Thursday, August 1, 2019

10, 12ஆம் வகுப்புகளில் விருப்பப் பாடத்தை மாற்ற முடியாது மாணவர்களுக்கு சிபிஎஸ்இ நெருக்கடி

பத்து, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் விருப்பப் பாடத்தை இனிமேல் மாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள், என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) விதிப்படி, 10 மற்றும் 12ஆம் வகுப்புகள் 2 ஆண்டு படிப்புகளாகும். இந்த வகுப்புகளில் சேரும் மாணவர்கள் முறையே 9 மற்றும் 11ஆம் வகுப்புகளில் விருப்ப பாடங்களை தேர்வு செய்து அதையே அதற்கு அடுத்த 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் தொடர வேண்டும். ஆனால், சில மாணவர்கள் 10 அல்லது 12ஆம் வகுப்புக்கு மாறியதும் தங்களது விருப்பப்பாடத்தை பல்வேறு காரணங்களுக்காக மாற்ற விரும்புகின்றனர்.
ஆனால், இனி விருப்பப் பாடத்தை அவ்வாறு மாற்ற முடியாது என சிபிஎஸ்இ அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சிபிஎஸ்இ உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாணவர்கள் அல்லது பெற்றோர் விருப்பத்திற்கு ஏற்ப 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் விருப்பப் பாடத்தை மாற்ற முடியாது.
புதிய திருத்தப்பட்ட விதிப்படி பாடப்பிரிவை கட்டாயம் மாற்ற விரும்புபவர்கள் அந்த ஆண்டு ஜூலை 15ஆம் தேதிக்குள் கோரிக்கை விடுத்தால், சில விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும். இதற்காக சிபிஎஸ்இ நிலையான செயல் விதிமுறைகளை உருவாக்கி யுள்ளது.
இந்த விதிக்கு உட்பட்டு மாணவனோ அல்லது அவனது பெற் றோரோ பாடப்பிரிவை மாற்றுவது ஏன் என்பதற்கான வலுவான ஆதா ரத்துடன் பள்ளியில் விண்ணப்பத்தை சமர்ப்பித்தால், அந்த விண்ணப்பத்தை பள்ளி நிர்வாகம் மிக கவனமாக ஆய்வு செய்ய வேண்டும்.
பாடப்பிரிவை மாற்றுவதற்காக கூறப்பட்டுள்ள காரணம் உண் மையானது தானா என்பதை தீவிரமாக நிர்வாகம் ஆலோசிக்க வேண்டும். கோரிக்கை நியாயமாக இருந்தால் அந்த பரிந்துரையை சிபிஎஸ்இ மண்டல அலுவலத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
அதை ஆய்வு செய்து அனு மதிக்கப்படும். சிபிஎஸ்இயின் விதி முறைகளை பள்ளி நிர்வாகம் பின் பற்றாவிட்டால் பாடத்தை மாற்ற விரும்பும் மாணவனின் பரிந்துரை நிராகரிக்கப்படும் என்றார்.

மோடி ஆட்சிப் பொறுப்பை ஏற்ற 60 நாட்களுக்குள் ரூ.12 லட்சம் கோடியை இழந்த பங்குச் சந்தைகள்!

