Sunday, October 30, 2011

பூமி மாறி மாறி ஆளப்படுவது - ஏன்?


பூமி மாறி மாறி ஆளப்படுவது - ஏன்?


நாட்டை மன்னர்கள் மாறி மாறி ஆள்கிறார் களே, ஏன் தெரியுமா? இதுவரை தெரிந்து கொள்ளாத ஒரு சங் கதியை இப்பொழுதா வது தெரிந்து கொள் ளுங்கள்.
அதுவும் கந்தசஷ்டி கொண்டாடப்படும் நாளில் (அய்ப்பசி 14 - அக்டோபர் 31) தெரிந்து கொள்ள வேண்டாமா?
நவராத்திரி முடிந் தது, தீபாவளியும் கழிந் தது அடுத்து சுரண் டலுக்கு வழி தேட வேண்டாமா?
வந்துவிட்டது - ஆம், வந்து விட்டது கந்தசஷ்டி! கந்தன், சுப்பிரமணியன், முருகன், ஆறுமுகன் எல் லாம் ஒரு பொருள் பன் மொழிகள்!
ராமநவமி, கிருஷ் ணன் அஷ்டமி, விநாய கர் சதுர்த்தி என்பது போல கந்தன் சஷ்டி - அற்றவன் கடவுள் பிறப்பு, இறப்பு என்று சொல்லிக் கொள் வார்கள்; ஆனால் கடவுள்களின் பெரிய ஜாபிதா அதற்குப் பிறந்த நாள்கள் - இதுதான் அர்த்தமுள்ள இந்து மதத்தின் மகாமகா கூத்து.
வழக்கம்போல ஓர் அரக்கன் வர வேண்டாமா? அவன்தான் சூரபத்மன். அரக்கனைக் கொல்ல கடவுளைப் பிரார்த்திக்க வேண்டாமா?
சிவனை வேண்டினர் - கடவுளாக இருந்தாலும் உடல் சேர்க்கை வேண் டாமா? சிவன் - பார்வதி கூட ஆரம்பித்தனர் - ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல - நூறு தேவ வருட காலம் நடந்ததாம்.
இதற்கு மேலும் பிண்டம் தரித்தால் நாடு தாங்காது என்று தேவர்கள் முறை யிட்டு நிறுத்தும்படிக் கெஞ்சினார்களாம்.
அதன் விளைவு வீரியம்  ஆறாகப் பெருக்கெடுத்த தாம். தேவர்கள் கைகளில் ஏந்தி குடித்ததால் கர்ப்பம் அடைந்தார்களாம். காஞ்சீ புரத்தில் உள்ள கரகரீஸ் வரர் குளத்தில் மூழ்கிக் கர்ப்பம் கலைந்தனராம்.
மீதி வீரியத்தை கங்கை யில் கொண்டு போய் விட்டனராம். அது ஆறு கிளைகளாகப் பிரிந்து ஓடி ஆறு குழந்தைகள் ஆயிற் றாம்.
ஆறு பெண்கள் பால் கொடுக்க வந்தார்களாம். ஆறு பெண்கள் பால் கொடுப்பது சிரமமாக இருப் பதாக எண்ணி அவர்கள் ஆறு பேர்களையும் ஒன் றாக அணைத்துப் பால் கொடுக்கையில் முகம் ஆறாகவும் (தலைகள்) கைகள் பன்னிரெண்டாக வும், உடல் ஒன்றாகவும் ஆனதுதான் ஆறுமுகத் தின் கதையாம்.
இதில் வடமொழியில் ஸ்கந்தன் என்றால் இந்திரி யம் என்று பொருள் - சிவனின் இந்திரியத்திலி ருந்து பிறந்ததால் ஸ்கந் தன் - கந்தன் என்று பெய ராம்.
இப்படிப் பிறந்த ஆபாச பேர் வழிக்குத்தான் கந்த சஷ்டி கொண்டாடப்படு கிறது. அதுவும் ஆறு நாள் விரதம் இருந்து கொண் டாட வேண்டும்.
முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங் குன்றம், திருச்சீரலை வாய், திருவாவினன்குடி, திருவேரகம், பழமுதிர் சோலை ஆகிய இடங் களில் கந்தசஷ்டி என்ற பெயரால் பகல் கொள்ளை பக்தர்களிடமிருந்து!
அர்த்தமுள்ள இந்து மதம் இதுதான் - தனக் குரிய வீரியத்தைப் பூமி தேவி தாங்கியதால் பார் வதிக்கு மகா மகா கோபம் பீறிட்டுக் கிளம்பி சாபம் விட்டாளாம்.
உன்னை மாறி மாறி அரசர்கள் ஆளக் கடவது என்பதுதான் அந்தச் சாபமாம்!
கடவுளைக் கற்பித் தவன் முட்டாள், பரப் பியவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று சொன்னால் கோபப்படும் பக்த சிரோன்மணிகளே. இந்தக் கந்தன் பிறப் புக்கு என்ன காரணம் சொல்லப்போகிறீர்கள்?

Saturday, October 29, 2011

சுப்பிரமணியன் சாமியின் சுப்ரபாதம்


சுப்பிரமணியன் சாமியின் சுப்ரபாதம்


இசுலாமிய தீவிரவாதம் இந்தியப் பாதுகாப்பிற்கு விடப்பட்டுள்ள மிகப் பெரிய சவாலாகும்.

2012--_க்குப்பின் பாகிஸ்தானைத் தலிபான் கைப்பற்றும்: அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும். இசுலாமிய தீவிரவாதத் தின் இலக்கு அடுத்த இந்து இந்தியா வாகத் தான் இருக்கும்.

இசுலாமிய வெறியர்கள் இந்தியா வில் தங்கள் பணி இன்னும் நிறைவுற வில்லை என்றே நம்புகின்றனர். இசுலாமியர் வென்றெடுத்த நாடுகளில் எல்லாம் 100 சதவிகிதம் பேர் இசுலாமியராக மதம் மாற்றப்பட்டனர். இவர்கள் சூழ்ச்சி இந்தியாவில் மட்டும் இதுவரை நிறைவேறவில்லை. இன்னும் இந்தியர்களில் 75 சதவிகிதம் இந்துக் களாக இருப்பதில் இசுலாமிய மத வெறியர்களுக்கு உடன்பாடில்லை. இந்த நிலைக்கு இந்துக்களே காரணம்.

இந்துக்களில் சரிபாதி பேர் தம் சாதிய வேறுபாடுகளை மறந்து இந்துக்களாக வாக்களித்தால், இந்திய நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத் திலும் ஒரு தூய்மையான இந்துக்கட்சி ஆட்சிக் கட்டிலேறும்.

தீவிரவாதிகளின் தாக்குதலை, தனி மனிதர் மீதான தனித்தாக்குதலாகக் கருதாமல் ஒரு இந்துவின்மீது, இந்துமதத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருத வேண்டும்.

இந்நாட்டில் வாழும் இசுலாமி யர்கள் தங்கள் மூதாதையர்கள் இந்துப் பாரம்பரியத்துக்குரியவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இசு லாமியர்கள் இவ்வுண்மையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்துச் சமூகத்தின் உறுப்பினராக ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத இசுலாமியர்க்கு வாக்களிக்கும் உரிமை வழங்கக் கூடாது.

இந்தியாவில் எழும் தீவிரவாதத்திற்கு ஒரே மருந்து, ஒரு இந்து வீரதீர இந்துவாக மாறுவதே, இந்த மன நிலையை ஒவ்வொரு இந்துவிடமும் உருவாக்க வேண்டும்.

