Thursday, July 9, 2009

அர்ச்சகர் - ஜோசியர் சம்பாஷணை



அர்ச்சகர்: என்ன ஜோசியரே, கோயிலுக்கு முன்போல் ஆளுகள் வருவதே இல்லையே! குடும்ப நிர்வாகம் கஷ்டமாகவல்லவா இருக்கிறது.
ஜோசியர்: என்ன காரணம்?

அர்: இந்த எழவு எடுத்த சுயமரியாதைதான்.

ஜோ: சுயமரியாதை காரணம் என்றால், சுயமரியாதைக்காரர்கள் சாமி இல்லை பூதம் இல்லை என்று சொல்லி மக்களைக் கோயிலுக்குள் போகக் கூடாது என்று பிரச்சாரம் செய்கின்றார்களே, அதனாலா?

அர்: இல்லை இல்லை. அதற்கெல்லாம் நமக்கு பயமில்லை. இன்னமும் ஆயிரந்-தடவை வேண்டுமானாலும் சாமியில்லை; பூதமில்லை என்று சொல்லட்டும்; கோயிலை வேண்டுமானாலும் இடிக்க வேண்டுமென்று சொல்லட்டும். அதனால் நமக்கு ஒன்றும் கெட்டுப் போகாது.
ஜோ: மற்றென்ன காரணம் என்ன சொல்லுகிறீர்கள்?

அர்: கோயில்களுக்கு தேவதாசிகள் வருகின்றதான முக்கிய கைங்கரியத்தைப் பற்றி கண்டபடி பேசி அதை நிறுத்தி விட்டார்-களல்லவா, அதனால்தான்.
ஜோ: இதற்கும் பக்திக்கும் சம்பந்தமென்ன? இதனால் எல்லாம் மக்களுக்குக் கடவுள் பக்தி குறைந்து விடுமா?

அர்: கடவுள் பக்தி என்றால் என்ன என்கிறீர்! கடவுள் தான் எங்கும் நிறைந்தவ-ராயிற்றே; இதற்காக ஒரு மனிதன் கோயிலுக்கு வர வேண்டுமா?
ஜோ: மற்றெதற்காக வருகிறார்கள்?

அர்: இரண்டு காரியத்திற்காகத்தானே கோயிலுக்கு வருகின்றார்கள்:

1) தன்னை பக்திமான் என்று பிறர் மதிக்க வேண்டும்.

2) அங்கு வரும் நல்ல பெண்களை ஆண்கள் பார்க்கவும், ஆண்களைப் பெண்கள் பார்க்கவுமான காரியங்களுக்கு என்றாலும், இரண்டாவது விஷயத்திற்குத்தான் அதிகம் பேர் வாலிபர்கள் சற்று ஷோக் பேர் வழிகள் சிறிது வயதானவர்களாயிருந்தாலும் சபலமுடையவர்கள் ஆகியவர்கள் வருவது. இப்படிப்பட்ட ஆண்கள் தாராளமாய் - வரா-விட்டால் குடும்பப் பெண்களும் வருவதில்லை. ஆக, இப்படிப்பட்ட இரண்டு கூட்டம் வந்தால்தானே காணிக்கை, கட்டளை, இணைப்புத் தரகு ஆகியவை கிடைக்கும். ஆகவே, நமக்குக் கோயிலில் மணியடிப்பதில் என்ன பிரயோசனம்? கோயில் சம்பளமாகிய மாதம் 1-12-0 ரூபாய் சம்பளமா நமக்குக்கட்டும்?

ஜோ: அப்படியா சங்கதி, அவர்கள் இப்படிச் செய்தால் நமக்கு வேறு கிடைக்காதோ?

அர்: என்ன வழி?

ஜோ: நம்ம ஆளுகளே ஒன்று சேர்ந்து நாம் ஆளுக்கு இரண்டு மூன்று வீதம் பெண்டாட்டிகள் கட்டி, நன்றாய் அலங்கரித்து தினம் காலை, மாலையில் கோயிலுக்கு வரும்-படி செய்தால் என்ன?

