Saturday, November 7, 2015

பாஜகவிடம் எச்சரிக்கை தேவை கட்சியினருக்கு மாயாவதி அறிவுறுத்தல்



லக்னோ, நவ.6_ உத்தரப் பிரதேம், உத்தர கண்ட் ஆகிய மாநிலங் களில், வரும் 2017-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தால், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம் பகுஜன் சமாஜ் கட்சியி னர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அக்கட் சியின் தலைவர் என்று மாயாவதி அறிவுறுத் தினார். 
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில, மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம், லக் னோவில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாயாவதி பேசியதாக, அக்கட்சி வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நடைபெறவுள்ள உத்தரப் பிரதேசம், உத் தரகண்ட் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில், மக்களைத் தவறாக வழி நடத்துவதற்கு அனைத்து விதமான இழிவான உத்திகளையும் எதிர்க் கட்சிகள் பயன்படுத்தக் கூடும். எனவே, எதிர்க் கட்சிகளிடம் இருந்து, குறிப்பாக, பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்பு களின் மத ரீதியிலான தூண்டல்களில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சியி னர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 
பீகார் சட்டப்பேரவைத் தேர்த லில், பாஜகவால் மக்கள் தவறாக வழிநடத்தப் பட்டிருந்தால், அது தேசிய ஜனநாயகக் கூட் டணிக்கு பலனளிப்பதாக இருக்கும்; ஆனால், அந்த மாநிலத்துக்கு அது, மிகப்பெரிய இழப்புக்கு காரணமாகிவிடும்.  அப் படியேதும் நடக்கவில்லை எனில், பாஜகவால் பீகா ரில் ஒருபோதும் ஆட்சி யமைக்க முடியாது. மேலும், தேர்தல் முடி வுகள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு திருப்தியளிக்கும் விதமாகவும் இருக்கும் என்று மாயாவதி கூறிய தாக அந்த செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

சகிப்பின்மைக்கு காரணமான பா.ஜ.க. அரசை கண்டித்து அருந்ததிராய் தேசிய விருதை திருப்பி அளிக்க முடிவு

சகிப்பின்மைக்கு காரணமான பா.ஜ.க. அரசை கண்டித்து
பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் மற்றும் திரைக் கலைஞர்கள் 24 பேர் தேசிய விருதுகளை திருப்பி அளிக்க முடிவு
புதுடில்லி, நவ.6- நாட்டில் நிலவி வரும் சகிப் பின்மைக்கு காரணமான பாஜக அரசின் மவு னத்தைக் கண்டித்து, திரையுலகைச் சேர்ந்த 24 கலைஞர்கள் தங்கள் தேசிய விருதுகளை திருப்பி அளிக்க முடிவெடுத்துள் ளனர்.இந்தப் புதிய பட்டியல் மூலம், வலுத்து வரும் விருது திருப்பி அளிப்புப் போராட்டத் தில் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயும் இணைந் துள்ளார். சயீத் மிர்சா, குந்தன் ஷா ஆகியமூத்த திரை இயக்குநர்கள், ஒளிப் பதிவாளர் விரேந்திர சைனி ஆகியோர் தங் களுக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை திருப்பி அளிக்க முடிவெடுத்துள் ளனர். 
சகிப்புத் தன்மைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து உட்பட மதவெறி தலை தூக்கியுள்ளதைக் கண்டித்து இவர்கள் விருதுகளை திருப்பி அளிக்கின்றனர். பெருகி வரும் சகிப்புத் தன்மை யற்ற போக்கு மற்றும் மக்களின் எதிர்ப்புக் குரல்களுக்கு மத்திய அரசு செவிசாய்க்காமல் புறக் கணிப்பது ஆகியவை முக்கியக் காரணங்களாக இவர்களால் முன்வைக்கப் பட்டுள்ளன. 1988-ம் ஆண்டு சிறந்த திரைக் கதைக்கான விருது பெற்ற அருந்ததிராய் தனது விருதை திருப்பியளிக் கிறார். 
மேலும் அஜய் ரெய்னா, ஒளிப்பதிவாளர் கள் ரஞ்சன் பாலித் மற்றும் மனோஜ் லொபோ, சமூக செயல்பாட்டாளரும் இயக்குநர்களுமான தபன் போஸ், சஞ்சய் காக், மதுசிறீ தத்தா, பிரதீப் கிரிஷன் ஆகியோரும் பட்டியலில் உள்ளனர்.
இவர்களில் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட விருதுகளை திரும்பி அளிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விருது களை திருப்பி அளிக்கும் முடிவை டில்லி மற்றும் மும்பையில் வியாழனன்று மாலை நடைபெற்ற செய் தியாளர்கள் சந்திப்பில் இவர்கள் அறிவித்தனர். விருதை திருப்பி அளிக் கும் கலைஞர்கள் விவரம்: அருந்ததி ராய், சயீத் மிர்சா, குந்தன் ஷா, விரேந் திர சைனி, அஜய் ரெய்னா, ரஞ்சன் பாலித், மனோஜ் லொபோ, தபன் போஸ், 
சஞ்சய் காக், மதுசிறீ தத்தா, பிரதீப் கிரிஷென், சிறீபிரகாஷ், விவேக் சச்சிதானந்த், பி.எம்.சதீஷ், தருண் பாரிதியா, அமி தபா சக்ரவர்த்தி, ரபீக் இலியாஸ், சுதாகர் ரெட்டி யக்கான்ட்டி, அன்வர் ஜமால், சுதீர் பல்சானே, மனோஜ் நிதர் வால், ஐரீன் தார் மாலிக், சத்ய ராஜ் நாக்பால்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தொழில் நிறுவனங்களின் நலன்கள்- மதவாதக் கொள்கைகள் இரண்டும் சேர்ந்ததுதான் புதிய கல்விக் கொள்கை

தொழில் நிறுவனங்களின் நலன்கள்- மதவாதக் கொள்கைகள்
இரண்டும் சேர்ந்ததுதான் புதிய கல்விக் கொள்கை

