Tuesday, November 29, 2011

கனிமொழி ஜாமீனில் விடுதலை


கனிமொழி ஜாமீனில் விடுதலை - அனைவரும் வரவேற்பர்! ஒருவர் தண்டிக்கப்படும் நிலை வந்தால் ஒழிய அதுவரை அவர் நிரபராதியே!



சென்னை, நவ.29- திருமதி கனிமொழி எம்.பி. ஜாமீனில் விடுதலை அடைந்துள்ளார் என்பது அனைவராலும் வரவேற்கப்பட வேண்டியதாகும். ஒருவர் தண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டால் ஒழிய அவர் குற்றவாளியே தவிர, அதுவரை அவர் நிரபராதியே. தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதியாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறியுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

கனிமொழிக்கு ஜாமீன் அனைவரும் வரவேற்க வேண்டியது!

2ஜி வழக்கில் கடந்த 6 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருமதி கனிமொழி அவர்களும், கலைஞர் டி.வி. நிருவாக இயக்குநர் சரத்குமார் அவர்களும் மற்றும் மூவரும், டில்லி உயர்நீதிமன்றத்தால் பிணையில் (ஜாமீனில்) விடுதலை அடைந்துள்ளனர் என்பது, சட்ட அறிவும், நியாய உணர்வும் உள்ள அனைவராலும் வரவேற்கப்பட வேண்டியதாகும்!

எத்தகைய பெரிய குற்றமாயினும்கூட, ஒருவரது வழக்கு விசாரணை முற்றாக முடிவடைந்து அவர்கள் தண்டிக்கப்படும் நிலை வந்தால் ஒழிய, அவர் நிரபராதி என்பதே சட்டத்தின் தத்துவம் (Until the guilt is establised and proved and punished, one is presumed to be innocent).

ஆனால் ஏனோ இந்த 2ஜி அலைக்கற்றை வழக்கில் நேற்று வரை மறக்கப்பட்ட அம்சமாகவே இருந்து வந்து, தாமதித்தே இந்த பிணை உரிமை - குற்றம் சுமத்தப்பட்ட சிலருக்கு (இது மற்றவர்களுக்கும் கிடைப்பதே நியாயம்) காரணம் அது வழக்கிலிருந்தே விடுதலை அல்ல; ஜாமீனில் தான் விடுதலை என்னும் போது, அது சட்டப்படி உள்ள உரிமை.

இதுதான் பல உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் சாராம்சம்!

ஏனோ இந்த வழக்கில் இது கடைப்பிடிக்கப்படாமலேயே வந்தது!

உலகம் காணா அக்கிரமம்!

பரபரப்பு ஏடுகளும், தொலைக்காட்சிகளும்தான் நீதிமன்றங்களைவிட - இந்த வழக்கை நடத்தும் நீதிபதிகளாக தங்களைத் தாங்களே நியமித்துக் கொண்டது உலகம் காணாத ஒரு அக்கிரமம் ஆகும் (Trial by Media)  என்பதை நீதிமன்றங்கள் முன்வந்து தடுக்க வேண்டும்.

டைம்ஸ் நவ் என்ற ஒரு பிரபல இங்கிலீஷ் நாளேடு நடத்தும் ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தும்கூட பல ஊடகங்கள் இன்னமும் பாடம் பெறவில்லையே!

இழப்பு  - வெறும் அனுமானத் தொகையே!

2ஜி அலைக்கற்றை வழக்கில் ஏற்பட்ட இழப்பு - அரசுக்கு - வெறும் அனுமானத் தொகைதான்! (Presumptive loss). இதைத்தான் துவக்கத்திலிருந்தே நாம் விளக்கினோம் தமிழ்நாட்டு மக்களுக்கு. கனிமொழிமீது சாட்டப் பெற்ற குற்றச்சாட்டு - அவர் கலைஞர் டி.வி. பங்குதாரர் என்பதால் சரிதானா என்ற வழக்கின் அம்சத்திற்குள் நாம் போக விரும்பவில்லை - அது நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடக் கூடும் என்பதால்.

ஆனால் தாமதிக்கப்படும் நீதிமறுக்கப்படும் நீதி என்பது நீதியரசர்கள் அறியாத தத்துவம் அல்லவே!
கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

தா.பா. பொன்மொழி!


தா.பா. பொன்மொழி!


மக்களை வாட்டி வதைக்கும் வகையில், கட்டணங் களை உயர்த்தி அதன்மூலம் தமிழக அரசுக்கு வருவாயை அதிகரிக்கச் செய்வது தைரியமான முடிவல்ல; கோழைத் தனமான முடிவு!

உண்டபின் வெந்நீர் குடிப்பதே நலம்!


இணைய தளத்தில் வந்த ஓர் அருமையான தகவல் இதோ:



நமது உணவுப் பழக்க வழக்கத்தில் - உண்ட பின்பு - ஒரு முறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.

நாம் உண்டு முடித்த பிறகு வெந்நீர் (Warm water) இளஞ்சூடு உள்ள நீர்  (Hot Water) என்றால் கொதிக்க கொதிக்க உள்ள நீர்) குடிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வது நல்லது! சாப்பிடும்போது இடையில் குடிக்கும் தண்ணீர் இப்படி இளஞ்சூடு உள்ள நீராக இருப்பது நல்லது.

இது மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகிறதாம்! என்னே வியப்பு! சீனர்களும், ஜப்பானியர்களும் உணவு உண்ட பின்பு சூடாக தேநீர் அருந்துகிறார்கள். ஏன் அரபு நாடுகளில் கூட இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.

உண்டவுடன் வெறும் குளிர்நீரைக் குடிப்பவர்கள் மாறுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இக்கட்டுரை அமையக் கூடும்!

வெந்நீர் - இளஞ்சூடு உள்ள நீர் செய்யும் நன்மையை - இந்தக் குளிர் நீர் செய்வதில்லையாம்!

குளிர் நீர் குடித்தவுடன், உண்ட உணவினை கெட்டியாக  (Solidity)  ஆக்குகிறதாம். காரணம் நம் சாப்பாட்டில் எண்ணெய் - கொழுப்புகளும் உள்ளன அல்லவா? இது செரிமானத்தை காலதாமதப்படுத்துகிறது.  இந்த உணவுக் கூழ் அமிலத்துடன் இணைந்து செயலாற்றும்போது, அது உடைந்து கெட்டியான உணவை விட வேகமாக குடலினால்  உட்கிரகிக்கப்படுகிறது. இது குடலின் ஓரங்களில் திரண்டு, வெகுவிரையில் கொழுப்புகளாக மாறி புற்று நோய்க்கு வழி ஏற்படுத்தி விடும்.

உணவு உண்ட பிறகு சூடான சூப்போ அல்லது இளஞ்சூடு உள்ள வெந்நீரோ அருந்துவதே மிகவும் சிறந்தது.
மாரடைப்புக்கான பொதுவான அறிகுறிகள்
மாரடைப்புப்பற்றி ஒரு முக்கியமான குறிப்பு:

மாரடைப்பு ஏற்படும் ஒவ்வொரு நேரத்திலும் இடது கையில் வலி ஏற்படாது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

தாடைப் பகுதியில் கடுமையான வலி இருக்கும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
மாரடைப்பு ஏற்படும்போது உங்களுக்கு முதன்முதலாக நெஞ்சில் வலி ஏற்படாது.