அர்: அப்படிச் செய்வது சாத்தியமாகுமா? அவர்களுக்கு நகை, புடைவை, மினுக்கு கண்ட கண்ட இடங்களுக்கு எல்லாம் சென்று அறி-முகம் செய்து கொள்ளுவது முதலாகிய இதெல்லாம் செய்ய வேண்டாமா? பிறகு நமது வீடுகளிலும் போதிய சவுகரியம் - வீடு, வாசல், கட்டில், படுக்கை முதலிய சவுகரியம் ஆகியவை வேண்டாமா? இவற்றிற்கெல்லாம் பணத்திற்கு எங்கே போவது?

நாம் ஏதோ தாசிகள் செல்வாக்கினால் கோயிலுக்கு வருகின்றவர்களில் ஒன்று இரண்டு ஆள்களைப் பிடித்து சரி பண்ணி, அதுவும் இரகசியம் என்றும் அவசரமென்றும் பயப்படுத்தி 10, 5 பெற்றுக் கொண்டு கஷ்டமில்லாமல் நஷ்டமில்லாமல் சம்பாதிப்பது நலமா? அப்படிக்கின்றி, நம்ம பெண்களையே தாசிபோல் நடக்க ஏற்பாடு செய்து கொள்ள முடியுமா?

ஜோ: என்னமோ கஷ்டகாலம் உங்களுக்கு மாத்திரமல்ல; நமக்கும்கூடத்தான் வந்துவிட்டது.

அர்: உங்களுக்கு என்ன வந்தது?

ஜோ: இப்போது எந்தத் தேவடியா மகன் நம்மிடம் ஜோசியம் பார்க்க வருகிறான்? பிள்ளைக்கும், பெண்ணுக்கும் பொருத்தம் பார்க்கின்ற வேலையே மிகவும் குறைந்து போய் விட்டது.

அர்: ஏன்?

ஜோ: ஏன் என்ன! அத்துகளே - பெண்ணும் மாப்பிள்ளையுமே பொருத்தம் பார்த்துக் கொள்ளுகின்றன.

அர்: இருந்தாலும் கிரகதோஷம் பார்க்கவாவது வருவார்களே?

ஜோ: அதாவது வந்தாலும் பரவாயில்லை. அதற்குத்தான் எங்கு வருகின்றார்கள்! திருட்டுத் தேவடியா பிள்ளைகள் காய்ச்சல் வந்தால் - தலைவலி வந்தால் உடனே டாக்டர்கள் இடம் போய் விடுகின்றார்கள். நம்மிடம் வருவதே இல்லை. நம்மைக் கண்டால் சிரிக்கின்றார்கள்; என்னடா என்று கேட்டால், சுயமரியாதையடா என்கின்றார்கள்.

அர்: சரி, இவ்வளவு ஆனதற்கப்புறம் எனக்கு ஒன்று தோன்றுகிறது.

ஜோ: என்ன?

அர்: நாமும் சுயமரியாதைப் பிரச்சாரம் செய்வதாகச் சொல்லி ஏமாற்றி மெள்ள மெள்ள உள்ளே இருந்தே அதை ஒழித்து விடுவது! எப்படி என்றால், இப்பொழுது எத்தனையோ தமிழ்ப் பண்டிதர்கள் அப்படித்தான்; அதாவது, நானும் சுயமரியாதைக்காரன் என்று சொல்லிக் கொண்டு அதற்குள் பிரவேசித்து அதை ஒழிக்கப் பார்க்கின்றார்களே அதுபோல்.

ஜோ: அது நல்லவழிதான். நம்முடைய பெரியவாள் பவுத்தர்கள் காலத்திலும் இப்படித்தான் செய்தார்கள். ஆனால், இந்த சு.ம. பயல்கள் (சுயமரியாதைக்காரர்கள்) இது தெரிந்து தான் பு.ம. பயல்களை (புராண மரியாதைக்காரர்களை) அதாவது, பிராமணர்-களைச் சேர்ப்பதில்லை என்று தீர்மானித்து விட்டார்களே!

அர்: அதுவும் அப்படியா! அப்படியானால் இந்தப்படி ஏழைகளின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் இந்த சு.ம.காரன்கள் நாசமாய் நிர்மூலமாய்ப் போகட்டும். நாம் போய் இனி காங்கிரசில் சேர்ந்து கொள்ளுவோம்.

- சித்திரபுத்திரன் எனும் புனைபெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது, (குடிஅரசு 10.5.1931).

