Tuesday, October 24, 2017

வேளாண் துறையையும் மத்தியப் பட்டியலுக்குக் கொண்டு போவதா? மாநில அரசுகள் கண்டிக்கவேண்டும்

அதிகாரக் குவியல்கள் மத்திய அரசிடம் ஏராளம்; இந்நிலையில்

வேளாண் துறையையும் மத்தியப் பட்டியலுக்குக் கொண்டு போவதா?

மாநில அரசுகள் கண்டிக்கவேண்டும் அண்ணா பெயரில் உள்ள அ.இ.அ.தி.மு.க. அரசும் உடனடியாகக் கண்டித்து எழுதட்டும்!

தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள மாநில உரிமைக்கான அறிக்கை


ஏற்கெனவே மத்திய அரசின் அதிகாரப் பட்டியல் அளவுக்கு அதிகமாக இருக்கும் பொழுது, வேளாண் துறையையும் மத்தியப் பட்டியலுக்குக் கொண்டு போகச் செய்யும் திட்டத்தை மாநில அரசுகள் தடுக்கவேண்டும்; குறிப்பாக மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்துள்ள அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்திருக்கும் அண்ணா தி.மு.க. அரசு இதனைக் கண் டித்து மத்திய அரசுக்கு உடனடியாக எழுத வேண்டும் என்று   திராவிடர் கழகத் தலை வர், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

திட்டக் கமிஷனைக் கலைத்த மோடி அரசு, அதற்குப் பதிலாக ‘நிதி ஆயோக்‘ என்ற ஒரு அமைப்பினை உரு வாக்கியது; அதன் உறுப்பினர்களில் ஒருவர், (அவர்கள் எல்லாம் உள்ளத்தில் காவியேற்றிக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆதரவாளர்களும்) தற்போது மாநிலப் பட்டியலில் உள்ள ‘வேளாண்மை’ அதிகாரத் தையும் அப்படியே மத்திய அரசின் ஏகபோக அதிகார மான மத்தியப் பட்டியலுக்கே மாற்றவேண்டும் என்று கூறியுள்ளது - முழுக்க முழுக்க பிரதமர் மோடி அரசின் ஆழம்பார்க்கும் (Feeler விட்டுப் பார்க்கும்) ஒரு வித்தையாகும்.

இந்த நச்சு அதிகார ஆசை - எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறிய பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகள் முன்வரவேண்டும். பொதுவாக பரவலான அதிகாரங் களே உண்மையான மக்கள் ஆட்சியின் சரியான அடையாளங்கள் ஆகும்!

அரசியல் சட்டத்தில் மூன்று பட்டியல்கள்

அரசியல் சட்ட கர்த்தாக்கள் வகுத்த மூன்று பட்டியல்களில்-

1. மத்தியப் பட்டியல் - 97 அதிகாரங்களைக் கொண்ட நீண்ட ‘‘கொழுத்த’’ அதிகாரக் குவியல் பட்டியல்

2. மாநிலப் பட்டியல் - 66 அதிகாரங்களைக் கொண்ட ‘‘இளைத்த'' பட்டியல்

3. மாநிலங்களின் இசைவு பெற்றே மத்திய அரசு சட்டம் இயற்றவேண்டிய (கன்கரண்ட் லிஸ்ட்) பட்டியல் - 47 அதிகாரங்களைக் கொண்டது.

இப்பட்டியல்கள் உருவாகும்போதே அரசியல் சட்ட வரைவுக் குழுத் தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர் கள், ஒரு எச்சரிக்கை விடுத்தார். ‘‘மாநிலப் பட்டியலைச் சுருக்கி, மத்தியப் பட்டியலுக்கு அதிகாரங்களைக் குவிப்பதில் ஒரு பெரும் ஆபத்து உள்ளது. அதிகமான சுமை - கனம் மத்திய அரசின் அரசு இயந்திரத்தில் ஏற்றப்பட்டால், அந்த சுமை தாங்கும் இயந்திரம் முறியும் அபாயம் ஏற்படும்‘’ என்று எச்சரித்தார்.

வேளாண் துறை மத்தியப் பட்டியலிலா?
திருக்குறள் தந்த பேரறிஞர் திருவள்ளுவர் இந்த தத்துவ உண்மையை ஒரு அருமையான ‘குறளில்’ கூறினார்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

சால மிகுத்துப் பெயின் (குறள் 475)

‘மயில் இறகு போன்றவை லகுவானவைதானே என்று கருதி அளவுக்கு அதிகமாக ஏற்றினால், அந்த வண்டியின் அச்சு முறிந்து வீழும்' என்பதே அக்குறளின் கருத்து.

வேளாண்மை - தற்போது மாநிலப் பட்டியலில் 14 ஆம் பொருளாக உள்ள மாநில அதிகாரம் - அதனை மத்தியப் பட்டியலுக்கு மாற்ற ஒரு திட்டத்தினை ஏன் இப்போது அறிவிக்கிறார்கள்? வேளாண்மை என்ற பொருளின்கீழ் அரசியல் சட்ட மாநிலப் பட்டியலில் 14 ஆவது அம்சமாக,

‘‘‘Agriculture, including agricultural, education and research protection against pests, and prevention of plant diseases’’ என்று உள்ளது.

வேளாண் துறைக் கல்லூரியில் சேர்வதற்கு ‘நீட்’டைக் கொண்டு வரத் திட்டமா?

வேளாண்மைக் கல்லூரிகளை, வேளாண்மைப் பல்கலைக் கழகங்களை, ஆய்வுக்கூடங்களை, ஆராய்ச்சிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அங்கும் ‘நீட்’ தேர்வு நடத்துவதற்கும், இதில் ஒரு சூழ்ச்சி மிகுந்த திட்டம் புதைந்துள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

அரசியல் சட்டம் வகுத்த அம்பேத்கர் கூற்றுப் படியும், பல்வேறு மாநில அதிகாரங்கள்பற்றிய பங்கீடுசம்பந்தமான ஆய்வுக் குழுக்கள் டாக்டர் ராஜமன்னார் குழு, சர்க்காரியா குழு போன்ற வைகளின் பரிந்துரைகளின்படி தற்போது மத்தியப் பட்டியலிலும், ‘பொதுப் பட்டியல்’ என்று தவறாக அழைக்கப்படும் மாநிலங்கள் இசைவு பெறவேண்டிய பட்டியலில் உள்ளவைகளை, மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வருவதுதான் இன்றைய தேவையாகும்!

ஆனால், மத்திய (டில்லி) அரசின் போக்கோ, (Reverse Gear) பின்னோக்கிச் செல்லும் பிற்போக் காக உள்ளது!

அதிகச் ‘சுமையை’ தூக்க முடியாமல் தூக்கிடும் நிலையில் உள்ளவர்கள், சுமையை ஏன் தேவையற்று சுமந்து, ‘‘நொந்து நூலாகப்’’ போகவேண்டும்!

ஒற்றை ஆட்சியையே கொண்டு வந்து, தற் போதுள்ள அரைகுறை கூட்டாட்சி முறையையும் அறவே பறிக்கவே, இந்த ஆபத்தான யோசனைத் திட்டத்தைக் கூறுகிறார்கள்.

அறிஞர் அண்ணா அன்று எழுப்பிய வினா!
அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், மத்தியில் குவிந்துள்ள அதிகாரங்களைப் பரவலாக்கவேண்டும் என்று பேசும்போது, இந்த வேளாண்மைத் துறையை உதாரணத்திற்குக் கூறி, மாநிலத்தில் வேளாண் அமைச்சர் உள்ளபோது, மத்தியில் ஏன் தனியே ஒரு வேளாண் அமைச்சர் என்றே கேட்டார்!

நிதி ஆயோக்கின் இதே உறுப்பினர் தனியார்த் துறை இட ஒதுக்கீட்டை எதிர்த்துள்ளார். அதனை திராவிடர் கழக பொதுக்குழு கண்டித்துத் தீர்மானமே போட்டுள்ளது. இவர்கள் யார் கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு?

அ.தி.மு.க. அரசு என்ன செய்யவேண்டும்?

அண்ணாவைக் காற்றில் பறக்கும் கொடியாக மட்டுமே பறக்கவிடும் இன்றைய அ.தி.மு.க. தமிழக அமைச்சர்கள், இதனை உடனடியாக எதிர்த்து மத்திய அரசுக்கு எழுதவேண்டாமா?

அந்தோ, தாழ்ந்த தமிழகமே! உன் நிலை இப்டியா இருப்பது?




கி. வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்.

சென்னை
23.10.2017


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Monday, October 23, 2017

கலைஞர் உடல்நலம்பெற உளமார்ந்த வாழ்த்துகள்!




மத்திய மதவாத ஆட்சியை முறியடிக்க ஒன்றுபடுக!
கடலூர் திராவிடர் கழக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட சிறப்பான  தீர்மானங்கள்


கடலூர், அக்.21- மதச்சார்பின்மைக்கும், சமூக நீதிக்கும் எதிரான மத்திய இந்துமதவாத பி.ஜே.பி. ஆட்சியை முறியடிக்க அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்பது உள்பட 20 முக்கிய தீர்மானங்கள் இன்று (21.10.2017) கடலூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

கடலூர் நகர அரங்கத்தில் (டவுன் ஹால்) திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக் கரசு அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண்  1: 

இரங்கல் தீர்மானம்

பகுத்தறிவாளர்கள் படுகொலைக்குக் கண்டனம்

பகுத்தறிவு - முற்போக்குச் சிந்தனையாளர்களான மகா ராட்டிரத்தைச் சேர்ந்த தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கருநாடகத்தைச் சேர்ந்த கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோர் படுகொலைக்கு இப்பொதுக்குழு தனது வன் மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

மத்தியில் இந்துத்துவா கொள்கை கொண்ட பிஜேபி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, பகுத்தறிவு - முற்போக்காளர்களுக்குக் கடும் அச்சுறுத்தலும், உயிருக்கு ஆபத்தும் தொடர்ந்து நிகழ்ந்து வருவது - மதவாத சக்தி களின் வன்முறைத் தாண்டவத்தை வெளிப்படுத்துகிறது.


ஆண்டுகள் பல ஓடினாலும் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டு, உரிய தண்டனை வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் இந்துத்துவா வெறியர்களுக்கு உற்சாகத்தை யும், ஊக்கத்தையும் துணிச்சலையும் கொடுத்து வருகிறது.

மேலும் காலதாமதம் செய்யாமல் குற்றவாளிகள் தண் டிக்கப்பட உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மகாராட் டிர, கருநாடக மாநில அரசுகளை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

கல்வி வள்ளலும், வல்லம் பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக இணைவேந்தருமான வீகெயென் கண்ணப்பன் (மறைவு 12.2.2017)

திராவிட இயக்க வழிவந்தவரும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.செழியன் (வயது 95 - மறைவு 6.6.2017)

முதுபெரும் பொதுவுடைமைவாதி - மூத்த எழுத்தாளர் ஞானையா -  (மறைவு - 8.7.2017)

அறிவியல் அறிஞர் கூரியர் இதழின் மேனாள் ஆசிரியர் மணவை முஸ்தபா (வயது 82 - மறைவு 6.2.2017)

கவிக்கொண்டல் அப்துல் ரகுமான் (வயது 80 - மறைவு 2.6.2017)

இயக்குநர் செய்யாறு ரவி (வயது 55 - மறைவு 11.3.2017)

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியர் இரா.முத்துக்குமாரசாமி (வயது 81 - மறைவு 15.8.2017)

குடியரசுக் கட்சி மேனாள் தேசிய செயலாளர் டாக்டர் சேப்பன் (வயது 80 - மறைவு 31.8.2017)

காஞ்சி சி.வி.எம்.பொன்மொழி (மறைவு 31.8.2017)

மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் கா.சுப்புராயலு

தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் சதாசிவம் (வயது 66 - மறைவு 21.3.2017)

தமிழ்ப் போராளி வீர.சந்தானம் (வயது 71 - மறைவு 13.7.2017)

சிதம்பரம் நடராசன் கோயிலில் தீட்சதர்களை எதிர்த்து மொழிப்போர் நடத்திய ஓதுவார் ஆறுமுகச £மி (வயது 94 - மறைவு 8.4.2017)

மேனாள் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் கிருபாநிதி (மறைவு 19.10.2017)

பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழக நிதி அலுவலர் (Finance Officer)
ப.முத்துக்கிருஷ்ணன் (வயது 77 - மறைவு 4.6.2017)

ஆகிய பெருமக்களின் மறைவிற்கு இப்பொதுக் குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

நீதிக்கட்சி வழிவந்த பேராசிரியர் - பெரியார் அஞ்சல்வழிக் கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர் முனைவர் பு.இராசதுரை (வயது 86 - மறைவு 5.10.2017)

வேலூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர் - முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் செய்யாறு பா.அருணாசலம் (வயது 91 - மறைவு 28.8.2017)

தலைமைச் செயற்குழு உறுப்பினர் - விவசாய தொழிலாளர் அணி மேனாள் செயலாளர் குடவாசல் கணபதி (வயது 86 - மறைவு 24.6.2017)

நெல்லை மண்டல திராவிடர் கழக செயலாளர் பேராசிரியர் கனகராஜ் (மறைவு 11.7.2017)
கழகப் பொதுக்குழு உறுப்பினர் நீடாமங்கலம் ஆ.சுப்பிர மணியம், ‘விடுதலை’ மேனாள் செய்தியா ளர் ஆர்.இராதா (வயது 67 - மறைவு 4.6.2017)

சென்னை மாவட்ட மேனாள் செயலாளர் மயிலை எம்.கே.காளத்தி (வயது 89 - மறைவு 2.7.2017)

சேலம் சுயமரியாதை வீரர் மா.அர்த்தநாரி (வயது 86 - மறைவு 28.9.2017)

புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர் இராமதிராசன் (வயது 74 - மறைவு 3.5.2017)

கரூர் மாவட்டம் விசுவநாதபுரி - சட்ட எரிப்புப் போராட்ட வீரர் ப.நல்லதம்பி (வயது 86 - நாள்: 27.2.2017)

கடலூர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கனகராஜ் (வயது 90 - மறைவு 10.3.2017)

சென்னை பெரியார் நூலக வாசகர் வட்ட பொருளாளர் கு.மனோகரன் (வயது 72 - மறைவு 16.3.2017)

கரூர் மாவட்டம் சணல்பிரட்டி - பொதுக்குழு உறுப்பினர் அ.பாரதமணி (வயது 54 - மறைவு 20.3.2017)

ஆலத்தம்பாடி பெரியார் பெருந்தொண்டர் ப.ஆத்மநாதன் (வயது 85)

கோடியக்கரை சட்ட எரிப்புப் போராட்ட வீரர் வி.சுப்பிர மணியன் (வயது 96 - மறைவு 24.3.2017)

தென்காசி - மேலமெய்ஞ்ஞானபுரம் டேவிட் ஜெயராஜ் (மறைவு - 22.4.2017 - உடற்கொடை)

சிதம்பரம் வட்டம் பூந்தோட்டம் - பெரியார் பெருந் தொண்டர் நா.வீரமணி (வயது 80 - மறைவு 7.5.2017)

ஓசூர் மா.மூவேந்தன் (மறைவு - 3.3.2017)

நெய்வேலி இந்திரா நகர் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் பேரின்பம் (வயது 91 - மறைவு 7.5.2017)

நெல்லை மாவட்டம் மேலமெஞ்ஞானபுரம் கழகத் தோழர் எஸ்தர் (மறைவு 3.10.2017 - உடற்கொடை)

ரிஷிவந்தியம் ஒன்றிய கழகத் தலைவர் பொன்.சீனிவாசன் (மறைவு 11.10.2017)

செய்யாறு வடமணப்பாக்கம் நல்லாசிரியர் பி.கே.விஜய ராகவன் (மறைவு - 10.10.2017)

முசிறி வட்டம் ஏவூர் சட்ட எரிப்புப் போராட்ட வீரர் வி.சுந்தரம் (வயது 82 - மறைவு 3.4.2017)

திருவெறும்பூர் நகர திராவிடர் கழகத் தலைவர் வி.செயராமன் (மறைவு - 12.4.2017)- உடற்கொடை.

திருச்சி மாவட்டம் தாதகவுண்டம்பட்டி ஒன்றியக் கழக மகளிரணி தலைவர் சின்னக்கண்ணு (மறைவு - 22.5.2017)

கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் வாழ்விணையர் அஞ்சம் மாள்  (வயது 85 - மறைவு 13.7.2017)

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சுந்தரபெருமாள் கோயில் அ.மா.கணபதி (வயது 94 - மறைவு 24.6.2017)

குமரி மாவட்டம் வில்லுக்குறி முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஈ.சுப்பிரமணியம் (வயது 102 - மறைவு 12.7.2017)

நாச்சியார்கோயில் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் இரா.தனுஷ்கோடி (வயது 90 - மறைவு 28.8.2017)

திருச்சி - சங்கிலியாண்டபுரம் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் பி.ஏகாம்பரம் (வயது 93 - மறைவு 30.8,.2017 - உடற்கொடை)

போடிநாயக்கனூர் கழகத் தோழர் சுகுமாறன் (வயது 72 - மறைவு 28.9.2017 - உடற்கொடை)

சுந்தரபெருமாள்கோயில் கழக மேனாள் செயலாளர் சி.அர்ச்சுனன் (மறைவு 1.10.2017)

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் நத்தம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கலியாணசுந்தரம் (வயது 91 - மறைவு 9.5.2017)

சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர் அய்யனார் (வயது 45 - மறைவு 19.5.2017)

பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர் ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் சி.சந்திரசேகரன் (மறைவு - 20.5.2017)

தஞ்சாவூர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் வையாபுரி (வயது 80- மறைவு 24.5.2017)

திண்டுக்கல் நகர திராவிடர் கழகத் தலைவர் மா.எழில்சந்தர் (வயது 64 - மறைவு 6.6.2017)

கரூர் அண்ணா நகர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கு.மாரியப்பன் (வயது 90 - மறைவு 20.6.2017)

ஆவடி கழகத் தோழர் மொழியன்பன் (வயது 61 - மறைவு 26.6.2017)

தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் தேசப்பந்து (வயது 63 - மறைவு 16.10.2017)

கீழ்வேளூர் எரவாஞ்சேரி முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் எம்.மாரியப்பன் (வயது 93 - மறைவு 8.9.2017)

திருச்சி மாவட்டக் கழக மேனாள் தலைவர் மு.சேகர் அவர் களின் வாழ்விணையர் ஜானகி (வயது 52 - மறைவு 9.10.2017)

உரத்தநாடு ஒன்றியம் கண்ணந்தங்குடி மேலையூர் சிவ.பாலசுப்ரமணியன், திருமங்கலக்கோட்டை தியாக ராஜன், இராயபுரம் அரங்கநாதன், இராயபுரம் பியூலா ஆகிய திராவிடர் கழகத் தோழர்களின் மறைவிற்கு இப்பொதுக்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் அளப் பரிய இயக்கப் பணிக்கும், தியாகத்திற்கும் இப்பொதுக்குழு தனது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.



தீர்மானம் எண் 2: 

2017 நவம்பர் 26 அன்று சென்னையில் மாநாடு

ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவைக் கொளுத்தும் போராட்டத்தை நடத்தி (26.11.1957) மூன்றாண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்ற தியாகத் தழும்பேறிய ஒப்பாரும் மிக்காரும் இல்லாத திரா விடர் கழகக் கருஞ்சட்டைத் தோழர்களுக்கு, இப்போராட் டத்தின் 60ஆம் ஆண்டு நிறைவையொட்டி தனது மரி யாதைகலந்த வீரவணக்கத்தை, பாராட்டை இப்பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது.

அதன் தொடர்ச்சியாக ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட்டமாக - கோயில் கருவறைக்குள் தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற போராட்டத்தைத் தந்தை பெரியார் அறிவித்தார்கள். (1969)

தந்தை பெரியார் அவர்களின் அறிவிப்பினை ஏற்று தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த நிலையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒருமனதாக சட்டம் இயற்றப்பட்டது.

தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலகட்டங்களில் சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் எஸ்.மக ராஜன், என்.கிருஷ்ணசாமி ரெட்டியார், ஏ.கே.ராஜன் ஆகி யோர் தலைமையில் வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக ஆகம தடைகள் ஏதும் இல்லை; அர்ச்சகர்களுக்குரிய பயிற்சி அளிக்கப்பட்டு அதனடிப்படையில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கலாம் என்று நீதிபதிகள் பரிந்துரைகளை அரசுக்கு வழங்கினர்.

ஆனாலும் உயர்ஜாதி ஆதிக்கவாதிகள், பார்ப்பனர்கள், ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றனர். தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்றும், பரம்பரை அர்ச்சகர் முறை கூடாது என்றும், உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்குக் கழகத்தின் சார்பில்  உரிய காலத்தில் அவ்வப்போது கடிதம் எழுதப்பட்டு, ஏற்கனவே அர்ச்சகர் பயிற்சி பெற்றுத் தயாராக இருக்கிற 206 பயிற்சியாளர்களையும் அர்ச்சகர்களாக நியமிக்க ஆவன செய்ய வேண்டும் என்று அக்கடிதத்தில் கேட்டுக்கொள் ளப்பட்டுள்ளது. ஆனால், அரசு அதனைச் செயல்படுத்த முன்வராதது கெட்ட வாய்ப்பேயாகும்.

இதற்கிடையே கேரள மாநில மார்க்ஸிட்டு கம்யூனிஸ்டு அரசு, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்கள் 36 பேர்களை கோயில் அர்ச்சகர்களாக நியமனம் செய்து சாத னைச் சரித்திரத்தில் முத்திரை பதித்துள்ளது பாராட்டுக்குரிய தாகும்.

இந்த அடிப்படையிலாவது தமிழ்நாடு அரசு செயல்பட முன்வர வேண்டும் என்று இப்பொதுக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

இதனை வலியுறுத்தும் வகையில், ஜாதி ஒழிப்புக்காக 1957இல் அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தும் போராட் டத்தில் திராவிடர் கழகம் ஈடுபட்ட நவம்பர் 26ஆம் நாளன்று (26.11.2017) சென்னை பெரியார் திடலில் அனைத் துக் கட்சியினரும்,  சமூக இயலாளர்களும் இதில் ஒத்தக் கருத்துள்ள, சமயத்தைச் சார்ந்த பெருமக்களும் பங்கேற்கும் ஒரு மாபெரும் மாநாட்டினை திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் இந்த வகையில் மாநாடுகளை நடத்தவும் தீர்மானிக்கப்படுகிறது.

மாநாட்டில் சிறை நிரப்பும் போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்று தீர்மானிக்கப்படுகிறது. கழகத் தோழர்கள் போராட்ட வீரர்களின் பட்டியலை விரைந்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தீர்மானம் எண் 3: 

2018 ஜனவரியில் திருச்சிராப்பள்ளியில்  உலக நாத்திகர் மாநாடு

பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் பங்கேற்கும் உலக நாத்திகர் மாநாட்டினை  2018 ஜனவரி 5, 6, 7 ஆகிய மூன்று நாட்களில் திருச்சிராப்பள்ளியில் பல்வேறு சிறப்பு அம் சங்களுடன் நேர்த்தியாக விஜயவாடா நாத்திக மய்யத்துடன் இணைந்து திராவிடர் கழகத்தின் சார்பில் வெற்றிகரமாக நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 4: 

‘விடுதலை’க்கு 15,000 சந்தாக்கள் சேர்த்தல்


தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்த நாளான வரும் டிசம்பர் 2ஆம் தேதியன்று 15,000 ‘விடுதலை’ சந்தாக் களைச் சேர்த்து - ஈரோட்டில் நடைபெறவிருக்கும் மாநாட்டில் அளிப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது. கழகத் தோழர்கள் இந்த மிக முக்கிய பணியில் தீவிரமாக ஈடுபட்டு இலக்கினை ஈட்டித் தருமாறு இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

கழகப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் அனை வரும் ‘விடுதலை’ சந்தாதாரராக இருக்க வேண்டியது கட்டாயம் என்பதைக் கட்டளைத் தீர்மானமாக இப்பொதுக்குழு நிறை வேற்றுகிறது.

தீர்மானம் எண் 5: 

மத்திய அரசின் இந்தி - சமஸ்கிருதத் திணிப்பு முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்


தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கை என்பது சட்டப்படியான நிலையாகும். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது 1967ஆம் ஆண்டில் தமிழ்நாடு  சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்.

இந்த நிலையை மாற்றிக் கொல்லைப்புறமாக இந்தி யைத் தமிழ்நாட்டில் புகுத்தும் பல்வேறு திட்டங்களை மத்தியில் உள்ள பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அரங்கேற்றி வருகிறது.

‘நீட்’ தேர்வில் வெற்றி பெற வேண்டுமானால் சி.பி. எஸ்.இ. கல்வித் திட்டத்தில் படித்தால்தான் உண்டு என்ற மனப்பான்மையை உருவாக்கி வருகிறது மத்திய அரசு. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இந்தியைப் படித்தாக வேண்டும் என்ற நிலை இருப்பதன் மூலம் மறை முகமாகத் தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க விரும்பும் மத்திய பிஜேபி அரசின் நோக்கம் நிறைவேறி வருகிறது.

அண்மைக்காலமாக மாநிலக் கல்வித் திட்டத்தின் அடிப்படையில் இயங்கிவரும் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. திட் டத்துக்கு வேகமாக மாறி வருவது  - தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கைக்கு வேட்டு வைப்பதாகும். தமிழ்நாடு அரசு இதில் உரிய கவனம் செலுத்தி சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்துக்கு அவசர அவசரமாக மாறும் போக்கினைத் தடுத்த நிறுத்த வேண்டும் என்று இப்பொதுக்குழு வலி யுறுத்துகிறது. 

இந்தப் போக்கு தமிழ்நாட்டின் சமச்சீர்க் கல்வித் திட்டத்தை ஒழித்து இந்தியையும் சமஸ்கிருதத்தையும் படிக்க வேண்டிய கட்டாய நிலையை உருவாக்கும் என் பதை இப்பொதுக்குழு எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டு கிறது.

மத்திய அரசு கொண்டுவரும் நவோதயா பள்ளியும், புதிதாக அறிமுகப்படுத்துவதாகச் சொல்லிக் கொண்டி ருக்கும் புதிய தேசியக் கல்விக் கொள்கையும், தேசிய மொழி என்ற பெயரால் இந்தியைப் புகுத்தும் சூழ்ச்சி என்பதைப் புரிந்துகொண்டு மத்திய அரசின் இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பு முயற்சிக்கு எந்த வகை யிலும் தமிழ்நாடு அரசு துணைபோகக் கூடாது என்றும், தமிழ்நாட்டு மக்களும் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் விழிப்புணர்வுடன்  மத்திய பிஜேபி அரசின் மொழியின் பெயரால் திணிக்கும் கலாச்சாரப் படை யெடுப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும்  இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டி யலுக்கு மீண்டும் கொண்டுவருவதுதான் இதற்கு ஒரே தீர்வு என்பதால் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நாடாளு மன்ற உறுப்பினர்கள் இணைந்து இதற்கான முயற்சி களை எடுக்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 6: 

‘நீட்’ தேர்வை நிரந்தரமாக நீக்குக!


