Saturday, August 12, 2017

இந்தியாவில் இஸ்லாமியர்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் அமீத் அன்சாரி


                                              ஆளுங்கட்சிக்குக் கூறிய அரிய அறிவுரை

"அரசு குறித்தோ, அரசு திட்டங்கள் குறித்தோ மிகவும் வெளிப்படையாகவும் பயமின்றியும் விமர்சனம் செய்வதை அனுமதிக்காவிட்டால் ஜனநாயகம் கொடுங்கோலாட்சியாக மாறிவிடும்"

டில்லி, ஆக. 11-
இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துவிட்ட தாகக் கூறிய முன்னாள் குடியரசுத் துணைக் தலைவர் அமீத் அன்சாரி இது தொடர்பாக நான் மோடி மற்றும் அமைச்சர்களிடம் கேள்வி கேட்டபோது அவர் கள் கூறிய பதில் மன வேதனைக்கு ஆளாக்கியது என்றும் கடந்த மூன்று ஆண்டுகளாக இஸ்லாமி யர்கள் அச்சத்துடன் வாழ் கின்றனர் என்றும் கூறியுள் ளார்.
ஓய்வுபெற்ற குடியரசுத் துணை தலைவர் அமீத் அன்சாரி அரசு தொலைக் காட்சியான மாநிலங்க ளவை தொலைக்காட்சியில் புதன் அன்று நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
இஸ்லாமியர்கள் தாக்கப்படுவது உண்மைதான்
கடந்த மூன்று ஆண்டு களாக (பாஜக ஆட்சிக்கு வந்தது முதல்) இஸ்லாமி யர்கள் தொடர்ந்து தாக்கப் பட்டுக்கொண்டு வருகின்ற னர். பா.ஜ.க. ஆட்சி அரிய ணையில் ஏறியது முதல் இஸ்லாமியர்கள் ஒரு வித அச்ச உணர்வுடன் இருந்த னர். இந்த அச்ச உணர்வு இந்த ஆட்சியின் தொடர்ச்சி யில் அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை. நாளுக்கு நாள் சூழல் மோசமாகத் தான் ஆகிக்கொண்டிருக்கி றது. மேலும் சமூகத்தில் மதச்சார்பின்மை மிகவும் குறைந்துவிட்டது, மதரீதி யான உணர்வுகள் தூண் டப்பட்டு அமைதி குலைந்து வருகிறது. சமூகத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது கண் கூடாகத் தெரிகிறது, இன் றைய நிலையில் மதரீதியாக தேசபக்தி பார்க்கப்படுகி றது. குறிப்பிட்ட மதத்தவர் கள் அனைவருமே தேச பக்தி இல்லாதவர்கள் என்ற ஒரு போலியை சிலர் உரு வாக்கிவிட்டனர்.  தேச பக்தி என்பது அனைத்து இடங்களிலும் கேள்விக் குள்ளாக்கவேண்டும் என் பது அவசியமில்லை.

நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்து வரும் தாக்குதல்கள் மற் றும் சிறுபான்மையினர்கள் கொல்லப்படுவது குறித்து மோடி மற்றும் அமைச்சர்க ளிடம் நான் பேசினேன், ஆனால் அதற்கு அவர்கள் கூறிய பதில் என்னை மன வேதனைக்கு ஆளாக்கியுள் ளது. இந்த இடத்தில் அவர்கள் கூறிய பதிலை, நான் வெளிப்படையாக கூறு வது ஜனநாயக மரபிற்கு எதிரானது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த இந்த மூன் றாண்டுகளில் நாடு முழு வதும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது வெளிப்படையான ஒன்று என்று அமீது அன்சாரி கூறினார்.
மோடி ஆட்சிக்கு வருவ தற்கு முன்பு "சப்கே சாத் சப்கா விகாஸ்" (அனைவ ரையும் சேர்த்து, அனைவ ருக்குமான வளர்ச்சி) என்று கூறி ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவர் பதவியேற்ற மறுநாளே டில்லியில் பாஜ கவினரும் இந்து அமைப் புகளும்  வெற்றி நடை (விஜய் யாத்திரா) என்ற பெயரில் நடத்திய பேரணியின் போது சிறுபான் மையினர் வணிக வளாகங்க ளுக்கு எதிரில் நின்று இனி உங்களுக்கு கெட்டகாலம் வந்துவிட்டது என்று வெளிப் படையாகவே கூறிக் கொண்டு சென்றனர்.
இது தொடர்பாக உள் துறை அமைச்சரிடம் கேட்ட போது ஒரு சிலர் பேசுவதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார். இந்த நிலையில் குடியரசுத் துணைத் தலைவர் பாஜக ஆட்சிக்கு வந்த நாளிலி ருந்தே சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித் துள்ளது என்று கூறியிருப் பது இந்த ஆட்சியில் சிறு பான்மையினருக்கு பாது காப்பில்லை என்பதையே உணர்த்துகிறது.
        இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