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்; பொதுக் கல்விக்கான மாநில மேடை எச்சரிக்கை
சென்னை, நவ.6_ மத்திய பிஜேபி அரசு அறிமுகப்படுத்தும் புதிய கல்விக் கொள்கை என் பது தொழிலதிபர்களுக் கும், மதவாதத்துக்கும் துணை போகும் கல்வி முறைதான்  இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மக்கள் எதிர்க்க வேண்டும் என்று சென் னையில் நடைபெற்ற கருத்தரங்கில் எச்சரிக் கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பொதுப் பள்ளிக் கான மாநில மேடை ஆகிய அமைப்புகளின் சார்பில் "உயர் கல்வி எதிர் கொண்டுள்ள சவால்கள்' என்ற தலைப்பில் சென் னையில் தேசிய கருத்தரங் கம் வியாழக்கிழமை நடை பெற்றது. இதில் புதிய கல்விக் கொள்கை குறித்து கணித அறிவியல் நிறுவ னத்தின் பேராசிரியரும், விஞ்ஞானியுமான ஆர்.ராமா னுஜம் பேசியது:
புதிய கல்விக் கொள்கைக்கான விவாதப் பொருள்களிலி ருந்து அந்தக் கொள்கை எப்படியிருக்கும் என்பதை நாம் தெரிந்துகொள்ள லாம். இந்தக் கொள்கை கல்வி தொடர்பான பிரச் னைகளை முழுக்க, முழுக்க நிர்வாக ரீதியான பிரச்சினையாகவே பார்க் கிறது. கல்வியின் ஆன் மாவை இது தொட வில்லை. இந்த விவாதப் பொருள் களில் ஆசிரியர்கள் மிக வும் தரக்குறைவானவர் களாகப் பார்க்கப்படுவதை அறிந்துகொள்ளலாம். 
அதிக எண்ணிக்கையி லான மக்கள் உயர் கல்வி பெறுவதில்லை, உயர் கல்வி நிறுவனங்களுக்குள் அவர்களால் இன்னமும் வர முடியவில்லை என்பது தான் நமது மிகப்பெரிய பிரச்சினை. ஆனால், இந் தியாவில் உருவாக்குவோம் என்கிற திட்டத்துக்காக பள்ளிப் படிப்பு முடித்த மாணவர்களிலிருந்து தொழிலாளர்களை உரு வாக்குவதாகவே இந்தப் புதிய கல்விக் கொள்கை யின் நோக்கமாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
சமூகத்தில் உள்ள பிரிவுகளையும், வேறுபாடுகளையும் நியாயப்படுத்தும் பல்வேறு அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் உள்ளன. சமூக அவலங்களைப் போக்கும் கருவியாக கல்வியை இந்தப் புதிய கொள்கை பார்க்கவே யில்லை.  மிக முக்கியமாக கலாசார ஒருமுகத்தன்மை யையும் இந்தக் கொள்கை வலியுறுத்துகிறது. தொழில் நிறுவனங்களின் நலன்கள், 
மதவாதக் கொள் கைகள் ஆகிய இரண்டும் ஒன்று சேர்ந்து புதிய கல்விக் கொள்கையாக தரப்பட உள்ளது. எல்லோருக்கும் வேலை தரப்போகிறோம் என்கிற புதிய கொள்கையை எதிர்ப்பது சுலபமல்ல. ஆனால், கல்வி பற்றிய அக்கறை கொண்ட அனைவரும் எதிர்க்க வேண்டியதுதான் இந்தப் புதிய கொள்கை. உயர் கல்வியில் அடிப்படை யான மாற்றங்கள் தேவை. ஆனால், இந்த மாற்றங் கள் தேவையில்லை என் றார் அவர். சந்தைப் பொருளாக மாற்றக் கூடாது
அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப் பின் தலைமைக்குழு உறுப் பினர் பேராசிரியர் அனில் சத்கோபால்: உலக வர்த் தக அமைப்பின் -காட்ஸ்- ஒப்பந்தத்தில் கையெழுத் திடுவதன் மூலம் உயர் கல்வியை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந் தியா திறந்துவிட உள்ளது. நைரோபியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள கூட்டத்தில் இதற்கான விருப்பத்தை இந்தியா திரும்பப் பெறவில்லை என்றால், அதை எப்போ தும் திரும்பப் பெற முடியாது.  கல்வி என்ற நிலையில் இருந்து சந்தை யில் விற்கப்படும் பொரு ளாக அது மாற்றப்பட உள்ளது. மாணவர்கள் நுகர்வோர்களாகவே பார்க்கப்படுவர். உயர் கல்வியை பணம் கொடுத்து மட்டுமே கற்க முடியும் என்ற நிலை உருவாகும். 
எனவே, இதை அனை வரும் எதிர்க்க வேண்டும்.  இப்போதைய உயர் கல்வி முறையில் நிச்சயம் மாற்றம் தேவை. ஆனால், அதை சந் தைக்குத் திறந்துவிடுவது தீர்வாகாது என்றார் அவர். மனோன்மணீயம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வி.வசந்திதேவி: மத்திய அரசு புதிய கல்விக் கொள் கையை உருவாக்குவதற் காக குழு அமைத்துள் ளது. இந்தக் குழுவில் ஒரே யொரு கல்வியாளரைத் தவிர  மீதமுள்ள அனை வரும் அதிகாரிகள்தான். உலக வர்த்தக அமைப் பின் -காட்ஸ்- ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடு வதன் மூலம் உயர்கல்வி முழுக்க, முழுக்க சந்தைப் பொருளாக மாறும். இந்த ஒப்பந்தம் உயர் கல்வியை வெளிநாட்டு நிறுவனங் களுக்கு திறந்துவிடுகிறது.
 இதற்கான விருப்பத்தை இந்தியா திரும்பப் பெற வில்லையென்றால் நமது தலையெழுத்தை மாற்ற முடியாது. இப்போது நமது கல்விக்கும், ஜனநா யகத்துக்கும் மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள் ளது. மக்களுடன் இணைந்து மிகப்பெரிய போர்க்குரல் எழுப்பினால் மட்டுமே மீட்சி உண்டு என்றார் அவர். புதிய கல்விக் கொள்கை குறித்த புத்தகத்தை கல்வி யாளர்  எஸ்.எஸ்.ராஜகோ பாலன் வெளியிட, தமிழ் நாடு அறிவியல் இயக்கத் தின் செயலாளர் ஜி.முனு சாமி பெற்றுக் கொண் டார். பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, லயோலா கல்வியியல் கல்லூரியின் செயலாளர் டோமினிக் ராய்ஸ், தமிழ் நாடு அறிவியல் இயக்கத் தின் பொருளாளர் கே.செந்தமிழ்ச்செல்வன், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் தலைவர் பி.ரத்னசபாபதி, பேராசிரியர் மணி, பேரா சிரியர் எஸ்.மோகனா உள் ளிட்டோர் இந்தக் கருத் தரங்கில் பங்கேற்றனர்.



இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Thursday, November 5, 2015

லாலு - நிதீஷ்குமார் வழிகாட்டுகிறார்கள்



பிகார் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் வந்தாலும் வந்தது; அதில் நல்லதோர் திருப்பம் ஏற்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. பீகார் அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த லாலுபிரசாத்தும், நிதிஷ்குமாரும் இந்தத் தேர்தலில் கூட்டணி வைத்துக் கொண்டார்கள்.
இந்தக் கூட்டணிக்கு மிகப் பெரிய வெற்றி கிட்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது ஆட்சிஅமைக்கும் பட்சத்தில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளமும், நிதிஷ்குமாரின் அய்க்கிய ஜனதா தளமும் இணைந்து கூட்டணி அரசு அமைக்கும்; கூட்டணி ஆட்சி அமைக்கும் பொழுது கருத்து மாறுபாடுகள் பொதுவாக ஏற்பட்டு இடையில் முறிவுகள் நடப்பதும் கண்கூடு.
இதனைத் தவிர்க்க இந்த இரு கட்சிகளையும் இணைத்து விடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளனர் என்ற செய்தி வரவேற்கத்தக்கது. அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்தது என்பது ஒருபுறம் இருக்கட்டும்; இரு கட்சிகளும் தூக்கிப் பிடிப்பது சமூக நீதிச் சுடரைத்தான் - மதச் சார்பின்மைப் பதாகையைத் தான்.
இந்த இரு குறிக்கோள்களும் இக்காலக் கட்டத்தில் மிகவும் முக்கியமானவை. பாரதிய ஜனதா அதிகாரத்தில் வந்துள்ள நிலையில், மதச் சார்பின்மைக்கும் சவால்  - சமூக நீதிக்கும் மரணக் குழி என்ற நிலைதான் நீக்கமற நிலவுகிறது. இந்த நிலையில் இந்த இரு கொள்கை களிலும் அழுத்தமான நிலைப்பாடு கொண்டவர்கள் ஒன்றிணைவது வரவேற்கத்தக்கதே! தலைவர்கள் மத்தியில் நிலவும் தன் முனைப்புதான் பெரும்பாலும் தனித்தனிக் கட்சிகளாக இயங்குவதற்கு முக்கிய காரணம் ஆகும். லாலு பிரசாத் இந்த வகையில் இந்தி யாவுக்கே வழிகாட்டி விட்டார் - கூட்டணி வெற்றி பெற் றால் நிதிஷ்குமார்தான் முதல் அமைச்சர் என்று லாலு கூறும் ஒப்பரியப் பெருந் தன்மை விரிந்த பொது நல நோக்கினை யாரிடம் எளிதில் எதிர்ப்பார்க்க முடியும்?
உரிமை மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் பிளவுபட்டுக் கிடக்கும் பொழுது ஆதிக்க ஜாதியினர்  அந்தப் பிளவைத் தங் களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். பல சந்தர்ப்பங்களில் இந்த வகையில் சூடுபட்டவர்கள் அனுபவங்களின் மூலமாகத் தெள்ளிதின் உணர்ந்து, பிளவைத் தூக்கி எறிந்து பிணைப்புக்குக் கைகோக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
ஒரு கட்டத்தில் சமூகநீதி அணி - சமூக நீதிக்கு எதிரான அணி என்று பிரிந்து அதில் சமூக நீதி அணி வி.பி. சிங் தலைமையில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததை இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.
அந்தச் சமூக நீதி அணி ஆட்சிக் கட்டிலில் அமர்ந் ததால் தான் பத்தாண்டுக் காலம் ஊறுகாய் ஜாடியில் போடப்பட்ட மண்டல் குழுப் பரிந்துரையில் ஒரு அம்ச மாகிய பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு என்பது செயல்படுத்தப்பட்டது.
கான்சிராம் அவர்கள் இந்திய அரசியலில் ஒரு முக்கிய முழக்கத்தை வைத்தார்; தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர்தாம் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள்; ஆட்சி அதிகாரம் என்பது இவர்கள் கையில் வர வேண்டியதுதான் உண் மையான ஜனநாயகம் என்ற குரலை முன்னெடுத்தார்.
அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் அதனைச் சாதித்துக் காட்டி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செல்வி மாயாவதியை முதல் அமைச்சர் ஆக்கினார்.
அந்த வடிவம் இந்தியா முழுமையும் பரவியிருந் தால் இந்தியாவின் அரசியல்  வேறு வகையாக இருந் திருக்கும்.
அதற்கான பாதையை வகுத்து நடை போட வேண் டிய செல்வி மாயாவதி அவர்களே தடம் மாறியதால் கன்ஷிராம் வகுத்துக் கொடுத்த அந்தத் தத்துவம் நொடித்துப் போய் விட்டது; என்ன கொடுமை என்றால் இந்தக் கொள்கைக்கு நேர் எதிரான இந்துத்துவா இப்பொழுது அதிகாரப் பீடத்தில் அமர்ந்து கீதையை தேசிய நூலாக அறிவிப்போம் என்று சொல்லுகிற அளவுக்கு நிலைமை மாற்றம் அடைந்து விட்டது.
இந்தக் குறுகிய ஒன்றரையாண்டு பிஜேபி ஆட்சி யில், இந்தியா முழுமையும் உள்ள சூத்திர பஞ்சம மற்றும் சிறுபான்மை மக்கள் மத்தியில் ஒரு புதிய எழுச்சியும், சித்தாந்தமும் தோன்றித் தீர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.  அது வேறு ஒன்றும் இல்லை. இந்துத்துவா என்பது உயர் ஜாதி பார்ப் பனர்களின் நலனைச் சார்ந்தது. இதனை வீழ்த்திட இரு பெரும் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வழிகாட்டி யுள்ளனர்.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகிய இரு தலைவர்களும் காட்டியுள்ள சித்தாந்த வழிதான் அது.
வருணாசிரமவாதிகளுக்கும் வருணாசிரமத்தை எதிர்ப்போருக்கும் இடையே ஏற்பட்டுள்ள அரசியல் போராட்டம் நம் கண் முன் தெளிவாகத் தெரிகிறது!
இந்த நிலையில் எதிரும் புதிருமான இருந்த லாலு பிரசாத்தும் நிதிஷ்குமாரும் இணைந்து ஒரே குரலால் பேசும் நிலை - இந்தியா முழுமையும், குறிப்பாக வட மாநிலங்களிலும் எதிரொலித்து அரசியல் வடிவம் பெற வேண்டும்.
உத்தரப்பிரதேசத்தின் பெரும் அரசியல் சக்தியாக விளங்கக் கூடியவரும், சமூக நீதியில் நம்பிக்கையுள்ள வருமான சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் அவர்களும் லாலுவோடும், நிதிஷ்குமாருடனும் கை கோப்பார்களேயானால் சரியானதோர் மாற்று அரசியல் சக்தி உருவாகிட அதிக வாய்ப்புண்டு:  கெட்ட வாய்ப்பாக பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் மிகப் பெரிய தலைவராக இருக்கக்கூடிய முலாயம்சிங் யாதவ் அவர்கள், பிகாரில் லாலு - நிதிஷ் கூட்டணி தோல்வி அடைய வேண்டும் என்று விரும்புகிறார்.
ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களிடையே இருந்து வரும் இந்தக் கோணல் புத்திதான் ஒடுக்கப்பட்ட மக்களின் இடுப்பை முறித்து எதிரிகளுக்கு அதிகார நாற்காலியை அமைத்துக் கொடுக்கிறது. பிகார் தேர்தல் முடிவு புதிய வெளிச் சத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.


மோடியின் காஷ்மீர் பயணம்: காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் 300க்கும் மேற்பட்டவர்கள் கைது



சிறீநகர், நவ.5_  பிரதமராக உள்ள மோடி  காஷ்மீர் மாநிலத்துக்கு செல்கிறார். இதனையொட்டி, கடந்த 5 நாள்களாக காஷ்மீர் மாநில காவல் துறையினர் ஏராளமானவர்களைக் கைது செய்தவண்ணம் உள்ளனர். 300_க்கும் மேற்பட்ட சமூக செயற் பாட்டாளர்கள், பல்வேறு அமைப் புகளின் தலைவர்கள் மற்றும் ஏற்கெ னவே பிரிவினை கோரி போராடிய வர்கள் என்று பலரையும் அம்மாநில அரசின் காவல்துறை கைது செய் துள்ளது.
அண்மையில் மாட்டிறைச்சித் தடையைக் கண்டித்து விருந்து நடத்திய பொறியாளரும், காஷ்மீர் சட்டமன்ற  சுயேச்சை உறுப்பினரு மாகிய ரஷீத் என்பவரும் கைது செய் யப்பட்டுள்ளார். மோடியின் வருகை யின்போது அவரை எதிர்த்து கருப்புக் கொடிப் போராட்டம் நடத்தப் போவதாக ரஷீத் அறிவித்திருந்தார். அவர் கூறும்போது, குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது ஏராளமானவர்களை கொன்று குவித்தார். தற்போது பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் நாடு முழுவதும் சகிப்புத்தன்மையற்ற சூழலை ஏற்படுத்திவிட்டார் என்று ரஷீத் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 5 நாள்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல்வேறு பகுதிகளி லிருந்து ஏற்கெனவே பிரிவினை கோரியவர்கள், பல்வேறு அமைப்பு களின் தலைவர்கள், சமூக செயற்பாட் டாளர்கள் என்று 300_க்கும் மேற் பட்டவர்களை காஷ்மீர் மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வடக்கு காஷ்மீர் தாங்கிவாச்சா பகுதியில் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர், பொறியாளர் ரஷீத் புதன் கிழமை மாலை கைதுசெய்யப்பட்டார். எந்த இடத்துக்கு கொண்டு செல்லப் பட்டார் என்று இதுவரை தெரிய வில்லை.
ஹுரியத் (ஜி) தலைவர் சையத் அலி ஜீலானி லட்சக்கணக்கிலானவர் கள் பங்கேற்கும் நடைப்பயணத்தை அறிவித்தார். அவர் தற்போது வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த நடைப்பயணத்துக்கு ஹுரியத் காங்கிரசு (எம்) தலைவர் மீர்வாயிஸ் உமர் ஃபாரூக் தம்முடைய அமைப்பின் சார்பில் ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும், 1947ஆம் ஆண்டில் காஷ் மீரில் ஏராளமானவர்கள் கொல்லப் பட்டதையடுத்து, அவர்களின் நினை வாக சிறீநகரின் பெரிய மசூதி, ஜாமியா மசூதியில் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக ஜீலானி மற்றும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் ஆகியோ ரையும் பேரணியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
மீர்வாயிஸ் உமர் ஃபாரூக் தற்போது காவல்துறையினரால் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டு இருப்பதாக காவல் துறையினர் அவருக்குத் தெரிவித்துள் ளனர். ஜிலானியின் பேரணி அறி விப்புக்குப்பிறகு, பிரிவினைவாதத் தலைவர்கள், ஏற்கெனவே பல்வேறு அமைப்புகளில் இணைந்து  பிரிவினை கோரி போராடியவர்கள் என பலரை யும் காவல்துறையினர் கைது செய் துள்ளனர்.
காஷ்மீர் மாநில அரசின் செயலை யொட்டி, பிரிவினைவாதத் தலை வர்கள் மற்றும் பல்வேறு அமைப்பு களின் தலைவர்களும் கூறும்போது, ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகம் மத் சையத் தம்முடைய ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக   ஆர். எஸ்.எஸ். அமைப்பின் செயல்திட்டங் களை  செயல்படுத்திவருவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேர்தலுக்கு முன்பாக காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கொள்கை மோதல்கள்குறித்து பிரிவினைவாதத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று முப்தி முகம்மத் சையத் வாக்குறுதியாகக் கூறியிருந் ததை நினைவுபடுத்துகின்றனர்.
காஷ்மீர் முதல்வர் முப்தி முகம்மத் சையத், கடந்த சில நாள்களாகவே மோடியைப் புகழ்ந்து வருகிறார். மேலும், மோடியின் காஷ்மீர் வருகை வரலாற்று ரீதியிலானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேசியகாங்கிரசு செயல் தலைவரும், காஷ்மீர் மாநில  மேனாள் முதல்வரு மாகிய உமர் அப்துல்லா கூறும்போது, முப்தி கூறுவது உண்மைதான். மோடி 7.11.2015 அன்று சிறீநகர் கூட்டத்தில் பங்கேற்கிறார்.  கூட்டம் நடத்தப்படுவ தற்காக ஏராளமானவர்கள் கைது செய்யப்படுவதன்மூலமாக, வரலாறு படைத்துள்ளார் என்றார்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