மருத்துவம், பல் மருத்துவக் கல்வி ஆகியவற்றிற்கு அகில இந்திய அளவில் ‘நீட்’ எனும் நுழைவுத் தேர்வு முறை சமூகநீதிக்கு எதிரானது என்றும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மற்றும் சிறுபான்மையினருக்கும், கிராமப்புறத்தின ருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் திராவிடர் கழகமும், முக்கிய அரசியல் கட்சிகளும், சமூகநீதியமைப்புகளும் எச்சரித்தபடியே 2017-2018ஆம் ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வின் முடிவுகள் அமைந்து விட்டன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தொழிற்கல்வியில் நுழைவுத் தேர்வு என்பது சட்டப்படி 2007ஆம் ஆண்டி லேயே முற்றிலும் ஒழிக்கப்பட்ட நிலையில், அதனை உயர்நீதிமன்றமும்,  உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்ட தற்குப் பிறகும், ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப் பேர வையில் ஒருமனதாக இரு மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டும், அவற்றை எல்லாம் கிஞ்சிற்றும் பொருட்படுத்தாமல், மத்திய பிஜேபி அரசு ‘நீட்’டைத் திணித்ததற்கு இப் பொதுக்குழு தனது வன்மையான கண்டனத்தைத் தெரி வித்துக் கொள்கிறது. அரசியல் சட்டப்படி இப்படி ஒரு ‘நீட்’ தேர்வு திணிப்பு அரசியல் சட்டவிரோதமேயாகும்.

மேலும், நிறீஷீதீணீறீ ணிஸீtக்ஷீணீஸீநீமீ ஜிமீst என்ற பெயரால் வெளிநாடுகளில் வாழ் இந்தியருக்கும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்க வழி செய்யப் பட்டிருப்பது அதிர்ச்சியைத் தரக் கூடியதோடு, சட்ட விரோதமும் ஆகும்.

இந்த முடிவு அமைச்சரவையில் எடுக்கப்பட்டதா, நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதா என்பதற்கான விளக்கத்தையும் மத்திய அரசு அளிப்பது அவசியமாகும்.

இவர்களுக்கு எப்படித் தேர்வு நடத்தப்பட்டது? வெளி நாட்டுக்காரர்களுக்கு அளிக்கப்பட்ட இடங்கள் என்ன? அவர்கள் யார் யார் என்ற விவரத்தையும் ஒளிவுமறைவின்றி தெரிவிக்குமாறு மத்திய அரசையும், மருத்துவக் கவுன்சிலையும் இப்பொதுக்குழு வலியுறுத்து கிறது.

மாநில மக்கள், மாநில சட்டமன்றம் ஆகியவற்றிற்கு மதிப்பளிக்கும் வகையில் வரும் கல்வியாண்டு முதல் தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் ‘நீட்’டை அறவே நீக்க வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வற் புறுத்துகிறது.

நடந்து முடிந்த ‘நீட்’ தேர்வில் பல குளறுபடிகளும், மோசடிகளும் நடநதுள்ளன என்ற செய்திகள் பரவலாக வெளிவந்துள்ளதால் அதன் உண்மைகளைக் கண்டறிய உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

இந்த நிலையில் சமூகநீதிக்கு எதிரான ‘நீட்’ தேர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் சட்டப் போரை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 7:

தேசிய புதிய கல்வித் திட்டம் தேவையில்லை


அகில இந்திய அளவில் “புதிய தேசியக் கல்வி” என்னும் ஒரு திட்டத்தைக் கொண்டு வருவதாக மத்திய பிஜேபி அரசு அறிவித்து அதற்கான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு இனங்கள், மொழிகள், பண்பாடுகள், தட்ப வெப்ப நிலை நிறைந்த இந்தியத் துணைக் கண்டத்தில் ஒரே மாதிரியான கல்வி என்பது பொருத்தப்பாடு உடைய தல்ல. பிஜேபியின் இந்துத்துவா கொள்கை என்பது ஒரே இந்தியா, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பதைக் கொள்கையாகக் கொண்டிருப்ப தால் அதனைக் கல்வியின் மூலம் திணிக்கும் உள் நோக்கம் கொண்டு இருப்பதாலும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, குலக்கல்வி முதலியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு இருப்பதாலும் மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் அக்கல்வித் திட்டத்தை இப்பொதுக்குழு முற்றிலுமாக நிராகரிக்கிறது.
மீறிக் கொண்டு வந்தால் மிகப் பெரிய போராட்டம் தவிர்க்க இயலாதது என்பதையும் மத்திய அரசுக்கு இப் பொதுக்குழு எச்சரிக்கிறது.

தீர்மானம் எண் 8: 

தமிழ்நாடு பலவகைகளிலும் வஞ்சிக்கப்படுவதற்குக் கண்டனம்

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. சார்பில் கச்சா எண்ணெய் எடுப்பதற்கு எதி ரான போராட்டம் கடந்த 150 நாள்களாக நடைபெற்று வரு கிறது. அதேபோல புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதை எதிர்த்து 180 நாள்களாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்டா பகுதிகளில் மீதேன் எரிவாயு எடுக்கும் நடவடிக்கையை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டு வருகிறார்கள்.

ஒரு ஜனநாயக நாட்டில் பொதுமக்கள் தங்கள் குறை களை வெளிப்படுத்த இத்தனை நாள்கள் போராடியும் மத்திய, மாநில அரசுகள் அதனைக் கிஞ்சிற்றும் பொருட் படுத்தாமல் இருப்பது ஜனநாயகக் கோட்பாட்டுக்கு முற்றிலும் எதிரானதே. இந்த நிலைக்கு இப்பொதுக்குழு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

மத்திய, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் தலை யிட்டு பொதுமக்களின் அச்சத்தைப் போக்கிடும் வகையில் நியாயமான கோரிக்கைக்கு இணக்கமான முடிவினைப் பெற்றுத் தருமாறு இப்பொதுக்குழு மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துகிறது.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் சீர்காழி யில் ரூ.14,482 கோடி மதிப்பில் 4,000 மெகாவாட் மின் சாரம் தயாரிக்கும் அனல்மின் நிலையம் அமைக்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டு, துவக்க ஆய்வுக்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டு, பூர்வாங்கப் பணிகள் தொடங்கப் பட்ட நிலையில், திடீரென்று இத்திட்டம் ஒரிசாவுக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (இதனை எதிர்த்து 18.9.2017 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது).

அதுபோலவே கோயம்புத்தூர் பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான அச்சகத்தை மூடுவிழா செய்து, அதன் மூலப் பொருட்களை யெல்லாம் பிஜேபி ஆளும் உத்தரப் பிரதேச லக்னோவுக்குக் கொண்டு செல்ல மத்திய பிஜேபி அரசு முடிவு எடுத்துள்ளது.  (இதனை எதிர்த்து திராவிடர் கழகம் 10.10.2017 அன்று கண்டன ஆர்ப் பாட்டத்தை நடத்தியது). அதுபோலவே ஆரிய கலாச் சாரத்திற்கு முந்தைய திராவிடர் இனத்தின் பழம்பெரும் வரலாற்றை மூடிமறைக்கும் கெட்ட நோக்கத்தோடு கீழடி தொல்பொருள் ஆய்வுப் பணி திடீரென்று மண்மூடி முடிக்கப்பட்டு விட்டது.

மத்திய அரசின் இத்தகு போக்குகள் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் அரசியல் நோக்கம் கொண்ட கெட்ட நடத்தையாக இப்பொதுக்குழு கருதுகிறது.

இவற்றைக் கைவிட்டு தமிழ்நாட்டின் உரிமைக்கு, வளர்ச்சிக்குக் கேடு செய்யாமல் இருக்க வேண்டும் என்று மத்திய பிஜேபி ஆட்சியை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

இல்லையெனின் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு என்ற பெயரில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கருத்தினை ஒன்றுதிரட்டிப் போராட்ட வழிகளை மேற்கொள்வது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவதில் மத்திய அரசு இரட்டை அளவுகோலை மேற்கொண்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அத்தனை ஒப்பந்தத் தொழிலாளர்களையும் நிரந்தரப் படுத்த வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. நீதிமன்றம் தொழிலாளர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கினாலும் அதனை எதிர்த்து அரசு செலவில் உச்சநீதிமன்றம் வரை செல்லும் திரு வெறும்பூர் ‘பெல்’ நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு இப்பொதுக்குழு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

தமிழ்நாடு போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சி னையில், அவர்களின் கணக்கில் உள்ள நிதியைப் பெறு வதற்கே போராடும் அவல நிலை ஏற்பட்டுள்ளதானது விரும்பத்தக்கதல்ல. அதே போலவே கரும்பு விவ சாயிகள், கூட்டுறவு சங்கங்களிலிருந்து தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகைக்காக அவதிப் படுவது, அலைக்கழிக்கப்படுவது, காலம் கடத்துவது உடனடியாகத் தவிர்க்கப்பட ஆவன செய்யுமாறு தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 9:

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடுக!


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித் துத் தீர்ப்பு வழங்கிய பிறகும், அவ்வாறு உத்தரவிட உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றத்திலேயே மத்திய அரசு தெரிவித்திருப்பது இதுவரை கேட்டிராத அரசமைப்புச் சட்டத்தையே கேலிக்குரியதாக்கியதாகும்.

கருநாடக மாநிலத்தில் நடக்கவிருக்கும் சட்டப் பேர வைத் தேர்தலை மனதிற் கொண்டு, இந்த அளவுக்குச் சட்ட மீறலை மத்திய அரசே மேற்கொண்டுள்ளதானது விபரீதமானதாகும்.

உச்சநீதிமன்றம் இதன்மீது உரிய நடவடிக்கை எடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக நியமிக்க ஆவன செய்ய வேண்டும் என்று இப் பொதுக் குழு கேட்டுக்கொள்கிறது.

இந்தியாவின் தலைநகரமான டில்லியில் தமிழ்நாட் டைச் சேர்ந்த விவசாயிகள் திரு.அய்யாக்கண்ணு அவர் களின் தலைமையில் காவிரி நீர் உட்பட விவசாயிகளின் பல்வேறு உரிமைகளுக்காகப் பல்வேறு வடிவங்களில் 100 நாள்களுக்கும் அதிகமாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தும், ஜனநாயக நெறிமுறை களைப் புறந் தள்ளி, குறைந்தபட்சம் சந்திப்புக்குக் கூட பிரதமர் வாய்ப்புத் தராமைக்கு இப்பொதுக்குழு தனது கண்ட னத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் எண் 10: 

தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பும்
மீன்பிடி உரிமைக்கு உத்தரவாதமும் தேவை


இலங்கைத் தீவிலும்,  இந்தியாவிலும் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, படகு களுடன் சிறைப் பிடிக்கப்படுவது என்பவை தொடர்ந்த வண்ணமே உள்ளன.

இந்த நிலை தடுத்து நிறுத்தப்பட்டு தமிழக மீனவர் களின் பாதுகாப்பு, கச்சத் தீவு உட்பட்ட பகுதிகளிலும் மீன்பிடி உரிமைக்கான உத்தரவாதத்தினை சட்டரீதி யாகப் பெற்றுத் தருமாறு மத்திய அரசினை இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது. தமிழ்நாடு அரசு இதற்கான அடிப்படை முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

இலங்கையில் சிறையில் இருக்கும் தமிழக மீன வர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்; பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள், வலைகள் உள்ளிட்ட உடைமைகள் திரும்பப் பெற ஆவன செய்ய வேண்டும் என்று மத்திய மாநில அரசு களை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. ஏற்பட் டுள்ள பொருள் நட்டத்திற்கும் இழப்பீடு பெற்றுத் தரவேண்டும் என்றும் இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

தீர்மானம் எண் 11: 

தனியார்த் துறைகளில் தேவை இடஒதுக்கீடு


உலகமயம், தாராள மயம், தனியார் மயம் (லிறிநி) என்ற பொருளாதாரக் கொள்கைகளும், செயல்பாடுகளும் விரிந்துபோகும் இந்தக் காலகட்டத்தில் அரச மைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள சமூகநீதியின் அடிப்படையில் தனியார்த் துறை சார்ந்தும் இடஒதுக்கீடு தேவை என்பது. முன்னிலும் அதிகமான அளவில் அவசியமாகிவிட்டது.

அரசுத் துறைகள், பொதுத் துறைகளில் உள்ள தாழ்த் தப்பட்டோருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் சட்டப் படியாகக் கிடைத்திருக்க வேண்டிய இடஒதுக்கீடு விகி தாச்சாரம் எட்டப்படவில்லை என்பது வேதனைக் குரியது.

இந்த நிலையில், நிதி ஆயோக்கின் துணைத் தலைவரான ராஜிவ் குமார் என்பவர் தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு கூடாது என்பது. பிஜேபி ஆட்சி எத்தகையவர்களை எல்லாம் மிகப் பொறுப்பான பதவிகளில் அமர்த்தியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவில் உள்ள பெரு முத லாளிகள் வெளிநாடுகளில் தொழில்களைத் துவங்கும் போது அந்நாட்டு மண்ணுக்குரிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவரும் நிலையில், உள்நாட்டில் மட்டும் தனியார் துறைகளில் இடஒதுக்கீடு அளிக்காததும், பொறுப்பான பதவிகளில் உள்ளவர்கள் அதனை ஆத ரிப்பதும், வெகு மக்களின் உரிமைகளுக்கும், உணர்வு களுக்கும் எதிரானது என்பதை இப்பொதுக்குழு சுட்டிக் காட்டி, தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு அமல் படுத்தப்பட சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 12:

சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு -
உடன் சட்டத் திருத்தம் தேவை!


மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கக்கூடிய பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் உள்ள 543 இடங் களில் கிடைத்துள்ள இடங்கள் வெறும் 62தான். விழுக் காட்டில் பதினொன்றே!

