Tuesday, November 1, 2011

பா.ஜ.க. - ஆளும் 9 மாநிலங்களிலும் ஊழல் அத்வானி ஒப்புதல்


பா.ஜ.க. - ஆளும் 9 மாநிலங்களிலும் ஊழல் அத்வானி ஒப்புதல்

மங்களூர், நவ.1 - கருநாடகம் உட்பட ஒன்பது மாநிலங்களில் பாரதீய ஜனதா ஆட்சி செலுத்துகிறது. எல்லா இடங்களிலும் ஊழல் இருக்கத்தான் செய் கிறது. அதிகபட்சமாக கருநாடகத்தில் ஊழல் கொடி கட்டிப் பறக்கிறது என்று ஒப்புக் கொண்டார் எல்.கே. அத்வானி.

லஞ்சம், ஊழல் மற்றும் கறுப்புப் பணத் துக்கு எதிராக பொது மக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்துவ தாகக் கூறி பா.ஜனதா முன்னணித் தலைவர் எல்.கே.அத்வானி ரத யாத்திரை மேற் கொண்டு வருகிறார். இந்த ரத யாத்திரை நேற்று முன் தினம் கருநாடக மாநி லத்துக்கு வந்தது. பெங் களூருவில் நேற்று முன் தினம் மாலை நடை பெற்ற பொதுக்கூட்டத் தில் கலந்து கொண்டு அத்வானி பேசினார்.

கருநாடக மாநிலத் தில் 2ஆவது நாளாக அத்வானியின் ரதயாத் திரை நேற்று மங்களூரு வந்தது. இந்த ரதயாத் திரையில் கலந்து கொள் வதற்காக நேற்று காலை 9 மணியளவில் தனி விமானம் மூலம் அத் வானி, மங்களூரு வந் தார். பின்னர் மங்களூரு வில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அத்வானி பேசியதாவது:  ஊழல் மற்றும் கறுப்புப் பணத்துக்கு எதிராக தொடங்கிய எனது யாத்திரை, 23 மாநிலங்களுக்கு செல்ல உள்ளது. தற்போது 13 மாநிலங்களில் யாத்திரையை முடித்து விட்டு 14ஆவதாக கருநாடக மாநிலத்துக்கு வந்துள்ளேன். இங்கு வந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சுவிஸ் வங்கியில் இந்தி யாவின் கறுப்பு பணம் ரூ.50 லட்சம் கோடி உள்ளது.  இந்த பணம் இருந்தால் இந்தியா முழுவதும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளலாம். புதிய இந்தியாவையே உருவாக்கலாம்.  என்னை கருநாடகத் துக்கு வரவேண்டாம் என்று சிலர் கூறினார் கள். ஆனால் நான் கரு நாடகத்துக்கு வருவது மிகச்சரியானதாக இருக் கும் என்று கருதினேன். மத்திய அரசில் உள்ள ஊழலுக்காக கவலைப் படும் வேளையில் நமது கட்சியில் அதுபோன்ற குறைபாடுகள் இருந் தால் அது அதைவிட கவலை அளிக்கும் விஷ யம். எனவே கண்டிப் பாக கருநாடகத்துக்கு செல்ல வேண்டும் என்று கருதினேன். இங்கு புதிதாக முதல் அமைச் சர் பொறுப்பு ஏற்று உள்ள சதானந்த கவுடா என்னிடம் உறுதி மொழி அளித்து உள் ளார். ஊழலை ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என்று உறுதி அளித்து உள்ளார். மத்திய அரசின் ஊழலை எதிர்க்கின்ற வேளையில் நமது கட்சியில் அது போன்ற குறைபாடுகள் உள்ளன.  இது கவலை கொள்ளச் செய்யும் விஷயமாகும்.
பாரதீய ஜனதா மற்றும் அதன் கூட் டணிக் கட்சிகள் 9 மாநி லங்களில் ஆட்சியில் உள்ளன. அங்கெல்லாம்  சில எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள்மீது  ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால் கருநாடகம் அளவுக்கு இல்லை. எனவே நான் கண்டிப்பாக கருநாட கத்திற்கு செல்லவேண் டும் என்று கருதினேன். அதன்படி உங்களை சந்திக்க வந்துள்ளேன் என்றார்.

