Saturday, January 31, 2015

மத்திய ஆட்சியில் சர்வமும் இந்துத்துவாமயம்!

வெளியுறவுத் துறைச் செயலாளர் சுஜாதா சிங் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வெளியுறவுத் துறை போன்ற முக்கியமான பதவியில் உள்ளவர்கள் தங்கள் பணி பற்றிய குறிப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து புதிதாக பதவியேற்கும் ஒருவரிடம் ஒப்படைப்பார்கள். அதற்காக குறைந்தது இரண்டு முதல் 5 வேலை வாரங்கள் எடுத்துக்கொள்வார்கள்.

இது முக்கிய பணிமாற்றம் குறித்த விதிகள் ஆகும். ஆனால் பாஜக பதவியேற்றதில் இருந்தே தலைமைப் பதவியில் உள்ள அதிகாரிகளை ஒரே இரவில் பதவியில் இருந்து வெளியேற்றி வைப்பது தொடர்கிறது.   ஆட்சிக்கு வந்த பிறகு சிபிஅய் தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புப் பிரிவுத் தலைவர், தேசிய பாதுகாப்பு ஆய்வு மய்யத் தலைவர் (DRDO) என பல முக்கிய அதிகாரிகள் இதே போன்று ஒரே இரவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முக்கியமாக சிறப்புப் பாதுகாப்பு படைத்தலைவர் நேபாளத்தில் மோடியுடன் இருக்கும்போதே டில்லியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு பதவி பறிப்பு தகவல் குறித்த கடிதம் தொலைநகலில் அனுப்பப்பட்டுள்ளது.

தனது பதவி பறிக்கப்பட்டது தெரியாமல் நேபாள நாட்டில் மோடியின் பாதுகாப்புப் பணிகளை நேரடியாக கண்காணித்துக் கொண்டிருந்தார்.   

அதேபோல் பாதுகாப்பு ஆய்வு மய்யத் தலைவர் அவினாஷ் சந்திரா முதல்நாள் இரவு வீட்டிற்குத் திரும்பி மறுநாள் காலை அலுவலகம் செல்ல இருந்தபோது அவரது  அலுவலகத்தில் இருந்து நீங்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு விட்டீர்கள் என்று தகவல் தொலைப்பேசியில் வருகிறது.

இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்குக் காரணம் பத்திரிகைகள் மோடியை படம் எடுக்கும்போது பாதுகாப்பு வீரர்கள் குறுக்கே நிற்கிறார்களாம்; இதன் காரணமான அதன் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இதுபோன்ற முக்கிய அதிகாரிகளின் பதவி நீக்கத்திற்குப் பின்புலமாக காவிகளின் கரங்கள் இருக்கின்றன என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. பாதுகாப்பு ஆய்வு மய்யத் தலைவர் நவீன கண்டு பிடிப்புகளுக்கு புராணப் பெயர்களை வைப்பதை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்தவர்.

பன்னாட்டளவில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அந்த நாட்டுப் பெயருடன் சில குறிப்பு எழுத்துக்களை பயன்படுத்துவது எதிர்காலத்தில் அந்த கண்டு பிடிப்புகளைபற்றிய தகவல்கள் பெற மிகவும் வசதியாக இருக்கும் என்று கூறிவந்தார். மேலும் ராணுவத்தில் காவிகளின் ஆதிக்கம் குறித்தும் பல்வேறு கட்டங்களில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தார்.  இதன் காரணமாக அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.  இதன் வரிசையில் தற்போது சுஜாதா சிங் இவர் பதவி நீக்கம் செய்ய பல்வேறு காரணங்கள் கூறப்பட்டுள்ளன. 

இது குறித்து ஃபர்ஸ்ட் போஸ்ட் என்ற ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க அதிபரின் இந்தியப்பயணத்தின் போது காந்தியார் நினைவிடத்திற்கு ஒபாமாவுடன் சென்றது, ஒபாமாவின் வருகையின் போது ஊடகங்களில் மோடிக்குச் சமமாக வெளியுறவுத்துறைச் செயலாளரான சுஜாதாசிங்கின்  படம் வந்தது, வெளியுறவுத்துறை குறித்த பல்வேறு பதவிகளுக்கு மோடிக்கு நெருக்கமானவர்கள் கொடுத்த பட்டியலைப் புறக்கணித்து தகுதியான நபர்களை பணியில் அமர்த்தியது, அதை விட முக்கியமாக இவரது தந்தை தமிழரான டி.வி.ராஜேஷ் வர் காங்கிரஸ்காரர் என்ற ஒரு காரணமும் இதில் இணைந்திருக்கிறது. 

இந்தியாவில் மதவாதம் பற்றி ஒபாமா தெரிவித்த கருத்துக்கு வெளியுறவுச் செயலாளர் காரணமாக இருக்கலாம் என்ற அய்யப்பாடு மோடி அரசுக்கு இருந்ததும் ஒரு காரணமாம்!

இதுபோன்று பல்வேறு காரணங்கள் கூறப்பட் டுள்ளன. ஆனால் இதுவரை உள்துறை அமைச்சகமோ அல்லது பிரதமர் அலுவலகமோ சுஜாதா சிங் பதவி நீக்கத்திற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை.  சுதந்திர இந்தியாவின் சி.பி.முத்தம்மா, நிருபமா ராவ் போன்ற பெண் வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்குப் பிறகு சுஜாதா சிங் நியமிக்கப்பட்டிருந்தார்.

முக்கியமாக பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்களுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படுவது - அதிகரித்து வருகிறது. பெண் வெளியுறவுத் துறை அதிகாரிகளை காரணம் எதுவும் கூறாமல், நீக்கிய மோடி  சில நாள்களுக்கு முன்பு அரியானாவில் பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்; பெண் குழந் தையை காப்பாற்றுவோம் என்று முழங்கி இருக்கிறார். என்னே முரண்பாடு!

நிருபெந்திர மிஸ்ரா ஆர்.எஸ்.எஸ்.காரர்; மோடி ஆட்சிக்கு வந்த முதல் வேலையாக தொலைத் தொடர்பு ஆணையத்தின் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற இவரை பணி நியமனத்திற்கான விதியில் மாற்றம் செய்து  பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளராக நியமித்தார்.

அஜித் தொவல் பாதுகாப்பு ஆலோசகர் மே மாதம் 30 (2014) ஆம் தேதி மோடியால் நேரடியாக தேர்ந் தெடுக்கப்பட்டவர். இவர் தனது சொந்த வலைதளத்தில் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை தேச வளர்ச்சி கொள்கை என்ற கருத்தை மய்யப்படுத்தி பல்வேறு கட்டுரைகளை எழுதியவர் ஆவார்.

இந்திய வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவராக தீவிர இந்து வெறியரான எல்லப் பிரகலத சுதர்ஷன் ராவ் (ஒய்.பி.சுதர்ஷன் ராவ்) என்பவர் நியமிக்கப்பட்டார்.

சோசலிஸம் என்ற வார்த்தையே பிடிக்காது, சர்வமும் இந்துத்துவா மயம் என்ற பாதையில்தான் மோடி தலை மையிலான ஆட்சி நடை போடுகிறது - எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


Friday, January 30, 2015

தமிழருடைய கலாச்சாரம் ஆரியத்தால் கெட்டது

தமிழருடைய கலாச்சாரம் ஆரியத்தால் கெட்டது
நான்கு வகை வருணத்தைத் திணித்தவர்களும் ஆரியர்களே!

ஆவடி வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் முழக்கம்!


ஆவடி, ஜன.29- தமிழர்களிடையே இல்லாதிருந்த ஜாதி யைத் திணித்தவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள் - தமிழரு டைய கலாச்சாரம் கெட்டதும் அவர்களால்தான் என்றார் தி.மு.க. பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள்.

சென்னையை அடுத்த ஆவடியில் 25.1.2015 அன்று மாலை நடைபெற்ற வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை வருமாறு:

இந்தி எதிர்ப்பு உணர்ச்சி இன்னும் கலைஞரிடத்தில் இருக்கிறது!