Friday, August 11, 2017

முரசொலி பவளவிழா காட்சிகள்








அடுத்த கத்தி கேரளாவுக்கா

கேரளாவில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று கூறி அம்மாநில அரசைக் கலைக்கும் வேலையில் மோடி அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. அதில் பார்ப்பனர்களால் தீண்டத்தகாத வகுப்பு என்று பிரித்துவைக்கப்பட்ட ஈழவ சமூகத்தைச்சேர்ந்த பினராயி விஜயன் முதல்வராக இருக்கிறார். கேரளா மக்கள் பாஜகவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் சட்டம் - ஒழுங்கைக் காரணம் காட்டி ஆட்சியைக் கலைத்து மறைமுகமாக பாஜக ஆட்சிசெய்வதற்கான செயல்திட்டங்களை அங்கு செய்துவருகிறது.
மாநிலத்தில் இளைஞர்களைக் குறிவைத்து மூளைச்சலவை செய்து அவர்களுக்கு மதவெறி ஊட்டும் வேலையை பாஜக - ஆர்.எஸ்.எஸ்., அதன் இதர அமைப்புகள் முனைப்போடு செயல்பட்டு வருகின்றன. இதனால் அங்கு கம்யூனிஸ்ட் தோழர்களுக்கும், மதவெறி அமைப்புகளுக்கும் இடையே  அவ்வப்போது கடும் மோதல் நிகழ்கிறது. இந்த மோதல் சமயங்களில் கொலையில் முடிகிறது. இருதரப்பிலும் பொருட்சேதமும், உயிர்ச் சேதமும் சர்வசாதாரணமாக நிகழ்ந்துவருகின்றன.
இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ராஜேஷ் என்பவர் கடந்த வாரம் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். இவர் கேரளாவில் படுகொலையான சி.பி.எம். பிரமுகர் தன்ராஜ் என்பவரின் கொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவர் என்று கூறப்படுகிறது. இது கேரளாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு எதிரான இந்த வன்முறை மூலம் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டதாக ஒரு மாயையை உருவாக்கி கேரள ஆட்சி மீது கைவைக்க அமித்ஷா - மோடி கூட்டணி முயற்சி செய்து கொண்டிருப்பதாக உள்துறை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்து வருகின்றன.
உள்துறை அறிக்கையின்படி  கேரளாவில் நடைபெறும் வன்முறைகளை இனியும் பொறுத்துக் கொள்ளமுடியாது என்று கூறி சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டுகிறது அந்த அறிக்கை. அதாவது கேரளாவில் இப்படியான படுகொலைகளால் அங்கு சட்டம் - ஒழுங்கு கெட்டிருப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி அரசைக் கலைப்பதே மத்திய அரசின் திட்டம் என்கிறார்கள்.
இதற்கு முன்பே பல சம்பவங்களில் இந்தக் குற்றச்சாட்டை பாஜக கேரள அரசின் மீது முன்வைத்தது என்றாலும் இந்த முறை அதை ஒரு திட்டத்துடன் தீவிரமாக்கியுள்ளது. கொலை செய்யப்பட்ட. ராஜேஷின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல கேரளா வந்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, "கேரள மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முறையாகப் பராமரிக்கப்படவில்லை" என்று குறை கூறிச் சென்றுள்ளார்!
கேரளாவில் இடதுசாரி முன்னணி எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் அரசியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துவிடுவதாகவும் நேரடியாக கம்யூனிஸ்ட் கட்சியையும் அரசையும் வசைபாடியுள்ளார். சமீபத்தில் அமித்ஷா கேரள சுற்றுப்பயணம் செய்து டில்லிக்குச் சென்ற பிறகு அங்கு வன்முறைகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது, மேலும் டில்லி தலைமையிலிருந்தும் ஒருங்கிணைப்பாளர் ஒருவரை கேரளாவில் நடக்கும் வன்முறைகளைக் கணக்கிடுமாறும் நியமனம் செய்துள்ளார் அமித்ஷா.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த வன்முறைகள்  அடங்கிய பட்டியல் ஒன்றை தயாரித்து அதை நேரடியாக குடியரசுத்தலைவர் பார்வைக்குக் கொண்டு செல்ல மோடி தயாராகிவருகிறார். இதன் மூலம்  கேரள அரசுக்கு சட்டச் சிக்கல் எழலாம் என்று கருதப்படுகிறது.
மேலும் எப்போதுமில்லாத அளவு கேரள இளைஞர்கள் அய்.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக வட இந்திய பாஜக ஆதரவு ஊடகங்கள் பெரும் அளவில் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்து வருகின்றன, உண்மையில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து தான் பாஜகவினரே பயங்கரவாதிகளுக்கு உதவியதாக தக்க சான்றுகளோடு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகளுக்கு உதவுவது, வன்முறைகளை கட்டவிழ்ப்பது போன்ற நிகழ்வுகளை பெரிதாக்கி அதன் மூலம் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை மாநில அரசின் கைமீறிச் சென்றுவிட்டது என்று கூறி ஆட்சியைக் கலைக்கும் வேலையில் மோடி அரசு முனைப்பாக இருந்துவருகிறது.
பொதுவாக ஆட்சியைக் கலைப்பதில் சட்டச்சிக்கல் எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே தனது கட்சியைச் சேர்ந்தவர்களை குடியரசுத் தலைவராகவும், துணைக்குடியரசுத்தலைவராகவும் பதவியில் அமரவைத்துள்ளனர்.  ஆகவே தமிழகத்திற்கு முன்பாகவே கேரளாவில் ஒரு ஜனநாயகப் படுகொலை செய்ய காவிக்கூட்டம் கத்தி தீட்டுகிறது.
மோடியின் ஏதேச்சதிகார ஆட்சியை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர அனைத்து ஜனநாயக சக்திகளும், மதச் சார்பின்மை, சமூக நீதி சக்திகளும் ஒன்று திரண்டு தோள் உயர்த்த வேண்டிய காலகட்டம் - இது.


