Wednesday, July 1, 2015

கடவுள், மதங்களுக்குக் கல்தா! இவற்றில் நம்பிக்கையற்றவை உலகில் 11 நாடுகள்

சென்னை, ஜூலை 1_ இன்சைடர்மாங்கி எனும் இணையப் பக்கத்தில் பன்னாட்டளவில் குறிப் பாக 11 நாடுகளில் நாத் திகர்கள் மற்றும் கடவுள், மதம் குறித்த கவலையற்ற வர்கள் அதிகரித்து வருவ தாக 11 நாடுகளைப் பட் டியலிட்டுக் குறிப்பிட்டுள் ளது.
மதங்கள் வழி நடந்து வரும் நாடுகளில் சமூக, தொழில்நுட்ப வளர்ச்சி கள் மந்தமாக  பின்னோக் கியே  இருப்பதையும் அந்த இணையப் பக்கத்தில் சுட் டிக் காட்டப்பட்டுள்ளது. உலகை குறிப்பிட்ட வடிவத்தில் வடிவமைப் பதில் மதம் இருப்பதாகக் கூறிக்கொண்டாலும், அம்மதத்தை மக்கள் ஏற் றுக்கொள்ளும் வரையில் தான் அது பொருந்தும். மதம் என்பதே நாட்டுப் புறங்களில் நிலவிவந்த கற்பனைகளின் அடிப் படையில் உள்ள கதைகள், பாடல்கள் ஆகியவை களின்மூலமாகவே மதக் கருத்துகள் பரப்பப்பட்டு வந்தன. மக்களைக் கவர்ந்த கற்பனைக்காவி யங்கள் எதையோ சொல்ல வருவதுபோல்,  தோன்றி னாலும், பொதுவான நடைமுறைகளில் மக்களி டையே உள்ள இயலாமை களின் அடிப்படையில் பரப்பப்பட்டு வந்துள்ளன. நம்முடைய அன்றாட வாழ்வில் இவை எதை யுமே நாம் கவனிப்ப தில்லை. அன்றைய காலம் தொட்டு புதிய புதிய மத நம்பிக்கைகளால், மதங் களும் அதன் பல்வேறு பிரிவுகளும், கிளைகளும் அதன் எதிரிகளின் குருதிக் கறைகளால், வாள்முனை யில் பிரகாசிக்கும் என்று எண்ணுகிறார்கள்.
சில மதங்கள் எப் படியோ நூற்றாண்டு காலங்களாக மக்களி டையே பின்னிப் பிணைந்து விட்டபடியால், இப் போதும்கூட உள்ள மக்க ளிடையே பிரபலமாக செல்வாக்குடன் அந்த மதங்களைப் பரப்பிக் கொண்டு இருப்பவர்கள் இருக்கின்ற நிலையைக் காணமுடிகிறது. ஆனால், அதனால் அந்த மக் களுக்கு நன்மை ஏதும் விளைகின்றதா? என்றால் இல்லை என்றுதான் கூற முடிகிறது.
நவீன உலகில் மதங் களை ஏற்கமுடியாத மதங் களுக்கு எதிரான நிலை உயர்ந்தவண்ணம் உள் ளது. நவீன உலகில் மக் களிடையே வேரூன்றிப் போய் உள்ளவைகளில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து கற்பிக்கவும், தனி மனித ஒழுக்கம், நன்மை, தீமைகளின் எல்லைகள் குறித்தும் கற்பிக்கப்படும் நிலை இயல்பாக ஏற்பட் டுள்ளது. ஆனால், மதங் களிடையே இதுபோன்று தொடங்கப்படவில்லை. மத நூல்களில் கூறப் பட்டவைகளைத் தவிர வேறு எந்த விளக்கங் களையும், மாற்றங்களை யும் ஏற்காமல், அந்த அடிப்படையிலேயே மதத் தின் கருத்துகளைப் பரப்பி  வருவதுடன், அவர்களின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ச்சியாக வைத்துக் கொண்டுள்ளனர்.
ஆனால், இன்றைய காலகட்டத்தில் அந்தக் கட்டுப்பாட்டுடன்கூடிய கருத்துகளாக வானவெளி யில் இயற்கைக்கு மீறிய சக்தியுள்ளவர்கள் மிதந்து கொண்டிருப்பதாக கரு தும் நிலை குறைந்து கொண்டு வருகிறது.
நாம் இன்று வசித்து வரும் உலகில் அறிவியல்  முறையிலான விளக்கங் கள் பரவிவருகின்றன. அறிவியல் வளர்ச்சிகளால் நூற்றாண்டு கால கிறித் துவ சர்ச்சுகள் மூடப் பட்டுவருகின்றன. மக்களிடையே பெண் கள்மீதான வன்செயல்கள்,   கொலைகள் இருப்பது குறித்து எண்ணிலடங் காத புள்ளிவிவரங்கள் உள்ளன. பல்வேறு கலாச் சாரங்கள் உள்ள நிலை யில், பின்னிப்பிணைந் துள்ள கடவுள் கருத்து களால், தாங்கள் மகிழ்ச்சி யாக இருப்பதாக எண்ணு கிறவர்களும் இருக்கிறார் கள். அப்படி என்றால், கற் பனையில் உள்ளவைகளுக் காக தொடர்ச்சியாக பல காலங்களாக சண்டையிட் டுக் கொண்டிருப்பது ஏன்? இந்தக் கேள்வி ஒன் றும் ஆபத்தானதும் அல்ல. பதில்தான் தேவை. தற் பொழுதுள்ள காலகட்டத் தைப்போல் முன்பு எப் போதுமில்லாதவாறு மதங்கள் மறுக்கப்பட்டு வருகின்ற நிலை அதிகரித் துக்கொண்டு வருகிறது.
அமைதி, அன்பு, கருணை மற்றும் விழிப் புணர்வு ஆகிய அனைத் தும் ஒருங்கே அமைந் துள்ள கருத்துருவை நாம் அனைவருமே ஏற்றுக் கொள்கிறோம்.  மக்களி டையே தன்னம்பிக்கையை விதைப்பவையாக உள் ளன. ஆனால், அவை களை அச்சுறுத்தலின் மூலமாக திணிப்பது, அவைகளை வலியுறுத்துவ தாகக்கூறி குருதியை சிந்தச் செய்வது, தொல் லைகளைத் தருவது சரி யான வழி அல்ல. இது போன்ற வழிமுறைகள், நாம் பார்க்கின்ற நாத்தி கர்களை, கடவுளைப்பற் றிய கவலையற்றவர்களைக் கொண்டுள்ள நாடுகளில் இல்லை என்பதைப் பார்க் கலாம்.
1.சுவீடன் நாத்திகர்கள், கடவுள் கவலையற்றவர்கள் அதி கரித்துள்ள 11 நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் சுவீடன் உள்ளது-. சுவீடன் நாட்டின் மக்கள் தொகை யில் 80 விழுக்காடு மக்கள் மதங்கள் தொடர்பில் கற்பித்துள்ள பழங்கதை களையோ, புராணங் களையோ அவர்கள் எந்த வகையிலும் ஏற்பதாக இல்லை என்று புள்ளி விவ ரங்கள் குறிப்பிட்டுள்ளன.
2. டென்மார்க்
அதிக எண்ணிக்கையி லான நாத்திகர்கள் அல் லது கடவுள் கவலை அற் றவர்கள் அதிகம் கொண் டுள்ள நாடு மட்டும் அல்ல. மிகக்குறைந்த அள விலான மத நம்பிக்கை உள்ள மக்கள் கொண் டுள்ள நாடாகவும் டென் மார்க் இருக்கிறது. 80 விழுக்காடு மக்கள் தங்கள் வாழ்வில் மதத்தின் பங்கு சிறிதளவேனும் இருப்பது கிடையாது என்று குறிப் பிட்டுள்ளனர். இந்த ஸ்காண்டினேவியன் நாடான டென்மார்க், பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
3. ஈஸ்டோனியா
ஈஸ்டோனியா பட்டிய லில் மூன்றாம் இடத்தில் உள்ளது. அய்ந்தில் ஒரு வருக்கும் குறைவாக உள்ள வர்கள் தங்கள் வாழ்வில் மதத்தின் பங்கு முக்கிய மான பங்காற்றிவருவ தாகக் குறிப்பிட்டுள்ளனர்.
4.நார்வே
ஸ்காண்டினேவியன் நாடுகளில் ஒன்றான நார்வே நாட்டில் கடந்த காலங்களில் கிறித்துவ சர்ச்சுகள் எரிக்கப்பட்ட சம்பவங்கள் பிரபலமா னவை. நார்வே நாட்டின் மக்கள்தொகை, உலகில் உள்ள மதங்களின் எண் ணிக்கையைப்போல் அதி கமாக இருக்கிறது என்று நீங்கள் எண்ணினால், அதுதான் கிடையாது. அதேநேரத்தில், குறைந்த அளவிலான மத நம் பிக்கை உள்ள மக்கள் இருக்கின்றனர். பட்டிய லில் நான்காம் இடத்தில் நார்வே உள்ளது.
5. ஹாங்காங்
சீன மக்கள் குடியரசின் ஒரு பகுதியாக சிறப்பு நிர் வாகத்தின்கீழ் தனித்துவ மான சுயாட்சி பெற் றுள்ள நாடாக ஹாங் காங் நாடு, பட்டியலில் 5 ஆம் இடத்தில் உள்ளது.
இந்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் வெற்றி என்பதே அந்நாட்டு மக்கள் மதத்தை விட்டு ஒழித்ததால்தான் சாதிக்க முடிந்துள்ளது.
6. நெதர்லாந்து
நெதர்லாந்து மக்கள் சற்றேறக்குறைய அனை வருமே வாழு, வாழ விடு கொள்கையைப் பின்பற்று பவர்களாக இருக்கிறார் கள். அந்த நாட்டில் உள்ள கடவுளர்கள் அத் தனையும் சுற்றுலாவாசி கள் காண்பதற்காக மட் டுமே இருக்கின்றன. நெதர் லாந்து மக்கள் தங்கள் வாழ்க்கையின் முன்னேற் றத்துக்கான அவர்களின் செயல்களுக்கு குறிப்பிடத் தக்க அளவில் மதத்தின் பங்களிப்பு தேவையெனக் கருதவில்லை.
7. ஜப்பான்
ஜப்பான் நாட்டில் சுற்றுலா வருபவர் எண் ணிக்கை என்பதே சுருக்க மாக இருந்துவருவதாகும். காரணம் உலகில் உள்ள மற்ற நாடுகளில் இருப் பதைப்போன்று மதவாதி களுக்கான இடம் என எங்குமே கிடையாது. இன்று மற்ற நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரண மாகத் திகழக்கூடிய அள வில் பலதுறைகளில் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ளது.
8. செக் குடியரசு
மகிழ்ச்சிகரமான மக் களின் தொகுப்பு உள்ள நாடாக செக் குடியரசு திகழ்ந்து வருகிறது. முத லில் அந்நாட்டில் குடிப் பிரியர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். உழைப்ப தும், களிப்பதுமாக இருந்து வரும் செக் குடியரசு மக் கள் தங்களின் மகிழ்ச்சி கரமான வாழ்வில் கேடு பயக்கும் மதங்களை அனுமதிப்பதே இல்லை.
9. அய்க்கியப் பேரரசு
அய்க்கியப் பேரரசா கிய இங்கிலாந்து நாட்டில் பல்வேறு காலகட்டங் களில் நாடுமுழுவதும் பல்வேறு கிறித்துவ சர்ச் சுகள் அமைக்கப்பட்டுள் ளன. கடந்த காலங்களில் அய்க்கியப் பேரரசில் சில முக்கிய நிகழ்வுகளில் மதங்களின் சர்வாதிகாரத் தன்மைகள் மேலோங்கி இருந்துவந்துள்ளன. நீண்ட காலத்திற்கு அப் படித்தான் இங்கிலாந்தில் இருந்துவந்தார்கள். அதெல்லாம் ஒருகாலம். ஆனால், தற்பொழுது நாத் திகர்கள், கடவுள் கவலை யற்றவர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். பட் டியலில் 9 ஆம் இடத்தில் இங்கிலாந்து உள்ளது.
10. பின்லாந்து
ஸ்காண்டினேவியன் நாடுகள் இந்தப் பட்டிய லுக்குள் வருமா? எனக் கருதினால், அது சரியானது தான். பின்லாந்து நாடு, ஸ்காண்டினேவியன் நாடு களில் மிக அதிகஅளவில் மத நம்பிக்கைகளுடன் இருந்து வரும் நாடு. பன் னாட்டளவில் நாத்திகர் கள், கடவுள்குறித்த கவலை யற்றவர்கள் அதிகரித்து வரும் நாடுகளின் பட்டிய லில் 10 ஆவது இடத்தில் பின்லாந்து உள்ளது.
11. பிரான்ஸ்
பிரான்சு நாட்டு மக்கள் தங்களின் வாழ்வில் மதம் முக்கியப் பங்காற்றுவது கிடையாது என்று குறிப் பிட்டுள்ளார்கள். பன்னாட் டளவிலான கத்தோலிக்க மய்யம் அளித்துள்ள தக வலின்படி, பிரான்சு நாட் டில் சர்ச்சுகள் முக்கியமாக ஒட்டுமொத்தமாக மூடப் பட்டுவரும் நிலை இதை உணர்த்திவருகிறது.
இவ்வாறு பன்னாட் டளவில் நாத்திகர்கள், கடவுள், மதம்குறித்த கவ லையற்றவர்களாக உள்ள வர்கள் அதிகரித்துவரு கிறார்கள் என்பதற்கான 11 நாடுகளின் பட்டியலை இன்சைடர்மாங்கி இணைய தளம் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் குறிப் பிட்டுள்ளது.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