பெரியாரையும், லீ குவான் இயூ-வையும் படியுங்கள்! இளையர்களுக்கு சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் அறிவுரை


சிங்கப்பூரில் பெரியார் விழா பெரியாரையும், லீ குவான் இயூ-வையும் படியுங்கள்!
இளையர்களுக்கு சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் அறிவுரை தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்று சிறப்புரை

சிங்கப்பூர் நவ.5 சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் சிங்கப்பூரின் பொன்விழா-வையும்,  மன்றத்தின் 10 ஆம் ஆண்டு விழாவையும் கொண்டாடிடும் வகை யில் பெரியார் கண்ட வாழ்வியல் விழாவை நவம்பர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியது. விழாவில்  செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விக்ரம் நாயர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு உரையாற் றினார்.  பெரியாரை பற்றி கவிஞர் கவிமதி எழுதிய சிறப்பானதொரு கவிதையை வாசித்து விழாவை தொடங் கினார் நெறியாளர் திருமதி. இலக்கியா செல்வராஜி.
தலைமையுரை
வரவேற்று தலைமை யுரை ஆற்றிய மன்றத்தின் தலைவர் வீ.கலைச்செல் வம் அவரது தலைமையு ரையில் தமிழர்களின் மானம் காத்த தந்தை, அவரின்றி தமிழரினம் தலை நிமிர்ந்திருக்க முடி யாது. அதனால் அவர் பெயரில் ஒரு மன்றம் பதிவு செய்து மனிதநேய சிந் தனைகளை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று பதிவு செய்து பத்தாண்டு களாக நடத்தி வருகி றோம். மன்றத்தின் முக்கிய செயல்பாடுகளாக மாண வர்களுக்கு தமிழ்மொழி போட்டிகள் நடத்தி வருவதையும், தமிழுக்காக உழைத்தவர்களை பாராட்டி பெரியார் விருது வழங்கியும், பெரியா ரின் கொள்கையுடன் அந்த காலத்திலிருந்து வாழ்ந்து தொண்டு செய் தவர்களை பாராட்டி பெரியார் பெருந்தொண் டர் விருது வழங்கி கவு ரவப்படுத்தி வருகிறோம் என்று கூறினார். 
மேலும் நிறைவாக திரு.விக்ரம் நாயர் அவர்களிடம் இந் திய மரபுடைமை நிலை யத்தில் இந்த நாட்டுக்காக பாடுபட்ட தமிழவேள் கோ.சா மற்றும் அவருக்கு அடித்தளமாக இருந்து  தமிழர்களுக்கு ஊக்கம் தந்த பெரியாரின் சிலையை அங்கு வைக்க வேண்டும் என்ற  கோரிக்கையுடன் உரையை நிறைவுசெய்தார்.
சிறப்பு விருந்தினர் உரை
சிறப்பு விருந்தினர்  திரு. விக்ரம் நாயர் தன் னுடைய உரையில் திரு.லீ மற்றும் பெரியார் அவர் களுடைய சிந்தனைகளில் நிறைய ஒற்றுமைகள் (similarity) உண்டு. இந்த பெரியார் கண்ட வாழ்வி யலுக்கு சிங்கப்பூரையே எடுத்துகாட்டாக கூற லாம்..
சிங்கப்பூர் ஆங்கி லேயரிடமிருந்து விடு தலை பெரும் போது Mr. லீ-யுடைய எண்ணம் நம் முடைய சொந்த மக்கள் எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும். கல்வியும் படிப்பும் கிடைக் கும் போது அதன் தாய் மொழிகளும் முக்கியமாக இருக்க வேண்டும். இத னால்தான் சீனம், மலாய், தமிழ் எல்லாம் தாய் மொழிகளாக சிங்கப்பூரில் இருந்து வருகின்றன.  தொடர்ந்து இருந்து வரும். என்று கூறி யாரா வது கஷ்டமான சூழ் நிலையில் இருக்கும் போது அரசாங்கம்  உதவி கொடுக்கக் கூடிய சூழ் நிலையில் இருக்க வேண் டும். நிதி பிரச்சினைகளால் இதனை எல்லா அரசாங் கங்களும் செய்யமுடியாது. 
ஆனால் சிங்கப்பூர் அர சாங்கம் பிரச்சினை உள் ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத் தில் செயல்பட்டு வரு கிறது.  இனிவரும் அடுத்த 50 ஆண்டுகளும் முதல் 50 ஆண்டுகள் போல் இருக்க போதிறதோ என்று யாரும் சொல்ல முடியாது.  இங்கே உள்ள பலர் கடந்த 50 ஆண்டுகளில் இருந்தீர்கள் என்று நம் புகிறேன்.  உங்களுடைய உழைப்பினால் தான் சிங் கப்பூர் நல்ல சூழ்நிலையில் இருக்கிறது. இனி அடுத்த 50 ஆண்டுகளுக்கும் சிங் கப்பூர் இப்படி சிறப்பாக  செயல்பட வேண்டுமென் றால் அது இன்று இருக்கிற இளையர்களின் கையில் இருக்க போகிறது. அப்போது நீங்கள் பெரியாரும் திரு.லீயும் கற்றுக்கொடுத்த பாடங் களை படித்தும் அடுத்த 50 ஆண்டுகளில் எப்படி பயன்படுத்தலாம்  என்று நீங்கள் தான் வழி காட்டவேண்டும். அதற்கு இந்த விழாவும் ஒரு பயன் உள்ள session  ஆக இருக் கும் என்று அனைவருக் கும் நன்றி கூறி முடித்தார்.
"பெரியார் விருது"
"பெரியார் விருது" பெற்ற சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் திரு.ஜே. எம்.சாலி அவர்கள் தன் னுடைய ஏற்புரையில் என்னுடைய அறுபது ஆண்டு மொழி இலக்கிய பணிக்கு கிடைத்த அங்கீ காரம் என்று பெருமை பாராட்டுகிறேன் என்றார். மேலும் நான் சிங்கப் பூருக்கு வந்து 51 ஆண்டுகள் ஆகிறது. தாய்நாடு என் பிறந்த நாடு என்றால் சிங்கப்பூர் என் தந்தை நாடு என்றும் தமிழ்முரசு வில் என்னை பணிக்கு அமர்த்தி வளர்த்து ஆளாக்கிய தமிழவேள் கோ.சாரங்கபாணியும், நவீன சிங்கப்பூரின் தந்தை திரு.லீ குவான் இயூவை யும் என்னுடைய  தந்தை களாக போற்றுகிறேன் என்றார்.
1957-ல் நான் மாணவ ராக கும்பகோணம் கல் லூரியில் B.A படிக்கும் போது பெரியார் அவர்கள்  கல்லூரிக்கு வந்து பேசியதைக் கேட்டிருக்கிறேன். ஆனந்த விகடன், தமிழ் முரசுவில் பணிபுரியும் போது பெரியாரை பற்றி நிறைய எழுதி இருக்கிறோம். குறிப்பாக சென்னை கடிதம் என்ற தலைப்பில் தமிழ்முரசு-வில் தொடர்ச்சியாக எழுதும் போது கோ.சா அவர்கள் பெரியாரை பற்றி எதாவது ஒரு செய்தி அதில் இடம் பெறச் செய்வார்.  பெரியார் ஸிமீஸ்ஷீறீ , குடியரசு, விடுதலை, உண்மை போன்ற பல பத்திரிக்கைகள் நடத்தியுள்ளார் அதனால் அவரை பத்திரிக்கை உலக ஆசானாகவும் பார்க்கிறேன். தமிழவேள் கோ.சா-வை பற்றியும், திரு.லீ குவான் இயூவை பற்றியும் நூல்கள் எழுதிவிட்டேன். 
தற்போது பெரியாரை பற்றி நூல் எழுதி வெளி யிட வேண்டும் என்பது என்னுடைய பேராவா. அது என்னுடைய தார்மீக கடமையாக கருதுகிறேன். அதற்கான பல செய்திகளை திரட்டி வீட்டில் வைத்துள்ளேன். இன்னும் சில மாதங்களில் பெரியாரை பற்றி நூலை வெளியிடுவேன் என்று கூறி விருது கொடுத்த பெரியார் சமூக சேவை மன்றத்திற்கு நன்றி கூறி இந்த விருது சிங்கப்பூரின் பொன்விழாவுக்கு சிறப்பு சேர்க்கும் விருது என்று கூறி ஏற்புரையை நிறைவு செய்தார்.
பெரியார் பெருந்தொண்டர் விருது
பெரியார் பெருந்தொண்டர் விருது பெற்ற திரு. க.ஆ.நாகராசன் பேசும் போது முதன் முதலில் நான் கலைஞர் அவர்களின் பேச்சை கேட்டேன் அந்த பேச்சு பெரியாரின் சுயமரியாதைக் கருத்தை ஆணிவேராக என் மனதில் பதியவைத்து விட்டது.  அன்று முதல் இன்று வரை அதே கொள்கை அள வில் தான் நான் பின்பற்றி வருகிறேன். பெரியார் பெருந்தொண்டன் சிங்கப்பூர் திராவிடர் கழகத்தினு டைய பெருந்தலைவர் காலஞ்சென்ற தமிழ் தாத்தா ச.சா.சின்னப்பனாருக்கு இந்த விருதை நான் சமர்ப் பித்து நன்றி செலுத்த கடமைப் பட்டுள்ளேன். ஏனென்றால் இந்த சாதாரண தொழிலாளியை இந்த இயக்கம் பாராட்டு கிறது என்றால் அதற்கு அடிப்படை காரணம் ஒராண்டுகளுக்கு மேலாக சுயமரியாதைக் கொள்கைகளையும், தத்துவங்களையும் எங்களுக்கு பயிற்சி யாக அளித்த என்னுடைய சொல் ஆசான் ச.சா.சின்னப்பனார் அவர்கள் தான் என்றார்.