அதேபோல இந்தியா ‘முழுதும் உள்ள 4030 சட்ட மன்ற உறுப்பினர்களில் பெண்கள் பெற்றுள்ள இடங்கள் வெறும் 311 மட்டுமே. விழுக்காட்டில் எட்டு மட்டுமே!

இது மக்கள் பிரதிநிதித்துவம் என்ற முறையில் சமூகநீதிக்கு மிகவும் எதிரானதே! இந்த நிலையில் தேவேகவுடா பிரதமராக இருந்தபோது பெண்களுக்கு 33.3 விழுக்காட்டுக்கான மசோதா (108ஆம் திருத்தம்) 1996 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இதற்கு மேலும் காலந்தாழ்த்துவது எந்த வகையிலும் நியாயமற்றது - அநீதியானது என்பதால் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தொடரில் பெண்களுக்கு உள்ஒதுக்கீட்டு டன் கூடிய (தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோ ருக்கும் தனித்தனி ஒதுக்கீடு) சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருமாறு மத்திய அரசையும், அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 13:

மியான்மரில் ரோகிங்கியாக்கள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்


மியான்மரில் மிக நீண்டகாலமாக வாழும் மக்கள் ரோகிங்கியாக்கள். முசுலீம் மதத்தைச் சேர்ந்தவர்கள். அரசாங்கத்திற்கு சட்டப்படியான சில கோரிக்கைகளை முன் வைத்துப் போராடி வந்தார்கள்.

ஆனால், பெரும்பான்மை மக்களான பவுத்த மதத் தைச் சேர்ந்த பர்மியர்கள், அந்நாட்டு இராணுவ ஆட்சியின் துணையோடு அந்தச் சிறுபான்மை மக்களை வேட்டையாடி வருகின்றனர். உயிருக்கும் உடைமைக்கும் அஞ்சி அகதிகளாக பல நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

வங்க தேசத்தில் 4 லட்சம் பேர் தஞ்சம் புகுந்துள்ளனர். அய்.நா.முகாமில் பல லட்சம் பேர் அடைக்கலம் தேடி வந்துள்ளனர். எல்லைக் கதவுகள் மூடப்பட்டும், இந்தியாவிற்குள் உயிர் பிழைக்க ஓடோடி வருபவர்களை இந்தியா சற்றும் மனிதாபிமானமின்றி பிஜேபிக்கு இயல்பாகவே உள்ள முசுலிம்கள் மீதான வெறுப்பை முன்னிறுத்தி அவர் களை இந்தியாவில் ஏற்க முடியாது என்று சொல்லுவதும், அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று பேசுவதும் அய்.நா.வின் மனித உரிமைச் சாசனத்துக்கும் மனிதாபிமானத்துக்கும் எதிரானது.

எதேச்சதிகார ஆட்சியை எதிர்த்துப் போராடி அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி தலைமையிலான ஆட்சி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இராணுவத்தையும் அதிகாரத்தையும் பயன் படுத் துவது ஏற்புடையதல்ல. ஈழத்தமிழர் பிரச்சினையில் அய்.நா.

கோட்டைவிட்டதுபோல், இதில் நடந்து கொள் ளாமல், ரோகிங்கியாக்களின் வாழ்வுரிமையைக் காப் பாற்றி, அவர்களுடைய அனைத்து உரிமைகளையும் பெற்றுத்தர அவசர அவசரமாக முயற்சிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

தீர்மானம் எண் 14: 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் கோயிலில் பார்ப்பனர் அல்லாதார் அவமதிக்கப்படுவதை எதிர்த்துப் போராட்டம்!


காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலின் மேற்குபுறம் உள்ள மணவாள மாமுனிகள் கோயிலில் பார்ப்பனர் அல்லாதார் கோயிலுக்குள் பாசுரம் பாடிவந்த நிலைக்கு மாறாக, தற்போது அவர்களை கோயிலுக்கு வெளியில் இருந்து பாடுமாறும் (பக்தர்கள் செருப்பை விட்டுச் செல்லும் இடத்தில்) அதுபோலவே பிரசாதங்கள் வழங்கும்போது பார்ப்பனர்களைக் கோயிலுக்குள் உட்காரவைத்து அளிப்பதும், பார்ப்பனர் அல்லாதாரை வெளியில் நிற்க வைத்து வழங்குவதும் நடைபெற்று வருகிறது.


இந்த இழிநிலையை, பாரபட்சப் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பல்வேறு அதிகாரிகளிடம் முறை யிட்டும், மனுக்கள் அளித்தும் உரிய நீதி வழங்கப்படாத நிலையில், அதனை எதிர்த்து முதற்கட்டமாக ஆர்ப் பாட்டமும், அதனையடுத்துத் தொடர் போராட்டமும் நடத்துவது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண் 15: 

முற்றிலும் தோல்வியடைந்த மத்திய பிஜேபி அரசு


கடந்த மூன்று ஆண்டுகாலமாக மத்தியில் அமைந் துள்ள பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எல்லாவகைகளிலும் முற்றிலும் தோல்வி அடைந்த அரசேதான் என்பதில் எட்டுணையும் அய்யமில்லை.

சமூகநீதிக்கு எதிரான சிந்தனையும், நடவடிக்கை களும், பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய வீழ்ச்சி, மதச்சார்பின்மைக்கு விரோதமாக மதவாதச் சிந்தனை கள், நடவடிக்கைகள், கார்ப்பரேட்டுகள், சாமியார்களைச் சார்ந்து நின்று அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையான போக்குகள், மாநில உரிமைகள் பறிப்பு, பசுவதைத் தடுப்பு என்ற பெயரால் உண்ணும் உரிமைத் தடுப்பு - சிறுபான்மை மக்கள், தாழ்த்தப்பட்டோர் மீது கொடுமை கள், வன்முறைகள், ஜாதி மதக் கலவரங்களைத் தூண்டு தல், மத்தியில் அதிகாரப் பீடத்தில் பிஜேபி இருப்பதால் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்களின் இனவெறி, மதவெறிப் பேச்சுகள், சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் போக்குகள், ஊழல்கள், பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி இவற்றின் மூலம் பொருளாதார வீழ்ச்சி, வேலையில்லாத் திண்டாட்டப் பெருக்கம், நாடு முழு வதும் விவசாயிகள் தற்கொலை - இத்தகு போக்குகள் மத்திய பிஜேபி ஆட்சியின் கடும் தோல்வியைப் பறைசாற்றப் போதுமானவையாகும்.

சமூகநீதிக்கும், மதச்சார்பின்மைக்கும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் எதிராகச் செயல்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை ஜனநாயக நெறிமுறையில் அகற்றிட கட்சி களை மறந்து, அனைத்து ஜனநாயக சக்திகளும், இடது சாரிகளும் ஒருங்கிணைந்து நின்று பாடுபட, போராட முன்வர வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 16:

தமிழ்நாட்டு அரசியல், ஆட்சி நிருவாகத்தின் அவலநிலை


2016 டிசம்பரில் தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க.வுக்குள் நடந்த பிளவுகள் - குழு மோதல்கள் தமிழ்நாட்டின் ஆட்சி நிருவாகத்தையும் அறவே குலைத்துவிட்டன; நாட்டு நலன், வளர்ச்சித் திட்டங்கள் நிலைகுலைந்தன. ‘டெங்கு’ போன்ற உயிர்கொல்லும் நோயினைக் கூடக் கட்டுப்படுத்த முடியாத பரிதாப நிலையில் ஆட்சி நிர்வாகம் நோய்வாய்ப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காலூன்ற வக்கில்லாத பிஜேபி, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் யுக்தியாக அ.தி.முக. கட்சி - ஆட்சி இரண்டையும் பின்னணியில் இருந்து ஆட்டுவிக்கும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

‘நீட்’ தேர்வு, காவிரி நதி நீர் போன்ற தமிழர்களின் சமூகநீதி, நாட்டுரிமை தொடர்பான பிரச்சினைகளிலும், மத்திய அரசின் கோலுக்கு ஆடும் பரிதாப நிலைக்கு அ.தி.மு.க. கட்சியும் ஆட்சியும் ஆளாக்கப்பட்டுவிட்டன.

அண்ணாவின் பெயரையும், ‘திராவிட’ என்ற இனச் சுட்டுக் கலாச்சார சிந்தனைகளையும் காவு கொடுத்துப் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளத் துடிக்கும் போக்குக் கண்டிக்கத்தக்கது.

தனது ஆட்சி பெரும்பான்மைப் பலம் உள்ளதுதான் என்பதை குறுக்கு வழியில் முயலாமல் சந்தேகத்துக்கு இடமின்றி சட்டப் பேரவையில் நிரூபித்து, ஆட்சி நிருவாகத்தை நடத்திக் காட்ட வேண்டிய கடமை அ.இ.அ.தி.மு.க.வுக்கு உண்டு என்பதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

நீதிமன்றம் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயலுவது வாக்களித்த மக்களை மோசடி செய்வதாகும். பதவியின் காலத்தை நீட்டித்துக் கொள்வதற்கான தந்திர உபாயமுமேயாகும்.
எந்த வகையிலும் பிஜேபி காலூன்ற இடம் கொடுப்பது கட்சியின் பெயரில் உள்ள அண்ணாவுக்கும், ‘திராவிட’த்துக்கும் செய்யக்கூடிய துரோகம் என்பதையும் இப்பொதுக்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் எண் 17:

பாடத் திட்டத்திலிருந்து  ஜோதிடத்தை விலக்குக!


போலி விஞ்ஞானமான (Pseduo Science) ஜோதிடத்தைப் பல்கலைக் கழகங்களில் இடம்பெறச் செய்வது - இந்திய அரசமைப்புச் சட்டத்தின் (51-ஏ-எச்) அடிப்படைக் கொள்கைக்கு விரோதமானதாகையால் அதனைப் பல்கலைக் கழகப் பாடத் திட்டத்திலிருந்து விலக்கவேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

குறிப்பாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சேலம் பெரியார் பல்கலைக் கழகத்திலும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் ஜோதிடப் பாடத் திட்டம் இடம்பெற்று இருப்பதை விலக்காவிட்டால், திராவிடர் கழகம் அதனை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபடும் என்று இப்பொதுக்குழு எச்சரிக்கிறது!

தீர்மானம் எண் 18:

சினிமா கவர்ச்சியை முதலீடாகக் கொண்டு அரசியலில் நுழைபவர்களிடம்
எச்சரிக்கை தேவை!


தமிழ்நாட்டின் பொது வாழ்வில் - நாட்டு நலனில் எந்த அளவும் பங்கேற்காமலும்,  இதற்கு முன் மக்கள் நலனைச் சார்ந்த எந்த நடவடிக்கையிலும் போராட்டத்திலும் ஈடுபடாமலும், ஒரு சிறு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடாமலும் வெறும் சினிமா கவர்ச்சியை மட்டுமே முதலீடாகக் கொண்டு அரசியலில் நுழைந்து ஆட்சி அதிகாரத்தை எளிதில் கைப்பற்ற எத்தனிக்கும் எவருக்கும் ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என்று தமிழ்நாட்டுப் பெருமக்களை இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

மக்களின் சுக, துக்கங்களில் பங்கேற்று, அவர்களுக்கான பிரச்சினைகளுக்காக வீதியில் இறங்கிப் பாடுபடும் எவரும் அரசியலில் ஈடுபடுவது குறித்து நமக்குக் கருத்து வேறுபாடு ஏதுமில்லை என்பதையும் இப்பொதுக்குழு தெளிவுபடுத்துகிறது.

தீர்மானம் எண்: 19

குழந்தைகள் - சிறுவர்களிடம் கைப்பேசியில் விளையாடும் பழக்கத்தைத் தவிர்த்திடக் கோரல்
விஞ்ஞான கருவிகள் வளர்ச்சிக்குத் தேவை என்றாலும், குழந்தைகளிடம் கைப்பேசிகளில் விளையாடும் பழக்கத்தைத் தவிர்க்கச் செய்யவேண்டும் என்று பெற்றோர்களை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

மூளை வளர்ச்சிப் பாதிப்பதோடு விபரீதமான அம்சங்கள் பக்கம் அவர்கள் ஈர்க்கப்படும் அபாயம் இருப்பதை உணர்ந்து பெற்றோர்களும், குடும்ப உறுப்பினர்களும் இதில் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாட்டின் எதிர்காலத்தைக் கருதி, இதனை இப்பொதுக்குழு தீர்மானமாக முன்மொழிந்து வழிமொழிகிறது.

தீர்மானம் எண் 20:

முத்தமிழ் அறிஞர் கலைஞர்
முழு உடல்நலம் பெற வாழ்த்துகள்
!

தி.மு.க. தலைவர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் படிப்படியாக உடல்நலன் மேம்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரியதாகும்.

அவர்கள் முழு உடல்நலன் பெற்று, மீண்டும் தன் தொண்டினைத் தொடரவேண்டும் என்பதே தமிழ்ப் பெருமக்களின் மிகப்பெரிய வேட்கையாகும்.