பாஜக ஆட்சிக்கு எதிராக 8 மாதங்களில் பதவி விலகிய 4 கல்வியாளர்கள்

இந்திய வரலாற்று ஆய்வுக்குழுவின் உறுப்பினர் செயலாளர், மூத்த வரலாற்றாசிரியர் கோபிநாத் ரவீந்திரன் கடந்த வாரத்தில் பதவி விலகி உள்ளார். இதற்கு முன்பாக மத்திய அரசின் உயர்பதவிகளிலிருந்து மூவர் பதவி விலகியுள்ள நிலையில் நான்காவதாக வரலாற்றுப்பேராசிரியர் கோபிநாத் ரவீந்திரன் விலகியுள்ளார்.
கோபிநாத் ரவீந்திரன்
இந்திய வர லாற்று ஆய்வுக்குழு வின் தலைவராக ஒய்.சுதர்சன ராவ் மற்றும் ஆய்வுக் குழுவின் உறுப் பினர்கள் காவிமயச் சிந்தனையுடன் உள்ளவர்களாக இருப்பதாக கோபிநாத் ரவீந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த வாரத்தில் ஆய்வுக்குழுவின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தின் பதி வேட்டில் கோபிநாத் ரவீந்திரன் தம் முடைய கருத்தைப் பதிவு செய்யாததைக் கண்டித்து பதவி விலகி உள்ளார். பதவி விலகிய மற்றவர்களில் இருவர் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச் சகத்தைக் குறை கூறியுள்ளனர். மற்றும் ஒருவர் தம்முடைய பதவி விலகலுக்கு காரணமாக எதையும் குறிப்பிடவில்லை.
கோபிநாத் ரவீந்திரன் இந்திய வரலாற்று ஆய்வுக்குழுவின் உறுப்பினர் செயலாளர் பொறுப்பிலிருந்து கடந்த வாரத்தில் விலகியுள்ளார். இவர் கடந்த அய்க்கிய முற்போக்குக்கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் 2013ஆம் ஆண்டில் இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டவர். பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றபிறகு இந்திய வரலாற்று ஆய்வுக்குழுவுக்குத் தலைவர் பொறுப்பில் ஆந்திரப்பிரதேசத் தைச் சேர்ந்த ஒய்.சுதர்சன ராவ் எனும் பிரகலத எல்லப்ப சுதர்சன ராவ் என்ப வரை நியமித்தது.  அவர் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்ட உடன் தம்முடைய இணையப்பக்கத்தில் (பிளாக்கில்) பழமையான இந்திய ஜாதீய முறையைப் புகழ்ந்து எழுதினார். அதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக பல்வேறு வகையிலான முரண்பாடுகள் அவரிடம் காணப்பட்டன.
இந்திய வரலாற்று ஆய்வுக்கழகம் நிறுவிய நாள் விழாவில் மார்ச்சில் உரையாற்றியபோது இந்துத்துவாவாதி யும், வேத விற்பன்னருமான டேவிட் பிராலி என்பவரின் கருத்தில் மாற்றுக் கருத்துக் கூறியமையால் பார்வையாளர் வரிசையில் இருந்தவர்களால்  இடை யூறு ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து பேசமுடியாமல் தடுக்கப்பட்டார்.
அதேபோல், இந்தியாவின் வரலாற் றாசிரியர்களின் பெருமைமிகு பத்திரிகை யான இந்திய வரலாற்றியல் ஆய்வு இதழின் ஆசிரியர் குழு மற்றும் ஆலோ சனைக்குழுவை மாற்றி அமைப் பதற்கான இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவின் முடிவை கோபிநாத் ரவீந் திரன் ஏற்காமல் எதிர்த்தார். ரொமீலா தாப்பர், இர்பான் ஹபீப், சத்தீஷ் சந்திரா, ரிச்சர்ட் ஈட்டன் மற்றும் பி.ஆர்.தாம்லின்சன் ஆகிய வரலாற்றா சிரியர்கள் ஆசிரியர் குழுவின் உறுப் பினர்களாக இருக்கிறார்கள். சுதர்சன ராவுடன் மாறுபட்டுள்ள கோபிநாத் ரவீந்திரன் இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவில் காவிமயம் பெருமளவில் இழையோடிக்கொண்டு இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். அவருடைய பதவி விலகலுக்கு மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் இதுவரை எந்தவிதக் கருத்தும் தெரிவிக்காமல் உள்ளது.
பர்வீன் சின்கிளார்
என்சிஇஆர்டி பர்வீன் சின்கிளார் இயக்குநர் பொறுப் பிலிருந்து கடந்த ஆண்டு (2014) அக் டோபர் மாதத்தில் விலகிவிட்டார்.
மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சரான ஸ்மிரிதி இரானியின் நேரடிப் பார்வையில் இருக்கின்ற உயர் பதவியில் இருந்தவரான பர்வீன் சின்கிளார்தான் முதல்முறையாக பணியிலிருந்து விலகியவர் ஆவார். 2012ஆம் ஆண்டில் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்ட அவருக்கு அய்ந்து ஆண்டுகள் பணிக்காலம் இருந்த போதி லும், பாஜக தலைமையிலான ஆட்சி மாற்றத்தின் காரணமாக கல்வித் துறையில் வெகுவாக முறைகேடுகள் தலைதூக்கத் தொடங்கின. துறையின் நிர்வாக நடைமுறைகளில்  பாடப் புத்த கங்கள் அச்சடிப்பதற்கான பொருள் களை வாங்குவது உள்ளிட்ட எதிலும் எவ்வித நடைமுறைகளையும் பின்பற் றாமல், அதற்கான விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. இதுகுறித்து அவர் கூறும்போது, என்சிஇஆர்டியில் எதைச் செய்யக் கூடாதோ, அதையெல்லாம் செய்வதற் காக அமைச்சகத்தின் சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டுவந்தது. எதிர்ப்புகள் வரும்வகையிலேயே அமைச்சகத்தின் செயல்பாடுகள் அமைந்துவருகின்ற நிலை உள்ளது. எதற்கெல்லாம் முக்கி யத்துவம் தேவைப்படுகிறதோ, எதற் கெல்லாம் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமோ அவைகளுக்கான அனு மதியை அளிக்க மறுத்து வருகிறது அமைச்சகம் என்றார்.
பர்வீன் சின்கிளார் பதவி விலகலால் என்சிஇஆர்டி ஆய்வுக்குழு மற்றும் தேர்வுக்குழுவுக்கு புதிதாக இயக்குநரை நியமிக்க வேண்டிய நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை தள்ளப் பட்டுள்ளது. பர்வீன் கிளாமர் 2014 அக்டோபரில் பதவி விலகியதுமுதல் இன்றுவரையிலும் அந்த இடத்தை நிரப்பாமல்தான் உள்ளது.
ரகுநாத் கே. ஷெவ்காங்கர்
டில்லியில் உள்ள அய்.அய்.டி. நிறுவனத்தின் இயக்குநர் ரகுநாத் கே. ஷெவ்காங்கர், அந்தப் பொறுப் பிலிருந்து கடந்த ஆண்டு டிசம்பரில் விலகியுள்ளார். அவர் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் இருக்கும்போதே பதவியிலிருந்து விலகி உள்ளார். பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியம் சாமி என்பவர் 1972ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை டில்லி அய்.அய்.டி.யின் பேராசிரியராகப் பணியாற்றியதாகக் கூறிஅவருக்கு அளிக் கப்பட வேண்டிய ஊதியப் பாக்கித் தொகை 70 இலட்சம் ரூபாய் என்றும் அதை உடனே வழங்கிட வேண்டும் என்றும் அதிகமான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாலேயே, அந்தத் தொகையை அளிக்க வேண்டும் இல்லையென்றால் பதவியிலிருந்து விலகிட வேண்டும் என அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாலேயே ஷெவ்காங்கர் தம்முடைய பணியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே பதவி விலக நேரிட்டுள்ளது. அதேநேரத்தில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் அமைச்சகமோ சுப்பிரமணிய சாமியின் கோரிக்கையை ஏற்க மறுத் துள்ளது. அய்.அய்.டி. டில்லி சார்பில் அந்த குறிப்பிட்ட காலத்தில் சுப்பிர மணிய சாமியின் வருவாய்குறித்த எவ் வித தகவலையும் அவர் அளிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி அவருக்கு ஊதியப் பாக்கி இருப்பதாகக் கூறப் படுவதை அளிக்க மறுத்துவிட்டது.
மொஷியஸ் நாட்டில் அமைக் கப்பட்டுள்ள பன்னாட்டு தொழில் நுட்ப ஆராய்ச்சி கல்வி நிறுவனத்துடன் புரிந்துணர்வு போடப்பட்ட விவகாரத் தில் அய்.அய்.டி.யின் விதிகளுக்குப் புறம்பாக நடந்துகொண்டதாகவும் ஷெவ்காங்கர்மீது குற்றச்சாற்றை அய்.அய்.டி.டில்லி சுமத்தி உள்ளது. இதில் அய்.அய்.டி. டில்லி நிர்வாகம் எவ்வித தவறையும் இழைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
இறுதியாக ஷெவ்காங்கர் 11.6.2015 அன்று பணியிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் பதவி விலகலுக்கு அவர் எந்த காரணத்தையும் வெளிப்படையாகக் கூறவில்லை. அவரைத் தொடர்ந்து அவர் வகித்த பதவியில் இன்று வரை வேறு எவரும் நியமிக்கப்படவில்லை. அவருடைய பதவி விலகல்குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் குறிப்பிடுகையில், சுப்பிரமணிய சாமியின் வேண்டுகோளை அய்.அய்.டி. டில்லிக்கு அனுப்பவும் இல்லை, அவர் கோரியுள்ள ஊதியப் பாக்கித் தொகை என்பதை அளிக்க வேண்டும் என்றும் எவ்வித உத்தரவையும் அளிக்கவே இல்லை, அந்தக் கோரிக்கையை நிதித் துறை அமைச்சகம் மற்றும்  கணக்குத் துறையினரே கவனிக்கவேண்டியதாகும் என்றும் அமைச்சகத்தின் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனில் ககோட்கர்
அய்.அய்.டி. மும்பையின் ஆட்சி மன்றக் குழுத்தலை வரான அனில் ககோட்கா அய். அய்.டி.யின் நிலைக் குழு மற்றும் தேர் வுக்குழுத் தலைவ ராகவும் பொறுப்பில் இருந்து வந்தவர்.
கடந்த மார்ச்சு மாதத்தில் மும் பையில் உள்ள அய்.அய்.டி.யின் இயக்குநர் பதவி நியமனம் தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துடன் ஏற்பட்ட முரண் பாடுகளால் தாம் வகித்த அனைத்து பதவியிலிருந்தும் விலகினார். மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச் சர் ஸ்மிரிதி இரானி அவரின் பதவி விலகலைத் திரும்பபப் பெறுமாறு கேட்டுக்கொண்டார். அவருடைய பதவிக்காலம் மே மாதம்வரை இருந்த போதிலும் மார்ச் மாதத்திலேயே விலகினார். அய்.அய்.டி.ரோபூர் இயக்குநர் நியமனத்தின்போது 22.3.2015 அன்று நடைபெற்ற நேர்காணலில் 37 பேர் பங்கேற்றனர். அந்த நேர்காணல் முடிவுகள் நீக்கப்பட்டது. அதனால் தேர்வுக்குழு எந்த முடிவையும் எடுக்க முடியாமல் போனது. இதுகுறித்து அனில் ககோட்கர் கூறுகையில்   முக்கியமான செயல்களில் மிகவும் அலட்சியமாக அமைச்சகம் செயல் பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார். தற்பொழுது அய்.அய்.டி. இயக்குநர் களைத் தேர்வு செய்வது என்பது 6 மணி முதல் 7 மணிநேரத்தில் லாட் டரியை நடத்துவதுபோல் இயக்குநர்கள் தேர்வு செய்யப்படும் நிலை உள்ளது என்று குறிப்பிட்டார்.
அவர் பதவி விலகலுக்குப்பின்னர் அவருடைய பணியிடம் இன்றுவரை நிரப்பப்படாமல் உள்ளது.
அமைச்சகத்தின் சார்பில் கடந்த ஏப்ரலில் அமைச்சர் ஸ்மிரிதி இரானி இதுகுறித்து குறிப்பிடும்போது, ககோட் கர் கண்ட நேர்காணல் குழு உரையா டல்கள் வீடியோப்பதிவுகள் என்னிடம் உள்ளன. அந்த நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் அடுத்த சுற்றில் தேர்வு செய்யப்படு வார்கள். தவறான அறிக்கை ஏதும் அச்சாகிவிடக்கூடாது என அமைச்சரே வீடியோ பதிவுடன் ஆதாரத்துடன் இருப்பதை எண்ணிப்பாருங்கள் என்று ஸ்மிரிதி இரானி குறிப்பிட்டார்.
_ இந்தியன் எக்ஸ்பிரஸ் 24.6.2015