இந்தியர்களிடம் இந்தத் தேசியப் பண்பை உருவாக்க வேண்டும். மன்மோகன்சிங் தனி மனிதர் என்ற அளவில் நல்ல பண்புடையவராக இருக்கலாம்; ஆனால் அரைகுறை கல்வி அறிவைப் பெற்ற சோனியா காந்தியின் சீடனாக இவர் செயற் படுவதற்கு காரணம் மன்மோகனிடம் தேசியப் பண்பு இல்லாமைதான்.

தீவிரவாதிகள் முன்வைக்கும் எந்த கோரிக்கைகளுக்கும் இணங்கக் கூடாது. திருப்பியடிப்பதுதான், இந்துக் களின் கொள்கையாக இருக்க வேண்டும். இசுலாமிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள கீழ்க்கண்ட யுக்திகளைக் கையாள வேண்டும்.

அ. காசிவிசுவநாதர் கோவிலில் இருக் கும் மசூதியை அப்புறப்படுத்து; இந்து நகரங்களில் இப்படியாக உள்ள 300 மசூதிகளை அகற்று.

ஆ. அரசியல் சாசனத்தின் பிரிவு 370அய் அகற்றுக. காஷ்மீரில் இந்து பண்டிட்டுகளுக்கு பனுன் காஷ்மீரை உருவாக்கு.

இ. சிவில் பொதுச் சட்டத்தை நடை முறைப்படுத்துக; சமஸ்கிருத மொழியை அனைவரும் கற்க வகை செய்க; வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாக்குக. இந்தியாவை இந்து ராஜ்ஜியம் என அறிவிக்க, இந்த ராஜ்ஜியத்தில் இந் துக்கள் பெருமைமிக்க முன்னோடிகள் என அறிவித்துக் கொள்வர்.

ஈ. இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறுதலை தடை செய்க: இந்து மதத்திற்கு மீண்டும் மதம் மாறுதலைத் தடுக்கக் கூடாது. சாதி பிறப்பினடிப்படையில் அல்ல; ஒழுக்கத்தின் அடிப்படையில் எனப் பிரகடனப்படுத்துக. இக்கோட்பாட்டை ஏற்றுக் கொள்பவர்கள் இந்துவாக மாறத் தடையில்லை.

உ. இந்து மனோபாவத்தை வளர்க்க முயலல். இந்தியாவில் எழுந்துள்ள இசுலாமிய தீவிரவாதத்தை மேற்கண்ட யுக்திகளால் அய்ந்து வருடத்திற்குள் தடுத்துவிட முடியும்.

இந்தியாவில் வாழும் இந்துக்கள் 50 சதவிகிதம் பேர், இந்து வாக்காளர்களாக மாறினால் போதும். இந்தியாவில் மிகப் பெரிய மாற்றத்தைச் சந்திக்கலாம்.

இந்தியாவில் அவ்வப்போது நிகழ்த் தப்பெறும் தீவிரவாதச் செயல்களுக்கு இசுலாமியரே காரணம் என்றும், இப்போதும் இன்னும் தொடரப் போவதாகவும் இசுலாமிய மத வெறியர்களின் பணி இந்தியர்கள் அனைவரையும் இசுலாமியர்களாக மாற்றுவதில் முழுமையாக வெற்றி பெறாநிலையில், இன்னும் 75 சதவிகித பேர் இந்துக்களாக இருப்பது இசுலாமியர்களின் பணி முடியவில்லை என்பதைக் காட்டுவதாகவும் சனதாக் கட்சியின் தலைவர் சுப்ரமணியன் சுவாமி அவர்கள் தன் தேவ வாக்காகக் கொட்டியுள்ள இக்கருத்துகளை யாரோ ஒரு தனி மனிதனின் உளறல் என்று ஏற்றுக் கொள்ளலாமா? விஷம் கக்கும் இப்பாசிச சொற்கள் வெறும் உளறலா? இதன் பின்னிருக்கும் அரசியல் என்ன?

சுப்பிரமணியன் சுவாமியின் இக்கருத் துகளுக்கு நம்மூர் கட்சிகள் எதுவும் வெளிப்படையாக எதிர்ப்பெதுவும் தெரிவிக்கவில்லை. நம் பத்திரிகைகள் நம் வர்ண தர்மத்தைக் காக்கும் வகையில் மவுனிக்கின்றன. மிகப் பெரிய அளவில் விமர்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பொதுவுடைமைக் கட்சிகள் ஏன் வாயைத் திறக்கவில்லை எனத் தெரியவில்லை. குடிமைச் சமூக அமைப்புகளுக்கு சுப்பிரமணியன் சாமியின் பேச்சின் சாரம் சென்றடைய வில்லையோ என்று எண்ணுமளவிற்கு மவுனம் சாதிக்கின்றன. ஊழலுக்கு எதிரான நாடு தழுவிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள போராட்டப் பேரலையில் சுப்ரமணியன் சாமியின் பகைப்பேச்சுகள் மூழ்கி விட்டனவோ? இந்தத் தேசிய மவுனம் விளைவிக்கும் ஆபத்தை ஏன் எவரும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை?

ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சுப்பிரமணியம் சுவாமி உதிர்த்த எந்த விஷயமும் புதியனவல்ல; இந்துத்துவா என்ற கோட்பாட்டை உருவாக்கிய வீரச வார்க்கரின் அனைத்து வார்த்தைகளின் மறுமதிப்பே இவை. தொடர்ந்து கோல்வாக்கரின் Bunch of Thoughtஎன்ற நூலின் சாரமே சுப்பிரமணியன் சுவாமியின் இந்த அலசல்கள். கோல்வாக்கரின் இந்து ராஷ்டிரம் என்றால் என்ன என்ற ஆவணமும் இங்கே சுப்ரமணியன் சுவாமிக்குப் பயன்பட்டிருக்கிறது.

இந்நாட்டில் வாழும் இசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள் இந்துக் கலாச்சாரத்தைப் போற்ற வேண்டும். இந்துத் தலைவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும்; இல்லையெனில், இவர்கள் இந்தியாவில் வாழலாம்; எப்படி? எந்தச் சலுகையும் பெறாமல், ஏன் குடியுரிமைகூட இல்லாமல் வாழலாம். கோல்வாக்கரின் இந்துராஷ்டிராவின் ஒரு பகுதி இது.

மக்கள் முன் கையேந்தி வாக்கு கேட்கும் ஒரு கட்சியின் தலைவர், இவ்வளவு தைரியமாகப் பேச முடிந்ததே எப்படி? அத்வானிகளும், சுஷ்மாக்களும், இக்கருத்தை நம்புபவர்கள் எனினும், உளமார ஏற்றுக் கொண்டவர்களே எனினும் வெளிப்படையாக சுப்பிர மணியன்சுவாமி கூறுமளவிற்கு இவருக்கு தைரியம் அளித்தது யார்?

பல்சமய நாட்டின் பன்முகத்தன்மை மறுத்து மத அடிப்படையிலான பெரும்பான்மையை உருவாக்கி ஓராட்சி உருவாக வேண்டும் என்பதை எந்தவித தயக்கமுமின்றி சுப்ரமணியன் பேசுகிறார்.

மதவாத அடிப்படையில் உருவாகும் அரசு பன்மையை மறுப்பது; ஒரு சிலரை ஒதுக்குவது; சமயச் சார்பின்மையும் சன நாயகமும் கேலிப் பொருளாவது; இவ்வாறான பாரதூர விவாதங்களை உருவாக்கும் இக்கருத்தை சமூகத்துள் புகவிடலாமா? சட்டத்தின் ஆட்சி இதனை ஏற்கலாமா? கருத்துச் சுதந்திரம் பொது ஒழுங்கிற்கும், மக்களின் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் இவ்வகையான விமர்சனங்களை அரசு தடுக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டாமா?