நரேந்திர மோடி இரண்டா வது முறை யாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற, கடந்த 60 நாட்களுக்குள் மட்டும், பங்குச் சந்தை யானது சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் அளவில் இழப்பைச் சந்தித்திருப்பதாக தகவல் கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மேலும் கூறப்படுவதாவது:-
கடந்த 2004 மே 14 முதல் 2009 ஜூலை 24 வரை, மன்மோகன் சிங் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியி லும், பின்னர் அய்க்கிய முற்போக்குக் கூட் டணியின் இரண்டாவது ஆட்சிக் காலம் தொடங்கியபோதும், மும்பை பங்குச் சந்தை யின் மதிப்பு 203 சதவிகிதம் அளவிற்கு வளர்ச் சியில் இருந்துள்ளது.
ஆனால், 2014 மே 23 முதல் 2019 ஜூலை 23 வரை, மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் ஆட்சி யில், இந்த வளர்ச்சி வெறும் 54 சதவிகி தமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தேசியப் பங்குச் சந்தையிலும் இதே நிலையே இருந்துள்ளது.
அதுமட்டுமன்றி, மோடி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த, கடந்த 60 நாட் களில் சென்செக்ஸ் 1800 புள்ளிகள் அளவிற்கு சரிந்துள்ளன.
எச்.டி.எப்.சி. வங்கி, இன்போசிஸ் நிறு வனம், அய்.சி.அய்.சி.அய். வங்கி, ரிலையன்ஸ் நிறுவனம், இந்திய ஸ்டேட் வங்கி, கோடாக் வங்கி, அதானி குழுமம் ஆகி யவை பொது வாகவே சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் பெரு நிறுவனங்கள் ஆகும். இவற்றின் பங்கு மதிப்பு லாபகரமாகவே இருந்து வருகிறது.
ஆனால், மகிந்திரா, டாடா மோட்டார், டாடா ஸ்டீல், ஹீரோ மோட்டார், ரிலை யன்ஸ் கேபிடல், வோடோபோன் அய்டியா, மாருதி, சன் டி.வி, ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட நிறுவனங் களின் பங்குகளின் மதிப்பு கடந்த ஓராண்டில் கணிசமான அளவிற்கு வீழ்ச்சியைச் சந்தித்து உள்ளன.
அதாவது, பெரிய நிறுவனங்களின் பங்கு களைப் பொறுத்தவரை, சந்தையில் மதிப்பு கூடியிருந்தாலும், சிறிய நிறுவனங்களின் பங்கு மதிப்பு வீழ்ச்சி முதலீட்டாளர்களை கடும் இழப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. அதிக லாபத்தைக் கருத்தில் கொள்பவர்கள், சிறிய நிறுவனங்களிலேயே அதிகம் முதலீடு செய் கின்றனர் என்பதால், சிறிய நிறுவனங்களின் வர்த்தகத்தில் ஏற்படும் பாதிப்பு, அதன் சந்தை மதிப்பிலும் தற்போது இழப்பை ஏற்படுத்தி யுள்ளது.
மேலும், நட்டமடையும் நிறுவனங்களில், அரசும் தனது முதலீடுகளை குறைத்துக் கொண்டு வருவதால், பங்குச் சந்தையில் அந்த நிறுவனங்களின் மதிப்பு மேலும் குறைந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அடிப்படையில், மோடியின் இரண் டாவது அரசு அமைந்த 60 நாட்களில் மட்டும் சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிறிய நிறுவனங்களின் பங்கு மதிப்பு மேலும் குறைந்து வருவதால், இந்த இழப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் பங்குச் சந்தை வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் போர், கலவரங்களில் 12 ஆயிரம் குழந்தைகள் பலி: அய்.நா அறிக்கை


மத்திய கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் சிரியாவில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக போர் நடந்து வருகிறது.
இதேபோல் பாலஸ்தீனத் துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே காசா எல்லையில் நடைபெறும் மோதலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும் ஆப்கானிஸ்தா னில் தலிபான்களுக்கும், அர சுக்கும் இடையே கடந்த 18 வருடங்களாக போர் நிலவி வருகிறது. இத்தகைய நாடுக ளில், கடந்த 2018ஆம் ஆண்டு நடைப்பெற்ற போர் மற்றும் உள்நாட்டு கலவரங்களில் பலியான குழந்தைகள் பற்றி அய்.நா. ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அய்.நா வெளியிட்ட அறிக்கையில், 'கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் சிரியா, ஏமன், ஆப்கானிஸ்தான், பாலஸ் தீனம் ஆகிய நாடுகளில் பலி யான குழந்தைகளின் எண் ணிக்கை 12 ஆயிரத்தை தாண் டியுள்ளது.
இந்த கால கட்டத்தில் கடத்தல், கிளர்ச்சியாளர் களாக பயன்படுத்தப்படுதல், பாலியல் ரீதியாக துன்புறுத் தல் மற்றும் பள்ளிகள், மருத் துவமனைகள் மீதான தாக்கு தல்கள் என பல்வேறு வன் முறைகள் குழந்தைகள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளன.
இதில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளின் வன் முறைகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே சீராக இருந்து வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த அமெரிக்கா உதவி வருகிறது வெளியுறவுத் துறை அமைச்சர் பேட்டி

