Tuesday, August 6, 2013

திதி

இன்று ஆடி அமாவாசை யாம். இந்த நாளில் மறைந்த பெற்றோர்களுக்குத் திதி கொடுக்க வேண்டுமாம். இறந்தவர்களின் திதியைக் குறித்து வைத்துக் கொண்டு ஆண்டுதோறும் அந்நாளில் திதி கொடுக்க வேண்டும்; திதியை, தேதியை மறந்த வர்கள் ஆடி, தை அமா வாசையன்று நதிகள், கடற்க ரையோரங்களில் புரோகிதர் மூலம் திதி கொடுக்க வேண்டுமாம்.
அடுத்த ஜென்மத்தில் மோட்சம் பெற விரும்புவோர் முன்னோர்களுக்காக இந்நாளில் இந்தச் சடங்கை செய்ய வேண்டுமாம்! அப்படிச் செய்யத் தவறினால் அவனது மனைவியின் கருப்பையில் கர்ப்பம் தரிக்காது; அப்படியே தரித்தாலும், அது பத்து மாதம் நிறைவதற்கு முன்பே கலைந்துவிடும். எனவே ஆடி அமாவாசையன்று புரோகித ருக்குத் தேங்காய், பழம், அரிசி, காய்கறிகள் வேட்டி, துண்டு போன்றவற்றை வழங்க வேண்டுமாம்!
புரோகிதச் சுரண்டல் என்றால் என்ன வென்று இதுவரை அறிந்திராதவர்கள் இதன்மூலம் அதன் கனபரி மாணத்தை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மக்களை அச்சுறுத்தி அவர்களின் பொருள்களைப் பறிக்கும் பகற்கொள்ளை தானே இது?
செத்தபின் புதைத்தோ எரித்தோ முடித்துவிட்ட பிறகு செத்தவர்கள் எங்கு  இருக்கிறார்கள்?
இந்தப் புரோகிதப் பார்ப் பானுக்கு நம் உழைப்பால் கிடைத்த பொருள்களை ஏன் தானம் கொடுக்க வேண் டும்? கடுகளவு சிந்தித்த துண்டா?
ரத்தக் கண்ணீர் நாடகத் தில் ஒரு காட்சி! நடிகவேள் எம்.ஆர். ராதாவின் அப்பாவுக்கு திவசம் செய்வதற்குப் புரோ கித பார்ப்பான் வருவான். அப்பொழுது நடிகவேள் கேட்பார். அய்யர்வாள் உங்களுக்குக் கொடுக்கும் இந்தப் பொருள்கள் எங்க அப்பாவுக்குப் போய்ச் சேருமா? என்று கேட்பார் - பேஷா சேரும் என்பான் அந்தப் புரோகிதன்;  ஓ புரோகிதன் வயிறு பரலோ கத்துக்குத் தபால் பெட் டியோ? என்று அவருக்கே உரித்தான அந்த நையாண்டி குரலில் ஏற்றி இறக்கிக் கேட்பார். கொட்டகையே அதிரும் அளவுக்குக் கரஒலி எழும்!.
உண்மையில் திதியின் போது புரோகிதன் என்ன மந்திரம் சொல்லுகிறான்?
மந்திரம்: யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா, த்னமே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா. ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம. கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண.
பொருள்: எனது தாய் பதிவிரதா தர்மங்களை முழுதுமாக அனுஷ்டிக்காமல், அதன் காரணமாக நான் பிறந்திருந்தால், இந்த அக்னியில் நானிடும் ஹவி ஸூக்கு உரிமை கோரி எனது சொந்த தகப்பனார் வருவார். அப்படி அவர் இந்த ஹவி ஸைப் பெறாமல் தடுத்து, நான் எந்தத் தகப்பனாருக்கு இந்தச் சிரார்த்தத்தைச் செய்கிறேனோ அவர் அதா வது எனது தாயின் கணவர் இந்த ஹவிசைப் பெற வேண்டும்.
ஆதாரம்: சுவாமி சிவா னந்த சரசுவதியின் ஞான சூரியன்
தன் தாயைச் சந்தே கித்து, விபச்சாரி என்று கூறி பார்ப்பான் சொல்லும் மந்திரம் தான் திதி.
ஒழுக்கக் கேடும், விபச்சாரமும் தானே பார்ப் பனீயம்!
- மயிலாடன்

எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாதா?