குமட்டிக் கொண்டு வாந்தி வருவது போன்ற உணர்வு மற்றும் அதிகப்படியாக வியர்ப்பது ஆகியவையும் மாரடைப்பின் பொதுவான அறிகுறிகளாகும்.

தூங்கிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்படும்; 60 விழுக்காடு மக்கள் தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்வதில்லை. தாடையில் ஏற்படும் வலி ஆழ்ந்த உறக்கத்திலிருந்து உங்களை எழுப்பிவிடக்கூடும். நாம் அதனைப்பற்றி நன்கு அறிந்தவர்களாகவும், மிகுந்த கவனம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். இவற்றைப் பற்றியெல்லாம் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக நாம் அறிந்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்தச் செய்தியைப் படிப்பவர்கள் ஒவ்வொருவரும் 10 பேருக்கு இந்தச் செய்தியை அனுப்பினால், குறைந்தது நம்மால் ஓர் உயிரையாவது காப்பாற்ற முடியும் என்று நிச்சயமாக நம்பலாம் என்று ஓர் இதயநோய் மருத்துவர் கூறுகிறார்.

எனவே இதனைப் படித்துவிட்டு, ஒரு நண்பருக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் உயிரை அதனால் காப்பாற்ற முடியும். எனவே உண்மையான நண்பராக இருந்து இந்தக் கட்டுரையை நீங்கள் அக்கறை கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் அனுப்புங்கள்.

விடுதலை 17-03-2011

நெகிழ்ச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவரின் 79ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம்


