Tuesday, January 27, 2015

இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள்


 


தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறாமல் இருந்திருந்தால் இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் அகற்றப்பட்டு, அவ்விடத்தில் இந்தி மட்டுமே வந்திருக்கும். அவ்வாறு மாறியிருந்தால் தமிழகத்தில் இந்தி எந்த அளவில் புகுந்து நாட்டாண்மை செய்திருக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

1. இந்திய ஆட்சிப் பணி, காவல்துறைப் பணிகளுக்கான (IAS, IPS) தேர்வுகளில் இந்தியில் மட்டுமே கேள்வித்தாள்கள் கொடுக்கப்பட்டிருக்கும். தமிழகத்திலி ருந்து ஒருவர்கூட அப்பணிகளுக்கு வந்திருக்க முடியாது.

2. நெடுஞ்சாலைத் துறையால் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகள் அனைத்தும் ஆங்கிலம், தமிழ் இல்லாமல் இந்தியில் மட்டுமே இருந்திருக்கும்.

3. பாஸ்போர்ட், தொடர்வண்டி பயணச் சீட்டு, விமான பயணச் சீட்டு என அனைத்து மத்திய அரசு தொடர்பான ஆவணங்களிலும், இடங்களிலும் இந்தி மட்டுமே குடி புகுந்து இருந்திருக்கும்.

4. அய்.அய்.டி. போன்ற மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் நுழைவுத் தேர்வு கேள்விகள் ஆங்கிலம் இல்லாமல் இந்தியில் மட்டுமே இருந்திருக் கும் தமிழகத்திலிருந்து ஒருவர்கூட படித்திருக்க மாட்டார்கள்.

5. அனைத்துப் பள்ளிகளிலும் அனைத்துப் பாடங்களும் இந்தி வழிக் கல்வியின் (இந்தி மீடியம்) மூலமாக படித்திருப்போம்.

6. தமிழகத்தில் உள்ள மத்திய மாநில வேலை வாய்ப்புகள் அனைத்திலும் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தான் நிரம்பி வழிந்திருப்பார்கள்.

7. அரசியல் கட்சிகள் வைக்கும் பதாகைகள் அனைத்தும் இந்தியாகவே இருந்திருக்கும்.

8. வட நாட்டில் இருப்பது போல பேருந்துகள், கடைகள் என அனைத்து இடங்களிலும் பெயர்ப் பலகை இந்திமயமாகவே இருந்திருக்கும்.

9. தமிழகம் அய்.டி. துறையில் இவ்வளவு முன்னேறி யிருக்காது. ஆங்கிலம் தெரியாத காரணத்தால் வெளி நாடுகளுக்கு,  நாசா போன்ற அறிவியல் துறைகளில் அமையும் நல்ல வேலை வாய்ப்புகளுக்கு  தமிழர்களில் அதிகமானவர்கள் சென்றிருக்க முடியாது. இந்தி பேசும் மாநிலங்கள் போல தமிழகம் மிகவும் பின்தங்கி இருந்திருக்கும்.

10. தமிழில் இவ்வளவு திரைப்படங்கள் மற்றும் இவ்வளவு தொலைக்காட்சிகள், செய்தி ஊடகங்கள், இணையதளங்கள் வந்திருக்காது.

11. வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை என அனைத்திலும் இந்தி மட்டுமே இருந்திருக்கும், தமிழ் கட்டாயம் இருந்திருக்காது.

12. பிறப்பு  - இறப்பு சான்றிதழ் கூட இந்தியில் தான் இருந்திருக்கும்.

13. தமிழக சட்டமன்றத்தில் பல இந்திக்காரர்கள் உள்ளே புகுந்திருப்பார்கள். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் இந்திதான் சட்டமன்ற மொழியாக இருந்திருக்கும்.

14. இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் மொழிகளும் இந்நேரம் வழக்கத்தில் இருந்து  மறைந்திருக்கும்.

15. வீட்டில் உள்ள குழந்தைகளும் பெற்றோர்களிடம் இந்தியில்தான் பேசிக் கொண்டிருந்திருப்பார்கள். தாய் மொழிகளின்  நிலை கேள்விக்குறி  ஆகியிருக்கும்.

16. தமிழகத்தில் தமிழில் வணிகம் செய்ய முடியாத நிலை உருவாகி இருக்கும்; இந்தி தெரிந்தவர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.

தமிழர்கள் செய்த மொழிப் போராட்டத்தின் விளைவாக அனைத்து மாநில மொழிகளும் காப்பாற்றப்பட்டன என்பதில் நமக்கு பெருமையே!

இருப்பினும் இந்திய அரசின் இந்தித் திணிப்பு இன்னும் ஓயவில்லை. தமிழர்களின் மொழிப் போராட்டமும் முடியவில்லை.