  • எய்ம்ஸ்  போன்ற நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாதா?
  • டி.பி. யாதவ், முலாயம்சிங் போன்றோர் எதிர்க்குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது!
ஒத்த கருத்துக்கள் கொண்டவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து
டில்லியில் திராவிடர் கழகம் முன்னின்று போராட்டம் நடத்தும்!
தோழர்களே தயாராவீர்! தயாராவீர்!!

தமிழர் தலைவர் அறிவிப்பு
8ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை  எழுச்சியுடன் நடத்திட அணி திரண்டு வாரீர்! வாரீர்!!

டில்லியில் உள்ள எய்ம்ஸ் போன்ற உயர் கல்வி மருத்துவ நிறுவனங்களில் இடஒதுக்கீடு கூடாது என்று உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை எதிர்த்து டில்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித் துள்ளார்; அறிக்கை வருமாறு:
மத்திய அரசின் சார்பாக, டில்லியில் நடைபெறும் மிகப் பெரிய மருத்துவக் கல்வி அமைப்பு (எய்ம்ஸ்) என்ற அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆய்வுக் கழகம் ஆகும்.
அதில் உள்ள உயர்ஜாதி வர்க்க நிர்வாகத்தின் தலைவர்கள், அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையான இடஒதுக்கீடு, சமூக நீதியைப் புறக்கணித்து, இடஒதுக்கீட்டை  நடைமுறைப் படுத்தாமல் உள்ளனர். இதன் காரணமாக நீண்ட காலமாகவே சமூகநீதிப் போராளிகள் போராட் டங்களை நடத்தி வருகின்றனர்!
உச்சநீதிமன்றத்தில் உயர்ஜாதி வர்க்கம்!
உச்சநீதிமன்றத்தில் உள்ள உயர்ஜாதி வர்க்கம் பல நேரங்களில் இந்த சமூக நீதியை அது அரசியல் சட்டத்தின் மாற்றப்பட முடியாத, மறுக்கப்பட முடியாத அடிக்கட்டுமானப் பகுதி (Basic Structure of the Constitution) என்ற போதிலும்,  வேலியே பயிரை மேய்ந்த கதை போல,
உச்சநீதிமன்றத்தில் அரசியல் சட்ட அமர்வு, (5 நீதிபதிகளைக் கொண்டது) எய்ம்ஸ் (AIIMS) போன்ற அமைப்புகளில் இடஒதுக்கீடு தேவை யில்லை என்று தீர்ப்பு  அளித்திருப்பது - கோடானுகோடி ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் சமூக அநீதியாகும்.
இந்திய அரசியல் சட்டத்தின் விதிகளை - அதுவும் பறிக்கப்படாத உரிமைச் சாசனப் பகுதியான சமூகநீதியாம் இடஒதுக் கீட்டினை - இப்படி மறுத்து உச்சநீதி மன்றம் தீர்ப்பளிப்பது  - அரசியல் சட்ட விரோதப் போக்கு மட்டுமல்ல;
அரசியல் சட்ட விதிகளையே செயல்படாமல் செய்யும் (Fraud on the Constitution) செயலாகும் இது!
ஒன்பது நீதிபதிகளின் தீர்ப்பு
மண்டல் கமிஷன் வழக்கு - இந்திரா சகானி வழக்கினை - அரசியல் சட்டத்தில் இடஒதுக்கீடு பற்றிய எல்லா அம்சங்களையும் ஆராய்ந்து தீர்ப்பு அளிக்கும் வகையில் ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட முழு பெஞ்ச் விசாரித்தது. இடஒதுக்கீடு செல்லும் - செயல்படுத்தப்படல் வேண்டும் என்று தீர்ப்பும் கூறியுள்ளது;  இந்நிலையில் மீண்டும் மீண்டும் தனித்தனியே இப்படி வழக்குகளைப் போட்டு, அவைமீது தீர்ப்பு வழங்கி, கட்டடத்தின்  மூலக் கல்லை - கட்டடத்தையே இடிக்க முனைவதற்குப் பதிலாக கற்களை மெதுவாகப் பிடுங்கி - உடைத்துக் கொண்டே இருப்பது - என்பது சமூகநீதிக்கெதிரான ஒரு சதியாக நடைபெற்று வருகிறது.
