Tuesday, June 28, 2011

பூணூல் மகிமை - க.திருநாவுக்கரசு

கடந்த 25.11.2011 சென்னை பதிப்பு சிட்டி எக்ஸ்பிரசில் சங்கராச்சாரிய சிறீசிறீராகவேஸ்வர பாரதி மகா சுவாமிஜி ஓர் அரிய கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இந்திய மாநிலங் களைச் சநாதன தர்மத்தின் வழி ஒன்றி ணைப்பது என்பது அக்கட்டுரையின் நோக்கமாகும். அக்கட்டுரைக்கு ஆங்கிலத்தில் இடப்பட்டிருந்த தலைப்பு UNITING NATIONS THROUGH SANATHANA DHARMA என்பதாகும்.

இந்தியாவில் இருக்கிற ஒவ்வொரு மாநிலமும் ஒரு தேசிய இனத்தின் அடையாளம் தானே! ஜனநாயக யுகத்தில் சூத்திர, தாழ்த்தப்பட்ட மக்கள் - வெகு மக்களாக - எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிற நிலையில் - இவர் களுக்கெல்லாம் வாக்குரிமை வழங்கப் பட்டு இருக்கிறபோது இப்படிப்பட்ட தலைப்பில் எழுதுவதற்கு ஆச்சாரியா ருக்கு தைரியம் எங்கிருந்து வந்தது? அவர் என்னதான் அப்படி எழுதினார் என்கிறீர்களா? அக்கட்டுரையின் சாரம் இதுதான்.

பெருவெள்ளம் வருகிறது. மக்கள் எல்லாம் அடித்து செல்லப்படுகிறார்கள். அவர்களுள் ஒரு சிலர் அவ்வெள்ளத்தை எதிர்த்து நீந்தி கரை சேருகிறார்கள். ஆனால் அரிதான ஆத்மாக்களே அப்பெரு வெள்ளத்தின் திசையையே மாற்றி விடுகிறார்கள். தம்மையும் பிறரையும் காப்பாற்றுகிறார்கள்.

இங்கே பெருவெள்ளம் என்று எழுதப்பட்டு இருப்பது சமண, பவுத்த மதங்களின் எழுச்சியையாகும். இந்த எழுச்சியின் விளைவாக நமது தாய்நாடு இருளில் மூழ்கியது. வேத தர்மம் கண்டனம் செய்யப்பட்டது.

நமது மரபு, பழக்க வழக்கங்கள், சடங்குகள் எல்லாவற்றையும் மக்கள் நிராகரிக்கத் தொடங்கினர். பெரும்பாலான மக்கள் சமண, பவுத்த மதங்களையே போற்றினர். அவை இரண்டும் அரசுகள் போற்றுகின்ற மதங்களாகவும் இருந்தன.

இதனால் மக்களிடையே ஒற்றுமை யின்மையும், சிவன், விஷ்ணு போன்ற தெய்வங்களை வணங்குகிற பக்தர் களிடையே வேறுபாடுகள் தோன்றின. இப்படிப்பட்டதாய் இருந்தது அப்பெரு வெள்ளம்.

அதனைத் திசை திருப்பி மக்களைக் காப்பாற்றியவர் ஆதி சங்கரர். அதனால்தான் சிவருமானே அவதாரம் எடுத்து சங்கரராக கேரளத் தில் உள்ள காலடியிலே பிறந்தார். 32 ஆவது வயதில் மறைந்தார்.

அவர் வாழ்ந்த காலத்தில் அவரது கொள்கை களை எடுத்துச் சொல்ல அவருக்கு உகந்த உறுதுணை இல்லை. அரசுகளின் ஆதரவும் இல்லை. ஆனால் ஆதிசங்கரர் சமண, பவுத்தர்களை வென்று வேத தர்மத்தை தனி மனிதராக இந்நாட்டில் நிலைநாட்டினார். எப்படி அவரால் இந் நாட்டில் அப்படிப்பட்ட சிறந்த மனிதராக தனிநபராக ஈடுபாடு கொண்டு வேத தர்மத்தை நிலைநாட்ட முடிந்தது?

