Wednesday, June 5, 2019

இரண்டு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ரத்து

விதியை மீறியதற்காக தமிழகத்தை சேர்ந்த 2 மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண் டில் மாணவர் சேர்க் கைக்கான அனுமதியை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்துள்ளது.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் 100 மாணவர்கள் மருத் துவம் பயிலும் கல்லூரியில் பொது 500 நோயாளிகளுக் கான படுக்கை வசதியும், 150க்கும் மேற்பட்டோர் பயிலும் கல்லூரியில் 750 நோயாளி களுக்கான படுக்கை வசதியும் இருக்க வேண்டும் என்பது மருத் துவ கவுன்சில் வகுத்துள்ள முக்கிய விதிகளாகும்.  போதிய மருத்துவப் பேரா சிரியர்கள், முறையான கட்டமைப்பு, மாண வர்கள் படிப்பதற்குத் தேவையான மருத்துவ உப கரணங்கள் இருக்க வேண்டும் என்ப தும் கட்டாய மாகும்.
மேலும் இந்த விதிகளில் ஏதேனும் ஒன்று குறைந் தாலும் குறிப்பிட்ட கல் லூரியில் மாணவர் சேர்க் கைக்கு தடை விதிக் கப் படும். இந்நிலையில் மருத் துவ கவுன்சில் நடத்திய ஆய்வில், போதிய கட்ட மைப்பு வசதிகள் இல்லாத தஞ்சாவூர் பொன் னையா ராமஜெயம் மருத்துவக் கல்லூரி, சிறீபெரும் புதூரில் உள்ள அன்னை மருத்துவக் கல்லூரி, மற்றும் மருத்துவமனை ஆகியவற் றில் நடப்பாண்டில் மாண வர் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் விதி களை மீறி கட்டடங்கள் க டப்பட்டதாக கூறப் படும் புகாரின் பேரில் வழக்கு நடந்து வருவதால், மாங் காடு முத்துக்குமரன் மருத் துவக் கல்லூரியில் மாண வர் சேர்க்கை தொடர்பாக மருத்துவ கவுன்சில் பரி சீலனை செய்து வருவதாக தக வல்கள் வெளியாகியுள் ளன. இதையடுத்து நீட் தேர்வு முடிவுகள் புதன் கிழமை வெளியாகும் நிலை யில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பு களுக் கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் விநி யோகிக்கப்பட உள்ளன. மேலும் தடை விதிக்கப் பட்ட கல்லூரிகள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து www.tnhealth.org, மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணைய தளங்களிலோ 04428361674 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம் என மருத் துவக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கே வழிகாட்டுகின்ற மாநிலம் தமிழ்நாடு தான்!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மாபெரும் வெற்றி, தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரின் கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றியாகும். தமிழ்நாட்டில் மதவாதம் எடுபடாது என்பதற்கு - மக்கள் தந்த இந்த தீர்ப்பே நல்லதொரு சான்றாகும்.
தஞ்சையில் திராவிடர் கழக மாநில மாநாடு, சமூக நீதி மாநாடு 2019 - பிப்ரவரி 23, 24 ஆகிய நாட்களில் நடைபெற்ற அம்மாநாட்டில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்களை எல்லாம் அழைத்து, அவர்களது தன் முனைப்புகளைப் போக்கி (ஈகோ)  ஓர் அணியில் இணைத்த பெருமை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களையே சாரும்.
வடமாநிலங்களில் தனக்கே பெரிய செல்வாக்கு என்ற இறுமாப்பில் மாநிலக் கட்சிகள் தன்னிச்சையாகத் தேர்தலில் நின்று தன் முனைப்பு காட்டி; பெரிய தோல்வியைத் தழுவிக் கொண்டன. பதவி ஆசைகளும் ஒரு பெரிய காரணமாக அமைந்துவிட்டது. தஞ்சை சமூகநீதி மாநாட்டில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றும்போது, "திராவிட முன்னேற்றக் கழகம் செல்ல வேண்டிய பாதையை பெரியார் திடல் தான் தீர்மானிக்கிறது - கலங்கரை விளக்கமாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய தாய்க்கழகம் தான் திராவிடர் கழகம்" என்றார்.
அதை மெய்ப்பிக்கும் வகையில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 26.3.2019 தொடங்கி 16.4.2019 வரை - தனது பயண திட்டத்தை வகுத்து சுமார் 5,200 கிலோமீட்டர் தேர்தல் பரப்புரைப் பயணமாக - கழகத்தின் முக்கியப் பொறுப்பாளர்களை எல்லாம் அழைத்துக்கொண்டு, கடும் வெயில் என்றும் பாராமல், மருத்துவர்களின் அறிவுரைகளையும் தாண்டி பரப்புரை செய்தார்கள் என்றால், அது என்ன சாதாரணமா? தன் இனத்தைக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்ப்போர்களின் (விபீடணர்களின்) எதிர்த்தாக்குதலை எல்லாம் சமாளித்து தனது வெற்றிப் பயணத்தை பீடு நடையோடு நடத்தினார்கள் என்பதும், அசாதாரண துணிச்சல் ஆகும்.
திராவிடர் கழகம் - ஒரு கலங்கரை விளக்கம் தான் என்பதை பொது மக்கள் பெருவாரியான வாக்குகளை அளித்து "ஒருவிரல் புரட்சி" மூலம் நிரூபித்துள் ளார்கள். கடவுள், ஜாதி, மதங்களைக் காட்டி, ஆர்ப் பரித்த ஒரு கூட்டத்தை - தமிழ்நாட்டு மக்கள் நாடாளு மன்றத் தேர்தல் மூலமாக படுதோல்வி அடையச் செய்து, அவர்களை அடக்கி ஒடுக்கி வைத்து விட்டார்கள்.
நீதிமன்றங்களைக்கூட கேவலமாகப் பேசும் எச்.ராஜா-க்கள் இனி தமிழ்நாட்டில் தமக்கு வேலை இல்லை என்பதை உணர்ந்திருப்பார்கள். நமக்கு எதிராக வேலைப்பார்த்த தொப்புள் கொடி உறவுகள் இனித் திருந்த வேண்டும். கூட்டணி கட்சிகளின் தோழர்கள் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை நாடெங்கும் தொடர வேண்டும். வாக்களித்த பெருமக்களுக்கு நன்றி உணர்வோடு, உண்மையுள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தில் உரிமைக் குரல் ஒலிக்கட்டும்! நன்றி! வணக்கம்!
- கா.நா.பாலு
மாவட்ட செயலாளர்,  திராவிடர் கழகம், சேலம்