மும்பையில் சூலை 13, 2011 அன்று நடந்த குண்டு வெடிப்புக்கு எதிர் வினையாற்றியிருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, இக்குண்டு வெடிப்புகள் இந்துக்களிடம் ஏற்பட வேண்டிய எதிர் வினைகளைச் சுட்டிக் காட்டுகிறார். இக்குண்டு வெடிப்புகள், இசுலாமிய தீவிரவாத யுக்தியின் ஒரு பகுதியே என்று கூறி, தீவிரவாதம் என்றாலே இசுலாமிய தீவிரவாதமாகத் தான் இருக்க முடியும் என்று கூறுகிறார். அய்தராபாத் மசூதி குண்டு வெடிப் பிலும், மராட்டியத்தின் மாலேகனிலும், நடந்த குண்டு வெடிப்புகள் இந்து மதவாதிகளால் நிகழ்த்தப்பட்டன என்பதும், காஷ்மீர் தீவிரவாதமும், இந்தியாவுக்கு ஆபத்தை விளைவிப்பதே என்று நாளும் இந்து மதத் தீவிரவாத அமைப்புகள் அம்பலப்பட்டு வரு கையில், இந்துக்களை ஒருங்கிணைக்க ஏற்கெனவே இந்து தீவிரவாதிகள் சொன்ன கருத்துகளை தன் கருத்தாக பேசி வரும் சுப்ரமணியன் சாமிகளை என்ன செய்வது?

- தேவா
(ஆதாரம்: சுப்ரமணியன் சாமியின் கட்டுரை
How to Wipe out Islamic Terror: Daily News and Analysis, Mumbai Edition) நாள்: 16.7.2011)
நன்றி: செப்டம்பர் 2011 மனித உரிமைக் கங்காணி

பெரியாரைப் பற்றி சோ எழுதியது என்ன?

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (16) பெரியாரைப் பற்றி சோ எழுதியது என்ன?



கலி.பூங்குன்றன்

9.7.1953 நாளிட்ட விடுதலை தலையங்கத்தின் தலைப்பு ஆரியத்தின் அற்பப் புத்தி!

என்ன அந்த அற்பப் புத்தி?

கோபால்சாமி அய்யங்கர் இறந்து போன போது அரைப் பத்தி அளவுக்கு அனுதாபச் செய்தி வெளியிட்ட தமிழ்நாட்டு ஆரியத் தலைவர் ஒருவர் உலகத் தலைவர்களில் முதலிடம் பெற்றிருந்த ஸ்டாலின் இறந்தபோது, சாவது உலக இயற்கைதான். இவருக்குப் பின்னால் மற்றொருவரும் இவர் இடத்துக்கு வருவார் என்று ஒரே வரியில் கூறி முடித்துக் கொண்டார்.

இதனால் ஸ்டாலினுடைய புகழ் குறையவில்லை. இப்படிக் கூறியவரின் சிறுமைக் குணம்தான் வெளிப்பட்டது. 3_-ஆந்தரம் - 4_ஆந்தரமான பார்ப்பன ருக்காக அனுதாபத் தலையங்கம் எழுதுகின்ற ஹிந்து பத்திரிகை பனகல் அரசர், கே.ஆர். சண்முகம் போன்ற திராவிட இனத் தலைவர்களுக்கு ஒரு வரி கூட எழுதவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்து போன்ற ஏடுகள் கூட தனியாருடையவை. அவை எப்படியோ போகட்டும். அரசுக்குச் சொந்தமான அகில இந்திய வானொலி நிலையம் எப்படி நடந்து கொண்டது?

ஆல் இண்டியா ரேடியோ அல்ல; ஆல் அய்யர் அண்ட் அய்யங்கார் ரேடியோ நிலையம் என்றுதான் திராவிடர் கழகத்தவர்கள் அழைப்பது வழக்கம்.

அதைப் பற்றியும் அன்றைய விடுதலை (9.7.1953) அந்தத் தலை யங்கத்தில் குறிப்பிட்டிருந்தது.

உதாரணமாக, சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு தெலுங்குப் பார்ப்பனர் - முதியவர் - இறந்து போனார். அவர் ஒரு மருந்து வியாபாரி. கேசரி குடீரம் என்ற மருந்து விற்றுப் பெரும் பொருள் திரட்டியவர். இவரைப் பற்றி சென்னை வானொலி நிலையத் தார் செய்தி பரப்பியதுடன் வரலாற்றுக் குறிப்பு, பாராட்டுக் குறிப்பையும் ஒலி பரப்பினார்கள். இவருடைய மருந்தின் பெயரால்தான் இவர் பெயர் மக்களுக் குத் தெரியும். இப்பேர்ப்பட்டவர்க்கு - பார்ப்பனர் என்ற ஒரே காரணத்தால் - வானொலி இலாகாவில் விளம்பரம்!

இதேபோல் அண்மையில் காலஞ் சென்ற டி.ஆர்.வெங்கட்ராம சாஸ்திரி யாரைப் பற்றியும் சென்னை வானொலி நிலையத்தார் தனிப்புகழ் பாடினர்.

ஆனால் மறைமலையடிகள், ஆர்.கே.சண்முகம், எஸ்.முத்தய்யா (முதலியார்) போன்ற மாபெரும் தலைவர்கள் மறைந்தபோது வானொலி யில் எந்தப் பாராட்டுரையும் வழங்கப் படவில்லை. ஆர்.கே.எஸ். மரணம் பற்றி 2-_3 வாக்கியங்களே கூறினர். இவர் காங்கிரஸ் கட்சிப் பெருந்தலைவர்களில் ஒருவராக இருந்தவர்.

அக்கட்சியின் முதலாவது மந்திரிசபை டில்லியில் ஏற்பட்ட போது இவர் எதிர்க்கட்சித் தலைவராயிருந்துங்கூட தனித்திறமை கருதி நிதியமைச்சராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டவர். அகில இந்தியப் புகழ் மட்டுமல்ல; சர்வதேசப் புகழும் பெற்றவர். நிர்வாகத் துறைகள்  பலவற்றிற்குத் தலைமை தாங்கித் தனித் திறமை காட்டியவர்.

கலாச்சாரத் துறையிலும் தமிழிசைக்கு அவர் ஆற்றிய தொண்டுக்காக சி.ஆர். _ கல்கி யார் போன்ற ஆரியத் தலைவர்களின் புகழுரைகளுக்கு உரிமையாயிருந்தவர். திராவிட இன உணர்ச்சியைக் காட்டிக் கொள்வதே வெட்கம் என்று கூடக் கருதியவர். இப்பேர்ப்பட்ட ஒருவருக்கே வானொலி நிலையத்தில் இருட்டடிப்பு நடக்கிறது என்றால் மற்ற திராவிடத் தலைவர்களின் கதி என்னவாகும்? என்று தலையங்கம் தீட்டியதே விடுதலை.

இவற்றையெல்லாம் கூட விட்டுத் தள்ளுங்கள். உலகத் தலைவர் தந்தை பெரியார் மறைவிற்குத் தலையங்கம் தீட்டாத ஒரே ஒரு ஏடு ஹிந்து பார்ப்பன ஏடுதானே!

தமிழ்ப் பத்திரிகை உலகின் ஜாம்ப வானான சி.பி.ஆதித்தனாரின் மறைவுச் செய்தியை உள்ளே மறைவுச் செய்தியாக வெளியிட்ட ஹிந்து  ஏடு,  அதே நாளில் மறைந்த மிருதங்க வித்வானான பாலக்காட்டு மணி அய்யர்வாளைப் பற்றி முதல் பக்கத்தில் வரிந்து தள்ளியிருந்ததே!