விரைவில் அவர்கள் முழு நலன்பெற இப்பொதுக்குழு அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

தென் இந்திய சீர்திருத்தக்காரர்கள் மகாநாடு ஆண், பெண் தன்மைகள்


பொது மக்களில் பெண்கள், தீண்டாதார்கள் என்ப வர்கள் மிக மோசமாக அழுத்தப்பட்டிருக்கிறார்கள் - புலிக்கு ஆடு கடவுளால் ஏற்படுத்தப்பட்ட உணவு என்பது போலவும் - பூனைக்கு எலி கடவுளால் ஏற்படுத்தப்பட்ட உணவு என்பது போலவும் - ஆணுக்குப் பெண் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட அடிமை எனக் கருதி நடத்தப்பட்டு வருகின்றார்கள். உண்மையிலேயே இப்படி ஒரு கடவுள் ஏற்படுத்தியிருப்பாரானால் முதலிலேயே அந்தக் கடவுளை ஒழித்து விட்டுத்தான் வேறு காரியம்  பார்க்க வேண்டும். அய்யோ பாவம்! ஏழைக் கடவுள் மீது எத்தனை பழிதான் போடுவது என்று தோன்றினாலுங்கூட, அந்தக் கடவுளுக்கு இவ்வளவையும் சகித்துக் கொண்டு உயிர் வாழும்படியான அவசியம் என்ன வந்தது என்பது நமக்குத் தெரியவில்லை, கஷ்டமாயிருந்தால் ஒழிந்து தொலையட்டுமே என்றுதான் தோன்றுகின்றது.
உலகத்தில் சிறப்பாக நமது நாட்டில் எல்லாவற்றையும் விட பெண்கள் நிலையே மிக மோசமானது. அதிலும் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பதிவிரதைத் தன் மையை நினைக்கும்போது மனம் குமுறுகின்றது. அதாவது பதிவிரதம் என்கின்ற கற்புதான் அவர்களுடைய கடமை யாம். அதுவும் எத்தகைய பதிவிரதம் என்றால் தன்னைக் கொண்டவனாகிய புருஷன் பழைய சாதமும் சுடுகிறது என்றால் விசிறி எடுத்து விசிற வேண்டுமாம் - தண்ணீர் சேர்ந்தும் போது கணவன் கூப்பிட்டால் அப்படியே கயிற்றை விட்டுவிட்டு ஓடிவர வேண்டுமாம் - ஓடி வந்தால் மாத்திரம் போதாதாம் - அந்தக் கயிறும் பாத்திரமும் கிணற்றின் நடுவே திருப்பி வருமளவும் இராட்டினத்தில் தொங்கி கொண்டிருக்க வேண்டுமாம் - இல்லாவிடில் அந்தப் பெண் கற்புடைய பதிவிரதை அல்லவாம். எனவே, சகோதரர்களே! பெண்களுடைய நிலைமைக்கு வேறு என்ன உதாரணம் வேண்டுமென்கிறீர்கள்? அன்றியும் ஆண்கள் பிறவி மூர்க்கப் பிறவி அல்லது தூர்த்தப் பிறவி என்பதற்கு வேறு என்ன உதாரணம் வேண்டுமென்கிறீர்கள்? உங்கள் கடவுள்கள் தங்கள் மனைவிகளை இப்படியா நடத்துகின்றன? தலையிலும், நாக்கிலும், மார்பிலும், தோளிலும், தொடைகள் மீதும் தங்களது மனைவிகளை வைத்துக் கொண்டிருக்கிற கடவுள்களைக் கற்பித்துக் கொண்ட உங்கள் புத்தி இவ்விதம் சென்றதற்குக் காரணம் என்ன என்பது நமக்கு விளங்கவில்லை. பெண்கள் அடிமைகளாய் ஆக்கியதின் பலனாய் மக்கள் அடிமை களால் வளர்க்கப்பட்டார்கள். அடிமைகளால் வளர்க்கப் பட்டதன் பலனாய் மக்கள் சகலத்திற்கும் அடிமைகளா னார்களெனவே மக்கள் அடிமைத் தொழிலினின்றும் நீங்க வேண்டுமானால் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட பெண்கள் அடிமை என்பதாகும் பெண்கள் அடிமை நீங்க வேண்டும்! முக்காலமும் பெண்கள் அடிமை நீக்க வேண்டும்.
பெண்கள் அடிமை நீங்க வேண்டுமானால் முதலா வதாக அவர்களைக் கற்பு என்னும் சங்கிலியில் கட்டிப் போட்டிருக்கும் கட்டை உடைத்தெறிய வேண்டும்; கட்டுப் பாட்டிற்காகவும், நிர்ப்பந்தத்திற்காகவும் கற்பு ஒருக்காலமும் கூடாது! கூடாது!! கூடவே கூடாது!! வாழ்க்கை ஒப்பந்தத் திற்காகவும், காதல் - அன்பிற் காகவும் இருவர்களையும் கற்பு என்னும் சங்கிலி எவ்வளவு வேண்டுமானாலும் இறுக்கிக் கட்டப்படட்டும்; அதைப் பற்றி நமக்குக் கவலை யில்லை. ஒரு பிறவிக்கு ஒரு நீதி என்கின்ற கற்பு அடிமைப் படுத்துவதில் ஆசை கொண்ட மூர்க்கத்தனமே அல்லாமல் அதில் கடுகளவும் யோக்கியமும் பொறுப்பும் இல்லை.
இந்த விஷயங்களில் பெண்களுக்கு ஆண்கள் உதவி புரிவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண் வேலையே ஆகும். வீரப்பெண்மணிகள் தாங்களாகவே தான் முன் வந்துழைக்க வேண்டும். அரசாங்கத்திலும் அநேகம் செய்யப்பட வேண்டிய இருக்கின்றது. ஆனால் பெண் அரசாட்சியால் (விக்டோரியா மகாராணி) ஆகாத காரியம் ஆண் அர சாட்சியால் ஆகுமா? என்பது சிலருக்கு சந்தேகமாயிருக் கலாம். பெண்களின் உறுதியான ஊக்கமும், உழைப்பும் இருந்தால் கண்டிப்பாய் முடியும். ஆனாலும் சமுதாய சீர்திருத்தக்காரர்கள் இதை மிகவும் முக்கியமாய்க் கருத வேண்டியது என்பதாக முன்னமேயே சொன்னேன். பழக் கத்தையோ, வழக்கத்தையோ, மதத்தையோ, வேதத் தையோ கருதிக் கொண்டு பயப்பட்டுவிடாதீர்கள்; காலதேச வர்த்தமானத்தைப் பாருங்கள். துருக்கியையும், ஆப்கானிஸ் தானத்தையும், சைனாவையும் பாருங்கள்! சைனாப் பெண் களுடைய காலுக்கு விடுதலை ஏற்பட்டுவிட்டது என்பதை நினையுங்கள்.
விதவைத் தன்மை
அடுத்த விஷயமாக உலக வாழ்க்கையில் இருந்து உயிருடன் பிரிக்கப்பட்ட சகோதரிகளான விதவைகள் என்பவர்களைப் பற்றி சில வார்த்தைகள் குறிப்பிட விரும்பு கின்றேன்.
ஜீவ சுபாவத்திற்கே பொருந்தாததான ஒரு நிபந் தனையை நமது சகோதரிகள் மீது சுமத்திக் கொடுமைப் படுத்துவதான விதவைத்தன்மை என்பது எந்த விதத்தி லாவது. பொருத்தமுடையதா என்பதை ஆலோசித்து பாருங்கள். இந்நிலை பெண்களை அடிமைகளாய் நடத்துகின்றோம் என்பது மாத்திரமல் லாமல் நம்மை போன்ற மக்களிடத்தில் நாம் எவ்வளவு அறிவீனமாய் நடந்து கொள்ளும் சுபாவமுடையவர்களாய் இருக்கின் றோம் என்பதற்கு அறிகுறியாகும்.
உலகத்தையும், நதியையும், சக்தியையும் பெண்ணாய் கருதும் இரண்டு பெண்டாட்டிக்கும் கம்மியில்லாத கடவுள் களையுடையதும் 1000, 10000, 60000 பெண்டாட்டிகளைக் கட்டிக்கொண்ட ராஜாக்கள் ஆண்டதுமான இந்த நாட்டில் பெண்கள் வதைக்கப்படுகின்றார்கள்!! உதைக்கப்படுகிறார் கள்! அதிலும் விதவைத் தன்மையால் மிகவும் வதைக்கப்படுகின்றார்கள்!.
பெண்கள் சம்பந்தமான வேறு எந்த காரியத்திற்காவது ஆண்கள் தங்கள் சுயநலத்தைக் கொண்டு கொடுமைப் படுத்துகிறார்கள் என்று சொல்லுவதானாலும் இந்த விதவைத் தன்மையை எதற்காக கற்பித்தார்கள் என்பதே நமக்கு விளங்க மாட்டேன் என்கிறது.
இதில் எவ்வித அறிவுடைமையும் இருப்பதாக நமக்கு விளங்கவில்லை இதனால் யாருக்கு என்ன பிரயோஜனம் என்பதும் அறியக் கூடவில்லை. ஒரு சமயம் சந்நியாசி களையும் அதிதிகளையும் உத்தேசித்து இப்படி ஒரு கூட்டம் இருக்க வேண்டும் என்பதாகக் கருதினார்களா அல்லது பெண்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது ஆதலால் இம்மாதிரி செய்வதன் மூலம்; மற்றப் பெண் களுக்கு புருஷன் கிடைக்கட்டும் என்று செய்தார்களா அல்லது வேறு என்ன காரணத்திற்காக இப்படிச் செய்தார்  கள் என்பதைக் கண்டுபிடிப்பதற்கே முடியாததா யிருக்கின் றது. எப்படி இருந்தாலும் இதைப் போன்ற முட்டாள்தனமும், சித்திர வதைக் கொப்பான கொடுமையானதும், இனி அரைகணமும் பொறுத்துக் கொண் டிருக்க முடியாததுமான காரியம் வேறு இல்லை என்றே சொல்லவேண்டும்.
இந்த விதவைத் தன்மை ஒழிய வேண்டுமானால் பெண்கள் மிக்க தைரியமாகப் பாடுபடவேண்டும்; இது விஷயத்தில் மானம் இன்னது அவமானம் இன்னது என் பதாகவோ, அவர்கள் என்ன சொல்லுவார்கள், இவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதாகவோ சற்றும் கருதாமல் தைரியமாய் நினைப்பார்கள் என்பதாகவோ சற்றும் கருதாமல் தைரியமாய் வெளிக்கிளம்பிவிட வேண்டும்; தங்களுக்கு இஷ்டமான கணவன்மார்களைத் தாங்களே தெரிந்தெடுத்துக் கொண்டதாய் வெளிப்படுத்திவிட வேண்டும்; இவ்விஷயத்தில் சற்று சவுகரியக் குறைவு இருந்தாலும் அதை வலிமையுடன் பொறுத்துக் கொண்டால் அடுத்து வரும் சகோதரிகளுக்கு மிகுதியும் பலனளிக்கும்; அநேக நாடுகளில் இவ்வழக்கம் இருந்து வருகின்றது. நமது நாட்டிலேயே இவ்வழக்கம் நடைபெறுகின்றது. ஆகையால் இதில் இனி தாட்சண்யம் பார்ப்பதென்பது சற்றும் பொருந் தாதெனவே சொல்லுவேன். இதற்கு விதவைகள் அல்லாத ஸ்திரீகளும், கொடுமைப் படுத்தப்பட்ட ஸ்தீரிகளுக்குப் புருஷன் சம்பாதித்துக் கொடுப்பதிலும், அவர்களுக்குத் தைரியமூட்டி கொடுமைப்படுத்தப்பட்ட குடும்பங்களி லிருந்து வெளிப்படுத்தி தனியாகவும் சுயேச்சையாகவும் வாழச் செய்யத் தக்க வழியில் கவலை எடுத்துக் கொண்டு உதவி செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளுகின் றேன். நான் ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால் இதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று கண்டதால்தான்.

ஜாதி வித்தியாசம்
ஜாதி வித்தியாசம் என்பது கற்பிக்கப்பட்டதே ஒழிய வேறில்லை. வலுத்தவன் இளைத்தவனை அடக்கி வைப்பது ஆகும். இது இன்னும் நிலைத் திருப்பது என்றால் இந்த நாடு மிருகப் பிராயத்தில் இருந்து மனிதப் பிராயத்திற்கு இன்னமும் வரவில்லை என்பதைத்தான் காட்டுகின்றது. எதற்காக ஒரு மனிதன் உயர்ந்த ஜாதியாகவும் மற்றொரு மனிதன் தாழ்ந்த ஜாதியாகவும் கருதப்படுகின்றான் என்பதற்கு ஏதாவது காரணங்கள் இருக்கின்றதா? பிறவி யிலாவது வாழ்க்கை யிலாவது ஒழுக்கங்களில்லாவது அறி விலாவது வித்தியாசங்கள் காணப்படுகின்றதா? ஒன்றுமே இல்லையே! அப்படி ஏதாவது ஒரு வழியில் பிரித்திருந் தாலும் அதற்குச் சமாதானமானது சொல்ல முயற்சிக்கலாம். ஒரு காரணமும் இல்லாமல் பிற மாத்திரத்தில் எதேச் சதிகாரமாய் செய்யப்படும் கொடுமையாகத்தானே விளங்கு கின்றது. இந்த முறை மக்களின் ஒழுக்கத்திற்கே நேர் விரோதமாக இருக்கவில்லையா?
சகோதரர்களே! இந்தக் கொடுமையை ஒப்புக் கொள் ளாதவர்கள் இதை ஒழிக்க வேண்டுமென்று சொல்லாத வர்கள் யார்? இதற்காக எத்தனை காலமாக முயற்சி செய் யப்பட்டு வருகின்றது? ஜாதி வித்தியாசம் உயர்வு தாழ்வு கூடாது, அதற்கு ஆதாரம் இல்லை என்றும் சொல்லாத பெரியார் யார்? ஆயினும் ஏதாவது பலன் ஏற்பட்டிருக் கின்றதா? ஒரு சிறிதும் காணப்படவில்லையே! இதற்கு ஏதாவது ஒரு வழி செய்துதானே ஆகவேண்டும். இதற்குச் சரியான வழி அறிவினாலோ ஞானத்தினாலோ போதனை யினாலோ ஏற்பட்டுவிடும் என்ற நம்பிக்கை. எனக்கு இல்லை. இது பெரிதும் அரசாங்கச் சட்டத்திலும், அரசியல் வகுப்புவாரிப் பிரதி நிதித்துவத்தினாலும் தான் இதை (அதாவது இந்த உயர்வு- தாழ்வு வித்தியாசத்தை) ஒழிக்க முடியும்.
ஆனாலும் இது அரசியல் கூட்டமல்ல. இங்கு நான் அரசியலைப் பற்றிப் பேசப்போவதில்லை. அரசாங்கத்தில் நமது முன்னேற்றத்திற்குப் பலவித சட்டம் வேண்டும் என்பதுபோல எல்லோருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்கின்றோம். இதையும் ஏன் வேண்டும் என்கிறோம் என்றால் வலுத்தவன் இளைத்தவனை நசுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவேதான். இது சமுதாய சீர்திருத்தத்தின் பாற்பட்டதா இல்லையா என்பதைத் தாங்களே யோசித்துப் பாருங்கள்.  இன்னும் ஓர் அவசியமும் சொல்லுகின்றேன். அரசியல்காரர்கள் வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம் கேட்கும்போது எதற்காக வகுப்பு வித்தியாசத் தைக் கற்பிக்கவேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக இருக்கலாமே என்கின்றார்கள். இதை நம்பி, இந்தப்படியே சமுதாய வாழ்க்கையில் இருக்கலாம் என்றாலோ மத இயல்காரர்கள் அது மதத்திற்கு விரோதம் என்கின்றார்கள் அம்மதத் தடையை நீக்க சட்டம் செய்யலாம் என்றாலோ மத ஆச்சாரியர்கள் மதத்தில் சர்க்காரோ சட்டசபையோ பிரவேசிக்க கூடாதென் கிறார்கள். எனவே இப்போதாவது ஒவ்வொரு வகுப்புக்கும் பிரதிநிதித்துவ உரிமை அளிக்க வேண்டிய அவசியம் என்று சொல்லுவது சரி என்று தோன்ற வில்லையா? அடுத்தபடியாக உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது என்ன வென்றால் ஜாதி வித்தியாசம் என்பதற்குள் தீண்டாமை என்பதாகும்.
- ‘குடிஅரசு’ - சொற்பொழிவு - 02.12.1928