45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1 சதவிகிதம் வேலையில்லா திண்டாட்டம்!

இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி எனப்படும் ஜி.டி.பி. 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந் துள்ளது. நாட்டின் வேலையில்லாத் திண் டாட்டமும் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017_18 ஆண்டு 6.1. சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்த புள்ளி விவரங்கள் ஏற்கெ னவே பல்வேறு தரப்பினராலும் வெளியிடப் பட்டவையே என்றா லும் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாகப் பதவி யேற்ற நாளில் மத்திய அரசே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தி இந்து' ஆங்கில நாளேட்டின் 1.6.2019 இதழில் வெளியிடப்பட்டுள்ள சிறப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்ப தாவது: இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 2019 ஜனவரி முதல் மார்ச் முடிய உள்ள காலாண்டுக் காலத்தில் மிகவும் குறைவான 5.8 சதவிகிதம் அளவுக்கு வீழ்ச்சி யடைந்துள்ளது இதன்மூலம் ஆண்டு முழுவதுக்குமான வளர்ச்சி 6.8 சதவிகிதம் அளவுக்கு குறைந் துள்ளது. மோடி தலைமையிலான அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் முதல் நாளில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வமான அரசுப் புள்ளி விவரங்களின் மூலம் இது வெளியாகியுள்ளது.  கடந்த வெள்ளிக்கிழமை 31.5.2019 அன்று பொருளாதார நடவடிக்கைகள் துறைச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது இந்த வீழ்ச்சி பணமாக மாற்றக் கூடிய சொத்து பற்றாக்குறை உள்ளிட்ட தற்காலிக நிலைமைகளால் ஏற்பட்டுள்ளது என்று கூறிய போதிலும், இந்த நிலை 2019 ஏப்ரல்_ஜூன் காலாண் டுக் காலத்துக்கும் நீடிக்கும் என்றார்.
புதிய நிதி ஆண்டிலும் அந்த நிலை தொடர்ந்தபோதும் இரண் டாம் காலாண்டுக்குப் பின் நிலை மாறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிவேகமாக வள ரும் நாடு என்ற நிலையில் சீனாவிடம் இந்தியா தோற்றுள்ளதே என்று கேட்டபோது, காலாண்டுக் கணக் குகள் முக்கியமில்லை. இன்னமும் அதிவேகமாக வளர்ந்து வருவ தாகவும், சீனாவின் அளவு இதை விடக் குறைவு என்று கூறிய போதி லும், இந்தியாவின் வீழ்ச்சிக்கு விவ சாயம், வனம், மீன் வளம், சுரங்கம் மற்றும் உற்பத்தித் துறை களில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவு என்று விளக்கினார்.
மோடி பதவியேற்ற மறுநாள் வெளியிடப்பட்ட வேலையில்லா திண்டாட்டப் புள்ளி விவரம் 45 ஆண்டுகளில் மிக அதிகமாக இருப்பது பற்றி கேட்டபோது, "இது புதிய வடிவம், புதிய கணக்கு இதை ஒப்பிடக் கூடாது. இது 45 ஆண்டுகளில் அதிகம் என்றோ குறைவு என்றோ நான் கூறமாட்டேன் என்று புள்ளி விவரித் துறைச் செயலாளர் பிரவீன் சிறீவஸ்தவா கூறியுள்ளார்.
எனினும் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என் பதை நிறைவேற்ற திருத்தப்பட்ட நிதி நிலை அறிக்கை மதிப்பீட்டில் 3.39 சதவிகிதமாக குறிப்பிடப்பட் டுள்ளது இது ஒட்டு மொத்தமாக 2019 மார்ச் 31 ஆம் தேதி ரூ.6.45 லட்சம் கோடியாக இருந்தது. தலைமைத் தணிக்கை அதிகாரி வெளியிட்ட புள்ளி விபரத்தின்படி ரூ.6.34 லட்சம் கோடியாக குறைக் கப்பட்டுள்ளது ஒட்டு மொத் தக் கணக்கீட்டின்படி ஒரு சதவிகிதம் சுட்டுதலாக இருந்த நிதிப்பற்றாக் குறை மொத்த உள் நாட்டு உற்பத்தி யின் மூலம் குறைக் கப்பட்டுள்ளது 2018_19 மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.190.10 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2017_18 ஆம் ஆண்டு மொத்த உள் நாட்டு உற்பத்தி ரூ.170.95 லட்சம் கோடியை விட 11.2 சதவிகிதம் அதிகமாகும்.
செலவுக்கும், வருவாய்க்கும் இடையிலான வித்தியாசமே நிதிப் பற்றாக்குறையாகும். 2018_2019 ஆண்டு நிதி நிலை அறிக்கையில் 3.3 சதவிகிதமாக குறிப்பிடப்பட்டிருந் தது. விவசாயிகளுக்கான திட் டத் தின்மூலம் திருத்தப்பட்ட மதிப்பீட் டில் 3.4 சதவிகிதமாக உயர்த்தப் பட்டது. 2019_2020 நிதிநிலை அறிக்கையில் நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 சதவிகிதமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு "தி இந்து' ஆங்கில நாளேட்டின் சிறப்புச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தேசிய வங்கிகளில் ஓராண்டில் ரூ.71,500 கோடி முறைகேடு

