Wednesday, December 29, 2010

அய்யப்பன் பேன் குத்தப் போனானா?


பாதுகாப்பு குறைபாடே விபத்துக்குக் காரணமாம்!

திருவனந்தபுரம், ஜன. 18- சபரிமலை பொன் னம்பல மேட்டில் மகர ஜோதியை காண  பக் தர்கள் குவிந்திருந்தனர். ஜோதி தரிசனம் முடிந்து திரும்பிய போது புல்லு மேடு பாதையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 106 பக்தர்கள் இறந்தனர். கடந்த 1999 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி பம்பையில் ஏற் பட்ட நெரிசலில் சிக்கி 53 பேர் இறந்தனர்.

இது பற்றி விசாரிக்க நீதிபதி சந்திரசேகர மேனன் தலைமையில் அமைக் கப்பட்ட குழு புல்லு மேடு பகுதி மிகவும் ஆபத்தான என்று எச் சரிக்கை விடுத்திருந்தது.

சபரிமலை, பெருவழி பாதை, புல்லுமேட்டு பாதைகளில் போதிய வசதிகள் செய்ய வேண் டும், பாதுகாப்பு ஏற்பாடு கள் மேம்படுத்த வேண் டும், இவற்றை முழுமை யாக அமல்படுத்திய பின்பே பக்தர்களை இந்த வழியாக அனு மதிக்க வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தி இருந்தது.

தக்க நடவடிக்கைகள் இல்லை

ஆனால் அறிக்கை அளிக்கப்பட்டு ஆண்டு கள் பல ஓடிவிட்ட நிலையிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கேரள அரசும், சபரி மலை தேவசம் போர்டும் இதற்கான எந்த ஏற் பாட்டையும் மேற் கொள்ளவில்லை. கடந்த 14 ஆம் தேதி இரவு புல்லுமேட்டில் ஏற் பட்ட நெரிசல் சாவுக்கும் பாதுகாப்பு குறைபாடே காரணம் என்று இப் போது தெரிய வந்துள் ளது.

ஆந்திரா, கருநாடகா பக்தர்கள் பலரும் இந்த கருத்தைத்தான் வெளி யிட்டனர். கேரள முதல மைச்சர் அச்சுதானந்தன் விபத்து பற்றி நீதிபதி தலைமையில் விசா ரணை நடக்கும் என்று அறிவித்துள்ளார்.

அதற்கு முன்பு கேரள குற்றப்பிரிவு காவல் துறையினர் தங்களின் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ஏ.டி.ஜி.பி. சந்திர சேகரன், காவல்துறை கண்காணிப்பாளர் சுரேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று முதற்கட்ட விசாரணையை தொடங் கினர்.

பக்தர்கள் இறந்து போன இடத்தில் தடயங்கள் சேகரிக்கும் பணியிலும் விசார ணைக் குழுவினர் ஈடு பட்டனர். பக்தர்களின் பொருள்கள், அக்கம் பக்கத்தாரின் கருத்து களையும் விசாரணைக் குழுவினர் கேட்டறிந்த னர்.

சபரிமலை விபத்தில் சிக்கி உயிர் இழந்த வர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 37 பக்தர்களின் உடல்களும் உறவினர் களிடம் ஒப்படைக்கப் பட்டுவிட்டன. இந்த விபத்தில் இறந்த 8 பேரின் உடல்கள் அடை யாளம் தெரியாமல் உள்ளது. 8 பேரின் உடல்களும் கோட்டயம் அரசு மருத்துவமனை யில் வைக்கப்பட்டுள் ளன.

காவல்துறையினர் இவர்களின் பெயர் விவ ரங்கள் மற்றும் முகவரி களை விசாரித்து வரு கின்றனராம்.

கையாலாகாத கடவுள்கள்


கான்பூர், ஜன. 11- உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் பழைமையான கோயிலில் இருந்து 8 சாமி சிலைகள் கொள்ளை யடிக்கப்பட்டன.

உ.பி. மாநிலம் கான்பூரில் உள்ள பித்தூர் பகுதியில் பழைமை வாய்ந்த ராம் ஜானகி கோயில் உள்ளது. இந்த கோயிலின் தலைமை பூசாரி விஷ்ணு பிரசாத் சம்பவத்தன்று கோயிலின் கதவைத் திறந்தபோது, கோயி லில் இருந்த 8 சிலைகள் காணா மல் போயிருப்பது கண்டு திடுக்கிட்டார்.