கலைஞரின் மூத்த பிள்ளையான ‘முரசொலி'யின் பவள விழா காட்சியரங்கம் திறப்பு விழா ஓர் இனத்தின் எழுச்சி - பகுத்தறிவின் வெற்றி-கொள்கையின் மாட்சி!



சென்னை, ஆக.10
முரசொலி ஏடு என்பது வெறும் ஓர் ஏடல்ல; அது பவள விழா காண்கிறது என்றால், இதற்குள் ஓர் இனத்தின் எழுச்சி - பகுத்தறிவின் வெற்றி - கொள்கையின் மாட்சி! - இதனையொட்டி உருவாக்கப்பட்டுள்ள காட்சி அரங் கம் நிரந்தரமாக்கப்படவேண்டும் - இளைஞர்கள் பார்க்க வேண்டும் - மனதில் பதிக்கவேண்டும் என்றார் ‘விடுதலை' ஆசிரியர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
சென்னை முரசொலி அலுவ லகத்தில், முரசொலியின் பவள விழாவினையொட்டி, இன்று (10.8.2017) ‘முரசொலி' காட்சி அரங்கத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில், இந்துக் குழுமத்தின் தலைவர் என்.ராம் திறந்து வைத்தார்.
அந்நிகழ்வில், செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியதாவது:
நண்பர்களே, பெருமதிப்பிற்குரிய சிறப்புமிகுந்த கலைஞ ரின் மூத்த பிள்ளையான நம்முடைய பகுத்தறிவுச் செல்வம் திராவிடர் இன உணர்ச்சியினுடைய போர் முரசான முரசொலி யினுடைய  பவள விழா கண்காட்சி நிகழ்ச்சியை கருத்துக் காட்சியாக்கிய இந்நிகழ்ச்சியைத் திறந்து வைத்த இந்துக் குழுமத்தினுடைய தலைவர் பெருமதிப்பிற்குரிய இந்து என்.ராம் அவர்களே,
துண்டறிக்கையாகத் தொடங்கி...
ஒரு துண்டறிக்கையாக தொடங்கப் பெற்ற இந்த முரசொலி நாளேடு இன்றைக்கு வளர்ந்து எந்த அளவிற்கு அதனுடைய பவள விழாவில் ஓர் அற்புதமான வரலாற்று ஆவணத் தொகுப்பாக அதனை ஆக்கி, சுவைபட வருங் காலத் தலைமுறையினருக்கும், இன்றைய இளைய தலை முறையினருக்கும் தெரிவிக்கலாம் என்ற ஆற்றலோடு செய்திருக்கின்ற நம்முடைய அருமை திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் அன்பு சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே, ஊடக நண்பர்களே, இயக்கத் தோழர்களே, முரசொலியின் வாசகப் பெருமக்களே, வரலாற்றில் ஒரு பொன் னேடு! முரசொலியினுடைய பவள விழா கொண்டாடப்படும் இன்றைய நாள் திராவிடர் இயக்கத்தினுடைய எழுச்சி நாள்!
இது ஒரு நாளேட்டின் பவள விழா என்பதல்ல - ஓர் இனத்தினுடைய வீழ்ச்சியிலிருந்து எழுச்சி எப்படியெல்லாம் துவங்க முடியும் - அதற்கு எப்படிப்பட்ட போர்க் கருவிகள் தேவை என்பதில் - அது சந்தித்த வேதனைகள் - கலைஞர் மொழியில் சொல்லவேண்டுமானால் - அது சந்தித்த வேத னைகள் - அது சந்தித்த சோதனைகள் - பிறகு அது சாதித்த சாதனைகள் அத்தனையும், சுருக்கமாக, விளக்கமாக, மிக அருமையாக இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. கண்காட்சி என்பதைவிட கருத்துக்காட்சி இது!
