Thursday, March 24, 2011

சுயநலம் காண சூரியநாடு ஜப்பானைப் பாருங்கள்!

ஜப்பானில் அண்மையில் நேர்ந்த ஆழிப் பேரலை - சுனாமி - பூகம்பம் - அணு உலைகள் வெடித்துக் கொட்டி அம்மக் களின் வெந்த புண்ணில் வேலைச் செரு கியது போன்ற வேதனைமேல் வேதனையை தொடர் துயரமாக அளித்தது.

தொலைக்காட்சியில் அக்காட்சி களைக் கண்டே நமது உள்ளங்களில் ரத்தக் கண்ணீர் வடிந்த நிலை ஏற்பட்டது.

இவ்வளவு துயரக் கடலில் வீழ்ந்த நிலையிலும் பண்பாட்டில் முதிர்ந்த ஜப் பானிய மக்கள் எவ்வளவு பெருந்தன்மை யோடும், சகிப்புத் தன்மையோடும், எது தவிர்க்க இயலாததோ அதை ஏற்றுக் கொண்டு அதன் துன்பத்திலிருந்து மீளும் வழி   முறையில் அமைதியாகவும் நடந்து கொள்ளும் விதம் மற்ற உலக நாட்டு மக்களுக்கெல்லாம் பெரும் பாடமாகும்!

அடுத்தவர் அனுபவம் என்பது அவர்களுக்கு மட்டுமல்ல; அறிவுள்ள எவருக்கும் பாடம் கற்க வேண்டிய சிறப்பான வாய்ப்பும் ஆகும் என்றே கருதிட வேண்டும்!

நம் நாட்டில் அடிப்படை சமுதாய ஒழுக்கம் - பக்தி - ஆன்மிக வேஷம் ஏராளம் ஒருபுறம் இருந்தபோதிலும், ஜப்பான் காரர்கள், மிகவும் கண்ணியத்துடன் சோர்ந்து சுண்ணாம்பாகி மூலையில் முடங்கி விடாமல், அதிலிருந்து விடியலை எப்படி விரைவுடன் ஏற்படுத்துவது என்பதில்  - குறியாய் இருக்கிறார்கள் என்பதுபற்றி இணையதளத்தில் வெளி யான ஒரு கட்டுரை தெளிவாக்குகிறது.

மற்ற நாடுகளில் குறிப்பாக நம்முடைய நாட்டிலும், உல கின் வேறு சில நாடுகளிலும் ஆப்பிரிக்க நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் ஆகியவற் றிலும் இப்படி பூகம்பங்கள், புயல்கள் தாக்கி மக்கள் நிலை குலைந்து,  அவதியுற்று அல் லோல கல்லோலமாக ஓடிடும் நிலையைப் பயன் படுத்தி அவர்தம் சொத்து களைக் கொள்ளையடிப்பதில் ஒருவருக்கொருவர் போட்டி யிடுவது  சர்வசாதாரண நிகழ்வு.

நம் நாட்டில் சில ரயில் விபத்து களின்போது, பாதிக்கப்பட்ட மனித உயிர்களைக் காப்பாற்றுவதில் ஈடுபட்டு முன்னுரிமையுடனும், மனிதாபிமானத் துடனும் நடப்பதற்குப் பதில், அவர்களது பொருள்கள் - நகைகள், பணம், பெட்டி மற்றும் சிதறிய பொருள்களை அபகரித் துச் செல்வதில் காட்டிய அவசரம் குறித்து எண்ணினால் நாம் வெட்கித் தலை குனிய வேண்டியிருக்கும்!

ஜப்பானில் உள்ள மக்கள் துயர் துடைக்க, வழிந்த கண்ணீரைத் துடைத் துக்கொண்டு தூய தொண்டறத்தில் ஈடுபட்டு, கண்ணை மூடிக்கொண்டு கடமையாற்றி வருகின்றனராம்!

அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் விலைகளைத் தாங்களே முன்வந்து குறைத்துக் கொண்டு பொருள்களை மக்களுக்கு விற்கின்றனவாம்! எல்லா மக்களுக்கும் அங்குள்ள பல நிறுவ னங்கள் தாகம் தீர்க்க பானங்களை இலவசமாகவே எப்போதும் வழங்குகின்றனவாம்!

மேற்கு நாடுகள் கட்டரினா  புயலின்போது அமெரிக்க சந்தித்த அனுபவங்கள் உள்பட பலவற் றையும் கண்டவர்கள் ஆனதால், ஜப்பானிய மக்களின் பொது ஒழுக்க உயர்வினைக் கண்டு விந்தையில் உறைந்து கிடக்கின்றனர்!

ஜப்பானிய மக்கள் புத்தக் கொள் கையினர்; ஷிண்டோ முதலிய மதக் கொள்கை கொண்டவர்கள் - மறு உலகம்பற்றிப் பேசி வாழும் மனிதர் களுக்கு இத்துயர மீட்பு நடவடிக்கை களில்  எப்படியெல் லாம் சக்தி வாய்ந்த முறையில் நடந்து கொள்வதையே வாடிக் கையாக்கி வருகின்றனராம்! இரண்டாம் உலகப் போரின்போது ஹிரோஷிமா, நாகசாகி நகரங் களில் அணு குண்டு வெடித்து மிகப் பெரிய கேடுகளை உரு வாக்கியது - அமெரிக்காவும், நேசநாடு களான பிரிட்டன் போன்ற வையும்.

அதை எதிர்கொண்டு புத்தாக்கத்தை உருவாக்கிய அம்மக்களுக்கு அம்மக்களின் பொது ஒழுக்கம், கட்டுப்பாடு, சத்தமாகக்கூடப் பேசாத தன்மை, கடும் உழைப்பு, நாணயம், நேர்மை - இவை தான் அவர்களை உலகத்தின் உன்னதத் தொழில் வளர்ச்சி நாடாக ஆக்கின.

எப்போதும் இயற்கைச் சீற்றத்தை எதிர்பார்த்தே - எரிமலை குமுறினாலும், பூகம்பம், புயல், ஆழிப் பேரலை வந்தாலும் - எதையும் தாங்கும் இதயம் உள்ள வர்களாக அம்மக்கள் ஏற்று வாழ்வதற்குப் பழகி விட்டார்களே!

எனவே, அங்கு கொள்ளை, பிறர் பொருளைக் கவருதல், குறுக்கு வழியில் பணம் சேர்த்துவிட அவர்கள் முயற்சிப்ப தில்லை.

ஜப்பான் மக்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது உழைப்பு - கடும் உழைப்பு மட்டுமின்றி நாணயம், ஒழுக்கம், கட்டுப்பாடு, மற்றவர்களுக்குக் காட்டும் மரியாதை - இவை மிக மிக முக்கியம் ஆகும்!

Wednesday, March 23, 2011

சோவின் பார்வை - ஒரு பார்வை

Print
திருவாளர் சோஇராமசாமி அய்யர் தேர்தல் களத்தில் பஞ்சக் கச்சத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு தனது பூணூல் மூளையை ஒரு கசக்குக் கசக்கிக் கொண்டு - விடையை முதலில் எழுதிக் கொண்டு கணக்குப் போடும் ஒரு வேலையை இந்த வார துக்ளக்கில் (6.4.2011 - பக்கம் 5,6) செய்துள்ளார்.
அடேயப்பா, அய்யங்கார் அம்மையாரை எப்படியும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டும் என்றால் எவ்வளவு சாதுர்யமாகவும், வக்கணையாகவும் பேனா முனையை வளைய விடுகிறார்கள் என்ப தற்கு இந்த விமர்சனக் கட்டுரை ஒன்றே போதுமானது.

1) தேர்தல் கூட்டணியில் தி.மு.க.வோடு காங்கிரஸ் போட்ட கூட்டணியில் பிரச்சினைகள் ஏற்பட்டதால் காங் கிரஸின் ஓட்டு எந்த அளவுக்குக் கழக வேட்பாளர் களுக்குக் கிடைக்கும் என்பதும், கழகத்தினரின் ஓட்டு எந்த அளவுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களுக்குக் கிடைக்கும் என்பதும் நிச்சயமற்ற விஷயங்கள்.
இந்த உறவு மட்டுமல்ல; விடுதலைச் சிறுத்தை கள்; பா.ம.க.,வின் உறவும் இப்படிப்பட்டவைதான்; தலைவர்கள் செய்து கொண்ட சமாதானத்தைத் தொண்டர்கள் செய்து கொள்ளாததால் அவர வர்கள் ஓட்டு அந்தந்தக் கட்சிகளுக்கு போகுமே தவிர மற்றவர்களுக்குக் கிட்டாமல் போகும்.

இப்படி தி.மு.க. கூட்டணிபற்றி வரைந்து தள்ளும் துக்ளக் அ.தி.மு.க. கூட்டணியில் நடந்த நிகழ்வு களைப்பற்றி என்ன எழுதுகிறது?

யாரும் எதிர்பார்க்காத நிலையில் அ.தி.மு.க. தரப்பு, தான் போட்டியிடுகிற தொகுதிகளின் பட்டியலை வேட்பாளர்கள் பெயர்களுடன் வெளியிட்டது - அது அதிர்ச்சியைத் தந்தது என்றெல்லாம் எழுதிவிட்டு பார்ப்பனியத்துக்கே உரித்தான பம்மாத்து வேலையில் இறங்குகிறது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. வினரிடையே தொண்டர்கள் மத்தியில் தோன்றிவிட்ட கசப்புணர்வு, அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்படவில்லை. தி.மு.க. கூட்டணியை காங்கிரஸ் தொண்டர்கள் வெறுத்தனர். ஆனால் அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணியை இரு கட்சி தொண்டர்களும் முழுமையாக விரும்பினர் என்று கொஞ்சம்கூட அறிவு நாணயமற்ற முறையில் எழுதுகிறது துக்ளக்.