நாகரிகக் கோமாளி




இனி என்.எஸ்.கே. செத்தாலும் சரி, அவர் பணம் காசெல்லாம் நழுவி அன்னக்காவடி கிருஷ்ணன் ஆனாலும் சரி. நாடக - _ புரட்சி உலகைப் -பற்றி சரித்திரம் எழுதப்-பட்டால், அந்தச் சரித்திரத்-தின் அட்டைப் படத்தில் கிருஷ்ணன் படம் போடா-விட்டால் அந்தச் சரித்திரமே தீண்டப்படாததாகி விடும்
(குடிஅரசு 11.11.1944)

- _ கலைவாணர் என்.எஸ்.கே. பற்றி தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு _ வரைபடம் இது.

அந்தப் புகழுக்குரிய நாட்டுக்குச் சேவை செய்ய வந்த நாகரிகக் கோமாளி என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள் இன்று (1957).

சிரிக்க வைத்துச் சிந்திக்க வைத்த கலைக் கோட்டம் அவர்.

கலைவாணரின் கொள்கை என்ன? 1952 _ தென்றல் பொங்கல் மலரில் அவரே சொல்லுகிறார்:

வினா: தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளில் உங்களுக்குப் பிடித்தமான கட்சி எது?

விடை: இந்தக் கேள்-விக்கு நான் பதில் சொல்லக் கூடாது என்றாலும் பரவா-யில்லை. சந்தேகமில்லாமல் நான் ஆதரிப்பது, விரும்-புவது சுயமரியாதைக்-கட்சிதான்.

வினா: உங்கள் கொள்கை என்ன?

விடை: ஆதி முதல் குடிஅரசு கிருஷ்ணசாமி பாவலர் நடத்திய தேசபந்து ஆகிய இரண்டு பத்திரி-கைகளை நான் படித்து வந்தேன்; அப்போது நான் சிறுவ. நாடகக் கம்-பெனியில் வேலை. பக்தி மார்க்கத்திற்கும் நாடகத்-திற்கும் உள்ள வேறுபாடு-களை நான் அப்போது நன்றாகத் தெரிந்து கொண்-டேன். படித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தேன்.
வினா: உங்கள் முடிவு?

விடை: சுயமரியாதைக் கொள்கை நம் நாட்டுக்குத் தேவை என்பதுதான் அந்த முடிவு.

கலைவாணரின் இந்தப் பதிலைப் படிக்கும்போது என்.எஸ்.கே. அவர்களைப்-பற்றி தந்தை பெரியார் கணித்ததன் உண்மை புரியும்.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்று சொல்-வார்களே _ அது கலைவா-ணர் அவர்களுக்குத்தான் நூற்றுக்கு நூறு பொருந்தும். யார் பையன்? என்ற ஒரு திரைப்படம். கலை-வாணரின் துணைவியார் டி.ஏ. மதுரம் ஒரு கீழ் ஜாதிக்காரருக்குத் தண்ணீர் கொடுப்பார். அவரும் குடித்துவிட்டு அந்தப் பாத்திரத்தைத் திண்ணை-யில் வைப்பார். டி.ஏ. மதுரம் உள்ளே போய் தண்ணீர் கொண்டு வந்து அந்தப் பாத்திரத்தின்மீது தெளித்து, அதை வீட்டுக்குள் எடுத்துச் செல்லுவார். சிறிது நேரம் கழித்து ஒரு தாழ்ந்த ஜாதிக்காரர் கலைவாணரிடம் ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வந்து கொடுப்பார்; கலைவாணர் என்ன செய்தார்? அந்த ரூபாய் நோட்டுகள்மீது தண்ணீரை ஊற்றுவார். அய்யயோ பணம் எல்லாம் பாழாய்ப் போச்சே! என்று மதுரம் கத்துவார். தாழ்த்தப்பட்டவர்-கள் கொண்டு வந்து கொடுத்த நோட்டாச்சே அதை உயர்ந்த ஜாதிக்-காரர்களான நாம் கையால் தொட்டால் தீட்டாச்சே! என்பார்.

என்னே நையாண்டி! இவர்தான் நம் கலை-வாணர். வாழ்க! வாழ்கவே!!

- மயிலாடன்




Thursday, May 28, 2009

சென்டிமென்ட்

ஒற்றைப்பத்தி

"சென்டிமென்ட்"

நம் நாட்டில் அண்மைக் காலமாகப் பயன்படுத்தும் ஒரு வார்த்தைதான் "சென்டிமென்ட்!" மனோபாவம், 

சுயமனோதத்துவமுடைய ஒன்று என்றெல்லாம் அகராதிகள் அர்த்தம் கூறுகின்றன.