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

யோகா - மூச்சுப் பயிற்சி - கி. வீரமணி


யோகா என்பது ஒரு வகை உடற் பயிற்சியே. தியானம் - பிராணயாமம் என்பதும் ஆயுளை  நீடிக்கச் செய்ய தேவையான மூச்சுப் பயிற்சி.
அதிவேகமான அன்றாட வாழ்க்கை இன்று மனித குலத்திற்கு அவனி முழு வதும் ஏற்பட்டு விட்டதால், மன அழுத்தம், மன உளைச்சல், இவை களினின்று விடுபட அமைதியாகச் சில மணித்துளிகள் அமர்ந்து, மூச்சுப் பயிற்சி செய்தால் மன அழுத்தமும், மன உளைச்சலும், களைப்பும், சோர்வும், ஆத்திரம், அவசரக் கோலத்தின் அவதி -_ இவைகளினால் ஏற்படும் எரிச்சல் எல்லாம் நீங்கி, ஒரு புத்துணர்வைப் பெற வாய்ப்பினை மனிதன் தனக்குத் தானே வழங்கிக் கொள்ள முடியும்.
கடுமையான பகல் நேர உழைப் புக்குப் பின் இரவில் தூக்கம் மனிதர் களை சோர்வு கழிந்து, மலர்ச்சியை விழிப்புக் கொடையாகத் தருகிறது. அது போலத்தான், உடற்பயிற்சிகளும், நடைப் பயிற்சியும், போன்றதுதான் யோகா என்பதும்.
இது ஏதோ ஆதியில் வேதத்திலி ருந்து வந்தது என்றும், ஓம் என்று உச்சரித்துக் கொண்டே பல ஆசனங்கள் போடலாம் என்றும் சமஸ்கிருதமயமாக (Sanskritisation) இந்தக் கலை, ஆரியர் களால் ஆக்கப்பட்டு உலகம் முழுவ திலும் இதை நம்பும்படி தங்களது பிரச் சார வன்மையால் ஆக்கி விட்டனர்!
திராவிடர் நாகரிகத்தையே இன்று மறைத்து, வரலாற்றைத் தலைகீழாக்கி, காவிமயக் கொள்கையாக்கி, ஆரியர்கள் இந்நாட்டின் பூர்வீகக்குடிகள், திரா விடர்கள் வந்தேறியவர்கள் என்று தலைகீழாக ஆக்கும் துணிவு உள்ள நிலையில், 2000, 2500 ஆண்டுகளுக்கு முன்பு எப்படியெல்லாம் செய்திருப் பார்கள் என்பதை அறிஞர்கள், நடு நிலையாளர்கள் சிந்தத்தால் நன்கு புரியும்.
ஆரியப் பார்ப்பனர்கள், மாட்டுக்கறி, உணவை தவிர்த்ததே, புத்தரின் கொள்கை மார்க்கம் பரவி செல்வாக்கு பெற்ற நிலையில், அதனிடமிருந்து  காப்பியடித்து பல தத்துவங்கள், கொள்கைகள், நடைமுறைகள் - இவைகளை ஏதோ முதன் முதலில் தாங்கள் தான் கண்டுபிடித்ததாகவோ, அல்லது நேரே கடவுள் இவர்களுக்கு வந்து கொடுத்து விட்டுச் சென்றது போலவோ எழுதி வைத்து அதையே பிரச்சாரத்தின் மூலம் நிலை நிறுத்தி வருகின்றனர்!
அதுபோலவே புத்தர் தன் சீடர்களுக்கு கருத்துரை வழங்க, மடம் என்ற அமைப்பினை உருவாக்கியதை, பிற்காலத்தில் அதிலிருந்து காப்பிய டித்தே! ஆதி சங்கராச்சாரி நான்கு திசைகளிலும் நான்கு மடங்களை நிறுவி, சனாதனமதமாகி, வேதமதமாகிய பிராமண - பார்ப்பன மதத்தினை உரு வாக்கினார்! பவுத்தம், பார்ப்பனீய ஜாதிமுறை, பெண்ணடிமைத்தனம், சமஸ்கிருத மொழி ஆதிக்கம், அறிவைப் புறந்தள்ளி நம்பிக்கையை ஆணியடித்த ஆரியத்தைக் கண்டித்து ஒரு அறிவுப் பிரச்சாரம், கடவுள், ஆத்மா மறுப்பு இவைகளையெல்லாம் செய்து, மக்கள் மத்தியில் புத்தம் தனி செல்வாக்குப் பெற்றது!
வேதம் அறிவு என்பதை உயர் ஜாதிப் பார்ப்பனர் மட்டும் அறிந்து கொள்ள உரிமை பெற்றிருந்த நிலையில்,
அறிவு எல்லோருக்கும் பொது என்று தந்தை பெரியார் இயக்கம் 20ஆம் நூற்றாண்டில் செய்ததுபோல, அந்தக் காலத்தில் (கி.மு.) 2600 ஆண்டு களுக்கு முன்னர் புத்தர் அறிவியக்கப் பிரச்சாரம் மூலம் மக்களின் உள் ளத்தைக் கவர்ந்ததால், அதிலிருந்து பலவற்றை ஆரியப் பார்ப்பன வேத மதம் காப்பியடித்து தன்னுள்  வைத்து, தானே உண்டாக்கியது போல காட்டிக் கொண்டது.
மாட்டிறைச்சியைத்தான் யாகம் மற்றும் விருந்துகளுக்குப் பயன்படுத்திய ஆரியர்கள் அதை விட்டு விட்டு காய் கறி சாப்பிடுபவர்களாக (சைவமாக?) மாறியது பிற்காலத்தில் தான் என்பதைThe Dynamic Brahmin என்ற நூலில் (பம்பாய்) திருநாயர் குறிப்பிட்டுள்ளார்!
பள்ளிகள், மடங்கள் என்பது புத்தரி டமிருந்து கையகப்படுத்திய தத்துவ நடைமுறை நிறுவனங்கள் என்பதை,
பவுத்தமும் தமிழும் என்ற நூலில் ஆராய்ச்சியாளரான மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் குறிப்பிடுவது ஈண்டு நினைவு கூரத்தக்கது.
இதுபோல, அடுக்கடுக்காக பல கூறலாம். ஆய்வாளர்கள் இதில் நுழைந்து புதிய கோணங்களில் பல புது கருத்துக்களை தர வேண்டுமென விரும்புகிறோம். அரைத்த மாவையே அரைப்பதால் யாருக்கு என்ன லாபம்?
மேலை நாட்டவர்களையும், மற்றும் பலரையும் வெகுவாகக் கவர்ந்துள்ள இந்த யோகா என்ற யோகக் கலை, வேத கால, ஆரிய நாகரிகத்திற்கு முந் தைய மொகஞ்சதாரோ ஹரப்பா, நாகரிகத்திலேயே அந்த மக்களால் (திரா விடர்களால்) கடைப்பிடிக்கப்பட்ட ஒன்றாகும்! பிற்காலத்தில் இதற்கு ஒரு வகை உருவம் தந்து, பதிவு செய்ய (Documentation)  பதஞ்சலி போன்றவர்கள் வந்திருக்கலாம். இது பற்றி சீரிய தமிழ் அறிஞர்கள் நல்ல வண்ணம் ஆய்வு செய்ய முன் வர வேண்டும்.
யோகா என்ற தலைப்பில், இங்கிலாந்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் சொல்லிக் கொடுக்கும் பேரா சிரியை மேரி ஸ்டூவர்ட் (Mary Stuwart) என்பவர் எழுதிய ஆங்கில நூல் ஒன்றினை அண்மையில் படித்த போது, அதில் அந்த அம்மையார் யோகாவைப் பற்றி ஒரு புதுக் கருத்தினைக் கூறி யுள்ளார்!
“Yoge is as old as Civilisation, its first traces were fond in the pre-historic ruins of Indus valley is what is now Pakistan. Here carved seals were discovered some of which showed a figure seated in Yoge position which is still practised today. The script used by these indus valley people has not yet been decipheed. But from their well - planned cities and buildings we know that theirs was an advanced culture and predating the migration of Aryans into India from the north.”
The earliest written references to Yoge are in the vedas (2500-600 BC)
தமிழாக்கம்: யோகா எனும் முறை, நாகரிகம் எவ்வளவு பழைமையானதோ அவ்வளவு பழைமையானது. இப்பொழுது பாகிஸ்தான் எனப்படும் நாட்டில் உள்ள சிந்துச் சமவெளியில், வரலாற்றுக்கு முந்திய இடிபாடுகள் (புதை பொருள்கள்) இருக்கின்றன. அவற்றிடையே யோகாவைப் பற்றிய முதல் அடையாளங்கள் காணப்பட்டன. உருவங்கள் பதியப் பெற்ற முத்திரைகள் இங்கே கண்டெடுக்கப்பட்டன. இன் னும் வழக்காற்றில் உள்ள, யோகா நிலையில் அமர்ந்திருப்பது போன்ற ஓர் உருவத்தை அந்த முத்திரைகள் சில காட்டுகின்றன. சிந்துச் சமவெளி மக்கள் பயன்படுத்திய எழுத்துக்களை இன்னும் படிக்க இயலவில்லை. ஆனால், அங் குள்ள, நன்கு திட்டமிட்டுக் கட்டப் பட்டுள்ள நகரங்களும், கட்டடங்களும், சிந்துச் சமவெளி நாகரிகத்தவர்கள் முன்னேறிய பண்பாட்டிற்கு உரிய வர்கள் எனக் காட்டுகின்றன. வடக்கில் இருந்து இந்தியாவில் ஆரியர்கள் குடி யேறுவதற்கு முன்பே அந்த நாகரிகம் இருந்தது. வேதங்களில் (கி.மு. 2500-_600) யோகாவைப் பற்றிய மிக முந்தியதாக எழுதப் பெற்ற தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன.