'இதுவரை இல்லாத வகையில், கடந்த நிதியாண்டில், 71 ஆயிரத்து, 500 கோடி ரூபாய்க்கு, வங்கி களில் முறைகேடு நடந்துள் ளது. இது தொடர்பாக, 6,800 வழக்குகள் தொடரப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது' என, ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது.
சாமானியர்களுக்கு எளி தாகக் கடன் வழங்காத வங்கிகள், பெரிய தொழிலதிபர் களுக்கு, கோடி கோடியாக கொட்டி கொடுக்கின்றன. அவர்களில், விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றவர்கள், பல ஆயிரம் கோடியை, செலுத்தாமல், வெளிநாடு களுக்கு தப்பியோடி, அங்கு தஞ்சமடைந்து விடுகின்றனர். அத்தகையோர் மீது, மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும், ஆண்டுக்கு ஆண்டு, நிதி முறைகேடு அளவும், வழக்கு களும் அதிகரித்தபடி உள் ளன.
இதுவரை இல்லாத வகை யில், கடந்த நிதியாண்டில், 71 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் அளவுக்கு, வங்கிகளில் முறை கேடுகள் நடந்துள்ளன. இது தொடர்பாக, 6,800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசா ரணை நடந்து வருகிறது. முறைகேடுகள் தொடர்பாக, கடந்த, 11 நிதியாண்டுகளில், 53 ஆயிரத்து, 334 வழக்குகள், தொடரப்பட்டுள்ளன; 2.05 லட்சம் கோடி ரூபாயை, ஏரா ளமானோர் செலுத்தவில்லை.
பெரிய அளவில் நடந்த வங்கி முறைகேடுகள், நிதி மோசடி வழக்குகளை, மத்திய அரசின், சி.பி.அய்., மற்றும் அமலாக்க இயக்குநரகம் போன்ற அமைப்புகளும், விசாரித்து வருகின்றன. இந்த விபரத்தை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

Tuesday, June 4, 2019

சமஸ்கிருதமும் விவேகானந்தரும்!

மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையில் அனைத்து வகுப்புகளிலும் சமஸ் கிருதம் ஒரு பாடமாக கட்டாயம் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  முக்கியமாக எளிய முறையில் சமஸ்கிருதம் கற்பதற்கான நூல்கள் இந்தக் கல்வியாண்டில் இருந்தே விநியோகிக்கவேண்டும் என்றும், இந்தி ஆங்கிலத் தோடு சமஸ்கிருதம் ஒரு மொழியாக இருக்கவேண்டும் என்றும் அந்தக்கல்விக் கொள்கையில் கூறப்பட் டுள்ளது.
"சமஸ்கிருதம் எளிதாகக் கற்க எளிய சமஸ்கிருத வார்த்தைகளைப் பயன்படுத்தி மாநிலமொழிகளிலும், சமஸ்கிருத பேச்சு மொழியை எழுதுவதன் மூலம் சமஸ்கிருதத்தை எளிமையாகக் கற்றுக் கொள்ளும் முறையைப்  பயன்படுத்தவேண்டும். சமஸ்கிருதப் பாடங்களைத் தேர்வு இல்லாத முறையில் சிறு பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அதன் பிறகு 8 ஆம் வகுப்பில் இருந்து சமஸ்கிருதப் பாடங்களுக்குத் தேர்வு வைக்க வேண்டும்" என்றும் கூறப்பட்டுள்ளது.