ஆதிசங்கரரைப் போன்ற மகான் களிடம் உள்ள உள்ளுணர்வு மிக பலம் வாய்ந்தது. இன்னும் முக்கியமாகச் சொல்ல வேண்டுமானால் புறக்கருவி களைவிட அகவுணர்வு மிகபலத்தோடு அவருக்கு ஆதரவை நல்கியதால் அவர் அந்த வெள்ளத்தை எதிர்த்து வேத தர்மத்தை நிலைநாட்டினார். ராமன், ராவணனது மாபெரும் ராணுவத்தை, யானைகளையும், ராட்சதர்களையும் கொண்ட ராணுவத்தை எப்படி வெற்றிக் கொள்ள முடிந்தது?

அதுவும் குரங்கு, கரடிகளின் கூட்டத்தை வைத்துக் கொண்டு என்றால் அவனது ராமனது உள்ளுணர் வாலும் அவன் பக்கம் சரியான நியாயம் இருந்ததாலும் ஆகும். அதே போன்றது தான் ஆதி சங்கரருடைய நிலையும்! அவர் ஆன்ம பலத்தினால் தான் வெற்றி பெற்றார். அவர் வாக்கு பலத் தாலும், தவ வலிமையானலும், ஆத்ம பலத்தாலும் ஆன்மிகப் புரட்சியைச் செய்தார்.

எப்போது தர்மம் அழிக்கப்படுகிறதோ அப்போது கடவுள் தோன்றி அந்தத் தர்மத்தைக் காப்பாற்றுவார். ஆகையினால் தான் சமண, பவுத்த வெள்ள காலத்தில் சிவனான கடவுள் சங்கரராக அவதரித் தார். அதாவது கேரளாவிலுள்ள காலடி யில் பிறந்தார். ஆகவேதான் சங்கரக் குழந்தை அதன் 8 ஆவது வயதிலேயே நான்கு வேதங்களிலே பெரும் தேர்ச்சி பெற்றது. 12 வயதிற்குள் எல்லா சாஸ்திரங் களையும் கற்றுத் தேர்ந்தது.

தனது 16 வயதிற்குள் உபநிடதங்களுக்கும், கீதைக்கும் விளக்கவுரையை எழுதியது அந்த ஞானக் குழந்தை! 16 வயதிற்குள் ஞானத்தைப் பெற்றுக் கொண்ட சங்கரர் என்ன செய்தார்?

அவர் உயிர் வாழ்ந்த மேலும் 16 ஆண்டுகளுக்குள் இப்பரந்த பாரத தேசத்தில் பயணம் மேற்கொண்டு சநாதன தர்மத்திற்குப் புதிய எழுச்சியை உருவாக்கினார். அப்படி மேற்கொண்ட பயணத்தின் போது அவர் நிகழ்த்திய தருக்கதினால் நாட்டில் இருந்த மற்ற சிந்தனை நெறிகளையும் மதக் கொள்கை களையும் வென்றார். அவரது போராட்டம், தத்துவங்களின் வழியான அறப்போராட்டம்.

சங்கரரை வெல்வதற்குப் பகைவர்கள் இல்லை. அவர் பகையை வென்றெடுத்தார். சங்கரர் தம் கர்மத்தினாலே உயர் ஞானம் பெற்று வாதிட்டு வென்றதைப் போலவே மந்தன மிஸ்ராவையும் வென்றார். அவர் சங்கரரின் சீடரானார். சங்கரர்க்கு என எந்தப் பட்டமும் இல்லை. சித்து விளையாட்டுகளும் அவரிடத்தில் இல்லை.

அவர் லோககுரு; அத்வைதக் கொள் கையை நிலைநாட்டி அதற்கு மாமன்ன ராய் விளங்கி வருபவர். நாட்டில் இருந்த அறியாமையைப் போக்கியவர். அவர் கொளுத்திய அறிவு ஜுவாலை எப்போதும் சுடர்விட்டுக் கொண்டே இருக்கும். பாரத தேசத்தில் எத்தனையோ குருக்கள் பிறந்திருக்கிறார்கள்.