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான உதவி களை வழங்க அமெரிக்கா கடினமாக உழைத்து வருவ தாக அந்நாட்டின் வெளியு றவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோ தெரிவித்துள் ளார். இது தொடர்பாக, மைக் பாம்பேயோ செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் திட்டம், சிறப்பான முறையில் செயல்பட்டு வரு கிறது. அது இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், அமெரிக்கா வுக்கும் பல்வேறு பலன்க ளைத் தரத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதி யாக, இந்தியாவின் பொரு ளாதார வளர்ச்சியை மேம் படுத்துவதற்கான வாய்ப்பு களை உருவாக்கும் நோக்கில், அந்நாட்டுடன் இணைந்து அமெரிக்கா கடினமாக உழைத்து வருகிறது என்றார் மைக் பாம்பேயோ.
அமெரிக்காவின் வர்த்த கக் குழு அண்மையில் இந்தி யாவுக்கு வருகை தந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத் தொடர்பை மேம் படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில், மைக் பாம் பேயோ இவ்வாறு தெரிவித் துள்ளார்.
இந்தியாவுடன் வர்த்த கத்தை அதிகரிக்கும் நோக்கில் வர்த்தகக் குழுவை அனுப்ப வுள்ளதாக அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் தெரிவித்துள்ளது. இக்குழு வுக்கு மாகாண ஆளுநர் ஜரீத் போலிஸ் தலைமை வகிக்க உள்ளார்.
இது தொடர்பாக, ஜரீத் கூறுகையில், அக்டோபர் மாத இறுதியில் இந்தியா வுக்குச் செல்ல உள்ள வர்த் தகக் குழு, மும்பை, பெங்க ளூரு, புது டில்லி உள்ளிட்ட நகரங்களுக்குப் பயணம் மேற் கொள்ள உள்ளது. வர்த்தக நிபுணர்கள் பலர் அடங்கிய இக்குழுவானது, புதுப்பிக்கத் தக்க எரிசக்தி, பசுமைத் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுட னான வர்த்தகத் தொடர்பை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராயும் என்றார்.

மாணவர்கள் வசிப்பதற்கு ஏற்ற நகரம் மீண்டும் முதலிடத்தில் லண்டன்

மாணவர்கள் வசிப்பதற்கு ஏற்ற உலகின் தலைசிறந்த நகரமாக பிரிட்டன் தலைநகர் லண்டன் 2-ஆவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
பன்னாட்டு கல்வி ஆலோசனை அமைப்பான க்யூஎஸ் குவாக்வரேலி சைமண்ட்ஸ், மாணவர்கள் தங்கி கல்வி பயில்வதற்கு ஏற்ற உலகின் மிகச் சிறந்த நகரங்களை ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது. குறிப்பிட்ட நகரத்தில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களின் எண் ணிக்கை, பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையிலான விகிதாச்சாரம், வாழ்க்கைத் தரம், வேலைவாய்ப்பு, விலைவாசி, அங்கு ஏற்கெனவே வசிக்கும் மாணவர்களின் திருப்தி ஆகிய 6 அம்சங்களின் அடிப்படையில் அந்த அமைப்பு பன்னாட்டு நகரங்களைப் பட்டியலிட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தலை சிறந்த நகரங்களுக்கான பட்டியலில் லண்டன் முதலி டத்தைப் பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில் லண்டன் முதலிடத்தைப் பிடிப் பது, இது தொடர்ந்து இரண்டாவது முறையாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பழங்குடியின மாணவன் முதலிடம் பிடித்தும் பல்கலையில் இடம் இல்லை: மனித உரிமை ஆணையம் தாக்கீது

ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைக்குட் பட்ட சுண்போடு கிரா மத்தை சேர்ந்தவர் சந்திரன். பழங்குடி யின மாணவரான இவர், கடந் தாண்டு பிளஸ்2 தேர்வில் வேளாண் செயல்பாடுகள் தொழிற்பாடப் பிரிவில் 444 மதிப்பெண் பெற்றார். இந்தாண்டிற்கான தொழிற் பாடப்பிரிவில் சேர, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ பல்கலைக் கழகங்களில் விண்ணப்பித்திருந்தார்.
அதில் தரவரிசை பட்டியலில் 409ஆவது இடம் பிடித்தார்.  இதேபோல், கால்நடை பல்கலைக்கழகம் வெளியிட்ட தரவரிசையில் ஒட்டுமொத்தமாக 146ஆவது இடம் பிடித்தார்.  முதலிடம் பிடித்தும், இடம் கிடைக்காததால் மனமுடைந்த சந்திரன் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார், மனுவில் தரவரிசை பட்டியலில் முதல் இடம் இருப்பதால், பல்கலை கழகங்களில் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் வேறு கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கவில்லை, மேலும் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயசந்திரன், தாமாக முன்வந்து விவகாரத்தை விசாரணைக்கு எடுத்தார். பின்னர் நீதிபதி, கால்நடை மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலாளர், கால்நடை பல்கலைக்கழக துணை வேந்தர் ஆகியோர் இதுதொடர்பாக 2 வாரத்தில் பதில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

அய்அய்டி படிப்பை பாதியில் விட்ட 2,461 மாணவர்களில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்டவர்கள் 1,171 பேர்

மத்திய அரசு தகவல்
புதுடில்லி, ஆக.1 கடந்த 2 ஆண்டுகளில் அய்அய்டி கல்வி நிறுவனங் களிலிருந்து 2461 மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தி யுள்ளனர் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள் ளது.
தொழில்நுட்ப கல்விக்கு நாட்டிலேயே முன்னோடி கல்வி நிறுவனமாக இருந்து வருவது அய்அய்டி நிறுவ னங்களாகும். இந்தக் கல்வி நிறுவனங்களில் எப்படியா வது பயில வேண்டும் என பல மாணவர்கள் தங்களின் பள்ளி பருவம் முதல் தீவிர முயற்சியில் ஈடுபடுகின்றனர். எனினும் இந்தக் கல்வி நிறுவனங்களிலிருந்து அதிக மாணவர்கள் தங்களின் படிப்பை பாதியில் விடுவது தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்களவையில் ஆந்திர மாநில நாடாளுமன்ற உறுப்பினரான விஜயசாய் ரெட்டி அய்அய்டியில் மாண வர்கள் இடைநிற்றல் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பதிலளித்திருந்தது. அதில் அய்அய்டியிலிருந்து கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தற் போது வரை 2,461 மாண வர்கள் தங்களின் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 57% மாணவர்கள் அய்அய்டி-டில்லி மற்றும் அய்அய்டி-கராக்பூர் ஆகிய நிறுவனங்களிலிருந்து பாதி யில் படிப்பை நிறுத்தியுள் ளனர்.
அய்அய்டி       இடைநிற்றல் மாணவர்கள்
டில்லி               782
கராக்பூர்           622
கான்பூர்            190
சென்னை       128
பாட்னா            92
அய்தராபாத்     85
ரூர்கி     57
இந்தோர்       50
புவனேஸ்வர்       39
கடந்த இரண்டு ஆண்டு களில் அய்அய்டி டில்லியி லிருந்து 782 பேரும், அய்அய்டி கராக்பூரிலிருந்து 622 பேரும் படிப்பை பாதியில் விட்டுள்ளனர். அதேபோல அய்அய்டி மெட்ராஸ் (சென்னை) கல்வி நிறுவனத் தில் 128 பேர் பட்டபடிப்பை முடிக்காமல் வெளியேறியுள் ளனர். மேலும் இந்த இரண்டு ஆண்டுகளில் அய்அய்டி நிறுவனங்களிலிருந்து இடை நிற்றல் செய்த மாணவர்களில் 47.5% பேர் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதாவது இந்தப் பிரிவை சேர்ந்த 1,171 மாணவர்கள் அய்அய்டி நிறுவனங்களிலி ருந்து படிப்பை முடிக்காமல் வெளியேறியுள்ளனர்.
அய்அய்டி நிறுவனங்களி லிருந்து அதிகளவில் மாண வர்கள் வெளியேறுவதற்கு மருத்துவ காரணங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழ கத்தில் வாய்ப்புகள், தவறான படிப்பை தேர்ந்தெடுத்தல் போன்றவற்றை காரணமாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள் ளது.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...