தமிழ்மொழிப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.விக்ரம் நாயர்.
1950களில் சிங்கப்பூர் திராவிடர் கழகத்தில் உறுப்பினராக, செயலாளராக இருந்ததையும், அதன்பின்பு மக்கள் செயல் கட்சியில் சேர்ந்து சமூக பணியாற்றியதையும் குறிப்பிட்டார். தமிழ் சமுதாயம் இன்று வீறுபெற்று நிற்கிறது என்றால் அதற்கு காரணம் தந்தைபெரியார்தான் என்றார். அவரின் வருகையினாலும், அவர் கொள்கைகளை தமிழவேள் கோ.சா-லிடன் சேர்ந்து நாங்களும் முன்னெடுத்து சென்றதனால்-தான் இங்கு சிங்கப்பூரில் சாதிக் கொடுமை இல்லாமல் மாற்றம் பெற்றுள்ளது என்ற செய்தியை கூறி விருது கொடுத்த பெரியார் சமூக சேவை மன்றத்துக்கு நன்றி கூறினார். பெரியார் பெருந்தொண்டர் விருது பெற்ற கலைச்செம்மல் திரு.ச.வரதன் அவர்கள் தன்னுடைய ஏற்புரையில் பேசும் போது பதின்ம வயதில் அய்யாவின் (பெரியார்) தத்துவங்கள் என் இதயத்தில் பதிந்தது. 
அது பசு மரத்தில் அடித்த ஆணி போன்று இன்று வரையும் அப்படியே இருக் கின்றது. அதிலே நடைபோட்டு கொண்டு இருக்கிறேன். பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, நடிகவேள் எம்.ஆர்.ராதா இவர்கள் அய்யாவின் தத்துவங்களை நாடக மேடையின் வழியாக பரப்பிக்கொண்டு இருந்தார்கள். அதே அடிப்படையில் நான் 1955ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பகுத்தறிவு நாடக மன்றம் என்று தோற்றுவித்து. அதில் பகுத்தறிவு கொள்கை உள்ள நாடகங்களை நடத்தி வந்தேன். அந்த காலகட்டத்தில் பகுத்தறிவு என்று சொன்னாலே பலர் விழித்து பார்க் கின்ற காலம்.
பகுத்தறிவு நாடக மன்றமா? என்று கேட்பார்கள். அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து    Rational Dramatic Society என்று கூறும் போது. மற்ற இனத்தவர்கள்Is this rational or National?
என்று கேட் பார்கள். நாங்கள் Rational என்று சொல்லி நாடகங்களை நடத்தி வந்திருக்கின் றோம். பல்லாண்டு நாடகம் நடத்திய ஒரு சேவைக்காக நமது அரசாங்கம் 1984 ஆம் ஆண்டு எனக்கு கலாச்சார விருது அளித்து சிறப்பித்தது. அது என்னுடைய நாடகத் தொண்டுக்கு கிடைத்த பரிசு. அன்று மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இன்று எழுபது ஆண்டு காலமாக என் இதயத்தில் ஒட்டி கொண்டிருக்கின்ற அய்யாவின் தத்து வத்திற்கு அதன் பாதையில் நடந்து செல்வதற்கு இன்று எனக்கு "பெரியார் பெருந்தொண்டர் விருது" அளித்துள்ளார் கள் என்று கூறி நன்றி சொன்னார்.
சிறப்புரை
சிறப்புரையாற்றிய தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பெரியார் சமூக சேவை மன்றத்தின் 10 ஆம் ஆண்டு விழாவையும், சிங்கப்பூ ரின் பொன்விழாவும் சிறப்பாக நடைபெறுவதை குறிப்பிட்டு மகிழ்ச்சி தெரிவித்து  நவீன சிங்கப்பூருக்கு அடித்தளமிட்ட திரு லீ குவான் இயூ அவர்களை போற்றி பாராட்டி தன் உரையை தொடங்கினார். மன்றத்தின் 10 ஆண்டு விழாவை குறிப்பிடும் போது, அதற்கு முன்பு இருந்த சிங்கப்பூர் முன்னோடிகள் பெரியார் தொண்டர்கள் உ.இராமசாமி (நாடார்), அ.சி.சுப்பையா, தமிழவேள் கோ.சாரங்கபாணி, நடராசன், சு.தெ. மூர்த்தி, முருகு.சீனிவாசன், தி.நாகரெத்தினம் ஆகியோர் களின் உழைப்பினால் தொண்டினால் பெரியார் பெயரில் இங்கு மன்றம் உருவாக காரணமாக இருந்துள்ளது. அவர்கள்தான் தந்தை பெரியாரை சிங்கப்பூரில் வரவேற்று பிரச்சாரம் செய்ய காரணமாக இருந்தவர்கள். அதன் பின்பு ஏற்பட்ட மாற்றங்கள் தான் தமிழர்களை சிங்கப்பூரில் நல்ல நிலைக்கு முன்னேற வழிவகுத்தது என்று கூறினார். 
அதனை சுருக்கமாக விளக்கிடும் வகையில் பெரியாரின் 1929 வருகையும் அப்போது தொழிலாளி களாக, சாதிக் கொடுமைகளுடன், மூடப்பழக்கங்களுடன் வாழ்ந்த தமிழர்களின் நிலையை மாற்றிட தொடங்கப்பட்ட தமிழர் சீர்த்திருத்த சங்கம் வரலாற்றையும் குறிப்பிட்டார். பெரியாரின் வருகைக்கு பின் தொடங் கப்பட்ட தமிழ் பள்ளிகளையும் பெரியார் பெயரிலே இயங்கிய பள்ளிகளையும் எடுத்துக்காட்டினார். மீண்டும் 1954-இல் பெரியார் சிங்கப்பூர் வரும்போது அவர் தமிழர்களிடம் கண்ட மாற்றத்தையும் முன்னேற்றத் தையும் கூறினார். குடியரசு இதழின் மூலம் ஏற்பட்ட சீர்திருத்தமும் அதன் விளைவாக பெரியாரின் சுயமரியாதைத் திருமணம் முதன் முதலில் சிங்கப்பூரில் 1928-ல் நடைபெற்றதையும் ஆதாரத் துடன் படித்து காட்டினார்.
"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்ற பழமொழியை கூற காரணமே தமிழர்கள் அடிமைகளாக முதுகெலும்பு இல்லாதவராக முன்பு வாழக்கூடிய நிலையிருந்த காரணத் தால் தான் அப்படி ஒரு பழமொழியே உருவாகிற்று என்ற விளக்கம் வந்தி ருந்தவர்களை புதிய கோணத்தில் சிந் திக்க வைத்தது. அந்த காலகட்டத்தில் தான் பெரியார் தமிழர்களுக்கு முது கெலும்புடன் தலை நிமிர துணிச்சலை ஊட்டியவர், தன்மானத்தை போற் றியவர் என்று கூறினார். இறந்தபின்பு கொடுக்கும் உறுப்பு கொடையை விட  உயிருடன் இருக்கும் போதே தந்தை பெரியார் கொடுத்த முதுகெலும்பு என்ற உறுப்பு கொடை தமிழர்கள் தலை நிமிர்ந்து நடக்க காரணமாக அமைந்தது என்ற கருத்தை இக்காலத் திற்கு ஏற்ற நடையில் கூறியது சிறப்பு.  
பெரியார் என்பவர் தனிமனிதர் அல்ல அவர் ஒரு நிறுவனம், அவர் ஒரு மாமருந்து அவை உலகத்துக்கே பொருந்தும் எங்கெல்லாம் மனிதர் களுக்கு சுயமரியாதை இழுக்கு வரு கிறதோ அப்போது எல்லாம் பெரியார் என்ற மாமருந்து தேவைப்படும் என்று கூறி பெரியார் உலகுக்கே உரியார் என்று அனைவருக்கும் புரியும் வண் ணம் ரசிக்கும்படி சுமார் 50 நிமி டங்கள் பல செய்திகளுடன் உரை யாற்றினார்.  இறுதியாக பெரியார் சமூக சேவை மன்றத்தின் உறுப்பினர் ச.மனோகர் அவர்களின் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது. அவசர அலுவல் காரணமாக இரா.தினகரன் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இயலவில்லை.
மன்றத்தின் துணைத் தலைவர் சு.தெ.மதியரசன், பொருளாளர் ந.மாறன், மலையரசி, இளையமதி, சவுந்தர் ராஜ், இராஜராஜன், கவிதாமாறன், குந்தவி, வானதி, வளவன், கவுதமன்,  மற்ற உறுப்பினர்களின் உதவியுடன் செயலாளர் க.பூபாலன் விழாவை ஒருங்கிணைத்தார்.
முன்னதாக மன்றத்தின் உறுப்பினர்கள் தமிழ் செல்வியும், பழனியும் பெரியார் விருது பெற்ற ஜே.எம் சாலி பற்றிய குறிப்புகளையும், பெரியார் பெருந் தொண்டர் விருதுபெற்ற.ச.வரதன், க.ஆ.நாகராசன் பற்றிய குறிப்புகளையும் சிறப்பாக வரிசைப்படுத்தி வாசித்தார்கள்.
------------------