"புதிய வரைவுக் கொள்கையின் தலைவர் கஸ்தூரி ரங்கன் உட்பட 12 பேர் கொண்ட குழுவினர் அனைவருமே சமஸ்கிருதத்தில் பெரும் புலமை பெற்றவர்கள்; ஆகையால் அவர்களுக்கு சமஸ் கிருதத்தின் அருமை தெரிந்துள்ளது, சமஸ்கிருதத்தின் மூலம் எதையுமே கற்கலாம்" என்றும் கூறுகின்றனர்.
"சமஸ்கிருதம் இந்தியாவை ஒற்றுமையாக்குகிறது, சமஸ்கிருதத்தின் வழியாக நாம் இந்திய மொழிகளைக் கற்கவேண்டும். பல அறிவியல் கட்டுரைகள் சமஸ் கிருதத்தில் உள்ளன.  மொழியானாலும், அறிவியல் ஆனாலும், கணிதமானாலும் சமஸ்கிருதம் அனைத் திலுமே சிறந்த மொழியாக உள்ளது. ஆகவே அதை அனைவரும் படிக்கவேண்டும். குழந்தைகளுக்கு சமஸ்கிருத பஞ்ச தந்திரக் கதைகள் மூலம் எளிய முறையில் சமஸ்கிருதம் கற்றுகொடுக்கலாம். அதைக் குழந்தைகள் ஆவலோடு கற்றுக் கொள்ளும். இந்தியாவின் மிகவும் பழைமை யான மொழி சமஸ்கிருதம், அதைக் கற்றுக் கொள்வதில் யாரும் எந்த தயக்கமும் காட்டக்கூடாது.
இந்தி பேசும் மாநிலங்கள் இந்தி, ஆங்கிலத்தோடு சமஸ்கிருதமும் கற்கவேண்டும், இந்தி பேசாத மாநிலங்களில் ஆரம்பக்கல்வியில் அறிமுகப் பாடமாக இருக்கவேண்டும், பிறகு அவர்கள் மேற்கல்விக்கு வரும் போது ஏதாவது ஒரு மொழியைத் தேர்தெடுக்கும் இடத்தில் சமஸ்கிருதத்தை முதன்மைப்படுத்தி சமஸ்கிருதம் கற்பதை ஊக்குவிக்கவேண்டும்.
பழைமை வாய்ந்த மொழிகளான தெலுங்கு, ஒரியா, வங்காளி, கன்னடம் போன்றவைகள் அந்தந்த மாநிலங்களால் ஊக்குவிக்கப்படுகின்றன. ஆகவே மத்திய அரசு சமஸ்கிருதத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி அனைவரும் கற்பதை உறுதிப்படுத்த வேண் டும்" என்றும், அந்தக் குழுவின் அறிக்கை குறிப் பிடுகிறது.
பார்ப்பனீயத்துக்கே உரித்தான பம்மாத்தும், தந்திரமும் கைகோர்த்து ஆடுவதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால் தான் இதில் உள்ள சூட்சமம் விளங்கும்.
செத்துச் சவக்குழிக்குப் போன சமஸ்கிருதத்திற்கு உயிரூட்டி - சீவி சிங்காரித்து மணமேடையில் அமர வைக்கும் ஆரியத்தின் ஆபாசமான சிந்தனை இது.
சமஸ்கிருதம் குறித்து இந்துத்துவாதிகள் தூக்கிப் பிடிக்கும் விவேகானந்தர் என்ன கூறுகிறார்?
"மதச் சண்டைகளும், சாதி வேற்றுமைகளும், கலகங்களும் பல்குவதற்கு  ஒரு பெருங் கருவியாய் இருந்ததும், இருப்பதும் சமஸ்கிருத மொழியேயாகும். சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால் இப்போராட்டங்களும் தொலைந்து போகும்."
(மறைமலை அடிகளின் 'தமிழர் மதம்' - பக்கம் 24)
சமஸ்கிருதத் திணிப்பை இந்தக் கண்ணோட் டத்தில் பார்த்தால் அதன் விபரீதம் விளங்குமே!