போராட்ட வீரர் பட்டியலும், ‘விடுதலை’ சந்தாக்களும் போட்டிப் போட்டுக் கொண்டு குவிந்த கடலூர் பொதுக்குழு





கடலூர், அக்.22- திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டம் எட்டு மாத இடைவெளிக்குப் பிறகு கடலூர் முதுநகர் நகர அரங்கத்தில் 21.10.2017 சனியன்று காலை சரியாகக் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கப்பட்டது. பொதுக்குழு - மாலைப் பொதுக்கூட்டத்தையொட்டி நகரமெங்கும் கழகக் கொடிகள் சாலையின் இருமருங்கிலும் அசைந்தாடி கருஞ்சட்டைக் கடலே வா என்று அன்பழைப்பை விடுத்த வண்ணம் இருந்தன!
கடலூர் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி தலை வர் முனியம்மாள் கடவுள் மறுப்புக் கூறக் கூட்டம் தொடங்கப் பட்டது.
கடலூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் தென்.சிவக்குமார் தன் வரவேற்புரையில், தந்தை பெரியார் பிறந்தது ஈரோடு என்றால், தந்தை பெரியாருக்குப் பின் அவர்தந்த இயக்கத்தையும், கொள்கையையும் கட்டிக் காக்கும் தலைவர் ஆசிரியர் பிறந்தது இந்தக் கடலூர் என்ற பெருமையோடு அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த திராவி டர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள், யார்நன்றிதெரிவித்தாலும்தெரிவிக்காவிட்டாலும்அரசுப் பணியாளர்கள் தந்தை பெரியாருக்கும், திராவிடர் கழகத் துக்கும், ‘விடுதலை’க்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளனர்.
அரசுப் பணியாளர்களுக்கு இருந்த இரகசிய குறிப் பேட்டை ஒழித்தது இந்த இயக்கம்தானே என்று குறிப்பிட்டார். (மாவட்ட வருவாய்த் துறை அதிகாரியாகவும், மாநில என்.ஜி.ஓ. சங்கத் தலைவராகவும் இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).
பொதுச்செயலாளர் அன்புராஜ்
மதுரையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவுக்கும், இப்பொதுக் குழுவுக்கும் இந்த எட்டு மாத இடைவெளியில் கழகத்தின் செயல்பாடுகள், போராட்டங்கள், மாநாடுகள் பற்றியும், கழகத் தலை வரின் சுற்றுப் பயண விவரம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங் களையும் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங் குன்றன் முன்மொழிந்தார்.
கருஞ்சட்டைஎப்படிதிராவிடர்கழகத்துக்குஅடை யாளமோ அதைப் போன்றதுதான் ‘விடுதலை’ சந்தாதா ரராக இருப்பதும் என்று கூறி அனைவரும் ஓர் உறுதிமொழியை எடுப்போம் என்று கூறினார்.
தோழர்கள் எடுத்த உறுதிமொழி
திராவிடர் கழகத் தொண்டனாகிய உறுப் பினராகிய நான் கருஞ்சட்டை அணிவதை எப்படி என் கடமையாகவும், கழக உறுப்பினர் என்பதற்குச் சான்றாகவும் கருதுகிறேனோ, அதைப் போன்றதே ‘விடுதலை’ சந்தாதாரர் என்பதும் கழகத்தின் அடையாளமாகவும், அங்கீகாரமாகவும் கருதுகிறேன். ‘விடுதலை’ சந்தாதாரராக ஆகியே தீருவேன் என்று 55 ஆண்டுகாலம் ‘விடுதலை’ ஆசிரியராக இருக்கும் நமது தலைவர் அவர்களின் பிறந்த ஊராகிய கடலூரில் கூடியிருக்கும் இந்தப் பொதுக்குழுவில் உறுதிமொழி எடுக்கிறேன், உறுதிமொழி எடுக்கிறேன் -  என்று துணைத் தலைவர் சொல்லச் சொல்ல, அனைத்துத் தோழர்களும் எழுந்து நின்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
உறுதிமொழி எடுத்தவுடன், கழகத் தலைவர் ‘விடுதலை’ ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தனக்குரிய ஓராண்டு ‘விடுதலை’ சந்தாவை கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் அளித்தார் (பலத்த கரவொலி). கழகத் துணைத் தலைவரும் ஓராண்டு சந்தா தொகையினை ஆசிரியரிடம் அளித்தார். தொடர்ந்து கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் ‘விடுதலை’ சந்தாவுக்கான தொகையை அளித்த வண்ணம் இருந்தனர்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து செய்தியாளர்களைக் கழகத் தலைவர் சந்தித்தார். (அதன் விவரம் நேற்றைய ‘விடுதலை’யில் காண்க).
பொதுக்குழு தொடர்ந்து கொண்டு இருந்தது. கழக மகளிர்ப் பாசறை மாநில செயலாளர் செந்தமிழ்ச் செல்வி கழக மகளிர்ப் பாசறையின் செயல்பாட்டை அறிக்கைமூலம் தாக்கல் செய்தார். (மற்ற மற்ற அணியினரும் இம்முறையைப் பின்பற்றுவதுநலம்).
‘‘பெண் ஏன் அடிமையானாள்?’’ என்னும் தந்தை பெரியார் அவர்களின் புரட்சிகர அறிவுக்கருவூலமான நூலினை நாடெங்கும் கொண்டு செல்லும் பொறுப்பினை நிறைவேற்றுவதில் மகளிர்ப் பாசறையினர் பெரும் பேறாகக் கருதுகிறோம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
வெளியுறவுத் துறை செயலாளர் வீ.குமரேசன்
உலகம் முழுவதும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா இவ்வாண்டு கொண்டாடப்பட்ட நேர்த்தியினை விவரித்தார். ஜெர்மன் கொலோன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டின் சிறப்பினையும் சிறப்பாக எடுத்துக் கூறினார்.
மாநில கழக அமைப்பாளர் இரா.குணசேகரன்
மாநில கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்கள் தன் உரையில், திராவிடர் மாணவர் கழகத்தின் அமைப்புப் பணிகளை விரிவாகக் கூறினார். மாணவர்கள் கழகத்தை நோக்கி ஆர்வமாக வரும் தருணம் இது. இதனை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கோ.கருணாநிதி கருத்துரை
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி அவர்கள், தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள்பால் நாட்டம் மிகுந்து காணப்படும் இந்தக் காலகட்டத்தில், கிராம அளவில் இளைஞர்களிடம் கொண்டு போய் சேர்க்கப்படவேண்டும். சமூக வலைதளங்களை நாம் கண்டிப்பாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டிய பருவம் இது. இதற்கென்று ஓர் அமைப்பை ஏற்படுத்தி செயல்படுத்தவேண்டும் என்று குறிப்பிட்டார்.
டாக்டர் பிறைநுதல் செல்வி
‘விடுதலை’தான் நமது போர் ஆயுதம். அது எந்த அளவுக்குப் பரவுகிறதோ, அந்த அளவுக்கு நற்பயன் ஏற்படும். ஒவ்வொரு கழகத் தோழரும் 5 சந்தாக்களுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன்
இவர் தனது உரையில், ஆசிரியர் அவர்கள் கடலூருக்குக் கிடைத்த பெரும் பேறு! இனி ‘விடுதலை’ சந்தாக்களை நாம் கேட்டுப் பெறும் நிலை இருக்கக்கூடாது. தாங்களாகவே சந்தாக்களை செலுத்த முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டு,
எங்கள் மாவட்டத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில், வருகை தந்த கழகத் தலைவருக்கும், தோழர்களுக்கும் அன்பு கனிந்த வரவேற்பினை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இன்று நாம் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை நிறைவேற்றியே தீருவோம் என்றார்.

உறுதிமொழி எடுத்தவுடன், கழகத் தலைவர் ‘விடுதலை’ ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தனக்குரிய ஓராண்டு ‘விடுதலை’ சந்தாவை கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் அளித்தார் (பலத்த கரவொலி). கழகத் துணைத் தலை வரும் ஓராண்டு சந்தா தொகையினை ஆசிரியரிடம் அளித்தார். தொடர்ந்து கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் ‘விடுதலை’ சந்தாவுக்கான தொகையை அளித்த வண்ணம் இருந்தனர்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து செய்தியாளர்களைக் கழகத் தலைவர் சந்தித்தார். (அதன் விவரம் நேற்றைய ‘விடுதலை’யில் காண்க).

பொதுக்குழு தொடர்ந்து கொண்டு இருந்தது. கழக மகளிர்ப் பாசறை மாநில செயலாளர் செந்தமிழ்ச் செல்வி கழக மகளிர்ப் பாசறையின் செயல்பாட்டை அறிக்கைமூலம் தாக்கல் செய்தார். (மற்ற மற்ற அணியினரும் இம்முறையைப் பின்பற்றுவதுநலம்).

‘‘பெண் ஏன் அடிமையானாள்?’’ என்னும் தந்தை பெரியார் அவர்களின் புரட்சிகர அறிவுக்கருவூலமான நூலினை நாடெங்கும் கொண்டு செல்லும் பொறுப் பினை நிறைவேற்றுவதில் மகளிர்ப் பாசறையினர் பெரும் பேறாகக் கருதுகிறோம் என்று பெருமிதத் துடன் குறிப்பிட்டார்.

வெளியுறவுத் துறை செயலாளர் வீ.குமரேசன்

உலகம் முழுவதும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா இவ்வாண்டு கொண்டாடப்பட்ட நேர்த்தியினை விவரித்தார். ஜெர்மன் கொலோன் பல்கலைக் கழகத் தில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டின் சிறப்பினையும் சிறப்பாக எடுத்துக் கூறினார்.

மாநில கழக அமைப்பாளர் இரா.குணசேகரன்

மாநில கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் அவர்கள் தன் உரையில், திராவிடர் மாணவர் கழகத்தின் அமைப்புப் பணிகளை விரிவாகக் கூறினார். மாணவர்கள் கழகத்தை நோக்கி ஆர்வமாக வரும் தருணம் இது. இதனை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கோ.கருணாநிதி கருத்துரை

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி அவர்கள், தந்தை பெரியார் அவர் களின் கருத்துகள்பால் நாட்டம் மிகுந்து காணப்படும் இந்தக் காலகட்டத்தில், கிராம அளவில் இளைஞர் களிடம் கொண்டு போய் சேர்க்கப்படவேண்டும். சமூக வலைதளங்களை நாம் கண்டிப்பாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டிய பருவம் இது. இதற்கென்று ஓர் அமைப்பை ஏற்படுத்தி செயல்படுத்தவேண்டும் என்று குறிப்பிட்டார்.

டாக்டர் பிறைநுதல் செல்வி

‘விடுதலை’தான் நமது போர் ஆயுதம். அது எந்த அளவுக்குப் பரவுகிறதோ, அந்த அளவுக்கு நற்பயன் ஏற்படும். ஒவ்வொரு கழகத் தோழரும் 5 சந்தாக் களுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன்

இவர் தனது உரையில், ஆசிரியர் அவர்கள் கடலூருக்குக் கிடைத்த பெரும் பேறு! இனி ‘விடுதலை’ சந்தாக்களை நாம் கேட்டுப் பெறும் நிலை இருக்கக் கூடாது. தாங்களாகவே சந்தாக்களை செலுத்த முன் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டு,

எங்கள் மாவட்டத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில், வருகை தந்த கழகத் தலைவருக்கும், தோழர்களுக்கும் அன்பு கனிந்த வரவேற்பினை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இன்று நாம் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை நிறைவேற்றியே தீருவோம் என்றார்.


போராட்ட வீரர் பட்டியல் குவிந்தது

ஜாதி ஒழிப்புப் போராட்டமான இந்திய அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது (1957, நவம்பர் 26). 60 ஆண்டு நிறைவு பெறும் நாளில் - வரும் நவம்பர் 26 ஆம் தேதியன்று ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கோரும் மாபெரும் மாநாடு வரும் நவம்பர் 26 ஆம் தேதியன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற உள்ளது.

