Tuesday, July 26, 2011

வரலாற்றுச் சின்னங்களின் பாதுகாப்பு என்பது அவசியம்!


வரலாற்றுச் சின்னங்களின் பாதுகாப்பு என்பது அவசியம்!


மிகவும் புராதனமாகப் பாதுகாக்கப் படும் மரபுடைமைச் சின்னங்களைக் காண எனக்கு எப்போதும் ஆர்வம் அதிகம். தமிழ்நாட்டில் கானாடு காத்தான் - செட்டி நாடு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள பல வீடுகளை, மரபுடைச் சின்னங்களாக்கி (Heritage Buildings)  வரலாற்றுப் பதிவுகளாக நிகழ்கால தலைமுறைக்கும், வருங்கால சந்ததியினருக்கும் காட்டி வருகிறார்கள்.

அது போல சிங்கப்பூரில் அண்மை யில் (மே2011) சிங்கப்பூர் இந்திய முஸ்லிம்கள் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் வாணிபத்திற்குச் சென்றவர்கள், சிங்கப்பூர் (பழைய முக்கிய பகுதிகளில் - கடல் ஓரம்) உள்ள தாங்கள் தொழுவதற்காக என்று நாகூர் தர்கா என்ற பெயரிலேயே தெலுக்ஆயர் வீதியில் அமைத்துள் ளனர். இவர்களில் பெரும்பாலோர் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூருக்கு கப்பலேறிச் சென்றவர் கள். (பாய் மரக் கப்பல்கள்தான்).

1820-களில் இந்த நாகூர் தர்கா என்ற கட்டடம் - அன்றைய வழிபாட்டு நிலை யம் - இன்றைய மரபுடைமைச் சின்னம் மிகவும் ஜனநெருக்கமாக பகுதியான சவுத் பிரிட்ஜ் சாலையில் உள்ள மற்றொரு பள்ளிவாசலைப் போலவே இதுவும் அப்போது பயன்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் விக்டோரியா பொது மன்றம் (Victoria Public Hall)  - வி.பி.ஹால் என்று அப்பொழுது அழைக் கப்பட்ட கட்டடம் - தற்போதுள்ள சென்னை  மாநகராட்சி தி.மு.க. அரசால் அடையாளம் காணப்பட்டு (பெரியார் நெடுஞ்சாலையில் மாநகராட்சிக் கட்டடத் திற்கு அருகில் சென்ட்ரல் ஸ்டேஷனுக்குப் போகும் வழியில்) அதை செப்பனிட்டனர்; பணிகள் இன்னும் முடியவில்லை. பல்வேறு பொது நிகழ்ச்சிகள் நடைபெற்ற - (நாடகங்கள் உட்பட) - மண்டபம் அது.  அதில் வந்து பேசாத பழம்பெரும் தலை வர்களே இல்லை என்பது அதன் தனித் தன்மையான வரலாறு.
சிங்கப்பூரில் - இந்திய முஸ்லிம்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் மிகவும் அருமையான தகவல் களஞ்சியங்களாக வும், அவர்கள் வாணிபம், அவர்களது உணவுப் பழக்க வழக்கங்கள் - எப்படி அவர்கள் அக்காலத்திலேயே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்திட தமிழில் கூட ஏடுகள் நடத்தினர் என்ற வரலாறு எல்லாம் மிகவும் அருமையான தமிழ், ஆங்கிலம் மொழிகளில் பல்வேறு செய்திகள் விளக் கங்கள் சுருக்கமாகவும் தூய்மையாகவும் வைக்கப் பட்டு, பார்வையாளர்களை ஈர்த்து, வரலாற்று உணர் வைத் தூண்டும் ஆர்வத்தை வளர்க்கும் வண்ணம் செய் யப்பட்டுள்ளன. பராமரிப்புத் துவங்கி பாதுகாக்கும் குழு வினருக்கு நமது மகிழ்ச்சி கலந்த பாராட்டுகள்.

1827 இல் தமிழகத்தின் காதர் பிள்ளை என்ற பெரியவர் இந்த அருமை யான கட்டடத்தைக் கட்டி யுள்ளார்.