தங்களைக் கலக்காமல் பேச்சு வார்த்தை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களின் பெயர்களோடு 160 இடங்களுக்கு பட்டியலை அறிவித்தபோது என்ன நடந்தது?

இடதுசாரிகள் என்ன என்னவெல்லாம் பேசி னார்கள்? நடிகர் விஜயகாந்த் எப்படியெல்லாம் பேசினார்? இப்பொழுதே இந்த அம்மையார் இப்படி நடந்து கொள்கின்றாரே, தேர்தலுக்குப்பின் எப்படி நடந்து கொள்வார் என்றெல்லாம் பேசவில்லையா?

கூட்டணிக் கட்சியின் தலைவரான ஜெயலலிதா அம்மையாரின் கொடும்பாவி நாடெங்கும் கொளுத்தப் படவில்லையா? சடகோபம் (செருப்படி) சாத்துபடிகள் நடக்கவில்லையா?

இப்படியெல்லாம் அ.தி.மு.க. கூட்டணியில் சாங்கோ பாங்கமாக நடந்திருக்கிறது. அப்படியி ருக்கும் கூட்டணிக் கட்சிக்காரர்களிடம் ஏதும் பிரச்சினையே கிடையாதாம். ஒன்றுபட்டு தேர்தல் பணிகளைச் செய்வார்களாம் - மனம் ஒத்துப் போய் விட்டார்களாம்.

மனம் ஒத்துப் போக வேண்டும் என்றால் செருப்படி விழ வேண்டுமோ!

தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே பிரச் சினைகள் வெடித்தாலும் அது ஒரு விமர்சனம் என்கிற கட்டுக்குள்ளே மட்டுமே கண்ணியமாக இருந்தது. எந்தக் கட்சித் தொண்டரும் இன்னொரு கட்சித் தலைவரின் கொடும்பாவியைக் கொளுத்தவில்லை; கொடி மரத்தை வெட்டவில்லை. ஆனாலும் இந்தக் கூட்டணிக் கட்சி களின் தொண்டர்களிடத்தில் விரிசல் இருக்கிறதாம்.  இந்தக் கட்சிக்காரர்களின் வாக்குகள் ஒருவருக் கொருவர் கிடைக்காதாம்.

துக்ளக் சோவின் கருத்துப்படி ஒரு கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகள் மனமொத்து இருக்கின்றன என்பதற்கு அடையாளம் - அந்தக் கட்சிக்குள் மோதல் பகிரங்கமாக வெடிக்க வேண்டும் - கூட்டணிக் கட்சித் தலைவரின் கொடும்பாவியைக் கொளுத்த வேண்டும் - அசிங்கமான பொருள்களால் அபிஷேக ஆராதனைகள் நடத்த வேண்டும்.

புரிகிறதா? இதுதான் சோராமசாமியின் விவாதப் புத்தியின் லட்சணம். அடேயப்பா, இவர்தான் அக்கிரகார அகராதியில் அறிவுக் கொழுந்தாம்!

2) தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கிடையாது என்று கலைஞர் அறிவித்து, ஒரு போலி மிரட்டலை விடுத்தபோது  - அவருக்கு அழகிரி முதல் வீரமணி வரை பலர் பாராட்டுத் தெரிவித்து - இதுதான் சரி என்று கொண்டாடினர். அ.தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டபோது, இப்படி எந்தக் கட்சியும் மகிழவில்லை. இது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய வித்தியாசம். தி.மு.க. கூட்டணி வெறுப்புற்றவர்களின் ஒப்பந்தம். அ.தி.மு.க. கூட்டணி - விருப்பமுடையோரின் உறவு - என்று எழுதுகிறார் திரு. சோ. இதைவிட உண்மையைக் கவிழ்த்துப் போட்டு யாராலும் காயடிக்க முடியாது.

தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையே பிரச்சினை வந்தபோது கருத்துகள் பரிமாறப்பட்டன. இன்னொரு கட்டத்தில் பிரச்சினைக்குத் தீர்வுக் காணப்பட்டுவிட்டது. ஆனால் அ.தி.மு.க. கூட்டணிக்குள் ஒன்றுமே நடக்கவில்லை என்று கோயபல்சு பாணியில் எழுதுகிறாரே - அது உண்மைதானா?

நடிகர் விஜயகாந்த் இருக்கும் திக்கு நோக்கி இடதுசாரிகள் படையெடுக்கவில்லையா? திருமண நிகழ்ச்சிக்குச் சென்று இருக்கும் திரு. வைகோ விரைந்து கொண்டு இருக்கிறார் - மூன்றாவது அணி உருவாக்கப்படும் என்று பேசப்பட வில்லையா?

உள்ளுக்குள் இந்தக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசிக் கொண்டிருந்தபோதுதான் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்துக்கு வெளியில் வெளிப்புறக் காட்சிகள் (சினிமாக்காரர்கள் ஆயிற்றே) கண ஜோராக நடந்து கொண்டிருக்க வில்லையா?

துக்ளக் ராமசாமி அய்யரின் கணிப்புப்படியே அ.தி.மு.க கூட்டணியில் எல்லாம் சுமுகமாக நடந் தேறிவிட்டது. தலைவர்களுக்குள்ளும், தொண்டர் களுக்குள்ளும் எவ்வித வெறுப்பும் இல்லை என்பது உண்மையானால், ஒரே ஒரு தடவையாவது அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஓர் இடத்தில் அமர்ந்து பொது மக்களைச் சந்திக்காதது ஏன்?

அம்மையார் ஜெயலலிதா தனிக்காட்டு ராணியாக யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்துப் படிக்கும் பிரச்சாரத்தைச் செய்வானேன்?

இதுதான் இந்தக் கூட்டணி ஒற்றுமையாகச் செயல்படுகிறது என்பதற்கு அடையாளமா?

அ.தி.மு.க. கூட்டணி ஒற்றுமையாகச் செயல் படுகிறது என்பதற்கு அடையாளம்தான் - தன்னை வரவேற்க அ.தி.மு.க. கொடியுடன் வந்த தொண்டர் களைப் பார்த்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எரிந்து விழுந்தது - வசைமாரி பொழிந்ததும் என்று சொல்லப் போகிறாரா?

தி.மு.க. கூட்டணி வெறுப்புற்றவர்களின் கூட்டணி என்பதற்கு அடையாளம் - இக் கூட்டணித் தலைவர்கள் ஒரே மேடையில் பேசுவது, பிரச்சாரம் செய்வது தான் என்கிறாரா?

ஜெயலலிதா அம்மையார்மீதான பார்ப்பனப் பாசம் - சூத்திரர் கலைஞரின் மீதான துவேஷம் இந்த இரண்டும் சேர்ந்து சோ போன்ற பார்ப் பனர்களைப் படாதபாடு படுத்துவதாகத் தெரி கிறது! ஆசை, வெட்கம் அறியாது என்பதை வெளிப்படுத்துகிறது. துக்ளக்கின் விமர்சனக் கட்டுரையைப் படிக்கும்போது ஓர் உண்மை மட்டும் வலிமையாக பளிச்சென்று தெரிகிறது. அ.தி.மு.க. கூட்டணி படுதோல்வி அடையப் போவதை உணர்ந்த நிலையில், எதையாவது சப்பைக்கட்டுக் கட்டி, தமிழர்களின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவியாவது  - சுண்ணாம்பை வெண்ணெய் என்று காட்டியாவது அய்யங்கார் அம்மையாரை அரியணையில் ஏற்ற வேண்டும் என்கிற ஆத்திரத்தில் இருப்பதாகத் தெரிகிறது!

பார்ப்பனர்களின் பேனாவைக் சுழற்றியடிப்பது தான் தமிழர்களின் தலையாயக் கடமை என்பதை தந்தை பெரியார் அவர்கள் நாடி நரம்பில் ஊட்டிச் சென்றாரே - 1971 தேர்தலில்தான் நாடு அதனைக் கண்டதே! யார் அதனை மறந்திருந்தாலும் திருவாளர் சோ ராமசாமி அய்யர் கண்டிப்பாக மறந்திருக் கவே மாட்டார். இப்பொழுது போல அப்பொழுதும் பூணூலை முறுக்கிக் கொண்டு எழுதியவர் அவர்தானே! வட்டியும் முதலுமாக வாங்கிக் கட்டிக்கொண்டவர்தானே அந்த அய்யர்வாள் - மறந்திருக்க முடியாதே!

இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது - நாட்டை விட்டு வெளியேற மகா புருஷர்கள் தயாராகிவிட்டனர் என்று ஆச்சாரி யாரை (ராஜகோபாலாச்சாரியாரை) ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்க வைத்தாரே தந்தை பெரியார் - அதனை மறந்துவிட அவர்களால் முடியுமா? இன் னொரு அடியும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. நாம் என்ன செய்ய!

