Monday, July 6, 2015

விவசாயிகள் நலன்களைப் புறக்கணிக்கும் மத்திய, மாநில அரசுகள்

வேளாண்மை உற்பத்தி பொருள் களுக்கு உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் லாபம் சேர்த்து விலையாக நிர்ணயிக்க வேண்டுனெ எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகளின் ஆணையம் 2006-இல் பரிந்துரை செய்தது. அப்போது மத்திய ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அதை நிறைவேற்றவில்லை. இந்தப் பரிந்துரையை நாங்கள் அமல் படுத்துவோம் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளித்து, ஆட்சிக்கு வந்த மோடியின் அரசு வாக்குறுதியை காற்றிலே பறக்க விட்டது.
மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு 17.6.2015 அன்று டெல்லியில் கூடியது. அதில் நெல்லுக்கான ஆதரவு விலை குவிண்டா லுக்கு வெறும் ரூ. 50/- மட்டுமே உயர்த்தி, தற்போதுள்ள ரூ. 1360/- உடன் ரூ. 50/-ஜ சேர்த்து, நிகழாண்டுக்கான விலையாக ரூ. 1410/- வழங்க முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு, நெல் ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ. 50/- மட்டுமே உயர்த்தி யிருப்பது, விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
விளை நிலங்கள் அனைத்தும், விலை நிலங்களாக வீட்டு மனைகளாக மாறிவரும் சூழலில், விவசாயிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டாமல் அவர்களின் நெஞ்சை நோகடிக்கச் செய்வது எந்த வகையில் நியாயமாகும்?
எள்ளு போட்டே காசு பார்க்கல, நெல்லு போட்டே காசு பார்க்கல, கரும்பு போட்டே காசு பார்க்கல. கல்லை நட்டுப்போடு (மனை நிலைமாக) கட்டு, கட்டா நோட்டைப்பாரு என்று ஆசை வார்த்தை கூறுகிறார்கள் நிலத்தரகர்கள். கடந்த ஆண்டு எள் விலை சராசரியாக கிலோ ஒன்றின் விலை ரூ. 100/-க்கு மேல் விற்பனையானது. இந்த ஆண்டு நிலவரம் என்ன? ஈரோடு வேளாண்மை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் - மைலம் பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் (பவானி வட்டம்) 20.6.2015 அன்று மறைமுக ஏலம் விடப்பட்டது. இதில் கடந்த வாரங் களில் விற்பனையான சுமார் கிலோ ரூ. 85 - 89 என்ற விலையிலிருந்து கீழிறங்கி - பெரும் பாலான மூட்டைகள் பாதி விலையாக ஏலம் குறிக்கப்பட்டு, ஒலி பெருக்கியில் அறிவிக்கப் பட்டதைக் கேட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். பெரும்பாலான விவசாயிகள் தங்களது எள்ளு மூட்டைகளை வாபஸ் பெற்றுக்கொண்டு, திரும்பவும் எடுத்துச் சென்று விட்டனர்.
இந்த நாட்டிலே, கொத்தடிமைகள் என்று சொன்னால் அது விவசாயிகளுக்குத் தான் பொருந்தும். இந்த ஆண்டு எல்லா விளைபொருள்களும் மிகவும் குறைந்த விலைக்கும், கேட்பாரற்றும் கிடக்கின்றன. அவர்களுக்கு கைச்செலவுக்கு கை கொடுத்து வந்த பால் உற்பத்தியிலும் அடிவிழுந்தது. பாலை முழுமையாக விற்பனை செய்ய இயலாமல் பால் கூட்டுறவு சங்கங்கள் - கொள்முதல் செய்வதை குறைத்துக் கொண் டதால், தனியார் சங்கங்கள் தானாகவே கொள்முதல் விலையை மிகவும் குறைத்து விட்டன. விவசாயிகள்பாடு திண்டாட்டம் தானே? 15.6.2015 அந்தியூர் - வெள்ளை எள் அதிகவிலை கிலோ ரூ. 84.69, சிகப்பு எள் அதிகவிலை கிலோ ரூ. 64.29; 16.6.2015 பூதப்பாடி வெள்ளை எள் அதிகவிலை கிலோ ரூ. 85.90; கருப்பு எள் அதிகவிலை கிலோ ரூ. 50.70, 19.6.2016 சிவகிரி வெள்ளை எள் அதிகவிலை கிலோ ரூ. 80.19, கருப்பு எள் அதிகவிலை கிலோ ரூ. 80.09, சிகப்பு எள் அதிகவிலை கிலோ ரூ. 77.09, 20.6.2015 மைலம்பாடியில் மேற்கண்ட விலைகளை விட குறைவு.
பட்டியலில் சிவகிரியில் கருப்பு எள் ரூ. 80.09 என்று விற்பனையாகும்போது பூதப்பாடியில் கிலோ ரூ 50.70 க்கு ஏலம் கூறப்படுவதன் காரணமென்ன? சுமார் 1000 கிலோ விற்பனை செய்யும் ஒரு சிறு விவசாயி ரூ, 29,390 அய் இழந்து விட்டு போக வேண்டிய அவலம் தானே உள்ளது. மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் விளை பொருள்களுக்கு அடிப்படை விலை நிர்ண யம் செய்யாதது ஏன்? எல்லாம் தனியார் மயம் என்று ஆகும்போது அரசாங்கம் பெரு முதலாளிகளின் கூடாரமாகத் தான் இருக்க முடியுமே ஒழிய மக்களின் அரசாங்கமாக செயல்பட முடியாது. கோடி கோடியாய் சொத்து சேர்ப்பவர்கள்  கோலோச்சம் போது மாடாய் உழைக்கும் விவசாயிகள் மடிந்து போகும் நிலைக்குத் தள்ளப்படுவது சர்வ சாதாரணம் தானே! இது தான் ஜன நாயகமா?  சிந்திப்பீர் குடிமக்களே!
- கா.நா.பாலு
மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம் சேலம்

கிறித்துவ மதத்திலும் ஜாதியா?