பல்வேறு ஆவ ணங்கள், நினைவுப் பொருள்கள் அங்கே வைக்கப்பட் டுள்ளன. வரலாற் றுச் சின்னங்கள் பழைய காலத்து வால்வுகளைக் கொண்ட வானொலிப் பெட்டி (ரேடியோ) உட்பட பலவும் வர லாற்றைப் பறை சாற்றுகின்றன.
அக்காலத்தில் வெளியான பழைய புத்தகங்களும், வெளியீடுகளும் கூட வைக்கப்பட் டுள்ளன. கலை அழகோடு காட்சி தரும் நாகூர் தர்கா தமிழ்நாட்டில் நாகூரில் அமைந் துள்ள தர்காவின் பாணியில் அந்தக் கட்டடக் கலையின்அடிப்படை மரபுகள் மாறாத வகையில், தமிழக கட்டடக் கலை மரபில் நிர்ண யிக்கப்பட்டுள் ளது.

சிங்கப்பூரில் குடியேறிய தமிழ் முஸ்லிம்களின் பூர்வீகப் பின் புலம் அன்றைய  மதராஸ் ராஜ தானியின் திருச்சிராப் பள்ளி, தஞ்சா வூர், வட ஆற் காடு, தென்னாற் காடு, திரு நெல்வேலி, இராமநாதபுரம், பாண்டிச்சேரியை அடுத்த கோட்டைக் குப்பம் முதல் முத்துப் பேட்டை, நெல்லைப் பகுதியைச் சேர்ந்த தென்காசி, கடைய நல்லூர், காயல்பட்டினம் பகுதிகளிலி ருந்தும் சிங்கப்பூருக்குப் புலம் பெயர்ந்த முஸ்லிம்கள் வாழ்வியல் தடங்களைப் பதிவு செய்துள்ள அற்புத சின்னமாகத் திகழ் கிறது.

ஒரு சிறு எடுத்துக்காட்டு


வெற்றிலைப் பாக்கு போடுதல் பற்றி, அது அவர்கள் பழக்கமாக இருந்துள்ளது. அதனைப் பற்றி விளக்கியுள்ள (அங்கு) குறிப்பில், இந்தப் பழக்கம் சிந்து வெளி நாகரிகத்திலேயே இருந்திருக்கிறது என்ற அரிய தகவலைக் குறிப்பிட்டுள்ளனர்!

மலாய் மொழியில் மாக்கன் சீரே என்று வெற்றிலைப் போடுதலை வழக்கில் பேசி வருகிறார்கள் என்ற குறிப்பும் அதில் சுட்டிக் காட்டப்பட் டுள்ளது.

இங்கு உள்ள ஓர் உணவகம் (Banquet) சிறப்பாக நடைபெறுகிறது. சீன, மலாய், இந்திய பிரியாணி, நாசிகோரிங், மீகோரிங், ரோஜாக் - என்ற சீன, மலாய் உணவுகள் - இவைகளைத் தயாரிப்பது - இதர மூலப் பொருள்களையும் காட்டி விளக்கியுள்ளார்கள்.

அழைத்துச் சென்ற நண்பர் இலியாஸ் (அவர் பராமரிப்புக் குழு உறுப்பினரும் கூட) அவர்களும் நானும்  சென்றோம். சுமார் 12.30 மணி என்பதால், உணவு உண்பவர்கள் கூட்டம் வந்தபடி இருந்தது.

தூய்மையான விருந்து அதுவும் அங்கே நடைபெறுகிறது. அதன் பராமரிப்பும், உணவகத்தை நடத்தும் நண்பரின் வாடகைத் தொகையும் உதவிடும் வகையில் உள்ளது நல்ல திட்டம். அங்கே எந்தத் தொழுகையும் இல்லை; அதற்கென தனி பள்ளி வாசல்கள் பக்கத்தில் உள்ளன என்று அறிவித் தனர்.

மிக அருமையான மரபுடைமைச் சின்னம். அதுவும் நமது நாட்டு இஸ்லாம் பெருமக்களின் பங்களிப்பு புலம் பெயர்ந்த மண்ணில் எப்படிப்பட்டது என்பதை அறிகிறோம்.