ஒன்றுபடக் கூடாதா?
சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவியதாகச் சொல்வார்களே, அதுபோல சன்னமாக ஓர் ஏத்துவேலையைச் செய்கிறது துக்ளக்.
விடுதலைச் சிறுத்தைகள்; பா.ம.க.வின் உறவும் இப்படிப்பட்டதுதான்;  (காங்கிரசுக்கும் - தி.மு.க.வுக்கும் இடையே உள்ள உறவு போன்றது தானாம்!) தலைவர்கள் செய்து கொண்ட சமாதானத்தைத் தொண்டர்கள் செய்து கொள்ளாததால் அவரவர்கள் ஓட்டு அந்தந்த கட்சிகளுக்குப் போகுமே தவிர, மற்றவர்களுக்கும் கிட்டாமல் போகும் - என்கிறார் திருவாளர் சோ. இது சோவின் ஆசையே தவிர, உண்மையல்ல. இதில் சன்னமாக கந்தப் பொடி தூவுவது என்பது விடுதலைச் சிறுத்தைகள் - பா.ம.க உறவும் இப்படித்தான் என்று குறிப்பிட்டு இருப்பது விடுதலைச் சிறுத்தைகள் - பா.ம.க.,  சேர்வது என்பதை சமூகரீ(நீ)தி கண்ணோட்டத்தில் கைகொடுத்து வரவேற்கக் கூடியவர்கள் நாம். தமிழன் ஒற்றுமை - ஜாதியால் சிதறுண்டுப் போகக் கூடாது என்ற கவலை நமக்கு. ஆனால் துக்ளக் பார்ப்பனப் பார்வையில் அது நடந்து விடக் கூடாது என்பதுதான்; அது நடந்து விட்டதே என்கிறபோது அது தங்கள் இனத்துக்கு ஆபத்து என்று உணர்ந்த நிலையில், கிண்டலாக விடுதலைச் சிறுத்தைகள் - பா.ம.க., உறவு பற்றிச் சிலாகிக்கிறது; 2011-லும் பார்ப்பனர்களின் நிலைப்பாடு இதுதான் என்பதை ஒடுக்கப்பட்ட தமிழர்கள் உணர்வார்களாக!

ம.தி.மு.க.வை மறைத்தது - ஏன்?
அ.தி.மு.க. கூட்டணியின் விரிசலை மயிலிறகால் வருடும் துக்ளக்  முழுப் பூசணிக் காயை பிடிசோற்றில் மறைத்ததுபோல ஒரு வேலையைச் செய்திருக்கிறது - நரியை நனையாமல் குளிப்பாட்டுவதாகச் சொல்லு வார்களே - அதுபோல!

கடந்த 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் 35 இடங்களைக் கொடுத்து தன்வசம் வைத்துக் கொண்ட ம.தி.மு.க.வை இந்த முறை அ.தி.மு.க. தலைமை அவமானப்படுத்தி வெளியேற்றியதே - அதைப்பற்றி இந்த விமர்சனக் கட்டுரையில் ஒருவரிகூட எழுதாமல் இருட்டடித்தது ஏன்?
அதில் கை வைத்தால் குளவிக் கூட்டில் கை வைத்த கதையாக, ஆகி விடுமே - அதனால் தானா? தனக்கு வசதியாக இல்லாவிட்டால் அந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்ற பார்ப்பனத் தந்திரம்தானே இது!
கடந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் ம.தி.மு.க. வாக்குகளை அ.தி.மு.க. பெற்றதே - இந்தமுறை அதன் வாக்குகள் எங்கு போகும் என்று ஒரே ஒரு வரிகூட - எழுதாததன் மர்மம் என்ன? வைகோவின் பிரச்சாரம் அ.தி.மு.க.வுக்குக் கிடைக்காமல் போனதுபற்றி குறிப்பிடத் தவறியது ஏன்? இவற்றையெல்லாம் இருட்டடிப்புச் செய்து விட்டு தேர்தல் விமர்சனம் எழுதுகிறது துக்ளக் என்றால் அந்தப் பார்ப்பனத் தந்திரத்தை - யோக்கியதாம்சத்தை - துக்ளக் வாசகர்களும், வாக்காளர்களும்தான் கொஞ்சம் புத்தியைப் பயன்படுத்திக் தெரிந்து கொள்ள வேண்டும். ஆரியம், நடமாடும் நாசம் என்றார் அறிஞர் அண்ணா. அதை இந்த இடத்தில் வட்டக் கோடிட்டுத் தெரிந்து கொள்ளலாம் அல்லவா?
- கருஞ்சட்டை






Monday, March 21, 2011

வழக்குரைஞர் தொழிலுக்கு நுழைவுத் தேர்வா? தமிழர் தலைவர் கண்டனம்



சட்டக் கல்லூரியில் படித்து பார்-கவுன்சிலில் பதிவும் செய்து, வழக்குரைஞர் தொழிலைத் தொடங்குபவர்கள் நுழைவுத் தேர்வு ஒன்றை எழுதி, அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்கிற முடிவுக்குக் கண்டனம் தெரிவித்துத் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மருத்துவருக்கும், பொறியாளருக்கும் சார்ட்டெட் அக்கவுன்டென்ட் ஆகியோருக்கும் இல்லாத தகுதித் தேர்வு என்கிற நுழைவுத் தேர்வை, வழக்குரைஞர்கள் படித்து முடித்த பிறகு ஏன் வைக்க வேண்டும்?

வழக்குரைஞர் தொழிலில் இழந்த அக்ரகார ஆதிக்கத்தை மீண்டும் உள்ளே நுழைக்க மறைமுகத் தேர்வு மூலம் ஏற்பாடாகிறது.

மேலும் வழக்குரைஞர் தொழில் செய்யாமலேயே, பார்கவுன்சிலில் பதிவும் செய்யாமலேயே சட்டக் கல்லூரியில் படித்துவிட்டு நேரடியாக நீதிபதியாக நியமிக்கும் கொடுமை அக்ரஹார சூழ்ச்சியால் ஏற்படுத்தப்பட்டு முன்சீஃப் மேஜிஸ்திரேட்டுகள் ஒரு சிலர் நியமிக்கப்பட்டும் விட்டனர்.

பார்ப்பன சூழ்ச்சி!

சட்டப் படிப்பில் நெற்றியில் டிராயிங் வரைந்து கொண்டும், பட்டை போட்டுக் கொண்டும்,கிராஸ்பெல்ட் அணிந்து கொண்டும் இருக்கும் அக்ரஹார ஆத்தின் பேர் வழிகளின் ஆதிக்கத்தை சட்டத் தொழிலில் உடைத்தெறிந்து, தமிழர்கள் முன்னேறி தந்தை பெரியாரின் தொண்டால், திராவிடர் கழகத்தின் அயராத உழைப்பால் நம்மவர்கள் அட்வகேட் ஜெனரலாகவும், உயர்நீதிமன்றம் முதல் அனைத்து மட்டம் வரை நீதிபதிகளாகவும், சீனியர் கவுன்சிலர்களாகவும் வருவதை பிற்காலத்தில் தடுப்பதற்கான முன்கூட்டிய ரகசிய ஏற்பாடே இந்த எழுத்துத் தேர்வு ஆகும்.

மூன்று ஆண்டுகள் மற்றும் 5 அய்ந்து ஆண்டுகள் என முழு நேரமும் சட்டம் பயின்று, பல்கலைக் கழகத் தேர்வும் எழுதி, தேர்ச்சியும் பெற்று, பார்-கவுன்சிலில் பதிவும் செய்யப்பட்டு வழக்குரைஞர்களாகதொழில் செய்ய அனுமதிக்கப்பட்ட பிறகும், வேறு எந்த ஒரு தொழிலிலும் இல்லாத  வழக்குரைஞர்  நிர்ப்பந்தத் தேர்வு அவசியம்தானா? அது தேவையற்ற ஒன்றே!

லா-அகாடமி ஏற்படுத்தலாமே!

இதற்கு பார்-கவுன்சில் தேவையின்றிச் செலவிடும் நேரத்திற்கும், பண விரயத்திற்கும் பதிலாக இளம் வழக்குரைஞர்களை தொழிலில் ஊக்குவிக்க லா அகாடமி (டுயற ஹஉயனநஅல) போன்ற பயிற்சிப் பள்ளிகளை நடத்தலாமே! அதன் மூலம் தவறான, திசைமாறிய இளம் வழக்குரைஞர்களும் தொழிலை முறையாகப் பயிற்சி பெற்று சிறந்த வழக்குரைஞர்களாக மாற வாய்ப்புள்ளபோது, அதை விடுத்துத் தேவையின்றி இந்தத் தேர்வுகளைக் குறித்து வீண் பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டுமா? இந்த தேர்வில் தேறவில்லை என்றால், அவர் சட்டப்படிப்பு படித்து பட்டம் பெற்றதன் பொருள் என்ன? அவருக்குச் சட்டப் பட்டம் அளித்த பல்கலைக் கழகத் தின் நிலை என்ன? என்பதுபோல் தேவையில்லாத, வேண்டத்தகாத பிரச்சினை களைக் கிளப்பி பல்கலைக் கழகங்களுக்கும், சட்டக் கல்லூரிகளுக்கும் பிரச்சினை களை ஏற்படுத்தி, நாளடைவில் அது பெரும் பிரச்சினையாக - அரசாங்கத்திற்கு தலைவலியை ஏற்படுத்தக் கூடிய நிலையை ஏற்படுத்தி விடும்.

எனவே, ஆரம்பத்திலேயே முளையில் கிள்ளி எறிய வேண்டியதை விட்டு ஆணிவேர் பதிந்த பிறகு கட்டடம் இடிகிறதே எனக் கூச்சல் போட்டுப் பயன் இல்லை.

போராட்டம் வெடிக்கும்!