மாநாட்டில் பல்வேறு கட்சிகள், சமூக அமைப்புகள், இதில் நம்பிக்கையுள்ள சமயம் சார்ந்த பெருமக்கள் எல்லாம் பங்குகொள்ள இருக்கின்றனர்.

அந்த மாநாட்டில் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்படும். அதற்கான போராட்ட வீரர் பட்டியலோடு வருக என்று கழகத் தலைவர் ஏற்கெனவே ‘விடுதலை’யில் அறிவித்ததற்கிணங்க ஒவ்வொரு மாவட்டமாக மேடைக்கு வந்து கழகத் தலைவரிடம் மாவட்டப் பொறுப்பாளர்கள் அளித்த வண்ணமேயிருந்தனர். அப்பணி முடிய வெகுநேரமாயிற்று. அந்தத் தருணம் வெகு உணர்ச்சிகரமாகவே இருந்தது.

ஆண்களைவிட பெண்கள் அதிகம் பங்குகொள்ள வேண்டும் என்று கழகத் தலைவர் சொன்னபோது, ஒரே ஆரவாரம்!

முக்கிய அறிவிப்புகள்

15 ஆயிரம் ‘விடுதலை’ சந்தாக்கள் - டிசம்பர் 2 இல், ஈரோட்டில்.

15 ஆயிரம் ‘உண்மை’ சந்தாக்கள் - இளைஞரணி - மாணவரணி - ஏப்ரல் - மே மாதங்களில் அளிக்கப்படும் - இடம்: வேலூர்.

15 ஆயிரம் ‘பெரியார் பிஞ்சுகள்’ - மகளிரணி - மகளிர்ப் பாசறை - அம்மா பிறந்த நாளாகிய மார்ச் 10 இல் அளிக்கப்படும் இடம்: கோவை.

15 ஆயிரம் ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ சந்தாக்கள் - பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அளிக்கப்படும் இடம்: மதுரை.

- கடலூர் பொதுக்குழுவில் கழகத் தலைவர் அறிவிப்பு



பொதுக்குழுவின் தேன் துளிகள்...



நமது கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் படித்த செயின்ட் டேவிட் மேனிலைப் பள்ளியின் தாளாளர் ஞானக்கண் செல்லப்பா எம்.ஏ., அவர்கள், பலத்த கரவொலிக் கிடையே ஆசிரியர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

வேலூர் மாவட்ட மகளிரணி தோழர் தேன்மொழி அவர்களின் 50 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி கழகத் தலைவருக்குச் சால்வை அணிவிக்கப்பட்டது. கழகத் தலை வர் தேன்மொழிக்குச் சால்வை அணிவித்தார்.

திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகம் பற்றி வீடியோ காட்சிகள் திரையிடப்பட்டன.

40 அடி பீடத்தில் 95 அடி உயரமுள்ள தந்தை பெரியார் முழு உருவச் சிலை நிறுவப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது; அதில் ஒரு திருத்தம். 40 அடி உயரப் பீடத்தில் 148 அடி உயரத்தில் தந்தை பெரியார் சிலை (188 அடி) நிறுவப்படும் என்பதுதான் அந்தத் திருத்தம். இந்தக் காட்சி கழகத் தோழர்களைச் சிலிர்க்க வைத்தது.

அமெரிக்கா, கானா, மலேசியா முதலிய நாடுகளில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாக்கள் இவ்வாண்டு வெகுசிறப் பாகப் போட்டிப் போட்டுக்கொண்டு நடந்தவை படக் காட்சிகளாகக் காட்டப்பட்டன.

ஜெர்மன் கொலோன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டின் மூன்று நாள் நிகழ்ச்சிகளின் சுருக்கம் திரையிடப்பட்டது. மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் பின் குரல் கொடுத்திருந்தார்.

ழு கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் ‘விடுதலை’ சந்தா தாரராக ஆகவேண்டும் என்று கட்டளைத் தீர்மானம் நிறை வேற்றப்பட்ட நிலையில், முதல் சந்தாவை கழகத் தலைவர் அளிக்க, தோழர்கள் ஒவ்வொருவராக போட்டிப் போட்டுக் கொண்டு ‘விடுதலை’ சந்தாக்களை அளித்த வண்ணம் இருந்தனர்.

ஆசிரியர் கி.வீரமணி, கலி.பூங்குன்றன், சு.அறிவுக்கரசு, முனைவர் துரை.சந்திரசேகரன், மதுரை எடிசன் ராஜா, மதுரை வே.செல்வம், திருவாரூர் எஸ்.எஸ்.எம்.காந்தி, தஞ்சை ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், காரைக் குடி சாமி.திராவிடமணி, ரெங்கநாதன், ராசகிரி கோ.தங்கராசு, திருப்பத்தூர் விஜி இளங்கோவன், திருப்பத்தூர் சிற்றரசு, விழுப்புரம் சுப்பராயன், சி.கிருஷ்ணவேணி, வெற்றிவேந்தன், அண்ணா சரவணன், வடலூர் கருணாமூர்த்தி, வடலூர் ரமா பிரபா, தாராசுரம் வை.இளங்கோவன், திட்டக்குடி பன்னீர் செல்வம், வடக்குத்து இரா.கண்ணன், தஞ்சை வழக்குரைஞர் அமர்சிங், புதுச்சேரி முகேஷ், மதிமணியன், தகடூர் தமிழ்ச் செல்வி, ஊமை.செயராமன், தஞ்சை அய்யனார், புதுச்சேரி கோ.கிருஷ்ணராஜ், மும்பை இரவிச்சந்திரன், கிருட்டிண கிரி துக்காராம், தாம்பரம் ப.முத்தையன், கருப்புச்சட்டை ஆறுமுகம், புதுவை துளசி ராமன், காஞ்சி டி.ஏ.ஜி.அசோகன், திருத்தணி வழக்குரைஞர் மாமணி, சென்னை வீ.குமரேசன், ஜி.கே.கிருஷ்ணமூர்த்தி (ரூ.5000) மேலும் தோழர்கள் வந்தனர் - நேர நெருக்கடியால் நிறுத்தப்பட்டது.

ழு திருச்சியில் ஜனவரி 2018 இல் நடக்கவிருக்கும் உலக நாத்திகர் மாநாட்டிற்குத் திராவிடர் கழக செயலவைத் தலை வர் சு.அறிவுக்கரசு ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்தார்.

‘‘ஒன்றரை லட்சம் சந்தாக்கள் ‘விடுதலை’க்குக் கிடைத்தால் வேறு புரட்சியே தேவைப்படாது!’’

‘‘ஒன்றரை லட்சம் சந்தாக்கள் ‘விடுதலை’க்குக் கிடைத்தால் வேறு புரட்சியே தேவைப்படாது!’’





கடலூர், அக்.22- ‘விடுதலை’க்கு ஒன்றரை லட்சம் சந்தாக்கள் கிடைக்குமானால் வேறு புரட்சியே தேவைப்படாது என்று முத்திரைக் கருத்தைப் பதித்தார் திராவிடர் கழகத் தலைவர் ‘விடுதலை’ ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தமிழர் தலைவரின் நறுக்கான முத்துகள்

*கரை புரண்ட உற்சாகத்தைக் கடலூரில் காண்கிறேன்.
*பொதுக்குழுவை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்வதற்குக் காரணமாக இருந்த தோழர்கள் குறிப்பாக பொதுச்செயலாளர் டாக்டர் துரை.சந்திரசேகரன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, கடலூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் தென்.சிவக்குமார், மண்டலத் தலைவர் ஆர்.பி.எஸ்., மண்டல செயலாளர் தண்டபாணி, மாவட்டச் செயலாளர் வேகாக்கொல்லை தாமோதரன் ஆகியோரை வெகுவாகப் பாராட்டுகிறேன்.
*கழகப் பொறுப்பாளர்கள் பலரும் பேசவேண்டும் என்று எண்ணியிருந்தாலும், நேரம் கருதி அந்த வாய்ப்புக் கிட்டவில்லை - பொறுத்திடுக!
* இங்கே ஓர் அருமையான உறுதிமொழியை (‘விடுதலை’ சந்தா சேர்ப்பு) நமது துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் முன்மொழிய உணர்ச்சியோடு எதிரொலித்தீர்கள், மகிழ்ச்சி! மகிழ்ச்சி!! முதல் ‘விடுதலை’ சந்தாவை நானே துணைத் தலைவரிடம் தருகிறேன்.
*இவ்வாண்டு தந்தை பெரியார் பல வண்ண உருவம் பதித்த காலண்டர் ‘விடுதலை’ சந்தாதாரர்களுக்கு அளிக்கப்படும் (சந்தாக் காலண்டரை ஆசிரியர் அவர்கள் தூக்கிக் காட்டியபோது பலத்த உற்சாக மிக்க கைதட்டல்!).
*அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்டத்தில் நாம் வெற்றி பெற்றுத் தீரவேண்டும் - 2018 இல் அந்த வெற்றி உறுதிபடுத்தப்படும் (பலத்த கரவொலி).
போராட்ட வீரர்களின் பட்டியல் குவியட்டும்! குவி யட்டும்!!
*கேரளாவில் வெற்றி கிடைத்திருக்கிறது. காரணம் அங்கு ஒரு நல்லரசு அமைந்ததே! அதுபோலவே, தமிழ்நாட்டில் நல்லரசை நிறுவி வெற்றி பெறுவோம்!
*சினிமா கவர்ச்சியை முதலாக்கி அதிகாரத்தைக் கைப் பற்ற முனைவோருக்கு காலத்தால் நாம் கொடுத்த அடி நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது.
*சென்னை பெரியார் திடலில் இயங்கும் நூலகம் மிகச் சிறந்த ஆவணக் காப்பகமாகும். அதன் வளர்ச்சிக்காக ஒரு குழு அமைக்கப்படும். நூலகப் புரவலர்கள் ரூ.1000 நன்கொடை அளிக்கவேண்டும். அவர்களுக்கு ஓர் அடை யாள அட்டை அளிக்கப்படும்.
*இந்த இயக்கம் ஓர் உலக இயக்கம் என்றார் தந்தை பெரியார். அவர்களின் பிறந்த நாள் விழா உலகம் முழுவதும் கொள்கை உணர்வுப்பூர்வமாக நடந்திருப்பதே இதற்குச் சான்றாகும்.
*ஒன்றரை லட்சம் ‘விடுதலை’ சந்தாக்கள் கிடைத்தால் வேறு புரட்சியே தேவைப்படாது - ‘விடுதலை’ ஓர் அறி வாயுதம்.
*பாதை இல்லாத ஊருக்கெல்லாம் பாதை போட்டுக் கொடுப்பது ஈரோட்டுப் பாதை!

Saturday, October 21, 2017

குஜராத் மாநிலத் தேர்தல் தேதி அறிவிக்காதது ஏன்? அம்பலத்துக்கு வந்த இரகசியம்....


காந்திநகர், அக்.20  குஜராத் தேர்தல் தேதியை அறிவிப்பதில் தேர்தல் ஆணையம் தாமதித்து வருவதன் உள்நோக்கம் குறித்து பாஜக அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்ற நிலையில், பாஜக முதல்வரான விஜய் ரூபானியின் குஜராத் மாநில அரசு பல்வேறு சலுகைத்திட்டங்களை அறிவித்துள்ளது.

தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில் குஜராத் மாநில அரசு ஆசிரியர்கள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் பிற அரசுத்துறை ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

குஜராத் மாநில துணை முதல்வர் நிதின் படேல் அறிவிப்பின்படி, குஜராத் மாநில அரசு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு  ஊதிய நிரந்தரம் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் களுக்கு ஊதிய உயர்வு செய்வதாகவும் அறிவித் துள்ளது.

105 நகராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரை அடிப் படையில் ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மா வத்சால்யா திட்டத்தின்கீழ் மருத்துவ சிகிச் சைக்கு ரூ.2 லட்சத்தின்கீழ் பயன்பெறும் பய னாளிகள் ஆண்டு வருவாய் 1 லட்சத்து 50ஆயிரம் என்ற கட்டுப்பாட்டினை 2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தி அறிவித்துள்ளது.

இதற்காக நான் 2014 இல் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கவில்லை . . .

ஷோபா டே

இந்தியாவில் திருவிழாக் காலம் என்று அழைக்கப் படுவது அதிக அளவில் இறுதி ஊர்வலங்களைக் கொண்டதாக இருக்கிறது. மிகுந்த அதிர்ச்சி அளிக்கத் தக்கதும், அதே நேரத்தில் எளிதாக தவிர்த்திருக்கக் கூடியதுமான, மும்பை ரயில் மேம்பால கூட்ட நெரிசலில் 23  மனித உயிர்களின் இழப்பு, அவ்வப்போது இது போன்ற மக்களின் இறப்புகளைப் பற்றிய அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ளும் மும்பை நகருக்கு மட்டுமன்றி, ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சி அடைந்து விழித்தெழச் செய்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு நமக்காக விட்டுவிட்டுச் சென்ற நமது இரயில்வே துறை, மக்களுக்குப் பயன் அளிக்கும் வழியில் இல்லாமல் மிகமிக மோசமான கட்டமைப்பைப் பெற்றதாக இன்று இருக்கிறது. அன்றாடம் ரயில் விபத்துகள் ஏற்படாமல் இருப்பது ஏதோ ஓர் அற்புதம் போலவே தோன்றுகிறது. இந்தியா முழுவதிலும் உள்ள ரயில்வே மேம்பாலங்கள், மக்கள் கடந்து செல்லும் பாலங்களைப் பற்றிய ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டால், அதன் முடிவுகள் உங் களை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்க இயன்றதாக இருக்கும். ஒரு விசாரணை ஆணையத்தை அமைப் பதை விட உருப்படியானதொரு வழியில் ரயில்வே துறை அதிகாரிகளை நடவடிக்கை எடுக்கச் செய்வதற்கு ஒரு நகர்ப்புற ரயில் நிலைய கூட்ட நெரிசலில் 23 மக்கள் உயிரிழக்க வேண்டியதாக இருக்கிறது.
உறுதியுடன் செயல்படுபவர் என்ற பெயர் பெற்ற, மும்பை நகர வாசியான  ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல், ரயில்வே துறையின் திறமையின்மை யையும், சுறுசுறுப்பின்மையையும் அவரது முகத்தில் அறைவதைப் போல் தோன்றுவதை நன்றாக உணரவே செய்கிறார்.