சாங்கியம் என்பது மதமல்ல. கடவுளை மறுப்பது; அதுபற்றி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மிகவும் ஆய்வுக் கண்ணோட்டத்தில் கூறியுள்ளார்! பவுத்தத்திற்கு முன்னோடியானது கபிலான் சாங்கிய தத்துவம் ஆகும்.
எண்ணூல் என்ற சாங்கியத்தை முதன் முதலில் அறிந்தவர்கள் தமி ழர்கள் என்கிறார் புரட்சிக் கவிஞர் (குயில் 16.6.1959) இந்திய மெய்ப்பொருள் வரலாற்றில் சாங்கியம் தொன்மையானது.
சாங்கியக் கருத்துக்கள் இயற்கை யோடு இயைந்தவை; பகுத்தறிவுக்கு ஒத்தவை
(புரட்சிக் கவிஞர் - குயில் 1.12.1959)
உலகம் எவ்வாறு உருவாகிறது? உயிர்களின் இயல்பு என்ன? இன்ப, துன்பங்களினின்றும் விடுதலை பெறுவது எப்படி? என்பன போன்ற மறைபொருள் விளக்கங்களுக்குப் பகுத்தறிவினைப் பயன்படுத்தி முதன் முதலாக உலக வரலாற்றிலேயே விரி வான விளக்கத் தத்துவம் சாங்கியம் ஆகும். சாங்கிய தத்துவம் இறை மறுப்பு (கடவுள் மறுப்பு) கொள்கையைக் கொண்டது. உலகம் கடவுளால் படைக் கப்பட்டது என்பதை சாங்கியத் தத் துவம் மறுப்பது இங்கு சுட்டிக் காட்டத் தக்கது.
இது ஒரு கடவுள், மதச் சார்பற்ற, பகுத்தறிவு நெறியை ஒட்டி மிக நீண்ட காலம் முன்பே உருவாக்கப்பட்டு வளர்ந்தோங்கிய தத்துவம். இதனை ஒருவர்இருவர் உருவாக்கியிருக்க முடியாது. இதனை முதலில் கபிலர் (Kapila) உருவாக்கி, பிறகு பலரும் இதனை பிரச்சாரம் செய்தனர்.
இந்தப் பெயர் பெருமைக்கும் பின்பற்றுதலுக்கும் உரியதாகையால், ஒரு கபிலர் அல்ல; பல கபிலர்கள், ஒரு இடத்தில் பிறந்தவர்கள் அல்ல; பற்பல பகுதிகளில் பற்பல கால கட்டங்களில் பிறந்தவர்களாக அவர்கள் இருந்திருக்க வேண்டும்.
கபிலர் அகவல் பாட்டு எழுதிய கபிலரும் திருவாரூர்க் கபிலர் தமிழில் எழுதிய எண்ணூலைத்தான் பிறகு வடமொழியாளர் சாங்கியம் என்றும் மொழி பெயர்த்துக் கொண்டனர் என்றும் புரட்சிக் கவிஞர் கருதுகிறார்!
சாங்கியம் என்னும் சமசுகிருதச் சொல்லுக்குத் தேர்ந்து தெரிதல்; எண் கணிதம், பகுத்தாய்வு, ஆய்ந்து கண்ட முடிவு என்று அறிஞர்கள் பல் பொருள் உரைப்பர் (பாரதிதாசன் - _ திருக்குறளின் உரை டாக்டர் ச.சு. இளங்கோ).
சாங்கியத் தத்துவத்தின் அடிப்படைக் கூறுகள் இரண்டு.
1. புருடன் --(Purusa) உயிர்.
2. பிரகிருதி - மூலப் பகுதி.
முற்றிலும் மாறான பொருள்களின் சேர்க்கை.
இந்த சாங்கியத் தத்துவத்தின் கீழும் யோகா என்ற உடற்பயிற்சி முன்பு அக்காலத்திலேயே (இது புத்தர் காலத்திற்கும் முந்தையது, முன்னோடித் தத்துவம் என்பது நினைவில் நிறுத்தப் படல் வேண்டும்) கபிலரின் சாங்கியத் தத்துவம் முழுவதும் பகுத்தறிவு நெறியை அடிப்படையாகக் கொண்டது. ஆனபடியால், இதில் கடவுளுக்கோ, மதத்திற்கோ வேலையில்லை. ஆனால் பிறகு ஆரியக் கலாச்சார அடிப்படையை வேதம், உபநிஷத் போன்றவைகளின் அடிப்படையில் இதை சமயக் கணக்கர் மதிவழியே ஆக்கினர்.
பதஞ்சலி என்பவரின் ஆரிய வேத மதக் கருத்துக்கள் இந்த உடற்பயிற்சி போன்றவைகளில் உள்ளே புகுந்தன. அன்றாட வாழ்க்கைகள், மதச் சிந்தனை களை, கடவுள் கருத்துக்களை, புகுத்திட ஒரு கருவியாக அவர்களுக்குப் பயன் பட்டிருக்க வேண்டும்!
டில்லியில் 1872-ல் பிறந்து, இங்கிலாந் தில் பி.ஏ., எல்.எல்.எம். (L.L.M.) L.L.D. என்ற பட்டங்களை கேம்பிரிட்ஜ் பல் கலைக் கழகத்தில் பெற்றும் பிறகு டில்லி பல்கலைக் கழகத்தால் D.L.I.T.T.பட்டம் அளிக்கப்பட்டவரும் மிகச் சிறந்த சிந் தனையாளரும், (1918_22இல்) நாகபுரியின் மேயராகவும், டில்லி, நாகபுரி பல்கலைக் கழகங்களில் துணைவேந்தராகவும் இருந்த டாக்டர் சர். ஹரிசிங் கவுர் அவர்கள் 1929-இல் எழுதிய The Spirit of Buddhism    என்ற நூலில் யோகாவை புத்தர் அணுகிய விதமும் பதஞ்சலி பயன்படுத்தியது பற்றியும் கீழ்க்காணும் முறையில் குறிப்பிடுகிறது.
..For both the Sankhya and the Vedanta appear to have agreed  on the practice of Yoge, as enlarging the vision beyond the material horizon. The practice of Yoge or intense meditation was itself the survival of the Vedic tapas, which was a form of asceticism combined with penance. It is not clear whether kapila himself recognized Yoge as the gate -way to higher knowledge, but it was the theme of the grammarian Patanjali, who expounded it in his Yoge Shastra, written about 200 B.C....
..Patanjali had to introduce in his system the doctrine of a personal God, Though he clearly saw its irreconcilable nature, and therefore, relegated his sutras dealing with God to a place unconnected with his treatise.
..That Buddha was a firm believer in the efficacy of Yoge is clear from the tenor of his earlier life.
...But Buddha believed in Yoge as a mental telescope; he did not believe in its efficacy beyond chastening the mind by freeing it from material distractions. It was the pre-Buddhistic view. But in later time Patanjali gave Yoge a special significance and it was maintained to be the chief means of salvation”
In his treatise Patanjali still adhered to the orthodox Sankhya doctrine - that the final aim of man was the  absolute isolation of the soul from matter, and not as in the Vedantic doctrine - the union with, absorption with, God Nor are the individual souls  here derived from the “Special Soul or God, but are like the latter - without a beginning”
“Sanskrit Literature” - Page 392, by Macdonnell.
தமிழாக்கம்: யோக முறையைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவரின் நோக்கு அல்லது பார்வை பொருள் எல்லையைக் கடந்து விரிவடைகிறது எனச் சாங்கியம், வேதாந்தம் ஆகிய இரண்டும் கருதின. வேதியத்தவம் (தபஸ்), சுகத்தை மறுத்துத் தன்னை வருத்திக் கொள்வது ஆகும்; அதாவது ஊனை உருக்கி, உள் ஒளி பெருக்குதல்; அதன் மீட்சியே யோகம் எனும் தீவிர ஆழ்நிலைச் சிந்தனை.
உயர்ந்த ஞானத்தைப் பெறுவதற்கான ஒரு வழி என்ற வகையில் யோக முறையைக் கபிலர் கருதினாரா என்ப தைத் தெளிவாகச் சொல்ல முடிய வில்லை. ஆனால், இலக்கண ஆசிரியர் பதஞ்சலி யோக முறையால் உயர்ந்த ஞானத்தைப் பெறலாம் என, கி.மு. 200-இல் தாம் யாத்த யோக சாஸ்திரத்தில் எழுதினார்.
தனியாள் சார்ந்த கடவுள் (Personal God) எனும் கொள்கையைப் பதஞ்சலி, தமது முறையில் சேர்க்க வேண்டியவர் ஆனார். அவ்வாறு கடவுள் கொள் கையைப் புகுத்துவதால் முரண்பாடு ஏற்படுவதைக் கண்டார்; அதனால், கடவுளைப் பற்றிய தமது சூத்திரங்களை, கோட்பாட்டைப் பற்றிய பகுதியுடன் சேர்க்காமல், அதனுடன் தொடர்பற்ற ஒரு தனித்த இடத்திற்கு ஒதுக்கி விட்டார்.