திண்டுக்கல் மாவட்டம், ஏ.வெள்ளோடு பகுதியைச் சேர்ந்தவர் பி.ஜோசப்ராஜ். இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், இறந்த வர்களின் உடல்களை ஏ.வெள் ளோடு பொம்மச்சிக் கண்மாயில் அடக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும், அந்த கண்மாயில் ஏற்கெனவே புதைக்கப்பட்ட ஜஸ்டின் திரவியம், தோமையார் சடலங்களை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று முன்தினம் விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ஏ.வெள்ளோடு பகுதியில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இரு பிரிவினர் இடையே இறந்தவர்களின் சடலங் களை அடக்கம் செய்வதில் பிரச்சினை இருப்பதாகவும், கடந்த 2012-இல் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு பிரிவைச் சேர்ந்த சடலங்களை அடக்கம் செய்ய தனி இடம் ஒதுக்கப் பட்டது. பின்னர், அந்த இடத்தில் ஊராட்சி சார்பில் கிணறு தோண்டப்பட்டது. இதனால், பொம்மச்சி கண்மாயில் ஒரு பிரிவைச் சேர்ந்த இருவரது சடலங்கள் அடக்கம் செய்யப் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமங்களில் ஒவ்வொரு ஜாதியினருக்கும் தனித்தனி மயானங்கள் உள்ளன. இது வருத்தம் அளிக்கிறது. இறந்தவரின் சடலத்தை நல்ல முறையில் அடக்கம் செய் வதற்கு, சண்டையிட வேண்டியுள்ளது. வாழும்போது உரிமை, சொத்து, மரியாதைக் காகப் போராடுகின்றனர். இறப்புக்கு பிறகும் இப்போராட்டம் தொடர்வது வலியை ஏற்படுத்துகிறது.
இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்யும் இடம், நினைவஞ்சலி செலுத்தும் இடமாகவும் உள்ளது. பெரு நகரங்களில் இடவசதி இல்லாததால் மின்மயானம் அமைக் கப்படுகிறது. கிராமங்களில் ஒவ்வொரு ஜாதியினருக்கும் தனித்தனி மயானம் இருப்பதாகத் தெரிகிறது.
சாதியம், வகுப்புவாதம் போன்ற கிருமிகளால் ஒட்டு மொத்த சமூகமும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்தக் கிருமிகள் நிரந்தர இடத்தை பிடித்துள்ளன. இறந்தவர் களின் சடலத்தை அடக்கம் செய்வதில் எவ்வாறு சண்டை யிடுகின்றனர் என்பதற்கு இந்த வழக்கு சிறந்த உதாரணம். மனித உடல் காயமே இது பொய்யடா, வெறும் காற்ற டைத்த பையடா என்பதை மறந்து விட்டனர். இதனால் மதத் தலைவர்கள் மக்களிடம் சமத்துவம், சகோதரத் துவத்தை வலியுறுத்த வேண்டும்.
திண்டுக்கல் கோட்டாட்சியர், ஒரு பிரிவில் இறந்தவர் களின் சடலங்களை அடக்கம் செய்ய, சிறுநாயக்கன்பட்டி யில் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அந்த இடத்தில் சடலத்தை அடக்கம் செய்ய யாரும் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது. இப்பிரச்சினைக்கு மாவட்ட ஆட்சியர் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பில் குறிப் பிட்டுள்ளனர்.
இந்தச் செய்தியைப் படிக்கும் பொழுது வேதனை ஒருபுறம் இருந்தாலும் மதங்கள் மக்களுக்கு நன்மை செய்கின்றனவா என்ற வினாவைத்தான் எழுப்புகிறது. கிறித்தவர்களுள் பெந்தகோஸ்தே, கத்தோலிக்கர்கள் என்ற இரு பிரிவுகளுக்கிடையே ஏற்பட்டதுதான் இந்த  பிரச் சினை; ஒரே கிறிஸ்துவ மதம் என்றாலும் அதற்குள்ளும் பிரிவுகள் - பேதங்கள் - இதுதான் மதம் காட்டும் மாச் சரியமா? இயேசுவை வணங்குபவர்களாக இருக்கட்டும், கன்னி மேரியை வணங்குபவர்களாகவே இருக்கட்டும் - அவர் களுக்கு வழிகாட்டி பைபிள் தானே - அதனை ஏன் மறந்துவிடுகிறார்கள்?!
ஒவ்வொரு மதத்திலும் உட்பிரிவுகள் இருக்கத்தான் செய்கின்றன. முஸ்லீம்களிலும்  சியா, சன்னி இரு பிரிவுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஈராக்கில் சதாம் உசேன் அமெரிக்க வல்லாண்மைப் புத்தியால் தூக்கிலிடப்பட்ட போது ஒரு பிரிவினர் மகிழ்ந்து கூத்தாடினர் என்பதை மறந்து விடவும் முடியாது.
இந்து மதத்திலோ சொல்லுந்தரமன்று! ஸ்மார்த்தர்கள், வைணவர்கள் என்ற பிரிவு மட்டுமல்ல. அதற்குள்ளும் கணக்கில் அடங்கா உட்பிரிவுகள் உண்டு. வைணவர்களை எடுத்துக் கொண்டால் வடகலை, தென் கலைப் பிரிவுகள் - இவர்களுக்குள் நடந்திருக்கும் சண்டைகள் சாதாரண மானவை அல்ல.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்ற சண்டை வெள்ளைக்காரர் ஆட்சிக் காலத்தில் இலண்டனில் இருந்த பிரிவி கவுன்சில் நீதிமன்றம் வரை சென்ற கதை ஊர் சிரிக்கவில்லையா?
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நடைபெற்ற இந்த வழக்கில் நீதிபதிகள் மணிக்குமார், சொக்கலிங்கம் ஆகி யோர் கூறிய கருத்து கவனிக்கத்தக்கவை. செத்த பிறகும் கூட ஜாதியா? இந்த ஜாதிக் கிருமிகளின் தொல்லைகளுக்கு அளவேயில்லையா? இந்து மதத்தைத் பீடித்த இந்த ஜாதி கிறித்துவ மதத்தையும் தொற்றிக்கொண்டுள்ளதே என்ற கவலையையும் வெளிப்படுத்தி  இருக்கிறார்கள்.
கிறிஸ்துவ மதம் தோன்றிய நாடுகளில் உட்பிரிவுகள் உண்டே தவிர பிறப்பின் அடிப்படையிலான ஜாதி கிடையாது. அப்படி இருக்கும் பொழுது இந்தியாவில் உள்ள கிறித்துவ மதத்திற்குள் மட்டும் ஜாதிக் கிருமி உட்புகுந்தது ஏன் என்பது மிகவும் முக்கியமான கேள்வி யாகும். அதைத்தான் நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்து மதத்தின் தாக்கம்தான் இதற்குக் காரணம். இந்தி யாவில் தீண்டாமைக் கொடுமை காரணமாகத் தான் இந்து மதத்திலிருந்து  பிற மதத்திற்கு மாறினார்கள் என்பது வர லாறு; பிற்படுத்தப்பட்டவர்களும்கூட பலவித உரிமைகள் கோரி மதமாற்றம் அடைந்தனர்.
இந்து மதத்தில் பல தலைமுறைகளாக வருணாசிரம அடிப்படையில் ஜாதிகளாக ஆயிரக்கணக்கில் பிறப்பி லேயே பிளவுபட்டுப் பிரிந்து கிடந்தவர்கள் கிறித்தவத்துக்கு மதம் மாறினாலும் பல தலைமுறைகளாகக் கட்டி அழுது கொண்டிருந்த அந்த ஜாதியையும் தங்களோடு கொண்டு சென்று விட்டனர். அவற்றின் பழக்க வழக்கங்களிலிருந்து மீள முடியாத அளவுக்கு மனமாற்றம் அற்றவர்களாகி விட்டனர் அதன்காரணமாகத் தான் நாடார் கிறித்தவர், முதலியார் கிறித்தவர்  தாழ்த்தப்பட்ட கிறித்தவர் என்ற நிலை இன்னும் தாண்டவமாடிக் கொண்டு இருக்கிறது.
திருச்சியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கிறித்தவர்களைக் கல்லறையில் புதைப்பதற்கு மேல் ஜாதி கிறித்தவர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்ததானது தமிழ்நாட்டில் புகழ் (?) பெற்றதாயிற்றே!
மதம் அபின் என்றார் மார்க்ஸ்; மதம் மனித சமூகத் திற்குக் கேடு என்றார் தந்தை பெரியார்; அதன் தன்மை களை மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டினார் பகுத் தறிவுப் பகலவன் தந்தை பெரியார்! மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகாவது மக்கள் சிந்திப்பார்களாக!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் ஆட்சிமன்றக்குழுப் பொறுப்பேற்க திரைக் கலைஞர் பல்லவி மறுப்பு