இதற்கு உழைத்த தோழர்கள் அத்துணைப் பேருக்கும் நம் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள் கிறோம். இந்த முரசொலிக்கு ஒரு மிகப்பெரிய பாரம்பரியம் உண்டு. அதனுடைய நிறுவன ஆசிரியராக நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர், அதற்குப் பிறகு பெருமதிப்பிற் குரிய முரசொலி மாறன், இன்றைக்கும் அதைத் தோளில் சுமந்து கொண்டு சிறப்பாக, சிறைச்சாலைக்கும் சென்று சட்டசபையில், கூண்டிலே ஏற்றப்பட்ட நம்முடைய முரசொலி செல்வம்,
இவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்து, மிகச் சிறப் பாக தமிழ் இனத்தினுடைய தோள்கள்மீது ஏறி நிற்கக்கூடிய ஆற்றலை வழங்கியிருக்கக்கூடிய நம்முடைய தளபதி ஸ்டா லின் அவர்கள்  - இவர்கள் அத்துணைப் பேரும் இணைந்து ஒரு பெரிய வரலாற்று ஆவணத்தைக் காட்டியிருக்கிறார்கள்.
எனவே, இது ஒரு நாளேட்டினுடைய வரலாறு மட்டுமல்ல - ஓர் இனத்தின் எழுச்சி - பகுத்தறிவின் வெற்றி - கொள் கையின் மாட்சி! எனவே, அத்துணைப் பேரும் காணுவதற்கு  இந்தக் கருத்துக்காட்சியை நிரந்தரமாக்க வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள். ஒவ்வொருவரும் இந்த வரலாற்று நிகழ்வினைப் பார்க்கவேண்டும்.
எனவேதான், குறிப்பாக, நெருக்கடி காலத்தில், இந்தப் பத்திரிகை சந்தித்த எதிர்ப்புகள், வேதனைகள் - அதேபோல, பிற்காலத்தில் இது எத்தனையோ சங்கடங்களை சந்தித்திருக் கிறது. பதவி மட்டுமே அரசியல் அல்ல. அதேநேரத்தில், பல் வேறு தியாகங்களுடைய தொகுப்பும் - நடந்து வந்த பாதை கள் கரடு முரடான பாதைகளானாலும், லட்சியப் பாதைகள் என்றைக்கும் வெற்றிப் பாதையாக அமையும் என்ற நம்பிக் கையை ஊட்டக்கூடிய இந்தக் கருத்துக்காட்சி தொடர்ந்து பல லட்சக்கணக்கான மக்களால், குறிப்பாக இளைய தலைமுறையினரால் பாதுகாக்கப்பட்டு பரப்பப்பட வேண் டும் - பார்க்கப்படவேண்டும் - மனதிலே பதிக்கப்பட வேண்டும்.
நன்றி,வணக்கம்!
வாழ்க பெரியார்! வாழ்க கலைஞர்! வாழ்க முரசொலி! வளர்க திராவிடத்தின் எழுச்சி!
- இவ்வாறு திராவிடர் கழகத்தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Thursday, August 10, 2017

