர் தொடங்கி வைத்தார்.

10.12.2010 - நாடாளுமன்ற செயல்பாட்டை முடக்குவதை எதிர்த்து நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம். சென்னையில் தமிழர் தலைவர் பங்கேற்பு.

24.12.2010 - தந்தை பெரியார் 37ஆம் ஆண்டு நினைவு நாள்நிகழ்ச்சியாக தமிழ்நாடெங்கும் நடத்தப்பட்டது.


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...