அன்னை மணியம்மையார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் மறைவுச் செய்திகளை மரணம் அடைந் தோர்க்கென்று ஹிந்து  ஏட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பத்தியில் (ளிதீவீணீக்ஷீஹ்) வெளியிட்டு இருந்தது என்றால்,  இவற்றை விட பார்ப்பனத் திமிர் பிடித்த கூட்டத்தின் துவேஷம் என்ற ஆலகால நஞ்சுக்கு வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை?
இவ்வளவு இருந்தும் இவை எல்லாவற்றையும் கடந்து தமிழ்நாட் டில் ஒரு அதிசயம் நடந்திருக்கின்றது. அதுதான் துக்ளக் இதழ் தந்தை பெரியார் பற்றி தீட்டிய தலையங்கம் ஆகும்.

சோவின் சிந்தனைகளையும் மீறி அந்த இடத்தில் தந்தை பெரியார் வெற்றி பெற்று இருக்கிறார் என்று தான் இதற்குப் பொருள்.  இதோ சோ எழுதுகிறார்:

திரு ஈ.வெ.ரா.

இவர்களா பெரியார்கள்? என்று பலரைப் பார்த்து, திரு ஈ.வெ.ரா. கேட்டதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது . . . ஜாதி, மத வித்தியாசங் களின் அடித் தளத்தையே ஆட்டி வைத்து சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகளை அடித்து நொறுக்கும் பணியில் ஈடுபட்டதற்காக இவரைப் பாராட்டத்தான் வேண்டும். . . அர்த்தமற்ற இந்த ஜாதி, மத பேதங்கள் என்ற வறட்சி நிலையில் அகப்பட்டுத் துவண்டு கொண்டிருந்த தமிழ் நாடு என்ற பயிர் மீது ஈ.வெ.ரா. என்ற பருவ மழை கொட்டியது . . . தன் மனத்திற்கு அவ்வப்போது சரியென்று படுவதை எந்த மேடையிலும் துணிவாகப் பேசிவிடும் இவர் நேர்மை, பொது வாழ்வில் சஞ்சரிக்கும் மற்றவர்களிடம் இருக்கிறதா என்பது சந்தேகம்தான்.

1-.6.-1970 துக்ளக்கில் பெரியார் பற்றி எழுதியிருந்த கட்டுரையிலிருந்து ஒரு சில பகுதிகளைத்தான் மேலே கொடுத்திருக்கிறோம்...

அந்தக் கட்டுரையிலும் சரி, மற்ற பல சந்தர்ப்பங்களிலும் சரி, பெரியார் ஈ.வெ.ரா. அவர்களுடைய சில செயல் களை நாம் விமர்சனம் செய்திருக் கின்றோம்.

அர்த்தமற்றவையாகவும், பல சமயங்களில் அவருடைய பேச்சுக்கள் வேதனையளிப்பதாகவுமே இருந்தன என்பதே நம் அபிப்பிராயமாக இருந்தது.

அவருடைய பல அபிப்பிராயங் களோடு நம்மால் ஒத்துப் போக முடிய வில்லை என்றாலும் ஜாதி பேதங்களை ஒழிக்கத் தன் வாழ்வையே அர்ப்பணித் துக் கொண்டவர் என்ற முறையில் அவ ரைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

இன்று ஒரு கொள்கை, நாளை ஒரு கொள்கை என்று அலையும் அரசியல் வாதிகளே எங்கும் பரந்து கிடக்கும் சூழ்நிலையில் திரு.ஈ.வெ.ரா. மட்டும் தன் கொள்கைகளில் கடைசி வரையில் அசையாது பிடிப்புக் கொண்டிருந்தார்.

ஊருக்குத் தகுந்தாற்போல், மேடைக் குத் தகுந்தாற் போல், வந்திருக்கும் கூட்டத்திற்குத் தகுந்தாற் போல் தங்கள் பேச்சுக்களைச் சிறிதும் வெட்கம் இல்லாமல் மாற்றிக் கொள்ளும் பேச்சாளர்கள் நிறைந்த நம் நாட்டில், எங்கு பேசினாலும் சரி, எவர் வந்தாலும் சரி, தனது கருத்தை மண்டையிலடித் தாற் போல் கூறும் துணிவு கொண்டி ருந்தவர் திரு. ஈ.வெ.ரா.

இந்த நாட்டில் பெருவாரியான மக்கள் ஒன்று தனக்கென எந்தவித அபிப்பிராயமும் இல்லாதவர்கள் ; இரண்டு அப்படியிருந்தாலும் வெளியே சொல்ல அஞ்சுபவர்கள். அப்படிப்பட்ட . . . . திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தவர் அவர்.

ஒரு தனிப்பட்ட மனிதர் என்ற முறையில் இவர் மற்றவர்களுக்குக் காட்டிய மரியாதையைக் கேள்விப் பட்டால் வியப்பு மேலிடுகிறது! வயது, அந்தஸ்து, பிறப்பு இந்த மாதிரி அடிப்படைகளிலெல்லாம் சற்றும் வித்தியாசம் பாராமல், எந்த மனி தனையும் மனிதன் என்று உணர்ந்து மதிப்பதிலும், மரியாதை அளிப்பதிலும் இவருக்கு நிகராக யாருமே இல்லை யென்று கேள்விப்பட்டிருக்கிறோம். அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் யாரிடமும் திரு.ஈ.வெ.ராவுக்கு வெறுப்பு உணர்ச்சி இருந்தது இல்லை.

15.-1.-73 துக்ளக் இதழிலிருந்து ஒரு பகுதி. . .இராஜாஜியுடன் இவருக்கு இருந்த அபிப்பிராய பேதங்கள் ஆயிரமாயிரம். அவரைப் பற்றி இவர் தாக்கிப் பேசிய மேடைகள் கணக்கில் அடங்காது. அவர் ஆஸ்திகர். இவர் நாஸ்திகர். இப்படி அவருக்கும் இவருக் கும் மிகுந்த மனவேறுபாடுகள்தான் எத்தனை?

ஆனால் இராஜாஜி இறந் தார் என்ற செய்தி கேட்டுப் பெரியர் ஈ.வெ.ரா. துடித்த துடிப்பையும், உடல் நலக் குறைவு இருந்தும் இடுகாட்டிலும் வந்து அமர்ந்து இராஜாஜியின் அந்திமக் கிரியைகள் முடியும் வரை அங்கேயே இருந்து, தாங்க முடியாத துயரத்தை இவர் குழந்தை போல் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந் ததையும் நேரில் கண்டவர்கள் கூறும் போது மெய் சிலிர்க்கிறது. நட்பிற்கு உதாரணம் வகுத்த இவருக்கு, இந்த சமயத்தில் மரியாதை செலுத்துவதில் நாம் பெருமை கொள்கிறோம்.

இப்படிப்பட்ட மனிதர்கள் நம் நாட்டில் குறைந்து கொண்டே வருகிறார்கள். போலியாகவும், மற்றவர் களைத் திருப்திப் படுத்துவதற்காகத் தனது மனச்சாட்சியை அமுக்கிக் கொண்டும் வாழ்பவர்களுமே நிறைந்து காணும் இக் காலத்தில், உண்மையாக வாழ்ந்த ஒரு சிலரில் திரு.ஈ.வெ.ராவும் ஒருவர். அவருடைய கொள்கைகள் சிலவற்றிலும் அவருடைய செயல்கள் பலவற்றிலும் நாம் பல முறை குற்றங்கண்டிருக்கிறோம். அவற்றை யெல்லாம் மீண்டும் சுட்டிக் காட்ட இது நேரமில்லை. ஆனால், அவருடைய எண்ணங்களின் நேர்மையில் நாம் குற்றம் கண்டதும் கிடையாது; காண வும் முடியாது.