அத்தைக்கு மீசை முளைக்கும் முன்பே...


அத்தைக்கு மீசை முளைக்கும் முன்பே...


அத்தைக்கு மீசை முளைப்பதற்கு முன்பே பி.ஜே.பி.யில் அடிதடி களேபரமாகக் கிளம்பி விட்டது. அடுத்த பிரதமர் அத்வானியா - மோடியா என்ற மோதல் ஒருபுறம் இருக்கட்டும்.
ரத யாத்திரை புறப்பட்ட அத்வானியின் பக்கத்தில் பொதுக் கூட்ட மேடையில் யார் உட்காருவது என்கிற உள் குத்தும் ஆரம்ப மாகி  விட்டது.
கட்சியின் பொதுச் செயலாளர் அனந்த குமார் - செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் இவர்களுக் கிடையேதான் இந்தப் போட்டி.
சத்தீஸ்கர் மாநில ராய்ப்பூர் பொதுக் கூட் டத்தில், அத்வானிக்கு முன்பாக யார் பேசுவது என்பதில் குடுமிப் பிடி சண்டையாம்! பொது மேடையிலேயே இந்தக் கூத்து - மக்கள் என்ன நினைப்பார்கள்? அத்தைக்கு மீசை முளைக்கு முன்பே இந்த உள் குத்து என்றால் மீசை முளைத்தால் என் னாவது என்றுதானே நினைப்பார்கள்?

சுழி!
மதுரை - மேலூர் நகராட்சியின் 15ஆவது வார்டில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட ஜோதிலட்சுமி பெற்ற வாக்குகள் சுழி! (பூச்சி யம்) ஏன் அவர் வாக்கு என்னாயிற்று? அந்த வார்டில்  அவருக்கு வாக்கு இல்லையாம்!

முருகன் சக்தி?


திருச்செந்தூர் முருகன் கோவிலில் நேற்று சூரசம்ஹாரமாம் விழாவுக்காக மேடை அமைக்கப்பட்டு பிரமுகர்கள் (அமைச்சர்கள் உட்பட) உட்கார்ந்திருந்தனர். கூட்ட நெரிசலால் பளு தாங்காமல் மேடை சரிந்ததால் பிரமுகர் களும் சரிந்தால் - சிலருக்குக் காயமாம். திருச்செந்தூர் முருகன் அம்பு பிரமுகர்கள் பக்கம் திரும்பி விட்டதோ!
எந்த சூரனைமுருகன் சம்ஹாரம் செய்தார்? அர்ச்சகப் பார்ப்பான் தானே ஒரு பொம்மைமீது அம்பை எய்தான். பிள்ளை விளையாட்டு என்று வடலூர் இராமலிங்கனார் இதைத்தான் சொன்னாரோ!