இது தொடர்பாக தேவைப்பட்டால் திராவிடர் கழகத்தின் மாணவர் அணி ஒத்த கருத்துடையவர்களை இணைத்துக்கொண்டு போராட்டம் நடத்தவும் தயங்காது.
- கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

Saturday, March 19, 2011

அய்யா அவர்களை நீண்டகாலம் வாழவைத்த பெருமை அன்னை மணியம்மையாரையே சாரும்! அண்ணா கூறிய கருத்தை தமிழர் தலைவர் விளக்கினார்

அய்யா அவர்களை நீண்டகாலம் வாழவைத்த பெருமை அன்னை மணியம்மையாரையே சாரும்!  அண்ணா கூறிய கருத்தை தமிழர் தலைவர் விளக்கினார்
சென்னை, மார்ச் 19- அய்யா அவர்களை நீண்ட காலம் வாழ வைத்த பெருமை அன்னை மணியம் மையார் அவர்களையே சாரும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறிய செய்தியை விளக்கினார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
சென்னை பெரியார் திடலில் 16.3.2011 அன்று இரவு 7.30 மணிக்கு தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-
ஒரு திரைப்படம் நேற்று ஒரு திரைப்படம் போட்டு காட்டப் பட்டது. அந்தத் திரைப்படத்தை தயாரித்தவர் களுக்கு பெரியார் திடலில் அழைத்துப் பாராட்டு வதுதான் பொருத்தமானதாக இருக்கும் என்று சொன்னோம்.
மண்வாசனையோடு ஒப்பனைகள் அதிகம் இல்லாமல் இயற்கையாக அந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.  கிராமங்களால்தான் நாடு வாழ்கிறது. கிராமங்களில்தான் அதிக மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. அந்த மூடநம்பிக்கை கள் எப்படியெல்லாம் மக்களை வதைத்து வருகிறது என்பதை மய்யப்படுத்தி சங்ககிரியைச் சேர்ந்த தோழர் ராஜ்குமார் அற்புதமான ஒரு படத்தை உருவாக்கியிருக்கின்றார்.
இரண்டேகால் மணிநேரம் ஓடக்கூடிய திரைப்படம். மிக அருமையாகச் சொல்லுகின்ற முறையிலே ஈர்ப்புள்ள ஒரு முறையாகவும் சிந்திக்கக் கூடிய திரைப்படமாக அதை எடுத்திருக்கின்றார்.
அடுத்து வெளிவரும்
அந்தப் படம் அடுத்து வெளிவரும். அதைக் காணக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். நம்முடைய பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன் அவர்கள் சொன்னதுபோல இப்படி ஒரு நான்கு திரைப் படங்கள் வந்தால் சமுதாயத்தையே புரட்டிப் போடும்; அப்பொழுதுதான் புரட்சி ஏற்படும் என்று சொன்னார்.(கைதட்டல்).
அந்தத் திரைப்படத்தை உருவாக்கி இயக்கிய ராஜ்குமார் அவர்களே, இணை இயக்குநர் அவர்களே, திரைப்படத்தில் நடித்த கதாநாயகன் அவர்களே! உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கம்.
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தை நாம் நடத்துவது தமிழுக்கு உரிய ஊக்கத்தை தமிழர்களுக்கு உள்ள ஊக்கத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறோம்.
பல்வேறு சிறப்பு வாய்ந்தவர்கள்
இந்த அரங்கத்திலே அமர்ந்திருப்பவர்கள் பல்வேறு தகுதி படைத்தவர்களாக இருக்கிறார்கள். இந்தக் கூட்டம் சிறியதாக இருக்கும். ஆனால் இங்கே இருக்கிறவர்கள் எல்லாம் முத்திரை பதித்த குறிப்பிடத்தக்கவர்களாக இருக்கிறார்கள்.
தேவநேயப் பாவாணர் மன்றத்தை மத்திய அமைச்சர்களாக இருக்கக்கூடியவர்கள்-நம்முடைய இயக்கத்தைச் சார்ந்தவர்களேகூட வியக்கக்கூடிய அளவிற்கு தேவநேயப்பாவாணர் அரங்கத்தை புதுப்பித்து எல்லோருக்கும் வசதியாக அமரக்கூடிய அளவுக்கு நல்லவகையிலே அமைக்கக்கூடிய அளவிற்கு மாற்றி அமைத்தவர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. அதற்கு மூலகாரணமாகத் திகழ்ந்தவர் கயல்தினகரன். நூலக ஆணையக் குழுத் தலைவராக இருக்கக்கூடியவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்றார். இப்படி ஒவ்வொருவரும் இங்கே வந்திருக்கின்றார்கள்.
பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் நல்.இராமச்சந்திரன் வந்திருக்கின்றார்.
அந்தத் தாய் வாங்கிய வசவுகளோ...
இப்படி எல்லா துறைகளைச் சார்ந்தவர்களும் வந்திருக்கிறார்கள். அதிக நேரம் பேசக்கூடிய வாய்ப்புகூட இல்லை. இன்றைக்கு அன்னை மணியம்மையார் நினைவுநாள்.  அன்னை மணியம்மையார் அவர்களைப் பற்றி எவ்வளவோ செய்திகளைச் சொல்லலாம்.
ஏனென்றால் இந்திய வரலாற்றில் மட்டுமல்ல-உலக வரலாற்றிலே இப்படி ஒரு பெண்மணி- ஒரு தாய் ஏராளமான வசவுகளைத் தாங்கி வாழ்ந்தவர் என்று சொன்னால்-அதற்கு முதல் பரிசு யாருக்கு கிடைக்கும் என்று சொன்னால்-அன்னை மணியம்மையார் அவர்களுக்குத்தான் கிடைக்கும். அவ்வளவு வசவுகளை, அவ்வளவு ஏளனங்களை, அவ்வளவு சங்கடமான சூழ்நிலைகளை எல்லாம் அவர்கள் சந்தித்தார்கள்.
பொறுத்துக்கொண்டு தன்னுடைய பணி..
அதை எல்லாம் வெளியே காட்டிக்கொள்ளாமல் பொறுத்துக்கொண்டு தன்னுடைய பணி  பெரியாருக்குத் தொண்டு செய்வது, தமிழ்நாட்டு மக்களுக்கு, மனித குலத்திற்குத் தொண்டு செய்ய தன்னுடைய வாழ்வையே ஒப்படைத்துக் கொண்டவர். அய்யா அவர்களைக் காப்பாற்றினார். எல்லோரும் அறிந்தோம்.
அய்யா அவர்களுக்குப் பிறகு அன்னை மணியம்மையார் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நேரத்திலே அய்ந்தாண்டு காலம் ஒரு பக்கம் நோயோடு போராடிக்கொண்டு, மற்றொரு பக்கம் சமுதாயத்தோடு போராடிக்கொண்டி ருந்தார்.
அவருடைய தலைமையிலேதான் இராவணலீலா போராட்டமே நடைபெற்றது. இந்தியாவையே உலுக்கக்கூடிய ஓர் அற்புதமான நிகழ்ச்சி நடைபெற்றது.
வரலாற்றில் பதிவான ஒரு செய்தி-நெருக்கடி காலம் இந்த இயக்கத்திற்கு வந்த ஓர் கட்டம். இப்போதும் ஒரு வகையான நெருக்கடி நடந்து கொண்டுதான் இருக்கிறது.
துணிச்சலான வீராங்கனை
அம்மா அவர்கள் அன்றைக்கு ஒரு துணிச்சலோடு வீராங்கனையாகத்தான் இருந் தார்கள். அறிவு,ஆற்றல்,திறமை,சிக்கனம், எளிமை இவை எல்லாவற்றையும் தாண்டி அடக்கத்தோடும் இராணுவ வியூகத்துடன் கூடிய போராட்டங்களை எல்லாம் அவர்கள் சந்தித்தார்கள்.
எல்லாம் அறக்கட்டளைக்கே!
அப்படிப்பட்ட ஒரு தலைமைத்துவ பண்பு உடையவர்.இன்னும் சிறப்பானது. தந்தை பெரியார் அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஒவ்வொரு காசையும்,  எப்படி பொதுமக்களுக்கே பயன்படும்படியாக அவர்கள் ஆக்கி வைத்துவிட்டு, எப்படி அறக் கட்டளையாக்கிவிட்டுச் சென்றார்களோ அது போல அன்னை மணியம்மையார் அவர்களுடைய சொந்த சொத்து, அன்னை மணியம்மையார் அவர்களுக்குத் தரப்பட்டது.
இந்தச் சொத்துகளை எல்லாம் தன்னுடைய உற்றார், உறவினர்களுக்கோ கொடுக்காமல் அதை மீண்டும் மக்களுக்கே பயன்படக்கூடிய அளவுக்கு அதையும் அறக்கட்டளையாக்கியதன் விளைவு தான் இன்றைக்குப் பல கல்வி நிறுவனங்கள், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் வரை வளர்ந்திருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவிற்கு அன்னையாரது அருட்கொடை இருந்தது. அவரு டைய தொண்டறம் இவை எல்லாம் சிறப்பு களாகும். அப்படிப்பட்ட அன்னை மணியம்மை யாருடைய நினைவுநாள் இன்று.
அய்யா அவர்கள் பற்றி அண்ணா...
அய்யா அவர்களைப் பற்றி அண்ணா அவர்கள் சொன்னார்கள். அய்யா அவர்கள் சலிப்பாக ஒரு கடிதம் எழுதினார். ஓர் அறிக்கை எழுதினார். அவருடைய பிறந்தநாளை ஒட்டி, அய்யா, அவர்களுடைய அறிக்கையை விடுதலை மலரில் நாங்கள் வெளியிட்டோம்.
அண்ணாஅவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டு நியூயார்க் மருத்துவமனையிலே தங்கி ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்ற காலகட்டம்.
விடுதலை மலரை நான் விமானம் மூலமாக அமெரிக்காவுக்கு-அண்ணா அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அண்ணா அவர்கள் படிப்பார்கள் என்பது தெரியும்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடிதம்