தாவுத் ஷா அவர்கள்நடத்திய பழைய ஏடுகளும் பார்வைக்கு அங்கே வைக்கப்பட்டுள்ளன! வரலாற்றுச் சின்னங்கள் பேணிப் பாதுகாக்கப்படும் நாடு  வளர்ச்சிப் பாதையில் முன்னேறும் நாடு ஆகும் !

பக்தர்களே, பக்தர்களே இதைக் கொஞ்சம் படியுங்கள்!


உண்மை விளம்பி
மறைந்த சாயிபாபாவுக்கு உலகம் முழுவதும் பக்தர்கள், சீடர்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளதோடு, பல லட்சக்கணக் கான பொருள்களைக் கொட்டியும் கொடுக்கிறார்கள்!

ஆன்மீகம் என்றால் லவு கீகம் - உலக வாழ்வு - பொருள் உள்ளிட்ட எல்லா ஆசைகளை யும் துறந்து, மோட்ச உலகத் திற்கு வழிகாட்டுவதற்காக இவரை நாடுகிறோம், நாடினோம் என்று கூறும் பக்தர்களே!

அவரது ஆசிரமத்தில் (?) அவரது அறைகளிலிருந்து கண்டு எடுக்கப்பட்ட பண கத்தைகளை- அவரது சீடகோடி கள் லாரியில், வேன்களில் ஏற்றியதை கையும் மெய்யு மாகப் பிடித்துள்ள நிலையில் - அரசு தலையிட்ட நிலைக்குப் பின், அதன் அறக்கட்டளையின் முக்கியஸ்தர் ஆன ஒரு தமிழ் நாட்டுப் பார்ப்பனர் தொழில் அதிபர் ஏதோ ஒரு நொண்டிச் சமாதானத்தைக் (பலநாள்கள் கழித்து) கூறினார்;

அவரது சமா தியைக் கட்ட அந்த ஒப்பந்தக் காரருக்குக் கொடுக்க எடுத்துச் செல்லப்பட்டது என்று ஏதோ ஒன்றைச் சொன்னார். தென்னை மரத்தில் ஏறிப் புல் பிடுங்கப் போனேன் என்று - மாட்டிக் கொண்ட பிறகு - சொன்ன பொய் சொல்லான் போல சொன்னார்கள்.

அவரது பல அறைகளிலிருந்தும் பொன், தங்கம், வெள்ளி, வைர நகைகள், பல்வேறு அறைகளிலி ருந்து ஏராளமான ரொக்கத்தொகை இவை எல்லாம் மூன்று ரவுண்டுகள் வேட்டையாடியபின், சாய்பாபாவின் தனித்த குடியிருப்பான யஜுர் மந்திர் (நல்ல பெயர்தான்) உள் சென்று (பிரசாந்தி நிலையத்தில்!) சோதனை நடத்தி அதிகாரிகள் எடுத்தவைகளைக் கண்டு அதி காரிகள் மயக்கம் போட்டு விழாத குறைதான்!

(1) இறக்குமதி செய்யப்பட்ட முகச் சவர செட்டுகள்

(2) வாசனைத் திரவியங்கள் - சென்ட்டுகள்

(3) சுத்தி, ஆடையலங்காரத்துக் கான பொருள்கள் (Toiletries)

(4) ஷாம்பு (Shampoo)   பாட்டில்கள்

(5) சோப்புகள், கைதுடைக்கும் சிறு கைத் துண்டுகள்

(6)  விலை உயர்ந்த கை கடி காரங்கள் (Expensive Watches) (சர்வதேச புகழ் வாய்ந்த பிராண்ட் வாட்சுகள்).

(7) பதப்படுத்தப்பட்ட உலர்ந்த பழங்கள்

பக்தர்களைச் சந்திக்க அந்த அறையிலிருந்து வரும் போது மிக விலை உயர்ந்த ரக செண்ட் அடித் துக் கொண்டு வந்துதான் பக்தர்,  பக்தைகளுக்குக் காட்சி தந்து, ஆன்மீக குரு ஆசி வழங் குவார் என்று உடன் இருப்பவர் கூறினார் என்று கூறுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு (24-7-2011).