இந்தி மொழிக்கு தமிழ் நாட்டில் இடம் கிடையாது. தமிழ் நாட்டில்  வாய்ப்பைத் தேடி வந்த இந்திப் பெண்ணே, நீ இந்த நாட்டை நம்பாதே ஓடிப்போ! என்று பாடியவர் கலைஞர். அன்று தொடங்கிய அந்த உணர்ச்சி இன்றும், கலைஞரிடத்தில் அவருடைய பேச்சில், செயலில்,  எழுத்தில் நீடிக்கிறது. உண்மையாக இந்தி மொழி மட்டும் நம் எதிர்ப்பு அல்ல. இந்தி மொழிக்கு முன்னாலே ஏறத்தாழ 500 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் தமிழருடைய உரிமை யைப் பறிக்கக்கூடிய முறையில் சமஸ்கிருதம் திணிக்கப் பட்டது. திருக்கோவில்களில் எல்லாம் ஆண்டவனுக்கு சமஸ்கிருதத்தில் வழிபாடு. தமிழ் வீட்டுத் திருமணங்கள் எல்லாம் புரோகிதர்களைக் கொண்டு நடத்துகின்ற ஒரு நிலை. நான் சிறுவனாக, மாணவனாக இருந்த போது நாட் டில் பல இடங்களில் பிராமணர்களுக்கென்றே பாடசாலை கள். அந்தப் பாடசாலைகள் எல்லாம் வேத பாடசாலைகள். ஒவ்வொரு வேத பாடசாலைகளிலும் 30 பேர், 40 பேர் பிரா மணர்கள்தான் படிப்பார்கள். அவர்களுக்கு இலவசமாக சாப்பாடு, இலவசமாக குடியிருப்பு, இலவசமாக எண்ணெய், பால், இலவசமாக ஆடை எல்லாம் வழங்கப்பட்டன. பார்ப்பனரல்லாதவர்க்கு பள்ளிக்கூடமே இருக்காது.

 வெள்ளைக்காரன் வந்தான். ஏதோ அவர்களுக்கு ஆட்கள் தேவை என்பதற்காக பள்ளிக்கூடங்களை வளர்த்தார்கள் என்ற ஒரு கருத்து. அவர்கள் ஆட்கள் தேவை என்று வளர்த்தாலும்கூட அவன்தான் பள்ளிக் கூடத்தில் நம்மை எல்லாம் நுழைய விட்டான்.தாழ்த்தப்பட்ட தோழர் கிருஷ்ணசாமியோ, அவருடைய தந்தையோ, பாட்டனோ ஒரு அய்ம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக் கூடங்களுக்குள் நுழைய முடியாது. கிருஷ்ணசாமி படித்தது ஆச்சரியம்.  பள்ளிக்கூடத்தை திறந்துவிட்டது நீதிக் கட்சித் தலைவர்கள். நீங்கள் எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள் சர்பிட்டி தியாகராயர் - தெலுங்கர். டாக்டர் டி.எம்.நாயர் - மலையாளி, டாக்டர் நடேசனார் - முதலியார்! -தமிழன். இந்த மூன்று பேரும் கலந்து பேசி தமிழ்நாட்டில் ஆரிய ஆதிக்கம் இருக்கிறது.
பிராமணீய ஆதிக்கம் இருக்கிறது. தமிழ் மக்களை தலை எடுக்கவிடாத அளவிற்கு அந்த ஆதிக்கம் இருக்கிறது. 

அரசாங்க உத்தியோகத்திலே எல்லாம்  நூற் றுக்கு மூன்று பேராக இருக்கிற பிராமணர்களுக்கு நூற்றுக்கு எழுபத்தைந்து இடம். தமிழர்களாகிய நாம் ஏறத்தாழ 90 பேர், நமக்கு சமுதாயத்தில் இருபது இடம். 90 பேருக்கு இருபது இடம். மூன்று பேருக்கு 75 இடம். இது என்ன நியாயம்?அப்படி இருந்ததைத்தான் தியாகராயரும், டாக்டர் நாயரும் எதிர்த்து கண்டித்தார்கள். வெள்ளைக்கார அரசு பார்ப்பனீயர்களின் கைப்பாவையாக இருக்கிறது. ஆங்கி லேயர்கள் தமிழ்நாட்டில், இந்தியாவில் பிராமணர் அல் லாதாரை ஒதுக்கிவிட்டு செல்வாக்குள்ள பிராமணர்களை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்துகிறார்கள். இந்த முறை கேட்டை நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்கள். எனக்குத் தெரிந்து, 1930 ஆவது  ஆண்டில் தமிழ்நாட்டில் பள்ளிக் கூடங்களில் பார்ப்பனரல்லாதாருக்கு இடம் கொடுத்தாலும் கூட ஆதிதிராவிடர்களுக்கு இடம் கிடையாது.  ஆரம்பப் பள்ளிக்கூடத்துக்குப் போய் கிருஷ்ணசாமியின் சொந்தக் காரர் தன்னுடைய பிள்ளையை சேர்க்கப் போனால் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள். கிருஷ்ணசாமிக்கு மட்டுமல்ல; டாக்டர் அம்பேத்கருக்கே இந்த கதிதான்.

டாக்டர் அம்பேத்கரை ஒரு ஓரத்தில் உட்கார வைத்தார்கள்!

டாக்டர் அம்பேத்கர் படிக்கப் போனபோது மற்ற பிள்ளைகளை எல்லாம் உட்கார வைத்து  அம்பேத்கரை ஒரு ஓரத்தில் உட்கார வைத்தார்கள். ஒரு தட்டிக்குப் பக்கத் திலே உட்கார வைத்தார்கள். இந்தத் தட்டிக்கு அப்பால் ஆதிதிராவிடர்கள். இந்த தட்டிதான் ஆதிதிராவிடர்களைக் காப்பாற்றியது. தட்டிக்கு அப்பால் ஆதிதிராவிடர்கள், தட்டிக்கு இப்பால் ஆதி திராவிடர் அல்லாதவர்கள். அதற்கு மேலே ஆசிரியர்கள்! தண்ணீர் வேண்டுமானால் இந்த ஆசிரியர் மற்ற மாணவர்களிடம் இருந்து தான் வாங்கி குடிப்பார். அம்பேத்கர் தண்ணீர் குடிக்கவேண்டுமானால் அங்கே இருக்கும் பானையிலே தண்ணீர் எடுக்கக்கூடாது. அவர் வெளியிலே போய்தான் யார் வீட்டிலாவது தண்ணீர் வாங்கி குடிக்கவேண்டும். அது எவ்வளவுப் பெரிய வெட்கக் கேடு, நம்முடைய தமிழன் இந்த பார்ப்பனீயக் கொள் கைக்கு எப்படியோ அடிமைப்பட்டான். இன்றைக்கு  நான் உங்களிடத்தில்  பெருமையாகச் சொல்கிறேன். திருவள்ளு வர் பிறந்த தமிழகத்தில் திருவள்ளுவருக்கு சாதி கிடை யாது. திருவள்ளுவர் காலத்தில் இருந்து புரவலர்களுக்கு சாதி கிடையாது.வள்ளுவர் காலத்தில் வாழ்ந்த மன்னர்களுக்கு சாதி கிடையாது.

தமிழருடைய கலாச்சாரம்
ஆரியத்தால் கெட்டுவிட்டது!

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது அப்போது உயர்ந்த மொழி! அப்படி இருந்த காலத்தில் சமஸ் கிருதத்திற்கு இங்கே வேலையில்லை. யாரோ சில பேர் இங்கே சமஸ்கிருதம் படித்தார்கள். அவர்கள்தான் பிரா மணர்கள். நம்முடைய கோவில்களில் எல்லாம் சமஸ் கிருதம் ஆக்கிரமிக்கவில்லை. அப்போது நம்முடைய வீட்டுத் திருமணங்களை பிராமணர்கள் நடத்துகின்ற ஒரு நிலை கிடையாது. அது ஒரு காலம். அந்தக் காலம் மாறிப் போய் எவ்வளவோ ஆண்டுகள் ஆகி, ஆரிய ஆதிக்கம் மெல்ல மெல்ல வேரூன்றியது. தந்தை பெரியார் சொல்வார். ஆரிய ஆதிக்கம் என்பது பாம்புப் புற்றுக்கு பால் வார்ப் பதைப் போல. நாம் அதை ஆதரித்து விட்டோம். நம்மு டைய அறியாமை என்று. பாம்பு புற்றில் பால் வார்த்தால், பாம்பு நம்மை கடிக்காது என்று தாய்மார்கள் சொல்வார்கள். 

அது பால் இருக்கும் வரைக்கும் குடிக்கும். அது கிடைக் காதபோது கடிக்கும். ஆனால், இந்தப் பாம்பு பாலையும் குடித்து இரத்தத்தையும் குடிக்கும். அந்த ஆரிய கலாச் சாரத்தை எதிர்ப்பதுதான் தமிழருடைய பாதுகாப்பு என்று பிராமண அறிஞர்களே சொன்னார்கள். பி.டி.சீனிவாச அய்யங்கார் என்ற வரலாற்றுப் பேரறிஞர் எழுதினார். தமிழருடைய கலாச்சாரம் ஆரியத்தால் கெட்டுப் போய்விட்டது. நான்கு வகை சாதியை ஆரியர்கள் தமிழகத்தில் புகுத்தினார்கள். இந்த நால்வகை சாதி இல்லாவிட்டால் தமிழர்கள் ஒற்றுமையாக வாழ்ந்திருக்க முடியும். பிராமணன், சத்திரியன், வைஸ்யன், சூத்திரன் என்றெல்லாம் ஆண்டவன் படைப்பு என்று ஏமாற்றி விட்டார்கள்.