தார்மீகம் பேசுவோர் முகத்தில் தார்....

குஜராத் மாநிலங்களவைக்கான தேர்தலில் பலத்த போராட்டத்திற்குப் பின்பு காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் குஜராத் மாநிலத்தில் பாஜக தேசியத்தலைவர் அமித்ஷாவின் நரித்தந்திரத்திற்கு முதல் அடி கிடைத்துள்ளது.

குஜராத் மாநிலங்களவைக்கான 3 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த மாதம் தேர்தல் ஆணையத் தால் அறிவிக்கப்பட்டது. இதில் வாக்கு எண்ணிக்கையின் படி காங்கிரசுக்கு ஒரு உறுப்பினர், பாஜகவிற்கு இரண்டு உறுப்பினர்களைத் தேர்தெடுக்கும் சூழ்நிலை இருந்தது. ஆனால் அமித்ஷா அந்த மூன்று இடங்களையும் பாஜகவே கைப்பற்ற வேண்டும் என்ற நினைப்பில் காங்கிரஸ் கட்சியை உடைக்கும் வேலையில் ஈடுபட்டார்.
ஏற்கெனவே காங்கிரஸ் தலைமை மீது புகைச் சலில் இருந்த சங்கர் சிங் வகேலாவை அமித்ஷா பயன் படுத்திக் கொண்டார். சங்கர்சிங் வகேலா உறவினர் ஒருவர் திருமணத் திற்கு நேரில் சென்ற அமித்ஷா அவரையும், அவரது ஆதரவு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது காங்கிரஸ் கட்சி சங்கர் சிங்வ கேலாவை ஓரம் கட்ட ஆரம்பித்துவிட்டது. இதனை அடுத்து சங்கர் சிங் வகேலா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு பாஜக விற்கு கிடைப்பது உறுதியாகிவிட்டது.
அடுத்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 44 பேருக் கும் பாஜக குறிவைத்தது. இதனைப் புரிந்துகொண்ட காங் கிரஸ்  தனது 44 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெங்களூரு அழைத்துச்சென்று தங்கவைத்தது. இதனையும் தனக்குச் சாதகமாக மாற்ற முயன்ற அமித்ஷா ஏற்பாட்டில் குஜராத் முழுவதும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை அடிமை களாகச் சித்தரித்து பதாகைகள் வைக்கப்பட்டன. மேலும் பெங்களூருவில் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு எப்போது மில்லாத முறையில் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கப் பிரிவு சோதனைகளை அதிரடியாக நடத்தி, அங்கிருந்த குஜராத் சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டிப் பார்த்தனர். இருப்பினும் ஒன்றும் நடக்கவில்லை. வாக்குப்பதிவுக்கு முதல் நாள் 44 சட்டமன்ற உறுப்பினர்களும் குஜராத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இவ்வளவு நடந்தும் 2 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணத்தாசை காட்டி சில மணிநேரங்களில் தங்கள் பக்கம் இழுத்துவிட்டனர். இரண்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நாங்கள் பாஜகவுக்குதான் வாக் களித்தோம் எனத் திரைப்படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சி போல் தாங்கள் வாக்களித்த சீட்டை பாஜகவின் தேர் தல் முகவரிடம் காண்பித்தனர்.
இதனை அடுத்து குஜராத் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில், பாஜகவிற்கு அளித்தவாக்குச்சீட்டை பாஜக தேர்தல் முகவரிடம் காண்பித்த இரு சட்டமன்ற உறுப்பினரின் வாக்குகளைச் செல்லாது என அறிவித்து தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகியது.