1-11-2011


1-11-2011



1-11-2011 ஆகிய இந்நாள் அதிர்ஷ்ட நாளாம். தேதி 1, மாதம் 11,  வருடம் 2011 (இதிலும் பதினொன்று வருகிறதல்லவா?) இதே போல வரும் 11 ஆம் தேதியும் அதிர்ஷ்ட நாளாம். இந்த நாள்களில் கூட்டுத் தொகை முறையே அய்ந்து, ஆறு வருகிறதாம். அத னால் அதிர்ஷ்டமான நாள் களாம்.
எதைக் கூட்டினாலும் ஏதாவது ஒரு கூட்டுத் தொகை வரத்தான் செய்யும். அப்படி வந்தால் அது அதிர்ஷ்ட நாள் இல்லையோ! விடையைக் கீழே எழுதிவிட்டு மேலே எண்களைப் பொறிக்கும் ஏமாற்றுத்தனம் இது. முதலில் அதிர்ஷ்டம் என்றால் என்ன? திருஷ்டம் என்பதன் எதிர்ப்பதம். திருஷ்டம் என்றால் பார்வை. அதிருஷ்டம் என் றால் பார்வையற்ற தன்மை - குருட்டுத்தனம் என்று பொருள்.
அதிர்ஷ்டம் என்பதற்கு இப்பொழுது பொருள் விளங்கி விட்டதா? அதிர்ஷ்டம் அழைக்கிறது அடிக்கிறது என்றால் குருட் டுத்தனம் உன்னை அழைக் கிறது அடிக்கிறது என்று பொருள்.
இருந்தும் இருந்தும் குருட்டுத்தனம் என்கிற பொருளுடைய அதிர்ஷ்டத் தையா பெருமையாகக் கொள்வது!
எண் இராசிப்படி சிம்மம், கடகம், தனுசு, மிதுனம், துலாம் ஆகிய ராசிக்காரர்களுக்கு ராகு-கேது தோஷக்காரர்களுக்கு இந்நாளில் தோஷம் நீங்கு மாம். (திருமண தோஷம் - புத்திர தோஷம் நீங்குமாம்.)
இதற்காக இன்று கோவில்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்த வேண்டுமாம். (இதுதான் முக்கியம். எந்தக் கழி சடைத்தனத்தைச் சொல்லி யாவது கோவில் சுரண்டல் தங்குத் தடையின்றித் தொடர்ந்து நடந்தாக வேண்டுமே - புரோகிதன் வீட்டுக் கல்லாப் பெட்டி நிரம்பி வழிய வேண்டுமே!)
ராகு-கேது என்று இரண்டு கிரகங்களைச் சொல்லுகிறார்களே. அப்படி ஏதாவது இந்தக் கிரகங்கள் இருக்கின்றனவா? அறிவி யல் விஞ்ஞானிகள் அப்படி எந்தக் கிரகமும் கிடையாது. இப்படிச் சொல்லுவது படு முட்டாள்தனம் என்கின் றனர்.
நவக்கிரக (9) பட்டிய லிலிருந்து புளூட்டோவை விஞ்ஞானிகள் இப்பொழுது நீக்கி விட்டனர். புதிய கிரகங்களையும் கண்டு பிடித்துள்ளனர். இவையெல் லாம் சோதிடத்தில் கணக் கிடப்படவில்லையே!
ராகு-கேது என்கிற பாம்பு சந்திரனை விழுங்கு கிறதாம். அதனால்தான் சந்திரனுக்கு தேய்மானம் (தேய்ப்பிறை) என்று உளறுகின்றனர்.  சந்தி ரனை ஏன் இந்த பாம்புகள் விழுங்கினவாம்? அதற்கு ஒரு கதை உண்டு. குரு பத் தினியை சந்திரன் கற் பழித்து விட்டானாம்!
அதனால் சந்திரனுக்கு இந்தச் சாபமாம்!
மூடத்தனம் + ஆபாசம் + சுரண்டல் இவற்றின் மொத்த கூட்டுத் தொகை தான் இந்து மதம்! புரி கிறதோ!
-மயிலாடன்

சூரசம்ஹாரமாம்!


சூரசம்ஹாரமாம்!


இன்று சூரசம்ஹாரமாம். சூரபத்மனை முருகன் கொன்ற நாளாம். கடவுள் ஒருவனைக் கொலை செய்கிறது என்கிற தீய நடவடிக்கைகள் எல்லாம் இந்து மதத்தில் சர்வ சாதாரணம்.

நாகப்பட்டினத்தையடுத்த சிக்கலில் உள்ள சிங்கார வடிவேலனிடம் (முருகனிடம்) வேல் வாங்கி திருச்செந்தூரிலே சூரபத்மனை முருகன் வதம் செய்தானாம். கந்தசஷ்டி என்று சொல்லி முருகனுக்காக ஆறு நாள் விரதம் இருந்து ஆறாவது நாள் முருகன் இருக்கும் கோயில்களில் அசுரனை முருகன் வேல் கொண்டு தாக்கி அழிப்பதுதான் சூரசம்ஹாரம் என்று சொல்லப் படுகிறது.

இதற்காகக் கூறப்படும் கதைகள் எல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை துக்கடாக்களாக இருக்கும்.

சிவனின் மாமனாராகிய தட்சன் யாகம் ஒன்றை நடத்தினானாம். தன் மகள் பார்வதியையும், மருமகன் சிவனையும் யாகத்திற்காக அழைக்க வில்லையாம். ஆனால் மற்ற மற்ற கடவுள்களையும், தேவர்களையும் அழைத்துத் தடபுடலாக யாகத்தை நடத்தினானாம்.