பிராமணன் என்றால் உயர்ந்த சாதி, கிருஷ்ண சாமி என்றால் தாழ்ந்த சாதி. அவர் எப்படித் தீண்டப் படாதவர், நீ எப்படி எல்லாருக்கும் மந்திரம் சொல்பவர்? கேட்டால் பிரா மணர் சொல்லக்கூடிய வார்த்தை என்ன தெரியுமா? 

ஆண்டவன் படைப்பு. ஆண் டவன் யார் என்று கேட்டால் பிரம்மா என்பார்கள். பிரம்மா எப்படி படைத்தார் என்றால், பிரம்மா முகத்தில் இருந்து பிரா மணரை படைத்தார், தோளில் இருந்து சத்திரியனை படைத்தார். தொடையில் இருந்து வைஸியனைப் படைத்தார், வைஸி என்றால் வியாபாரி. பாதத்தில் இருந்து சூத்திரனைப் படைத்தார். முகத் தில் இருந்து பிராமணர்களை படைத்த தால் அவர்களுக்கு அறிவு சாதியாம். தோளில் இருந்து படைத்த சாதி என்றால் அது வீர சாதியாம்.

தொடையில் இருந்து படைத்த சாதி ஊர் ஊராக சுற்றும் சாதியாம். காலில் இருந்து படைத்த சாதி என்றால் வேலை செய்கிற சாதியாம். அந்த சூத்திரனுக்குக் கீழே பஞ்சமன்.

வெளிநாடுகளில் நான்கு வகை சாதிகள் உண்டா?

பஞ்சமன் என்றால் பறையன், பள்ளன், தாழ்த்தப்பட்டவன். தீண்டாதவர்கள் யாரோ அவர்கள் எல்லாம் இதில் அடங் கும். இதையெல்லாம் சொன்னபோதுதான், பெரியார் சொன்னார் இப்படியெல்லாம் பிரித்து ஆண்டவன் படைப்பானா, ஆண் டவன் இப்படி நான்கு சாதியைப் படைத்து இருந்தால் மிச்ச சாதிக்கெல்லாம் யார் கணக்கு சொல்வது. இந்த நான்கு சாதியை இந்தியாவில்தான் படைத்தானா, அய் ரோப்பாவில் நான்கு சாதியைப் படைத் தானா? வெள்ளைக்காரன் இடத்தில் படைத்தானா, மற்ற நாட்டில் எல்லாம் படைக்காமல் இங்கே மட்டும் படைத்தான் என்றால் அவன் ஆண்டவனா? அப்படித் தான் படைத்தார்கள் என்றால் அவரவர் வேலையைச் செய்து இருக்கலாம் இல்லையா, ஆனால் பார்ப்பனர்களுக்கு சூத்திரர்கள் எத்தக் காலத்திலும் தொண்டு செய்வது அவர்களுடைய கடமை. அடி மையாக வேலை செய்யவேண்டி இருக்கே, எங்களுக்கு விடுதலை கிடை யாதா என்றால், விடுதலை என்று நீ கேட் டாலே மோட்சத்திற்குப் போக மாட்டாய். விடுதலை கேட்டால் நரகத்திற்குத்தான் போவாய். பிராமணர்களுக்கு தொண்டு செய்வதிலிருந்து விடுதலை சூத்திரர் களுக்குக் கிடையாது. எவ்வளவு காலமாக ஆனாலும் பிராமணருக்கு சூத்திரன் தொண்டு செய்துதான் மேல் நிலைக்கு வர வேண்டும். பிராமணர்கள் வேலை செய் வதற்கு கூலி கொடுக்காவிட்டால்கூட வேலை செய்யவேண்டும். சூத்திரர் களுக்கு சொத்து எது எது என்று கருது கிறார்களோ அந்தச் சொத்துக்கள் அத் தனையும் பிராமணர்களுக்குச் சொந்தம்.

ஏதோ சில காரணத்தால் சூத்திரனுக்கு சொத்துக்கள் கிடைத்தாலும்கூட அதை
பிராமணன் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்வான். இப்படியெல் லாம் எதை எதையோ எழுதி வைத்திருக் கிறார்கள். அதையெல்லாம் பிராமணர் கள் சாஸ்திரம் என்கிறார்கள். முட்டாள் தனம் எல்லாம் சாஸ்திரமா? சாஸ்திரத் தில் சொல்லி இருந்தால் எதையும் நாம் அனுமதிக்கலாமா?

சாஸ்திரத்தில் நீங்கள் மேல் சாதி நாங் கள் கீழ் சாதி என்று சொல்லி இருந்தால் அதை ஒப்புக் கொள்ளவேண்டுமா? ஆண்டவன் படைத்தான் என்றால் அதற் காக நாங்கள் அடிமையாக இருக்கவேண் டுமா? அப்படியானால் ஆண்டவனே அடிமையாக இருக்கட்டும். என்னை ஏன் அடிமையாக இருக்கச்  சொல்கிறீர்கள்? எனவே சாஸ்திரத்தின் பெயரால், கட வுளின் பெயரால், தெய்வத்தின் பெயரால் கற்பனையாக நம்மையெல்லாம் முட்டா ளாக்கி நான் சொல்கிற வார்த்தைக்காக மன்னித்துக் கொள்ளுங்கள் நம்மை யெல்லாம் அடிமைகளாக்கினார்கள். தமிழ்நாட்டில் இப்போது நம் கண்ணுக்குத் தெரியவில்லை. நான் சின்ன பிள்ளையாக இருந்தபோது நான் படித்த, மயிலாடுதுறை யில் இரண்டு தெருக்கள். இந்த இரண்டு தெருவிலும் இருநூறு வீடுகள். இந்த இருநூறு வீடுகளில் 195 வீடுகளும் பிரா மணர்கள் வீடுகள்தான். ஒரு அய்ந்தாறு வீடுகளில்தான் முதலியார், செட்டியார் போன்றோர் இருந்திருப்பார்கள். வன்னி யரைக்கூட உள்ளே விடமாட்டார்கள். ஆதிதிராவிடர்கள் அந்தத் தெருவிலே நடக்கக் கூடாது. யாராவது இறந்து போனால் தூக்கிக் கொண்டு போகலாமே தவிர நடக்கக்கூடாது.

தீண்டாமையை ஒழிப்பதுதான் பெரியாரின் முதல் வேலையாக இருந்தது!

இந்தத் தீண்டாமைக் கொடுமையை ஒழிப்பதுதான் பெரியாரின் முதல் நோக் கம். தீண்டாமையை ஒழிக்க பள்ளியில் இடம் கொடுத்தது நீதிக்கட்சி. அரசாங்க நிலையிலே பங்கு கொடுத்தது நீதிக் கட்சி. நீதிமன்றத்தில் நீதிபதியாக ஒரு சூத்திரரை உட்கார வைத்தது கலைஞர். ஆதிதிரா விடர்களை உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆக்கியது கலைஞர். கிருஷ்ணசாமிதான் நீதிபதியாக ஆக வேண்டும் என்று கட் டாயமில்லை. ஒரு ஆதிதிராவிடர் ஆகி விட்டால் கிருஷ்ணசாமி ஆனது போலத் தான். நம்முடைய இனம் உள்ளே நுழை யக் கூடாது என்கிறார்கள். அந்த இடத் திற்கு நுழையக் கூடிய ஒரு உரிமையை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலை ஞர் அவர்கள் தேடிக் கொடுத்திருக்கிறார்.

சமஸ்கிருதத்தை பெண்கள் படிக்கக்கூடாது!

இப்படி நடைபெற்ற அநீதிகளுக் கெல்லாம் காரணம் சமஸ்கிருதம். சமஸ் கிருதம் தேவ மொழி, தமிழ் நீச மொழி என்று சொன்னார்கள். தமிழ் பிறந்த காலத்தில் சமஸ்கிருதம் பிறக்கவில்லை. தமிழ் இலக்கியங்கள் பிறந்த காலத்தில் சமஸ்கிருதம் பிறக்கவில்லை. தமிழில் உள்ள நீதி நூல்களுக்கு ஈடாக சமஸ் கிருதத்திலே கிடையாது. தமிழ் எல் லோரும் படிக்கலாம். ஆனால், சமஸ்கிரு தத்தை  பிராமணர்கள் மட்டும் தான் படிக் கலாம். அது  அவர்களுக்காகவே தயா ரிக்கப்பட்ட மொழி. தமிழ் மொழி எல் லோருக்கும் உரியது. சமஸ்கிருதத்தை பெண்கள் படிக்கக் கூடாது. மனைவி, தாய் படிக்கக் கூடாது. ஆனால், தமிழை எல் லோரும் படிக்கலாம், மனைவி படிக்கலாம், தாய் படிக்கலாம். தங்கை படிக்கலாம், முதலாளி, தொழிலாளிகள் என்று எல் லோரும் படிக்கலாம்.

