Friday, February 28, 2020

தேசிய அறிவியல் தினம் (பிப்.28ஆம் தேதி)

தேசிய அறிவியல் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. இதையொட்டி பள்ளிகள், அறிவியல் மய்யங்களில் நிகழ்ச் சிகள் நடத்தப்படுகின்றன. அறிவியல் துறையில் பெண்களின் பங்களிப்பு என்பது இந்தாண்டு கொண்டாட்டத்தினுடைய மய்யக் கருத்தாக உள்ளது.
"ராமன் விளைவு" கண்டறியப் பட்ட பிப்ரவரி 28-ஆம் தேதியே தேசிய அறிவியல் தினமாக கொண் டாடப்படுகிறது.  இந்த தினம், கடந்த 1986-ஆம் ஆண்டில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
புகழ்மிக்க அறிவியலாளரான சர் சி.வி. ராமனுக்கு ராமன் விளைவை கண்டுபிடித்ததால் 1930-இல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
டில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெறும் விழாவில் அறிவியல் துறையில் மகளிரின் பங்கு குறித்த நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு முக்கிய பெண் அறிவியலாளர்களுக்கு பரிசு களை வழங்கி கவுரவிக்கிறார்
தேசிய அறிவியல் தினம் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்:
1. தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்பத்திற்கான கவுன்சில் கடந்த 1986-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக அறிவிக்க வேண் டும்  என கேட்டுக் கொண்டது. இதை  மத்திய அரசும் ஏற்று, அன்று தேசிய அறிவியல் தினமாக அறிவித்தது.
2. அறிவியல் மற்றும் அதன் பயன்பாட்டை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதுதான் இந்த தேசிய அறிவியல் தினத்தின் நோக்கமாகும்.
3. முதன் முறையாக 1987, பிப் ரவரி 28-ஆம்தேதி தேசிய அறி வியல் தினம் கொண்டாடப்பட்டது.
4. நடப்பாண்டில் 'அறிவியலில் பெண்களின் பங்கு' என்பது மய்யக் கருத்தாக இருக்கிறது.
5. அறிவியல் மய்யங்கள், அறிவியல் ஆய்வகங்களில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப் படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை என்.சி.எஸ்.டி.சி. எனப்படும் அறிவியல், தகவல் தொழில் நுட்பத் திற்கான கவுன்சில் கவ னிக்கிறது.
6. அறிவியலை செம் மைப்படுத்துதலுக்காக அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் பரிசுகளை வழங்கி வருகிறது.
7. ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக் கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதனை கண்டுபிடித்ததால் சர் சி.வி. ராம னுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1930-இல் வழங்கப்பட்டது.
8. நாட்டிற்கு பெருமை தேடித் தந்ததால் சர்  சி.வி. ராமனுக்கு 1954-இல் பாரத ரத்னா விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