இப்பொழுது சிலர் பேச ஆரம்பித்துள்ளனர். திராவிட இயக்கத்தால் இந்தி எதிர்க்கப்பட்டதால் தமிழ்நாட்டு மக்கள் இந்தி படிக்க இயலாத நிலை ஏற்பட்டு விட்டது. அப்படி இல்லையென்றால், இந்தி படித்து முன்னேறி இருப்பார்கள் என்று பொறுப்பு இல்லாமல் பேசி திரிகிறார்கள் - சிலர் எழுதவும் செய்கிறார்கள். வேலை வாய்ப்பும் கிடைத்திருக்கும் என்பது அவர்களின் கருத்தாகவும் இருக்கிறது.

உண்மை நிலை என்ன? இந்தியைத் தாய் மொழி யாகக் கொண்ட வட மாநிலத்தவர்கள்தான் இன்றைய தினம் தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் வேலை செய்து கொண்டுள்ளனர்.

எந்த மொழியைத் தெரிந்தவர்களாக இருந்தாலும் சரி, குறிப்பிட்ட நாட்டுக்குச் செல்லும் நிலையில் அந்நாட்டு மொழியை நாளடைவில் கற்றுக் கொண்டு தொழிலையும், வாழ்வையும் நடத்திக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக தமிழ்நாட்டில் வட்டிக் கடைகளையும் மற்றும் பல தொழில்களைச் செய்து வரும் மார்வாடிகளும் குஜராத்துக்காரர்களும் வரும் பொழுது தமிழைக் கற்றுக்கொண்டா வந்தார்கள்?

இங்கு வந்தார்கள் - மக்களிடம் புழங்கினார்கள் - பேச்சுத் தமிழ் தானாக வந்து சேரவில்லையா?

சமஸ்கிருதக் குடும்பத்தைச் சேர்ந்த இந்தியை - இந்தி பேசாத மாநிலங்களில் திணிப்பது  - ஒரு பண்பாட்டுத் திணிப்பு என்பதை மறக்க வேண்டாம்!

இதனை இன்றல்ல - நேற்றல்ல - 1926ஆம் ஆண்டி லேயே தமிழிற்குத் துரோகமும் இந்தியின் ரகசியமும் என்ற தலைப்பில் கட்டுரையை எழுதி னார் தொலைநோக்காளரான தந்தை பெரியார் (ஆதாரம்: குடிஅரசு 7.3.1926).

89 ஆண்டுகளுக்குப் பிறகு அதனை நினைத்துப் பார்க்கும்  நிலை ஏற்பட்டுள்ளது. தந்தை பெரியாரை வாசிப்போம் - சுவாசிப்போம்! அதன் மூலம் நம்மை எதிர் நோக்கி ஆணவமாகச் சிரிக்கும் சக்திகளைத் தூள் தூளாக்குவோம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:



Monday, January 26, 2015

கலைஞரைக் கேலி செய்வதை பார்ப்பனர்கள் நிறுத்த வேண்டும்

பார்ப்பனர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதுதான் சாஸ்திரம், அதுதான் சட்டம் - அதனை ஏற்க மறுத்தால் அவர்கள் ஏதாவது உள்நோக்கம் கற்பிப்பது, முத்திரை குத்துவது என்பதைத் தங்கள் பிழைப்பாகக் கொண்டு திரிகிறார்கள்.

தமிழ்நாட்டில் இருந்துகொண்டே, தமிழால் பிழைத்துக் கொண்டே தமிழர்களை இழிவுபடுத்துவதில் மூர்க்கக் குணம் கொண்டு திமிராக எழுத ஆரம்பித்துள்ளனர்.

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று இந்த ஆண்டும் திமுக தலைவர் கலைஞர் வலியுறுத்தி எழுதி விட்டாராம். துர்வாசர் என்ற பெயரில் துக்ளக்கில் உண்டு இல்லை என்று கலைஞர் அவர்களை எழுதித் தீர்க்கின்றனர் (துக்ளக் 28.1.2015 பக்.28).

யுகாந்திரமாக சித்திரை முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்தால் கலைஞருக்கு என்ன வந்தது? இவர் யார் இப்படி சொல்லுவதற்கு? இவரது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள மறைமலை அடிகளே சொல்லி விட்டார், சோமசுந்தர பாரதியாரே சொல்லி விட்டார் என்று அறிக்கை வெளியிடுகிறார். மறைமலை அடிகளும், சோமசுந்தர பாரதியாரும் தமிழர்களின் மகா சன்னி தானங்களா?  மடாதிபதிகளா? மகாசன்னிதானங்களும், மடாதிபதிகளும் சொன்னாலே மக்கள் காலம் காலமாகக் கடைப்பிடித்து வருகிற நம்பிக்கைகளை எளிதில் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இந்த லட்சணத்தில் திராவிட மகா சன்னிதானம் என்று தன்னைக் கருதிக் கொண்டிருக்கும் இந்தக் கருணாநிதி சொல்வதையா போயும் போயும் கேட்பார்கள்? என்று பொரிந்து தள்ளுகிறது துக்ளக்.