சிங்கப்பூர், நவ. 29- சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 12, 13 ஆகிய இரு தினங்களில் பெரியார் கண்ட வாழ்வியல் நிகழ்ச்சிகள் சிங்கப்பூரில் இயங்கும், பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் சிறப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் பங்கேற்கச் சென்ற கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் களுக்கு வரும் டிசம்பர் 2 அன்று அகவை 79. இதனை கொண்டாடும் வகையில் சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழக திராவிடர் கழக தோழர்கள் ஏற்பாட்டின்படி ஒரு (The Banana Leaf Apolo) உணவு விடுதியில் தலைவரின் பிறந்த நாள் நிகழ்ச்சியும், விடுதலை நாளேட்டின் ஆசிரியராக தொடர்ந்து 50 ஆண்டு காலம் இருந்து சேவை செய்ததைப் பாராட்டியும் விழா நடைபெற்றது. 27.11.2011 ஞாயிறு இரவு 7 மணியளவில் விருந்தோம்பலுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பெரப்பேரி மு.சங்கர் வரவேற்புரையாற்றினார். அத்தி வெட்டி க.ஜோதி தலைமையேற்று நடத்தினார். ஒரத்தநாடு சு.மணிராசு, க.அறிவரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் நோக்கங்கள் குறித்து செந்துறை கா.மதியழகன் விளக்கிப் பேசினார்.
நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர் பெரியார் சமூக சேவை மன்றத் தலைவர் வீ.கலைச்செல்வம் அவர்கள் 12.11.2011 அன்று நடைபெற்ற பெரியார் கண்ட வாழ்வியல் நிகழ்ச்சியில் அமெரிக்கா பெரியார் பன்னாட்ட மைப்பின் சமூக நீதிக்கான கி.வீரமணி விருது பெற்றதை தமிழக திராவிடர் கழகத் தோழர்கள் சார்பில் பாராட்டி சிறப்பு செய்யப்பட்டது.
தமிழர் தலைவர் கேக் வெட்டினார்
தமிழர் தலைவர் வணக்கத்திற்குரிய கி.வீரமணி அவர்கள் தொடர்ந்து 50 ஆண்டு காலம் விடுதலை ஆசிரியராக இருந்து உலக சாதனை நிகழ்த்தியதை நெகிழ்ந்து தோழர்கள் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. எதிர்பாராத வகையில் தலைவரின் 79ஆவது பிறந்த நாள் கேக்கை, தோழர்கள் தலைவர் முன்பு கொண்டு வந்து வைத்து வெட்டச் சொல்லி விடுத்த அன்பு வேண்டுகோளை ஏற்று தலைவர் கேக் வெட்டினார். வெட்டிய கேக்கை வந்திருந்த தோழர்கள் அனைவருக்கும் தன் கைப்பட தலைவர் கி.வீரமணி அவர்கள் ஊட்டி விட்டு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்!
தோழர்களின் அழைப்பை ஏற்று வருகைதந்த அம்மா திருமதி மோகனா வீரமணி அவர்களையும், தலைவரையும் இணைத்து பொன்னாடை போர்த்தப் பட்டது, தோழர்களுக்கு நெகிழ்ச்சி யாக இருந்தது மற்றும் அத்திவெட்டி ஆர்.கலாநிதி தலைவருக்கு சிறப்பு செய்தார்.
மற்றும் மலையரசி, செல்வி குந்தவி, பெரியார் சமூக சேவை மன்ற பொரு ளாளர் மாறன், திருமதி கவிதா மாறன், பெரியார் பிஞ்சு மா.இனிய நிலா, ஆர்.சரவணன், சுசித்திரா சரவணன், கழக தோழர்கள் வேலூர் வ.சுரேஷ், ஒரத்தநாடு மா.தென்னவன், கோ.வீரை யன், மு.குமார், க.சுப்ரமணியன், இடைய குறிச்சி ஜெ.செல்வமணி, நீ.மணி கண்டன், ப.கோபாலகிருஷ்ணன், சு.அருண்குமார், பி.செந்தில் குமார், பி.கலைவாணன், து.சுரேஷ் முதலானோர் பங்கேற்றனர்.
உலகத்தில் எவருக்கும் கிடைக்கா வாய்ப்பு
செந்துறை மதியழகன் பேசும் போது, சிங்கப்பூரில் 2004இல் பெரியார் சமூக சேவை மன்றம் தொடங்கப்பட்டது. தமிழர் தலைவர் அய்யா அவர்கள் தொடங்கி வைத் தார்கள். இன்றைக்கு மன்றம் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. நம்மு டைய தலைவரை அழைத்து இரண்டு நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற் றுள்ளது. அதுபோல் நமது குடும்பத் தலைவர் கழகத் தலைவர் விடுதலை ஆசிரியராக 50 ஆண்டு காலம் இருந்து சமூக தொண்டை ஆற்றியிருக்கிறார் கள். உலகத்தில் வேறு எவரும் இப்படி இருந்ததாக தெரியவில்லை அதுவும் எதிர்ப்புகளை மட்டுமே சந்தித்த விடு தலைக்கு, அய்யா அவர்கள் ஆசிரிய ராக இருந்து பணி தொடர்வது சாத னையிலும் சாதனை. அப்படிப்பட்ட தலைவரின் சாதனையாளரின் பிறந்த நாளான டிசம்பர் 2 அன்று அவருக்கு 79ஆம் ஆண்டு பிறந்த நாள். லட்சிய வாதிக்கு இன்பமே கிடைப்பதில்லை.
எங்களுக்கு மகிழ்ச்சியான நாள்
இன்பமாக இருப்பவர்களுக்கு லட்சியமே வருவதில்லை என்றார்கள். ஆனால் எங்களைப் போன்ற கறுப்பு சட்டைகாரர்களுக்கு தந்தை பெரியா ரின் பிறந்த நாள், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் தான் இன்பமான நாள் என்று குறிப் பிட்டார்.
கலைச்செல்வம் தமதுரையில், 79 ஆண்டுகால வாழ்வில் 9 வயதில் பொதுத் தொண்டுக்கு வந்து எழுபது ஆண்டுகள் அய்யாவின் பயணம் தொடர்வது கண்டு வியக்கிறேன். இவ்வளவு எளிமையும், சுறுசுறுப்பும் உள்ள தலைவர் அவர்களை எண்ணி வியக்கிறேன். பெரியார் சமூக சேவை மன்றத் தலைவர் என்பது அய்யா எமக்களித்த வாய்ப்பு என்றென்றும் அய்யாவின் பகுத்தறிவுப் பணிக்கு துணை நிற்போம் என்றும் நெகிழ்ந்து பேசினார்.
தமிழர் தலைவர் ஏற்புரை
நிறைவாக கழகத் தலைவர் கருத் துரை வழங்கி பேசினார்.
அன்போடும், கொள்கைப் பாசத் தோடும் நடைபெறுகின்ற இந்த நிகழ்ச் சியை உங்களுடைய வேலைகளுக் கிடையே ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். நாங்களெல்லாம் எதிர்பார்க்காத வகையிலே பிறந்த நாள் கேக் வைத்து ஜோதி, சங்கர், மதியழகன் போன்றவர் களெல்லாம் இணைந்து ஏற்பாடு செய்து அன்புடன் நடத்துகிறீர்கள். நான் இவற்றையெல்லாம் தவிர்த்து விடுவது வழக்கம். இன்றைக்கு உங்களின் அன்பு வலையில் மாட்டிக் கொண் டேன் என்றாலும் உங்களின் அன்புக்கு தலைவணங்கி மகிழ்கின்ற இந்த நேரத்திலே ஒன்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். சங்கர் அவர் களும், மதியழகன் அவர்களும், மிக நீண்ட நேரம் அய்யா அவர்களைப் பற்றி பல்வேறு செய்திகளை சொன்னார்கள்.
உண்மையைத்தான் பேசுவார்கள்
எப்போதும் பெரியார் அவர்களின் தொண்டர்கள் உண்மையைத்தான் பேசுவார்கள் என்ற முறையிலே நமக்கு அமைந்த கொள்கைளை உண்மை யின் அடிப்படையிலே அமைந்த கொள்கை, எப்போதும் யாரும் பெரியாரோடு என்னை ஒப்பிட்டு பேசுவதை விரும்பாதவன். பெரியார் ஒரே ஒரு பெரியார்தான் இருக்க முடியும். பெரியார் அவர்களோடு மற்றவர்களை ஒப்பிடுகிறோம் என் னும்போது அவர்கள் உங்களிலே சரித்திர புருஷர்கள் என்பதை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி ஒப்பிட்டுச் சொல்வது. அதைக்கூட தனித்தனியே ஆய்வு செய்து பார்ப்போமேயானால் பெரியார் பெரியாரில் பெரியாராகத்தான் அய்யா இருப்பார். பெரியாருடைய நிரந்தர மாணவன் நான். பெரியாருடைய தொண்டன். தொண்டருக்கும் தொண்டன் நான். ஆகவே எனக்கு உற்றார் உறவினர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் ரத்த உறவைவிட கொள் கைப் பாசம்தான் நம்முடைய உறவுகள்!
