Saturday, July 14, 2018

காட்டிக்கொடுப்பதும், பதவிக்காக எதிராளியை புகழ்வதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தாரக மந்திரம் ‘இந்துஸ்தான் டைம்ஸ்' அம்பலப்படுத்துகிறது




 புதுடில்லி, ஜூலை 13 சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் இடம் பெற வேண்டி எம்.எஸ்.கோல்வால்கர் நேருவை தொடர்ந்து புகழ்ந்துதள்ளிய வரலாற்றை பேராசிரியர்  ராமச்சந்திரகுகா தனது நூலில், ஆர்.எஸ்.எஸ். இதழில் இருந்த பல உண்மைத்தரவுகளுடன் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

‘‘பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நேருவையும், காங்கிரசையும் கடு மை யாக விமர்சித்துக்கொண்டே உள்ள னர். இந்தியாவை நாசமாக்கியதன் அடித்தளமே நேருவில் இருந்துதான் தொடங்கியது என்று கூறி வருகின்றனர். 2015-ஆம் ஆண்டு ஆர்கனைசர்' நேரு இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தர வில்லை, அவர் தேசத்துரோகி என்ற தொனியில் எழுதி அவர்மீது வன்மம் காட்டியிருந்தது. ஆனால் 1950-களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தங்களில் ஒரு வருக்கு நேரு, அமைச்சர் பதவியைத் தருவார் என்ற பேராசையில் அவரைத் தொடர்ந்து புகழ்ந்து தள்ளிக்கொண்டு இருந்தது.''

இத்தகைய வரலாற்று உண்மை நிகழ் வுகள் உடைய தனது நூல் குறித்து ஆங்கில நாளிதழானஇந்துஸ்தான் டைம்ஸ்' என்ற இதழில் சிறப்புக்கட்டுரை ஒன்றை எழுதிய பிரபல வரலாற்று ஆசிரியர்  ராமச்சந்திர குகா எழுதியுள்ளதின் தமி ழாக்கம் வருமாறு:

1949 ஆகஸ்ட் 30ஆம் தேதி,  காந்தி கொலைக்காக அந்த இயக்கத்தின் மீது விதிக்கப்பட்டதடைநீக்கப்பட்டுசில நாட்களுக்குப் பிறகு  ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அன்றைய தலைவர் எம்.எஸ்.கோல்வால்கர் ஜவகர்லால் நேருவை சந்தித்துப் பேசினார். ஆர்எஸ் எசின் இதழான ஆர்கனைசர், பாரதத்தின் எதிர்காலத்திற்கான நற்சகுனமாக இரண்டு மேதைகளின் சந்திப்பு என்று இந்த நிகழ்வை தலைப்பிட்டு எழுதி யிருந்தது.

அதனை அடுத்து சில நாட்கள் கழித்து மீண்டும், நேருவும் கோல்வால்கரும் சந்தித்தனர். இச்சந்திப்பு குறித்து அந்த இதழ் எழுதியதாவது: குருஜியின் பார தப் பிரதமர் நேருவுடனான சந்திப்பு மனம்விட்டுப் புரிந்துகொள்ளும் வகை யில் உள்ளது என்றும், வேறு எந்த அமைப்பும் நேருவிடம் இவ்வளவு மனம்விட்டுப் பேசியதில்லை என்றும் எழுதியிருந்தது.

நேரு, கோல்வால்கரை அவ்வப்போது சந்தித்தாலும் தானும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் முற்றிலும் வேறுபட்டவர்கள் என்பதை உணர்ந்திருந்தார். ஆனால், காங்கிரசிற்குள் இருந்த பார்ப்பனப் பழைமைவாதிகள் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நட்புணர்வுடன் இருப் பதை விரும்பினர். 1949 அக்டோபரில் நேரு அமெரிக்க சுற்றுப்பயணம் சென் றிருந்தபோது, காங்கிரசுக்காரர்கள் ஆர்.எஸ்.எசில் சேர்வதை அனுமதிப் போம் என சில காங்கிரசு தலைவர்கள் அறிவித்தனர்.  நேருவின் அமெரிக்கப் பயணத்தின்போது அவர் பல பிரம் மாண்ட கூட்டங்களில், ஊர்வலங் களில்பங்கேற்றார்.பல்கலைக்கழகங் கள்டாக்டர்பட்டங்களைவழங்கின. ஒவ்வொருஇந்தியனும் பெருமைப்படு கிறான் என்று எழுதியதுஆர்கனைசர்' (நவம்பர் 16, 1949).  அமெரிக்காவிலிருந்து திரும்பியநேரு,ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர்களை காங்கிரசிலும், காங்கிரசுக்காரர்களை ஆர்.எஸ்.எசிலும் அனுமதிக்கும் திட்டம் குறித்து அறிந்து அதைத் தடுத்தார்.  மற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் காங்கிரசில் இருக்க முடியாது என்றார். இதனைக் கடுமையாக விமர்சித்தது ஆர்கனைசர். நேருவின் இந்த மாற்றமானது இசுலாமிய ஆதரவுச் செயல்பாடு என்றது.