முதலில் கருணாநிதி என்ன சன்னிதானமா என்ற கேள்வியை எழுப்புகிறார் - சரி, கலைஞர் சொன்னால்தான் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் அறிஞர்களான, கற்றுத் துறைபோகிய பெரு மக்களாகிய தமிழ்க் கடல் மறைமலை அடிகளும், நாவலர் சோமசுந்தர பாரதியாரும் சொல்லுகிறார்கள்  என்றால் அவர்கள் என்ன மடாதிபதிகளா? சன்னிதானங்களா? என்று கேள்வி கேட்கிறார்.

தமிழ்ப் புத்தாண்டைப் பற்றிப் பேச தமிழறிஞர்களை விடத் தகுதியானவர்கள் இந்த அம்மாஞ்சிப் பார்ப் பனர்களா? தமிழர் பிரச்சினையில் கருத்துச் சொல்லு வதற்கு இந்தப் பார்ப்பனர்கள் யார் என்று திருப்பி நம்மால் கேட்கமுடியாதா?

மகா சந்நிதானங்களும்,  மடாதிபதிகளும் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா? மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் சொன்னால் ஏற்க வேண்டியதுதானே? ஏற்பார்களா? அடுத்து ஒரு முரண்பாட்டைக் கவனிக்கவும். இவர்கள் எல்லாம் மடாதிபதிகளா? சந்நிதானங்களா? என்று கேள்வி கேட்டு விட்டு, அடுத்த வினாடியே மகா சன்னிதானங்களும், மடாதிபதிகளும் சொன்னாலே மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று எழுதுகிறார். முதல் வரிக்கும் அடுத்த வரிக்கும் இடையிலேயே முரண்பாடு வழிந்து ஓடுகிறது. இந்த லட்சணத்தில் துக்ளக் பார்ப்பனர் துடை தட்டுகிறார்.
தமிழ் ஆண்டுகள் என்று சொல்லுகிறார்களே - அதில் ஒரே ஓர் ஆண்டுக்காவது தமிழில் பெயரில்லையே - ஏன்? இதற்கு என்ன பதில்? அறுபது ஆண்டுகள் சமஸ்கிருதத் தில் இருக்கின்றன என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் இந்தப் பார்ப்பனக் கூட்டம் அதையே பிடித்துக் கொண்டு தொங்குகின்றது என்பதை மறந்துவிடக் கூடாது.

உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழர்களின் பிரதிநிதிகள் மலேசியாவின் தலைநகரமான கோலாலம் பூரில் கூடி தை முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு என்று அறிவித்துவிட்ட பிறகு, பூஜை வேளையில் பெரியவாள் சங்கராச்சாரியார் நீஷப்பாஷையான தமிழில் பேச மாட்டார் என்று சொல்லுகிற கூட்டம் தமிழ்ப் புத்தாண் டைப்பற்றியா பேசுவது?

யுகாந்திரமாக வந்ததை எல்லாம் மாற்றலாமா என்று அதி புத்திசாலிபோல துக்ளக் கேள்வி கேட்கிறதே - யுகாந்திரம் என்றால் எந்த ஆண்டு அதற்கான தொடக்கம் என்று சொல்ல முடியுமா? சரி, அவர்கள் சொல்லுவதை விவாதத்துக்காக ஏற்றுக் கொள்கிற முறையில் ஒரு வினாவைக் எழுப்புகிறோம். அப்படி வந்த எதையும் மாற்றிக் கொள்ளவேயில்லையா?

நிர்வாணமாக அலைந்து திரிந்த மனிதன் பின் இலைகளால் உடையணிந்த மனிதன் படிப்படியாக மாறுதலுக்கு உட்படவில்லையா? மாறுதலின் அடையாளம் தானே புத்தி வளர்ச்சி என்பது - புத்தியைப் பயன்படுத் தினால் இதன் உண்மை விளங்கும், மாறுதலே கூடாது என்று ஒருவர் பேசுகிறார், எழுதுகிறார் என்றால் அவர் புத்தி இன்னும் வளரவேயில்லை; அந்த காட்டுவிலங்காண்டி காலத்திலேயே சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறார் என்று தானே பொருள்படும்?

தீண்டாமை க்ஷேமகரமானது என்று அவாளின் சீனியர் சங்கராச்சாரியார் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி சொல்லி இருக்கிறார்- அவர் சொன்னார் என்பதற்காக அதனை ஆதரித்து இதே துக்ளக்கில் எழுதட்டுமே பார்க்கலாம் - ஜாமினில் வெளியே வர முடியாத அளவுக்கு சிறைக்கும் போக வேண்டியிருக்குமே!

இந்து ராஜ்ஜியத்தை உருவாக்கப் போகிறோம், ராம ராஜ்ஜியத்தை உருவாக்கப் போகிறோம் என்று நரேந்திர மோடியும், பிரவீன் தொகாடியாவும், அசோக் சிங்காலும் உளறிக் கொட்டுகிறார்களே - இவர்கள் யார்? குருக்களா சன்னிதானங்களா? மடாதிபதிகளா? இவற்றையெல்லாம் சொல்லுவதற்கு என்று திருப்பிக் கேட்க முடியாதா?