சுருக்கமாகக் கூறுவது என்றால் அறிவும், துணிவும் இல்லாதவர்கள் மத்தியில் உருவாகும் ஒரு வகையான கோழைத்தனம் இது என்றே சொல்லவேண்டும்.

திறமைக்கு முதலிடம் கொடுக்கப்படவேண்டிய விளையாட்டுப் போட்டி களில் ஈடுபடுபவர்களுக்குக் கூட இந்தத் தன்னம்பிக்கையற்ற கோழைத்தனம் ஏற்படுவதுண்டு.

குறிப்பிட்ட வண்ணத்தில் கைக்குட்டை வைத்திருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்று நினைப்பவர்கள் உண்டு.

அதேநேரத்தில் அந்த வண்ணத்தில் கைக்குட்டையை வைத்துக்கொண்டு விளையாடச் சென்ற போதெல்லாம் வெற்றி பெற்று இருக்கின்றனரா? தோல்வியே அடைவதில்லையா? என்ற கேள்வியை எழுப்பி சுய மதிப்பீடு செய்யும் அளவுக்கு அவர்களின் அறிவு விரிவடைவதில்லை. தோல்விக்கு வேறு ஏதாவது காரணம் கூறி தனக்குத்தானே சமாதானம் கூறிக் கொள்ளும் தலைப்பிரட்டைகள் இத்தகையவர்கள்.

அரசியலிலும் இந்த நிலைப்பாடு உண்டு. ஜோதிடர்களின் செல்வாக்கு அரசியலில் ஓங்கி நிற்கிறது என்றால் அதற்கு இது தான் காரணம்.

தேர்தலில் நிற்க விரும்பும் வேட்பாளர்கள் தங்களைப்பற்றிய குறிப்புகளோடு ஜாதகத்தையும் கொண்டு வரவேண்டும் என்று அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார் - முடிவு என்னவாயிற்று? இதற்குப் பிறகாவது ஜோதிடக் கூவத்திலிருந்து அரசியல்வாதிகள் வெளியேறவேண்டாமா?

தேனி மக்களவைத் தொகுதியில் ஒருமுறை வெற்றி பெற்றவர்கள் அடுத்தமுறை வெற்றி பெறமாட்டார்கள் என்று ஒரு கதை. ஆரூண் (காங்கிரஸ்) அவர்கள் தொடர்ந்து இரண்டுமுறை வெற்றி பெற்றுவிட்டாரே - அந்த நம்பிக்கையாளர்கள் எதில் போய் முட்டிக்கொள்வார்கள்?


இன்னொரு செய்தி - நடிகர் நெப்போலியன் குறித்து... அவர் வெற்றி பெற்றால், அவர் சார்ந்த கட்சி ஆட்சியைப் பறி கொடுத்துவிடும் என்று ஒரு கிளப்பல்! வில்லிவாக் கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார்; ஆனால், தி.மு.க. ஆட்சிப் பீடம் ஏறவில்லை என்று கதை கட்டினர்; கடந்த தேர்தலில் மயிலாப்பூரில் தோற்றார்; தி.மு.க. ஆட்சியில் அமர்ந்துவிட் டது என்று காக்கை உட் கார பனம் பழம் விழுந்தது போல சில நடவடிக்கைகள் அமைந்துவிட்டால், பார்த்தீர்களா - பார்த்தீர்களா? நாங்கள் சொல்வது எவ்வளவு கரெக்டாக இருக்கிறது என்று சட்டைக் காலரைத் தூக்கி விட்டுப் பேசுவோர் உண்டு.

இப்பொழுது பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் அவர் வெற்றி பெற்றார்; மத்தியில் அவர் சார்ந்த கூட்டணி ஆட்சியும் அமைந்துவிட்டதே - இதற்கு என்ன பதில் சொல்வார்கள்? மூடத்தனத்திற்கு அடிமையானால் சிந்தனையாவது, மண்ணாங்கட்டியாவது!