80 விழுக்காடு மக்களுக்கு விரோதமான மக்கள் விரோதப் போக்குத்தான் இது என்பதை நாம் சுட்டிக் காட்ட விழைகிறோம்.
நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சி ஒடுக்கப்பட்ட, உரிமை பறிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்து, இது போன்ற பிற்போக்கான சமூகநீதிக்கு எதிரான தீர்ப்புகளின் விளைவுகளிலிருந்து பாதுகாக்க முன் வர வேண்டிய தருணம் இது!
வரவேற்கத்தக்க நாடாளுமன்றத்தில் சமூகநீதிக் குரல்!
நேற்று நாடாளுமன்றத்தில் ஜீரோஅவர் (Zero hour) என்ற கேள்வி நேரத்தின்போது இதை வலியுறுத்திய அய்க்கிய ஜனதா தளத் தலைவர் சரத்யாதவ் சிறப்பாகச் சுட்டிக் காட்டியுள்ளார்!
எய்ம்ஸ் அமைப்பு பற்றிய இத்தீர்ப்பு இதற்கு மட்டுமல்லாது இதுபோன்ற பிற உயர் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப் படுகிறது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதுபோலவே சமாஜ் வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் (யாதவ்) அவர்களும், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பி.எல். பூனியா எம்.பி., அவர்களும், பகுஜன்சமாஜ் கட்சியைச் சார்ந்த தாராசிங் சவுகான் எம்.பி. அவர்களும், இடஒதுக்கீட்டுக்கு எதிரான இத்தீர்ப்பைக் கண்டித்து, இதற்கு நாடாளுமன்றமும், மத்திய அரசும் விடிவு, தீர்வு - காண வேண்டியது அவசர அவசியம் என்பதை வலியுறுத்தி உள்ளனர்!
இது கட்சி அரசியல் பிரச்சினை அல்ல; சமூகநீதியைக் காப்பாற்ற வேண்டிய மிக இன்றியமையாத வாழ்வுரிமை, (கல்வி உரிமை - உத்தியோக உரிமைப் பிரச்சினைகளை உள்ள டக்கியது) பிரச்சினை ஆகும்!
திராவிடர் கழகம் முன்னின்று டில்லியில் போராட்டம்!
உடனடியாக இத்தீர்ப்பின் தீய விளைவான - இடஒதுக்கீடு மறுதலிப்பினை எதிர்த்து அனைவரும் சேர்ந்து, ஓரணியில் நின்று போராட உடனடியாக முன் வர வேண்டும்.
தி.மு.க., அ.தி.மு.க., போன்ற அமைப்பு களும் இதில் உடனடியாகக் குரல் கொடுக்க முன் வர வேண்டும்.
இதை வலியுறுத்தி நாடாளுமன்றம் நடைபெறும் நாள்களுக்குள்ளேயே ஒரு நாள் விரைவில் டில்லியில் திராவிடர் கழகம் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு ஆகிய அமைப்புகளும், ஒத்த கருத்துடன் நம்முடன் போராட முன்வரும் சமூகநீதிக் கட்சிகள், அமைப்புகளையும் இணைத்து மாபெரும் போராட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம்.
டில்லி சமூக நீதிப் போராட்டத்தில் திராவிடர் கழகம் - (அநேகமாக நானே சென்று) கலந்து கொள்ளுவோம்!
இன்னும் ஒரு சில நாள்களில் - கால தாமதம் செய்யாமல் நடத்திட சமூகநீதியைப் பாதுகாக்கும் மாபெரும் பணி செய்ய பருவம் பாராது புறப்படத் தயாராகி விட்டோம்!
தோழர்களே தயாராவீர்!
வாய்ப்புள்ள அத்துணைத் தோழர்களும், அமைப்புகளும் டில்லி நோக்கி வரத் தயாரா குங்கள்!
காலதாமதம் கூடாது; ஆறிய கஞ்சி பிறகு பழங் கஞ்சியாகிவிடும்,
எனவே ஆயத்தமாவோம்! தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
கி.வீரமணிதலைவர், திராவிடர் கழகம்
சென்னை   
6.8.2013