சந்தாக்களை கொடுத்திருக்கலாம்
உங்களையெல்லாம் சந்தித்து கேக் ஊட்டியதிலே மகிழ்ச்சி. இன்றைக்கு ஒரு நாள்தான் உங்களுக்கு ஓய்வு. தினசரி வேலை, வேலை என உழைக் கின்ற நீங்கள் எனக்காக இதையெல்லாம் செய்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியென்றா லும் இந்த சால்வைகளை தவிர்த்திருக் கலாம். அதற்கு பதிலாக விடுதலை சந்தாக்களை கொடுத்திருக்கலாம். அதுவே எனக்கு மகிழ்ச்சி, காரணம் பலபேருக்கு கொள்கை போய்ச் சேரணும். தோழர்கள் நீங்கள் தினம் விடுதலை படிக்க வேண்டும். எத்தனை பேருக்கு இணையத்தில் விடுதலையை படிக்கின்ற வாய்ப்பு இருக்கிறது என்று தெரியாது. ஆனாலும் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு படிக்க வேண் டும். கணினி பயிற்சி பெற வேண்டும் - ஓய்வு நேரத்தில்.
பெரியாரை நான் சுவாசிக்கிறேன்
ஒரு சிறப்பான செய்தி என்னவென் றால் உலகம் முழுவதும் இன்றைக்கு ஒரு சிறப்பான அடிப்படை அமைந் திருக்கிறது. அய்யாவின் கொள்கைக்கு. இங்கு தோழர்கள் உலக சாதனை என்றெல்லாம் சொன்னார்கள். நான் அது மாதிரியெல்லாம் நினைக்க வில்லை. காரணம், இயல்பாக நாம் காற்றை சுவாசிக்கிறோம், அது போல நான் நினைக்கிறேன் பெரியாரை நான் சுவாசிக்கிறேன். அதனால்தான் எனக்கு இதெல்லாம் சாதனையாக தெரியவில்லை, கடமையாகவே காணப் படுகிறது. ஏன் என்றால் என்னுடைய வாழ்நாளில் இந்த பணியை தவிர வேறு எந்தப் பணியும் இல்லை. அய்யா அவர்கள் சொல்வார்கள். இவற்றை சுய நலம் என்று சொல் வார், எப்படி சுய நலம், அப்படின்னா ஒருவருக்கு எது மகிழ்ச்சி தருகிறதோ அதை செய்வதுதான் சிறந்தது. அது தான் ஒருவரது சுயநலம் என்பார் கள்! எனவே, எனக்கு இது சுயநலம். இதற்காக என்னை பாராட்டி கூடு தலாக என்னிடம் எதை எதிர்பார்க் கிறீர்களோ, அதை இப்போது சிறப் போடு இந்த மூச்சு அடங்குகின்ற வரையிலே செய்வேன்.
இங்கே சிங்கப்பூரிலே முன்பு ஒரு உணவு விடுதியிலே விருந்தோம்பல் நிகழ்ச்சி வைத்து கூடுவார்கள் பேசு வோம். நீண்ட நாள் ஒரு அமைப்பு ரீதியாக இதற்கென இருந்தோம். பெரிய வாய்ப்பு நமக்கு அய்யா சீனிவாசன் அவர்களுக்கு மகனாகவும் மருமகனாகவும் இருக்கக் கூடிய வீ.கலைச்செல்வம் அவர்கள் 2004-லே பெரியார் சமூக சேவை அமைப்பிற்கு தலைவர் என்ற உடனே அதனை ஏற்று சிறப்பாக செயல்படுகிறார்கள்.
அதுபோல பெரியார் பெருந் தொண்டர்கள் நாகரத்தினம் ரொம்ப தீவிரமாக இருந்தவர். அவர்களுடைய மகன் மாறன் அவர்கள். அதுபோல மூர்த்தி அவர்களுடைய மகன் மதி யழகன் போன்றோர் நடுத்தர வயது டையவர்கள் இளைஞர் கொள்கை வாரிசுகளாக, மனிதநேயம் மிக்கவர் களாக செயல்படுகிறவர்கள். அதனால் நல்ல ஒரு பலமான அஸ்திவாரம் சிங்கப்பூரிலே ஏற்பட்டுள்ளது.
தேசிய பல்கலை.யில் பெரியார் குரல்
சென்ற இரண்டு ஆண்டுக்கு முன்னே நடை பெற்ற பெரியார் கண்ட வாழ்வியல் நிகழ்ச்சியை விட, இந்த ஆண்டு பல மடங்கு வளர்ச்சி, இரண்டு நாள்களும் அடர்த்தியான சிறப்பான நிகழ்ச்சி நடத்தினார்கள். பத்திரிகை, தொலைக்காட்சி என எல்லா இடத்திலும் நிகழ்ச்சியின் தாக்கம் பெரிதாகி இருந்தது. இந்த தாக்கம் எது வரைக்கும் போனது என்றால் பெரியார் குரல் தேசிய பல்கலைக்கழ கத்தில் (National University of Singapore) கருத்தரங்கில் கேட்கிற வாய்ப்பு வந்திருக்கிறது அதுதான் மிக முக்கியம்.
ஆங்கில உரை நிகழ்ச்சி மாணவர்கள் மத்தியில் நல்ல அளவிற்கு ஆராய்ச்சியாளர்களாக இருக்கக் கூடியவர்கள். பெரியார் அவர்களைப் பற்றி எண்ணி பல கேள்விகள் கேட்டார்கள். அய்யா பெரியார் வாழ்ந்த காலத்தைவிட உயிரோடு இருந்த காலத்தை விட கொள்கையால் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். தய்வான் பல்கலைக்கழகத்திலே ஒப்பந்தத்திற்காக சென்றபோது அங்கு நூலகத்திற்கு புத்தகங்களை கொடுத்து வந்தோம். இந்த ஒரு மாதத்திலே தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பல உயரிய பல்கலைக்கழக நூலகங்களிலேயே பெரியார் உள்ளே நுழைந்துள்ளார். ஆகவே கொள்கைகள் நாளும் வளர்கின்றன.
பெரியார் தத்துவம் அழியாது
பெரியாருடைய தத்துவம் என்பதை யாராலும் அழிக்க முடியாது. அய்யா காலத்திலும் இயக்கத் திற்கு எதிர் நீச்சல்தான். நம்முடைய காலத்திலும் எதிர்நீச்சல்தான். இந்த கொள்கையால் எவ்வளவு பெரிய மனிதரும் பயன்படமுடியும். அய்யாவினு டைய கொள்கையால் யாரும் தாழ்ந்து போவதற்கு இடமில்லை.
உங்களுக்கு அன்பான வேண்டுகோள் உழைத்து சம்பாதிப்பதற்காக இந்த நாட்டுக்கு வந்திருக் கிறீர்கள். எவ்வளவோ கடுமையாக உழைக்கக்கூடிய இளைஞர்கள் நீங்கள் எல்லாம். நல்ல உடல் நலத்தோடு இருக்கணும். அதே நேரத்திலே கெட்ட பழக்கங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ போய் விடாதீர்கள். நம்முடைய தோழர்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்கள். கூட்டங்களிலே கருப்பு சட்டை களைப் பார்த்து, விருந்தினராக வந்த சுப.வீரபாண்டியன் அவர்களே மகிழ்ச்சி அடைந்தார்.
உங்களை நான் அன்போடு கேட்கிறேன் எனக்கு பாராட்டு என்பதெல்லாம் மகிழ்ச்சி.
நீங்கள் உங்களுடைய குடும்பத்தை, தாய், தந்தையரை மதித்து வரவுக்கு உட்பட்டு செலவு செய்து ரொம்ப சிக்கனமாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள். ஆடம்பரம் இல்லாமல் உரியவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்து ஊர் திரும்பி அங்கே கவுரவமாக வாழ்வ தற்கும், தன்மானத்தோடு வாழ்வதற்கும் பொரு ளீட்டி அதனை பாதுகாக்க வேண்டும்.
வாழ்க்கையை கடன் இல்லாத வாழ்க்கையாக வாழ வேண்டும். நீங்கள் சிறப்பாக இருந்தாலே அதைவிட எங்களுக்கு மகிழ்ச்சி வேறு இல்லை. எனவே, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக நீங்கள் வாழவேண்டும் என எடுத்துக்கூறி இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திய உங்களுக்கு நன்றி கூறி முடிக்கிறேன். -இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
நிறைவில் தமிழர் தலைவர் பிறந்த நாள் விருந்தோம்பல் நடைபெற்றது. முடிவில் செந்துறை நா.மணிவண்ணன் நன்றி கூறினார்.