அந்த மலரில் அய்யா அவர்கள் எழுதிய கட்டுரையைப் பார்த்துவிட்டு, உடனே அய்யா அவர்களுக்கு அமெரிக்காவிலிருந்து அண்ணா ஒரு கடிதம் எழுதினார். ரொம்ப வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த கடிதம் அது.
உலக வரலாற்றிலேயே ...
உலக வரலாற்றிலேயே எந்த ஒரு புரட்சிகரமான தலைவரும் நான் பார்த்த வரையிலே, அவருடைய கொள்கை வெற்றியை வாழ்நாளிலேயே கண்ட தில்லை; சுவைத்ததில்லை.
நீங்கள் ஒருவர்தான் அதற்கு விதிவிலக்காக இருக்கிறீர்கள் என்று அய்யா அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். எனவே அவர்களுடைய வெற்றிகள் கொள்கை வெற்றிகளாக இருக்கும். அதுபோல அன்னை மணியம்மையார் அவர்களுக்கும் ஒரு சிறப்பு உண்டு.  அம்மா அவர்களைப் பற்றி சந்தேகப் பட்டவர்கள்-அய்யா, அம்மா திருமணத்தை விமர்சித்தவர்கள் எல்லோரும் உண்டு.
அண்ணா அவர்கள் உள்பட அன்றைய காலகட்டத்திலே அப்படிப்பட்ட விமர்சனங்கள் தவிர்க்க முடியாது. அதைப்பற்றி இங்கு ஆய்வு செய்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலே ஒவ்வொரு சிந்தனை ஓட்டம் இருந்தது.
நமக்கே தெளிவு
நமக்கே தெளிவு ஏற்படுகின்ற நேரத்திலே அதற்கு வேறுவிதமான எண்ண ஓட்டங்கள் வருகின்றன. அப்படிப்பட்ட நிலையிலே முதலமைச்சர் அண்ணா அவர்களை ஒரு முறை நானும், சம்பந்தம் அவர்களும் போய் பார்த்தோம். இந்த சம்பவத்தை நான் பல முறை சொல்லியிருக்கின்றேன்.
சென்னை நுங்கம்பாக்கம் அவின்யூ சாலையில் உள்ள அண்ணா அவர்களை அவரது இல்லத்தில் சந்திக்கும்பொழுது நடந்த சம்பவம் இது. தனித்த முறையிலே நான் சந்திப்பதில்லை. அய்யா அவர்கள் ஏதாவது செய்தி சொல்லி அனுப்பும்பொழுதுதான் சந்திப்பேன்.
அய்யா அவர்களின் பணியாளனாக...!
அதைச் சொல்லுகின்ற ஒரு பணியாளாகத்தான் நான் சென்றிருக்கின்றேன். எப்பொழுது வர வேண்டும் என்று அண்ணா அவர்களைக் கேட்டபொழுது, எங்களுக்கு ஒரு நேரத்தை ஒதுக்கிக்கொடுத்தார்.
அவர் ஒதுக்கிக்கொடுத்த நேரத்தைக் கேட்டால் ரொம்ப வியப்பாக இருக்கும். நள்ளிரவு 1 மணி ரொம்ப வசதியாக இருக்கும் என்று சொல்லி வரச்சொன்னார்கள்.
அண்ணா அவர்கள் இரவெல்லாம் பகலாக்கிக் கொண்டு உழைக்கக்கூடியவர். அண்ணா அவர்கள் அப்பொழுதுதான் கோப்புகளை எல்லாம் பார்க்க ஆரம்பிப்பார்கள்.
அண்ணா மகிழ்ச்சியாகக் கேட்டார்
நாங்கள் வந்திருப்பதை அண்ணா அவர்களின் உதவியாளராக இருக்கின்ற திரு.சொக்கலிங்கம் அவர்கள் நேரே போய் சொல்லுவார்கள். அவர்களுக்குத் தெரியும் அய்யா அவர்களிட மிருந்து வந்திருக்கிறார்கள் என்று.
அண்ணா அவர்களிடம் சொல்லிவிட்டோம். அவர் தயாராக இருக்கிறார் போய் பாருங்கள் என்று சொன்னார்.
உடனே அண்ணா அவர்கள் என்னிடத்திலே மகிழ்ச்சியாகக் கேட்டார், என்னப்பா அய்யா அவர்களுடைய உடம்பு எப்படியிருக்கிறது? என்ன நிறைய சுற்றுபயணம் சென்று கொண்டி ருக்கிறாரே என்று கேட்டுவிட்டு, முன்னாலே அய்யா அவர்களுக்கு ஒரு வயிற்று வலி சங்கடம் இருக்குமே இப்பொழுது வருவதில்லைதானே? என்று கேட்டார்.
அன்னை மணியம்மையார்
நான் சொன்னேன், அய்யா அவர்கள் இப்பொழுது கூட இறைச்சி சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கின்றார். நன்றாக இருக்கிறார் என்று சொன்னேன். 30 ஆண்டுகளுக்கு முன்னாலே அய்யா அவர்களுக்கு அடிக்கடி வயிற்று வலிப் பிரச்சினை இருக்கும். டாக்டர் சுந்தரவதனம், டாக்டர் சடகோபன், டாக்டர் கிருஷ்ணசாமி முதலியார் இவர்களிடம் செல்வார்.
இன்றைக்கு அய்யா அவர்களுக்கு அந்த அளவுக்கு உடல் உபாதை இல்லாமல் மாற்றி விட்டார்கள் என்றால் அது அன்னை மணியம்மையார் அவர்களையே சாரும் (கைதட்டல்). மணியம் மையார் அவர்கள் இல்லை என்றால் அய்யா அவர்கள் இவ்வளவு காலம் நல்ல உடல் நலத்துடன் இருந்திருக்க முடியாது என்று ரொம்ப மகிழ்ச்சியாக அண்ணா சொன்னார்.
எவ்வளவு மாற்றம்?
எவ்வளவு மாற்றம் பாருங்கள். அண்ணா அவர்களுடைய அறிவு நாணயத்தைப் பாருங்கள். கால ஓட்டத்தில் நம்முடைய சிந்தனை நம்முடைய அனுமானம், தவறு என்று நினைத்தால் நம்முடைய தீர்ப்பு தவறான தீர்ப்பு என்று நினைத்தால் அதை மாற்றிக்கொள்வதிலே, அதை உறுதிப்படுத்திக் கொள்வதிலே தெளிவாக இருப்பார்.
அம்மா அவர்களை வைத்துதான்...
அம்மா அவர்களை வைத்துதான் இயக்கமே பிரிந்தது. அப்பேர்ப்பட்ட அண்ணா அவர்கள் தன் எண்ணக் கருத்துகளை வெளிப்படையாகச் சொன்னார்.
அதே போல பேராசிரியர் அவர்களும் நாங்கள் அரசியலுக்காகத்தான் சென்றோம். வேறொன்று மில்லையென்று வெளிப்படையாகச் சொன்னார். நம்முடைய கவிஞர்கள் எல்லாம் எப்படிப் பட்டவர்கள் என்று சொன்னால் பாராட்டி னாலும், உச்சியின் எல்லைக்கே சென்று பாராட்டு வார்கள்.
புரட்சிக் கவிஞருக்குக் கோபம்
தாக்கினாலும் எல்லையின் கடைசிக்கே சென்று தாக்குவார்கள். நான் சொல்லும்பொழுது யார் உங்களுக்கு ஞாபகத்திற்கு வருகிறார் என்பது உங்களுக்குத் தெளிவாகவே தெரியும்.
புரட்சிக்கவிஞர் அவர்கள் அன்றைக்கு அய்யா அவர்களை மட்டும் தாக்கிப் பேசவில்லை. அம்மா அவர்களையும் தாக்கிப் பேசினார்.
அப்பேர்ப்பட்ட புரட்சிக் கவிஞர் சொன்ன செய்தி என்ன? இன்றைக்கு அம்மா அவர்களுடைய நினைவுநாளில் சொல்லுவது பொருத்தமானமாக இருக்கும்.
இன்றைக்கு விடுதலையில்கூட எழுதியிருக் கின்றேன். குயில், பத்திரிகையில் எழுதியிருக் கின்றார். புரட்சிக் கவிஞர் பாண்டிச்சேரியில் குயில் என்ற பத்திரிகையை நடத்தினார்.
மண்ணச்சநல்லூர் தோழர்
பெரும்பாலும் கவிதைகளாக வரும். சிலது சிந்தனைகளாக- கட்டுரைகளாக வரும். திருச்சிக்குப் பக்கத்திலே மண்ணச்சநல்லூர் என்று ஓர் ஊர் இருக்கிறது. இயக்கத்தில் கொஞ்சம் கோளாறு இருந்தது அப்பொழுது-அய்யா அவர்கள் சிறைச்சாலைக்குப் போய்விட்டு வந்தபொழுது-1960இல் இது நடந்தது.
அன்னை மணியம்மையார் என்று எழுதலாமா?
திராவிடர் கழக தோழர் ஒருவர் அஞ்சலட்டை யில் புரட்சிக் கவிஞருக்கு ஒரு கடிதம் எழுதினார். நீங்கள் போய் குயில் ஏட்டில் அன்னை மணியம்மையார் என்று எழுதலாமா? என்று கேட்டார்.
உடனே புரட்சிக் கவிஞருக்கு ரொம்ப கோபம் வந்தது. குயில் ஏட்டில் அந்தக் கடிதத்தை அப்படியே போட்டார். அது பெயர் போடவில்லை. வெறும் மொட்டைக் கடுதாசிதான். இருந்தாலும் அப்படியே போட்டார். அந்த கடிதத்தில் இன்னும் சில  பேரையும் அவர் தாக்கி எழுதியிருந்தார்.
1.5.1960-லே குயில் ஏட்டில் போட்டுவிட்டு அதே ஏட்டிலே புரட்சிக்கவிஞர் பதில் எழுதினார். அதை இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்லுகின்றேன்.
இல்லை என்பேன் நானடா!
கடவுள் கருத்திலேகூட புரட்சிக் கவிஞரின் சிந்தனையைப் பாருங்கள். முதலில் முருகனைப் பாடினார்-சுப்பிரமணிய துதி அமுது. இரண்டாவது உண்டென்பார் சிலர் இல்லை என்பார் பலர்  எனக்கில்லை கடவுள் கவலை என்று சொன்னார். ஆனால் கடைசிக் கட்டத்தில் குயில் ஏட்டில் எழுதினார். புரட்சிக்கவிஞர் அடுத்த கட்டத்திற்குப் போனார். இல்லை என்பேன் நானடா! அத்தில்லைகண்டு தானடா! என்று சொன்னார்.
புரட்சிக் கவிஞருக்குக் கோபம் வந்தவுடனேதான் கவிதை வேகமாக வரும். இசை அரசு தண்டபாணி தேசிகரையே பாட வைத்துவிட்டார்கள். இல்லை என்பான் யாரடா? அத்திலை சென்று பாரடா! என்று நடராஜர் பெருமானின் பெருமையைப் பாடினார். இசை அரசையே இப்படிப் பாட வைத்து சூழ்ச்சி செய்துவிட்டார்கள். அதற்குத்தான் புரட்சிக் கவிஞர் பதில் சொன்னார். இல்லை என்பேன் நானடா-அத் தில்லை கண்டு தானடா!
என்று பாடினார். நான் போய் பார்த்த பிறகுதான் இப்படி எழுதுகிறேன் என்று புரட்சிக்கவிஞர் பதில் சொன்னார்.
-(தொடரும்)