சமூகம் ஏற்றுக் கொள்ள முடியாத சில காரியங்களை அவர் செய்திருக் கிறார் என்று கூறும்போது, சமூகத் திற்கு நன்மையையும் செய்திருக்கிறார் என்று ஒப்புக் கொண்டே தீர வேண்டும்.

ஜாதி துவேஷங்கள் வெகுவாகக் குறைந்த பிறகும் அதைப் பற்றி விடாமல் பிரச்சாரம் செய்து வந்தாலும் கூட, 95 வயதாகியும் கடைசிவரை புத்தி தீட்சண்யத்துடன் அவர் வாழ்ந்தது இளைஞர்களுக்கு ஓர் எடுத்துக் காட்டு.

மூடநம்பிக்கைகளை ஒழிக்க அவர் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார் என்று கூறி மக்கள் மனத் திருப்தி பட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை. தெய்வங்களிடம் கூட நம்பிக்கை வைக்கக்கூடாது என்று பிரச்சாரம் செய்து வந்தவர் திரு. ஈ.வெ.ரா. தெய்வ நம்பிக்கை கூடாது என்று அவர் கூறியதை நம்மால் கண்டிப்பாக ஒப்புக் கொள்ள முடியாது.

ஆனால் தெய்வங் களின் அளவிற்கு, அருகதையற்ற மனிதர்களை உயர்த்தி, அந்த மனிதர்க ளிடம் மூடநம்பிக்கை வைத்து விடுவது என்ற நம் நாட்டு மக்களின் மடமை என்றாவது நீங்கினால் அன்றுதான் பெரியாரின் வாழ்க்கை இலட்சியம் ஓரளவாவது ஈடேறியிருக்கிறது என்று அர்த்தமாகும். அது என்றாவது ஒரு நாள் நடக்கத்தான் போகிறது என்ற நம்பிக்கையுடன், மறைந்த திரு.ஈ.வெ. ரா.வின் துணிவிற்கும் நேர்மைக்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம்.

(துக்ளக்  1-.1.-1974)

என்னதான் வலிந்து குறை சொல்லி எழுதி இருந்தாலும் தந்தை பெரியார் அவர்களின் சீலமிக்க கொள்கையி னையும், நேர்மையையும், கொழுந்து விட்ட அவர்தம் பண்பாட்டின் நீட்சியையும் சோ போன்ற பார்ப் பனர்களே புறந்தள்ளிவிடவில்லை.

இன்றைக்கு அதே துக்ளக்கில் தந்தை பெரியார் அவர்களையும், அவர் கண்ட இயக்கத்தையும், இயக்கத் தலைவர்களையும் மானாவாரியாகக் கொச்சைப்படுத்தி சேறு வாரி இறைத் தாலும், அவை கதிரவனைக் கண்டு சத்தம் போடுவதாகவே கருதப்படும்.
(பார்ப்போம்)