தமிழ் நம்மை வாழவைத்த மொழி, சமஸ்கிருதம் நம்மை சாகடித்த மொழி. அந்த சமஸ்கிருதம் பிராமணர்களுக்கு பயன்படுகிறது.

 அந்த சமஸ்கிருதத்திலே தான் இந்தி வளர்க்கப்பட்டு புகுத்தப்படு கிறது என்ற காரணத்தால் ஏற்கெனவே நாங்கள் சமஸ்கிருதத்தால் பாதிக்கப்பட்ட வர்கள். மறுபடியும் நீங்கள் இந்தியைக் கொண்டு வருகிறீர்கள் அதை ஏற்க மாட்டோம் என்று பெரியார் சொன்னார், மறைமலை அடிகள் சொன்னார். மிகப் பெரிய தமிழறிஞர்கள் எல்லாம் சொன் னார்கள்.

பாரதியாரே தமிழ் மொழியைத் தான் போற்றிப் பாடினார். பாரதிதாசன் இந்தி மொழி நுழைவதைக் கண்டித்துப் பாடி னார். இந்தி எத்தனை பட்டாளம் கூட்டி வரும்! என்று கேட்டவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

தமிழனை சொரணை உள்ளவனாக ஆக்கியது இந்த இயக்கம்!

இந்த இயக்கம் தமிழனை சொரணை உள்ளவனாக ஆக்கி இருக்கிறது. எனக்கு தெம்பு இருந்தால், நான் கொள்கையோடு வாழ்ந்தால், ஒரு லட்சியம் எனக்கு இருந் தால், நான் பேசுகிற போது அந்தப் பேச்சில் நம்பிக்கை இருந்தால் அத்தனையும் கொடுத்தது திராவிட இயக்கம். தியாகராயர் இல்லாவிட்டால், டி.எம். நாயர் இல்லாவிட்டால் அந்த வழியிலே வந்த தலைவர்கள் இல்லாவிட்டால் இந்தி திணிப்பை எதிர்க்கின்ற ஒரு உணர்வு இல்லாவிட்டால், எங்களைப் பொறுத்த வரையில், எங்களைப் போன்றவர்களுக்கு இன்றைக்கு கலைஞருக்கோ, எனக்கோ இந்த இயக்கத்தில் முன்னோடிகளாக இருந்து பணியாற்றுகின்ற அந்த சூழ் நிலையே வந்திருக்காது.

இந்திமொழியைத் திணிக்க மாட்டோம் என நேரு கொடுத்த உறுதிமொழி!

அண்ணாவே உயர்ந்த நிலைக்கு வந்திருக்க மாட்டார். காமராஜருக்கே மரியாதை வந்திருக்காது. ராஜாஜியை எதிர்த்து காமராஜர் போராடியபோது கருப்பு காந்தி என்று காமராஜரை சொன் னார்கள். அப்படி இந்த நாட்டில் சாதி உணர்வு, வைதீக ஆதிக்கம், பிராமணிய மேலாண்மை, சூத்திரர்களை இழிவுபடுத் துவது இவையெல்லாம் எதிர்த்து நின்ற ஒரு வலுவான சக்தி திராவிட இயக்கம். அந்த வழியில் தான் இந்தி மொழியைத் திணிக்காதே., பள்ளிக் கூட மாணவர் களுக்கு அரசாங்கத்திலே கொண்டுவந்து எல்லா இடத்திலும் இந்தியைப் பரப்பாதே என்று அன்றைக்கு போராட ஆரம்பித்து, பண்டித ஜவஹர்லால் நேரு அதை ஒத்துக் கொண்டு, இந்தி மொழி பேசாத மக்கள் ஒப்புக்கொள்கிற வரையில் நாங்கள் இந்தியை அந்த மக்களுக்கு ஆட்சி மொழியாக ஆக்க மாட்டோம் என்று உறுதிமொழி கொடுத்தார். நீங்கள் ஒத்துக் கொண்டால்தான் ஆட்சி மொழி - இல்லா விட்டால் நாங்கள் திணிக்க மாட்டோம். இது லால்பகதூர் சாஸ்திரியும் சொன்னார்.

இவ்வாறு தி.மு.க. பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் உரையாற்றினார்.

சென்னை பன்னாட்டு ஆவணப்பட,குறும்படத் திருவிழா 2015

சென்னை பெரியார் திடலில்  மூன்றாவது சென்னை பன்னாட்டு
ஆவணப்பட,குறும்படத் திருவிழா 2015

ஜன.30, 31, பிப்.1 ஆகிய மூன்று நாள்கள் பெரியார் திடலில் திரையிடப்பட உள்ள குறும்படம் மற்றும் ஆவணப்படங்கள்

https://www.facebook.com/events/786526551430828/786692201414263/?comment_id=786927208057429&notif_t=event_mall_comment
நாள்: 30, 31 ஜனவரி, 01 பிப்ரவரி 2015

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல் சென்னை-7

தொடங்கி வைப்பவர்: ஊடகவியலாளர், எழுத்தாளர் ஜெயராணி

30.01.2015 வெள்ளிக்கிழமை 10.30 மணி: 

டேம்ட்  Dammed (இந்தி) அணைகுறித்த ஆவணப்படம்./2013/

இயக்கம்: நந்தன் சக்சேனா, கவிதா பஹல்

நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணையால் பாதிக்கப்பட்ட மத்தியப்பிரதேசத்தில் உள்ள கிராமத்தினருக்கு மறுவாழ்வோ, இழப்பீடோ  அளிக்க முன்வரவில்லை. வளர்ச்சிக்கான முன்னுதாரணமானவையாக இருக்கும்  மாபெரும் அணைகள் கட்டப்படுவதில் உள்ள சிக்கல்கள் குறித்த ஆவணப்படம் /64 நிமிடங்கள்/

11.45 மணி:

கோத்ரா டாக்  பயங்கரவாதத்தின் முன்னோட்டம் Godhra Tak: the Terror Trail
(ஆங்கிலம்) ஆதாரங்களைக்கொண்டுள்ள குஜராத் கலவரம்குறித்த புலனாய்வு ஆவணப்படம்/2003/ இயக்கம்: சுப்ரதீப் சக்ரவர்த்தி

குஜராத் கோத்ரா ரயில் நிலையத்தில் 27.02.2002 அன்று  சபர்மதி விரைவுத் தொடர்வண்டியின் எஸ்-6 பெட்டி தீக்கிரையாக்கப்பட்டபோது கரசேவகர்கள் உள்பட 59 பயணிகள் உயிரிழந்தனர். அந்த  காட்டுமிராண்டி சம்பவம் குறித்த புலனாய்வு ஆவணப்படம். /62 நிமிடங்கள்/

1.00 மணி : உணவு இடைவேளை

2.00 மணி: திரைப்படப்பிரிவு வழங்கும் படங்கள்

அய் ஆம் டிவென்ட்டி I AM TWENTY   (ஆங்கிலம், இந்தி-கருப்பு வெள்ளை) 

இயக்கம்: எஸ்.என்.எஸ். சாஸ்திரி

இந்தியாவின் சுதந்தரமடைந்த 20ஆண்டுகளுக்கு பின்னர், நாடுமுழுவதும் பயணம்செய்து, 1947ஆம் ஆண்டில் பிறந்த 20 வயதுள்ள இளைஞர்களிடம் பேட்டி. சுதந்திரம்  என்பதன் பொருள் என்ன? அவர்களின் கனவு என்ன?  இளம் தேசத்தை அவர்கள் எதன் சின்னமாகக் காண்கிறார்கள்? அவர்களின் பதில்கள் தத்துவார்த்தம், உறுதி, நகைச்சுவை, அச்சம், எச்சரிக்கை உணர்வு, நம்பிக்கை மனப்பான்மை என பலவற்றின் கலவையாக இருந்தன. 40 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த எண்ணங்களின் பதிவாக உள்ள இப்படம் இந்த காலக்கட்டத்துக்கு பொருத்தமானதாகவும் இருக்கிறது. /20 நிமிடங்கள்/

இந்தியா 67/இந்தியருக்கான நாள் INDIA 67 / AN INDIAN DAY இசைவடிவம் 
வண்ணத்தில் 1967 /58 நிமிடங்கள்/ இயக்கம்: எஸ். சுக்தேவ்
இயக்குநர் சுக்தேவ் அவர் அரசின் திரைப்படப்பிரிவில் பணியாற்றியவர்.
நீண்ட காலமாகவே பிரச்சாரத்திலிருந்து அகற்றப்பட்ட படம்.