கோபம் கொண்ட சிவனும், பார்வதியும் அந்த யாகத்தை அழித்து விட்டார்களாம். (அவமதிப்பு - கோபம் - அழிப்பு - இவைதான் கடவுள் சங்கதிகளா? இவற்றில் உயர்ந்த ஒழுக்கம், முன்மாதிரியான குணங்கள் ஏதாவது இருக்கின்றனவா?)

மகளாகிய பார்வதி ருத்ரகாளியாகவும், மருமகனாகிய சிவன் வீரபத்திரனாகவும் உரு கொண்டுதான் அந்த யாகத்தை அழித்தார்களாம். அதோடு விடவில்லை. மாமனாருக்கே சாபம் கொடுத்தான் சிவன். நீ ஆட்டுத் தலையுடன் திரிவாயாக - மறுஜென்மத்தில் உனக்கு அசுர குணங்கள் ஏற்படுவதாகுக. உன்னை அடக்க என்னில் பிறந்த ஒரு சக்தி வரும். என் மகனாகிய சுப்பிரமணியன்தான் அந்த சக்தி - அவன் உன்னை வதம் செய்வான் என்று சிவன் சாபம் கொடுத்தானாம்.

சூரனின் உடலை இரண்டாகப் பிளந்து ஒரு பகுதியை தனது வாகனமான மயிலாகவும், இன்னொரு பகுதியினை சேவலாக்கி தனது கொடியாகவும் ஆக்கிக் கொண்டான் முருகன்.

என்று புராணங்களையும், தல புராணங் களையும் எந்தக் காலத்திலோ அறிவுக்குப் பொருந்தாத வகையில் கிறுக்கியவற்றிற்கெல்லாம் கோவில் வடிவம் கொடுத்து இப்படி ஆண்டுதோறும் சூரசம்ஹாரம் என்றும், தேர் என்றும், திருவிழா என்றும், காவடி என்றும் முழுக்கு என்றும் மக்களின் அறிவை மழுங்கடித்து அவர்களின் உழைத்துச் சேர்த்த பொருளையும், பயனுள்ள பொழுதையும், உழைப் பையும் சுரண்டி மக்களின் சிந்தனா சக்தியைச் சிதறடித்து ஒன்றுக்கும் உதவாத மவுடிகளாக மாற்றுவதற்குச் செய்யப்பட்டவை தான் இந்த ஏற்பாடுகள்.

இந்தக் கதைகளை ஊசி முனை அளவுக்காவது நம்பும்படியாக ஏதாவது இருக்கிறதா? இவற்றை நம்புவதால், சூரசம்ஹாரத்தைப் பார்ப்பதற்காக செலவு செய்வதால் நமக்கு ஏற்படப் போகும் பலாபலன்கள் என்ன? ஏற்கெனவே பலன்கள் ஏற்பட்டுள்ளனவா? இப்பொழுதாவது ஏற்பட்டு வருகிறதா?

பக்தர்களின் வறுமை ஒழிந்ததா? நோய் - நொடிகள் அகன்றனவா? நிம்மதியான வாழ்க்கை தான் அவர்களுக்குள் கிடைத்ததா?

குறைந்தபட்சம் தனி ஒழுக்கம், பொது ஒழுக்கம் இவற்றிற்காவது ஏதாவது பயன் உண்டா?

கந்தபுராணத்திற்கு விஞ்சிய புராணம் வேறு எந்தப் புராணத்திலும் கிடையாது என்று பக்தர்களே கூறும் அளவுக்குத்தானே அதன் யோக்கியதை அமைந்திருக்கிறது.

அதுவும் கந்தன் என்று கூறப்படும் அந்தச் சுப்பிரமணியனின் பிறப்பு ஆபாசக் கடலாக அல்லவா இருக்கிறது?

நூறு தேவவருட காலம் சிவன் தன் மனைவியைப் புணர்ந்தான் என்று சொல்லுவ தெல்லாம் எத்தகைய அருவருப்பு! ஒரு தேவ வருடம் என்றால் 365 ஆண்டுகள்; நூறு தேவ வருடங்கள் என்றால் 36500 ஆண்டுகள் மனைவியைப் புணர்ந்தான் என்பது எவ்வளவு காட்டு விலங் காண்டித்தனம்!