எங்கள் பெரியார்
மூடிமறைத்து பேச அறியார்
மூட பழக்கம் எதுவும் தெரியார்
நூலார் திமிர் அறுத்த வாளார்
நூற்றாண்டு கடந்து வாழும் வரலாறார்
நரியார் தோலுரித்த புலியார்
நால்வகை வர்ணம் கலைத்த கரியார்
எளிதாய் கடந்து செல்லும் வழியார்
ஏதிலியார்க்கு வெளிச்சம் தந்த விழியார்
தெளியார் அறிவு நெய்த தறியார்
தெளிந்தோருக்கு தெளிவான குறியார்
உலக தமிழருக்கு உரியார்
உணர்ந்தால் விளங்கும் மொழியார்
மனு வேதம் கொளுத்திய திரியார்
மாதருக்கு தெளிவான ஒலியார்
தேடி படிக்க சிறந்த நெறியார் - தூய
தாடி முளைத்த தந்தை பெரியார்.
- விழாவின் தொடக்கத்தில் கவிமதி எழுதிய கவிதையை நிகழ்ச்சி நெறியாளர் இலக்கியா செல்வராஜ் வாசித்தார்.
------------------
சிறப்பு அம்சங்கள்
  • நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விக்ரம்நாயர் அவர்கள் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற தமிழ் மொழிப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர் களுக்கு  பரிசளித்து பாராட்டினார்.
  • வரலாற்று செய்தி கள் கொண்ட விழா மலர் "பெரியார் பணி 2015"-யை திரு. விக்ரம்நாயர் வெளியிட்டார். வந்திருந்த அனை வரும் நன்கொடை அளித்து விழா மலரை பெற்று சென்றார்கள்.
  • பெரியார் களஞ்சியம் திருக்குறள் வள்ளுவர் நூலை சிங்கப்பூர் சிம் பல்கலைகழக பேராசிரியர் முனைவர் சுப.திண்ணப்பன் அவர்கள் வெளியிட்டார்கள்.
  • பெரியார் விருது, மற்றும் பெரியார் பெருந்தொண்டர் விருது பெற்றவர்களுக்கு குஞ்சம்மாள்  முருகு. சீனிவாசன் குடும்பத்தின் சார்பாக அன்பளிப்பினை அவர்களின் மகன் திரு.மலையமாறன், மகள்கள் திருமதி குறிஞ்சிச்செல்வி, திருமதி, மலையரசி வழங்கினார்கள்.
  • பெரியாரின் வரலாற்று புகைப்படங்களை கண் காட்சியாக வைத்திருந்ததை நிகழ்ச்சி தொடங்கும் முன்பு வந்திருந்தவர்கள் பார்த்தார்கள். விழா தொடங்கியவுடன் மாணவிகள் இனியநிலா-பவதாரணி இணைந்து  தமிழ் வாழ்த்து பாடலை சிறப்பாக பாடினார்கள்.
  • பெரியாரை பற்றியும், பெரியார் சமூக சேவை மன்றத்தின் பணிகளை பற்றியும் விழா தொடங்கும் முன்பு 10 நிமிட Presentation Slide video    காண் பிக்கப்பட்டது.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திரு.ஜெ.எம்.சாலி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.  சிறப்பு விருந்தினர்  திரு.விக்ரம் நாயர் பெரியார் விருது வழங்குகிறார்.
திரு.விக்ரம் நாயர் அவர்கள் க.ஆ.நாகராசனுக்கும், ச.வரதனுக்கும் பொன்னாடை அணிவித்தார். ஆசிரியர் கி.வீரமணி பெரியார் பெருந்தொண்டர் விருதை இருவருக்கும் வழங்குகிறார்.
பெரியார் பணி 2015  விழா மலரை நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் வெளியிட தமிழர் தலைவர் ஆசிரியர், தொழிலதிபர் ஜோதி மாணிக்கவாசகம் மாதவி இலக்கிய மன்றத்தின் தலைவர் என்.ஆர்.கோவிந்தன்  ஆகியோர் பெற்றுக் கொள்கிறார்கள்.
பெரியார் களஞ்சியம் திருக்குறள் - வள்ளுவர் நூலை பேராசிரியர் முனைவர்.சுப.திண்ணப்பன் வெளியிட விரிவுரையாளர் ரெத்தினக்குமார், தேசிய நூலக வாரிய அதிகாரி புஷ்பலதா, தமிழ்மொழி பண்பாட்டு கழகத்தின் தலைவர் ஹரிகிருஷ்ணன் பெற்றுக்கொள்கிறார்கள்.
- செய்தி: க.பூபாலன், சிங்கப்பூர்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