கால்களை மறைக்கும் ரப்பர் காலணிகளைக் (Boots) கண்டுபிடித்தவர்கள் யார்?



கால்களை மறைக்கும் ரப்பர் காலணிகளைக் (Boots) கண்டுபிடித்தவர்கள் யார்?
நினைவு தெரிந்த காலத்துக்கு முன்பே உடனடியான ரப்பர் காலணிகளைக் கண்டுபிடித்தவர்கள் அமேசான் பழங்குடி மக்களான இந்தியர்கள்தான்.  இரப்பர் மரப்பால் உலரும் வரை அதில் முழங்கால் வரை அமிழும்படி அவர்கள் நின்று கொண்டிருப்பார்கள். தோலினால் ஆன இத்தகைய காலணிகள் 1817 இல் வடிவமைக்கப்பட்டு, வெல்லிங்டன் பிரபுவின் பெயர் சூட்டப்பட்டது.
ஆடைக்கு இரப்பரைப் பயன்படுத்த முதன் முதலாக  மேற்கொள்ளப்பட்ட முயற்சி பெரும் தோல்வியடைந்தது. வெப்பம் நிறைந்த சீதோஷ்ண நிலையில் அது உருகி மனிதரின் உடலில் ஒட்டிக் கொண்டது. குளிர் நிறைந்த நிலையில் அது கருங்கல்லைப் போன்று கடினமாக ஆகிவிட்டது. 1839 இல் வீட்டு ஸ்டவ் ஒன்று வெடித்ததால் சிந்திய கந்தகத்துடன் தற்செயலாக இரப்பர் சேர்ந்த போதுதான் இதற்கு மாற்று வழி கிடைத்தது. சார்லஸ் குட் இயர் என்பவர் இரப்பருடன் கந்தகத்தைச் சேர்த்து சூடாக்கி இப்போது உள்ள ரப்பரைக் கண்டுபிடித்தார். அவரது கதை மாறி மாறி ஆர்வம் மகிழ்ச்சி அளிப்பதாகவும், சோகமானதாகவும் அமைந்தது.
தனது வாழ்நாள் முழுவதிலும் கடுமையான வறுமையால் அவர் வாடினார்.  அவரது 12 குழந்தைகளில் 6 பேர் சத்துணவுக் குறைவால் இறந்துபோயினர். என்றாலும் அவருக்கு இரப்பரைப் பற்றிய எண்ணமே வெறியாக இருந்தது. தாவரத் தோல் என்று அவர் அழைத்த இரப்பரின் தன்மையைப் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு மேம்படுத்தும் முயற்சியை அவர் கைவிடவே இல்லை.
தன்னை அறியாமல் தற்செயலாக அவர் கண்டுபிடித்தது இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைத்தது. இரப்பருக்கு ஒரு நிலையான பண்பை அது அளித்தது. இக் கண்டுபிடிப்பால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அவர் தனது மாதிரிகளை தாமஸ் ஹேன்கான் மற்றும் சார்லஸ் மேகின்டோஷ் என்னும் ஆங்கிலேயர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவர்கள் இருவரும் புகழ் பெற்ற இரப்பர் வியாபாரிகளாக ஆகி பெருவெற்றி பெற்றனர். குட்இயரின் கண்டுபிடிப்பைப் பகுத்தாய்வு செய்த அவர்கள், மறுபடியும் அந்த நடைமுறைப்படி ரப்பரைத் தயாரித்து அதற்கு 1843 இல் காப்புரிமையும் பதிவு செய்தனர். அதற்கு அவர்கள், ரோமர்களின் தீக்கடவுளின் பெயரான  வல்கனைசேஷன் என்று பெயரிட்டனர்.  அவர்கள் மீது குட்இயர் வழக்கு தொடர்ந்தார் ; ஆனால் வெற்றி பெற முடியவில்லை. கடனுக்காக அவர் சிறையில் வாட நேர்ந்தது.  சிறைச்சாலையை தனது ஓட்டல் என்று அழைக்கவே அவர் விரும்பினார். கடன்களில் மூழ்கிய நிலையில் அவர் இறந்து போனார். என்றாலும் அவரது தொலைநோக்குப் பார்வைக்காகவும், விடாமுயற்சிக்காகவும் அவர் பரவலாகப் பாராட்டப்பட்டார். அவர் ஒரு முறை எழுதினார்: வாழ்க்கை என்பது டாலர் சென்ட்டை வைத்து மட்டுமே மதிப்பிடப்படக் கூடியது அல்ல. நான் விதைத்ததை மற்றவர்கள் அறுவடை செய்து அனுபவிக்கிறார்கள் என்று நான் புகார் கூறத் தயாராக இல்லை. ஒருவன் விதைத்து விட்டுப் போனதை எவருமே அறுவடை செய்யாமல் போனால்தான் வருத்தப் படவேண்டும்.
அவர் இறந்ததற்கு நாற்பது ஆண்டுகள் கழித்த பிறகு,  அவர் நினைவை என்றும் போற்றும் வகையில் இன்று உலகின் மிகப் பெரிய இரப்பர் நிறுவனமாக உள்ள குட்இயர் டயர் நிறுவனம் தங்கள் நிறுவனத்திற்கு அவரது பெயரைச் சூட்டி பெருமைபடுத்தியது. 2005 இல் அவர்களது வியாபாரம் மட்டும் 1970 கோடி டாலர்களாகும்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

சில பேருடைய நுழைவால், சூழ்ச்சியால் தமிழினம் பதில் சொல்ல முடியா நிலைக்கு ஆளாகியிருக்கிறது