பக்தியில் புத்தியைப் பறி கொடுப்பதால் இத்தகைய ஆபாசங்களையும், அருவருப்புகளையும் கண்ணில் ஒத்திக் கொள்கிறார்களே - இது நியாயமா - சரியா?  சிந்திப்பீர்!

பேராசிரியர் அறவாணன் அவர்களுக்கு . . .


கடவுள் : வால்ட்டேரும் பெரி யாரும் எனும் தலைப்பில் பேரா சிரியர் க.ப.அறவாணன் ஜனசக்தி நாளேட்டில் (24.9.2011) கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார்.

லூயி மன்னர்களின் கொடுங் கோல் ஆட்சியில் இருந்த ஃபிரென்ச் மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த எழுத்து வால் டேருடையது. இது போன்ற தனிப் பெருமையைப் பெரியாருக்கு நாம் சூட்டிவிட முடியாது என்று எழுதியுள்ளார்.

இது ஒரு தேவையில்லாத விஷமமான வீண் வம்பு வேலை! ஒவ்வொரு நாட்டின் சூழலும், பிரச்சினையும் மாறு படுகின்றன. வெறும் எழுத்துகளால் நம் நாட்டை நிமிர்த்திவிடமுடியாது.

எழுத்து பேச்சு இவற்றோடு களங்கள் பலவற்றையும் காண வேண்டிய அவசியம் இங்கு உண்டு.

வால்ட்டேர் வெறும் எழுத்தாளரே தவிர, களங்கள் கண்டவர் அல்லர்.

ஆனால் தந்தை பெரியார் அவர்கள் தத்துவத்தின் கர்த்தாவாகவும் இருந்தார்; பிரச்சாரகராகவும் இருந்தார்;  களங்கள் கண்டு சிறையேகியும் உள்ளார்.

நேரிடையாக அனுபவிக்கும் ஒரு அரசனின் கொடுமைகளைக் கண்டு அவற்றால் பாதிப்புக்கு ஆளாகிய மக்கள் கொந்தளித்து எழுவது எளிதானது - இயல்பானது.

தாங்கள் பாதிக்கப்படுகிறோம் - வஞ்சிக்கப் படுகிறோம் - இழிவு படுத்தப்படுகிறோம் என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் ஆதிக்கக்காரர்கள் கிழித்த பக்தி வட்டத்துக்குள் சிக்கி, தாங்களாகவே தங்கள் மூளைக்கு விலங்கு மாட்டிக் கொண்ட மக்களின் அறிவைத் திருத்தம் செய்வது - போராடுவது என்பது எளிதானதன்று.

சிந்திப்பதே கூட பாவம் என்று கருதிய மக்கள்! மாற்றம் என்பது பாவகதிக்குத் தங்களைப் பிடித்துத் தள்ளக்கூடியது - இழிவையும் அடிமைத்தனத்தையும் இந்தப் பிறவியில் பதற்றம் இல்லாமல் அனுபவித்தால்தான் போகிற கதிக்கு நல்லது நடக்கும் என்று முரட்டுத்தனமாக நம்புகிற மக்களிடத்திலே தந்தை பெரியார் அவர்கள் பேசியதும், எழுதியதும், இயக்கம் கண்டதும் வால்டேருக்கு மேல் ஆயிரம் மடங்கு கூடுதலாகும். இந்து மதத்தை எதிர்ப்பது கிறித்துவ மதத்தை எதிர்ப்பதை விட மிக வும் கடுமையானது!  பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு வால்டேரின் வழிகாட்டுதல் அங்கு தேவைப்படவில்லை.

இங்கு அப்படியல்ல!  ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக சூழ்ந்த அறியாமை இருட்டு வவ்வால்களாக இருந்த மக்களுக்கு அங்குலம் அங்குலமாகக் காட்டுதல்களும், கை தாங்குதல்களும், தூக்கி விடுதல்களும் தேவைப்படுகின்றன.

தன் மறைவிற்குப் பிறகும் தக்க பாதுகாப்பான ஏற்பாடுகள் தேவைப்பட்டன தந்தை பெரியாருக்கு. வால்ட்டேருக்குப் பிறகு அவரைத் தொடரும் இயக்கம் கிடையாது அங்கு; இங்கோ இயக்கம் தேவைப்பட்டது - அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, பகுத்தறிவுத் தொண்டு தொடரும் நிலையை அறிய முடியும். பெரியார் காட்டிய இந்த சுயமரியாதை - பகுத்தறிவு நெறி - வால்ட்டேர் வாழ்ந்து எழுதிக் காட்டிய பிரஞ்சு நாடு உட்பட உலகுக்கே தேவைப் படும் பரிணாமத்தைப் பெற்றுள்ளது.