ஆனால் ஆதி குரு என்று சொல்லக் கூடியவர் சங்கராச்சாரி யார் மட்டுமே. ஆதிசங்கரரருடைய மாபெரும் கொடை என்னவென்றால் மதத்தின் மூலமாகவும் கலாச்சாரத்தின் மூலமாகவும் பாரத தேசத்தை ஒருங் கிணைத்து இருக்கிறார். மக்கள் கடவுளின் பெயராலும், மதங்களின் பெயராலும் அதன் தத்துவங்களின் பெயராலும் சண்டை யிட்டுக் கொண்டு இருந்தனர்.

கோவில்களை அழித்தனர். வேதங்களை எரித் தனர். அப்போது சங்கரர் ஒரே மேடையில் எல்லா கடவுள்களையும் வழிபடுவதற்குரிய பஞ்சயாதன பூசையை ஒன்றாகச் சேர்ந்து வழிபட நெறிப்படுத்தினார்.

இப்பஞ்சயாதன பூசையில் அய்ந்து தெய்வங்களை மட்டும் புனிதக்கல் வடிவத் தில் வழிபாடு நிகழ்த்த பிரநிதித்துவப்படுத் தப்பட்டது. சிவன் லிங்க வடிவத்திம், விஷ்ணு சாளக்கிராம வடிவத்திலும், துர்க்கை சொர்ணமுகி கல் வடிவத்திலும், கணேசருடைய உருவம் ஷோனபத்ரா கல்லிலும், சூர்யனின் வடிவம் சப்திகா விலும் வடிக்கப்பட்டன. இக்கற்கள் எல்லாம் பாரத தேசத்தின் பல பகுதிகளிலிருந்து எடுத்து வரப்பட்டன.

பாரதத்தின் ஒருமையை ஒரு சின்னமாக எடுத்துரைப் பதற்காக! நாம் எப்போது பஞ்சயாதன பூசை செய்கிறோமோ அப்போது நாம் பாரத மாதாவை வழிபடுகின்றோம் என்று பொருள். ஆதி சங்கராச்சாரியார் மற்றொரு கொடையை நாட்டிற்கு அர்ப்பணித்து இருக்கிறார்.

சநாதன தர்மத்தைப் பிரச்சாரம் செய்வதற்காக மடங்களை நிறுவியதுதான் மாபெரும் சிறந்த பணியாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கோகர்ணத்தின் அருகே நிறுவிய அஷோக் என்ற இடத்தில் ஸ்ரீரகோத்தமா மடத்தை நிறுவிய தாகும். இப்போது இதனை சிறீராமச் சந்திரபுரம் மடம் என்று கூறுகிறார்கள்.

நாம் ஒரு நாடு, ஒரு ராணுவம், ஒரு பொருளாதாரக் கொள்கை, ஒரே அரசாங்கம் என்று கூறுகின்றோம். ஆனால் நாம் அப்படி இப்போது இல்லை. ஆனால் ஆதிசங்கராச்சாரி யார் வாழ்ந்த காலத்தில் அங்கம், வங்கம், கலிங்கம் எனப் பல நாடுகளாக இருந்ததை அவரால் சநாதன தர்மத் தின் மூலமாக ஒரே நாடாக ஒன்றி ணைக்க முடிந்தது. இன்றைய தினம் அப்படி நாம் இணைவதற்கு - இணைக் கப்படுவதற்கு - நமக்கு அப்படி ஒரு சக்தி - அதிகாரம் தேவைப்படுகிறது.

அரசியல் சட்டத்தில் மதச்சார்பின் மையைப் பற்றி எழுதி வைத்து விட்டு அல்லது திருத்தம் செய்துவிட்டு சநாதன தர்மத்தின் மூலம் எப்படி இந்தியாவை இணைக்க முடியும்? இங்கே இருக்கிற மதச் சிறுபான்மை யினர்களுக்கு வழங்கப்பட்ட உரிமை கள் என்னாவது?