தி.மு.க. தலைவர் கலைஞர் பேச்சு 
சென்னை,நவ.28- தமிழினம் இன் றைக்கு சில பேருடைய நுழைவால், சில பேருடைய சூழ்ச்சியால் சில பேருடைய தாக்கத்தால் அவற்றை எல்லாம் மறந்து பலருடைய கேள்வி களுக்குப் பதில் செல்ல முடியாத இடத்தில் அமர்ந்திருக்கின்ற காட்சியை நாம் காணுகிறோம் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம், அச்சுத (கவுண்டர்) அவர்களின் மகன்  வாசுதேவனுக்கும், சென்னை  ரஞ்சன் (நாயக்கர்) அவர்களின் மகள் செல்வி காஞ்சனமாலாவிற்கும்  நடை பெற் றுள்ள  இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளைச் செய்து  நானும் இதிலே கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்திட வேண்டுமென்று வலியுறுத்தி,  மிகச் சிறப்பாக விழாவை நடத்தியிருக்கின்றன. தம்பி  டாக்டர் ஞானசேகரன் அவர்களை இன்று நேற்றல்ல,  நீண்ட காலமாக நான் அறிவேன்.   அவரோடு  மகிழ்ந்தும், கடிந்தும்  பல நேரங்களில்  பழகுகின்ற வாய்ப்பு  எனக்குக் கிடைத்திருக் கின்றது.   தமிழகச் சட்டப் பேரவையில்  அவர் பணியாற்றிய காலத்திலும், அதற்குப் பிறகு  இயக்கப் பணிகளை  நிறைவேற்ற முற்பட்ட காலத்திலும்,  அந்தப் பணியையும் நிறைவேற்றிய துடன்,  தன்னுடைய  கொள்கையைக் கேடயமாகக் கொண்டு வாழ்க்கையை நடத்திய நேரத்திலும்  அவருடைய பண்புகளை, அவருடைய மன உறுதியை, இதற்கெல்லாம்மேலாக  என்பால் அவர் கொண்டிருக்கின்ற அன்பை, நேசத்தை நான் மிக நன்றாக உணருவேன்.   அப்படி உணர்ந்த காரணத்தினால் தான் இன்றுள்ள என்  உடல் நிலை, உள்ள நிலை - இந்த நிலைகளுக்கிடையிலேயும் இந்த மணவிழா நிகழ்ச்சியிலே கலந்து கொள்கிற  மனப் பக்குவத்தைப் பெற்று, உறுதியைப் பெற்று  உங்களை யெல்லாம் காணுகின்ற  அரிய வாய்ப்பை நான் இன்றைக்குப் பெற்றி ருக்கிறேன்.
திராவிடக் கலாச்சாரம்
நம்முடைய இல்லங்களில் நடை பெறுகின்ற எந்த விழாக்கள் ஆனா லும், அவை திராவிடப் பண்பாட் டோடு, திராவிடக் கலாச்சார மேன்மையோடு நடைபெற வேண்டும் என்று விரும்புகின்ற இயக்கம் திராவிட இயக்கம்.   அத்தகைய திராவிட இயக்கத்தில்  தன்னுடைய இளமைக்காலந்தொட்டு,  ஈடுபடுத்திக் கொண்டு வருகின்ற தம்பிதான் ஞானசேகரன் என்று சொன்னால் அது மிகையாகாது.   இங்கே நான்  வழங்கப் பட்டுள்ள திருமண அழைப்பிதழைப் பார்க்கும்போது,  ஓர் இடத்திலே நாயக்கர் என்றும், இன்னொரு இடத்தில் கவுண்டர் என்றும் இப்படி பல்வேறு சொற்களால்  உங்களுடைய  சமுதாயத்தினுடைய  பிரிவுகள் அடை யாளம் காட்டப்பட்டிருக்கின்றன.    நாயக்கர் என்றாலும், கவுண்டர் என்றாலும், எங்களுடைய தஞ்சை மாவட்டம் போன்ற இடங்களிலே வழக்கத்திலே இருக்கின்ற  படை யாச்சியார் என்றாலும்  எல்லாமே  மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்த குடும்பங்கள்தான் என்பதை நானும் அறிவேன்,  அனை வரும் அறிவீர்கள்.   அந்த வகையில்  இன்றைக்கு  இந்த விழாவில் மண மகன், மணமகள்  இவர்கள் எல்லாம்  கற்றவர்களாக, இன்னும் சொன்னால்  மேல் படிப்புக்கு உகந்தவர்களாக, உரியவர்களாக ஆகியிருப்பதற்கும்,  ஞானசேகரன் அவர்களே  ஒரு டாக்டராக விளங்கி வரு வதற்கும்   -  ஒரு ஞானசேகரன் அல்ல,  பல ஞான சேகரன்கள் தமிழ்நாட்டில் இன்றைக்கு  இந்தச் சமுதாயத்திலிருந்து  டாக்டர் களாக,  வேறு  பல துறைகளிலே விற்பன்னர்களாக விளங்குவதற்கு எது காரணம் என்று பார்த்தால், அந்தக் காலத்திலே பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர என்று பிரிக்கப்பட்ட  நான்கு பிரிவுகளாக  உள்ளவர்கள் எல்லாம்,  நாமெல்லாம் ஒரே சாதி, தமிழ்ச் சாதி, திராவிட சாதி, நமக் குள்ளே பேதம் இல்லை, நமக்குள்ளே வேறுபாடு இல்லை, உயர்வு தாழ்வு இவைகளைப் பற்றி  நாம் பேசக் கூடாது,  அதை கருதவும் கூடாது என்று அந்த அளவில்  நாம் வாழ வேண்டும், நம்முடைய சமுதாயம் விளங்க வேண்டும் என்ற  அந்தக் குறிக்கோளை எடுத்துரைத்து  -  தந்தை பெரியார் அவர்கள்,  பேரறிஞர் அண்ணா அவர்கள்  திராவிட இயக் கத்தார்,  சுயமரியாதை இயக்கத்தார் எடுத்துச் சொன்ன  அந்த வார்த்தை களுடைய  வடிவங்களாகத்தான்  இங்கே நீங்கள் அமர்ந்திருக்கின்றீர்கள்.
சாதி வேண்டாம் தமிழினம் நாம்
உங்களில் யார், எவர் என்று இங்கிருந்து நான் சொல்லி விட முடியாது.   நானும், தம்பி வீரபாண்டி ஆறுமுகமும், இங்கே அமர்ந்து  -  இங்கே அமர்ந்திருக்கின்ற எந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள், எந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்  என்று  சொல்ல வேண்டுமென்றால்  சொல்ல இயலாது.   அதனால்தான் அனை வரும் தமிழர்கள், தமிழ்ச் சாதி, திராவிட இனத்தினர்  என்கின்ற  அந்த உணர்வை நாம் பெற்றிருக்கிறோம்.   அத்தகைய  உணர்வை  நாம் பெறு வதற்குக் காரணமாக இருந்தவர்,  தந்தை பெரியார் அவர்களும், அவர் வழி நின்று  அவருடைய  கொள்கை களை  நனி நாகரிகமாக, நயமாக  அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் எடுத்துச் சொன்ன தந்தை பெரியாருடைய மாணவரும்,  நமக் கெல்லாம் ஆசிரியருமான அறிஞர் அண்ணா அவர்களும்தான் என்பதை  யாரும் மறுப்பதற்கில்லை.   