யோக முறைக்கு ஆற்றல் உண்டு, அதைக் கொண்டு, விரும்பும் விளைவை ஏற்படுத்தலாம் எனப் புத்தர் உறுதியாக நம்பினார் என்பதை அவருடைய தொடக்க கால வாழ்வுப் போக்குத் தெளிவாக காட்டுகிறது.
மனதைத் தொலைநோக்கு உடைய தாக ஆக்கவல்லது  யோகம் எனப் புத்தர் நம்பினார். பொருள் வயப்பட்ட புற ஈர்ப்புகளுக்கு உட்படாமல், மனதை விடுவித்து அதைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு யோகம் பயன்படுகிறது; அதற்கு மேல் அதற்குத் தனி ஓர் ஆற்றல் இல்லை. இந்தக் கருத்து, புத்தர் காலத்திற்கு முன்பு இருந்த ஒன்று. ஆனால், பதஞ்சலி, யோக முறைக்கு ஒரு தனித்த முக்கியத்துவம் அளித்தார்; வீடு பேறு அல்லது மோட் சம் என்பதை அடைவதற்கு அஃது ஒரு முக்கிய வழிமுறை எனக் கண்டார். பக்கம் 78 “The Spirit of Buddhism”
தமது கோட்பாடுகள்பற்றிய நூலில், பதஞ்சலி பழைமையான சாங்கியக் கொள்கைகளையே பற்றியிருந்தார். பொருளிலிருந்து ஆன்மா முற்றிலும் தனித்துப் பிரிய வேண்டும் என்பதே அக்கொள்கை. வேதாந்தக் கொள்கை வேறானது -_ அதன்படி, கடவுளுடன் ஆன்மா ஒன்றுதல் இறுதி இலக்கு ஆகும். பேரான்மா அல்லது கடவுளிட மிருந்து தனி ஆன்மாக்கள் பெறப்படு கின்றன என்பது வேதாந்தம். ஆனால், பேரான்மாவை அல்லது கடவுளைப் போன்று தனி ஆன்மாக்களும் தோற்றம் (தொடக்கம்) அற்றவை என்பது சாங்கியக் கொள்கை.
பக்கம் 392 “Sanskrit Literature’
- by Macdonnell
உண்மை மே 1-15 2002