ஆரம்பித்து விட்டார்கள் மீண்டும் வடகலை, தென்கலை குடுமிப் பிடிச் சண்டை

காஞ்சிபுரம் தேவஸ்தானத்தில் வடகலை மற்றும் தென்கலை அய்யங் கார்கள் மோதல் குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற தேவராஜ பெருமாள் என வழங்கப்படும் வரதராஜ பெரு மாள் கோவிலில்  உற்சவத்தின் போது பிரபந்தங்கள் படுவது வழக்கமாகும்.  இந்த பிரபந்தங் களைப் பாடும் அய்யங்கார் வகுப்பினரிடையே வடகலை, தென்கலை என இரு பிரிவுகள் உண்டு.   இந்த பிரபந்தங்களை இரு பிரிவில் யார் பாடுவது என்பது குறித்து கடும் சர்ச்சை நிலவி வருகிறது.
இது குறித்து ஒவ்வொரு உற்சவத்தின் போதும் இந்த சர்ச்சை ஏற்பட்டு இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மனதில் இந்த சர்ச்சை கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.    இவர்களிடையே சமாதானத்தை உண்டாக்க காவல்துறை, இந்து அறநிலையத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் எவ்வளவோ முயன்றும் முடியாத சூழல் உண்டாகி வருகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாகப் பதியப்பட்ட மனுவின் விசாரணையின் போது நீதிமன்றம் தேவராஜ சாமி தேவஸ்தான அதிகாரிக்கு உத் தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.   அந்த உத்தரவில் பிரபந்தம் பாடுவதில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே மோதல் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் நிகழ்ச் சியின் போது திருக்கச்சி நம்பித் தெருவில் உள்ள மண்டபத்தில் வேடுபறி என்ற நிகழ்வு நடந்தது. அப்போது அங்கு தென்கலை பிரிவினர் திருமங்கையாழ்வார் பாசுரம் பாட முயன்றனர். அதற்கு வடகலை பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால் அங்கு கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.  காவல்துறையினர் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
வடகலை மற்றும் தென்கலை இடையே 18 வித்தியாசங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
வடகலை வைணவர்கள் திருமாலையும் லட்சுமி தேவி யையும் சரிசமமான பூஜைக்கு உரியவர்களாக கருதுபவர்கள். அதிக வடமொழி கலாச்சாரம் இருக்கும். தென்கலை வைணவர் களும் லட்சுமி தேவியை வணங்கு வார்கள். ஆனால் திருமாலை மட்டுமே மூல தெய்வமாக வழிபடும் கொள்கையுடையோர். ஆழ்வார்கள் பாசுரங்களுக்கு முக்கியத்துவம் தருவோர். திவ்யபிரபந்தம் தென்கலை வைணவர்களுக்கு வேதவாக்கு. இரு தரப்புக்கும் இருக்கும் இந்த வேறுபாடுகள் தான் அடிக்கடி மோதல் ஏற்பட காரணமாக இருக்கிறது.

6 இடங்கள் பின்தங்கி 8ஆவது இடத்துக்கு தமிழகம் தள்ளப்பட்டது

பிரதமர் கிராம சாலைகள் திட்ட செயல்பாடு
பிரதம அமைச்சர் கிராம சாலைகள் திட்டத்தை செயல்படுத்துவதில் 2017-_2018ஆம் ஆண்டை விட 6 இடங்கள் பின்தங்கி 2018-_2019ஆம் ஆண்டில் தமிழகம் 8ஆவது இடத்தை பிடித்துள்ளது.தமிழகத்தில் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராம ஊராட்சிகளின் கீழ் 79 ஆயிரத்து 395 குக்கிராமங்கள் உள்ளது.
இவற்றை எல்லாம் இணைக்கும் வகையில் மொத்தம் 1.49 லட்சம் கி.மீ நீளமுள்ள கிராம சாலைகள் உள்ளன.  இதன்படி 97 ஆயிரத்து 200 கி.மீ. நீள தார் சாலைகளும், 3 ஆயிரத்து 104 கி.மீ. சிமென்ட் சாலைகளும், 2020 கி.மீ. நீள ஈரடுக்கு கப்பி சாலைகளும், 8 ஆயிரத்து 939 கி.மீ. நீளமுள்ள ஓரடுக்கு கப்பி சாலைகளும், 5 ஆயிரத்து 573 கி.மீ. நீள சரளைக்கல்  சாலைகளும், 33 ஆயிரத்து 077 கி.மீ நீள மண் சாலைகளும் உள்ளது.இந்த சாலைகள் தமிழ்நாடு  ஊரக சாலைகள் திட்டம், நபார்டு ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதி, தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டம், ஊரக உட்கட்டமைப்பு திட்டம், ஊரக சாலைகள் பராமரிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு  திட்டங்கள் மூலம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதை தவிர்த்து கிராம சாலைகளை மேம்படுத்த மத்திய அரசும் நிதி வழங்கி வருகிறது.
இதன்படி பிரதம அமைச்சர் கிராம சதக் யோஜனா திட்டத்தின்படி கிராம சாலைகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின்படி தமிழகத்தில் 2015_-2016ஆம் ஆண்டு 588.974 கி.மீ. நீளமும், 2016_-2017ஆம் ஆண்டில் 883.189  கி.மீ. நீளமும், 2017_-2018ஆம் ஆண்டில் 1,611.36 கி.மீ. நீளமும், 2018_20-19ஆம் ஆண்டில் 2166.856 கி.மீ. நீளமும், 2019_20-20ஆம் ஆண்டில் 746.606 கி.மீ. நீள சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.இதற்காக 2015_20-16ஆம் ஆண்டில் ரூ.1205 கோடி, 2016_20-17ஆம் ஆண்டில் ரூ. 1309 கோடி, 2017-_2018ஆம் ஆண்டில் ரூ. 1591 கோடி, 2018_20-19ஆம் ஆண்டில் ரூ. 1589 கோடி, 2019_-2020ஆம் ஆண்டில் ரூ. 1268 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின்படி சாலை பணிகளை சிறப்பாக மேற்கொண்ட மாநிலங்களின் தரவரிசை பட்டிய லையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
2016-_2017ஆம் ஆண்டில் 4ஆவது இடத்தில் இருந்த தமிழகம் 2017_-2018ஆம் ஆண்டில் 2 இடங்கள் முன்னேறி 2ஆவது  இடத்தை பிடித்தது. இந்நிலையில் 2018_20-19ஆம் ஆண்டில் 6 இடங்கள் பின்தங்கி 8ஆவது இடத்தை பிடித்துள்ளது.
2011ஆம் ஆண்டில் 1.03 லட்சம் கி.மீட்டராக இருந்த கிராம சாலைகளின் எண்ணிக்கை 2019_ஆம் ஆண்டில் 45 சதவீதம் அதிகரித்து 1.49 லட்சம் கி.மீட்டராக உயர்ந்துள்ளது.