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

சிவ- அய்யாதுரை பேசுகிறார்

தமிழர்கள் பெருமைப்படக் கூடிய தமிழர் - இராஜபாளையத்தைச் சேர்ந்த சிவ. அய்யா துரை. தொலைத் தொடர்புத்துறையில் மின் அஞ்சலைக் கண்டுபிடித்து அறிவியல் உலகத் தில் மிக உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, ஊராட்சி, நகராட்சிப் பள்ளியில் படித்தவர் இவர். கல்விப் பாரம்பரியம் உள்ளவர் என்ற பின்னணி யெல்லாம் இவருக்குக் கிடையாது. சென்னை அரிமா சங்கத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் தெரிவித்த கருத்து கவனிக்கத்தக்கது - கருத்தூன்றத்தக்கது.
எப்பொழுது தமிழர்கள் ஜாதியினைத் துறந்து ஒரே இனமாகச் சிந்திக்கத் தொடங்கு கிறார்களோ அப்பொழுதுதான் தமிழர்கள் முன்னேற முடியும் என்று அவர் தெரிவித்த கருத்தினை வரவேற்கிறோம் - பாராட்டு கிறோம்!
தமிழர்களின் ஒற்றுமையைச் சிதைத்தது ஜாதிதானே! தமிழன், தாம் ஓர் இனம் என்ற உணர்வைப் பெறுவதற்குத் தடையாக இருப்பது ஜாதி தானே? நீ யார் என்று கேட்டால் முதலியார், செட்டியார், நாடார், வன்னியர் என்று சொல்லுகிறானே தவிர நான் தமிழன் என்று சொல்லுவதில்லையே!
இந்த உணர்வு வழி ஒற்றுமை இல்லாத காரணத்தால் தமிழன் பல உரிமைகளை இழந்து கொண்டு இருக்கிறான் - போராடும் உணர்வினையும் தொலைத்துக் கொண்டு இருக்கிறான் என்பதை மறுக்க முடியுமா?
இன்னொரு கருத்து அவர் குறிப்பிட்டுள்ளது மிக முக்கியமானது. நமது நாட்டுக் கல்வி முறை என்பது வெறும் மனப்பாடக் கல்வியாகத் தானிருக்கிறது. அறிவியல் சிந்தனையை வளர்ப்பதாக இல்லை என்று அவர் குறிப்பிட்டது மிகச் சரியானது.
நம் நாட்டுக் கல்வி முறை - மதிப்பெண்கள் என்பதெல்லாம் பார்ப்பனர்களுக்கு எளிதான வசதியான மனப்பாட முறை. மந்திரங்களை மனப்பாடம் செய்து மனப்பாடம் செய்து பரம்பரைப் பரம்பரையாக மரபு வழித் திறன் களை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தக் கல்வி முறை கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும். சுய சிந்தனையைத் தூண்டக் கூடியதாகவும், மாணவர்களின் தனித் திறனை அடையாளங் கண்டு, அதனை வளர்க்கக் கூடியதாகவும் அல்லவா கல்வி முறை இருக்க வேண்டும்.
நம் நாட்டில் அறிவியல் பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளனவே தவிர அறிவியல் மனப்பான்மையை வளர்க்கக் கூடிய தன்மையில் அவை இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
மதிப்பெண்கள் அதிகம் வாங்குவது எப்படி என்ற கலையைக் கற்றுக் கொடுக்கும் கல்வியால் என்ன பயன்?
பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தோழர் சிவ. அய்யாதுரையின் மனதைக் காயப்படுத்தும் அளவுக்கு ஒரு நிகழ்வு - அதனையும் அரிமா சங்கக் கூட்டத்தில் தெரிவிக்கத் தயங்கவில்லை அவர்.
ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு வெளிவரக் கூடிய ஓர் ஆங்கில இதழ் வெளியிட்ட செய்திதான் அது.
பார்ப்பனர் அல்லாதார் இவ்வளவுப் பெரிய அறிவியல் கண்டுபிடிப்பை கண்டுபிடித்திருக்க முடியாது என்று அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு இருந்த தகவலை இளம் விஞ்ஞானி சிவ. அய்யாதுரை கூறியது எத்தகைய அதிர்ச்சிக்கு உரியது! நம் நாட்டுப் பார்ப்பனர்களின் மனப்பான்மை, எத்தகைய இனத் துவேஷ நஞ்சை உள்ளடக்கிக் கொண்டு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சிவ. அய்யாதுரை அவர்கள் ஒன்றும் திராவிடர் கழகத்துக்காரர் அல்லர்;  அத்தகைய ஒருவரே இதனை எடுத்துச் சொல்லிக் குமுறி இருக்கிறார் என்றால் இதைவிடப் பார்ப்பனர் களைத் தெரிந்து கொள்ள வேறு என்ன ஆதாரம் தேவை?