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

லலித் மோடி பற்றி நரேந்திர மோடிக்கு விடப்படும் எதிர்பார்க்க இயலாத கேள்வி

- சுநந்தா கே டட்டா-ரே


பிரதமர் நரேந்திர மோடி வாய் திறந்து பேசியே ஆகவேண்டும் என்ற நிலை வந்துவிட்டது. லலித் மோடியின் செயல்களுக்கு நரேந்திர மோடியும் உடந்தையாக இருந்தார் என்று  எவர் ஒருவரும் அவர் மீது குற்றம் சாட்ட வில்லை. அல்லது லலித் மோடியின் செயல்கள் நேர்மையற்றவை, சட்டத் திற்குப் புறம்பானவை என்று கூட எவரும் குறிப்பிட்டுக் கூறவில்லை.  எந்த கருத்தையும் நாட்டின் பிரதமர் வெளிப் படுத்தாமல் அமைதி காப்பதினால் நாடு முழுவதிலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் ஊகங்களிலிருந்து,, சர்வதேச யோகா நாள் எனும் கேளிக்கை நிகழ்ச்சியினால் கூட,  கவனத்தை திசை திருப்ப இயலவில்லை. 
ஆற்றல்மிகு சுயநல சக்திகள் சட்டத் திற்குப் புறம்பான, ரகசியமான முறை யில் ஒருங்கிணைந்து செயல்படுவது, இன்னொரு நெருக்கடி நிலை வருவ தற்காக உள்ள வாய்ப்புகளை புறக் கணித்துவிட முடியாது என்று எல்.கே. அத்வானி கூறியதை நினைத்துப் பார்க்கச் செய்கிறது. நரேந்திர மோடி உடனடியாகத் தெளிவுபடுத்தியாக வேண்டிய இரண்டு செய்திகள் தற்போது அவரை எதிர் கொண்டுள்ளன.  லலித் மோடியை இந்தியாவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற இந்திய அரசின் நிலைப்பாடு இருந்தபோது, அவர் அய்ரோப்பாவில் பயணம் செய்வதற்கு பா.ஜ.க. அரசு உதவி செய்தது என்பது முதலாவது. 
விரும்பத்தகாத சில சக்திகளின் நற்பெயரைக் கெடுக்க மேற்கொள்ளப் பட்ட உட்கட்சி முயற்சிகள்; இரண் டாவது. பழைய காங்கிரஸ் கட்சியில் இருந்த கட்சித் தலைமை (ஹை கமாண்ட்) என்பது போன்ற பெயரள வுக்கான ஜனநாயக நடைமுறையும் கூட இல்லாத, ஒரே ஒரு மனிதரால் நடத்திச் செல்லப்படும் அமைப்புக்கும் (பா.ஜ.க.) எந்த நற்பெயரையும் அது வாங்கித் தந்துவிடாது. நரேந்திர மோடியின் அனுமதி இன்றி  பா.ஜ.க. யில் ஒரு ஈ கூட நகர முடியாது என்பதுதான் அக் கட்சி பற்றி பொதுமக்கள் கொண்டுள்ள கருத்தாகும்.
கிரிக்கெட் விளையாட்டிலும்  அதன் துணை நடவடிக்கைகளிலும் எனக்கு அதிக ஆர்வம் இல்லாத காரணத்தால், லலித் மோடி அப்படி என்ன குற்றத் தைத்தான் செய்துவிட்டார் என்பதை முழுமையாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், அவ ரது பாஸ்போர்டை ரத்து செய்ய அர சுக்கு போதுமான நியாயமான கார ணங்கள் இருந்திருக்கக்கூடும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு இங்கிலாந்து நாட்டின் உதவியையும் நமது அரசு கேட்டிருந்தது என்பதையும் நானறிவேன். முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு லலித் மோடியின் மீது கொண்டிருந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணங் களுக்காக மேற்கொள்ளப்பட்ட நட வடிக்கைகள் அல்ல;  
 இந்திய அரசி னால் மேற்கொள்ளப்பட்ட செயல்பா டுகள் என்றே கருதப்படுபவையாகும் அவை. பிரதமர் நரேந்திரமோடியும் அவரது அயல்துறை அமைச்சரும் அவற்றிற்குக் கட்டுப் பட்டவர்களே ஆவர். முந்தைய அரசின் முடிவுகளோடு கருத்து வேறுபாடு கொண்ட காரணத் தினால் அயல்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அச்செயல்பாடுகளை சட்டப் படி மாற்றியமைக்க முயன்றிருந்தால், அதனை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.  அதற்கு மாறாக, லலித் மோடிக்காக சலுகைகள் செய்யக் கேட்டு அவர் இங்கிலாந்து அரசை ரகசியமாக அணுகியுள்ளார்.
சட்டத்திற்குப் புறம்பான இத்தகைய செயல்பாடுகளைப் பற்றி நரேந்திர மோடி அறிந்தும் இருக்கலாம்; அறியா மலும் இருக்கலாம். தனது மற்றும் தனது அரசின் நம்பகத்தன்மையை நிலை நாட்டிக் கொள்வதற்காக நரேந் திரமோடி தெளிவு படுத்தி விளக்கம் அளிக்கவேண்டிய ஒரு செய்தியாகும் இது. சுஷ்மா ஸ்வராஜின் செயல்பாடு களை ஓர் இங்கிலாந்து நாட்டு செய் தியிதழ் வெளிப்படுத்தாமல் போயி ருந்தால்,  நமது நாடு இதனைப் பற்றி அறிந்து கொள்ளவே இயலா மல் போயிருக்கும் என்பது மட்டுமே நாமனைவரும் அறிந்திருப்பதாகும். தான் மனிதாபிமான முறையில் செயல்பட்டதாக இப்போது சுஷ்மா தனது செயலுக்கு நியாயம் கற்பிக்க முயல்கிறார். பா.ஜ.கட்சியின் நற்பெய ரைப் பற்றிய கவலையை மட்டுமே கொண்டிருக்கும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சுஷ்மாவுக்கு ஆதரவாகப் பேச பாய்ந்து வருவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இதற்கு ஆதரவு தர அருண்ஜேட்லி ஓடி வந்ததைப் பார்த்து நான் அதிர்ச்சி யடைந்துபோனேன்.
நேர்மை, நியாயத்துக்குக் கட்டுப்பட் டவர் என்று அறியப்பட்டுள்ளவர் அருண் ஜேட்லி. எந்தச் செயல்பாட் டையும் நியாயப்படுத்தி, ஆதரவளித்து, பாதுகாப்பதில் புகழ் பெற்றவர் அவர். அரசாட்சி என்பதன் கொள்கைகள் மற்றும் மதிப்பீடுகளின் முக்கியத்துவத் தையும், நாகரிக சமூக அமைப்புகள் மற்றும் அவற்றின் நடைமுறைகளின் புனிதத்தன்மையின் மீதே அவை சார்ந்திருக்கின்றன என்பதையும் அவர் கட்டாயமாக அறிந்தே இருக்க வேண் டும்.
 குற்றம் குறையே கூற இயலாத தொழில் நாணயம் கொண்ட வழக் குரைஞரான அவர், தனது சக அமைச் சர் இரண்டு வகைகளில் தவறிழைத் துள்ளார் என்பதையும் அறிந்திருக்கவே வேண்டும். வழக்குரைஞர்களான சுஷ்மாவின் கணவரும், மகளும் லலித் மோடிக்கான வழக்குரைஞராக அவரது வழக்கில் ஆஜராகி செயல்பட்டுள்ள னர். அதற்காக அவர்கள் சம்பளம் பெற்றார்களா இல்லையா என்பதல்ல இப்போதுள்ள கேள்வி. ஒரு நேர்மை யான அமைச்சராக சுஷ்மா தனது நிலையை வெளிப்படையாக அறிவித்து விட்டு, லலித் மோடி விவகாரத்தில் துணிவுடன் விலகியே இருந்திருக்க வேண்டும்.
சுஷ்மா ஸ்வராஜ் இந்த இரண்டை யுமே செய்யவில்லை. அதற்கு நேர் மாறாக, அரசு அமைப்புகள் மற்றும் அவற்றின் நடைமுறைகள், செயல்பாடு களின் முக்கியத்துவம் மற்றும் நியா யத்தன்மை மீது, ஒரு மூத்த அமைச்சராக இருக்கும்  தான் கொண்டிருக்கும் எல் லையற்ற வெறுப்பை அவர் வெளிப் படுத்தியுள்ளார். அவர் இவ்விவகாரத் தில் பிடிபட்டது தற்செயலாக நிகழ்ந்த ஒரு நிகழ்வே.
சதித்திட்டக் கோட்பாடுகள் இல்லா விட்டால், இந்தியா இந்தியாவாகவே இருக்க முடியாது. சுஷ்மா ஸ்வராஜை இவ்வாறு சிக்கவைத்ததன் நோக்கமே,  2014 பொதுத் தேர்தலுக்கு முன்னர் பா.ஜ.க.யின் உள்கட்சி விவகாரங்களில் தவறான பக்கத்திற்கு ஆதரவு அளித்து வந்த ஒருவரின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வருவதுதான் என்றும் ஒரு கருத்து தெரிவிக்கப் படுகிறது. இத்தாக்குதலின் முக்கிய இலக்கே சுஷ்மாவை விட அதிக அளவு எரிச்சலூட்டுபவராக இருந்த வசுந் தராராஜேதான் என்ற இதிலிருந்து மாறுபட்ட கோட்பாடு ஒன்றும் இருக்கிறது. லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மாவை மட்டுமே பாதுகாப்பதன் மூலம், பொதுமக்களின் பேராதரவைப் பெற்றவரும், எளிதில் கவிழ்க்க முடி யாதவருமான ராஜஸ்தான் முதல மைச்சர் மீது எதிர்ப்பாளர்கள் தாக் குதல் நடத்தலாம் என்று  அழைப்பு விடப்பட்டிருக்கிறது.
இக்கோட்பாட்டை மேலும் கொண்டு சென்று, சிந்தியா கட்சியிலி ருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்டால், அவரையடுத்து அயல்துறை அமைச்சர் ஓரங்கட்டப்படும் முறை வந்துவிடும் என்று கூறுபவர்கள் சிலரும் உள்ளனர். யார் அறிவர்? ஆனால், இந்த இரண்டு பெண்மணிகளுமே அரசியல் களத்தி லிருந்து மறைந்த பிறகு, பல்லும் நகமும் பிடுங்கப்பட்ட பீஷ்ம பிதாமகரான அத்வானியை அழைத்து, பெயரளவுக்கு அவரை பிதாமகராகச் செயல்பட அழைப்பு விடுக்கும் தன்னம்பிக்கையை மோடி பெறுவார். பின்னர் அத்வானி யும் அவரது முறை வரும்போது, மகாபாரத பீஷ்மர் போல ஆணிகளின் படுக்கையில் விழவேண்டியதுதான்.
சிக்கல் நிறைந்ததும், எளிதில் புரிந்து கொள்ள முடியாததுமான பா.ஜ.கட்சி அரசியலில் மூழ்கி  உள்ளவர்களால் மட்டுமே, இத்தகைய சதித் திட்டக் கோட்பாடுகள் பற்றிய எந்த ஓர் ஊகத்தையும் தெரிவிக்க முடியும். ஆனால்,  சுஷ்மா என்ன செய்ய உத்தே சித்திருக்கிறார்  என்பதை முற்றிலுமாக அறியாதவர்களாகவே சுஷ்மாவின் எஜமானர்கள் இருக்க மாட்டார்கள் என்றே வெளியாட்களுக்கு நன்றாக தெரிகிறது. இக்கதையில் சுஷ்மா ஸீஸர் என்றால், நரேந்திர மோடியே ஸீஸரின் மனைவியாவார். எனவே அவர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். அவர் இது பற்றி வாய்திறந்து பேசாதவரை,  சந்தேகத் திற்கு அப்பாற்பட்டவராக அவரால் இருக்க முடியாது.
இதில் அடங்கியுள்ள மாபெரும் செய்தி என்னவென்றால், அது ஒரு கட்சியையோ அல்லது ஒரு தனிப்பட்ட நபரான லலித் மோடியின் சமூக நிலையை  மட்டுமே பாதிப்பதாக இல் லாமல், ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கிறது என்பதாலேயே அது  மாபெரும் செய்தியாக விளங்குகிறது,  இதில் அயல்துறை அமைச்சர் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் மட்டுமே சம்பந்தப்பட்டிருப்பவர்களாகத் தோன்றவில்லை; இந்திய குடியரசுத் தலைவர், ப.சிதம்பரம், சரத்பவார், சஷிதரூர், மும்பை காவல்துறை ஆணை யரும், இன்னும் யார்யாரெல்லாமோ சம்பந்தப்பட்டிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.லலித் மோடியின் சவடாலையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.   அரசு நடை முறைகள் மற்றும் பாரதநாடெனும் இந்தியாவின் பெருமையை விட பணத்துக்கும், மக்கள் தொடர்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவது விந்தை யாகவே தோன்றுகிறது.
முன்னொரு சமயம் கருப்பு சந்தைக்காரர்கள் மீது ஒரு சமூகப்  புறக்கணிப்பைக் கொண்டு வர இந்திரா காந்தி  திட்டமிட்டார்.  வி.பி.சிங்கோ ஒரு படி மேலே சென்று அவர்களை நாடுகடத்தவேண்டும் என்றார். இந்தியாவில் நிலவும் நிதர்சன, உண்மை நிலையை, இருவருமே அறிந்திருக்க வில்லை. லலித் மோடி விவகாரத்தில் தன்னை குற்றமற்றவராக மெய்ப்பித்துக் கொண்டு நரேந்திரமோடி வெளியே வந்தால்,  அவர்களைப் போல அவர் கனவுலகில் வாழமாட்டார். ஆனால் அவ்வாறு நரேந்திரமோடி செய்யாத வரை, நரேந்திரமோடியும் சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தராராஜே போன்றே  இச்சதிக்கு உடந்தையாக இருந்ததாகவே மக்கள் நினைப்பார்கள்.
நன்றி: டெக்கான் கிரானிகிள்
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