குள்ளமான சிறுவனின் மகத்தான செயல்

ஆஸ்திரேலி யாவைச் சேர்ந்த குள்ளமான சிறுவன், குவாடன் பெய்ல்ஸ், பள்ளி மாணவர்களின் கேலி பொறுக்காமல், தன்னை கொன்று விடுமாறு தாயிடம் அழுத காட்சி, சமூக வலை தளங்களில் பரவியது.இதையடுத்து, அமெ ரிக்க நகைச்சுவை நடிகர் பிராட் வில்லியம்ஸ், வலைதள பக்கம் மூலம் திரட்டிய, 3.40 கோடி ரூபாய் குவாடன் பெய்ல்சுக்கு வழங்கப்படும் என, தெரிவித்திருந்தார்.
ஆனால், இத்தொகையைப் பெற, அமெரிக்கா செல்லாமல், தன்னைப் போல குள்ளமான வர்களின் நலனுக்காக பாடுபடும் அறக்கட்டளைகளுக்கு இத்தொகையை வழங்க, குவாடன் பெய்ல்ஸ் முடிவு செய்துள்ளார்.

தற்போதுள்ள தடுப்பூசிகளை முழுமையாக நம்ப முடியாது அமெரிக்க விஞ்ஞானிகள்

கரோனாவின் தாக்குத லுக்கு தற்போது பயன்படுத் தப்பட்டு வரும் தடுப்பூசி களை முழுமையாக நம்ப முடியாது என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித் துள்ளனர்.
கொரோனா வைரசால் இதுவரை 2804 பேர் உயிர் இழந்துள்ளனர். கரோனாவின் அழிவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. கரோனா வைரஸ் தடுப்பூசி  குறித்து கருத்துத் தெரிவித்துள்ள டெக்சாஸ் மற்றும் நியூயார்க்கில் இயங்கி வரும் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வாளர்கள், கரோனாவின் தாக்குதலுக்கு தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் தடுப்பூசிகளை முழுமையாக நம்ப முடியாது. கரோனா வைரசைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளை கண்டுபிடிக்க தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகிறது. தடுப்பூசிகள் கிடைக்க ஒரு வருடத்திற்கு மேல் ஆகலாம் என்று தெரிவித்துள்ளனர்.
நியூயார்க், டெக்சாஸ், ஹூஸ்டன் மற்றும் சீனாவில் தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் முயன்று வருவதாகக் கூறிய ஹூஸ்டன் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பீட்டர் ஹோடெஸ் இது ஒரு சவாலான மற்றும் அச்சுறுத்தலான பணி என்றும், கரோனாவின் தொற்று தீவிரமாக இருப்ப தாகவும், உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தி யிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும் என அனைத்து இந்திய அரசியல் தலைவர் களுக்கும் அய்.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் வேண்டுகோள்

வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும் என அனைத்து இந்திய அரசியல் தலைவர் களுக்கும் அய்.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டில்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், வடகிழக்கு டில்லியின் ஜாப்ராபாத், மாஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் புதிதாக போராட்டங்கள் தொடங்கின. இந்த போராட்டத்துக்கு எதிராக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ஆம் தேதி போராட்டம் நடத்த முயன்றனர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற் களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது காவல்துறையினர் தலை யிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது. ஜாப்ரா பாத், மவுஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் வன்முறை பரவியது.  இதில் 34 பேர் வரை பலியாகி உள்ளனர்.
அய்.நா. மனித உரிமைகள் அமைப்பின் 43ஆவது கூட்டத்தொடர் ஜெனீவா நகரில் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது.  வருகிற மார்ச் 20ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் அதன் தலைவர் மிச்சேலே பாக்லெட் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்பொழுது, கடந்த வருடம் இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
அனைத்து சமூகங்களை சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான இந்தியர் களும், பெருமளவில் அமைதியான முறையிலேயே இச்சட்டத்திற்கு தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத் தினர்.  நாட்டில் பன்னெடுங்காலத்திற்கு இருந்து வந்த மதசார்பற்ற கலாசாரத் திற்கு தங்களது ஆதரவையும் தெரிவித்தனர்.
இந்நிலையில், முஸ்லிம்களுக்கு எதிராக பிற குழுக்கள் மேற்கொண்ட தாக்குதலின்பொழுது, காவல்துறையினர் செயல்படாதது பற்றிய அறிக் கைகள் மற்றும் அமைதியான முறை யில் போராடியவர்கள் மீது காவல் துறையினர் கூடுதல் படைகளை பயன்படுத்தியது என்று அதற்கு முன்பு கிடைத்த அறிக்கைகள் பற்றி அறிந்து நான் வருத்தம் அடைந்தேன்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து இதுவரை 38 பேர் வன்முறைக்கு பலியாகி உள்ளனர்.
வன்முறையை தடுக்க வேண்டும் என இந்தியாவின் அனைத்து அரசியல் தலைவர் களுக் கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று பேசியுள்ளார்.

பூமியை சுற்றி வரும் குட்டி நிலவு

'பூமியை, கடந்து மூன்று ஆண்டுகளாகக் குட்டி நிலவு ஒன்று சுற்றி வருகிறது' என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'நாசா'வின் நிதியுதவியுடன் அரிசோனாவில் செயல்பட்டு வரும் நிறுவனம், 'கடாலினா ஸ்கை சர்வே'. இந்நிறுவனம், விண்வெளியில் உலவும் சிறு கோள்கள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது.
இந்நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வியர்ஸ்சாஸ், கூறியுள்ளதாவது:
பூமியை, குட்டி நிலவு ஒன்று சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு, '2020 சிடி3' எனப் பெயரிட்டுள்ளோம். கடந்து மூன்று ஆண்டுகளாக, இந்தக் குட்டி நிலவு பூமியை வலம் வந்து கொண்டிருக்கிறது.
ஆனால், இதுவரை, இதைக் கண்டறியாமலேயே இருந்திருக்கிறோம். இந்த நிலவு, ஒரு கார் அளவில் உள்ளது.
இது, நம்முடன் நீண்ட காலம் இருக்காது; பூமியுடன் மோதுவதற்கான சாத்தியமும் உண்டு. ஆனால், மிகவும் சிறியதாக இருப்பதால், தரையைத் தொடும் முன், வளிமண்டலத்திலேயே எரிந்து விடும்.
இதற்கு முன், 1991ஆம் ஆண்டு, '1991 விஜி' எனப் பெயரிடப்பட்ட குட்டி கோள் ஒன்று, பூமியை சில ஆண்டுகள் சுற்றி வந்தது. அதேபோல், 2006ஆம் ஆண்டில், இது போன்ற ஒரு விண்கல், பூமியைச் சுற்றி வந்தது. அதற்கு, '2006 ஆர்.எச் 120' என பெயரிடப்பட்டது.
இவை சிறிது காலத்துக்குப் பின், தன் பாதையில் சென்று விட்டனர்.சூரியன், பூமி மற்றும் நிலா ஆகியவற்றின் ஆதிக்கம், குட்டி நிலவின் மீது இருப்பதால், அதன் பாதை எப்போது வேண்டுமா னாலும் மாறுபடலாம்.
இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...