துவக்கத்தில்ஆர்.எஸ்.எஸ்.நேரு வைப்புகழ்ந்து தள்ளியதற்கு காரணம் இருந்திருக்கிறது. அதாவது ஆர்.எஸ்.எசின்குருஜிகோல்வால்கர்,நேருவுக் கும் குருஜியாக இருக்க விரும்பியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் காங்கிரசில் இணைந்து தேசத்தின் முன்னுரிமை என்ன என்பதை வடி வமைப்பதில் பங்கேற்க வேண்டுமென விரும்பியிருக்கிறார்.

ஆனால், எல்லோருக்கும் வாக்கு ரிமை, பெண்கள், தலித்துகள், சிறு பான்மையினருக்கு சம உரிமை, நவீன அறிவியலை நோக்கிய பயணம் ஆகியவற்றை ஆர்.எஸ்.எஸ். எதிர்க்கும் என்பது நேருவுக்கு தெரியும். தவிர, இந்தமதிப்பீடுகளைஉள்ளடக்கி அரசி யல் சாசனத்தை வடிவமைத்த சட்ட அமைச்சர் பி.ஆர். அம்பேத்கரை வெளிப் படையாகவே வெறுத்தது ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உள்ளே விட்டால், அது ஜனநாயகத்தையும், பன்முகத்தன்மையையும் கடுமையாக பாதிக்கும் என்று உணர்ந்திருந்தார் நேரு. அதனால், அந்த அமைப்பின் புகழ்ச்சிக்கெல்லாம் நேரு மயங்கவில்லை. 70 ஆண்டுகளுக்கு முன்பாக நேரு ஆர்.எஸ்.எஸ்-அய் புறக்கணிக்க முடி வெடுத்திருக்காவிட்டால், இந்தியக் குடியரசு துவக்கத்திலேயே துருப்பிடிக்க ஆரம்பித்திருக்கும் என்கிறார் ராமச்சந்திர குகா.

தாழ்த்தப்பட்டவர் என்பதால் பூசை செய்ய தடை கூடாது பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகராக்குக! உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் பாராட்டத்தக்க தீர்ப்பு