- மயிலாடன்
படியுங்கள்: விடுதலை
நன்றி:http://files.periyar.org.in/viduthalai/20090527/news06.html


Monday, October 13, 2008

சீனிவாசனும் சீனிவாசனும் - சார்வாகன்



இது ஏதோ கம்பெனியின் பெயரல்ல. ஆனால், ஒருவகையில் ஒரு லிமிடெட் கம்பெனியின் பெயர்தான்.   முதல் சீனிவாசன் நிறுவனத்தின் ஃபவுண்டர் புரொமோட்டர், மானேஜிங் டைரக்டராக இருந்தவர். இரண் டாம் சீனிவாசன் கம்பெனியின் நிருவாக இயக்குநர். வேறுபாடு அவ்வளவே, மேம்போக் காகப் பார்த்தால்!

கண்டு பிடித்துவிட்டிருப்பீர்களே, ஓ! இது தாத்தாத்ரேய நாமக் கம்பெனி என்று! பக்கா புத்திசாலிகளாயிற்றே!

தாத்தா சீனிவாசன் எதுவாக இருக்க நேர்ந்த போதும் தன் தஞ்சை மாவட்டப் பின்னணியை, படிக்கும்படி ஏறிப் பழைய ஏட்டுக்கு விளம்பரம் சேர்த்ததையோ, பழைய ஏட்டை வாங்கச் சொன்னவரையோ, அதற்குப் பணம் உதவியவரையோ ஒரு போதும் மறக்காதவர் ஏடு தொட்டு எத்துணையோ ஏணிப் படிகளில் ஏறிச் சிகரம் தொட்டவர்.

தஞ்சை மண்ணுக்கோ, தன் குடும்பத்துக்கோ நவீனமான ஒரு தொழில் நுழைந்து அதிலும் தடம் பதித்த  சாதனையாளர்.

அவர் பேரைக் கொண்ட பேரன் சீனிவாசன்,  கதை வேறு/ ஃபாஷனில் இருக்கிறது. கம்பெனிக்கு பேரும் வேண்டாம், கம்பெனிப் பொருளுக்குத் தரமும் வேண்டாம். காசு மட்டும்தான் வேண் டும் என்று காசு காரியத்தில் கண்வைக்கும் ஆரியக் கூத்தாடி!

தாத்தா சீனிவாசன், குந்தியிருந்த தாயின் கருப்பை வாசலில்  மெல்ல நழுவி வந்தபோது முரட்டுச் சாக்குத் துணியால் உடல்பற்றி மருத் துவச்சியால் இழுத்துப் போடபட்ட  உயிர்!

அம்மாவுக்கும் வலி கொடுக்காமல், தனக் கும் வலி தெரியாமல் மணிலாப் பயிறு உடைப் பதுபோல், கருப்பை பிளந்து கச்சிதமாக வெளியே கொண்டு வரப்பட்ட பேரன் சீனி வாசன்  சுக ஜென்மம்! யாரோ உழைத்து, யாரோ வளர்த்துச் சேர்த்ததை வாரிசு பாத்யதையில் சொந்தம் கொண்டாடும் அனுபவ ராஜா!

அதனால் பழசு தெரியவில்லை. தெரிந்து கொள்ளும் அக்கறையும் இல்லை.

ஆனால், ஆபே துயிபா  எழுதியதுபோலத் தமக்கே உரிய கல்யாண குணங்களைக் காட்டத் தவறுவதே இல்லை.

சிண்டு முடிந்திடும் பழக்கம், குள்ள  நரித் தந்திரத்தை வெளிப்படுத்தும் வழக்கமும் ஒட்டுவித்தை கற்ற இவர்களிடமிருந்து அகலாது எனும் உண்மை நாம் அறிந்ததுதான்.

நம் இனம் கெடுக்கும் செயலில் ஈடுபடும் ஈடில்லாக் கெடுமதியினர் செயலும் நமக்குத் தெரிந்ததுதான்.

பொய்க் குரு ஒருவர் கூறியதைப் பேரனே அச்சுப் போட்டிருக்கிறார்: செய்வதைத் திருந்தச் செய்யுங்கள்... வயதின் வேகத்தில், சுபலத்தின் உந்துதலில் செய்யாதீர்கள்.

ஆனால் வயதின் வேகத்தில் (பேரும் புகழும் பெறவேண்டும் என்கிற) கபலத்தின் உந்துதலில் செய்தவரைப் பெருமைப்படுத்திப் (பெரியா ரைச் சிறுமைப்பத்துவதாக நினைத்துக் கொண்டு) படம் காட்டுகிறார் பேரன் சீனிவாசன்.