அவர்கள் இந்த நாட்டைவிட்டு எங்கே போவார்கள். (வர்ணாசிரம) சநாதன தர்மம் என்றால் என்ன? சில பேர் அந்த சமூக முறை இன்னமும் இருக்கிறதா என்று கேட் கிறார்கள். அதுவும் விவரம் தெரிந்த வர்கள் கூட இப்படிப் கேட்கிறார்கள்.

அது பார்ப்பனர்களின் வாழ்வியல் முறை - ஓசை எழுப்பாமல் கடிக்கின்ற நாகத்தைப் போல இருக்கும். இதனை இன்னும் வெகு அழகாகவும் ஆழமாக வும் விதைக்காமல் விளைகின்ற கழனி என்றார் அறிஞர் அண்ணா!

ராமச்சந்திரபுரம் சங்கராச்சாரி யார் ஏன் இப்போது பாரததேசம் சநாதன தர்மத்தின் மூலம் இணைக்க வேண்டும் என்று எழுதுகிறார்? ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., சங்பரிவார் களின் முழக்கங்களும் அது தானே! அதுதான் பூணூல் மகிமை; அந்த நூலில் என்ன இருக்கிறது? அதை ஏன் புதுப்பிக்கிறார்கள்? என்பதை யெல்லாம் நாம் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். பூணூல் அணிவது மத அடையாளம் மட்டும் அன்று; அது அரசியல் ஆதிக்கத்தின் அடையாளம்! அது எப்படி என்பதைப் பார்ப்போம்.


(தொடரும்)


Monday, June 27, 2011


காட்டு விலங்காண்டித்தனம்!

Image - காட்டு விலங்காண்டித்தனம்!

தேனியில் எருமைக்கிடா வெட்டி, ரத்தம் குடித்து காளிக்கு வழிபாடு தேனி, ஜூன் 27- தேனி யில், 20 ஆண்டுகளுக்கு பின்,

சென்னை மின்சார ரயில் தடம் புரண்டது ரயில் போக்குவரத்து பாதிப்பு

சென்னை, ஜூன் 27- சென்னை தாம்பரம் சானிடேரியம் அருகே மின் ரயில் தடம்…

டில்லி சென்றார் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஜூன் 27- தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை…

பிரணாப்முகர்ஜி அமெரிக்கா பயணம்

புதுடெல்லி, ஜூன் 27- மத்திய நிதிஅமைச்சர் பிரணாப்முகர்ஜி 3 நாள் பயணமாக இன்று









மின்சார ரயில் தடம் புரண்டது ரயில் போக்குவரத்து பாதிப்பு

சென்னை மின்சார ரயில் தடம் புரண்டது ரயில் போக்குவரத்து பாதிப்பு

சென்னை மின்சார ரயில் தடம் புரண்டது ரயில் போக்குவரத்து பாதிப்பு

சென்னை, ஜூன் 27- சென்னை தாம்பரம் சானிடேரியம் அருகே மின் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.ரயிலை சரி செய்து போக்குவரத்தை சீராக்க ரயில்வே ஊழியர்கள் தீவிர

ஜூலை 2ல் ஆர்ப்பாட்டம்

Image - ஜூலை 2ல்  ஆர்ப்பாட்டம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : ஏழை எளிய மக்களின் வாழ்நிலை வெகுவாகப் பாதிக்கப்படும்

லண்டன் தேம்ஸ் நதியின் மீது நடந்த மேஜிக் நிபுணர்

Image - லண்டன் தேம்ஸ் நதியின் மீது நடந்த மேஜிக் நிபுணர்

லண்டன், ஜூன் 27- இங்கிலாந்து நாட்டினை சேர்ந்த மேஜிக் நிபுணர் டைனமோ (வயது 28). சமீபத்தில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் முன்புறம் அமைந்துள்ள தேம்ஸ் நதியின் மீது நடந்