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் ஆட்சிமன்றக்குழுப் பொறுப்பேற்க
திரைக் கலைஞர்  பல்லவி மறுப்பு
மேலும் சிலரும் பதவி விலகல்

பூனா, ஜூலை6_ பூனாவில் உள்ள திரைப் படம் மற்றும் தொலைக் காட்சி பயிற்சி நிறுவனத் தின் தலைவராக சவ்கான் என்னும் சிறிய நடிகர் ஒருவரை மத்திய பாஜக அரசு நியமனம் செய்த தால், அக்கல்வி நிறுவனத் தின் மாணவர்கள் தொடர்ச் சியாக கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். சென்னை அய்.அய்.டி. மாணவர் அமைப்பாகிய அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம், டில்லி யில் உள்ள அரசு நிறுவ னமாக உள்ள ஜவகர் லால்நேரு பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல் வேறு இடங்களிலிருந்தும் அம்மாணவர்களுக்கு ஆதரவாக, மத்திய அர சின் முடிவை எதிர்த்து எதிர்ப்புகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது.
நடிகை பல்லவி ஜோஷ் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச் சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடி தத்தில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் பொறுப்பு வகிக்க விரும்ப வில்லை என்று குறிப் பிட்டுள்ளார்.
தொலைக்காட்சிகளில் அந்தாக்ஷரி எனும் போட்டிப்பாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த வரான பல்லவி ஜோஷ், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஏற்பட் டுள்ள பல்வேறு சம்பவங் களைச் சுட்டிக்காட்டி, அந்த காரணத்தாலேயே பொறுப்பை வகிக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
திரைப்படத் தயாரிப் பாளர் ஜானு பரூவா, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஆகியோரும் பயிற்சி நிறுவனத்தின் ஆட்சிமன்றக்குழுவில் அல்லது அதன்சாபுடைய எந்த அமைப்பிலும் அங்கம் வகிக்க விரும்ப வில்லை என்று அறிவித் துள்ளனர்.
பல்லவி கூறுகையில், பூனாவின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ஆட்சிமன்றக்குழு உறுப் பினராக என்னுடைய நியமனம்  மாணவர்களி டையே என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப் பாகும் என்று எதிர் பார்த்தேன்.  ஆனால், கல்வி நிறுவனத்தின் அமைப்பு, ஆட்சிமன்றக் குழுகுறித்து மாணவர்கள் மகிழ்வாக, திருப்தியாக இல்லை என்றால், அத னால் ஏற்படப்போகின்ற பயன்தான் என்ன? என்று கேட்டார்.
3 நாட்களுக்கு முன் பாக மத்திய அமைச்சகத் துக்கு தன்னுடைய கருத்தை கடிதம்மூலமாகத் தெரிவித்துவிட்டதாக பல்லவி குறிப்பிட்டுள்ளார்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

பிஜேபியின் ம.பி. ஆட்சியில் என்ன நடக்கிறது?

பிஜேபியின் ம.பி. ஆட்சியில் என்ன நடக்கிறது?
மர்ம மரணங்கள் - மேலும் மேலும் மர்ம மரணங்கள்!

கடந்த மூன்று நாட்களில் தினமும் ஒருவர் மரணம்

போபால்\டில்லி, ஜூலை 6_ - மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையிலான ஆட்சி கடந்த 15 ஆண்டு களாக நடந்து வருகிறது. இந்த ஆட்சியில், மருத் துவம் பொறியியல் நுழை வுத் தேர்வு மற்றும் அரசுப் பணியாளர் ஆணையத்தில் (வியாபம்) அதிக அளவு  ஊழல் நடந்துள்ளதாக காங் கிரஸ் குற்றம் சாட்டியது.  இந்த ஊழல் தொடர்பான சாட்சிகள் மற்றும் ஊழலில் பங்கு வகித்த பலர் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகின் றனர். ஜூன் 30 ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் இந்த ஊழலில் சாட்சியாக உள்ள ஒருவரும், குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் ஒருவரும் சந்தேகத்திற்கு இடமான முறையில் மரணமடைந்தனர்.
இந்த நிலையில் வியாபம் ஊழல் தொடர் பாக செய்திசேகரித்துக் கொண்டிருந்த ஆஜ்தக் என்ற பிரபலசெய்தி (தொலைக்காட்சி) நிகழ்ச் சித் தொகுப்பாளர் மரண மடைந்தார். பிரபல செய்தித் தொகுப்பாளரான அக்ஷ்ய சிங் தலைநகர் டில்லியில் இருந்து மத்தியப் பிரதேச மாநிலம் மேக் என்ற நகரத்தில் கடந்த வாரம் மரணமடைந்த மருத்துவர் தோமரின் குடும்பத்தின ரிடம் நேர்காணல் நடத்தி  கொண்டிருக்கும் போது  பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடன் சென்ற ஒளிப்பதிவாளர் கூறும் போது: எங்களிடம் பேசிக் கொண்டு இருக்கும்போது திடீரென  வாந்திஎடுக்க ஆரம்பித்தார். நாங்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்தோம், அடுத்த சில நிமிடங்களில் மயக்க மடைந்தார். அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர் என்று கூறினார். இந்த நிலையில் அவர் கொண்டு வந்த ஆவணங்கள் அனைத்தும் காணாமல் போய் விட்டன.    இந்த மரணம் தொடர் பாக சிறப்பு புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ள தாக சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். மருத்துவமனை முதல்வர் மரணம் இந்த நிலையில் ஜபல் பூர் மருத்துவமனை முதல் வர் அருண் சர்மா டில்லி யில் உள்ள அய்ந்து நட் சத்திர விடுதி ஒன்றில் பிணமாக மீட்கப்பட்டார். சனிக்கிழமை இரவு டில்லி வந்த இவர் நேற்று பத்திரி கையாளர் ஒருவரை சந்திப் பதாக இருந்தது. இந்த நிலையில் காலைவரை அவர் அறைதிறக்கப்பட் டாத காரணத்தால் சந் தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கதவை மாற்றுச்சாவி போட்டுத் திறந்து பார்த்தபோது படுக்கையறையில் இறந்து கிடந்தார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் மருத் துவரின் பிணத்தைக் கைப் பற்றி பிரேத பரிசோ தனைக்கு அனுப்பியுள்ளனர்.
இவ்விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறையினர் உடலில் எந்த இடத்திலும் காயம் இல்லை, ஒரு வேளை மாரடைப்பு ஏற் பட்டு மரணமடைந்திருக்க லாம் எதுவிருந்தாலும் பிரேதபரிசோதனைக்குப் பிறகுதான் தெரியவரும் என்றார்.  மரணமடைந்த அருண் சர்மா வியாபம் ஊழலில் மிகவும் முக்கிய நபராவார், இவர் தலைமையில் நடந்த மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வில் பல் வேறு முறைகேடுகள் நடந் தது குறித்து இவர்மீது விசாரணை நடந்து வரு கிறது.  நேற்று சந்தேகத் திற்கிடமான முறையில் மரணமடைந்த பத்திரிகை யாளர் அக்சய் சிங் திங்கள் அன்று இவரைச் சந்திப்ப தாக தனது அலுவலகத் தில் கூறியிருந்தார். காவல்துறை பெண் ஆய்வாளர் மரணம் இந்தத் தொடர் மர ணத்தை அடுத்து ஞாயிறு மாலை சாகர் மாவட்ட காவல்துறை ஆய்வாளர் அனாமிகா குஷ்வாக தனது வீட்டிற்கு அருகில் உள்ள குளத்தில் பிண மாக மீட்கப்பட்டார்.
இவர் வியாபம் ஊழல் மூலம் நடந்த முறைகேட் டின் மூலம் காவல்துறை அதிகாரியானவர்.  நீச்சல் மற்றும் தடகள வீராங் கனையான அனாமிகா குளத்தில் குதித்து இறந் திருக்க வாய்ப்பில்லை. அவரை கொலை செய்து குளத்தில் வீசியிருக்க வேண்டும் என்று அவரு டன் பணிபுரிந்த சிலர் கூறியுள்ளனர். இருப்பினும் காவல்துறை இதை தற் கொலை என்றே பதிவு செய்துள்ளது.  கொலை செய்ப்பட்ட பத்திரிகையாளரின் உடல்  உடனடியாக எரியூட்டப்பட்டது சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்த பத்திரிகையாளர் உடல் சாதாரண உடற்கூறு பரிசோதனைக்குப் பிறகு உடனடியாக எரியூட்டப் பட்டது. முக்கியமாக இது போன்ற சந்தேகத்திற்கு இடமான முறையில் மரணமடைந்தவர்களின் உடலை நீதிபதிகள் முன்னிலையில் மருத்துவ நிபுணர்கள் பரிசோதனை செய்யவேண்டும் ஆனால் அக்ஷய் சிங்கின் உடல் மத்தியப்பிரதேச போபால் மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை செய்த பிறகு முழு அறிக்கை வரும் முன்பே உடனடியாக எரியூட்டப் பட்டு விட்டது.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