தேர்தல் பிரச்சார வியூகம் முதல்வர் கலைஞர் அறிவிப்பு

சென்னை, மார்ச் 19- தேர்தல் பிரச்சாரம் பற்றி தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் கலைஞர் அறிவுரை வழங்கி உள்ளார்.
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் கலைஞர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- வரவிருக்கின்ற சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும், களத்திலே நிற்கவிருக்கும், வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன. கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 119 பெயர்களில் 58 பேர் புதுமுகங்கள், 70 பேர் பட்டதாரிகள், அதிலே வழக்கறிஞர்கள் 24 பேர், மருத்துவர்கள் 3 பேர், முதுகலைப் பட்டதாரிகள் 27 பேர்.
அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் சென்னை யிலே தங்கியிருந்தோரும், கட்சியின் மாவட்டச் செயலாளர்களும் நேற்றையதினம் இரவே என்னைச் சந்தித்து வாழ்த்தினைப் பெற்றுக் கொண்டு தொகுதிகளுக்குச் சென்றுவிட்டார்கள்.
இதுவரை பொறுப்பிலே இருந்த ஒரு சிலருக்கு இந்தமுறை வாய்ப்பளிக்கப்படவில்லை. ஏன் அமைச்சர்களாக இருந்தவர்களான, எனக்கு மிகவும் நெருங்கிய, கட்சியின் முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமியும், என்னுடைய தளகர்த்தர் களில் ஒருவர் என்று சொல்லத்தக்க அளவிற்கு என் வாழ்வோடு நெருங்கிய தொடர்புடைய கோ.சி. மணியும் இந்தமுறை தேர்தலில் போட்டியிட வில்லை.
இன்னும் சொல்லப்போனால், நான் வேட் பாளர்களை அறிவிப்பதற்கு முன்பே ஆர்க்காடு வீராசாமி என்னைச் சந்தித்து தனது உடல் நிலையைப் பற்றிக் கூறி தனக்கு இந்த முறை வாய்ப்பளிக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டார். வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்பாகவே அண்ணா அறிவாலயம் வந்து, என் பக்கத்திலே இருந்து வேட்பாளர்களை அறிவித்த வுடன், அவரும் என்னை வாழ்த்தினார்.
அதைப்போலவே கோ.சி. மணிக்கு வாய்ப்பு தராவிட்டாலும், அவரால் வளர்க்கப்பட்ட மற்றொருவருக்குத்தான் அந்தத் தொகுதியிலே வாய்ப்பு தரப்பட்டுள்ளது. கோ.சி.மணி இளமை முதல் எப்பொழுதும் எனக்கு கவசமாகவும் எதிர்ப்புக் கணைகளிலிருந்து என்னைக் காத்திடும் கேடயமாகவும் விளங்குபவர். நானும் அவரும் வாழும்வரை இந்த உணர்வு நிரந்தரமாகவே இருக்கும்.
வடசென்னை மாவட்ட செயலாளராக அரும்பணியாற்றி, சுழன்று சுழன்று உழைத்து வரும் வி.எஸ். பாபுக்கு, அவருடைய தொகுதி இந்தத் தேர்தலில் சீரமைப்பு காரணமாக பிரிந்துவிட்ட காரணத்தினால், வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்ற போதிலும், அவருடைய பட்டாளத்தோடு அறிவாலயம் வந்து எனக்கு பொன்னாடை அணிவித்து, அவருடைய மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டணியினரையெல்லாம் வெற்றி பெறச்செய்து அழைத்து வருவதாக கூறிவிட்டுச் சென்றபோது, என் மனத்திற்கு என்னாலேயே ஆறுதல் கூற முடியவில்லை.
ஆனால், ஒருசிலர் வாய்ப்பு கிடைக்காதவர்கள் அல்லது அவர்களுடைய ஆதரவாளர்கள் வருத்தப்படத்தான் செய்கிறார்கள். ஓர் உதாரணம் கூறுகிறேன். கடலூர் சட்டமன்றத் தொகுதியில் என்னுடைய நண்பராக இருந்தவர் கடலூர் இளம்வழுதி. அண்ணா இருந்த காலத்திலிருந்து கட்சியை வளர்த்தவர். அவர் இப்போது இல்லை, மறைந்துவிட்டார். ஆனாலும் அவருடைய குடும்பமே கழகக் குடும்பம். அவருடைய வீட்டிலே உள்ள பிள்ளை குட்டிகள் எல்லாம் கோபாலபுரம் வீட்டைத்தான் தங்கள் சொந்த வீடாகக் கருதுபவர்கள்.
அந்தக் கடலூர் இளம்வழுதியின் புதல்வன்தான் இள.புகழேந்தி. வழக்கறிஞரும்கூட. அவர் அந்தத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்து சிறப்பாகப் பணியாற்றினார். ஆனால், கடந்த முறை அந்தத் தொகுதிக்கான வேட்பாளராக அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கட்சியிலே வேறொருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கருதி, புகழேந்தியை அழைத்து நிலைமையை நான் கூறியபோது அதனையேற்றுக் கொண்டு, மிகப் பொறுமையாக இந்த அய்ந்தாண்டு காலமும் அவர் கட்சிப் பணிகளை ஆற்றி வந்தார்.
கடந்த முறை அவருக்கு வாய்ப்பு மறுக்கப் பட்டபோது, தனக்கு வாய்ப்பு தராமல் விட்டு விட்டார்களே என்று அவர் எந்தத் தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை. யாரையும் தூண்டிவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தக் கூறவில்லை. மாணவர் அணியிலே பொறுப்பேற்று ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவ இயக்கங்களை தொடங்கிட உழைத்தார்.
எனவே, இந்த அய்ந்தாண்டுகள் சட்ட மன்றத்திலே நல்ல பணி ஆற்றிய நண்பருக்கு வாய்ப்பு அளிக்க இயலாமல், கட்சிப்பணியை ஆற்றி வந்த இள.புகழேந்திக்கு வாய்ப்பு தரப்பட்டது என்றதும், இந்த அய்ந்தாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவரின் ஆதரவாளர்கள் சிலபேர் அங்கே எதிர்ப்புகளைத் தெரிவித்ததாக ஏடுகளிலே செய்தி வந்துள்ளது. வாய்ப்பு கிடைக்காதவர்கள் பொறுமையாக இருந்தபோதிலும், அவருடைய ஆதரவாளர்கள் என்போர், அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முனைகிறார்கள்.
இத்தகைய போக்குகள் நமது கட்சிக்கு ஏற்றதல்ல. மாற்று முகாம்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளையெல்லாம் ஏடுகளில் கண்டு வருகிறோம். அதைப் பற்றிக்கூட செய்தியாளர்கள் என்னிடம் கேட்டபோது மற்றவர்களுக்கு ஏற்படுகின்ற சிக்கலைப் பார்த்து மகிழ்ச்சி அடையக் கூடியவன் நான் அல்ல என்றுதான் பதில் அளித்திருக்கிறேன். எனவே, மற்றவர்களைப் பற்றியே நாம் நினைத்துக் கொண்டிராமல் நமது பணியினைத் தொடங்கிட வேண்டும்.
முறைப்படி கூட்டணிக் கட்சிகளோடெல்லாம் கலந்து பேசி எந்தெந்தக் கட்சிகள் எத்தனை தொகுதிகளிலே போட்டியிடுவது என்பது உறுதியாகிவிட்டது. அவை எந்தெந்தத் தொகுதிகள் என்பது பற்றியும் கூட்டணிக் கட்சிகளோடு கலந்து பேசி மணிக்கணக்கிலே விவாதித்து, அந்தத் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதன்பின்னர் கட்சியின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களையெல்லாம் நேர்காணலுக்கு அழைத்து, இரவும் பகலுமாக கட்சியின் தலைமை யோடு கலந்து பேசி, வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டார்கள். இதைத் தொடர்ந்து இன்று (19ஆம் தேதி) அன்று கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப் படவுள்ளது. அந்தத் தேர்தல் அறிக்கையினைத் தயாரிப்பதற்காக கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்ட குழுவினர் அளித்த விவரங்களை வைத்துக்கொண்டு தேர்தல் அறிக்கை தயாராகி, அச்சுக்கும் அனுப்பப் பட்டுள்ளது. அதைப்பற்றிக்கூட செய்தியாளர் ஒருவர் கடந்தமுறை கழகத்தின் சார்பில் வெளி யிடப்பட்ட தேர்தல் அறிக்கையை அந்தத் தேர்தலிலேயே அதுதான் "கதாநாயகன்'' என்று வர்ணிக்கப்பட்டதே, இந்த முறை தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எப்படி இருக்குமென்று கேட்டபோது, நான் சிரித்துக் கொண்டே "கதாநாயகி''யாக இருக்குமென்று சொன்னேன்.
அந்தத் தேர்தல் அறிக்கையிலே கூறப்படும் கருத்துகளையெல்லாம் வாக்காளப் பெரு மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு தொண்டர்களுக்கு இருக்கிறது. கட்சியின் சார்பில் கடந்த அய்ந்தாண்டுகளில் செய்யப்பட்ட சாதனைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, இதைப் போன்ற சாதனைகளில் மீண்டும் தொடர்ந்து பெற்றிட நமது அணியினை ஆதரிக்க வேண்டுமென்று அனைவரையும் கேட்டுக்கொள்ள வேண்டியதும் தொண்டர்களுடைய கடமைதான். கட்சியின் பொதுச் செயலாளரும், பொருளாளர் மு.க.ஸ்டாலினும், தென் மண்டலத்தின் அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியும், கட்சியின் முன்னணியினரும், பிரச்சாரகர்களும், கட்சிக் கலைஞர்களும் தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஈடுபடுவது பற்றிய விவரங்கள் அடுத்தடுத்து வரவுள்ளன.
இதற்கு முன்பெல்லாம் நான் விடிய விடிய தேர்தல் பிரச்சாரம் செய்வேனே, வேனிலே அமர்ந்து கொஞ்சம் தயிர் சாதத்தை சாப்பிட்டுவிட்டு ஒவ்வொரு தொகுதியாக வலம் வருவேனே, அந்த அளவிற்கு பிரச்சாரம் செய்ய எனது உடல் நிலை இடம் கொடுக்காவிட்டாலும், வராவிட்டால் தொண்டர்கள் கோபித்துக் கொள்வார்களே என்பதற்காக என்னால் முடிந்த அளவிற்கு ஆங்காங்கு வருவதற்கு முயற்சி செய்கிறேன். அதுபற்றிய விவரங்களையும் இரண்டொரு நாள்களில் தெரிவிக்கின்றேன்.
இன்று (19ஆம் தேதி) முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. தேர்தலுக்கு இன்னும் ஒருமாதம் கூட இல்லை. எண்ணி 24 நாள்கள்தான் உள்ளன. அதற்குள் நமக்கு எண்ணிலடங்கா பணிகள் உள்ளன. நேரம் கிடைக்கும்போதெல்லாம் கடிதம் மூலமாக தொண்டர்களுடன் தொடர்பு கொள்வேன். மாற்றார் முகாமிலே என்ன நடக்கிறது என்றெல்லாம் பார்த்துக் கொண்டிராமல், மக்களை நேரில் சந்தித்து நாம் செய்தவற்றைச் சொல்லி, செய்யப் போவதையும் சொல்லி உண்மை உழைப்புக்கான அங்கீகாரத்தை அளிக்கச் செய்ய வேண்டும். -இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்குப் பெயர்தான் அரசியலா?