“ஷாக்! ஷாக்!!”

மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.அய்.டி.யு.) மாநில தலைவர் எஸ்.எஸ்.சுப்பிர மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்த ஆண்டு மின்கட்ட ணத்தை உயர்த்த அரசு திட்ட மிட்டு இருக்கிறது. 30 சதவீதம் வரை மின்கட்டணம் உயரு கிறது. இதனால் ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு சாதாரண மக்கள் மீது மின் கட்டண உயர்வு திணிக்கப்பட இருக்கிறது.
இதனால் சாதாரண மக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார் கள். நாடாளுமன்ற தேர்தல் வராமல் இருந்திருந்தால் முன் னரே கட்டணத்தை உயர்த் துவது குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டு இருக்கும். தற் போது நாடாளுமன்ற தேர்தல் முடிந்து விட்டது.
அரசு விரைவில் மின் கட் டண உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிடும். பொதுவாக மின் கட்டணத்தை அரசு உயர்த்தும் எண்ணம் இருந்தால், அது தொடர்பாக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற வேண்டும்.
அந்த வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம், மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஒப்புதல் பெற்றுவிட்ட தாக எங்களுக்கு தகவல்கள் வருகின்றன.
மின் கட்டணத்தை ஒரு யூனிட்டுக்கு 30 சதவீதம் வரை உயர்த்த அரசு திட்டமிட்டு இருக்கிறது. 30 சதவீதம், 47 சதவீதம் என 2 விதமாக கட் டணத்தை உயர்த்த அரசு முடிவு செய்து இருந்தது. அதில் தற் போது 30 சதவீதம் என்பது உறுதியாகி இருக்கிறது.
மின் கட்டண உயர்வுக்கு மின்வாரியத்தின் இழப்பு தான் காரணம் என்று மின்வாரியம் சுட்டிக்காட்டுகிறது.
ஆனால் 2019ஆ-ம் ஆண்டு ஏப்ரல்-- மே மாதங்களில் ரூ.7 ஆயிரத்து 760 கோடி இழப்பில் மின்வாரியம் இயங்குவதாக தெரிவிக்கிறார்கள். தமிழ் நாட்டின் மின்சார தேவை 16 ஆயிரத்து 300 மெகாவாட் ஆகும்.
மொத்த தேவையில் 3-இல் ஒரு பங்கை வெளிச்சந்தையில் அநியாய விலைக்கு வாங்கினால் ஏன் இழப்பு வராது?. காற்றாலை மின் உற்பத்தி ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய் 39 காசு என்று நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதன் மூலம் 1,000 மெகாவாட் மின்சாரத்தை பெறுகிறோம். ‘பேங்கிங் சிஸ்டம்’ என்ற முறை யில் உடனே மின் உற்பத்திக்கு பணம் வழங்காமல் தாமதமாக 5 ரூபாய் 60 காசு என்ற நிலையில் வழங்குகிறார்கள். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.800 கோடி நஷ்டம் வருகிறது. இப்படி செய்தால் ஏன் இழப்பு வராது?
எண்ணூரில் இருந்த பவர் ஹவுஸ் இடிக்கப்பட்டது. அதற்கு  அருகில் 660 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையம் கட்ட 2014-ல் ரூ.4 ஆயிரம் கோடிக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது. டெண்டர் எடுத்தவர் இந்த விலையில் தற்போது முடியாது என்று சொல்லிவிட்டார். 2019-இல் மீண்டும் ஒரு கம்பெனிக்கு ரூ.7 ஆயிரத்து 100 கோடிக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்து இருக்கிறார்கள். இப்படி செய் தால் ஏன் இழப்பு வராது?.
இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிக் கல்வி காவியாகிறதா?