புராணத்தில் எழுதப்பட்டு இருக்கிறது என்பதற்காக இரண்யாட்சதன் பூமியைப் பாயாக சுருட்டிக் கடலில் விழுந்தான் என்பதை நம்ப வேண்டும் என்றுகூடச் சொல்லுவார்களோ!

பார்ப்பனர்கள் படித்தவர்களே தவிர அறிவாளிகள் அல்லர் என்று அண்ணல் அம்பேத்கர் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.
 
தொண்ணூறையும் தாண்டிய திராவிட இயக்கத் தலைவர் மானமிகு கலைஞர் அவர்களை பார்ப்பனர் மனம் போனவாறு தரம் தாழ்ந்து எழுதுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இவர்களின் ஜெகத் குருக்களின் வண்டவாளங்களை தெருமுனைக் கூட்டங்கள் மூலம் நார்நாராய்க் கிழிக்கத் தயங்க மாட்டோம் - எச்சரிக்கை!

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:



விருதுகள் பார்ப்பனரின் ஏகபோகமா?

https://www.facebook.com/viduthalaidaily/photos/a.108670655853554.22641.101804026540217/809193122467967/?type=1&theater

ஜனவரி 26  - இந்தியக் குடிஅரசு நாளை யொட்டி, இந்திய மத்திய அரசு அறிவித்துள்ள விருதுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறுவர் பத்மபூஷன், பத்மஸ்ரீ முதலிய விருதுகளுக் குரியவர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள்

1) என்.கோபால்சாமி (அய்யங்கார்) ஓய்வு
2) சுதா இரகுநாதன்
3)    எம்.ஆர். சீனுவாசன்
4)    பி.வி. இராஜராமன் (அய்.ஏ.எஸ்.) ஓய்வு

அறிவிக்கப்பட்டிருப்பவர்கள் தேடித் தேடிப் பார்த்தாலும் தமிழ்நாட்டிலிருந்து பெரிதும் பூணூல் திருமேனிகளே தகுதி பெற்றவர்களாக உள்ளார்கள்;

தடவித் தடவிப் பார்த்தால் ஒன்று வெறும் முதுகு கிடைக்குமோ என்ன?

யாருக்கு வந்த சுதந்திரம் இது?
புரிகிறதா?

பெண்களின் கண்ணியத்தை காக்க வேண்டும்

பெண்களின் கண்ணியத்தை காக்க வேண்டும்
மதத்தின் பெயரால் வன்முறைகள் வேண்டாம்

குடியரசுத் தலைவர் உரை



புதுடில்லி, ஜன.26: நாட்டின் 66வது குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று ஆற்றிய உரை:

பாலியல் வன்முறை, கொலைகள், சாலைகளில் நடக்கும் துன்புறுத்தல்கள், குழந்தைகள் கடத்தல், வரதட்சணை கொடுமை யால் நிகழும் மரணங்கள் ஆகியவற்றால், தங்களது சொந்த நாட்டிலேயே பெண்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். எந்த விதத்தில் வன்முறை நடந் தாலும், பெண்களின் கண்ணியத்தை காக்க வேண்டும் என ஒவ்வொரு இந்தியரும் உறுதியேற்க வேண்டும். பெண்களுக்கு மரியாதை அளிப்பது, அவர்களை வலிமைப்படுத் துவது ஆகியவற்றின் மூலமே, ஒரு நாடு உலக அளவில் சக்தி மிக்கதாக மாறும்.

நாம் ஏராளமான சட் டங்களை இயற்றுகிறோம். இருப்பினும், பாதிக்கப் படாதவர்களும் குரல் எழுப்பாதவரை நீதி கிடைக்காது என்கிற பெஞ்சமின் பிராங்ளினின் கருத்தை இங்கு குறிப்பிடு கிறேன். மதத்தால் வன்முறை வேண்டாம்:

மதம் என்பது மக்களை ஒன்றுபடுத்தும் சக்தி என்றார்  காந்தியார். வன்முறை நடப்பதற்கு மதம் ஒரு காரணமாக அமைந்து விடக்கூடாது. நம்முடைய அரசியல மைப்பு சட்டம் என்பது ஜனநாயகத்தின் புனித நூல். அது, வேற்றுமையில் ஒற்றுமை என்பதை கொண்டாடும் இந்தியா வின், சமூக பொருளாதார மாற்றத்துக்கான துருவ நட்சத்திரம். அது பொறு மையை வலியுறுத்துகிறது. வேறுபாடு கொண்ட சமூகங்களுக்கு இடையே, நமது அரசியலமைப்பு சட்டம் நல்லெண் ணத்தை தூண்டுகிறது. இந்த மதிப்பு மாண்புகள் காப்பாற்றப்பட வேண்டும்.