Monday, August 5, 2013

அடுத்த கட்டப் பணி நோக்கி டெசோ!

ஈழத் தமிழினம் மானமும், அறிவும், உரிமையும் பெற்றிட
8ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை
எழுச்சியுடன் நடத்திட அணி திரண்டு வாரீர்! வாரீர்!!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அழைப்பு - அறிக்கை!


ஆகஸ்டு 8ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் டெசோ சார்பில் நடத்தப்பட உள்ள தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சி யுடன் நடத்திட அணி வகுத்து அனைவரும் வருமாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கடந்த 16.7.2013 அன்று டெசோ கூட்டம் அதன் தலைவர் மானமிகு கலைஞர் அவர்களது தலைமையில் நடைபெற்றது. அவ்வமயம் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான பாதுகாப்புக்காக 4 முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி, மத்திய மாநில அரசுகளுக்கும், இலங்கை சிங்களப் பேரினவாத அரசுக்கும் தமிழர்களின் உரிமைக் குரலைப் புரிய வைத்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள்
இக்கோரிக்கைகளை வற்புறுத்திடும் வகையில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை 8.8.2013 அன்று நடத்திடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
1) இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும்.
2) இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தியும்,
3) தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியும்,
4) இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டியும்,
நிறைவேற்றப்பட்டுள்ள இந்த நான்கு தீர்மானங் களையும் தமிழக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும் அரசுகளுக்கு அழுத்தம் தரவும்.
ஆகஸ்ட் 8இல் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் என்ற அறப் போராட்டம் நடைபெறவிருக்கிறது!
டெசோவின் உறுப்புகளான தி.மு.க., தி.க. விடுதலைச் சிறுத்தைகள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை போன்ற அமைப்புகளும், தமிழ் இனவுணர் வாளர்கள், பற்றாளர்கள் அனைவரும் பல லட்சக் கணக்கில் திரண்டு இந்த அறப்போராட்டத்தின் மூலம் உலக நாடுகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவை களுக்கு உணர்த்திடும் அரிய வாய்ப்பு நிச்சயம் ஏற்படும்!
கடந்த ஆண்டு டெசோ மாநாடு!
சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டைடெசோ சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடத்தியதிலிருந்து ஓராண்டு காலத்தில் - அடுக்கடுக்காக அதன் செயல்பாடுகள் உலக அய்.நா. மன்றம் தொடங்கி, உள்ளூர் மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு வடிவம் கொடுத்தது வரை, செய்து வரும் சாதனைகள் அடை மழை போன்ற அடுக்கடுக்கான அறப் போராட்டங்கள்!