ஓநாய் சைவம் பேசுகிறது!

புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாஜக தலைவர் அமித்ஷா தற்போதுள்ள சூழலில் உலகம் முழுவதும் இந்துமதம் மாத்திரமே அமைதிக்கான ஒரே தீர்வாகும் என்று கூறியதைவிட நகைச்சுவை வேறு ஒன்றும் இருக்க முடியாது.

மும்பையில் 3 நாள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்ள செல்லும் வழியில் அகமதாபாத நகரில் புத்தக வெளியீட்டுவிழா ஒன்றில் அமித்ஷா கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியவை நல்ல நகைச்சுவை விருந்தாகும்.  தற்போது உலகம் முழுவதிலும் தீவிரவாதம் மேலோங்கிவருகிறது. தீவிரவாதம் என்பது மதரீதியாக தற்போது அதிகரித்து வருகிறது, எந்த மதம் என்று குறிப்பிட்டுச் சொல்லத் தேவையில்லை,

 இந்த நிலையில் இந்தியாவின் வரலாற்றை நாம் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும், இங்கே நீண்ட நெடுங்காலமாக அமைதி திகழ்ந்துவந்தது. அந்நியமதங்கள் இங்கு வரும் வரை நாட்டில் எந்த ஒரு சிக்கலுமில்லாமல் அவர வர்கள் வேலையை அவரவர்கள் செய்துகொண்டு இருந்தனர், பிற மதங்கள் இங்கு வந்த பிறகு பேதங்கள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. சில நாடுகளில் ஒரு மதம் மாத்திரமே உள்ளது. அங்கு பிற மதங்களுக்கு வேலையில்லை, அதே நேரத்தில் அங்கு தீவிரவாதம் தழைத்தோங்கியுள்ளது. இதற்கு காரணம் எந்தமதம் என்பது அனைவருக்கும் தெரியும், தற்போதுகூட மதத்தின் பெயரால் தான் சில நாடுகளில் கொலைகள் செய்கின்றனர்.

ஆகையால் தான் நான் சொல்கிறேன் இந்துமதம் தான் உலகில் அமைதியை கொண்டுவரும் உன்னத மதமாகும். இதை நான் இந்து என்பதற்காக பெருமை யுடன் கூறவில்லை.  நான் இரண்டு ஆண்டுகளாக பெரும் சிக்கலில் மாட்டியிருந்தேன். அப்போது நான் இந்தியாவில் உள்ள அனைத்துக் கோவில்களுக்கும் சென்று வழிபாடுகள் செய்தேன் தமிழ் நாட்டின் பகவதி அம்மன் கோவில் முதல் காஷ்மீரின் வைஷ்ணவா தேவி மற்றும் அனைத்து சக்திபீடம் போன்ற கோவில்களுக்குச் சென்று வழிபட்டேன். இப்போது எனக்கு எந்த சிக்கலுமில்லாமல், தலைமைப்பதவியில் இருக்கிறேன். ஆகையால் இந்துமதம் எல்லா சமாதானத்திற்கும் தீர்வு என்பதை நான் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன் என்று கூறியுள்ளார் பிஜேபி தலைவர் அமித்ஷா.

பி.ஜே.பியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அதன் ஆணி வேர்களான சங்பரிவார்களானாலும் சரி பொய்ப் பேசுவதில் அசகாய சூரர்கள், பொய்களையும் திட்டமிட்டுச் சொல்லுவதில் அவர்களை வெல்ல யாரும் பிறக்கவில்லை என்று கூட சொல்லலாம்.

தீவிரவாதம் இந்து மதத்தில் கிடையாதாம் - வன்முறை என்ற பேச்சுக்கும் இடமில்லையாம்.
450 ஆண்டுகால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலமான அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை ஒரு பட்டப் பகலில் இந்த அமைப்புகளின் மிகப் பெரிய தலைவர்கள் தலைமை தாங்கி, ஆயிரக்கணக்கான இந்து வெறியர்களைத் திரட்டி அடித்து நொறுக்கியவர்கள் எந்தத் துணிவில் இப்படிப் பேசுகிறார்கள்?

இந்து மதத்தின் அடிப்படையே பிறப்பிலேயே மனிதனைப் பிளவுப்படுத்துவது தானே? பிராமணர் பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன்; பிர்மாவானவர் இந்தப் பிராமணனுக்கே இந்த உலகைப் படைத்தார் என்றும், இந்நாட்டின் பெரும்பான்மையான மக்களைச் சூத்திரர்கள் - வைப்பாட்டி மக்கள் என்றும், இவர்கள் பிராமணர்களுக்குச் சேவை செய்தே கிடக்க வேண்டும் என்பதையும்விட கொடூரமான வன்முறை எது? மனித விரோத ஏற்பாடு எது? இதுதான் ஒற்றுமைக்கான ஏற்பாடா?

இவர்கள் தூக்கி நிறுத்தும் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படும் இராமனே சம்பூகன் என்ற சூத்திரன் தவம் இருந்தான் என்பதற்காக, தவம் செய்ய சூத்திரனுக்கு அருகதை கிடையாது;  அவன் வருண தருமம் மீறினான் என்றுகூறி அந்த ராமனே வாளால் வெட்டிக் கொன்று இருக்கிறானே - இதுதான் பிஜேபி தலைவர் அமித்ஷா கூறும் இந்து மதத்தின் உன்னதமான சிலாக்கியமா? இந்து மதத்தில் கடவுள்களே சண்டை போட்டு இருக்கிறதே - எதிரிகளைக் கொலைசெய்திருக்கிறதே, பெண்களை  வன்புணர்ச்சி செய்திருக்கிறதே - இந்து மதத்தில் கடவுள்கள் தம் யோக்கியதையே இப்படி இருக்கும் பொழுது எந்தத் தைரியத்தில் இந்து மதத்தைத் தூக்கிப் பிடிக்க இவர்களால் முடிகிறது?