வளர்ச்சியை தடுக்க முடியாது:
 
இந்தியாவுடைய வளர்ச்சியை அதனுடைய எதிரிநாடுகள் ஒருபோதும் தடுத்துவிட முடியாது. தீவிரவாதமும், வன்முறை யும் நம்முடைய எல்லை யில் நிலவி வருகிறது. அமைதி, அகிம்சை, அண்டை நாடுகளுடன் நட்புறவு ஆகியவை நம்முடைய வெளியுறவுக் கொள் கையின் அடிப்படையாக உள்ளன. எல்லையில் மீண்டும் மீண்டும் நடக்கும் அத்து மீறல்கள், தீவிரவாத தாக் குதல்கள் ஆகியவற்றுக்கு வலிமையான ராஜதந்திரத் தின் மூலமாகவும், அசைக்க முடியாத ராணுவ வலி மையாலும் நமதுநாடு தக்க பதிலடி கொடுக்கிறது. தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா தொடுத்துவரும் போரில், உலக நாடுகளும் இணைந்து கொள்ள வேண்டும். நாட்டு மக் களுக்கு எதிரான எந்த வொரு அச்சுறுத்தலையும் எதிர்கொண்டு, அதனை முறியடிக்கக்கூடிய வலிமை, நம்பிக்கை, மன உறுதி ஆகியவை நமது நாட்டுக்கு உண்டு.

30 ஆண்டுகாலத்துக்கு பிறகு, தனிக்கட்சி ஒன் றுக்கு மக்கள் பெரும் பான்மை அளித்துள்ளார் கள். அவர்களது நம்பிக் கையை, அரசு காப்பாற்ற வேண்டும். தூய்மையான, ஆற்றல் மிக்க, வெளிப் படையான, நட்புறவு மிக்க அரசு அமைவதற்காக நாட்டு மக்கள் வாக் களித்துள்ளனர். மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சட்டங் களை இயற்றவது நாடா ளுமன்றத்தின் கடமை. விவாதமின்றி சட்டங் களை இயற்றுவது என்பது, சட்டம் இயற்றும் விஷயத்தில் நாடாளு மன்றத்துடைய பங்க ளிப்பை பாதிக்கும். அரசு மீது மக்கள் நம்பிக்கை இழப்பதற்கு, அவசர சட்டங்கள் வழி வகுக்கும். இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

பெரியார் பூமியில் மதவெறி அச்சுறுத்தலை தடுக்கவே திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகளை நடத்துகிறோம்

பெரியார் பூமியில் மதவெறி அச்சுறுத்தலை தடுக்கவே
திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகளை நடத்துகிறோம்

தமிழர் தலைவர் பேட்டி


தமிழர் தலைவர் பேட்டி

காஞ்சிபுரம், ஜன.25- தந்தை பெரியார் பூமியில் ஜாதி வெறி - மதவெறி என்கிற அச்சுறுத்தலை உருவாக்கலாம் என நினைப்பவர்களின் செயலைத் தடுக்கவே திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகளை நடத்தி வருகிறோம் என தமிழர் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் நேற்று (24.1.2015 மாலை நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் பங்கேற்க சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழக முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பில் 2000 திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகள் நடத்தப்படுவது குறித்து கூறியதாவது:

பெரியார் பூமியில் ஜாதி வெறி, மத வெறி என்கிற அச்சுறுத்தலை உருவாக் கலாம் என்று நினைக்கின்ற காலக் கட்டத்திலே கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னாலேயே திராவிடர்கழகம் இதை மக்களுக்கு எச்சரித்தது. வளர்ச்சி என்ற பெயராலும், இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் என்கிற மாயையைக் காட்டியும், ஏற்கெ னவே இருந்த ஆட்சியின்மீதிருந்த அதிருப்திகளையும் பயன்படுத்தி மோடி ஆட்சிக்கு வந்தார். மதவெறிகளை வெளிப்படையாக செய்கிறார்கள்

இப்போது வெளிப்படையாகவே கோட்சேவுக்கு சிலை வைக்கக்கூடிய அளவுக்கு, அறிவிக்கக்கூடிய அளவுக்கு மதவெறிகளை வெளிப்படையாக செய் கிறார்கள். 10 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும், எங்களுக்கு ஓட்டுப்போடாதவர்கள் எல்லாம் யாருக்கோ பிறந்தவர்கள் என்று அவதூறுகளைப் பேசி வருகிறார்கள். அதுமட்டுமல்ல அமைச்சர்களாக இருப்பவர்களே கண்டிக்கப்படக்கூடிய அளவிலே இருக்கிறார்கள். என்றாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், நாடாளுமன்றத்திலேகூட சரிவர சட்டங்கள் இயற்றாத அளவுக்கு, இன்றைக்கு வேலை வாய்ப்புகள் பறிபோய் இருக்கின்றன.