இந்தியா 67 இந்திய சுதந்திரம் அடைந்த 20 ஆண்டினைக் குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.

பிற்பகல் 3.30 மணி:

பிந்டோ Binto (பிரெஞ்சு, ஜெர்மனி) /64 நிமிடங்கள்/

இயக்கம்: சீமோன் கத்தரினா கவுல் புர்கினோ ஃபாசோவிலிருந்து புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பவராக கனவுடன் உள்ளவர் பிந்டோ. ஆனால், குழந்தைகள் இல்லத்தில் உள்ள தன் குழந்தைக்கான பொறுப்புகளை ஏற்றதால் ஏற்ற இறக்கங்களை அடைவதை உணர்த்தும் குறும்படம்.

4.30

லா பார்காLa parka (ஸ்பானிஷ், மெக்சிகோ) /29 நிமிடங்கள்/2013 இயக்கம்: கபிரியேல் செர்ரா

25 ஆண்டுகளாக பலிபீடத்தில் பணியாற்றிவருபவர் எஃப்ரெயின்.  சாவைப்பற்றி நன்கு உணர்ந்த அவர் வாழ்வுக்காக போராடுவதை விளக்கும் குறும்படம்.
----------------------
31.1.2015 - சனிக்கிழமை
காலை 10 மணி:

என்கவுண்டர்ட் ஆன் சஃப்ரான் அஜெண்டா 'Encountered on Saffron Agenda? (ஆங்கிலம்) ஆவணப்படம் 90 நிமிடங்கள்/2008 இயக்கம்: சுப்ரதீப் சக்ரவர்த்தி
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற / 22.10.2002 அன்று  சமீர்கான் பதான், 13.01.2003 அன்று சாதிக் ஜமால், 16.06.2004 அன்று இஷ்ரத் ஜகான்-ஜாவீத் ஷெயிக்  மற்றும் 26.11.2005 அன்று சொராபுத்தீன் ஷெயிக்/  என்கவுண்டர்கள்குறித்த புலனாய்வை அடிப்படையாகக் கொண்டுள்ள ஆவணப்படம்.
 
பகல் 12 மணி: பத்மினி மை லவ் Padmini My Love (மராத்தி, இந்தி) ஆவணப்படம்.19.30 நிமிடங்கள்(2014)

இயக்கம்: முன்முன் தலாரியா மற்றும் சிலர்
மும்பையின் சின்னமாக  உள்ள பத்மினி ஃபியட் கார் வாடகைக்கார்கள் எதிர்கொள்ளும அச்சுறுத்தல்கள்குறித்த ஆவணப்படம்

12.20 மணி: கான்ட் ஹைட் மி CAN’T HIDE ME (இந்தி, ஆங்கிலம், கன்னடம்) ஆவணப்படம் 26 நிமிடங்கள்(2014) இயக்கம்: மாதுரி மொகிந்தர்

பார்வதி, மல்லிகா மற்றும் ஹீனா ஒருவரை ஒருவர் சந்தித்தது கிடையாது. எண்ணிப்பார்க்க முடியாத அளவில் பொதுவான ஒரே கருத்தையே பிரதிபலித்துள்ளனர்.

பெண்களுக்கான உரிமைகளை மீட்பதில் அதிகஅக்கறையுடன் பெண்கள் சுதந்திரத்தைத் தக்கவைப்பதற்கு தொடர்ச்சியாக கண்ணுக்குத் தெரியாத தடுப்புகளுக்கு எதிராக போராடி உள்ளனர்.

2.00 மணி: அவுட் ஆப் கோர்ட் செட்டில்மண்ட் Out of Court Settlement(ஆங்கிலம்) ஆவணப்படம் 66 நிமிடங்கள் (2012) இயக்கம்: சுப்ரதீப் சக்ரவர்த்தி

தாக்குதல் மற்றும் கொலைகளை அடிப்படையாகக் கொண்டுள்ள கதை. மிகுந்த அச்சுறுத்தல்களுக்கிடையே வழக்குரைஞர்கள்  நாடுமுழுவதும் உள்ள பயங்கரவாத வழக்குகளில் ஆஜராவது குறித்த ஆவணப்படம்.

3.30 மணி:  திரைப்படப்பிரிவு படங்கள்

டில்லி டாலியிங் DILLY DALLYING (ஆங்கிலம்) கருப்பு வெள்ளை, 10
நிமிடங்கள்(1957) இயக்கம்: கே.எல்.காந்த்பூர்

மும்பை மாநகர் சூழல், நாட்டுக்கு சேவைஆற்றுவதில் ஒவ்வொருவரின் காலம் தவறாமை, செயல்களை தள்ளிப்போடுதல், முடிவெடுப்பதில் தாமதப்படுத்தல் ஆகிய பழக்கங்கள் பெரிய அளவில் சமுதாயத்தை சீரழிக்கும் என்பதை எடுத்துக்காட்டும் குறும்படம்.

அவர் நேஷனல் ஆன்தெம்/ஹமாரா ராஷ்டிரகான் OUR NATIONAL ANTHEM / HAMARA RASHTRAGAN (இந்தி)10 நிமிடங்கள் (1964)

இயக்கம்: பிரமோத் பட்டி

தேசிய கீதத்தை சரியான முறையில் பாடுவதற்கு குழந்தைகளுக்கு வழிகாட்டும் அனிமேஷன் படம்.

கிளாக்ஸ்ப்லோஷன் CLAXPLOSION (கருப்பு வெள்ளை) கருப்பு வெள்ளை, 2 நிமிடங்கள்(1968)

இயக்கம்: பிரமோத் பட்டி

குடும்ப கட்டுப்பாடு குறித்த அனிமேஷன் படம்

ஸ்டின்கிங் ஸ்டோரி STINKING STORY (இந்தி, ஆங்கிலம்) கருப்பு வெள்ளை, 16 நிமிடங்கள்(1980) இயக்கம்: லோக்சென் லால்வானி

மாநகரங்கள்: வானை முட்டும் உயர்ந்த கட்டடங்கள், திரை அரங்குகள், அய்ந்து நட்சத்திர விடுதிகள், குதிரை பந்தயம், பெட்ரோல் நிலையங்கள், குறைந்த அளவில் பொது கழிப்பிடங்கள், அங்கிங்கெனாதபடி எங்குபார்த்தாலும் நாகரிகமற்ற, சுகாதாரக் கேடுகள் குறித்து எச்சரிக்கும் ஆவணப்படம்.

வாய்ஸ் ஆப் தி பீப்பிள் VOICE OF THE PEOPLE (ஆங்கிலம்,  ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன் இந்தி, குஜராத்தி, மராத்தி மற்றும் பெங்காலி) கருப்பு வெள்ளை, 17 நிமிடங்கள்(1974)
 
இயக்கம்: எஸ்.சுக்தேவ்

16.04.1974 காலக்கட்டத்தில் அகில இந்திய அளவில் ரயில்வே வேலை நிறுத்தம் குறித்து கவலைப்பட்ட சுக்தேவ், கேமராவை மக்களை நோக்கிக் கொண்டு சென்றார்.

தொழிலாளர் களுக் கான பேட்டிகள்,  சராசரி பயணிகளின் பேட்டிகள் ஆகியவை களைப் பதிவு செய்துள்ள படம். அரசுக்கு ஆதரவாகவும், வேலைநிறுத்தப்போராட்டத்துக்கு எதிராக மக்கள் உள்ளதாக கூறுவதாகவும் உள்ள படம்., தொழிலாளர்களின் தலைவர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் இப்படம் குறித்து கூறுகையில் படத்தில் குறிப்பிடும்படியாக ஒன்றும் இல்லை என்றார்
--------------------
1.2.2015 - ஞாயிற்றுக்கிழமை
காலை 10 மணி:

ஆஃப்டர் தி ஸ்டோர்ம் After the Storm (ஆங்கிலம்) 68 நிமிடங்கள்(2012) ஆவணப்படம் இயக்கம்: சுப்ரதீப் சக்ரவர்த்தி

பயங்கரவாத குற்றச்சாற்றுகளில் பல்வேறு நீதிமன்றங்களின் நெடிய படிக்கட்டுகளைக்கடந்து விடுதலை பெற்ற ஏழு பேரின் சோதனைகள்,வேதனைகள் மற்றும் இருள்சூழ்ந்த வாழ்க்கைப் போராட்டம்குறித்த ஆவணப்படம்

11.30 மணி:

திரைப்படப்பிரிவு படங்கள்

சிம்பள் ஆப் ப்ராக்ரஸ் SYMBOL OF PROGRESS (ஆங்கிலம்) கருப்பு, வெள்ளை, 14 நிமிடங்கள்(1965) இயக்கம்: என்.எஸ்.தாப்பா

பஞ்சாப்பில் பெரிய ஏரிகள் நீரின்றி வறண்ட நிலங்களாக இருப்பதை மாற்றிய, மாபெரும் சின்னமாக உள்ள பக்ராநங்கல் அணையின் பொறியியல் திறன், இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள், இரண்டரை மில்லியன் ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி, பெரிய அளவில் உள்கட்டமைப்பு கொண்ட நாடாக உயர்த்துவது குறித்து விளக்கும் ஆவணப்படம்

விவித் பார்தி VIVIDH BHARTI (இந்தி) கருப்பு வெள்ளை, 14 நிமிடங்கள்(1965)
 
இயக்கம்: அமர் வர்மா

அகில இந்திய வானொலியின் புகழ்பெற்ற விளம்பர ஒலிபரப்பு விவித பாரதி வானொலி ஒலிரப்பு குறித்த படம். பொழுதுபோக்கில் பிரபலமாக இருந்த இலங்கை வானொலிக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் உருவான ஒலிபரப்பு. நாடகங்கள், மெல்லிசை, திரைப்படப்பாடல்கள் மற்றும் பல தரப்பட்ட வயதிலும் உள்ள நேயர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் கொண்ட வானொலி ஒலிபரப்பாகிய விவித பாரதி குறித்த ஆவணப்படம்.

எ டெகேட் ஆப் அச்சீவ்மெண்ட் A DECADE OF ACHIEVEMENT (ஆங்கிலம்) கருப்பு வெள்ளை 22 நிமிடங்கள் (1976) 

இயக்கம்: எஸ்.என்.எஸ் சாஸ்திரி

1966முதல் 1976வரையிலான ஒரு தலைமுறையில் பத்தாண்டுகளில் இந்தியா அடைந்த முன்னேற்றங்கள், முக்கியமான 20 தலைப்புகளில் நெருக்கடிக்காலத்தில் மக்களின் கருத்துகள் ஆகியவைகளைக் கொண்டுள்ள படம்.

ஆக்சுவல் எக்ஸ்பீரியன்ஸ் நெ.4 ACTUAL EXPERIENCE NO. 4 (ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி, குஜராத்தி மற்றும் மராத்தி ஆங்கில துணைத்தலைப்புகளுடன்) கருப்பு வெள்ளை, 14 நிமிடங்கள்(1969) இயக்கம்: ஓ.பி.அரோரா

குடும்பக் கட்டுப்பாட்டில் லூப் கருவி பயன்பாடு குறித்து நாடெங்கும் உள்ள பெண்களின் பேட்டி முரண்பாடாக உள்ள முறை, மருத்துவ சிக்கல்களைக் கொண்டதாக இருந்துள்ளது.

இப்படியான கருத்தைக்கொண்டுள்ள படமாக இருந்த மையால், வெளியாகும்போதே குறிப்பிட்ட காலத்தில் முடங்கிப்போனது.

12.45 மணி: எ டரஸ் Tres Pesos (ஸ்பானிஷ், மெக்சிகோ) 19.59 நிமிடங்கள்(2013)

இயக்கம்: ரொசாலி ஹப்பிள்

மெக்சிகோ மாநகரில் சாதாரண நாள்களில் சுரங்கப் பாதையின் கதவுகள் மூடப்படுவதும், திறக்கப்பதும் அன்றாடப்பணிகள் காட்சியிலும் இடம்பெற்றுள்ளது. பகல் 1.00 மணி: உணவு இடைவேளை

2.00 மணி: இன் தினோ முசாபர்நகர் En Dino Muzaffarnagar (ஆங்கிலம்) 2மணி, 27 நிமிடங்கள்(2014) ஆவணப்படம்

இயக்கம்: சுப்ரதீப் சக்ரவர்த்தி

ஒரு காலத்தில் அன்பின் நகரமாக இருந்த முசாபர் நகர். செப்டம்பர் 2013 கலவர நகராக மாறிவிட்டது.

இன் தினோ முசாபர்நகர் (இன்றைய முசாபர்நகர்) கலவரத்துக்கு முந்தைய நிலை, கலவர காலம் மற்றும் கலவரத்துக்கு பின்பு ஏற்பட்டுள்ள சூழல்கள் ஆகியவைகளை விளக்கும் படம்.

 கடந்த ஆண்டு நடைபெற்ற முசாபர்சகர் கலவரத்தை அடுத்த அரசியல் வெறுப்புணர்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டது.அரசியல் வாதிகள் சுய லாபத்துக்காக கலவரத்தின்மூலம் பிரித்து தேர்தலுக்காக கலவரத்தை ஏற்படுத்தியதுகுறித்து விளக்கும் படம்.

ஒருங்கிணைப்பு: பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை, மறுபக்கம், பனுவல் புத்தக நிலையம், டிஸ்கவரி புத்தக நிலையம், சென்னை பல்கலைக் கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை, இந்திய அரசின் திரைப்படப் பிரிவு

25-ஆம் தேதி முதல் 1-ஆம் தேதிவரை பிற ஒருங்கிணைப் பாளர்களின் நிகழ்விடங்களிலும் திரையிடல் நடைபெறும்.

விழா ஒருங்கிணைப்பாளர்: ஆர்.பி.அமுதன்

மேலும் விவரங்களுக்கு: chennaifilmfestival.blogspot.in

தொடர்புகளுக்கு: 9944533400, 9952563431

Thursday, January 29, 2015

மனிதநேயம்

வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்த பாதிரி யார் ஜி.யு. போப் தன் கல் லறையில் நான் ஒரு தமிழ் மாணவன் என்று எழுதச் சொன்னார் தமிழ்ப் பற்றின் காரணமாக. அதேபோல் வேளாங்கண்ணி மாதா கோயிலின் பாதிரியார் ஒருவர், தமது கடைசி ஆசையாக எழுதி வைத்தி ருக்கும் வாசகம், மதநல்லி ணக்கத்தின் அடையாளம். அந்த வாசகம் என்ன தெரியுமா?

எனது வாழ்நாளில் பைபிளை முழுமையாகப் படித்து, அதன்படி வாழக் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆனால், குர்ஆனையும் பகவத்கீதையையும் முழு மையாகப் படிக்க முடிய வில்லை. எனவே, நான் இறந்த பிறகு எனது இரண்டு கண்களில் ஒன்றினை ஓர் இஸ்லாமியச் சகோதரருக் கும், இன்னொன்றை ஓர் இந்து சகோதரருக்கும், பொருத்தினால் அவர்கள் மூலமாகவாவது நான் குர் ஆனையும் பகவத் கீதை யையும் படித்தவன் ஆவேன்.
 
அ. யாழினி, பர்வதம், சென்னை-78
கல்கி 11.11.2015 பக்.48

கிறித்தவர்களா? அவர் கள் கீழ்த்தரமானவர்கள்; முஸ்லிம்களா அவர்கள் மிக மிக  மோசம் என்று ஆர். எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார்களும் பிஜேபி என்ற கட்சியைச் சேர்ந்தவர்களும் குமட்டுகிறார்களே - அவர் களுக்கு இது ஒரு சிறிய காணிக்கை.

எடுத்துச் சொல்லுவது நாமல்ல - அவாளின் கல்கி இதழ்தான்.

வெள்ளைக்காரர்கள் இந்தியாவுக்கு வந்தது கிறித்துவத்தைப் பரப்பத்தான் என்று சொல்லுவதுண்டு. அதே நேரத்தில் அவர்கள் இந்நாட்டு மக்களுக்குக் கல்வியைக் கொடுத்தார்கள்; மருத்துவ உதவியை நல்கி னார்கள் என்பதை மறுக்க முடியுமா?

படிக்காதே - நீ கல்வி கற்பதற்கு உரிமையில்லை! என்று இந்நாட்டு ஒடுக்கப் பட்ட மக்களைப் பார்த்து கூறியது இந்து மதம்; - நீ படி என்று கூறி கல்வியைக் கொடுத்தது கிறித்துவம்.

உடல் முழுவதும் மூளை உள்ளவர் என்று அக்கிரகார வாசிகளால் ஆகாயத்தில் தூக்கி வைத்துப் பாராட்டப் படும் அந்த ராஜாஜி இரண்டு முறை சென்னை மாநிலத் திற்கு முதலமைச்சராக வந்திருந்த போதிலும் (1937இல் ஒரு முறை 1952இல் இன்னொரு முறையும்) அவர் செய்தது என்ன? பள்ளி களை இழுத்து மூடியது தானே? 1937இல் 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார் என்றால் 1952இல் 6000 பள்ளிகளை இழுத்து மூடி அரை நேரம் படித்தால் போதும், அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கவில்லையா?