சங்கராச்சாரி முகமூடி கிழிகிறது!

சாட்சியைக் கொல்லப்போவதாக மிரட்டுகிறார்!
தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
- சமநீதி
அப்பட்டமான ஒரு கொலை! வலுவான சாட்சிகள்! அனைத்தும் இருந்தும் செல்வாக்கு, பணம், அந்தஸ்துக்கு முன் எதுவும் செல்லுபடியாகவில்லை!
துணிந்து நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் முயற்சிக்கு நீதிமன்றத் தீர்ப்பு சவாலாக அமைந்தது. ஆனால், நீதியை நிலைநாட்ட அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு பிறழ்சாட்சி ரவிசுப்பிரமணியத்தின் மனுமூலம் வந்துள்ளது.

பொய் சாட்சி கூறிய குற்றம் தன்னை உறுத்த உண்மையைச் சொல்ல முற்படும் ரவி சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நான் சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில், அந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக போலீஸ் அதிகாரி பிரேம்குமார் இருந்தார். அப்பொழுது என்னிடம் பேச வழக்கறிஞர்கள், போலீசார் என அனைவரும் பிரேம்குமார் மீது இருந்த மரியாதையால் பயந்தனர். அதனால், நான் சங்கரராமன் கொலை வழக்கில் அப்ருவராக மாறி ஜெயேந்திரர்தான் சங்கரராமனை அப்பு மூலமாக தீர்த்துக் கட்டினார். அதற்காக அவர் ரவுடிகளுக்கு பணம் கொடுத்தார் என சாட்சியம் அளித்தேன். ஜெயேந்திரர் சார்பாக சுமார் 20 வழக்கறிஞர்கள் என்னை குறுக்கு விசாரணை செய்தார்கள். பிரேம்குமார் கொடுத்த தெம்பால் உண்மையை தைரியமாக கோர்ட்டில் எடுத்து சொன்னேன். துரதிர்ஷ்டவசமாக பிரேம்குமார் அவரது பணியில் நெருக்கடிக்குள்ளானதோடு, திடீரென இறந்தும் போய்விட்டார். அதன் பிறகு நிலைமை தலைகீழானது.
நான் சிறைக்குப் போய் சுமார் 7 வருடம் கழித்து மறுபடியும் என்னை சாட்சியம் அளிக்க அழைத்தார்கள். அப்பொழுது சிறைத்துறை டி.அய்.ஜி.யாக இருந்தவர் ராமச்சந்திரன். அவர் ஜெயேந்திரருக்கு மிகவும் நெருக்கமானவர். ராமச்சந்திரனும் போலீஸ் ஏட்டு கண்ணன், ரவுடி கதிரவன் ஆகியோர் என்னை ஜெயேந்திரருக்கு எதிராக சாட்சி சொல்லாதே என மிரட்டினார்கள். அதிலும் கதிரவன், ராமச்சந்திரன் ஆதரவுடன் சிறைக்கு உள்ளே வந்து, எனதுஅறையில் வைத்து மிரட்டினான். நான் வேறு வழியில்லாமல் பிறழ் சாட்சியானேன். அதேபோல் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் என்னை பிறழ் சாட்சியாக்கினார்கள்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் உட்பட குற்றவாளிகள் அனைவரும் விடுதலையானார்கள். அதற்குப் பிறகு என்னை 2013ஆம் ஆண்டு ஜெயிலில் இருந்து விடுதலை செய்தார்கள். சங்கரராமன் கொலை வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த தேவதாஸ் உட்பட அனைவரும் நீதியை வளைத்து விலை பேச, அதன் மூலம் ஜெயேந்திரர் பெற்ற விடுதலை என் மனதை உறுத்தியது. மறுபடியும் நடந்த உண்மைகளை நான் சொன்னால் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கிலாவது ஜெயேந்திரருக்கு தண்டனை கிடைக்கும் என யோசித்தேன். ஜெயேந்திரரின் எடுபிடிகளாக இருந்த ரவுடிகள் அப்பு, கதிரவன் ஆகியோர்மரணம் அடைந்துவிட்டார்கள்.
சங்கரராமன் வழக்கில் சங்கரமடத்திற்கு சாதகமாக செயல்பட்ட அரசு வழக்கறிஞர் தேவதாஸை போல் இல்லாமல் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர் விஜயராஜி மிகவும் நேர்மையாகவும், துணிவுடனும் ஜெயேந்திரரின் பணத்திற்கு விலைபோகாமலும் செயல்படுகிறார்.
முதல்வர் அம்மாவின் ஆட்சியில் உண்மையை சொல்ல நினைக்கும் எனக்கு விஜயராஜி பாதுகாப்பாக இருப்பார் என்பதால்நான் உண்மையைச் சொல்ல முயன்றேன். அதை தெரிந்துகொண்ட ஜெயேந்திரரும், மடத்தில் செல்வாக்காக உள்ள சுந்தரேச அய்யரும், போலீஸ் கண்ணனும் என்னை மிரட்டினார்கள். கடந்த 8ஆம் தேதி ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம் அரசு வழக்கறிஞர் விஜயராஜிடம் நான் எனது சாட்சியத்தை மாற்றிக் கூற விரும்புகிறேன் என ஒரு மனு கொடுத்தேன். அதை கவனித்த சங்கர மட மேலாளர் சுந்தரரேச அய்யர், உன்னை பெரியவா பார்க்கணும்னு சொல்றா மடத்துக்கு சாயங்காலம் வந்துட்டு போ என்றார். போகாவிட்டால் ரவுடிகளை அனுப்புவார்கள் என்பதால் அன்று மாலை ஆறரை மணிக்கு சங்கர மடத்திற்குச் சென்று ஜெயேந்திரரை சந்தித்தேன்.