வேலை வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் இல்லை

ஏற்கெனவே இருந்த வேலை வாய்ப்புகள் இப்போது இளைஞர்களுக்கு கணினித்துறையில் இல்லை. இந்த ஊருக்கு அருகிலேயே இருக்கக்கூடிய இரண்டு மிகப் பெரிய தொழிற்சாலைகள் ஃபாக்ஸ்கான், நோக்கியா போன்றவையெல்லாம் மூடப்பட்டிருக்கின்றன. ஆலங் குளம் அரசு சிமெண்ட் தொழிற்சாலையும் மூடப்பட் டுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகளிலே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், ஏற்கெனவே இருந்த வேலைவாய்ப்புகளுக்கு உத்தரவாதம் இருக்கிறதா என்றால் கிடையாது. இவையெல்லாம் ஏன் செய்யவில்லை என்று மக்கள் நினைப்பார்கள் அல்லது கேட்பார்கள் என்று திசைதிருப்புவதற்காக முழுக்க முழுக்க பல்வேறு பிரச் சினைகளை, கோட்சே பிரச்சினைகள் ஆகியவைகளை அவர்கள் சுலபமாக சொல்லுகிறார்கள்.  எனவே, மதவெறியை மாய்த்து, மனித நேயத்தை உருவாக்குவோம் என்று தெளிவான நிலையை உருவாக்க, திராவிடர் இயக்கம் அதனுடைய கொள்கைகள்தான் ஒரே விடியல் என்பதை விளக்குவதற்காக திராவிடர் விழிப்புணர்வு மாநாடு தமிழ்நாடு முழுக்க 2000 மாநாடுகளை திராவிடர் கழகம்  ஒத்த கருத்துள்ள நண்பர்களை எல்லாம் அழைத்து வெகு சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறது. இதுவரையிலே தென்கோடியிலிருந்து 20, 25 மாநாடுகளை நாங்கள் நடத்திக்கொண்டிருக்கிறோம். இன்றைக்கு காஞ்சிபுரத்தில் மாநாடு நடைபெறுகிறது. ஆகவே, இந்தப்பணி தொடரும்.

அடுத்த தேர்தலைப்பற்றிக் கவலைப்படு வதைவிட, தலைமுறையைப்பற்றிக் கவலைப்படுவதுதான் திராவிடர் இயக்கத் தினுடைய குறிக்கோள். பதவிக்காக திராவிட இயக்கங்கள் இல்லை. மாறாக, உண்மையான திராவிடர் இயக்கம் தமி ழர்கள் மானத்தோடு, அறிவோடு, உரிமை யோடு வாழ வேண்டும். பகுத்தறிவோடும் வாழவேண்டும். மதவெறி மாய்த்து மனித நேயத்தைக் காக்க வேண்டும் என்பதுதான்.

சிறீரங்கத்தில் பொது வேட்பாளர்

செய்தியாளர் கேள்வி: சிறீரங்கத்தில் அமைச்சர்கள் அனைவருமே முகாமிட்டுள் ளனர். சட்டசபை வெறிச்சோடி எல்லோ ருமே அங்கேதான் இருக்கிறார்களே?

தமிழர் தலைவர் பதில்: தெரிந்த விஷயம்தானே. எல்லாருமே அங்கு இருந்தாலும், வாக்களிக்க வேண்டியவர்கள் மக்கள்தானே. அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. அதனாலே, மக்களுக்குத்  தெளி வாக தெரியக்கூடிய உணர்வுகள் அங்கே இருக்கிறது. ஏன் அந்தத் தேர்தல் வந்தது  என்ற கேள்வி கேட்டாலே அதற் குப் பதிலிலேயே மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண் டுமோ அதைச் செய்வார்கள்.  அதுமட்டுமல்ல, இதற்கு இடையிலே எதிர்க்கட்சிகள் என்பவர்கள் கலைஞர் அவர்கள் கேட்டுக்கொண்டபடி ஒரு பொது வேட்பாளரை அவர்கள் நிறுத்தி இருந்தால், யார் உண்மையான எதிரி என்று அவர்களை வீழ்த்துவதற்கு வாய்ப்பு ஏற்படும். அதற்கு வாய்ப்பு இல்லாமல், மற்றவர்களை பிரித்தாளக்கூடிய அளவுக்கு, அதன்மூலமாக ஆட்சி அதிகாரம், பலவீனங் களைப் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால், பாஜக திராவிடர் இயக்கங்களையே வீழ்த்திவிடுவோம் என்று சொல்லி வந்திருக்கிற இயக் கத்தைப் பொறுத்தவரையிலே, ஏற்கெனவே,  பாராளு மன்றத் தேர்தலில் யார்யார் அவர்களோடு இருந்தார்களோ, அவர்கள் எல்லாம் காணாமற் போய் விட்டார்கள். அவர் களுடைய எண்ணிக்கை குறைந்திருக்கிறது. காணாமல் போய் இருக்கிறார்கள். இந்த நிலையில் நாங்கள் பலத்த கூட்டணி என்று சொல்கிறார்கள். கேள்வி: மதவெறி சக்தி என்று சொல்லியும் அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள், அவர்களுக்கு இந்த இடைத் தேர்தல் மூலம் பாடம் புகட்டுவதற்கு இந்த இடைத் தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளாமல் விட்டது யாருடைய தவறு?