நீதிக்கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை


ஜாதி, மத, இன வேறுபாடின்றி, அனைத்துப் பிரிவு மக்களையும் முன்னேற்றம் பெறச் செய்வதில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர்கள், காங்கிரசின் இத்தகைய அலட்சியப் போக்கையும், அக்கறையின்மையையும் கண்டு வருந்தினர். அதனால், ஹோம் ரூல் இயக்கம் என்பதே தோன்றி இருக்கா விட்டாலும் கூட,  பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் என்று அழைக்கப்படும் நமது அமைப்பு, இந்திய தேசக் கட்டமைப்பு மற்றும் தேச மறுமலர்ச்சி பற்றி வேறுவிதமான கருத்துகள் பலவற்றைக் கொண்டிருந்த வர்களால் கட்டாயமாக உருவாக் கப்பட்டே இருக்கும் என்பது முன்னமேயே எடுக்கப்பட்ட முடிவாகும். முன்னேற்றம் என்று நாம் அழைப்பது, ஒரு குறிப்பிட்ட பிரிவு அல்லது பகுதி மக்கள் நவீன வழி முறைகளில் முன்னேற்றம் பெறுவதனைக் குறிப்பது அல்ல. நாட்டில் உள்ள அனைத்துப் பிரிவுகளின், சமூகங்களின் மக்கள் ஒரு சேர முன்னேற்றம் அடைவது என் பதையே அது குறிக்கிறது. உண்மை யில் நம் நாட்டில் உள்ள அரசியல் வாதிகள், அவர்களது கட்சிகளில் நிலவும் பாரம்பரிய மூட நம்பிக்கைகள் மற்றும் தள்ளு முள்ளுகளுக்கிடையே, இத்தகைய ஒருங்கிணைந்த முன்னேற்றம் பெறுவது என்பதனை அடையாளம் காணவே இல்லை. ஜாதிகள் மலிந்த இந்தியா போன்ற தொரு நாட்டில், தூய்மையான ஜனநாயக மரபுகள் அரிதாகவே இடம் பெற்றிருப்பதில் வியப்பேதுமில்லை. அந்த கருத்து தோன்ற வேண்டு மானால், நாட்டின் அனைத்து சமூகங் களைச் சேர்ந்த அனைத்து மக்களும், அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் குழுக்களுக்கிடையேயான செயற்கைத் தடைகள் ஏதுமின்றி, சமமான உரிமைகளும், வாய்ப்புகளும் பெற்றவர்களாக  இருக்க வேண்டும் என்ற எண்ணம் வேரூன்ற வேண்டும்.  மக்களின் மனதில் நன்கு ஊடுருவி, மக்களிடையே பரவலாகப் பரவியுள்ள இந்தக் கருத்தின் வழிகாட்டுதலில் தான் நமது இயக்கம் செயல்பட்டு வருகின்றது. இந்தக் கருத்து முழுமை யாகச் செயல் வடிவம் பெற வேண் டுமானால்,  நமது ஆன்மாக்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் நமது அறிவையும், சிந்தனையையும் அடிமைப் படுத்தி வைத்திருக்கும், நமது பழைய ஆன்மிக வழிகாட்டுதல்கள் என்னும் தளைகளில் இருந்து நாம் விடுபடவேண் டும். நமது புதிய இயக்கத்தைத் துவக் கியதற்கான மற்றொரு காரணம் இதுதான். இந்த மாநாடு இக்கொள்கை உணர்வுக்கு உருவம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
கோவையில் உள்ள உங்களுக்கு என்று உங்களின் சொந்த காரணங்களும் இருந் திருக்கலாம். உங்களது நலன்களைத் தியாகம் செய்யாமலும், உங்களது எண்ண ஓட்டங்களைக் கட்டுப்படுத்தாமலும், இந்த இடத்திலிருக்கும் பொறுமை அற்ற கொள்கையாளர்களுடன் முழுமனதுடன் ஒத்துழைப்பது இயலாது என்பதை நீங்கள் கண்டுகொண்டிருக்கக்கூடும். உங்களை அவர்களிடமிருந்து பிரிக்கும் முக்கியமான பிரச்சினைகளுக்குள் விரிவாகச் சென்றுரைக்க நான் விரும்பவில்லை. மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு முன்பு இங்கு உள்ளூரில் நடைபெற்ற ஒரு நிகழ்வினைப் பற்றி மட்டுமே உங்களது கவனத்துக்குக் கொண்டு வர விரும்பு கிறேன். பென்ட்லாண்ட் பிரபு கோவை நகர வாசிகளுக்கு செய்த நன்மைகளுக்காக  அவர்கள் அவரிடம் நன்றி பாராட்ட வேண்டியவர்களாக தாங்கள் இருப்பதாக உணர்ந்தனர். அங்கீகரிக்கப்பட்ட அவர் களின் தலைவர்களின் வழிகாட்டுதலில், அவருக்கு தங்கள் நன்றியினை வெளிப் படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று அம்மக்கள் விரும்பினர். ஆனால் இந்த விஷயத்தில் ஹோம் ரூல் இயக்கத்தினர் செய்தது என்ன?  சொல்லப் போனால், நம்மை விடவும் மேதகு பென்ட்லாண்ட் பிரபுவிடம் அவர்கள் நன்றிக் கடன் பட்டவர்களாக இருப்பதற்குப் போதிய காரணங்கள் இருக்கலாம்.  பென்ட் லாண்ட் பிரபு கருணை உள்ளமும், தாராள மனமும் கொண்ட ஓர் ஆட்சியாளர். கற்றறிந்த பிரிவு மக்களின் நலன்களை முன்னேற்றம் பெறச் செய்ய அவர் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வந்தார். எடுத்துக் காட்டாக,  உயர்நீதி மன்றத்தில் உள்ள இந்திய நீதிபதிகளின் எண்ணிக்கையை அய்ந்தாக உயர்த் தியதைக் குறிப்பிடலாம்.  அரசு செயலாள ராக இந்தியர் ஒருவர் முதன் முறையாக நியமிக்கப்பட்டது அவர் ஆளுநராக இருந்த காலத்தில்தான்; அதுவும் அவரது வலியுறுத்தலால் செய்யப் பட்டது. வரு வாய்த் துறைக் கழகம் (போர்ட் ஆஃப் ரெவின்யூ)விற்கு உறுப்பினராக ஓர் இந்தியரை நியமித்த முதல் ஆளுநரும் அவர்தான். சென்னையில் பெண்களுக்கான அரசு கல்லூரி ஒன்றை நிறுவியதன் மூலம், பெண்கல்வியில் தனக்கிருந்த ஆர்வத்தை மெய்ப்பித்தார். மாகாணத்தின் தொழில் துறை வளர்ச்சியில் நடைமுறை சாத்தியமான ஆர்வத்தை அவர் எடுத்துக் கொண்டார்.
அவரது நேரடி மேற்பார்வை யில் ஏற்பாடு செய்யப்பட்டு, நடத்தப்பட்ட தொழில்துறை கண்காட்சிகளே இதற்கான சாட்சிகளாகும். என்றாலும் அவரது இத்தகைய உதவிகளுக்காக நன்றி பாராட்ட வேண்டியவர்களான இப் பிரி வினர், இந்த மாகாணத்தின் அரசியல் வரலாற்றில் கடந்த முப்பதாண்டு களுக்கும் மேற்பட்ட காலத்தில் சந்தித் திராத ஒரு தீவிரமான தாக்குதலை அவர் மீது மேற்கொண்டனர். இந்த மாகாணத் தின் ஆளுநரான போர்ட்லாண்ட் பிரபு வின் பதவிக் காலத்தை நீட்டித்த இந்தி யாவுக்கான இங்கிலாந்தின் உள்துறை செயலாளருக்கு நன்றி தெரிவிப்பதற்காக நடத்தப் பட்ட கூட்டத்தைக் கலைக்கும் முயற்சியில் இந்தக் குழுவின் சில உறுப்பினர்கள்  தங்கள் நிலையைக் கூட மறந்து போனார்கள்.  இந்த விஷயத்திலும், ஒரு பெருங்கடலில் உள்ள ஒரு தண்ணீர்த்துளியைப் போன்ற இவர்கள்,  எவரது முடிவை ஏற்றுக் கொண்டு கட்டுப்பட வேண்டுமோ அத்தகைய எண்ணிக்கையில் அடங்கா அண்டை, அயலாரின் உணர்வுகளையும், விருப்பங் களையும் சிறிதும் மதிக்கவும் இல்லை.
இதிலிருந்தே, பெரும்பான்மை மக்கள், இத்தகைய சிறிய விஷயங்களிலாவது தங்களின் உரிமைகள் மற்றும் அதிகாரங்களைத் தங்களின் கைகளில் எடுத்துக் கொண்டு நிலைநாட்ட வேண்டுமென்பது தெரிய வில்லையா? வேறு எந்த ஒரு நாகரிகம் படைத்த நாட்டிலும், இத்தகைய மிகமிகச் சிறுபான்மையினராக உள்ள மக்கள், கல்வி கற்று பேசத் தெரிந்தவர்களாக இருப்பதன் காரணமாக,  பெரும்பான் மையான மக்களின் கருத்துகளையும், விருப்பங்களையும் புறந்தள்ள அனு மதிக்கப்படமாட்டார்கள். 
 நமது உரிமை களையும் கடமைகளையும் உணர்ந்து கொண்டு, நமது எண்ணிக்கையின் அடிப்படையில் நமக்கு உரிமையான இடத்தினை உறுதியாகவும், தயக்க மின்றியும் இனி கைப்பற்ற வேண்டும் என்ற  ஓர் அறிவினை நமக்கு அளித் தமைக்காக, நமக்கு நாமேயும், அரசாங்கத்துக்கும் நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். தங்களது அங்கீகரிக்கப்பட்ட தலைவர்களின் வழிகாட்டுதலில், தங்கள் உரிமை களைக் கைப்பற்றி, நாட்டில் தங்களின் நிலையை நிலை நிறுத்தும் மாபெரும் செயலை  அனைவரும் ஒருங்கிணைந்து செய்து முடிப்பதில் கோவை மாவட்ட மக்கள் முதன்மையாகத் திகழ்கின்றனர் என்பதில் சென்னை மாகாண பார்ப்பனரல்லாத மக்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர் என்பதை  நான் கூறவும் வேண்டுமா? வேறு என்ன நடந்தாலும் சரி, இன்று நீங்கள் சாதித்தது என்ன என்பதை உங்களின் வருங்கால சந்ததிகள் மனநிறைவுடன் மட்டுமன்றி,  பெருமையுடனும், நன்றியுடனும்  திரும் பிப் பார்ப்பார்கள். நமது நலன்களைப் பாதுகாத்து, முன்னெடுத்துச் செல்வ தற்கான ஓர் இயக்கம் நமதியக்கம். நமது சமூகத்தைப் போன்றதொரு மாபெரும் சமூகத்தின் நலன்களைப் பாதுகாத்து, முன்னேறச் செய்வது என்பது,  ஓர் ஒழுங்கான அமைப்பு மற்றும் செயல் திட்டமின்றி செய்யப்பட இயன்றதல்ல.
-  தமிழில்: த.க. பாலகிருட்டிணன் (தொடரும்)

மர்மாத்துகள் மனிதர்களைக் கொல்கின்றனவா?



ஆமாம். மர்மாத்துகள் (Marmots) இருமி இருமியே நோய்க் கிருமிகளைத் தொற்றச் செய்து மனிதர்களைக் கொல்கின்றன.

பானை போன்ற வயிற்றைக் கொண்ட, பயந்த சுபாவம் கொண்ட மர்மாத்துகள் அணில் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஒரு பூனை அளவில் இருக்கும் அவை பயப்படும்போது, பலமாக கிறீச்சிடும். மங்கோலியாவின் ஸ்டெப்பி புல்வெளிகளில் காணப்படும் அதிகக் கவர்ச்சியற்ற போபாக் வகை மர்மாத்துகள், எர்சினியா பெஸ்டிஸ் (Yersinia pestis) என்னும் கிருமியைப் பரப்புவதன் மூலம் பொதுவாக புபோனிக் பிளேக் என்று அறியப்பட்டுள்ள நுரையீரல் தொற்று நோயை உண்டாக்குகின்றன.