62 சதவிகித மக்கள் மோடி அரசின்மீது கடும் அதிருப்தி! அமெரிக்காவின் வாசிங்டன் போஸ்ட் ஏடு படப்பிடிப்பு



லாரிகளை மடக்கிக் காவல்துறை கைது செய்கிறது
62 சதவிகித மக்கள் மோடி அரசின்மீது கடும் அதிருப்தி!
அமெரிக்காவின் வாசிங்டன் போஸ்ட் ஏடு படப்பிடிப்பு
யாதவ்நகர், நவ.4_ 62 சதவிகித மக்கள் மோடி அரசின்மீது அதிருப்தி கொண்டுள்ளனர் என்று அமெரிக்காவின் வாசிங்டன் போஸ்ட் ஏடு கூறுகிறது.
இந்தியாவில் மாட்டுக்கறி உண்போரிடமிருந்து பசு மாடுகளைக் காப்பதற்காக தனியே இந்து கால்நடைப் பாதுகாப்புப் படையினர் செயல்பட்டு வருவதாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
வணிக நோக்கில் மாடுகளை லாரிகளில் கொண்டு செல்பவர்களை மாட்டுக் கடத்தல்காரர்கள் என்று கூறி, அவர்கள் செல்லும் வழிகளில் இந்த பசுப் படையினர் காத்திருக்கிறார்கள்.
மத ரீதியிலாக சிலைகளைச் செய்துவருபவரான  ராஜேந்திர பிரசாத் (வயது35) கூறுகையில், நான் ஒரு இந்து. பசுக்களைப் பாதுகாப்பது என்னுடைய கடமை யாகும். நான் எவர் ஒருவரையும் பசுக்களை கடத்திச் செல்வதற்கு அனுமதிக்க மாட்டேன் என்கிறார். 80 சதவிகித இந்துக்கள்
விவசாய வேலையில் உள்ளவர் என்று கூறும் விஜேந்திர பிரசாத் (வயது 22) கூறுகையில், ஒன்று நாங்கள் சாகவேண்டும். அல்லது அவர்கள் சாக வேண்டும். ஆனால், நாங்கள் ஒருவரையும் மாட்டுக் கறியைச் சாப்பிட விட மாட்டோம் என்கிறார்.
இந்தியாவில் 120கோடி மக்கள் தொகையில் சற்றே றக்குறைய 80 விழுக்காட்டளவில் இந்துக்கள் உள் ளனர். இந்துக்கள் பலரும் பசுவைப் புனிதமாக நம்பு வதால், மாட்டுக்கறியை சாப்பிடுவதில்லை என்கிறார் கள். மாட்டுக்கறியை சாப்பிடுவதையும், இறைச்சிக்காக பசுக்களை வெட்டுவதற்கும் பல மாநிலங்கள் தடை செய்துள்ளன.
நாட்டின் அரசியலில் பிரச்சினைக்குரியதாகவே எப்போதும் இப்பிரச்சினையைக் கொண்டுள்ளனர்.
ஆனால், கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒருவர் மாட்டுக்கறியை சாப்பிட்டதாக சந்தேகப்பட்டு ஒரு கும்பல் கொன்று போட்டது. இவ்விவகாரம் நாடு முழுவதும் பெருமளவிலான விவாதங்களை ஏற்படுத்தியது. மாட்டுக்கறி தொடர்பான பிரச் சினைகள் கட்டுப்பாடின்றி அதிகரித்துள்ளன. இந்தி யாவில் உள்ள சமூக அமைப்புகளின் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் சகிப்புத்தன்மையை வலியுறுத்தி வருகின்றனர். பசு பாதுகாப்பு படைக்குழுவின் 12 பேரில் பிரசாத் மற்றும் சிங் ஆகிய இருவரும் உள்ளனர். மாட்டி றைச்சி குறித்த கண்காணிப்புக்கான குழுக்கள் நாடுமுழுவதும் இயங்கிவருகின்றன.
அத்துமீறக்கூடிய அமைப்பாக இந்து படைப்பிரிவு  கடத்தல்காரர்களுக்காக தெருக்களில் இரவு நேரங் களிலும், பகல் நேரங்களில் வயதான பசுக்களை பரா மரிக்கும் பணிகளில் பசுக்கள் காப்பகங்களில் பணியாற்றி வருகிறார்கள். மதசார்பற்ற இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் பசுவைப் பாதுகாக்க வழிகாட்டுகிறது. மாநிலங்கள் பசுக்களைக் கொல்வதில் தடைகளை மீறுபவர்களுக்கு
தண்டனைகளை நடைமுறைப்படுத்து கின்றன. அரசுகள் செயல்படாத நிலை யில் இந்து அமைப்பினர் தாமாகவே சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள் கின்றனர்.
சத்ய பால் ஆச்சார்யா எனும் பள்ளி ஆசிரியர் கூறும்போது, எங் களின் கடவுள்கள், பெண் கடவுள்கள் பசுவின் உடலில் குடியிருக்கிறார்கள். எங்கள் பசுக்கள் எவ்வளவு காலத் துக்கு ஆரோக்கியமாக இருக்கின் றனவோ அதுவரை எங்கள் நாகரிகம் செழிப்பாக இருக்கும். சட்டங்களை நடைமுறைப்படுத்த சில நேரங்களில் அரசின் கரங்களைப் பலப்படுத்த வேண்டி இருக்கிறது.
அண்மையில் வன்முறைகள் கடந்த செப்டம்பரில் வெடிக்கத் தொடங்கின. டில்லி அருகே மாட்டிறைச்சியைச் சாப்பிட்டார் என்கிற சந்தேகத்தின் பேரில், ஒரு கும்பலால் 50 வயதான முசுலிம் முதியவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்து இழுத்துசென்று வீட்டுக்கு வெளியே தள்ளி, அவர் சாகும்வரை செங்கற் கலால் அடித்தே கொல்லப்பட்டார். அம்முதியவர் வீட்டில் குளிர் சாத னப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த இறைச்சியை காவல்துறையினர் ஆய்வுக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி னார்கள். ஆய்வு முடிவில் வெள ளாட்டிறைச்சி என்று தெரிய வந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பாக மேலும் ஒரு வன்முறைக்கும்பல் பசுக்களைக் கொண்டு செல்பவராகக் கருதி மலைகள் நிறைந்த மாநில மாகிய இமாச்சலப்பிரதேசத்தில் ஒரு லாரி ஓட்டுநரை  சரமாரியாகத் தாக்கி உள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் பசு வைக்கொன்றார் என்கிற புரளியைக் கொண்டு முசுலிம் இளைஞரை ஒரு கும்பல் எரித்து விட்டது.
மாட்டுக்கறி பிரச்சினையில் தம் எதிர்ப்பைக் காட்டிட, முசுலிம் சட்ட மன்ற உறுப்பினர் மாட்டுக்கறி விருந்து நடத்தினார் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத் துக்கு உள்ளேயே சரமாரியாகத் தாக்கினார். அதற்கான படப்பதிவுகள் உள்ளன.