நீ என்ன ராதகிருஷ்ணன் கேஸில் எனக்கெதிரா சாட்சி சொல்லப்போறியா? அந்த கவர்மெண்ட் வக்கீலுக்கிட்ட பெட்டிசன் கொடுத்தியா? எனக் கேட்டார். நான் ஆம் என்று சொன்னேன். உனக்கு சங்கரராமன் கதிதான் ஏற்படும். உன்ன குடும்பத்துடன் சேர்த்து ஒழித்து விடுவேன் என ஜெயேந்திரர் மிரட்டினார். அப்போது அவருடன் இருந்த சுந்தரேச அய்யர், பெரியவா ஜெயேந்திரரை பகைத்துக்கொண்டு இந்தியாவில் எங்கும் நீ இருக்க முடியாது. சென்ட்ரல் கவர்மெண்டே பெரியவாளின் ஆசிர்வாதத்தில்தான் இயங்குது என மிரட்டினார். அந்தநேரம் அங்கே வந்த போலீஸ் கண்ணன், இப்பதான் நான் ஓய்வு பெற்ற சிறைத்துறை டி.அய்.ஜி.யான ராமச்சந்திரனை பார்த்துவிட்டு வருகிறேன். அவர், சங்கரமடத்திற்குச் சொந்தமான பல்கலைக்கழகத்திற்கு நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். ராமச்சந்திரனுக்கு ரவுடிகளையும், போலீசாரையும் நன்கு தெரியும். பெரியவாளுக்கு எதிராக சாட்சி சொன்னா, நீ க்ளோஸ் என மிரட்டினார் என்றார்.
மத்தியில்ஆளும் பா.ஜ.க.வுடன் நெருக்கமாக உள்ள ஜெயேந்திரர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறீர்களா என்று கேட்டதற்கு, அம்மா நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என நான் நம்புகிறேன். அவ்வளவுதான் என்று அச்சத்துடன் தன் உள்ளக் குமுறலைக் கொட்டியுள்ளார் ரவி சுப்பிரமணியம். அவரது அச்சம் அர்த்தமுள்ளது. காரணம், ஒரு தடவை ஜெயேந்திரர், 20 வயது பெண்ணை வன்புணர்ச்சி செய்ய வற்புறுத்த, அப்பெண் தப்பித்து வெளியில் ஓட, தன்கதை நாறிவிடும் என்று அதை அப்படியே அமுக்க, தனக்கு வேண்டிய ஆஸ்பத்திரி உரிமையாளர் மூலம் அடியாட்களை அனுப்பி அப்பெண்ணை லாரியேற்றிக் கொன்றவர். (ஆதாரம்: நக்கீரன் வெளியிட்ட ஜெயேந்திரர் வாழ்வும் வழக்கும்) எனவே, தமிழக முதல்வர், ரவி சுப்பிரமணியத்திற்கு பாதுகாப்பு அளித்து, உண்மையை வெளிக்கொணர்ந்து, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா அழிந்துபோக வேண்டும் என்று யாகம் நடத்தியவர் அல்லவா ஜெயேந்திரர். அவருக்குப் பாடம் புகட்ட வேண்டிய கடமையும் முதல்வருக்கு உண்டு. மத்திய அரசின் நிர்பந்தத்திற்கு ஆட்படாமல், முன்னிலும் தீவிரமாய் வழக்கைக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே தமிழக மக்கள் விருப்பம்.

மும்பை திரைப்பட கதாபாத்திரங்களில் உயர் ஜாதியினருக்கே முக்கியத்துவம்

மும்பை திரைப்பட  கதாபாத்திரங்களில்  உயர் ஜாதியினருக்கே முக்கியத்துவம்

தமிழ்நாட்டிலோ ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை!

இந்து ஆங்கில ஏடு ஒப்பீடு

சென்னை, ஜுன்29_ மும்பையில் வெளிவரும் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களாக உயர் ஜாதியினரே சித்தரிக்கப் படுகின்றனர்; தமிழ்நாட் டில் அதற்கு மாறாக தாழ்த் தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர் கதாநாயகர் களாக சித்தரிக்கப்படுகின் றனர் என்று இந்து ஆங் கில ஏடு ஒப்பிட்டு ஆய்வுக் கட்டுரையை வெளியிட் டுள்ளது.

(28.6.2015) அதன் விவரம் வருமாறு:

மும்பைத் திரை உலகு மற்றும் சென்னை திரை உலகு இரண்டையும் தி இந்து ஒப்பீடு செய்துள் ளது. இரண்டு திரையுலகி லும் திரைக் கதைகளில் இடம்பெறக்கூடிய கதா பாத்திரங்களில் ஜாதியின் நிலைகுறித்து அந்த ஒப்பீடு சுட்டிக்காட்டி உள்ளது.

மும்பைத் திரையுலகில் பெரிய அளவிலான மாற் றங்கள் ஏற்படாமல் ஜாதி யைப் பிடித்துக்கொண்டு பின்னடைவிலேயே இருப் பதாகவும் சுட்டிக்காட்டி உள்ளது. அதேநேரத்தில் சென்னைத் திரையுலகில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த் தப்பட்ட ஜாதியினர்,  பெயர்களில் கதாபாத்தி ரங்கள் சித்தரிக்கப்பட்டுள் ளதாக குறிப்பிட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டு களில்தான் பிற்படுத்தப்பட் டவர்கள் கதாபாத்திரங் களாக இடம் பெற்றுள்ள தாக புள்ளிவிவரத் தகவல் குறிப்பிடுகிறது.

தமிழ்நாட்டில் 2013 மற்றும் 2014ஆம் ஆண்டு களில் வெளியான பிரபல மான படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களாக பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட வகுப்பினர் சித்தரிக் கப்பட்டுள்ளனர்.

2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் மும்பை திரையுலகில் வெளியான படங்கள்குறித்து திரட் டப்பட்ட தகவலின் அடிப் படையில் திரைப்படங் களில் இடம்பெறும் கதா பாத்திரங்கள் மற்றும் கதாபாத்திரங்களின்  பெயர்கள், கதையோட் டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த படங்களில் இரண்டு படங்களில் மட்டுமே முன் னணி கதாபாத்திரங்களாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த் தப்பட்ட வகுப்பினரை சித்தரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மஞ்சு நாத், ஹைவே படத்தில் குஜ்ஜார் குற்றவாளியாக முன்னணி கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளது. மற்ற இரண்டு கதாபாத்திரங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இடம் பெறச் செய்துள்ளனர்.