பதில்: மக்களுடையது. ஜனநாயகத்திலே மக்கள் தெளிவாக இருந்திருந்தால், நீங்கள் ஏற்கெனவே சொன்னதுபோல எச்சரித்தோம். அதையும் தாண்டி ஏமாந்தார்கள். ஒரு தடவை ஏமாறலாம். மறுபடியும் திரும்பத்திரும்ப ஏமாந்துகொண்டிருக்கலாமா? தவத்திரு குன்றக்குடி அடிகளார்தான் சொல்வார், விழுவது தப்பில்லை, நேற்று விழுந்த இடத்திலேயே இன்றைக்கும் விழுவது இருக்கிறதே அதைவிட வேறு என்ன கொடுமை? அதேமாதிரி தமிழர்களுடைய நிலை இருக்கிறது. அதை எடுத்துச்சொல்லி, விழிப்புணர்வு ஊட்டுவதற்குத்தான் நாங்கள் அந்தப்பணியைச் செய்து வருகிறோம்.

கேள்வி: பொது வேட்பாளர் நிறுத்துவதில் தவறு எங்கு நேர்ந்தது?

பதில்: தவறியதற்கு பல காரணங்கள் உண்டு. அதிலே குறிப்பாக என்னவென்றால், எல்லோருமே தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, உண்மை நிலையையோ, அல்லது பொதுக்கருத்தையோ முன்னிலைப்படுத்த வேண்டும் என்கிற பொது எண்ணங்கள் இன்னும் தமிழ்நாட்டில் வரவில்லை. தீப்பிடித்து எரிகின்ற நேரத்தில் அணைப்பவர்கள் எல்லோரும் சேர்ந்து அணைக்க வேண்டுமே தவிர, எனக்கு முன்னால் வாய்ப்பு இருக்கிறதா? உனக்கு முன்னால் வாய்ப்பு இருக்கிறதா? என்று நினைத்தால், தீ முழுமையாக வெற்றி பெற்றுவிடும். அணைப்பவர்கள் தங்களை முன்னிலைப் படுத்துவதாலேயே பின்னாலே அவர்கள் பழியை ஏற்கவேண்டி வரும்.

கேள்வி: 2016ஆம் ஆண்டிலே இந்த நிலை மாறும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: நிச்சயமாக மாறும். ஏனென்றால், அரசியல் என்பதே, நாளை காலை என்ன செய்தி என்பது தெரி யாமல் இருப்பதுதான் அரசியல். நேற்று இருந்த செய்தி வேறு, இன்று இருக்கிற செய்தி வேறு. ஆக்ராவுக்கு போகிறார்ஒபாமா என்று சொன்னார்கள். இன்றைக்கு ஆக்ராவுக்கு போகவில்லை என்று சொல்கிறார்கள். உடனே செய்தி மாறுகிறது. அதே போல்தான் எத் தனையோ செய்திகள் மாறும். கால நிலையே இவ்வளவு வேகமாக மாறும்போது, அரசியலில் மாறுவதற்கு என்ன? தாராளமாக மாறும். அவ்வளவுதான்

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அறுசுவையும் அதன் மருத்துவ குணங்களும்


துவர்ப்பு - ரத்தப்போக்கை குறைத்து, ரத்தத்தை பெருக்குகின்றது. வயிற்றுப் போக்கை சரிசெய்ய வல்லது. வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

இனிப்பு - தசையை வளர்க்கின்றது. மனதிற்கு மட்டும் அல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தை தரக்கூடியது. இனிப்பு அதிகமாக பயன்படுத்தினால் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல்எடைக்கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்புள்ளது. இயற்கையாக கிடைக்கக்கூடிய உருளை,கேரட், அரிசி, கோதுமை,கரும்பு போன்றவை தண்டு வகைகள் அதிகமாக உள்ளது.

புளிப்பு - கொழுப்பினை வழங்குகிறது. பசியுணர்வை தூண்டும், உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கிறது. இது அதிகமாயின் தாக உணர்வுகளை அதிகரிக்கும்.

கார்ப்பு - எலும்பினை வளர்க்கின்றது. இந்த சுவை நுனி நாக்கில் எரிச்சலை உண்டாக்கும். கண், வாய் போன்ற வற்றில் நீர் வரச்செய்யும். அதிகமானால் வயிறு மற்றும் குடல் பகுதிகளில் புண்களை உண்டாக்கும்.

உவர்ப்பு - உமிழ் நீரை சுரக்கச் செய்கிறது, அன்றாடம் பயன்படுத்தும் உப்பை பயன்படுத்தினாலே போதுமானது. அதோடு வாழைக்காய், மாவடு, அத்திக்காய், அதிகமா னால் வாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, அனை வரும் அன்றாட உணவுகளில் அறுசுவைகளை அளவாக எடுத்துக்கொண்டால், ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.

ஆரோக்கியத்திற்கு எளிமையான முக்கிய குறிப்புகள்:- மருந்து, மாத்திரைகளை குளிர்ந்த நீரில் சாப்பிடக் கூடாது. மாலை 5 மணிக்கு மேல் கடுமையான உணவுகளை தவிர்ப்பது நன்மை. காலை வேளையில் அதிகப்படியான நீரும், இரவு வேளையில் குறைந்த அளவு நீரும் பருக வேண்டும்.