அ.இ.அ.தி.மு.க.வுடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்), ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகள் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளன. எந்தெந்தக் கட்சிக்கு எத்தனை எத்தனை இடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டு விட்டன.
ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு எந்தெந்தத் தொகுதிகள் வேண்டும் என்பது குறித்து விளக்கமாக எழுதியும் கொடுத்து விட்டன.
இந்த நிலையில் இவற்றையெல்லாம் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்துவிட்டு, தானடித்த மூப்பாக பெரிய அண்ணனாக (அக்காவாக என்றும் சொல்லலாம்) அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா 160 தொகுதிகளுக்கான தங்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டார்.
அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் அ.இ.அ.தி.மு.க., தலைமைக் கழக நிருவாகிகளோடு கலந்து பேசி, தங்களுக்குத் தேவைப்படும் தொகுதிகள் பற்றித் தெரிவித்துவிட்டு வந்த ஒரு மணி நேரத்தில் இந்தத் திருக்கூத்து அரங்கேறியது என்பதுதான் வேடிக்கை. அந்தப் பட்டியலைப் பார்த்தவுடன் கூட்டணிக் கட்சிகள் அதிர்ச்சிப் பனியில் உறைந்துபோய் விட்டன. என்ன இது? இப்படிக்கூட நடக்குமா? என்ற ஆச்சரியம் ஒரு பக்கம், அதிர்ச்சி இன்னொரு பக்கம் என்ற இரு முனை தாக்குதலில் சுருண்டு போய் விட்டனர்.
அவசர அவசரமாகக் கூட்டணிக் கட்சிகள் தங்கள் நிருவாகக் குழுவைக் கூட்டின. கடுமையான விமர்சனங்களை முன் வைத்தன. அதன்பின் புரட்சியாளர்களான இடதுசாரிகள் ஒரு சினிமா நடிகர் கட்சியின்  அலுவலகத்துக்கு ஓடினார்கள் - ஓடிக்கொண்டே இருந்தார்கள்.
பாரம்பரியம் மிகுந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் இந்த நிலை வெகு பரிதாபமாகவே இருந்தது. நடிகர் கட்சியின் அலுவலகத்தில் கூடிப் பேசினார்கள். மூன்றாவது அணி அமைக்கப்படும் என்றனர். இனி அ.தி.மு.க.வோடு கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று கர்ச்சித்தனர்.
கோபம் ஒரு பக்கம் இருந்தாலும், ஆசை இன்னொரு பக்கம் இழுத்தது. அதன் விளைவுதான் அ.தி.மு.க. நிருவாகிகளோடு இக்கட்சிகள் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்து கொண்டதாகும்.
இதற்கிடையே இக்கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் ஊருக்கு ஊர் அ.தி.மு.க. பொதுச் செயலாளரின் கொடும்பாவிகளை எரித்தனர். அதிமுக கொடிகளை அறுத்தனர்.
தொண்டர்கள் சுயமரியாதையோடுதான் நடந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தலைவர்களோ கெஞ்சிக் கூத்தாடி எப்படியோ சமாதானம் செய்து கொண்டார்கள்.
ஓர் இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் இப்படியெல்லாம் அந்தர் பல்டி அடிக்கக்கூடிய ஒரே ஒரு இடம் அரசியல் - தேர்தல் களம்தானோ!
அ.தி.மு.க. பட்டியல் மீண்டும் திருத்தி அறிவிக்கும் பொழுது, அதனால் தங்கள் வாய்ப்பை இழந்ததாகக் கருதும் கட்சிக்காரர்கள் எதிர்வினைகளில் கடுமையாக ஈடுபடத்தான் செய்வார்கள். ஏற்கெனவே அது குமரி முதல் நாகை வரை தலைவிரித்து ஆட ஆரம்பித்துவிட்டது.
எப்படி நடந்தது இந்தத் திருவிளையாடல்? ஜோசியர் சொன்னார், அதற்காக அவசர அவசரமாக அந்த நாளில் (மார்ச்சு 16 மாலை) வெளியிட நேர்ந்தது - அதனால் இந்தத் தவறு நேர்ந்து விட்டது என்றெல்லாம் சமாதானம் சொல்கிறாராம். இல்லை இல்லை, ஜெயலலிதா அம்மையாருடைய எண்ணத்துக்கு மாறாக அது வெளியிடப்பட்டது என்று பார்ப்பன ஏடுகளான தினமணியும், தினமலரும் அம்மையாருக்காக வக்காலத்து வாங்கி எழுதின. இது ஜெயலலிதா  அம்மையாரைக் காப்பாற்றவா அல்லது அந்த அம்மையாருக்குச் சுய சிந்தனை கிடையாது; எடுப்பார் கைப்பிள்ளை என்று காட்டுவதற்கா? பார்ப்பனர்களின் புத்திசாலித்தனத்தின் பரிதாபத்தைப் பார்த்தீர்களா?
தொடக்கமே இப்படி இருக்கிறதே - இந்த அம்மையாருடன் எப்படி குப்பை கூட்டுவது என்ற கலக்கம் கூட்டணிக் கட்சியினருக்கு ஏற்படத்தான் செய்யும். அம்மையாரின் போக்குகளை உணர்ந்தவர்களுக்கு நிச்சயம் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தவே ஏற்படுத்தாது.
கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் ஒருமித்துத் தேர்தல் வேலை செய்வது சாத்தியம்தானா என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.
இன்னும் தேர்தல் நெருங்க நெருங்க என்னென்ன விபரீதங்களோ, யார் கண்டது?
 