மும்பையில் உள்ள பால் தாக்கரே, சில ஆண்டுகளுக்கு முன் தன் கழுத்தில் கட்டியி ருந்த கொட்டை, மணிகளை யெல்லாம் அறுத் துப் போட்டார். வீட்டிலிருந்த (அவர் கடவுள் என்று நினைத்துக் கொண்டிருந்த) பொம் மைகள், படங்கள் எல்லாவற்றையும் உடைத் துப் போட்டார். கடவுளே கிடையாது என்று உரக்கக் கூறினார். ஊர் முழுக்க கேட்டது.  ஏடுகள் எல்லாம் எடுத்து எழுதின.

கணேசனை வைத்துப் பால கங்காதர் திலக் அரசியல் பண்ணியது அந்தக் காலம். இன்றைக் கும் அரசியல் பண்ணிக் கொண்டிருப்பவர் பால் தாக்கரே! அப்படி இருக்கையில் அவரா? இப்படிப் பேசினார்? எல்லோரும் ஆச்சரியப் பட்டார்கள். சிலர் வாய்விட்டே கேட்டுவிட் டார்கள்.

அப்போது தி.க. தலைவர் கி. வீரமணி அவர்கள் சொன்னார், ஏதோ ஒரு ஆத்திரத்தில்  அவர் பேசியிருக்கிர், கடவுள் இல்லை என்பதைப் பெரும் ஆராய்ச்சிக்குப் பிறகுதான் சொல்லமுடியும். மனைவி இறந்த ஆத்திரத்தில் அவர் கூறிவிட்டார். அதனை உளப்பூர்வமாகக் கூறியதாக ஏற்க முடியாது என்று பதில் கூறினார்.

பால்தாக்கரேயின் துணைவியார் திடீரென இறந்துவிட்டார். இறந்த நாள், பிள்ளையாரின் பிறந்தநாள். பிள்ளையாரையே கும்பிட்டுக் கொண்டிருந்த தம் துணைவி பிள்ளையாரின் சதுர்த்தி அன்றைக்கே  மண்டையைப் போட்டு விட்டதைச் செரிக்க  முடியாமல், கபலத்தின் உந்துதலில் கடவுளே இல்லை எனக் கூறி விட்டார். அவர் பகுத்தறிவாதியா? நாத்திகரா? இல்லவே இல்லை! ஆத்திரத்தில் தடுமாறிக் கொட்டிய நாத்திகச்  சொற்கள் அவை! அதனால் அவரை நாத்திகராக நாத்திகர் தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

விடலைப் பருவத்தில் - வயதின் வேகத்தில் - கபலத்தின் உந்துதலில் - எதையோ செய்த ஓர் ஆள், சில வாய்ப்புகள் பெற்று நாத்திகர் தலை வரின் அருகில் இருக்க நேர்ந்ததைப் பயன்படுத் திக் கொண்டு - வேறு ஒரு சபலத்தின் உந்துத லில் தப்புக் காரியம் பண்ணியதால், வெளியேறி இருக்கிறார். வேறு அமைப்புக்குப் போய் அங்கேயும் இருக்க முடியாமல்  மனைவிக்கு மரியாதை கொடுத்து மனசாட்சிக்கு மரி யாதை கொடுத்து  சுட்ட மண்ணை நெற்றியில் பூசிக் கொண்டிருக்கிறாராம்.

பாலகாட்டுக்குப் பக்கத்தில் ரப்பர் தோட் டத்தில் தேடிப்பிடித்துப் படம் பிடித்து எழுதித் தீர்க்க வேண்டிய தேவை என்ன பேரன் சீனி வாசனுக்கு? (பார்க்க: ஆனந்த விகடன் - 10-.9-.08). பகுத்தறிவாளர்களுக்கு  இந்தப் பெருமாள் களெல்லாம் அதிர்ச்சியோ, ஆச்சரியத்தையோ தருபவர்களல்லர்! கொதி தாங்க முடியாத  நொய் யரிசிகளை, புடம்  போடும்போது உதிர்ந்த சாம் பல்களை,  அடித்துத் தூற்றிச் சலித்து நீக்கிய பிறகும், ஊறவைக்கும்போது  மிதக்கும் நெற் பதர்களை கணக்கில் எடுத்துக் கொள்வதே கிடையாது.