அத்தகைய அண்ணா அவர்களுடைய  ஆட்சியில்  சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற நிலை உருவாயிற்று.    அதற்கு முன் பெல்லாம் சுயமரியாதை திருமணம் செய்தோம் என்றால்  அவர்களை பக்கத்து வீட்டார்கூட திரும்பிப் பார்க்கப் பயப்படுவார்கள்.   ஏ அப்பா, அவன்  சு.ம.  திருமணம் செய்து கொண் டவன், அவன் கடவுள் இல்லை என்று சொல்கிறவன்,  அவன் சாதி இல்லை, மதம் இல்லை, குலம் இல்லை, கோத்திரம் இல்லை என்றெல்லாம் கூறுகிறவன்  என்று  கூறி வெறுத்துக் கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது.   1967ஆம் ஆண்டு திராவிட முன் னேற்றக் கழகம் தமிழகத்திலே பெரு வெற்றி பெற்று, அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலே ஆட்சி அமைந்து, அண்ணா செய்த முதல் காரியமாக  இன்றைக்கு  நடந்ததே சுயமரியாதை திருமணம். இது போன்ற திருமணங்கள், இனி  சட்டப்படி செல்லுபடியாகும்,  இனி நடக்கின்ற திருமணங்கள் மாத்திரமல்ல, இது வரை நடந்த  சுயமரியாதைத் திரும ணங்களும் சட்டப்படி செல்லுபடி யாகும் என்று  விதித்த காரணத்தால் தான்  இன்றைக்கு தமிழ்நாட்டில் எல்லோரும் சுயமரியாதைத் திரும ணத்தை ஓரிருவர் தவிர,  இன்னமும் பழைய பஞ்சாங்கங்களை நினைத்துக் கொண்டிருப்பவர்களைத் தவிர,  இன்னமும்  பழைய  சாத்திரங்களில் உள்ளத்தைப் பறி கொடுத்தவர்களைத் தவிர, மற்றவர்கள் எல்லாம் சுயமரி யாதைத் திருமணங்களை, சீர்திருத்த திருமணங்களை, பகுத்தறிவு திரும ணங்களை தங்களுடைய இல்லங் களில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த மணமக்களுடைய  வாழ்க்கை யில் எந்தக் குறையும் ஏற்பட்டதில்லை, ஏற்படாது.   ஒருவருடைய வாழ்க்கை என்பது அவர்கள்  தங்களுடைய ஆரோக்கியத்தைக் காத்துக் கொண்டு, தங்களுடைய நலன்களைக் காத்துக் கொண்டு, பிறர் நலம் பேணி அப்படி வாழ்கின்ற அந்த வாழ்க்கையை யார் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்களோ, அவர்களுக்கு  எந்த நேரத்திலும், எந்தத் தீமையும் வராது.    அதனால்தான்  சங்க காலப் புலவர்கள் பாடியிருக்கி றார்கள்.  தீதும் நன்றும் பிறர்தர வாரா  என்று சொல்லியிருக்கிறார்கள்.
திராவிட இயக்கம் இல்லாவிட்டால்...
தீமையும்,  நன்மையும்  நாமாகத் தேடிக் கொள்வதே தவிர,  மற்றவர்க ளிடமிருந்து வரக் கூடியவை அல்ல என்று  அன்றைக்கே பாடி வைத்திருக் கிறார்கள்.  அப்படிப் பட்ட தமிழினம், எதைப் பற்றியும்,  எந்தச் சாத்திரங் களைப் பற்றியும்  கவலைப்படாமல், தங்களுடைய இனம், குலம், கலை, நாகரிகம், பண்பாடு  என்று அந்த அளவிலே  தன்னை நடாத்திக் கொண்டு,  தமிழினம் இன்றைக்கு  சில பேருடைய  நுழைவால், சில பேருடைய சூழ்ச்சி யால், சில பேருடைய தாக்கத்தால் அவற்றையெல்லாம் மறந்து  பலரு டைய  கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத  ஒரிடத்தில் அமர்ந்திருக் கின்ற காட்சியை நாம் காணுகின்றோம்.
இன்றைக்கு  தமிழகத்திலே திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஓர் இயக்கம் மாத்திரம் இல்லாமல் இருந்திருந்தால் நான் கேட்கிறேன்,  நீங்கள் யாரும் என்னைத் தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது, நம்முடைய வீடுகளில்  எவ்வளவு பி.ஏ.க்கள்., எம்.ஏ.க்கள், எவ்வளவு பட்டதாரிகள் இருப்பார்களா?   இருக்க முடியாது.  இதற்கெல்லாம் காரணம் திராவிட இயக்கம் தான்.    இப்போது திராவிட  என்றாலே வெறுப்பவர்கள், ஒதுங்கிச் செல்ப வர்கள்,  நீ  திராவிடனா?  என்று கேட்டு  ஒருவிதமாக  நம்மை ஏறெடுத்துப் பார்ப்பவர்கள்  -  இன்றைக்கு  இந்தச் சமுதாயம் இந்த  அளவிற்கு பெருமை பெற்றிருக்கிறதென்றால், வளர்ந்தி ருக்கிறது என்றால், இதற்கெல்லாம் காரணம், நம்முடைய பகுத்தறிவு இயக்கம்  - அந்த இயக்கத்தைத் தோற்றுவித்த தந்தை பெரியார் ராமசாமி என்பதை மறந்து விடக் கூடாது.   அத்தகைய  பெரியார் என்கின்ற  ஆல மரத்தின் விழுதுகளாக  பல விழுதுகள், தமிழகத்திலே இன் றைக்கு தோன்றி, முளைத்து,  துளிர் விட்டு,  அவைகளும் மரமாகியிருக் கின்ற காட்சியை காணுகிறோம்.   அப்படிப்பட்ட விழுதுகளில் ஒன் றாகத்தான்  தம்பி  ஞானசேகரனும்  விளங்குகின்றார்.   அவருடைய இல்லத்திலே நடைபெற்றிருக்கின்ற  இந்த மண விழா நிகழ்ச்சியில்  செல்வன் வாசுதேவன்,  செல்வி காஞ்சனமாலா  இருவரும்  பெரும் நல்வாழ்வு வாழ்ந்து  அரும் குழந்தைகளைப் பெற்று,  அந்தக் குழந்தைச் செல்வங்கள்  எதிர்காலத்தை நடத்திச் செல்கின்ற அளவிற்கு வீறு பெற்று விளங்க வேண்டும் என்ற என்னுடைய வாழ்த்து களை இந்த இல்லத்தாருக்கு  ஞான சேகரனுடைய  உற்றார் உறவினர் களுக்குக் கூறி வாழ்க மணமக்கள் என்று உரைத்து விடைபெறுகிறேன்.
-இவ்வாறு பேசினார்.