சம்பட் பால் வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் வகையில் மாதுரி தீக்ஷித்  நடித்துள்ள குலாப் கேங் படம்,  அமோலே குப்தா வின் குழந்தைகளுக்கான படமான ஹவா ஹவாய் ஆகிய படங்களில் கதா பாத்திரங்களாக பிற்படுத் தப்பட்ட வகுப்பினர் சித் தரிக்கப்பட்டுள்ளனர்.

மேரி கோம் படம் பழங் குடியின குத்துச் சண்டை வீராங்கனை கதாநாயகி யாக சித்தரிக்கிறது. இரண்டு படங்களில் கிறித்தவர் களை முக்கியக் கதாபாத் திரங்களாகவும், மூன்று படங்களில் சீக்கியர்களை கதாநாயகர்களாகவும், ஒன்பது படங்களில் முசு லீம் கதாபாத்திரங்களா கவும் சித்தரிக்கப்பட்டுள்ள னர். மற்ற 66 படங்களில் இந்துக்களில் உயர்ஜாதி யினர் மட்டுமே கதாபாத் திரங்களாக சித்தரிக்கப்பட் டுள்ளனர். மற்ற படங்களில் ஜாதிகளைக் குறிப்பிடக் கூடிய வகைகளில் கதா பாத்திரங்கள் இல்லை.

2013ஆம் ஆண்டில் பந்தூக், ரிவால்வர் ராணி ஆகிய படங்களில் கங் கானா ராவுத் பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த வராக நடித்துள்ளார். கோலியோன் கி ராஸ்லீலா ராம்லீலா படத்தில் ரன்வீர் சிங் பழங்குடியினத்தவராக நடித்துள்ளார்.

மும்பை திரையுலகிலி ருந்து வெளிவரக்கூடிய படங்களில் கதாபாத்தி ரங்களாக உயர்ஜாதியினர் மட்டுமே குறிப்பிடப் பட்டுவருகின்றனர்.

2013ஆம் ஆண்டில் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் 66 படங்களிலும் கதா பாத்திரங்களும் உயர்ஜாதி கதாபாத்திரங்களாகவே சித்தரிக்கப்பட்டு வந்துள் ளனர்.

கடந்த காலங்களில் மும்பையில்

கடந்த காலங்களில் மும்பை திரையுலகில் வெளியான படங்களில் முன்னணி பாத்திரங்களாக பிற்படுத்தப்பட்ட வகுப் பினர்தான் சித்தரிக்கப் பட்டு வந்தனர். 2010ஆம் ஆண்டில் வெளியான ஆக்ரோஷ், ராஜ்நீதி மற்றும் 2006ஆம் ஆண் டில் வெளியான ஓம்காரா ஆகிய படங்களில் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பின ராக கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டாலும், பல்வேறு ஜாதிகளிடையே ஏற்படுகின்ற பிரச்சி னைகளை உள்ளடக்கியதா கவே இருக்குமே தவிர வெறுமனே பிற்படுத்தப் பட்ட வகுப்பினரை மட டும் கொண்டுள்ள கதா பாத்திரங்களாக அவை இருக்காது.

மும்பை திரையுலகினரி டையே ஆண், பெண் இருபாலரிடத்திலும் பன்முகத்தன்மைகள் இல்லாமல் இருப்பதால், பெரும்பான்மையராக உள்ளவர்களில் 750  நடிகர் மற்றும் நடிகையரில் கடந்த பத்து ஆண்டுகளில் அய்ந்து படங்களுக்கும் மேலாக முசுலீம்களைத் தொடர்ந்து இந்துக்களில் உயர்ஜாதியினர் இருந்து வருகிறார்கள்.
ஆனால், தமிழ்த்திரை யுலகில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் முன்னணிக் கதாபாத்திரங் களாக இருந்து வருகிறார் கள். தென்னிந்தியாவில் உள்ள அனைத்துப் படங் களும் கணக்கில் கொள் ளப்படா விட்டாலும், 2013ஆம் ஆண்டில் வெளி யான முக்கியத்துவம்பெற்ற 16 படங்கள் பழைய படங் களின் பெயரையேக் கொண்டுள்ளன.

ஏழு படங்கள் பிற் படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னணிக் கதாபாத்திரங் களாகக் கொண்டுள்ளன. 2014ஆம் ஆண்டில் பிர பலமான 10 படங்களில் குறைந்த பட்சம் ஒரு படமாவது (சென்னை) தாழ்த்தப்பட்ட வகுப்பி னரைச் சித்தரிக்கும் கதா பாத்திரமாக அமைக்கப் பட்டிருக்கிறது.


இதுகுறித்து கருத்துகளைக் கேட்கும் போது, பிரச்சினை ஏற் படுத்தக்கூடியது என்று பெரும்பாலான இயக்கு நர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.




  • பெண் சாமியார் சாத்வி பிராச்சியின் கொலைவெறி பேச்சு
  • முஸ்லீம்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் - பஞ்சாயத்தில் முடிவாம்
  • கிறிஸ்தவ மதத்திலும் ஜாதி வேறுபாடா?
  • இன்னும் எத்தனை இளவரசன்கள் தேவை?
  • அறிவோம் சட்டம் (1) : தகவல் அறியும் உரிமைச் சட்டம்
  • பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்
  • தமிழ்நாட்டிலும் விநாயகர் ஊர்வலங்களுக்குத் தடை வருமா?
  • யோகா - மூச்சுப் பயிற்சி - கி. வீரமணி
  • சூத்திரர் வரிப் பணம் பிராமண மொழிக்கா?
  • விடுதலைப்புலிகள்மீது தொடர்ந்து பழி சுமத்தி வருபவர் செல்வி ஜெ. ஜெயலலிதா
  • கோடைக்கானலைக் கண்ட மிஷனரிகளும் குறிஞ்சி ஆண்டவர் வரலாறும்