  • டில்லி சென்றார் மு.க.ஸ்டாலின்

    சென்னை, ஜூன் 27- தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை…

  • பிரணாப்முகர்ஜி அமெரிக்கா பயணம்

    புதுடெல்லி, ஜூன் 27- மத்திய நிதிஅமைச்சர் பிரணாப்முகர்ஜி 3 நாள் பயணமாக இன்று…

  • Sunday, June 26, 2011

    இங்கிலாந்து - பிரான்ஸ் ராஜபக்சேவுக்கு கிடுக்கிப்பிடி

    இங்கிலாந்து - பிரான்ஸ் ராஜபக்சேவுக்கு கிடுக்கிப்பிடி

    இங்கிலாந்து - பிரான்ஸ் ராஜபக்சேவுக்கு கிடுக்கிப்பிடி


    Saturday, June 25, 2011

    திராவிடக் கொள்கை எது தெரியுமா? (1)

    திராவிடக் கொள்கை எது என்ற வினாவை எழுப்பியுள்ளது துக்ளக் (22.6.2011).

    சரியான கூட்டணி அமைந்ததால், சரியாகவே ஜனங்கள் ஓட்டுப் போடுகிறார்கள். ஆனால், உலகம் போகிற போக்குத் தெரியாமல் கருணாநிதி இன்ன மும் திராவிடம், திராவிட இனம் என்று, கீறல் விழுந்த இசைத்தட்டு மாதிரி அதையே சொல் லிக் கொண்டு திரிகிறார். இன்றுள்ள இளைஞனும் திராவிடம் என்றால் கிலோ என்ன விலை என்றுதான் கேட்பான் என்று எழுதுகிறது துக்ளக்.

    இதே கேள்வியை துக்ளக் அண்ணா திமுகவை நோக்கிக் கேட்குமா? அந்தக் கட்சியின் பெயரிலும் திராவிட இருக்கிறதே - திராவிடக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் அண்ணாவின் பெயரும் அந்தக் கட்சியில் உள்ளதே - அக்கட்சியைத் தேர்தலில் ஆதரித்த - ஆதரித்தும் கொண்டிருக்கிற துக்ளக் அறிவு நாணயத்துடன் கேட்க வேண்டுமா, வேண்டாமா,

    அப்படியெல்லாம் அதிமுகவைச் சீண்டிப் பார்த்தால் உருட்டுக் கட்டைதான் பரிசாகக் கிடைக்கும்.

    இன்னொன்றும் காரணமாக இருக்கலாம்; வெறும் பெயர்தானே திராவிட அண்ணா என்பதெல்லாம் அ.தி.மு.க.வுக்கு. அதனால் ஆரியர்களுக்குத் தொல்லை கிடையாதே - இன்னும் சொல்லப் போனால் திராவிட என்னும் பதாகைக்குள் ஆரிய சமாச்சாரங் கள்தானே தாம் - தூம் என்று நடக்கின்றன - எனவே கண்டு கொள்ள மாட்டார்கள்.

    ஆனால் தி.மு.க.வோ, அதன் தலைவர் கலைஞரோ திராவிட என்பதற்கான பொருள் தெரிந்தவர்கள். அதற்கான சித்தாந்தம் தெரிந்தவர்கள் என்பதால் நமக்கு ஆபத்தானவர்கள் என்பதை திராவிடர்களின் எதிரிகளாகிய ஆரியர்கள் - பார்ப்பனர்கள் - துக்ளக் வட்டாரத்தினர் தெரிந்து வைத்துள்ளனர். அதனால் தான் திராவிடர் திராவிடம் என்ற சொற்களைக் கேட்ட மாத்திரத்திலேயே, படித்த மாத்திரத்திலேயே புழுங்கிச் சாகிறார்கள்.

    இன்றுள்ள இளைஞர்கள் திராவிட இனம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிறார்களாம். ஒரு வகையில் உண்மைதான். அந்த உணர்வை இந்த இளைஞர்கள் பெற்றிருப்பதால் தான் துக்ளக்குகள் விலை போகின்றன. திராவிட இனவுணர்வு பெறாத காரணத்தால்தான் நண்பர் யார்? எதிரிகள் யார் என்ற அடையாளம் தெரியாமல் அரசியலில் வாக்களிப்பதில் கூடத் தவறு செய்து விடுகிறார்கள்.