இதில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணை யத்திடம் இருந்தது. எனவே தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து வந்தனர். இதற்கு நடுவே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டில்லியில், இப்பிரச்சினை குறித்து அவசரமாக ஆலோசித்து வந்தனர்
இதன்பிறகு, காங்கிரஸ் குழு தேர்தல் ஆணையத்திற்குச் சென்று 2 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களது வாக்குகளும் செல்லாது என அறிவிக்கக் கோரியது. ஆனால் பா.ஜ.க.வின் அருண் ஜெட்லி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் தேர்தல் ஆணையத்திடம் 2 எம்எல்ஏக்கள் வாக்குகளும் செல்லும் என அறிவிக்கக் கோரினர். நேற்று நள்ளிரவில் இருமுறை மூத்த அமைச்சர்கள் அய்ந்துபேர் தேர்தல் ஆணையத்திடம் நேரில் சென்று வலியுறுத்தியுள்ளனர். இதனால் தேர்தல் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தினர். நள்ளிரவு வரை ஆலோசனை தொடர்ந்தது. இரவே அமித்ஷா அகமதா பாத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்திற்கு சென்றுவிட்டுமீண்டும் அகமதாபாத் திரும்பினார். இதனால் அகமதுபடேல் தோல்வி உறுதி என்ற நிலை உருவானதாகக் கருதப்பட்டது.
இதனை அடுத்து இரவு 11.30 மணியளவில் தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவித்தது. கட்சி மாறி வாக்களித்து, அதை பாஜக தேர்தல் முகவரிடம் காட்டிய இரண்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ரகசிய வாக்கெடுப்பு முறைக்கு எதிராக அவர்கள் நடந்துகொண்டதை காரணமாகக் கூறி அந்த வாக்குகளைச் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது
இதனை அடுத்து மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அகமது படேல் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் 5ஆவது முறையாக மாநிலங்களவைக்குச் செல்கிறார்.
உண்மையில் இது  பாஜகவின் பண பலத்திற்கு எதிராக கிடைத்த வெற்றி, இந்திய அரசியலில் பல்வேறு ராஜதந்திர நிகழ்வுகளை பார்த்ததுண்டு, அந்த ராஜதந்திர நிகழ்வுகள் வெற்றி பெறுவதும், முறியடிப்பதுமாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது, ஆனால் அமித்ஷா தன்னுடைய பணபலத்தை வைத்து நரித்தந்திரத்தை அரங்கேற்றியும் தோல்வியை முழுவதுமாகச் சுமந்துள்ளார்.
இது பாஜவிற்கு மட்டும் கிடைத்த தோல்வி அல்ல, பணபலத்தால் எதையும் வாங்கிவிடலாம் என்று நினைத்த அமித்ஷா-மோடி கூட்டணிக்குக் கிடைத்த தோல்வி ஆகும். பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற பல்வந்த் சிங் சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.
தார்மீகத்தைப் பற்றிப் பேசும் பாஜக - ஆர்.எஸ்.எஸ். கும்பலின் முகத்தில் தார்பூசப்பட்டு விட்டது. இது பிஜேபிக்கு மிகப் பெரிய சரிவாகும்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
\

கலைஞருடன் தமிழர் தலைவர் சந்திப்பு



பவள விழா காணும் 'முரசொலி'யாம் முத்தமிழ் அறிஞர் "மூத்த செல்வத்துக்கு" நமது வாழ்த்துகள்!