தமிழ்நாட்டில் பன்னிரெண் டாம் வகுப்பு பொதுத் தமிழ் புத்தகத்தின் அட்டைப் பக்கத்தில், பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளது.
பாரதியார் என்றாலே  அனைவரின் நினைவுக்கு வருவது அவரின் முண்டாசு தான். வெள்ளை நிறை தலைப்பாகையும், முறுக்கு மீசையும், கருநிற உடையும்  பாரதி யாரின் உருவத்தை  கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றன. இந்நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தமிழ் புத்தகத்தின் அட்டைப் பக்கத்தில், பாரதி யாரின் தலைப்பாகை காவி நிறத்தில் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. வழக்கமாக எல்லா இடங்களிலும் பாரதியாரின் தலைப்பாகை வெள்ளை நிறத்தில் இருக்கும் நிலையில், காவியுடன் பாரதியாரின் தலைப்பாகை இருப் பது ஏன் என பலரையும் கேள்வி எழுப்ப வைத்துள்ளது.
இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது,  "நான் நீண்ட காலமாக தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். ஆனால் பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் இருப்பதை இப் போது தான் பார்க்கிறேன். வழக்க மாக தலைப்பாகை வெள்ளை நிறத்தில்தான் இருக்கும்" எனத் தெரிவித்தார்.
பாரதியாரை காவி நிற தலைப்பாகையோடு யாராவது பார்த்திருக்கிறீர்களா..?' என திமுக எம்எல்ஏவும், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பி யுள்ளார்.
மாணவர்கள் மத்தியில் பாரதி யாரின் தோற்றத்தை மாற்றிக் காட்டுவதற்கான முயற்சி இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவரான வளர்மதி இதுகுறித்து கூறும்போது,
"மாநில அரசால் வழங்கப்பட்ட பாடப்புத்தகம் இது. கல்வியைப் பொறுத்தவரை அதில் அரசியல் மற்றும் மதம் போன்ற கேள்விக்கே இடமில்லை. இது தெரியாமல் நடந்திருக்கும் ஒரு தவறாகத் தான் இருக்க முடியும். அப்படியாக இருந்தால் அது ஆராயப்பட்டு சரிசெய்யப்படும்" என தெரிவித்தார்.
பிஜேபியுடன் கூட்டணி வைத் துக் கொண்டதற்காக அண்ணா திமுக ஆட்சி அகன்று ஆர்.எஸ்.எஸ். ஆட்சியாக மாறி விடுமோ என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...