தன்னாலான கைங்கர்யத்தைச் செய்து அல்ப சந்தோஷம் அடைகிறது ஆரியம் என்பதல்லா மல் வேறு என்ன? அக்கிரகாரத்துப் பூணூலால் கட்டி ஆலமரத்தை இழுத்துப்போட முடியுமா? ஆசை வெட்கமறியாது என்ற முறையில் அம்பி எம்பிக் குதிக்கிறது. யானையின் வாலில் ஈ உட்கார்ந்ததாலேயே, யானையின் கம்பீரம் குறைந்து விடுமா? பெருமாள் சேதியைப் போட்டதாலேயே, பெரியார் அப்படி அல்ல என்றாகிவிடுமா? அவர் கொள்கைகள் குறைவுபட்டவை என பெருமாள் உதிர்த்து விட்ட காரணணத்தா லேயே - எவரும் கருதிவிடுவார்களா?

பெரியார் உலகளவில் உயர்ந்து வளர்ந்து வருகிறார், உலகப் பெரும் மனிதநேயப் பகுத் தறிவு நாத்திகர் டாக்டர் பால்கர்ட்சு தமிழகம் வந்து, 5,67,9 நாள்களில்  பெரியார் கோட் டத்தில் பேசுகிறார் என்ற சேதி பார்த்தவுடன் பேரன் சீனிவாசன் பெருமாள் சேதி வெளியிடுகிறார்.

பெரியாரின் பழைய காரை வாங்கியவர், பெரியாரின்  கருத்துகளை உள்வாங்கிக் கொள்ள வில்லை, என்பதை அவரே தெரியபடுத்தியிருக் கும் நிலையில்சேதி மூலம் சீனிவாசன் தெரிவிக்க விரும்பும் மெசேஜ் என்ன?

மெசேஜ் என்னவாக இருந்தாலும், ஆரியத் தின் யூசேஜ்  என்ன என்பது புரிந்த எங்களுக்கு அதிகமாகத் தோன்றவில்லை - நாங்கள் ஆரிய மாயையை அறிந்தவர்கள், புரிந்தவர்கள், அதனை அழித்துத் திரா விடர்களை மீட்டவர்கள். ஆனாலும் ஆரியம் தலை நீட்டுகிறது, துளிர்க்கப் பார்க்கிறது.

அதனை வெட்டிக் கருக்கித் தீர்த்துப் பொசுக்கிடும், கந்தகக் கருஞ்சிறுத்தைகள் லட்சோப லட்சம் உண்டு.  என்பதைப் பேரன்களுக்கு நினைவு படுத்துகிறோம்.

பெருமாள்கூட, கடவுளைக் கும்பிட்டுத் தடம் மாறியிருக்கிறாரே யொழிய, பெரியாரின் ஏனைய பன்முக ஆற்றல்களில் இன்னமும் பற்றும் பிடிப்பும் கொண்டு விளங்கி, கண்ணுக்குப் புலப்படாத கருப்புச் சட்டைக்காரராக (ஆவி எழுதுவதைப்போல கண்ணாடியின் கருப்பு ஃபிரேம்) இருக்கிறார் என்பதாகும். அவரை வெளிக்காட்டிய பேரன் சீனிவாசனுக்கும் நன்றி கூறலாமோ?

Tuesday, July 29, 2008

இன்றைய விடுதலை இதழை படியுங்கள்!

விடுதலை இணையத்தின் தொழில்நுட்ப மாற்றங்கள் செயல்பாட்டுக்கு வரும்வரை இவ்விணைப்பில்
இன்றைய விடுதலை இதழை படியுங்கள்!

Thursday, April 10, 2008

நேரடி ஒளிபரப்பு தொடங்கியது

நேரடி ஒளிபரப்பு தொடங்கியது:
இட ஒதுக்கீடு விவாதம்

இடஒதுக்கீடு தீர்ப்பு குறித்து கருத்துமேடை- நேரடி ஒளிபரப்பு

உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு தீர்ப்பு குறித்து கருத்துமேடை
-நேரடி ஒளிபரப்பு-

கலந்துகொள்வோர்:
* கவிஞர் கலி.பூங்குன்றன்
(திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்)
* மருத்துவர் ரவீந்திரநாத்
(சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம்)
* இதழாளர் கோவி.லெனின்

இன்றிரவு இந்திய நேரப்படி 8 மணிமுதல் 8: 30 மணிவரை உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்!

webvision.periyar.org.in

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...