ஜாதியின் வேரறுக்கச் சட்டநகல் எரிப்பு (3) அய்யாவின் அறப்போர் வரலாறு (26-11-1957)


- முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்
இன்றைய லட்சியம், முயற்சியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஜாதி ஒழிய வேண்டும் என்பது ஒரு சாதா ரண சங்கதி. ஆனால் அது பிரமாதமான செயலாகக் காணப்படுகிறது. பிறவியில் யாவரும் தாழ்ந்தவர்கள் அல்ல. எங் களுக்கு மேல் எவனும் இல்லை. எல்லோ ரும் சமம் என்ற நிலை நமக்குத்தான் அவசியமாகத் தோன்றுகிறது.
பெரியாரின் இந்த வினா நியாயமான வினா. நெஞ்சை உறுத்திக் கொண்டிருந்த நேர்மையான வினா. ஒருவன் மேல் ஜாதி; ஒருவன் கீழ் ஜாதி; ஒருவன் பாடுபட்டே சாப்பிட வேண்டும்; ஒருவன் பாடுபடாமல் உட்கார்ந்து கொண்டே சாப்பிட வேண் டும் என்கிற பிரிவுகள் அப்படியே இருக்க வேண்டுமா? தீண்டாமை ஒழிய வேண்டு மென்பது சாஸ்திரத்திற்கு, ஆகமத் திற்கு விரோதம்தான். ஆனால் தீண் டாமையை ஒழிக்க வேண்டும் என்பது அரசியல் சூதாட்டத்திற்கு ஆக அவசிய மாக இருந்தது. செய்தார்கள். அது போல இதற்கு ஏன் பரிகாரம் செய்யக்கூடாது.
ஒரு மனிதன், தான் ஏன் பிறவியில் தாழ்ந்தவன் என்று கேட்கக்கூடாது. கேட்க உரிமையில்லையென்றால் இது என்ன சுயராஜ்ஜியம்?
நான் ஏன் சூத்திரன்? நான் ஏன் வைப்பாட்டி மகன், நான் ஏன் கீழ் ஜாதி? இதற்குப் பரிகாரம் வேண்டும் என்றால் குத்துகிறேன் என்றான் வெட்டுகிறேன் என்றான் குத்தாமல் வெட்டாமல் இருக் கிறதுதானே தப்பு என்றுதானே எண்ண வேண்டியுள்ளது?
பெரியார் அக்கிரகாரத்தைக் கொளுத்தி 1000 பார்ப்பனர்களையாவது வீழ்த்தினால்தான் ஜாதி ஒழியுமென்றால் அவ்வாறே கொளுத்துவோம், அவ்வாறே வீழ்த்துவோம் என்றும் சற்றுக் கடுமை யாகக் கூறி மிரட்டினார்.
எனவே திருச்சியில் பெரியாரைக் கைது செய்து 117,323,324, 326, 436, 302 ஆகிய ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் விடுவித்தனர்.
9-11-1957 இல் பெரியார் வெளியிட்ட அறிக்கையில் ஜாதியை ஒழிப்பதற்காகப் போராடினேன்! மறியல் செய்தேன்! சிறை சென்றேன்! சர்க்கார்கள் விழிக்க வில்லை. ஆகவே ஜாதிக்கு ஆதாரமான சட்டத்தைக் கிழித்து தீயிலிட்டாவது இந்திய சர்க்காரின் மனதை மாற்றலாமா என்று கருதி அதைச் செய்தேன். இதில் எந்த உயிருக்கேனும் சேதமுண்டா? இதற்காக எனக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை என்றால் இதை நான் மகிழ்ச்சி யுடன் வரவேற்க வேண்டாமா? ஜாதியை ஒழிப்பதற்கு மூன்றாண்டு சிறை வாசம் செய்தவன் என்பதை விடப் பெரும் பேறு, முக்கியக் கடமை வேறென்ன இருக் கிறது? இந்த விதமாக நீங்கள் ஒவ் வொருவரும் உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.
11.11.1957 அறிக்கையில் கழகத் தோழர்களே! தீவிர லட்சியவாதிகளே! நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்குப் பயந்துவிட வேண்டியதில்லை. பயந்துவிட மாட்டீர்கள். சட்டத்தைப் பார்த்து பயந்து விட்டதாகப் பேர் வாங்காதீர்கள். ஆகவே இஷ்டப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றப் பெயர் கொடுங்கள்.
26.11.1957 சட்ட எரிப்பு நாள் என்று அறிவித்தபின் தொடர்ந்து சொற்பொழிவு கள் மேற்கொண்டு அய்யா ஆதரவு திரட்டினார். அறிக்கை வெளியிட்டார்.
10-11-1957 இல் சென்னை எழும்பூரில் சொற்பொழிவு நிகழ்த்திய பெரியார் தம் சொற்பொழிவில் அரசியலமைப்புச் சட்ட நகலை எரிப்பதைக் கூட நெறிப்படி செய்ய வலியுறுத்தினார்.
காலணாவுக்கு அரசமைப்புச் சட்டத் தின் தொகுப்புக்குக் கிடைக்கும். அதை வாங்கி வைத்து நெருப்புக் குச்சியைக் கிழித்து வைத்துக் கொளுத்த வேண்டும். 3 வருடமோ 6 வருடமோ நீங்கள் தண் டனையைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர் கள்? இது கடமை, செய்ய வேண்டியது. அவ்வளவுதான். தாய்மார்களும் பெருமள வில் கலந்து கொள்ள வேண்டும். ஜோடி ஜோடியாகக் கொளுத்துங்கள். அங்கே போய் குடும்பம் நடத்தினால் போகிறது; 26 ஆம் தேதி வரையில் வெளியில் இருந்தால் என் பங்குக்கு நானும் கொளுத்துவேன்.
15 ஆம் தேதியே என்னை உள்ளே போட்டாலும் போடலாம். ஏனென்றால் எனக்குப் போட்டிருக்கும் செக்ஷன் களுக்கு என்னை ஜாமீனில் விடமுடி யாது. ஆகவே அன்றே கைது செய்து வழக்குக்கு கொண்டுபோய் ஆஜர்படுத்த லாம். ஆனதால் போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் போலீஸ்காரரிடமோ, அதிகாரிகளிடமோ முரண்பட்டு நடந்து கொள்ளாமல் காரியம் செய்ய வேண்டும். கட்டுப்பாடாக நடந்து கொள்ள வேண்டும். அதுதான் நமக்குப் பெருமை. கலவர மில்லாமல் ராமன் படம் எரித்த மாதிரி அவ்வளவு கட்டுப்பாடாக நடந்து கொள்ள வேண்டும்.
ஆண், பெண் எல்லோரும் கொளுத்த வேண்டும். போலீஸ்காரர்கள் முன் கூட்டியே மிரட்டுவார்கள். நடக்காமல் செய்யத் தந்திரம் செய்வார்கள். ஜாக் கிரதையாக நடந்து கொள்ளவேண்டும். தப்பித்துக் கொள்வேன் என்று எதிர் பார்த்து எதையும் செய்யக் கூடாது. வீட்டிலிருந்து கொளுத்தினாலும் போதும். கொளுத்திக் கையில் பிடித்துக் கொண்டு போலீசின் எதிரில் நில்லுங்கள். கைது செய்திருக்கிறேன் என்றதும் பேசாமல் போய்விடுங்கள். அரசமைப்புச் சட்டம் கொளுத்தும் காரியத்துக்காக இத்தனை பேர் கைதாகி இருக்கிறார்கள் என்ற கணக்கு போதும். மூன்று வருடம் போடட்டும். குடும்பத்தோடு இருக்கலாம்.
16.11.1957 இல் விடுதலையில் சட்டத்தைக் கொளுத்துங்கள் சாம்பலை மந்திரிக்கு அனுப்புங்கள் என்று அறிக்கை வெளியிட்டார். 17.11.1957இல் வெளியிட்ட அறிக்கையில் இந்திய அரசமைப்புச் சட்டம் ஏன் எரிக்கப் படவேண்டும்? என்பதைச் சட்ட நிபுணரைவிடவும் சிறப்பாகப் பெரியார் விளக்கினார். இறுதியாக, இந்தச் சட்டத்தில் இந்து மதத்துக்குப் பாதுகாப்பு அறிவிக்கப்பட்டி ருக்கிறது. இந்து மதத்தில் ஜாதிக்குப் பாதுகாப்பு இருக்கிறது. ஜாதியை ஒழிப் பதற்கு இதில் இடமில்லை. ஜாதியைக் காப்பாற்றத்தான் இடமிருக்கிறது. இதை எளிதில் திருத்தியமைக்க ஜாதி ஒழிப்புக் காரருக்கு வசதியில்லை, வாய்ப்புமில்லை.
கடலூரில் 17.11.1957 இல் மஞ்சகுப்பத் தில் சொற்பொழிவாற்றுகையில் என்றென் றும் சூத்திரனாக இருப்பதை விட மானக் கேடு வேறு என்ன என்று கேட்டவர். தஞ்சாவூர் மாநாட்டில் தீர்மானம் போட்டுக் காலக்கெடு கொடுத்து அதுவும் தீர்ந்து விட்ட நிலையில், ஜாதிக்குப் பாதுகாப்பு சட்டத்தில் இல்லை என்று விளக்கம் கொடுக்கவோ அல்லது சட்டத்தைத் திருத் துகிறேன் என்று சொல்லாமல் சட்டத்தைக் கொளுத்தினால் 3 ஆண்டு சிறை என்று சட்டம் கொண்டு வந்து விட்டனர்.
எனவே பெரியார் அடக்கு முறைச் சட்டம் செய்த பிறகு நாம் சும்மா இருந்தால் வெளியில் தலைகாட்ட முடியுமா என்று கேட்டு இந்த நிலையில் குடும்பத்துக்கு ஒருவர் சிறைக்குப் போக நாம் துணிந்து விட வேண்டியது தானே! மூன்று வருடமோ அது மூன்று நிமிடம் என்றால் தானே நான் மனிதன் என்று கேட்டு நவம்பர் 26 ஆம் நாளன்று ஆயிரக்கணக்கில் இரகசியமாயில்லாது பகிரங்கமாகக் கொளுத்த வேண்டும். அதைக் கொளுத்தி விட்டுப் பெயர் கேட்டால் சந்தோசமாகக் கொடுங்கள். கோர்ட்டுக்கு அழைத்துக் கொண்டு போனால் செல்லுங்கள் என்றும் கூறினார்.
-   (தொடரும்)

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...