    -மு.வி.சோமசுந்தரம்
    தமிழைக் காதலித்த மிஷனரி
    பேராயர் ராபர்ட் கால்டுவெல், ஜி.யு. போப், ஜோசப் பெஸ்கி இந்தப் பெயர்களெல்லாம், நெடுஞ்செழியன், அன்பழகன், இளம்வழுதி போன்ற தமிழ்ப் பெயர்களாக இல்லை. என்பது உண்மையே. ஆனால் அவர்கள் தமிழ் மொழியின்மேல் ஈடுபாடு கொண்டனர். தமிழ் இலக்கியங்கள் அவர்களை ஈர்த்தன.
    ஆய்வு செய்வதில் ஆர்வம் கொண்டனர். தமிழ் மொழியின் செழு மையை, செம்மொழியின் சீர்மையை, உயர்வை உலகறிய எடுத்துக் கூறினர். கடல் கடந்து வந்து கைம்மாறு கருதாது கன்னித் தமிழின் மேன்மையைக் காசினி எங்கும் கொண்டு சென்றனர்.
    இவர்களின் தொண்டினைப் போற்றும் நேரத்தில், உண்டு கெடுக்கும் ஓரினம், தமிழ்ப் பயிர்க் கொல்லியாக இருந்து தமிழ் நீச்சமொழி, தரம் தாழ்ந்த மொழி என கொச்சைப்படுத்தும் குடிலன்களாக வலம் வந்து கொண்டிருப்பது வேத னையை ஏற்படுத்துகிறது.
    சமயமா? தொண்டா?
    மேலே குறிப்பிட்ட மேலை நாட் டவர்கள், தமிழ் கற்கத் தமிழகம் வந்த வரல்லர். அவர்கள் சமயத்தைப் பரப்பு வதற்காக அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் மிஷனரி அமைப்பைச் சேர்ந் தவர்கள். சமயப் பணியை நெஞ்சில் ஏந்தி, பொதுத் தொண்டை களப் பணியாக மேற்கொண்டு செயல்பட்ட வர்கள்.
    மிஷினரி மக்கள். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மிசோரம், இங்கு மலை சூழ்ந்த பகுதியில் வாழும் பூர்வீகக் குடி மக்களின் முன்னேற்றம், நலம் கவனிக்கப்படாமல் இருந்து வந்தது. அவர்களின் தேவைபற்றி கருத்தரங்கு களில் பேசப்பட்டாலும், மிசோரம் மக்களின் தேவைகள் கவனிக்கபடா மலும். அவர்களின் குரல் எவர் காதிலும் விழாமலும் இருந்தது.
    இந்த நிலைமையில் மிஷனரி தொண்டர்கள் மேற்கொண்ட அணுகுமுறையால், பழங் குடி மக்களின் உடை அணியும் முறை யில், பழக்கங்கள்முறையில்  கல்வியில், சுகாதாரத்தில் பெரும் மாற்றங்களைக் காண முடிந்தது. இன்று கல்வி வளர்ச்சியில் சிறப்பிடத்தைப் பெற்ற பெருமையுடன் விளங்குகிறது.
    அயிஸ் வால் மாவட்டம் இந்திய நாட்டிலேயே எழுத்தறிவு பெற்ற முதன்மை மாவட்ட மாகத் திகழ்கின்றது. மிஷனரி தொண்டின் சிறப்பை அறிய ஓர் எடுத்துக்காட்டு மிசோரத்தின் வளர்ச்சி இத்தகைய முனைப்பு, ஈடுபாட்டை Missionary Zeal என்று சுட்டுவர்.
    வேலூரும், மதுரையும்
    இனி ஒரு மிஷனரி அமைப்பின் செயல்பாட்டைக் கூறுவோம். முதல் அமெரிக்க மிஷனரி சங்கம், தென் ஆசியப் பகுதிக்கு 1820ஆம் ஆண்டு வருகை தந்து சிலோனில் (இலங்கை) தன் சங்கத்தை  நிறுவியது. 1830இல் அந்த சங்கம் மதராஸ் (சென்னை) வந்தது. பிறகு ஆர்க்காட்டுக்கும், மதுரைக்கும் சென்றது.
    உலகப் புகழ் பெற்ற மருத்துவமனையை வேலூரிலும் புகழ்மிக்க அமெரிக்கன் கல்லூரியை மதுரையிலும்  அமைத்தது. ஜாஃப்னா (யாழ்ப்பாணம்), மதுரை, வேலூர் போன்ற இடங்களின் கோடை வெப்பத்தை மிஷனரி சங்க உறுப்பினர்கள் தாங்க முடியாமல் தவித்தனர். ஆறு வாரங் களுக்கு குளிர்ந்த மலைப் பகுதியில் தங்கும் வசதி கொண்ட இடத்தைக் கண்டறிய தலைப்பட்டனர்.
    கோடைக்கானலைக் கண்டனர்
    உதகையைப்பற்றி சிந்தித்தனர். அங்கு முன்னதாகவே இங்கிலாந்து நாட்டு மிஷனரி மக்கள் தங்கியிருந்தனர். இவர்கள் அமெரிக்கர்கள். ஆங்கிலே யர்கள் கர்வம் கொண்டவர்கள் என்ற எண்ணம் இருந்ததால் உதகையைத் தவிர்த்தனர். மதுரைப் பக்கம் இருந்த சிறுமலையை ஆய்வு செய்ததில், போது மான குளிர்ச்சி கிடைக்காது என்று உணர்ந்தனர்.
    அத்துடன் பல நோய்கள் உண்டாகலாம் என்று கருதினர். இறுதியாக கோடைக்கானல் மலையைத் தேர்வு செய்தனர். இதன்மூலம் தென் னிந்தியாவின் இரண்டாவது கோடை வாழிடம் தோன்றியது. 1845இல் அமெ ரிக்க மிஷனரி சங்கத்தினர், சன்னிசைட், ஷெல்டான் என்ற இரண்டு வீடுகளைக் கட் டினர். நாளடைவில் அமெரிக்க பன்னாட் டுப் பள்ளியும் செயல்படத் தொடங்கியது.
    குறிஞ்சி ஆண்டவர்
    அடுத்து கோடைக்கானல் என்றதும் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலரைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. அத் துடன் இணைத்து குறிஞ்சி ஆண்டவர் கோயிலைப்பற்றி கூறாமல் இருக்க மாட்டார்கள்.
    ஆனால், அந்தக் கோயில் தோன்றிய வரலாற்று செய்தியைப்பற்றி பலருக்கும் தெரியாது. சில முறை அங்கு சென்றிருந்தும் தற்போதுதான் அறிய வந்தேன். அதன் வரலாறு சுவையானது. அது என்ன? இதோ:
    ஆஸ்திரேலியா அம்மையார்
    ஆர்.எல். ஹாரிசன் என்ற அம்மை யார் ஆஸ்திரேலியாவில் பிறந்த ஆங் கிலேய அம்மையார். அவருடைய தந்தையார், ஆஸ்திரேலியாவில் தங்கச் சுரங்கப் பணியில் இருந்தார். ஆஸ் திரேலியாவில் இருந்த பிரம்மஞான சபை எனப்படும் தியாசபிகல் கழகத் துடன் இளம் வயதில் ஹாரிசனுக்கு தொடர்பிருந்தது.
    அதன் விளைவாக, மேலும் ஆன்மிகத் தெளிவு பெற வேண் டும் என்ற உந்துதலால் சிலோனுக்குச் சென்றார். அங்கு சர். பொன்னம்பல இராமநாதன் என்பவரைச் சந்தித்து அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டார்.
    பொன்னம்பல இராமநாதன்
    இராமநாதன் தென்னாசியாவின் வரலாற்றில் பலராலும் அறியப்பட்ட இலங்கை வாழ் குடிமகன். அந்நாட்டின் முன்னணி வழக்குரைஞர் இங்கிலாந்தில் உள்ள சட்டக் கல்வி அளிக்கும் இன்ஸ் கோர்ட்டில் பயின்று தேர்வு எழுதி பட்டம் பெறாவிட்டாலும் சட்டக் கல்வி நிறுவனம் அவருக்கு மதிப்புறு பாரிஸ்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