தாங்கள் இருமுவதன் மூலம் அக்கம் பக்கத்தில் உள்ள தெள்ளுப்பூச்சிகள், எலிகள் இறுதியாக மனிதர்கள் என்று அனைவரிடமும் இந்த நோய்க்கிருமிகளை இவை பரப்புகின்றன.

கிழக்கு ஆசியாவிலிருந்து அய்ரோப்பா வரை  மக்களைப் பெருவாரியாகக் கொன்று குவித்த அனைத்துப் பெரிய பிளேக் நோய்களும் மங்கோலியாவில் இருந்த மர்மோத்துகளிடமிருந்து வந்தவையே. இதனால் இறந்த மக்கள்  100 கோடியாக இருக்கலாம் என்று உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுவே, மனிதர்களைக் கொல்வதில் கொசுவுக்கு அடுத்த படியான உயிரினம் என்ற பெருமையை மர்மாத்துகளை  பெறச் செய்திருக்கின்றது.

பிளேக் நோய் மர்மாத்துகளையும், மனிதர்களையும் தாக்கும்போது அவர்களின் கைஅக்குள்களின் கீழேயும்,  தொடை இடுக்குகளின் கீழேயும் இருக்கும் நிணநீர் சுரப்பிகள் கருப்பு நிறமாக மாறி வீங்கிக் கொள்கின்றன. (இந்த புண்கள் புபோஸ் என்று அழைக்கப்படுகின்றன. புபோன் (boubon)என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது இது. அதன் பொருள் தொடையிடுக்கு என்பதாகும்.) மர்மாத்துகளின் தொடையிடுக்குகளை மங்கோலியர்கள் உண்ணமாட்டார்கள்.  இறந்து போன வேட்டைக்காரரின் ஆன்மா அதில் இருக்கிறது என்று அவர்கள் நம்பி வந்தனர்.

தொடையிடுக்கை நீக்கி அதன் மற்ற பாகங்களை மங்கோலியர்கள் விரும்பி உண்பார்கள். இவற்றைப் பிடிக்க வேட்டைக்காரர்கள்,  போலியான முயல் காதுகளை அணிந்து கொள்வது, எருதின் வாலை ஆட்டிக் கொண்டு நடனமாடுவது போன்ற பல்வேறு தந்திரங்களை மேற்கொள்வர்.  அவர்கள் பிடித்த மர்மாத்துகளை உரித்து சூடான பாறை மீது பரப்பி விருந்துண்ணுவர்.

அய்ரோப்பாவில், ஆல்பின் மர்மாத்தின் கொழுப்பு பக்கவாத நோய்க்கு சரியான மருந்து என்று கருதப்படுகிறது. அமெரிக்காவின் பிரெய்ரி புல்வெளிப் பகுதிகளில் வாழும் நாய்கள், குளிர்காலத்தில் உறங்கி குழிபறித்து வாழும் வுட்சக் (Woodchuck) எனும் விலங்கு, தரைப்பன்றி உள்ளிட்டவை மர்மாத்தின் பிற இனங்களைச் சேர்ந்தவை ஆகும். புபோனிக் பிளேக் நோய் இன்றும் நம்மிடையே உள்ளது.

இந்தியாவில் கடந்த முறை 1994 இல் இந்த நோய் பெரும் அளவில் வெடித்தது. அமெரிக்க நாட்டிற்கு வரும் பயணிகளை  தனி மைப்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்று கூறக் காரணமான மூன்று நோய்களில் இதுவும் ஒன்று. மற்ற இரண்டுநோய்கள் மஞ்சள் காய்ச்சலும், காலராவும் ஆகும்.

(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள்
தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.

Friday, October 28, 2011

கோவில் கேட்டது யார்?


இலங்கையின் வடபகுதியில் மன்னார் மாவட்டத் தில் அமைந்துள்ள திருக்கேதீச்சுரம் கோவிலின் புனருத்தாரண பணிக்காக, 32 கோடி ரூபாய் அளிக்க, இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கையின் வடபகுதியின், மன்னார் மாவட்டத் தில் உள்ள பழைமையான திருக்கேதீச்சுரம் கோவில். இது கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த ஞானசம்பந்தரால், பாடல் பெற்ற தலம். 

இக்கோவிலின் புனருத்தாரண பணி, இந்திய தொல்பொருள்துறை மற்றும் கட்டட மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியால் இணைந்து நடத்தப்படுவதாக, இலங்கையில் உள்ள இந்திய ஹைகமிஷன் தெரிவித்துள்ளது.

இந்தியா, இலங்கை இடையேயான ஒப்பந்தங் களின்படி, இக்கோவில் பணிக்கு இந்திய அரசு, 32 கோடியே, 60 லட்சம் இலங்கை ரூபாய் அளிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளது.

(தினமலர், 19.10.2011, பக்கம் 4)

இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்கள் சொல்லொணாத் துயரத் தீயில் வெந்து மடிந்து கொண்டுள்ளனர். அடிப்படை வாழ்வாதாரமின்றி வாடிக்கிடக்கின்றனர்.

முள்வேலி முகாமில் முடங்கிக் கிடப்போர் இன்னும் உண்டு. சிங்களக் காடையர்களால் தமிழ் இனப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

தமிழர்களின் பாரம்பரிய பகுதிகள் சிங்களமயமாகி வருகின்றன. கல்வியில் ஆர்வமுள்ள எம் தமிழ்க் குடும்பத்துப் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. இந்திய அரசு ஏற்கெனவே கொடுத்த 500 கோடி ரூபாய் எந்த அளவு தமிழர்களுக்குப் பயன்பட்டது என்பது வினாக்குறியே!

இந்த நிலையில், கிடந்தது கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மணையில் வை என்ற கதையாக, இலங்கையின் வடபகுதியில் மன்னார் மாவட்டத்தில் உள்ள பழைமையான கோவிலான திருக்கேதீச்சுரம் கோவிலின் புனருத் தாரணப் பணிக்காக இந்திய அரசு இலங்கை அரசுக்கு 32 கோடி ரூபாய் அளிக்கிறதாம்.

இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது! ஈழத் தமிழ்ப் பிள்ளைகளின் கல்விக்கு இது போன்ற உதவியைச் செய்யக் கூடாதா? வீடின்றித் தவிக்கும் தமிழ் மக்களுக்கு உதவிட முன்வரக் கூடாதா?

ஈழத்தில் கோவில் கட்டுவதும், புதுப்பிப்பதும்தான் இப்பொழுது அவசர, அவசியமான தேவைகளா?

ஈழத் தமிழ் மக்கள் பக்தி மிக்கவர்கள்தாம் - கோவில், குளம் என்று நாடிக் கிடப்பவர்கள்தாம். அப்படியெல்லாம் கடவுளை நம்பி அவர்கள் கண்ட பலன் என்ன?

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் சேலத்தில் தமிழ் மறவர் புலவர் அண்ணாமலை சரசுவதி இல்லத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் (27.1.2010) ஒரு கருத்தை தம் ஆதங்கமாகப் புலப்படுத்தினாரே!