இரவு 10 மணி முதல் அதி காலை 4 மணி வரை ஆழ்ந்து உறங்க வேண்டும். சாப்பிட்ட உடன் படுக்கக்கூடாது. மொபைல் போனில் பேட்டரி குறைவாக இருக்கும் போது பேசக்கூடாது. ஏனெனில் அதிலிருந்து வெளிப்படும் ரேடியே சன் 1000 மடங்கு அதிகமாக இருக்கும். அதேபோல் இடது பக்ககாதில் போன் பேசுவதே நன்மை.

பற்களை வெண்மையாக வைத்துக் கொள்ள வாழைப் பழத்தை எடுத்து பற்களின் மீது 2 நிமிடம் மசாஜ் செய்தால் போதும், அதில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் பற்களை பளபளக்க செய்யும்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Saturday, January 24, 2015

உயிருக்கு குறி வைக்கும் இரசாயன ஆலைகள்

ஆலைகள் அவசியம் தான்; அவற்றின்மூலம் உற்பத்திகள் பெருகுகின்றன,  பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது, வேலை வாய்ப்பும் விரிவடைகிறது. அதே நேரத்தில்  அவை சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதற்கு இடம் தரக் கூடாது அல்லவா?

விதி முறைகள் ஏராளம்இருந்தும், அவை கடைப் பிடிக்கப்படுவதில்லை என்பதுதான் வேதனையான செய்தியாகும்.

ஆலை முதலாளிகளின் கவனிப்பில் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாற்று இன்னொரு பக்கத்தில்; எது எப்படி இருந்தாலும் இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பொது மக்கள்தான்.

இந்த ஆலைக் கழிவுகள் பெரும்பாலும் நதிகளில் கலந்து விடுகின்றன; இதனால் பாதிக்கப்படுவது சுற்றுச் சூழலும், பொது மக்களும் கால் நடைகளும் தான்.

நீதிமன்றங்கள் பற்பல நேரங்களில் கடுமையான தீர்ப்புகள், ஆணைகள் வழங்கிக் கொண்டு தானிருக் கின்றன! ஆனால் அவற்றையும் கண்டு கொள்வ தில்லை; சட்ட ஆட்சி எந்தத் தரத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறது என்பதற்கு இவை எல்லாம் கண்ணிறைந்த சாட்சியங்களாகும்.

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் அருகே தாரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ் (DCW)என்ற அமில ஆலை ஒன்று செயல்பட்டு வருகின்றது.

இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் காஸ்டிக் சோடா, பி.வி.சி., சி.பி.வி.சி. போன்றவை; இவற்றின் மூலப் பொருள் பாதரசம் ஆகும்.

எந்த விதிமுறைகளையும், கட்டுத் திட்டங்களையும் பற்றிக் கவலைப்படாமல் இந்த ஆலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டும் வருகிறது.

இந்த ஆலைகளில் தேக்கி வைக்கப்படும் டிரை குளோரோ எதிலின், அயன் ஆக்சைடு, காட்மியம் போன்ற ஆபத்தான செந்நிறம் கொண்ட ரசாயன கழிவுகள் ஆலைக்கு அருகில் உள்ள காயல்பட்டணம் கடலில் கலக்க விடப்படுகின்றன.

இதன் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள், குறிப்பாக மீன் வளம் மிகக் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகி வருகிறது.

காயல் பட்டணம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் கொடிய நோய்களுக்கும் ஆளாகின்றனர். சுவாசக் கோளாறுகள், புற்று நோய் போன்ற நோய்களின் தாக்குதலுக்கு இரையாகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு மனு கொடுத்து, மனு கொடுத்து ஓய்ந்தும் போய் விட்டனர். பல்வேறு அமைப்புகள் முற்றுகைப் போராட்டங் களைக்கூட நடத்திப் பார்த்து விட்டனர். கடையடைப் புகள் எல்லாம் நடந்தும் இருக்கின்றன - அரசோ அசையவில்லை.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இந்த ஆலைக்குத் தேவையான தண்ணீரைத் தாமிரபரணியிலிருந்து பெற்றுக் கொள்ள தமிழ்நாடு அரசிடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 3 லட்சம் கேலன் தண்ணீர் பயன்படுத் தப்படுகிறது. அதற்கான கெடு முடிந்தும்கூட தாமிரபரணி தண்ணீரை அந்த ஆலை சட்ட விரோத மாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாம்.

நாட்டின் போக்கு எப்படி இருக்கிறது?

 மக்களின் உயிர் என்பதுதான் இந்த நாட்டில் மிகவும் மலிவான பொருள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும்!

எடுத்துக்காட்டுக்கு இதனைக் குறிப்பிடுகிறோம். பெரும்பாலான ஆலைகளில் கழிவுகள் நீரில் கலக்கப் படுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

கடுமையானசட்ட திட்டங்களும், செயல்பாடுகளும் கண்காணிப்புகளும் மிக மிக தேவை என்று வலியுறுத்துகிறோம்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...