அந்தக் கெட்ட புத்தியே அவருக்கு எதிராக அமைய வில்லையா? தந்தை பெரி யார் உருவில் எழுந்த அந்த எதிர்ப்பு - ஆச்சாரியாரின் பொதுவாழ்வையே அஸ்த மிக்கச் செய்யவில்லையா?

கிருத்தவர் ஒருவர் தமது இரு கண்களில் ஒன்றை இஸ்லாமியருக்கும் மற்றொன்றை ஒரு இந்து வுக்கும் பொருத்தச் சொன் னாரே - அந்த மனிதநேயர் எங்கே! நாத்திகனுக்கு வைத் தியம் பார்க்காதே என்று சொன்ன இந்து மதத் தலை வர் ஜெகத் குரு சங்கராச் சாரியார் எங்கே? (காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதியின் - தெய்வத்தின் குரல் 3ஆம் பாகம் - பக்கம் 148). அடையாளம் காண்பீர்!

- மயிலாடன்

ஆறா வடுவை ஏற்படுத்தினர்!.



என் நண்பனுக்குத் திரு மணம் ஆகி பல ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாமல் இருந்தது. சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதுவரை சோகத்துடன் இருந்த நண் பனும், அவனுடைய மனைவி யும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். குழந்தையின் முதல் பிறந்த நாளை வெகு விம ரிசையாக கொண்டாடினார்கள். அந்த மகிழ்ச்சி அவர்களுக்கு வெகுநாட்கள் நீடிக்கவில்லை. பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்த சில நாள்களிலேயே நண்பனின் மனைவிக்கு பக்க வாத நோய் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டது. நண்பர் எவ்வளவோ பணம் செலவு செய்தும் நோய் குணமாக வில்லை.

அவருடைய மனைவியை பார்த்து நலம் விசாரிக்க வந்த உறவினர்கள் நோயை குழந் தையுடன் சம்பந்தப்படுத்தி பேசினார்கள். பிறந்த குழந் தைதான் தாயை நோயில் படுக்க வைத்துவிட்டது என்று ஒவ்வொருவரும் ஒவ் வொரு விதமாகப் பேசினார்கள். அதைக் கேட்ட நண்பர் வருத் தப்பட்டார். இப்படி எல்லோ ரும் நினைத்துவிட்டால், குழந்தை ஆசையே வராது என்று விரக்தியுடன் கூறினார். நோயாளியைப் பார்க்கச் செல் பவர்கள் ஆறுதல் வார்த்தைகள் கூறாவிட்டாலும், அவர்கள் மனம் புண்படும்படி பேசாமல் இருப்பது நல்லது.

- க.ஆறுமுகம், கழுகுமலை
தினத்தந்தி குடும்பமலர், 25.1.2015

21 ஆம் நூற்றாண்டில் நாடு நடைபோடும் காலகட்டத்தில் சந்திராயன் வெற்றி முழக்கம் கேட்கும் ஒரு தருணத்தில், செவ்வாய்க் கிரக ஆய்வில் அடுத்த கட்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதில் இப்படியும் செய்திகள் உலா வரு வதை நினைத்தால் வெட்கித் தலை குனியத்தான் வேண்டும். மதம் மக்களின் மூளையில் புகுந்து நச்சுக் கிருமிகளை உரு வாக்கி விட்டதே - என் செய்ய!

குழந்தை பிறந்ததற்கும், தாய்க்கு வந்த நோய்க்கும் முடிச்சு போடுவதில் ஏதாவது பொருள் இருக்கிறதா? மொட் டைத் தலைக்கும், முழங்கா லுக்கும் முடிச்சுப் போடுவதாகக் கேலியாகச் சொல்வார்களே - அதுதான் இந்த நேரத்தில் நினைவிற்கு வருகிறது.

இந்த அர்த்தமுள்ள(?) இந்து மதத்தில்தான் இந்தக் குட்டிச் சுவர் க(ழு)தைகள் எல்லாம்!

ஏற்கெனவே நோய்வாய்ப் பட்டுள்ள ஒருவரிடம் இப்படி சொல்லுகிறோமே, அவர்கள் மனநலமும் பாதிக்காதா என்ற எண்ணம் இல்லாததோடு, இப்படிச் சொல்லுபவர்களின் எண்ணத்தில் மனிதநேயத்தின் மயிரிழைக் கசிவுகூட இல்லை என்பதை நினைக்கவேண்டும்.

அந்தக் குழந்தை வளர்ந்த நேரத்தில், நீ பிறந்துதான் உன் தாயைக் காவு கொடுத்தாய்! என்கிற அளவுக்கு இன்று போடப்படுகின்ற மூட விதை, வளர்ந்து மரமும் ஆகும் என்பதில் அய்யமில்லை.

இது ஒன்றா? இந்தத் திசையில் இன்னும் எத்தனை எத்தனையோ உண்டு. பெண் ணுக்குச் செவ்வாய்த் தோஷம் எனச் சொல்லி, தக்க வயது வந்தும், திருமணம்  ஆகாம லேயே தடைபடும் தகவல்கள் நிறைய உண்டு. செவ்வாய்த் தோஷமுள்ள மாப்பிள்ளை யைத் தேடுவார்கள். இது மாமனுக்கு ஆகாது என்றும் கதை கட்டுவார்கள்.

ஜாதகப் பொருத்தம் பார்க்காதீர்கள்; குருதிப் பொருத்தம் பாருங்கள் - மணமக்களுக்கு உடற்சோதனை செய்யுங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கூறிவரும் தேவை யான, அவசியமான கருத்தை இப்பொழுதாவது சீர்தூக்கிப் பாருங்கள்!

- மயிலாடன்


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


Wednesday, January 28, 2015

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற சோசலிஸ்ட், செக்குலர் என்பதை நீக்கி மத்திய அரசு விளம்பரமா?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற சோசலிஸ்ட், செக்குலர் என்பதை நீக்கி மத்திய அரசு விளம்பரமா?
அரசமைப்புச் சட்டத்தையே அவமதிக்கும் ஹிட்லரிசத்துக்கு மத்திய செய்தி விளம்பரத் துறை மன்னிப்புக் கோரவேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற சோசலிஸ்ட், செக்குலர் என்பதை நீக்கி மத்திய அரசு விளம்பரமா?

66 ஆவது குடியரசு நாளுக்காக மத்திய செய்தி விளம்பரத் துறையின் சார்பில் ஏடுகளுக்குக் கொடுக்கப்பட்ட விளம்பரத்தில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பீடிகையில் உறுதி செய்யப்பட்டு இடம் பெற்றுள்ள சோசலிஸ்ட், செக்குலர் என்ற சொற் களைத் திட்டமிட்டு நீக்கியதைச் சுட்டிக்காட்டி, இந்த அத்துமீறலை - சட்ட விரோதச் செயலை மேற்கொண்ட செய்தி விளம்பரத்துறை பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பிரதமர் மோடி தலைமையில், ஏழு மாதங்களுக்கு முன்பு ஆட்சிப் பொறுப்பேற்ற - ஆர்.எஸ்.எஸ். - ஆணைப்படி நடக்கும் - பா.ஜ.க. என்ற ஆட்சியில் பகிரங்க மாக, பட்டாங்கமாய் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் அமைந்து உருவாக்கப்பட்டவற்றை அரசின் அடிப்படை நோக்கத்தையே, அமைதியான முறையில் அகற்றிடும் முயற்சிகள் இந்த 66 ஆவது இந்தியக் குடியரசு நாள் முதலே தொடங்கப்பட்டு விட்டதோ என்ற சந்தேகம் பரவலாக நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது!

அப்பட்டமான ஹிந்து மதவாத ஹிந்துத்துவ முயற்சிகள் - சிறிதும் கூச்சநாச்சமின்றி, மோடி அரசில் இடம்பெற்றுள்ள அவரது சக அமைச்சர்கள், பா.ஜ.க. எம்.பி.,களால் நிறைவேற்றப்பட்டு வருவதை நாடே பார்க்கத் தவற வில்லை.
தி எகனாமிக் டைம்ஸ் ஆங்கில நாளேட்டில் இன்று (28.1.2015) 3 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ள செய்தியும், பின்னணியும்!

அரசமைப்புச் சட்டத் திட்டத்தில் உள்ள முக்கிய சொற்களை நீக்கி விளம்பரம்!