எங்கள் ஈழத்தில் 10 ஆயிரம் குடும்பங்கள் அழிக்கப்பட்டன. வீட்டுக்கு மூவர் என்று வைத்துக் கொண்டாலும்  கொல்லப்பட்டவர்கள் முப்பதாயிரம் தமிழர்கள். நாங்கள் நம்பிய சாத்திர, சம்பிரதாயங்கள் எங்களைக் காப்பாற்றவில்லையே!

கந்தா, கடம்பா! என்று கதறினோமே - எந்த ஒரு கடவுளும் ஓடிவந்து எங்களைக் காப்பாற்றவில்லையே!

இரண்டரை லட்சம் வீடுகள் இடிக்கப்பட்டன. வீடுகள் எல்லாம்  வாஸ்துபடியேதான் கட்டப்பட்டன. என்றாலும் இடிபட்டதே! 2076 சைவக் கோவில்கள் நொறுக்கப்பட்டன. கடவுள்கள் தங்கள் கோவில்களையே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. இன்னும் நாங்கள் கடவுளை நம்பவேண்டுமா? என்று கண்ணீர் வடித்துப் பேசினாரே உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.

இதுதானே ஈழத்தில் உண்மையான நிலைமை! இருக்க இடம் வேண்டும் - பசியாற உணவு வேண்டும் - உடுத்த உடை வேண்டும் - பிள்ளைகளுக்குக் கல்வி வேண்டும் - எங்கள் பாரம்பரிய பூமி எங்களுக்கு வேண்டும் - எங்கள் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் வேண்டும் - சுயமரியாதையுடன் நாங்கள் வாழவேண்டும் என்பதுதான் இன்றைய ஈழ மக்களின் கோரிக்கையும் விண்ணப்பமுமே தவிர கோவில்கள் அல்ல.

ஈழ மக்களின் உணர்வுகளை திசை திருப்பும் வேலை இது.  உலக நாடுகள் மத்தியில் ராஜபக்சேவைக் குற்ற வாளிக் கூண்டில் நிறுத்தி - விசாரணை நடத்துக என்கிற குரல் ஓங்கி எழுந்து கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில், பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்குக் கோவில் திருப்பணி என்தெல்லாம் யாரை ஏமாற்றிட?

நடந்தவைகளிலிருந்து அம்மக்கள் படிப்பினை பெற்றுள்ளனர். கடவுளும், கோயிலும், சாத்திர சம்பிர தாயங்களும் நம்மைக் காப்பாற்றாது என்பதை அனுபவம் அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து இருக்கிறது. மீண்டும் அந்தப் பக்திப் புதை குழிக்குள் தள்ளும் முயற்சியில் இந்தியா ஈடுபடவேண்டாம்.

அவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகள் கிடைப்பதற்கு வழி செய்யட்டும். வாக்குக் கொடுத்தவற்றை இலங்கை அரசு நிறைவேற்றிட அழுத்தங்களைக் கொடுக்கட்டும்.

உலக நீதிமன்றத்தில் ராஜபக்சேவை நிறுத்திட பச்சைக் கொடி காட்டட்டும். இந்தியா செய்யவேண்டியது இவற்றைத்தான்! திசை திருப்பும் வேலையில் இறங்க வேண்டாம்.

பச்சோந்திகள் என்ன செய்கின்றன ?


தங்களின் பின்புலத்தின் நிறத்துக்குத் தங்களை பச்சோந்திகள் மாற்றிக் கொள்வதில்லை. அவ்வாறு மாற்றிக் கொள்கின்றன என்று கூறுவது முற்றிலும் பொய்யான, இட்டுக் கட்டிய, கட்டுக்கதையாகும். அது எப்போதுமே அவ்வாறு செய்வதில்லை; செய்யப் போவதுமில்லை.
பல்வேறுபட்ட உணர்ச்சி நிலைகளின் விளைவாக அவை தங்களின் நிறத்தை மாற்றிக்கொள்கின்றன. அந்த நிறம் பின்புலத்தின் நிறத்துடன் ஒத்திருந்தால், அது யதேச்சையாக ஏற்பட்ட நிகழ்வேயாகும்.
பயந்துபோனபோதோ அல்லது பிடிக்கப்படும்போதோ அல்லது சண்டையில் மற்றொரு பச்சோந்தியைத் தோற்கடிக்கும்போதோ அவை தங்களின் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன.
க்ரோமாடோபோர்ஸ் (Chromataphores)  எனும் சிறப்பான உயிரணுக்கள் பல அடுக்குகளில், ஒவ்வொன்றும் மாறுபட்ட நிறச் சாயப்பொருள்கள் கொண்டவையாக  பச்சோந்தியின் தோலில் உள்ளன. கிரேக்க மொழியில்   (Chroma) என்ற சொல் நிறம் என்றும்   (pherein)
என்ற சொல் எடுத்துச் செல்வது என்றும் பொருள் அளிக்கும். தோலில் உள்ள இந்த அடுக்குகளை மாற்றி சமன்படுத்தும் போது, பல நிறங்களில் ஒளி எதிரொளிக்கிறது. அப்போது பச்சோந்தியைப் பார்க்கும்போது நடமாடும் நிற சக்கரம் போன்று அது இருக்கும்.
தங்களின் பின்புலத்துக்கு ஏற்றவாறு தங்களின் நிறத்தை அவை மாற்றிக் கொள்கின்றன என்ற நம்பிக்கை  மிக நீண்ட காலமாக தொடர்ந்து நிலவி வந்தது வியப்பானதே. இந்த கட்டுக்கதை கி.மு. 240 ல் ஒரு அதிக புகழ்பெற்றிராத ஒரு கிரேக்க எழுத்தாளர் எழுதிய பொழுது போக்குக் கதைகளிலும், வாழ்க்கை வரலாறுகளிலும் முதன் முதலாக இடம் பெற்றது. அதற்கு ஒரு நூறாண்டுக்கு முன்பு இது பற்றி எழுதியிருந்த செல்வாக்கு பெற்ற எழுத்தாளரான அரிஸ்டாட்டில் பச்சோந்தியின் நிற மாற்றத்துக்கு அதன் அச்ச உணர்வுதான் என்று மிகச் சரியாகக் குறிப்பிட்டுள்ளார். மறுமலர்ச்சி காலத்தில் இந்த பின்னணிக் கோட்பாடு முற்றிலுமாக கைவிடப்பட்டுவிட்டது. ஆனால் அதற்குப் பிறகு மறுபடியும் அந்தக் கோட்பாடு உயிர் பெற்று இன்று வரை நிலவுகிறது. பச்சோந்தி பற்றி மக்கள் அறிந்துள்ள ஒரே ஒரு விஷயம் இந்தப் பின்னணி நிற மாற்றமாகவே இருந்து வருகிறது. பலமணி நேரத்திற்கு அசையாமல் இருக்க பச்சோந்தியால் முடியும். இதன் காரணமாகவும், அது மிகவும் குறைவாக உண்பதாலும், அது வெறும் காற்றை மட்டுமே உண்டு வாழ்வதாக பல நூற்றாண்டு காலமாக நம்பப்பட்டு வந்துள்ளது. இதுவும் உண்மையானதல்ல.
தரைசிங்கம் (ground lion) என்ற பொருள் கொண்ட கிரேக்க சொல்தான் Chamelon என்பது. இந்த இனத்தில் மிகச் சிறியது 25 மி.மி. (1 அங்குலம்) நீளமும், மிகப் பெரியது 610 மி.மீ. (2 அடி) நீளமும் கொண்டவை. தனது கண்களைத் தனித்தனியாக  சுழற்றி, ஒரே நேரத்தில் வெவ்வேறு திசைகளில் பார்க்க பச்சோந்தியால் முடியும். ஆனால் அவற்றுக்கு காது கேட்கவே கேட்காது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...