வில் கலையில் தேர்ச்சி பெற்ற ஏகலைவன் கட்டை விரலை காணிக்கையாக கேட்டுப் பெற்ற துரோணாச் சாரியாரின் மனப்பான்மை தானே இந்து மனப்பான்மை? இதனை இன்னும் நியாயப்படுத்துகிறாரா அமித்ஷா?

இந்து மதம் தாராள சிந்தனை உடையது தானா? அப்படி இருந்தால் இந்தியாவின் பிரதமர் அனைத்து மக்களையும் அரவணைத்து அழைத்துச் செல்ல வேண்டிய கடப்பாடு உள்ளவர் என்ன சொல்லுகிறார்? நான்  இந்து நேஷனலிஸ்ட் என்று தானே கூறுகிறார். இதுதான் இந்துமதம்  ஊட்டுகிற உன்னதமான உயர் பண்பாடோ!

சராபுதின் கொலை வழக்கு, இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டர் போன்றவற்றில் சம்பந்தப்பட்ட அமித்ஷாதான் இந்து மதத்தைப் பற்றிச் சிலாகிக்கிறார்.

ஓநாய் சைவம் பேசுகிறது - ஆம் அமித்ஷா உயர் சீலங்களைப் பற்றியும் பேசுகிறார்.


தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறுகிறவர் தானே இவர்களின் ஜெகத்குரு! சுடுகாட்டிலும்கூடப் பேதம் இருப்பது சரிதான் என்பவர்கள்தானே இவர் களின் லோகக் குரு!

மதத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய பகுத்தறிவுவாதிகளே, சமதர்மவாதிகளே முன்வருக!

உலகம் முழுவதும் மதத்தின் பெயரால் படுகொலைகள்
மதங்களால் மக்களுக்கு அமைதியில்லை - ஒற்றுமையில்லை!
மதத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய பகுத்தறிவுவாதிகளே, சமதர்மவாதிகளே முன்வருக!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அழைப்பு!
இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்)  தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!

உலகம் முழுவதும் மதங்களின் பெயரால் படுகொலைகள் நடந்த வண்ணமே உள்ளன; மதங்களால் உலகில் அமைதி நிலவாது; ஒற்றுமை யும் ஏற்படாது. எனவே பகுத்தறிவுவாதிகளும், சமதர்மவாதிகளும் மத எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்திட முன் வருமாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
மத ஓடத்தில் ஏறிய மாந்தரே - பலி
பீடத்திலே சாய்ந்தீரே
என்று 70 ஆண்டுகளுக்கு முன் கவிதை வரிகளில் மக்களைப் பார்த்து, பரிதாபப்பட்டுக் கேட்டார் புரட்சிக் கவிஞர்.
மதம் என்பது மக்களை ஒரு போதும் ஒன்று சேர்ந்து அமைதியாக கூடிவாழ உதவி செய்யாது; அது தன் வெறியை உண்டாக்கி மனித குலத்தின் ஒற்றுமைக்கு உலை வைத்து அவர்களை நிம்மதியாக வாழ விட்டதாக வரலாறு இல்லை என்றார் தந்தை பெரியார்.
மதம் மக்களுக்கு அபின், போதை என்றார் கார்ல் மார்க்ஸ்.
மதம் மக்களுக்குச் செய்த நன்மை என்ன? என்று கேட்டு, இல்லை இல்லை என்று விளக்கம் கூறினார் இங்கர்சால்.
இக்கூற்றுக்கு இன்றும் - மனிதன் விண்வெளியில், ராக்கெட் விட்டு, பறந்து, அடுத்து செவ்வாய்க்கோளில் குடியேறவும் ஆயத்தமாகிறார்கள் என்ற செய்தி வரும் நிலையில், நமது ஞானபூமியில் மட்டும் மதச் சண்டை அதன் விளைவான ஜாதிச் சண்டை நடந்து கொண்டே உள்ள அவலம் அன்றாட அவலமாகக் காட்சியளிக்கிறது. மதவாதிகள் கூற்றும் - நடைமுறை முரண்பாடுகளும்
எந்த மதமும் மனிதர்களை ஒழுக்கவாதியாக சமூகத்தில் நல்லிணக்கமும் ஒற்றுமையும் நிலவுவதற்கே ஏற்பட்டன என்ற மதக் குருமார்களும், மதவியாபாரிகளும் இன்றுகூட கூறத் தவறுவதில்லை.
ஆனால், நடைமுறைக் காட்சி  முந்தைய வரலாற்றுக் காலம் முதல் இன்றைய கால நிகழ்வுகள் வரை என்ன?
அய்ரோப்பாவில் சிலுவைப் போர்கள் (Crusades) என்பவை முதல் தொடங்கி, இன்றும் மதங்களிடையே போர்களும், வன்முறைகளும் தொடர் கதையாகவே தொடருகின்ற கொடுமையின் கோரத் தாண்டவம் மாறி உள்ளதா? இல்லையே!
மூன்று கண்டங்களில் நடந்த மதக்கொலைகள்!
அண்மைக்காலத்தில் மூன்று கண்டங்களில் நிகழ்ந்த மதப் படுகொலைகள் மனித குலத்தின் மாண்பினைத் துடைத்தெறிகின்றன!
அந்தோ கொடுமை! கொடுமை!!
1. துனிஷியாவில் 37 (அந்நியர்கள் உட்பட)  சுட்டுக் கொல்லப்பட்டனர். தேசிய கண்காட்சி அகத்தில் இது நடந்துள்ளது.
2. குவைத் நாட்டில் மசூதியில் தொழுகையில் இருந்த வர்களை நோக்கி மனிதவெடிகுண்டு 25 பேர்களைக் கொன்றுள்ளது. (இவர்கள் ஒரே மதம்  - இஸ்லாமின் ஒரு பிரிவிற்கும் மற்றொரு பிரிவுக்கும் நடந்த சண்டை).
3. பிரான்சில் அமெரிக்கருக்குச் சொந்தமான தொழிற்சாலை - அதற்குமுன் ஒரு பத்திரிகை அலுவலகம்!
துனிஷியாவிலும், குவைத்திலும் மொத்தம் 67 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்!
பாபர் மசூதி இடிப்புக்குப் பின்
இதற்கிடையில் பாபர் மசூதி இடிப்புக்குப்பின் இந்தியாவில் சிறுபான்மைச் சமூகத்தவர்களான இஸ்லாமியர், ஹிந்துத்துவா பஜ்ரங்தளம் போன்ற தீவிரவாத குழுக்களால் அச்சுறுத்தப்படுகின்றனர்.
ஆஸ்திரேலியப் பாதிரியார் - தொழுநோயாளிகளுக்கு உதவிட குழந்தைகளோடு வந்து தொண்டு செய்த ஸ்டேன்ஸ் பாதிரியார் குடும்பத்துடன் எரிக்கப்பட்ட கதை மறக்கக் கூடியதுதானா?
75 வயது நிறைந்த கன்னியாஸ்திரி கல்கத்தாவில் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறார்; கிறித்தவர்களின் சர்ச்சு களும் இடிக்கப்படுகின்றன.
கர்வாப்சி என்ற கட்டாய மதமாற்றம் ஆக்ரா போன்ற பகுதிகளில் - தங்கு தடையின்றி நடைபெறுகின்றன.
மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சி உணவுக்குத் தடைச் சட்டம்!
உலகம் முழுவதும்கூட மதச் சண்டைகளுக்கு பஞ்சமில்லையே!
மதங்களுக்குள்ளேயே சண்டைகள்
இஸ்ரேல் - பாலஸ்தீனங்கள் பிரச்சினை இரு மதங் களின் அடிப்படையில் தானே ஏற்பட்டுள்ளன.
ஒரே மதத்திலும்  இச்சண்டை; எல்லா மதங்களிலும் இந்த நிலை! புத்தரின் பர்மா - மியன்மாவில் - இலங்கையில் - இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டு விரட்டப்படும் நிலை ஒருபுறம்; ஏற்கெனவே இலங்கை புத்த பூமி - ரத்த பூமி ஆனது  - சிங்கள இராஜபக்சே ஆட்சிகளில் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது!
மதம் மக்களுக்கு நன்மை செய்யாது. யானைக்கு வடகலை நாமமா? தென் கலை நாமமா? வழக்குக்கு சண்டைத் தீர்வு இன்னும் அர்த்தமுள்ள (?) இந்து மதத்தில் காணப்படவில்லையே!
எனவே, மதங்களால் கெட்டுள்ள உலக அமைதி - மக்கள் ஒற்றுமை கைப்புண் போலத் தெரிந்தும், இன்னமும் மத குருமார்களுக்கு செல்வாக்கும், செழுமையும் இருக்கலாமா?
இன்னமும் பாபா ராம்தேவ்களுக்கும், சங்கராச்சாரிகளுக் கும், ராம்பால் போன்ற ஹரியானா சாமியார்களுக்கும், ஆசாராம்களுக்கும் நித்தியானந்தா போன்ற காமக் கொடூரர்களுக்கும் (தனக்கு ஆண்மை இல்லை என்று பொய் சொன்ன மதத் தலைவர் இந்த மத வியாபாரி) செல்வாக்கு இருப்பது எதனால்?
மதத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய பகுத்தறிவாளர்களே முன்வருக!
ஊடகங்கள் ஊதிப் பெருக்குவதனாலும், அமைச்சர்கள் அடிபணிந்து விளம்பரப்படுத்துவதாலும் மக்களின் அறியாமையினாலும் தானே!
எனவே இதனை எதிர்த்து கடும் பிரச்சாரம் மனிதநேயப் பிரச்சாரம் செய்ய அனைத்துப் பகுத்தறிவாளர்கள், சமதர்மவாதிகள் முன் வர வேண்டும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...