உடனடியாக, கோயில் நிருவாகிகளுக்கும் காவல்துறையினருக்கு பூசாரி தகவல் கொடுத்தார். காவல் துறையினர் கோயிலுக்கு வந்து மோப்ப நாய்களின் உதவியு டன் ஆய்வு மேற்கொண் டனர்.

கொள்ளையடிக்கப்பட்ட 8 சிலைகளில் ராமர், சீதை, லட்சுமணர் ஆகிய சிலைகள் அஷ்டதாது எனப்படும் 8 வித உலோகங்களால் செய்யப் பட்டவை. சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் விரை வில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என்றும் கான்பூர் மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் லால் பகதூர் தெரிவித்தார்.

பக்தியிலும் பாரபட்சமாம்!


சபரிமலையில் தமிழக பக்தர்களிடம் காட்டும் அலட்சியம்

சபரிமலை ஜன.11 சபரிமலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள கேரள காவல்துறையினர் தங்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்வதாக தமிழக பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

சபரிமலையில் அய்யப்பன் சிலையை பார்ப்பதற்காக பக்தர்கள் வருகிறார்கள். சில தினங்களில் பக்தர்கள் சுமார் 13 மணி நேரம் காத்திருந்து சிலையைப் பார்த்துச் செல்லும் நிலையுள்ளது.

இதில் பம்பையில் இருந்து வரும்போது பக்தர்களை தடுத்து நிறுத்தி குழுக்கள், குழுக்களாக அனுப்புகின்றனர். அய்யப்பன் கோயிலுக்கு வருகை தருவதில் சுமார் 60 சதவிகிதம் பேர் தமிழர்கள். பம்பையில் இருந்து வரும்போது மரக்கூட்டம் பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்துகின்றனர். கேரள பக்தர்கள் என்றால் அவர்களிடம் கனிவாகப் பேசுகிறார்கள். தமிழகப் பக்தர்களை பிடித்து கீழே தள்ளிவிடுகின்றனர்.

அதேபோல சரங்குத்தி பகுதியில் தண்ணீர் குடிக்க வரிசையை விட்டு வெளியே வந்தால் லத்தியால் அடிப்பது போன்ற செயல்களில் கேரள காவல்துறையினர் ஈடுபடுவதாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். பூசாரியாகப் போகலாமோ!

அறிவியலில் புதுமை சிந்தனை வேண்டும். ஒரு விஷயத்தை அறிவியல் உணர்வோடு சேர்த்து ஆன்மிக உணர்வோடும் அணுக வேண்டும் என்று சொல்லியிருப்பவர் மாங்காடு மாரியம்மன் கோயில் பூசாரியல்ல - மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அர்ச்சகர்ப் பார்ப்பனருமல்ல. சொல்லியி ருப்பவர் சென்னை அய்.அய்.டி., இயக்குநரான திருவாளர் ஆனந்த் அய்யர். அய்யர் அல்லவா - ஆன்மிகத்தை விட்டுக் கொடுத்துவிட முடியுமா? அங்குதானே அவாளின் உயிரே வாழ்ந்து கொண் டிருக்கிறது.

இந்தியாவின் மக்கள் தொகையில்


  •  2010இல் அமைப்பு சாரா தொழில் களில் வேலை கிடைத் தோர் எண்ணிக்கை 11.3 லட்சம்.
  • வேலை வாய்ப்பு கிடைத்த முக்கிய நகரங் களில் மூன்றாவது இடம் சென்னைக்கு, சென்னை யில் மட்டும் 3.79 லட்சம் பேருக்கு வேலை கிடைத் துள்ளது.
  • மிகவும் பிடித்த நாடு இந்தியா என்று ஆப்கானிஸ்தான் மக்களில் 71 சதவிகிதம் பேர்கள் கூறியுள்ளனர்.
  • 33 சதவிகித இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டால் நாடாளுமன்ற மக்கள் அவையில் 181 இடங்கள் பெண்களுக்குக் கிடைக்கும்.
  • அதேபோல 28 மாநில சட்டப் பேரவை களில் பெண்களுக்குக் கிடைக்கும் இடங்கள் 1370. (மொத்த இடங்கள் 4109).
  • இந்தியாவின் மக்கள் தொகையில் 66 விழுக்காட்டினர் விவசா யத்தில் ஈடுபட்டு வருகின் றனர்.
  • 2010ஆம் ஆண்டில் 18-24 வயதுடைய இஐள ஞர்கள் இந்தியாவில் நான்கு கோடி பேர் இருப்பார்கள் அவர் களுக்கு 900 பல்கலைக் கழகங்கள் தேவைப்படும்.