    அடுத்து சிலோன் சட்ட மன்றத்திற்கு தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதியாக 1879ஆம் ஆண்டில் அவரின் 28ஆவது வயதில் நியமிக்கப்பட்டார். சட்டசபை யில் குறைந்த வயதுடைய உறுப்பினர் என்ற சிறப்பையும் பெற்றார்.
    சிலோனுக்கு உரிமைகள்
    பத்து ஆண்டுகள் கழித்து சிலோன் தேசியக் கழகம் என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தினார் இராமநாதன். இந்த அமைப்பின் மூலம், சிலோன் விடுதலை பெற வேண்டும் என்பதற்கான முயற் சிக்கு வித்திட்டார். 1890ஆம் ஆண்டில், சிலோன் தீவு மக்களுக்கு அதிக உரிமைகள் வழங்க வேண்டும் என்ற மனுவை இங்கிலாந்து நாடாளுமன்றத் திற்கு அனுப்பினார்.
    அதன் விளைவாக சிலோனில் வயது வந்தோர் அனைவருக் கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. சிலோன் மக்களின் சொலிசிட்டர் ஜெனரலாகவும், பல முறை அட்டர்னி ஜெனரலாகவும் இருந்தார்.
    சட்டப்பணியும் சைவ சித்தாந்தமும்
    நாட்டின் சட்ட வல்லுநராக விளங் கியவர் அரசியல், சட்டத்துறையை விட்டு ஆன்மிகத்தில் எண்ணம் அலை பாய்ந்தது. ஆனால், மக்கள் மன்றம் அணை போட்டு, ஆன்மிகப் பாதையி லிருந்து அரசியல் கூடாரத்துக்குக் கொண்டு வந்தது. அனைவருக்கும் வாக்குரிமை பெற்று, டிசம்பர் 13, 1911இல் நடைபெற்ற தென் ஆசியத் தேர்தலில் முதன் முறையாக சிலோன் பங்கேற்றது.
    அந்த தேர்தலில், இராமநாதனைப் போட்டியிடச் செய்து, திருத்தி அமைக் கப்பட்ட சட்டமன்றத்திற்குத் தேர்ந் தெடுக்கப்படும் வாய்ப்பை வழங்கினர். சிலோன் உறுப்பினராகத் தேர்ந்தெடுக் கப்படுவதற்குத் தகுதியானவர் இவர் என்ற கருத்து நிலவியது.
    சிலோனின் சுவாமி விவேகானந்தர்
    சட்டமன்றத்தினுள் அற்புதமாக செயல்பட்டு வந்த இராமநாதனுக்கு, வெளியில் ஆன்மிகத்தில் தடுமாற்றமில் லாத பற்று இருந்தது. இதற்குக் காரணம் இவருக்கு தஞ்சாவூரைச் சேர்ந்த அருள்பரமானந்த சுவாமிகளு டன் ஏற்பட்ட தொடர்பு என்பதாக அறிய முடிகிறது. இந்தத் தொடர்புக்குப் பிறகு, இராமநாதன் தஞ்சைக்கு வழக்கமாக வந்து போவதுமாக இருந்தார்.
    விரைவில், இராமநாதன் சைவ சித்தாந்த தத்துவ முன்னோடிப் பரப்புரையாளராக மாறி விட்டார். சைவ சித்தாந்த தத்துவத்தில் அவருக்கு இருந்த ஆழமான அறிவும், புலமையும், ஈடுபாடும் அவரை 1906 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று ஓராண்டு சுற்றுப் பயணம் செய்து சொற்பொழிவு நிகழ்த் தச் செய்தது.
    இந்தப் பணியில் அவர் திளைத்து விட்ட  காரணத்தால், சட்ட மன்ற உறுப்பினராக 13 ஆண்டுகள் போற்றத்தக்க வகையில் பணியாற்றிய பதவியை விட்டு விலகி விட்டார். சிலோ னில் அவரை, சிலோனின் சுவாமி விவே கானந்தர் என்று அன்புடன் அழைத்தனர்.
    ஹாரிசன், லீலாவதியானார்
    இராமநாதன், ஓராண்டு அமெரிக்கச் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, அவரது மாணாக்கரும் செயலாளருமாக இருந்த ஆர்.எல். ஹாரிசன் அம்மை யாரும் உடன் சென்றார். சுற்றுப் பயணத்திலிருந்து திரும்பிய பிறகு பல ஆண்டுகள் இணையரை இழந்தவராக வாழ்ந்து வந்தவர், ஹாரிசன் அம்மை யாரை மணந்தார் அம்மையார் இந்து மதத்திற்கு மாறி லீலாவதி என்ற பெயரையும் வைத்துக் கொண்டார்.
    அதன் பிறகு அவர்கள் பெரும் பகுதியை கோடைக்கானலில் கழித்து வந்தனர். அங்கு அவர்கள் அம்மனடி சிவனடி; முருகனடி; என்ற பெயரில் மூன்று வீடுகளைக் கட்டினார்கள்.
    நினைவுச் சின்னம்
    இராமநாதன் 1924இல் இயற்கை எய்தினார். இந்து விதவைகள் அணிய வேண்டிய உடை, வெள்ளைப் புடவை என்ற எண்ணத்தில் வெள்ளை உடையை லீலாவதி அம்மையார் அணிந்து வந்தார். பழனிமலை முருகன் கோயிலைப் பார்த்த திசையில் கண வரின் நினைவாக ஒரு கோயிலைக் கட்டி, தினமும் மதிய நேரத்தில் வழி பாடு செய்து வந்தார். கோயிலை ஒட்டிய மலைச்சரிவில் குறிஞ்சி மலர்ச் செடி களை நட்டு வைத்தார்.
    மகளின் ஏற்பாடு
    இராமநாதன், லீலாவதிக்கு ஒரு மகள் இருந்தார். அந்தப் பெண், இராமநாதனின் தஞ்சாவூர் குருவின் பெயரன் எஸ். நடேச பிள்ளையை மணந்தார். அவர்கள் சிலோனில் வாழ்ந்து வருகிறார்கள்.
    லீலாவதி அம்மையார் மறைவுக்குப்பின் அவரின் மகள், மேலை நாட்டு வாழ்க்கை முறையில் வாழ்ந்து சைவ சித்தாந்த தத்துவத்தைக் கடைப்பிடித்த தன் தந்தைக்கு, இந்து மதத்தைத் தழுவிய ஆங்கிலேய துணைவியார் நினைவு சின்னமாக கட்டிய குறிஞ்சி ஆண்டவர் கோயிலை பழனி தேவஸ்தானத்திடம் ஒப்படைத்து விட்டார்.
    இன்று கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க விரும்பி கோடைக்கானலுக்குச் செல்வோர் குறிஞ்சி ஆண்டவர் கோயிலைத் தேடிச் செல்ல தவற மாட்டார்கள். ஆனால் அதன் வரலாற்றைத் தெரிந்திருப் பார்களா? என்பது ஒரு கேள்விக் குறி.
    (செய்தியின் மூலம்: திரு எஸ். முத்தையா, தி இந்து 4.5.2015இல் வழங்கியது.)
    இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
    இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

    குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...