இதே பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள - 66 ஆவது குடியரசு நாளையொட்டி மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை என்ற செய்தித் துறை அமைச்சு (Information and Broadcasting Ministry) விளம்பரத்தில்,

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள முன்னுரை பூர்வப் பீடிகை (Preamble) வாசகங்களையே மாற்றி அரசு சார்பில் விளம்பரம் தரப்பட்டுள்ளது. நமக்கு நாமே வழங்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் - இந்திய மக்களாகிய நாம் இந்திய அரசினை இறையாண்மையுடன் கூடிய சமதர்ம, மதச்சார்பற்ற ஜன நாயகக் குடியரசாக அமைந்துள்ள ஆட்சி என்பதாகத்தான் தொடங்குகிறது.

இந்தப் பீடிகை என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாற்றப்படக்கூடாத அடிப்படை அரசியல் சட்டக் கட்டுமானப் பகுதியாகும்.


உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும்...

இந்த அரசின் மாற்றப்படக் கூடாத அடிக்கட்டுமான (Basic Structure of the Constitution) சொற்களான சோஷலிஸ்ட், செக்யூலர் (Socialist and Secular) என்பதனை நீக்கி, விளம்பரம் கொடுத்துள்ளனர். உச்சநீதி மன்றத்தில் இரண்டு வழக்குகளில் அதை நீக்கிட முடியாது - அது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய அடிப் படை நோக்கப் பகுதி என்று தெளிவாக உறுதியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது!

திட்டமிட்டே நீக்கப்பட்டுள்ளது!

இப்போது வேண்டுமென்றே திட்டமிட்டு இந்திய அரசின் முக்கிய துறைகளில் ஒன்றான (I&B Ministry) அதிகாரபூர்வமாகத் தந்த விளம்பரத்தில் - திட்டமிட்டே ஆழம் பார்க்கும் வகையில், ஹிட்லரிசம் தலைதூக்கி, சமதர்மம், மதச் சார்பின்மை (சோலிஸ்ட், செக்குலர்) இரண்டு நோக்கங்களையும் எங்கள் அரசு தூக்கி எறிந்து விட்டது என்று சொல்லுவதாக அரசு விளம்பரம் தருகிறது!

சப்பைக் கட்டா?

இதற்குச் சப்பைக் கட்டுக் கட்டுவதற்கு சில ஜால் ராக்களும், ஆமாம் சாமிகளும் ஊடகங்களுக்குக் கிடைத் தும் இருப்பது விந்தையிலும் விந்தை! வெட்கக்கேடானதும் கூட!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தொடக்கத்தில் இது இல்லையாம்; 42 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம்தான் இந்த இரண்டு சொற்றொடர்களும் புகுத்தப் பட்டனவாம்! முன்பு இருந்த வாசகங்களைக் கொண்டே இந்த அரசு விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளதாம்!

- இப்படி ஒரு வெண்டைக்காய், விளக்கெண்ணெய் வியாக்கியானம் - விளக்கம்!

கேழ்வரகில் நெய்வடிகிறது என்று இந்த ஜால்ரா நிபுணர்கள் ஒத்து ஊதுகிறார்கள்! கேட்பவருக்கு மதியில்லை என்ற நினைப்போ!

இந்திய அரசமைப்புச் சட்டமானாலும் அல்லது வேறு எந்த சட்டப் பிரிவானாலும் - ஏன் ஒரு அரசு ஆணைகூட, தற்போது எப்படி அதில் உள்ளதோ அதை அப்படியே மாற் றாமல்தான் எடுத்தாளவேண்டும் - கடைப்பிடிக்கவும் வேண்டும்.

திட்டமிட்டே சில முக்கிய அதுவும் இலட்சிய குறிக் கோள் சொற்களை விட்டுவிட்டு அரசு விளம்பரம் தரலாமா?
 
மன்னிப்புக் கோரவேண்டும்

இது தற்செயலாக நிகழ்ந்த தவறு அல்ல; திட்டமிட்டு - ஆழம் பார்க்கும் - ஹிந்துத்துவா உணர்வின் வெளிப்பாடு - அசல் ஹிட்லரிசத்தின் அருவருக்கத்தக்க வெளிப்பாடு!

இதனை முற்போக்குக் கருத்துள்ளவர்கள் அனைவரும் வன்மையாகக் கண்டித்து, நாடு தழுவிய அளவிலே கண்டனக் குரல் எழுப்பி, இந்திய தகவல் ஒலிபரப்புத் துறையை மன்னிப்புக் கேட்க வைக்கவேண்டும்.

வருமுன்னர் காக்கத் தவறக்கூடாது. மோடி அரசு நாட்டை எப்பாதையில் அழைத்துப் போகத் திட்ட மிட்டுள்ளது என்பதற்கான ஒரு முன்னோட்டம் இது!
எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை செய்கிறோம் மக்களே விழிப்புடன் இருப்பீர்!

கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்
சென்னை
28.1.2015

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

ஜாதிப் பெயரா?

சமீபத்தில் என் அலு வலக நண்பரின் வீட்டிற்கு போயிருந்தேன். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஆறாவது படிக்கும் நண்பனின் மகன் அழுத படி வந்தான். ஏன் அழு கிறாய்? என்று கேட்டதற்கு, அவன் கூறிய பதிலைக் கேட்டு கோபம் வந்தது.

அவன் ஆசிரியர், அவனை கறுப்பா என்று அழைப்பாராம். அதைக் கேட்டு சக மாணவர்கள் கேலி செய்து சிரிப்பார் களாம். இதைக் கூறி மேலும் அழுதான் பையன்.

அவனுடைய சக வகுப்பு நண்பனிடம் கேட்டதற்கு, எங்கள் ஆசிரியர் அப்படித்தான்...

மாணவர்களின் இனத்தை வைத்து கவுண்டா, அய் யரே, பாய் என்றும், முடி காணிக்கை செலுத்தியவர் களை மொட்டையா என்றும் கூப்பிடுவதாகக் கூறினான்.

ஒழுங்கையும், மரியா தையையும் சொல்லித் தரும் ஆசிரியர்களே இப்படி கிண்டலடித்தால், மாணவர் சமுதாயம் எப்படி முன் னேறும்?
- ஜானகிராமன், வாலாஜா
(தினமலர் வார மலர் 25.1.2015 பக்.10)

இது ஒன்றும் புதிதல்ல - சில ஆண்டுகள் முன் வரை பள்ளிகளில் பெரும் பாலும் ஆசிரியர்கள் பார்ப் பனர்களாகவே இருப் பார்கள். தாழ்த்தப்பட்டவர் களும், பிற்படுத்தப்பட்ட வர்களும் படிக்க வந்த நிலையில் அந்த  உயர் ஜாதி ஆணவம் அவர் களை ஆத்திரத்தின் உச் சிக்கே துரத்தியது.

முதல் தலைமுறை யாகப் படிக்க வந்த மாண வர்களைப், பல தலை முறைகளாகப் படித்த பரம்பரையைச் சேர்ந்த பார்ப்பனர்களோடு ஒப்பிட் டுப் பேசுவதே தவறு. அப் படியெல்லாம் அவர்களால் சிந்திக்க முடியாதே!

நீ எல்லாம் ஏன் படிக்க வந்தே? மாடு மேய்க்கப் போக வேண்டியதுதானே? உன் வாயில் இதெல்லாம் எப்படி நுழையும் - உன் நாக்கில் வசம்பை வைத் துத்தான் தேய்க்கனும் என்று வாய்க்கு வந்த வசுவுகளையெல்லாம் கொட்டித் தீர்ப்பார்கள்.

தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் பல நிகழ்ச்சி களில் பேசும் போது இவற்றையெல்லாம் குறிப் பிடுவதுண்டு.

நான் மயிலாடுதுறை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண் டிருந்தபோது பெரும்பா லும் பார்ப்பன ஆசிரியர் களே இருந்தனர்.

நம் மாணவர்களைப் பார்த்து இப்படியெல்லாம் சொல்லு வார்கள் என்று  பேரா சிரியர் அவர்கள் குறிப் பிட்டதுதான் நினைவிற்கு வருகிறது.

தந்தை பெரியார் அவர்களின் பேருழைப்பால், கல்வி வள்ளல் காமராசரால், திராவிட இயக்கத்தின் தொடர் ஆட்சியால் பார்ப் பனர் அல்லாத இரு பால் மாணவர்கள் பார்ப்பனர் களைப் புறந் தள்ளும் பெரு நிலைக்கு வந்து விட்டனர்.

இந்த நிலையிலும் பழைய காலத்து விட்ட குறை, தொட்ட குறையாக ஜாதிப் பெயரை சொல்லி மாணவர்களை அழைக் கிறார்கள் கறுப்பா என்று கிண்டல் செய்கிறார்கள் ஆசிரியர்கள் என்றால் அந்தஆணவம் இன்னும் குற்றுயிராகத் துடித்துக் கொண்டிருக்கிறது என்று பொருள்.

- மயிலாடன்


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:



குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...