காற்று நிரப்பப்பட்ட வசதியான எளிமையான படுக்கையே சாய்பாபா பயன்படுத்தும் படுக்கை.

8) வாழும் கடவுளான இந்த சாய்பாபா அறையில் கண்டெடுக்கப் பட்ட தங்க மாலைகள் இரண்டு - 6 முதல் 7 கிலோ எடை உடையவை. (இது மேஜைக்குக் கீழே வைக்கப் பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டு எடுத்தார்கள்!)

75 வெள்ளி டம்ளர்கள் - ஒரு பக்தர் 75 ஆம் ஆண்டு பிறந்த நாளுக்குத் தந்தவை என்கிறார்கள்! (ஒவ்வொன்றும் 700 கிராம் எடை)

9) பல்லாயிரக்கணக்கில் மோதி ரங்கள் (அவர் வரவழைத்துத் தர இவை தேவைப்பட்டிருக்கலாமோ?)

10) 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டுப் புடவைகள் (விலை உயர்ந் தவை)

(11) வேட்டிகளும் சட்டைகளும் நிறைய.

ஆன்மிகத் தேடலுக்கும் பரப்புத லுக்கும் எவ்வளவு முக்கியமான முற்றும் துறந்த முனிபுங்கவருக்கு கடவுள் அவதாரத்திற்கு இவை ஏன் தேவைப்பட்டன?

பட்டுப் புடவைகள், சட்டைகள், துணிக் கடைகளில் கூட இவ்வளவு (ஸ்டாக்) இருப்பு இருக்குமா என்பது சந்தேகமே என்கிறார்  நாளேட்டைப் படித்த நமது நண்பர் ஒருவர்.

அவரது தனி மனித ஒழுக்கம் பற்றி அமெரிக்க சீடர் ஒருவர் எழுதிய  Avatar of Night  அவதார் ஆஃப் நைட்- இரவில் எடுக்கும் அவதாரம் என்ற தலைப்பில் ஒரு நூலே எழுதியுள்ளார்!

அவர் பெயர் Tal Brooke என்பதாகும். Tal Brooke - The Hidden Side of the Sai Baba Avatar of Night - (Tarang paperbacks - a division of Vikas Publishing House Pvt.Ltd.1982)

அவரது குற்றச்சாட்டு உண்மை யாகவே இருக்கலாம் என்பதற்கு மற்றொரு ஆதாரம் மலேசியா விலிருந்து அவரது ஆசிரமத் திற்கு (?) ஆன்மிகம் கற்றுக் கொள்ள அனுப்பப்பட்ட மாணவ இளைஞர் களிடையே அதே மாதிரி ஓரினச் சேர்க்கை கையாண்டதைக் கண்டு  பதறிய பக்தர்கள் - வெறுத்து, திராவிடர் கழகத் தலைவருக் குக் கடிதம் எழுதி அம்பலப் படுத்தினார்கள்.

இதற்குப் பிறகும்  விளக்கை நோக்கிய விட்டில் பூச்சிகளாகச் சென்று வீழ்வதற்குத் தயாராக இருக்கும் பக்தர்களே, நீங்கள் விழிப்புணர்வு பெறவேண்டாமா?

பிரேமானந்தாவின் லீலை கள் இரட்டை ஆயுள் தண்டனை பெற  வைத்த பிறகும் பக்திப் போதை தீரவில்லையே!

வெட்கப்பட வேண்டாமா?

இன்னொரு ஆனந்தா வந்து துணிச்சலுடன் மீண்டும் ஒரு ரவுண்ட் அடிக்கிறார்! உலகப் பணக்காரனாக - ஒழுக்கக் கேட னாக வந்து உலா வருகிறார்.

ஏமாறும் மக்களின் பக்தியின் மீது மய்யம் கொண்டு ஏற்றங் கொண்டு அலைகிறார்களே!