என்றாலும் நமது ஈழத் தொப்புள் கொடி உறவுகள் உண்மையான விடுதலையையும், சமத்துவ சம வாழ்வுரிமையையும் பெறும்வரை, நம் பணி தொடர் பணியாகவே இருக்கும் இருந்தே தீரும்!
கட்சியில்லை - ஜாதியில்லை!
தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஒரு தனி வரலாறு படைக்கும் வண்ணம் குடும்பம் குடும்பமாகக் கலந்து கொள்ள வேண்டும்!
இதில் கட்சியில்லை,
இதில் ஜாதியில்லை,
இதில் மதமில்லை,
இதில் மனிதநேயம் உண்டு.
மனித உரிமைப் போர்க் குரல் உண்டு,
நாதியில்லாதவர்கள் அல்ல எம் ஈழத்துத் தமிழ்ச் சொந்தங்கள் - அறுபடாத பந்தங்கள்
அவர்கள் உரிமைகளை பெறும் வரை
நம் பணி ஓயாத பணி; ஒழியாத பணி!
90 வயதிலும் களத்தில் கலைஞர்
சென்னையில் இந்த 90 வயதிலும் களம் காணுகிறார் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கழகத்தில் வற்புறுத்தும் நம் இனத்தின் ஒப்பற்ற பாதுகாவலர் மானமிகு கலைஞர் அவர்கள்!
சென்னையில் அவருடன் சகோதரர் பேராசிரியர் மானமிகு சுப. வீரபாண்டியன் அவர்களும் மற்றும் கழகச் செயல் வீரர், வீராங்கனைகளும் கலந்து கொள்கின்றனர்.
திருச்சியில் தமிழ்நாட்டின் நம்பிக்கை ஒளிவீசும், செயல் வீரர் தளபதி செம்மல்  மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்கிறார்.
திருவள்ளூரில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் கலந்து கொள்கிறார்.
மதுரை மாநகரில் என்னைக் கலந்து கொள்ள டெசோ பணித்துள்ளது. அதன்படி பங்கேற்க விருக்கிறேன்.
எச்சரிக்கை ஒலி!
தோழியர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் கோவை பெருநகரில் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்.
இப்படி தமிழ்ப் பூமியே குலுங்கும் வண்ணம் எழுச்சி முரசு கொட்ட கழகத்தவர்கள் ஆயத்தமாகி நிற்கின்றனர்!
மக்கள் கடல் பொங்குமாங்கடலென பொங்கிக் காட்டி, பொல்லாங்கு மனம் படைத்த சிங்கள இனவெறித் தனத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க முனைப்புடன் அறவழியில் களங்கண்டு தமிழர் பெருந்திரள் எச்சரிக்கை மணியை ஓங்கி ஒலித்திடுவீர்!
வாரீர்! வாரீர்!!
அனைவரும் கலந்து கொள்ளுங்கள்! குடும்பம் குடும்பமாக அணி வகுத்துப் பணி முடிக்க ஆயத்தமாவீர்!
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? என்று இன எதிரிகளுக்குக் காட்டி, எம் இனம் மானமும், அறிவும், உரிமையும் பெற, நாளும்  போராடுவோம் வாரீர்! வாரீர்!!
வெற்றி பெறுவோம் வாரீர்! வாரீர்!!

கி.வீரமணிதலைவர், திராவிடர் கழகம்
சென்னை   
5.8.2013


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...