சேராத இடம் தனிலே சேர வேண்டாம் என்பது நம் நாட்டுப் பழமொழி.
தேர்தலுக்கு முன்பாகவே இந்தக் கதியென்றால், தேர்தலுக்குப் பிறகு...
நாங்கள் செய்து கொண்டது தொகுதி உடன்பாடுதானே தவிர கொள்கைக் கூட்டணி அல்ல என்ற விளக்கத்தை ஏற்கெனவே தயாராகவே எழுதி வைத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

இப்படிப்பட்ட கூட்டணியை நம்பி வாக்களிக்கத் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்லர்.

Wednesday, March 16, 2011

இன்று அன்னையார் நினைவு நாள்


அய்யாவும் - அம்மாவும் நம் வழிகாட்டிகள்!
தமிழர் தலைவர் அறிக்கை

அன்னை மணியம்மையார் நினைவு நாளையொட்டி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இன்று மார்ச் 16ஆம் தேதி - அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்  அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்த நாள் - நினைவு நாள்

நம் அறிவு ஆசானை 95 ஆண்டு காலம் வாழ வைக்க, பசி நோக்காது, கண்துஞ்சாது, தொண்டறமே தனது வாழ்வின் குறிக்கோள் என்ற நிலையில், பட்டம், பதவி, பணம், புகழ் - எதையும் நாடாது பற்றற்றாராக விளங்கிய நம் பகலவன் தந்தையின் கொள்கை, தொண்டின்மீது பற்று வைத்து, அவர்கள் மறைந்த பின்பு அவர்கண்ட புரட்சி இயக்கத்தினை வழிநடத்திய போர் முனைத் தலைவி அவர்!

அவர் இயக்கத்தின் தலைமை ஏற்றபோது, பெரியார் காலத்தில் மறைந்து நின்று இருந்த துரோகம் கொஞ்சம் வேகமாகவே வெளிச்சம் காட்டி, விஷமத்தைக் காட்டி விளையாடத் துவங்கியது!

அடக்கம் மிகுந்த தனது ஆற்றலால் எல்லா சோதனைகளையும், துரோகிகளான சோதாக் களையும் ஒரு சேர முறியடித்து, நெருக்கடி காலம் என்ற இருண்ட காலத்திலும் அணையா விளக்காக அய்யா உருவாக்கிய இந்த இயக்கத்தினைக் கட்டிக் காத்தவர் நம் அன்னையார்!

எல்லையற்ற எளிமையும், அடக்கமும், ஆற்றலும், சிக்கனமும், தொண்டுள்ளமும் இணைந்த ஓர் உருவத்திற்குப் பெயர்தான் மணியம்மையார் என்பதாகும்!

அன்று மட்டுமல்ல., அவர் மறைந்து, அண்ணா வால், புரட்சிக் கவிஞரால், கலைஞரால் மற்றும் பல்வேறு சான்றோர் பெரு மக்களாலும் பாராட்டப் பட்ட அன்னையாரை, ஜாடை மாடையாகவும் தாக்கி எழுதி, தங்கள் தரத்தைக் காட்டத் தவறாத தருக்கர்களும் வாழுகின்றனர்! அதை அவர்கள் லட்சியம் செய்ததே இல்லை!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரிலிருந்து ஒரு துரோகி புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு ஓர் அஞ்சலட்டை எழுதி,  கையொப்பமிட்டு எழுதிய தற்கு புரட்சிக் கவிஞர் - நீங்கள் மணியம்மையை அன்னை என்று எழுதலாமா? என்று கோபம் கொப்பளிக்க, எழுதிய கடிதத்தை அப்படியே குயில் ஏட்டில் - தலையங்கத்தில் போட்டு, தோலை உரித்துப் பதில் சொன்னார் புரட்சிக் கவிஞர்!

தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில்தான் இது நடந்தது! அதில் முக்கியப் பகுதிகள்... இதோ! படியுங்கள்!

நாம் இளைமைப் போதில் முருகனைப் புகழ்ந்தோம். முருகன் புகழத்தக்க ஒரு பொருளன்று. பாடத்தக்க ஒரு பொருளன்று எனக் கண்டோம். முருகனைப் புகழ்வதை விட்டோம்; முருகனைப் பாடுவதை விட்டோம்.

பாரதி தமிழ்ப்பாட்டுக்கு ஒரு புதுநடை கண்ட புலவன், பாரதியைப் புகழ்ந்தோம் - பாடினோம் - இதைச் சிலர் எதிர்த்தார்கள். பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டிருப்பதை  எதிர்த்து வருகின்றார்கள். அவர்களின் எதிர்ப்பை நாம் பொருட்படுத்தவில்லை. ஆனால் நாம் புகழ்வதற்கும், புகழ்ந்து பாடுதற்கும் பாரதியைவிட  ஒருவர் இருக்கின்றாரா? அவர் யார் என்று ஆராய்ந்து கொண்டிருந்தோம்.

தாம் போகும் வழியை மறித்துக்கொண்டிருந்த ஒரு குன்றத்தைக் குத்தி உடைத்துக் கொண்டிருந்த இரண்டு தோள்களைக் கண்டோம். தம்மை நோக்கிச் சீறிவருகின்ற நெருப்பு மழைக்குச் சிரித்துக் கொண்டிருந்த இரண்டு உதடுகளைக் கண்டோம். தமிழ் நெறிகாப்பேன், தமிழரைக் காப்பேன், ஆரிய நெறியை அடியோடு மாய்ப்பேன் என்று அறையில் அல்ல, மலை மேல் நின்று மெல்ல அல்ல, தொண்டை கிழிய முழக்கமிடும் ஓர் இருடியத்தால் செய்த உள்ளத்தைக் கண்டோம்.

அது மட்டுமல்ல. குன்று உடைக்கும் தோளும், நெருப்பு மழைக்குச் சிரித்த உதடுகளும், இருடிய உள்ளமும் ஒரே இடத்தில் கண்டோம். இந்த அணுகுண்டுப்  பட்டறைதாம் பெரியார் என்பதும் கண்டோம். பெரியாரைப் புகழ்ந்து பேசினோம். புகழ்ந்து பாடினோம். ஆயினும் நாம் புகழ் பாட இன்னும் ஒரு மேலான ஒரு பொருள் வேண்டு மென்று ஆராய்ந்து கொண்டிருந்தோம். பெரியார் செத்துக் கொண்டிருந்தார்! தமிழர் அழுது கொண்டிருந்தார்கள்.

ஆனால் பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்துபோக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் - போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு. மக்கள் மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று.

ஆயினும், காற்றிறங்கிப் பொதிமாடுபோல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒரு பால் ஒட்டிய ஆண் குறியினின்று முன்னறிவிப்பின்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலம் ஏந்திக் காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந்தொண் டால் முடியாது. அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது. பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை,

அன்னை என்று புகழாமல் நாம்வேறு
என்ன என்று புகழவல்லோம்?

பெரியார் மேடைமேல் வீற்றிருப்பார். ஓர் இலக்கம் தமிழர் அவரின் தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும் வெட்டிவேர் முதலிய மணப் பொருளாலும் அழகு பெறக் கட்டிய மாலை ஒவ்வொன்றாகச் சூட்டிப் பெரியார் எதிரில் இரண்டு வண்டியளவாகக் குவிப்பார்கள்.

அதே நேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார், ஏதுங்கெட்ட வேலைக்காரி போல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கல் தொலைவில் தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக் கொண்டி ருப்பார்கள்.

ஒரே ஒரு மாலையை என் துணைவியார்க்குப் போடுங்கள் என்று அந்தப் பாவியாவது சொன்ன தில்லை; எம் அன்னையாவது முன்னே குவிந்துள்ள மாலைகளை மூட்டைக்கட்டுவதன்றி அம்மாலை களில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கிள்ளித் தம் தலையில் வைத்தார் என்பதும் இல்லை. - இதுதான் புரட்சிக் கவிஞர் எழுதியது.

புரட்சிக் கவிஞர் அவர்கள் துவக்கத்தில் தந்தை பெரியார் திருமணம் என்ற பெயரால் செய்த சட்டப் படிக்கான பாதுகாப்பை ஏற்காமல் கடும் விமர்சனம் செய்தவர்! அவரே 11 ஆண்டுகள் கழித்து 1.5.1960 அன்று அன்னை மணியம்மை என்று ஏற்றத்துடன் எழுதிப் பாராட்டினார்; அப்பகுதியைப் படிக்கும் எவ ருக்கும் கண்களில் நீர் சிந்தாமலிருக்க முடியாது!

தனது கருத்தாக்கத்தின்  விரிவை - சிந்தனை வளத்தின் பெருக்கத்தினை - புரட்சிக் கவிஞர் எப்படியெல்லாம் வர்ணிக்கிறார் தெரியுமா?

அந்த நம் அன்னையார் விட்ட பணிமுடிக்க, அய்யாவால் அடையாளம் காட்டப்பட்ட தலைமை யின் கட்டளைகளை ஏற்றுச் செயல்பட்டதால்தான் நம் இயக்கம் எழில் குலுங்கும் கொள்கைப் பூங் காவாக, எவரும் எதிர்த்தழிக்க முடியாத கட்டுப் பாடுள்ள இராணுவமாக நின்று இமாலயச் சாதனைகளை இலகுவில் செய்து வரலாறு படைக்கிறது!

தந்தையும், அன்னையும் நம் வழிகாட்டிகள், வரலாற்றுச் சுவடுகள் - அவர்தம் பாதை நம் பாதை; பயணிப்போம், வெற்றி பெறுவோம்!

வாழ்க பெரியார்!

வாழ்க அன்னையார்!
கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...