பக்தி வந்தால் புத்தி போகும் என்ற பெரியார் பொன்மொழி எவ்வளவு அருமையான அனுபவ மொழி!

யோசியுங்கள்!  திருந்துங்கள்!  உங்கள் ஒழுக்கத்தை, அறிவைச் சேதாரப்படாமல் காப்பாற்றிக் கொள்ளுங்கள்!

ஈழத் தமிழர்களுக்கு இலங்கை சிங்கள அரசால் விடிவு ஏற்படப் போவதில்லை

 ஈழத் தமிழர்களுக்கு இலங்கை சிங்கள அரசால் விடிவு ஏற்படப் போவதில்லை

ஈழத் தமிழர்களுக்கு இலங்கை சிங்கள அரசால் விடிவு ஏற்படப் போவதில்லை

ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது குறித்து முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவே குமுறுகிறார்! இங்கிலாந்து சேனல் 4 தொலைக்காட்சியைப் பார்த்து உலகமே கண்ணீர் விட்டுக் கோவென்று கதறுகிறது!இதற்குமேலும் இலங்கையிடம் கெஞ்சுதலோ கொஞ்சுதலோ கூடாது! பங்களாதேசத்தை உருவாக்க இந்திராகாந்தி மேற்கொண்ட அணுகுமுறை தேவை!! திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கைஈழத் தமிழர்களுக்கு...
26 ஜூலை 2011
மேலும்

பத்திரிகா தர்மம்

கடந்த 29 ஆம் தேதியன்று புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஒரு சில பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து கலந் துரையாடினார். சென்னையைச் சேர்ந்த பத் திரிகை ஆசிரியர்கள் எவரும் இக்கலந்துரை யாடலுக்கு அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இந்தியத் தலைமைத் தணிக்கை அலு வலர், கணக்குத் தணிக்கை அறிக்கை பற்றி பத்திரிகையாளர் கூட்டம் நடத்தியதை பிரதமர் மன்மோகன் சிங் கண்டித்திருந்ததைப் பற்றி 1-7-2011 நாளிட்ட இந்து ஆங்கில நாளி தழின் முதல் பக்கத்தில் பி. முரளிதர் ரெட்டி யின் செய்திக்கட்டுரை ஒன்று வெளியிடப் பட்டுள்ளது. பத்திரிகையாளர் கூட்டம் நடத் துவதற்கு தலைமைத் தணிக்கை அலுவல ருக்கு உள்ள உரிமையை சென்னை உயர்நீதி மன்றம் 2004 ஆம் நடைபெற்ற W.P.23408 வழக்கில் உறுதி செய்து தீர்ப்பளித்து உள்ள தாக தெரிவித்துள்ளார். எனவே, தலைமைத் தணிக்கை அலுவலர் பத்திரிகையாளர் கூட் டம் நடத்தியதை பிரதமர் கண்டித்தது சரியல்ல என்று கட்டுரையாசிரியர் கருதுகிறார். தணிக்கை அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் முன்னர் ஊடகங்களுக்கும், பத்திரிகைகளக்கும் கசிந்தது எப்படி என்பது பற்றி எவரும் கவலைப்படவில்லை. அதற்கு யார் பொறுப்பு? நாடாளுமன்றம் இந்த விவகா ரத்தை எடுத்துக் கொள்ளும் முன்னதாகவே ஊடகங்கள் அது பற்றி தங்கள் மனம் போன போக்கில் செய்திகளை வெளியிடத் தொடங்கி விட்டன. தலைமைத் தணிக்கை அலுவலர் அரசின் கொள்கை முடிவுகளைப் பற்றி கேள்வி கேட்க முடியாது என்று பிரதமர் கூறியதைப் பற்றி கட்டுரையாளர் கருத்து எதுவும் தெரிவிக் காமல் மவுனம் சாதிக்கிறார். 2ஜி பற்றிய தணிக்கை அறிக்கை தணிக்கை அலுவ லரின் அதிகார வரம்பைத் தாண்டியது அல்ல என்று தலைமைத் தணிக்கை அதிகாரி முன் னர் கூறியதை மட்டுமே நினைவுபடுத்துவ துடன் நிறுத்திக் கொள்கிறார்.