பார்ப்பன வருண தர்மத்துக்கு உச்சநீதிமன்றம் சவுக்கடி!


ஏகலைவனின் கட்டைவிரலைக் காணிக்கையாகக் கேட்ட
துரோணாச்சாரியாரின் செயல் வெட்கப்படத்தக்கது!
மகாபாரதம் இதிகாசத் தில் பாண்டவர் மற்றும் கவுரவர்களின் குருவான துரோணாச்சாரியார், காட்டு வாசியான ஏகலைவனிடம் அவனது கட்டை விரலை குரு தட்சணையாகக் கேட்ட செயல் மிகுந்த வெட்கப்பட வேண்டிய ஒன்று என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரி வித்துள்ளனர். தனது சீடன் அர்ஜுனனே  சிறந்த வில்லாளி என்ற நிலையை உருவாக்க ஏகலைவனின் கட்டை விரலை அவர் கேட்டார்.

துரோணாச்சாரியாரின் இச்செயல் மிகுந்த அவமானத்துக்கும், வெட்கத்துக்கும் உரியது. ஏகலைவனின் வலது கை கட்டை விரலை குருதட்சணையாகக் கேட்க அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? அர்ஜுனனை விடச் சிறந்த வில்லாளியாக ஏகலைவன் வந்துவிடக்கூடாது என்பதற்காக அல்லவா அவர் இவ்வாறு செய்தார் என்று நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும்  கியான் சுதா மிஸ்ரா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியது.

நிர்வாணமாக ஓர் இளம் பழங்குடியினப் பெண் ஊர்வலமாக இழுத்துச் செல்லப் பட்டதை எதிர்த்து நீதி வழங்கக் கோரிய வழக்கு ஒன்றில் நீதிபதிகள் தீர்ப்பு அளித்த போது, துரோணாச்சாரியாரின் வெட்கப்படத் தக்க செயலைப் பற்றிக் கடுமையாகத் தாக்கினர். பழங்குடி மக்கள் மீது பாராட்டுகளைப் பொழிந்த நீதிபதிகள், மற்ற நாகரிகமான வர்கள் என்று கூறிக் கொள்ளும் மக்களை விட இப் பழங்குடி மக்கள் மேலானவர்கள், உயர்ந்தவர்கள் என்று அறிவித்தனர்.

ஒரு பழங்குடி இளம் பெண்ணை நான்கு பேர் தாக்கியதுடன், அவரை நிர்வாணப் படுத்தி, கிராமத்தில் ஊர்வலமாக இழுத்துச் சென்றதைப் பற்றிய ஒரு வழக்கில் அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். மகாராஷ்டிர மாநில அகமது நகர் விசாரணை நீதிமன்றம் அவர் களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.

ஆனால், அவர்களது மேல்முறையீட்டை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளை அவர்களை விடு வித்தது. அதன் மீது செய்யப்பட்ட மேல் முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு குற்றம் சாற்றப்பட்டவர்களுக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த சிறைத் தண்டனையை உறுதிப்படுத்தியது. இத் தகைய ஒரு கொடுமையான நிகழ்ச்சி நடந்திருக்கும்போது, குற்றம் சாற்றப்பட்ட வர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு செய்யாமல் இருந்ததை எண்ணி தாங்கள் வியப்படைவ தாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

பா.ஜ.க.வில் மோசமாக நடத்தப்பட்டேன் உமாபாரதி பேட்டி


பா.ஜன தாவில் மீண்டும் சேரும் திட்டம் இப்போதைக்கு இல்லை, அங்கு மோசமாக நடத்தப்பட்டேன் என்று உமாபாரதி கூறியுள்ளார்.

மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல் அமைச் சர் உமாபாரதி கடந்த 2005 ஆம் ஆண்டு பா.ஜனதாவில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது தனிக்கட்சி நடத்திவரும் அவர், மீண்டும் பா.ஜனதாவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், மராட்டிய மாநிலம் வார்தாவில் உமாபாரதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பா.ஜனதாவில் மீண்டும் சேரும் திட்டம் இப்போதைக்கு இல்லை. அக்கட்சிக்காக நீண்ட காலம் பாடுபட்டும், நான் மோசமாக நடத்தப்பட்டேன். அத்வானி, நிதின் கட்காரி ஆகியோருடன் எனக்கு நல்லுறவு இருக்கிறது. இருப்பினும், இப்போதைக்கு பா.ஜனதாவில் சேரமாட்டேன்.  காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி, என் தம்பி போன்றவர். அவர் தடை செய்யப்பட்ட லஸ்கர் இ தொய்பாவை விட ஆர்.எஸ்.எஸ். அபாயகரமானது என்று கூறியுள்ளார். அவர் இது போன்ற பொறுப்பற்ற கருத்துகளை தெரிவிப்பதற்கு முன்பாக, ஆர்.எஸ். எஸ். வரலாற்றையும், பணிகளையும் நன்றாகப் படிக்க வேண்டும். அவர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங்கிடம் கற்ற பாடங்களின் அடிப்படையில், இப்படிப் பேசி வருகிறார்.

ஆர்.எஸ்.எஸ்.ஸை விமர்சித்ததற்காக, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் எச்சரிக்கை விடுத்ததில் தவறு இல்லை. அவர் கருத்து மட்டுமே கூறியுள்ளார்.
இவ்வாறு உமாபாரதி கூறினார்.

பிற்படுத்தப்பட்டோருக்குப் பட்டை நாமம்


மத்திய தேர்வாணையம் நடத்தும் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ்., தேர்வுகளில் முடிவுகள் திறந்த போட் டியில் தான் எடுத்த எடுப்பிலேயே பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
அதிக மதிப்பெண்கள் பெறும் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், உயர் ஜாதியினர் போட்டியிடும் இடம் இது.

ஆனால் இதற்கு மாறாக, திறந்த போட்டியில் அதிக மதிப்பெண் பெற்று இடம் பெற்றுள்ள தாழ்த்தப் பட்டோர், மலைவாழ்மக்கள்  மற்றும் பிற்படுத்தப்பட்டோரை - தாழ்த்தப் பட்டோர், மலைவாழ் மக்கள் பிற் படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக் கீட்டுக்குள் கொண்டு வந்து, ஏற் கெனவே ஒதுக்கப்பட்ட இடங்களில் இடம் பெற்றோர் வெளியேற்றப்படு கின்றனர். இதனைப் பாதிக்கப்படுபவர்கள் உணர வேண்டாமா?
கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லையே?

இதற்கு உங்கள் பதில் என்ன?

நம்மைப் போல் தூங்கிக் கொண் டிருப்போருக்கு அது தெளிவாகப் புரிய வேண்டாமா?

அய்.ஏ.எஸ்., தேர்வுமுறையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம்:-

இதுவரை முதல் நிலைத் தேர்வில் முதல் தாள் என்பது பொது அறிவு குறித்து இருக்கும். இரண்டாவது விருப்பப் பாடமாக இருந்து வந்தது.

விருப்பப்பாடம் என்கிறபொழுது, வரலாறு போன்ற 23 பாடங்களில் எதை வேண்டுமானாலும். இதன் காரணமாக அடித்தட்டு மக்கள் தங்கள் பட்டப்படிப்பில்  படித்த ஒரு பிரிவை எடுத்துக் கொண்டு தேர்வு எழுதிட வாய்ப்புக் கிடைத்தது. திங்கிற சோத்துல மண்ணை அள்ளிப் போட்டுட்டாக.

இதைத் தொடக்கத்திலேயே அடித்து நொறுக்குவதற்கு நயவஞ்சக மாக விருப்பப் பாடம் என்ற பகுதி அகற்றப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கும் காலம் எப்போது?....

தாழ்த்தப்பட்டோரையும், பிற் படுத்தப்பட்டோரையும் பிரிக்கும்- பிரித்தாளும் தந்திரத்தின் அடிப் படையில் தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் தனியே மாநிலங்களவையின் கடைசிக் கூட்டத்தின் கடைசி நாளில் எந்த விதமான விவாதமின்றியே இரண்டே நிமிடங்களில் மசோதா நிறைவேற்றப்பட்டது. நம் கையைக் கொண்டு நம் கண்ணையே குத்தும் செயலல்லவா இது? நம் எம்.பி.க்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள்?

அது மட்டுமா? முக்கியத்துவம் வாய்ந்த 47 கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்பதை எதிர்த்துத் திராவிடர் கழகம்தானே போராட்டம் நடத்துகிறது?
எம்.பி.,க்கள் இதனை ஆதரிக்கக் கடமைப்பட்டவர்கள் அல்லவா?

- க.பழனிசாமி, தெ.புதுப்பட்டி.டாருக்குப் பட்டை நாமம்

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...