டெகராடூன், ஜூலை 13 உத்தரகாண்ட் மாநிலத்தில் பல்வேறு கோவில்களில் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள சில ஜாதியினரை, பழங்குடியின மக்களை கோவிலில் பூஜைகள் செய்யவும், வழிபாடு நடத்தவும் அனுமதி மறுக்கப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்த வழக்கில் உத்தர காண்ட் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு கூறும்போது  உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் அனைத்துக் கோவில்கள் மற்றும் ‘‘புனிதத்'' தலங்களில், தாழ்த்தப்பட்ட வகுப் பினர்களுக்காக, உயர்வகுப்பு பூசாரிகள், பூஜைகள், சடங்குகள் செய்வதற்கு மறுப்புத் தெரிவிக்கக் கூடாது. அதேபோல் எந்த ஒரு வகுப்பினரும் எந்த தடையும் இன்றி, உத்தரகாண்ட்டில் இருக்கும் கோவில்களுக்குச் செல்லலாம் என்று அறிவித்திருக்கிறார்கள். மேலும், பயிற்சி பெற்ற எந்த ஒரு நபரும் ஒரு கோவிலின் அர்ச்சகராக, பூசாரியாக செயல்படுவதற்கு அவருடைய வகுப்பு ஒரு தடை இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள் -- உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற  நீதிபதிகள் ராஜீவ் சர்மா மற்றும் லோக் பல் சிங்.
பார்ப்பனர்கள் எதிர்ப்பு
ஒடுக்கப்பட்ட மக்களின் விழிப்புணர் விற்காக புரட்சிகர சிந்தனையை விதைத்த சந்யாசியான ரவிதாஸ் என்பவரின் கோவில் அரித்துவாரில் உள்ள பிரபல சிவன் கோவிலுக்கு அருகே உள்ளது. ரவிதாசை வழிபட வரும் உயர்ஜாதியல்லாதவர்கள் சிவன் கோவிலின் படிகளில் ஏறித்தான் ரவிதாஸ் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வருவார்கள். இவ்விவகாரம் தொடர்பாக சிவன்கோவில் பார்ப்பனர்களும், சில உயர் ஜாதியினரும் நீண்ட ஆண்டுகளாகவேஎதிர்ப்பு தெரிவித்துவந்தனர். படிகளை சேதப்படுத்து வதும், ரவிதாஸ் கோவிலின் கதவுகளை சேதப்படுத்தி அதை திறக்காத வண்ணம் செய்துவந்தனர். இந்த விவகாரம் நீதிமன் றத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் திடீரென்று ரவிதாஸ் கோவிலுக்குச் செல் லும் படிகட்டுகளை அகற்றிவிட்டு, புதிய பாதை சிவன்கோவிலுக்கு மட்டும் செல்லுமாறு அமைத்தனர். இதனால் ரவி தாஸ் கோவிலுக்குச் செல்ல முடியாமல் போனது. இதனை அடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நேரில் சென்று பார்வையிட்ட நீதிமன்றம்
நீதிமன்றம் இந்த வழக்கை விசா ரணை செய்தது. மேலும், நேரில் சென்று மாற்றப்பட்ட படிகட்டுகளைப் பார்வை யிட்டது. அப்போது கோவிலுக்குச் செல்லும் பாதை மாற்றப்பட்டது மட்டுமின்றி ரவிதாஸ் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கங்கைக்குச் சென்று வழிபடும் பாதையும் தடுக்கப்பட்டிருந்தது. உத்தரகாண்டில் புதி தாக அமைந்த பாஜக அரசு கங்கையில் குளித்துவிட்டு ராமதாஸ் கோவிலுக்குச் செல்வதைத் தடுக்க முனைந்து இந்த பாதகச் செயலைச் செய்திருந்தது.
அரசமைப்புச் சட்டம் 17 இன்படி குற்றமே!
இதை நேரில் கண்ட நீதிமன்ற பிரதி நிதிகள் நீதிபதிகள் முன்பு சான்றுகளுடன் எடுத்துரைத்தனர். மேலும் இது அரசமைப்புச் சட்டம் பிரிவு 17அய் கடுமையாக மீறும் செயலாகும்.
கோவிலுக்கு பெரும்பான்மையான மக்கள் வரும்போது குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் தடுப்பது நீதியாகாது. அரசமைப்புச் சட்டம் 17- இன்படி கோவில் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத்தலங்களும் அனைவருக்கும் பொதுவானது.
இது குறித்து தீர்ப்பு கூறிய நீதிமன்றம், ‘‘கங்கையில் பெரிய அளவில் பல மதத்தினர், வகுப்பினர் குளிக்கின்றனர். அதேபோல் அனைத்துக் கோவிலிலும் அனைவரும் வந்துவழிபடுகின்றனர். இதைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. அதே நேரத்தில் குறிப்பிட்ட வகுப்பினர் கோவிலின் பாதை யைப் பயன்படுத்தி அவர்கள் வழிபடும் கோவிலுக்குச் செல்கிறார்கள் என்று படிகட்டு களை உடைப்பதும், பாதையை மாற்றுவதும் கண்டனத்திற்குரிய செயலாகும்.
மாவட்ட நிர்வாகம் சேதப்படுத்தப்பட்ட படிகட்டுகளை மீண்டும் சரி செய்து தடை செய்யப்பட்ட வகுப்பினர் அங்கு வருவதை உறுதி செய்யவேண்டும். அவர்களை யாரும் தடை செய்வதை அனுமதிக்கக் கூடாதுமேலும் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட வகுப் பினர் கங்கையில் இறங்குவதை தடுக்கும் விதமாக அமைக்கப்பட்ட அனைத்துத் தடைகளையும் அகற்றவேண்டும். அரித்துவார் என்பது அனைவருக்குமான ஒரு நகரமாகும். இங்குள்ள தெருக்கள், சாலைகள் உள்ளிட்ட அனைத்தும் அனைவருக்குமானது.குறிப்பிட்ட வகுப்பினர் நுழைவதை மறைமுகமாக நிறுத்த கட்டப்பட்ட, அனைத்துத் தடைகளையும் உடனடியாக அகற்றவேண்டும்.
சட்டத்தின்முன் அனைவரும் சமமே!
பார்ப்பனர்கள் மட்டுமே பூசை செய்ய வேண்டும் என்று எங்கும் எழுதப்படவில்லை, மேலும் பிறர் பூசை செய்வதை தடுக்கவும் கூடாது, எந்த சமூகத்தினர் ஆனாலும் மரியாதை தந்தே ஆகவேண்டும், அவர்கள் கோவிலுக்குள் நுழைவதை தடுப்பவர்கள் மீது அரசு சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். நமது அரசமைப்புச் சட்டம் பிரிவு 14,15(2) 17 19, 21,25,29(2),38, 46, மற்றும் 51-கி  போன்றவைகள் சுட்டிக்காட்டியுள்ளது என்னவென்றால் நன்கு பயிற்சி எடுக்கப்பட்ட, பூஜை முறைகளை நன்கு கற்ற யார் வேண்டுமானாலும் பூசாரி களாக பூஜைகள் செய்ய எந்த கோவிலிலும் அனுமதிக்கப்படவேண்டும், இதை உச்சநீதி மன்றமும் உறுதிபடுத்தியுள்ளது, சட்டத்தின் முன்பு கோவில் மற்றும் பூசாரிகளும் ஒன்று தான்.
மேலும் நீண்ட நாட்களாக பராமரிக் கப்படாத ரவிதாஸ் கோவிலை மாநில அரசு முன்னின்று பழுதுகளை சரிபார்த்து கோவிலை நன்கு பராமரிக்க தன்னுடைய மேற்பார்வையில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அந்த அதிகாரிகள் குழுவில் கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். நீதிமன்ற அனுமதியை ஊட கங்கள் மற்றும் பிரதிகள் மூலம் அனை வருக்கும் தெரிவிக்கப்படவேண்டும், கோவி லிலும் தெளிவாக எழுத்துமூலம் எழுதி ஒட்டப்படவேண்டும்'' என்று தங்களுடைய தீர்ப்பில் கூறியுள்ளனர்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...