நீதியரசர் பி.எஸ்.ஏ. சுவாமி அறக்கட்டளை சார்பில் தமிழர் தலைவர் வீரமணிக்கு சமூகநீதி முதல் விருது

வீரமணி இல்லாவிட்டால் மண்டல் குழுப் பரிந்துரைகளின் செயலாக்கம் கிடைத்திருக்காது என்று புகழாரம்!

அய்தராபாத்தில் நடைபெற்ற நீதியரசர் பி.எஸ்.ஏ. சுவாமி 3ஆம் ஆண்டு நினைவு விழா மாட்சிகள்!

- நமது சிறப்புச்செய்தியாளர்


அறக்கட்டளை சார்பாக விருதுடன் ரூ 25 ஆயிரத்திற்கான காசோலையையும், நினைவு பரிசினையும் திருமதி சவிதாகுமார் அவர்கள் ஆசிரியர் வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் திருமதி இராஜலட்சுமி அம்மாள்.


ஜஸ்டீஸ் கே.சி. பானு அவர்கள் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு ஜஸ்டீஸ் பி.எஸ்.ஏ. சுவாமி சமூகநீதி விருது வழங்குகிறார். விருது பெற்ற தமிழர் தலைவர் அவர்களுடன் சுவாமி அவர்கள் குடும்பத்தார், நீதியரசர்கள், முக்கிய விருந்தினர்கள்.


அய்தராபாத், ஜூலை 25- மறைந்த நீதிபதி பி.எஸ்.ஏ. சுவாமி அவர்களின் நினைவு அறக் கட்டளை சார்பில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு ஜஸ்டீஸ் பி.எஸ்.ஏ சுவாமி சமூகநீதி விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

Monday, July 25, 2011

பா.ஜ.க. தேர்தலில் நிற்க தகுதி உடையதுதானா?

பாரதிய ஜனதா கட்சி ஆளும் கருநாடக மாநிலத் தில் பகவத் கீதை கட்டாய பாடமாக ஆக்கப் பட்டுள்ளது.

பகவத் கீதை என்பது இந்து மதத்தின் நூல். பிறப்பின் அடிப்படையிலானது - வருணம் - ஜாதி என்பது; அதனை நானே படைத்தேன் - படைத்தவன் நானாக இருந்தாலும் நானே நினைத்தாலும் அதனை மாற்றியமைக்க முடியாது என்று கீதாசிரியன் கிருஷ்ணன் சொல்லியிருப்பதாக பகவத் கீதை சொல்லுகிறது.

பாவ யோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்று கூறிப் பெண்களை இழிவுபடுத்துகிறது.

இத்தகைய பிற்போக்கு நூலை மாணவர்களுக்குக் கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றால், இதைவிட ஆபத்தானது வேறு ஒன்று இருக்க முடியுமா?

இளம் பிஞ்சுகள் மத்தியில் விகற்பத்தை, வேற்றுமையை, வெறுப்பை விதைப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது!

Saturday, July 23, 2011

வெள்ளைக்காரர்களை அண்டிப் பிழைத்த கூட்டம் எது?


துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (3) வெள்ளைக்காரர்களை அண்டிப் பிழைத்த கூட்டம் எது? கலி.பூங்குன்றன்
இந்தியாவின் சுதந்திரத்துக்காக காங்கிரஸ் பாடு பட்டதாகவும், ஆனால் அதற்கு மாறாக ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கட்டளைப்படி நீதிக்கட்சி தொடங்கப் பட்டது என்றும் அவதூறு செய்கிறார் துக்ளக் கில் திரு.கே.சி. லட்சுமி நாராயணன்.

இதற்கு நாம் பதில் சொல்லத் தேவையில்லை. எதற்கெடுத்தாலும் ம.பொ.சி.யைத்தானே சாட்சிக்கு அழைக்கிறார்கள்? அவர் எழுதிய விடுதலைப் போரில் தமிழகம் என்ற நூலைத்தானே என்ற சாட்சிக்குக் கூப்பிடுகின்றனர்?

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...