முரசொலி'க்கு 'விடுதலை'யின் பாராட்டு

முத்தமிழ் அறிஞரும், மானமிகு சுயமரியாதைக்காரருமான நமது கலைஞரின் மூத்த முதற்பிள்ளை “முரசொலி" நாளேட்டிற்கு நாளை 75ஆவது ஆண்டு பவள விழாக் கொண்டாட்டம்!
“முரசொலி" நாளேடு - அரசியல் கட்சியான தி.மு.க.வின் பகுத்தறிவு நாளேடு!
மூடநம்பிக்கைச் செய்திகளோ, ஜோதிட, ராசி பலன் பிழைப்போ அதனிடம் இல்லாத 'அதிசய' அரசியல் நாளேடு 'முரசொலி'!
கையெழுத்துப்பிரதி, துண்டறிக்கை போன்று அச்சிடப்பட்ட இதழ், வார ஏடு - இப்படிப் பல பருவங்களைக் கடந்து வளர்ந்தோங்கி நிற்கும் "முரசொலி" நமது சகப்போராளி ஏடு ஆகும்! நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!!

நமது 'விடுதலை'க்கு 83 ஆண்டுகள்!
நமது 'முரசொலி'க்கு 75 ஆண்டுகள்!
- இந்த இரண்டு திராவிடர் இயக்கத்தின் தமிழ் நாளேடுகள் - வாளாகப் போரிடும் ஆயுதங்கள்! - இவை சந்தித்த எதிர்ப்புகள், அடக்குமுறைகள், சோதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல...!
அவை எல்லாம் அவற்றின் விழுப்புண்கள்தான்! பல லட்சங்கள் - பிரதிகள் ஓடும் ஏடுகள் என்பதைவிட, சமூகத்திற்குத் தேவையான லட்சியங்களைப் பரப்பும் சமூக மருத்துவ ஏடுகள் - நமது நாளேடுகள்!
"நெருக்கடி நிலை கால"த்தில் 1976 ஜனவரி முதல் 1977 வரை இந்த இரண்டு தமிழ் நாளேடுகளும் சந்தித்த அன்றாடச் சோதனைகள், எவராலும் எளிதில் ஏற்று செரிமானம் செய்யப்படக்கூடியவையல்ல!
'முரசொலி'யின் முழக்கம் தொடர்ந்து கேட்பதற்கு, கலைஞரால் அடையாளம் காணப்பட்ட ஆற்றல்மிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆற்றல் செயல் திறனே இன்று முக்கிய காரணம் ஆகும்!
இயக்க நாளேடுகளை நடத்துவது என்பது சறுக்கு மரம் ஏறும் பணி போன்றது என்றாலும், சறுக்காத, சளைக்காத சரித்திரம் படைத்து வரும் 'முரசொலி' என்னும் முத்தமிழ் அறிஞரின் மூத்த செல்வத்துக்கு நமது தாய்க்கழகத்தின் நெஞ்சம் நிறைந்த பாராட்டு, முத்தங்கள்!
"காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீதான்! இந்தப்
பாரிடைத்துயில்வோர் கண்ணிற்
பாய்ந்திடும் எழுச்சி நீதான்!"

- புரட்சிக்கவிஞர்
திராவிடர் இயக்கத்தின் முனை மழுங்காத கருவியாம்  'முரசொலி'யின் முன்னேற்றம், திராவிடர் தம் எழுச்சி, ஏற்றம், சமுதாய மாற்றம், என்பதை மறவாதீர்! ஆதரிப்பீர்!!
வாழ்க! வளர்க!!

சென்னை                                                                                                                            ஆசிரியர்
9.8.2017                                                                                                                             விடுதலை

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...