62 சதவிகிதத்தினரின் கருத்து
அண்மையில் வெளியான அவுட் லுக் இதழ் நடத்திய வாக்கெடுப்பில் 62 விழுக்காட்டினர் கூறும்போது, மாட்டுக்கறி தொடர்பான கொலை கள்மூலம் மோடியின் உருவத்தையும், பாஜகவையும் தோலுரித்துக் காட்டி விட்டார்கள்என்று குறிப்பிட்டுள் ளார்கள். இந்தியா டுடே இதழின் தலை யங்கத்தில், குறுகிய மனப்பான்மை யுடன் உள்ள அரசியலாக பசு திட் டம் மற்றும் வகுப்பு வாத எச்சரிக் கைகளும் மோடி கூறுகின்ற வளர்ச் சித் திட்டங்களுக்கான செயல்களில் தடைகளாக உள்ளன என்று குறிப் பிட்டுள்ளது. மேலும், அத்தலையங் கத்தில், கடந்த ஆண்டு மோடியிடம் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்ததற்கு பொருளாதார வளர்ச்சி என்று கூறியதன்றி, இந்து மதத்தில் காலாவதி யாகிவிட்ட பழக்க வழக்கங்களை மீண்டும் திருப்பிக் கொண்டுவருவதற் காக அல்ல என்று குறிப்பிட்டுள்ளது.
காவல்துறையின் ஒத்துழைப்பு
பசுப் பாதுகாப்புக் குழுவினர் கூறுகையில், இந்தியா முழுவதும் பாஜக அரசு எங்களுக்கு தெம்பூட்டுவதாக இருக் கிறது என்கின்றனர். விசுவ இந்து பரிஷத் பன்னாட்டுக் குழுவைச் சேர்ந்தவரும், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராம்கர் நகரில் பசுப் பாதுகாப்புக் குழுவின் தலை வராக உள்ள நவால் கிஷோர் ஷர்மா கூறுகையில், எப்போதெல்லாம் பாஜக ஆட்சி இருக்கிறதோ, அப்போதெல் லாம் எங்களுக்கு சாதகமாக இருக் கிறது. நாங்கள் காவல்துறையினரிடம் பசு மாடுகள் கடத்தப்படுவது குறித்து  புகார் கொடுத்தால், எங்கள் புகாரை மிகவும் கவனமாகக் கேட்பார்கள் என்றார்.
ஷர்மா தலைமையிலான குழு ரகசிய உளவாளிகளைக் கொண்டு பரந்த வலையமைப்பாக செயல்பட்டு வருகிறது. மாணவர்கள், கடைக்காரர் கள் உள்ளிட்டவர்கள் நெடுஞ் சாலைகளில் போக்குவரத்தைக் கண் காணித்து தகவல்களைத் தெரிவிப் பார்கள். சில கடத்தல்காரர்கள் சட்ட விரோத துப்பாக்கிகளுடன் இருப் பார்கள். பேருந்துகள், லாரிகள், ஆம்புலன்ஸ்களிலும்கூட பசுக்களை கடத்திச் செல்வார்கள். ஷர்மா கூறுகையில், எங்கள் பணி மிகவும் கடினமானதாகும் என்றார். மத பேதங்களை ஏற்படுத்திவிட்டதாக 19 வழக்குகள் ஷர்மாமீது உள்ளன. மேலும், பசுக்கடத்தல் வழக்கில் சாட் சியாக மற்ற 10 வழக்குகள் உள்ளன.
நள்ளிரவில் நெடுஞ்சாலையிலும், கிராம சாலைகளிலும் ஒன்று கூடு வார்கள். ஆணிகள், பெரிய தடிகளு டன் லாரிகளை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். லாரி வரும்போது முதல் வேலையாக டயர்களை ஆணி களைக்கொண்டு பதம் பார்ப்பார்கள். இப்படி அவர்கள் திரண்டிருப்பதைக் காணும் லாரி ஓட்டுநர்கள் அதிரடி யாகத் தங்கள் வழியை மாற்றிச் செல்லும்போது, காவல்துறையின ருக்குத் தெரிவிக்கப்படும். ஒரு மணி நேரத்துக்கும் மேலான துரத்தல் களுக்குப்பின்னர் கடைசியில் காவல் துறையினர் அந்த லாரிகளைப் பிடிப்பார்கள். காவல்துறையினர் லாரியில் இருந்த இரண்டு பேரையும் கைது செய்து, லாரியைப் பறிமுதல் செய்வதுடன், மாடுகளை காப்பகத்துக்கு அனுப்பி விடுவார்கள். இதுபோல் உள்ளூர் காவல்நிலையத்தில் மட்டும் 6 வழக் குகள் பதிவாகி உள்ளன.
தொலைபேசி வாயிலாக இறைச்சிக் கூட மேலாளரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, அரியானா அருகாமை மாநிலங்களில் மாட்டுக் கறியை விற்பதை மறுத்தார்கள். இதெல்லாம் முசுலிம்களுக்கு எதிராக செய்யப்படுகின்ற பிரச்சாரங்கள் என்றார். பிரச்சினை அதிகமாக இருந்துவருவதால் அவர் தன் பெயரை வெளியிடவேண்டாம் என்று கூறி விட்டார்.
ஏழைகளுக்கான உணவு மாட்டுக்கறியே!
கிராமத்தில் உள்ள மற்றவர்கள் கூறுகையில் ஏழைகளுக்கான உணவு மாட்டுக்கறிதான் என்கிறார்கள்.
அரியானாவில் சமூகநலக்குழுவை நடத்திவருபவரான யூனூஸ் ஆல்வி என்பவர் கூறும்போது, ஏழை முசுலீம் குடும்பத்தினர் மாட்டுக்கறியைத்தான் சாப்பிட முடியும். காரணம் கோழி, ஆட்டுக்கறி அதிக விலை என்பதால் தான். ஆனால், நீண்ட காலத்துக் குப்பிறகு இப்போது முசுலீம் மதத் தலைவர்கள் மாட்டுக்கறியை சாப்பிட வேண்டாம் என்கிறார்கள். இந்துக் களின் மத உணர்வுகளை இசுலாம் பெயரில் புண்படுத்தவேண்டாம் என்கின்றனர். மேலும், பசுக்களை இறைச்சிக்காக கொல்வது என்பது சட்ட விரோதமாக அறிவிக்கப்பட் டுள்ளது என்றார்.
பிரசாத், சிங் மற்றும் பிற பசுப் பாதுகாப்பு படையினர் இரவு முழுவதும் காத்திருக்கின்றனர். எந்த லாரியும் மாடுகளை ஏற்றி வரவில்லை. விடியும்போது, உளவு சொல்பவர் கூறும்போது,  படையினரைக்கண்டு கொண்ட கடத்தல்காரர்களும் இரவு முழுவதும்  அந்தப்பகுதிக்கு வரவே இல்லை என்று கூறினார். ஆனாலும் அதுவும் வெற்றிதான். தொலைக்காட்சி கடை உரிமையா ளரும், படையைச் சேர்ந்தவருமான  பாபுலால் பிரஜாபதி கூறுகையில், ஒரேயொரு மாட்டை கொண்டு செல்வது என்றாலும் அவர்கள் உயிரைப்பணயம் வைத்தே செல்ல வேண்டும்.  இதன்மூலம் நாங்கள் எவ் வளவு வலிவுடன் இன்றைக்கு இருக் கிறோம் என்பதை உணர்த்தும் என்றார்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...