    துக்ளக் ஏடு கிண்டல் செய்யும் அளவுக்கு நம் மக்கள் இனவுணர்வற்றுப் போயிருக்கிறார்கள் என்பதை வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம். இதற்குப் பதிலடி என்பது - நம் மக்களிடம் திராவிட இனவுணர்வை வலுவாக அழுத்தம் திருத்தமாக ஊட்டுவதுதான் - அதற்காகப் பல வகைகளிலும் பிரச்சாரம் செய்வதுதான்.

    திராவிடம்பற்றி கலைஞர் பேசினால் அக்னி மயமாகி, நச்சுத் துண்டுகளை எழுத்தாக்கி, வியாபாரம் செய்யும் துக்ளக் பிராமணர்கள் சங்கம் வைத்து தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று பகிரங்கமாகத் தீர்மானம் போடுகிறார்களே, அப்பொழுது அவர்களை நோக்கி ஏனப்பா, திராவிடத்தை உசுப்பிவிட ஆசைப்படுகிறீர்கள்? என்ற வினாவை எழுப்பி இருக்க வேண்டாமா?

    திராவிடம், திராவிடர் என்ற மாத்திரத்திலேயே அந்த இடத்திலேயே அதனை அமுக்கி விட வேண்டும்; அது வளர்ந்தால் தங்களுக்கு ஆபத்து, மகா ஆபத்து என்பதை நன்கு உணர்ந்தவர்கள் அவர்களாயிற்றே!

    ஆதி சங்கரர், திருஞான சம்பந்தரை திராவிட சிசு என்று வருணித்திருக்கிறாரே. எப்பொழுதாவது துக்ளக் வகையறாக்கள் அதற்கு மாற்றுக் கருத்துகள் சொன்னதுண்டா?
    நாட்டுப் பண்ணாகிய ஜனகனமன பாடலில் திராவிட உத்கலவங்கா என்று நோபெல் பரிசு பெற்ற கவி இரவீந்திரநாத் தாகூர் குறிப்பிட்டுள்ளாரே - அதுபற்றி விமர்சித்ததுண்டா துக்ளக்?

    மொகஞ்சதாரே, ஹரப்பா நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்று அய்ராவதம் மகாதேவன் (அய்யர்) போன்றோர் சொன்னபோது இவர்களின் பேனாக்கள், முனை மழுங்கிப் போய் விட்டனவா?

    சிந்து நாகரிகத்தில் திராவிடர்களின் எருதைக் குதிரையாக கணினி மூலம் மாற்றி, அது ஆரியர் நாகரிகம் என்று காட்டியதே பா.ஜ.க. ஆட்சி. அதன் பொருள் என்ன?

    திராவிடர்கள் இந்தியாவின் பூர்வீகக் குடிகள், ஆரியர்கள் வடமேற்குக் கணவாய் வழியாக மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவுக்குள் ஆடு மாடுகளை ஓட்டி வந்தவர்கள் என்று 50 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் வகுப்புப் புத்தகத்தில் இடம் பெற்றதை யெல்லாம் சாமர்த்தியமாகப் பார்ப்பனர்கள் நீக்கி விட்டனர் - அந்தத் தைரியத்தில்தான் திராவிடம் என்றால் என்ன என்று கேட்கிறது துக்ளக்; இதனை சவாலாக எடுத்துக் கொண்டு இனவுணர்வு வெப்பத்தை எழுப்புவதுதான் சரியான பதிலடியாக இருக்க முடியும் - அதனைச் செய்வோம்!

    பாபா அறக்கட்டளை உறுப்பினர்கள்பற்றி... அசிங்கம்... அசிங்கமாக....





    கூண்டிலேற்று ராஜபக்சேவை! திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள்:

    ஈழத் தமிழர்களின் உரிமைக்காக எத்தனையோ போராட்டங்களை, மாநாடுகளை திராவிடர் கழகம் நடத்தியதுண்டு. அதில் ஒரு சில இதோ:

    மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும்>>>

    குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...