அவரது அமைச்சரகமும், அவரது பெயரும் இந்த நிகழ்ச்சியில் தாக்குதலுக்கு உள்ளாகி யுள்ளன. மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள இயன்ற அளவுக்கு அறிவு படைத்தவராகவும் அவர் இருந்தார். அதனால்தான் புல்லட் ரயில் பற்றிய விவாதத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. மிகுந்த ஆடம்பரத்துடன், மார் தட்டிக் கொண்டு மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ள மிகுந்த செலவு கொண்ட பயண திட்டம்தான் இந்த புல்லட் ரயில் திட்டம்.
அதற்கான செலவினை ஒப்பிட்டுப் பாருங்கள்.  பாங்காக்கை தென்சீனாவுடன் இணைப்பதற்கான  3000 கி.மீ. தொலைவு கொண்ட புல்லட் ரயில் திட்டத் துக்கான செலவு 5.5 மில்லியன் டாலர்கள் மட்டுமே. ஆனால், மும்பையை அகமதாபாத்துடன் இணைக்கும் 500 கி.மீ. தொலைவு கொண்ட புல்லட் ரயில் திட்டத் துக்கான செலவினம் 17 பில்லியன் டாலர். பாருங்கள்! இதுபோன்ற புல்லட் ரயில் நமக்குத் தேவையா? நிச்சயமாகத் தேவையே இல்லை. யார் அதனைப் பயன்படுத்தப் போகிறார்கள்?  அதிவேகமாக அகமதா பாத்துக்கு மக்கள்  சென்றடைய வேண்டிய அவசியம் என்ன? அவ்வாறு செல்ல தின்று கொழுத்த வியா பாரிகளைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்? மும்பை மாநகரத்தின் ஒரு முனையை மற்றொரு முனையுடன் இணைக்கும் மாநகர ரயில் பயணத்தில் மக்கள் கூட்ட வெள்ளத்தில், நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். அன்றாடம் பயணம் செய்யும் கோடிக்கணக்கான பயணிகளுக்குப் பயன்படும்படி நகர்ப்புற ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்குவதை விட்டுவிட்டு,  நம் மீது தேவையே அற்ற இந்த புல்லட் ரயில் திட்டம் திணிக்கப்படுகிறது.

இந்த இந்தியா-ஜப்பான் கூட்டு திட்டம் நுண்ணிய மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படாமல் போனால், இந்த நிர்வாகமே தடம் புரண்டு போய்விடும் என்பது மட்டும் நிச்சயமானது ஆகும். அகமதாபாத்துக்கு அடிக்கடி செல்லும் மக்கள் அங்குள்ள மக்களின் மனநிலையில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதை கவனித்து வருகின்றனர். எப்போதும்  மவுனமாக வாய் மூடி இருந்து,  மோடி-ஷா-அதானி மூன்று பேரையும்  கண்களை மூடிக்கொண்டு ஆத ரித்து வந்த சாதாரணமான வியாபாரியும் கூட,  இழந்து போன தங்கள் குரலைத் திரும்பப் பெற்று உரக்கப் பேசுவதுடன், நகைச்சுவை உணர்வோடும் பேசத் தொடங்கியிருப்பதாக மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர். மக்களின் அரசியல் விசுவாசத்தில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்வதைச் சுட்டிக்காட்டும் நிகழ்ச்சிகள் போதுமான அளவுக்கு சமூக வலைதள மேடைகளில் நடந்து கொண்டிருக்கின்றன. மக்களை நம்பவைத்து ஏமாற்றி விட்டதற்காக, மோடியைத் துணிவுடன் கண்டித்து கேலி செய்யும் கேலிச் சித் திரங்கள் ஏராளமாக புதிது புதிதாக தோன்றிக் கொண்டே இருக்கின்றன. தங்கள் வியாபாரத்தை இழந்துவிட்ட வணிகர் சமூகத்தின் கோபம் மாபெரும் பொருளாதார பேரிழப்பை ஏற்படுத்திய பண மதிப் பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்களாக உருவெடுத்து வந்தன.

நடுத்தரக் கடைக்காரர்களில் இருந்து பெருந்தொழிலதிபர்கள் வரை,  ஒட்டு மொத்த குஜராத் மாநிலமே, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு நடைமுறை இரண்டும் எதேச்சதிகாரத்துடன் நடைமுறைப்படுத்தப் பட்டதை எதிர்த்து கோபத்தால் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. குஜராத்தில் ஒரு தடையை நீங்கள் விதிக்க நேர்ந்தால், அதாவது வன்முறையைக் கையாள  நேர்ந்தால், உடனடியாக நீங்கள் மக்கள் விரோதியாக ஆகிவிடுகிறீர்கள். தங்களது ஆதர்ச நாயகனான நரேந்திர மோடிக்கு எதிராக இந்த அளவுக்கு பலமாக மக்கள் எழுச்சி பெறுவார்கள்  என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. அன்றாடம் மக்களிடைய பேசிக் கொள்ளப்படும் கேலிப் பேச்சுகள் ஒரு புறமிருக்க,  நன்கு உணரக்கூடிய ஏமாற்ற உணர்வு மக்களிடையே நிலவுவதையும், அவற்றை வெளிப் படுத்துவதற்கான தொரு மக்களின் புரட்சி கனன்று கொண்டிருப்பதையும் நன்றாகக் காணமுடிகிறது. குஜராத் மக்களின் உணர்வு களை நன்கு அறிந்திருக்கும் டில்லி எஜமானர்கள், மக்களின் இந்த புதிய மனநிலையைக் கண்டுணர்ந்து மிகப் பெரிய அளவில் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்து வருகின்றனர்.
சகிப்புத் தன்மையின்மையின் கொடூரமான முக மும் குஜராத்துக்குள் தென்படுகிறது என்ற கருத்தும் நிலவுகிறது. 2017 நவராத்திரி கொண்டாட்டங்களின்போது ஆனந்த் மற்றும் வதோதராவில் இருந்து வந்துள்ள செய்திகளில், மிகுந்த கவலை அளிக்கும் செய்தி, ஜெயேஷ் சோலங்கி என்ற 20 வயது தலித் இளைஞன் மேல் ஜாதி படேல்களின் குழு ஒன்றினால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறான் என்பதுதான். வெளியே சென்று விட்டு வருகிறேன் என்று தனது தாயிடம் ஒரு மணி நேரத்துக்கு முன்பு சொல்லிவிட்டுப் போன அந்த இளைஞன் கொல்லப்படுவதற்கு  என்ன குற்றம் செய்தான்? பக்கத்தில் நடைபெற்ற உயர்ஜாதி கர்பா நடனத்தைப் பார்க்க அவன் துணிந்ததுதான் அவன் செய்த குற்றம்.
கிராமத்தில் உள்ள பழமையான சோமேஸ்வர் ஆலயத்தில் நடனக்காரர்கள் சுழன்று சுழன்று ஆடிக் கொண்டிருந்தபோது, அந்த இடத்திற்கு அருகிலேயே, பாதுகாப்பு அற்ற அந்த இளைஞன் கொல்லப்படுவதை எவருமே தடுத்து நிறுத்த முன்வராத நிலையில் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறான். அவன் செய்த ஒரே தவறு பாதுகாப்பான ஒரு தூரத்தில் இருந்து மேல்ஜாதியினர் நடனத்தைப் பார்த்தான் என்பதுதான். இதுதான் மோடியின் இந்தியாவா? உயர் வேகம் கொண்ட அதிக விலை கொண்ட புல்லட் ரயிலும் யாருக்கும் தேவையில்லை;  அப்பாவி மக்கள் மீது அன்றாடம் வன்முறைத் தாக்குதல்கள் மேற் கொள்ளப்படவும் தேவையில்லை.
‘‘இரண்டரை மனிதர்களின் அரசு'' என்று மோடி அரசை, தான் அளித்த சூடான பேட்டி ஒன்றில் அருண் ஷோரி குறிப்பிட்டுள்ளார்.  கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கு முன்பு எப் போதுமே இல்லாத அளவுக்கு மேற்கொள்ள நடை முறைப்படுத்தப்பட்டதுதான் பணமதிப்பிழப்பு நட வடிக்கை என்று அருண்ஷோரி மிகச் சரியாக விவரித்துள்ளார். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசும்போது, ‘‘பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நியாயப்படுத்த  அரசு கூறிய காரணங்கள், நோக்கங் களில்  எது இது வரை நிறைவேறியுள்ளது? கருப்புப் பணம் திரும்ப வந்துவிட்டதா? அனைத்துக் கருப்புப் பணமும் வெள்ளைப் பணமாக ஆகிவிட்டது. தீவிர வாதம் ஒழிந்துவிட்டதா? தீவிரவாதிகள் இந்தியாவுக் குள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்'' என்று அருண் ஷோரி பதில் அளித்துள்ளார்.
‘‘இரண்டரை மனிதர்களின் அரசு'' என்று மக்கள் வெளிப்படையாகவும், வேகமாகவும் பேசுவதைப் பற்றிதான் மிகவும் புகழ் பெற்ற சிந்தனையாளர்களும் மேலும் மேலும் பேசுகிறார்கள். மக்களின் மனநிலையில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதற்கு இது மற்றுமொரு நல்ல சான்றாகும்.
கடந்த பொதுத்தேர்தலில் பா.ஜ.க. பெற்ற மாபெரும், வியக்கத் தக்க வெற்றியைக் கண்ட மக்களில் எவருமே,  மக்கள் மனநிலையில் இத்தகைய மாற்றம் ஏற்படப் போகிறது என்று  எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.  நீண்டதொரு காலத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதர வாளராக இருந்த நான் கடந்த பொதுத் தேர்தலில்,  பா.ஜ.க.வுக்கு வாக்களித்தேன் என்பதை ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்தவித சங்கடமும் இல்லை. நாட்டிற்கு  வளர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதாகவும் உறுதி அளிக்கும் பா.ஜ.க.வுக்கு ஒரு மாற்றத்திற்கான வாய்ப்பை அளித்துப் பார்க்கலாமே என்று என்னைப் போன்று நினைத்து வாக்களித்த  பல நகர்ப்புற வாக் காளர்கள் பலரும் இருந்திருக்கக் கூடும்.  அவர்களுக்கு உறுதி அளித்தவைகளில் மாற்றத்தைத் தவிர வேறு எதுவுமே கிடைக்கவில்லை. இந்தியாவுக்கு ஒரு மாற்றம் கிடைத்தது. அதுவும் எப்படிப்பட்ட மாற்றம்? மிகமிக மோசமான மாற்றம். புதிய வேலை வாய்ப்பு களும் இல்லை; வளர்ச்சியும் இல்லை. கடுமையாகவும் நேரடியாகவும் கூறுவதானால்,  இந்தியா அரசு ரீதியாக ஏமாற்றப்பட்டது என்றே சொல்லலாம். அதனால் ஏற்பட்ட பேரழிவு ஈடு செய்ய முடியாதது; சரி செய்ய முடியாதது. வாக்காளர்கள் அனைவரும் ஆட்சியா ளர்கள் மீது கடுங்கோபத்தில் உள்ளனர்.
தீபாவளி சமயத்தில் சந்தடியுடன் விளங்கும் கொலாபா சந்தைக்கு இந்த வாரம் நான் சென்றிருந்த போது, உற்சாகமற்ற முகங்களைத்தான் நான் பார்த்தேன். இங்குள்ள பெரும்பாலான வியாபாரிகள் குஜராத்திகள். பழைய சரக்கு இந்த அளவுக்குத் தேங்கி இருக்கும் நிலையில்,  இந்தநெருக்கடியில் இருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது பற்றி அவர்கள் வியப்பும் கவலையும் கொண்டவர்களாக உள்ளனர். கார்ப்பரேட் நன்கொடைகள் 70 விழுக்காடு குறைந்து போயிருந்தது. தனது கடையில் இருந்த விற்கப்படாத பொருள்களையெல்லாம் பார்த்துவிட்டு ஒரு வெள்ளி வியாபாரி, இந்த ஆண்டு தீபாவளிக்கு முன் வியாபாரம் முன்னேற்றம் அடையும் என்பதற்கான நம்பிக்கை சிறிதும் இல்லை என்று ஒப்புக் கொண்டார். நீண்ட தொரு காலம் அவர் காத்திருந்தால், தங்கள் சொந்தக் காரர்களைக் காண்பதற்கு அவர் புல்லட் ரயிலில் போகமுடியும் என்று நான் கூறினேன். அதனைக் கேட்டு சிரித்த அவர், ‘‘அதற்கு முன் ஏமாற்றத்தினால், எனது தலையை குண்டினால் வெடித்துக் கொள்வேன். 2014 இல் இதற்காக நான்  பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்கு அளிக்கவில்லை'' என்று கூறினார். இந்தியாவின் நீள அகலம் முழுவதிலும் அந்த உணர்வு எதிரொ லித்துக் கொண்டிருப்பது அதிகரித்து வருகிறது.
நன்றி: ‘‘தி டெக்கான் கிரானிகிள்'', 06.10.2017 தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...