மத அச்சுறுத்தலின் பிடியில் உலக மக்கள் இன்று; தாலி பான்களும், காவிகளும் மதவெறியர்களும் மானிடத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாகவே உள்ளனர்.

இந்த நிலையில் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு நெறி காலத்தைக் கடந்து வெல்லக் கூடிய ஆற்றல் மிக்கது.

தந்தை பெரியார் என்கிறபோது இவ்வளவு கனபரி மாணங்களும் உண்டு என்பதைப் புரிந்து கொள்ளாமல் எழுதுவது அறவாணன் போன்ற மெத்தப் படித்தவர்களுக்குத் தேவையில்லாத ஒன்றே! பார்ப்பனர்களும் தமிழர்களே என்று எழுதப்போய் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளவர் - இப்பொழுது தந்தை பெரியார் பற்றியும் தவறாக எழுதி தேவையில்லாத விமர்சனத்துக்கு ஆளாவது ஏனோ?

பெரியார் சொன்ன குட்டிக்கதை


ஒரு சிறு கதையை உங்களுக்குக் கூறுகின்றேன். ஒரு எஜமான் குதிரைமேல் போனான். ஆள் ஒருவன் பாதுகாப்புக்குப் பின்னே போனான். குதிரைமீது உள்ள மூட்டை ஒன்று விழுந்துவிட்டது; அது எஜமானனுக்குத் தெரியாது. ஆனால் வேலையாள் பார்த்தும் எடுக்காமல் வந்துவிட்டான்.

எஜமான் கேட்டான் எங்கே மூட்டை என்று, எஜமான் மூட்டை அங்கேயே விழுந்துவிட்டதே என்றான். அட மடையா ஏண்டா விட்டுவிட்டு வந்தாய்? ஏன் எடுத்து வரவில்லை? என்றான் எஜமான். நீங்கள்தான் எடுத்து வரும்படி சொல்லவில்லையே என்று வேலையாள் சொன்னான். மடையா இனி எது விழுந்தாலும் எடுத்து வா என்றான். வேலையாளும் சரி ஆகட்டுங்க என்றான்.

மற்றொரு தடவை எஜமான் குதிரையில் போகும்போது குதிரை லத்தி போட்டது. உடனே வேலையாள் அவைகளையெல்லாம் வேட்டியில் மூட்டை கட்டிக் கொண்டு போய் எஜமான்! கீழே விழுந்த இவைகளை எல்லாம் கொண்டு வந்து இருக்கின்றேன் என்றான்.
அதற்கு எஜமானன் ஏண்டா மடப் பயலே இப்படி இதையெல்லாம் கட்டிக் கொண்டு வந்து இருக்கின்றாய்? என்றான். அதற்கு அவன் ஏனுங்க எஜமான் நீங்கள் தானே விழுகின்ற எதையும் விடாமல் எடுத்துவாடா என்று கூறினீர்கள் என்றான்.

அதற்கு எஜமானன் மூட்டை விழுந்ததற்குச் சொன்னால் அதற்காக இப்படியா செய்வது போடா மடையா என்று கூறினான்.

அவன் என்ன பண்ணுவான் அவன் புத்தி அப்படி. அவன் புத்தி வளர்ச்சியடையும்படியான பக்குவம் அவனுக்கு அளிக்கப்படவில்லை.

அதுபோலத்தான் இன்று நமது சமுதாயத்தின் அறிவின் நிலையும் உள்ளது.

கிரிக்கெட் திருவிழா!


தமிழ்நாட்டில் கிட்டிப்புள் என்னும் மறுவிளையாட்டுதான் கிரிக்கெட். கிரிக்கெட் விளையாட்டை ஆங்கிலேயர்கள்தான் பெரிதும் வளர்த்தனர். அதற்கு ஒரு முக்கியமான காரணமும் உண்டு, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அடங்கிய நாடுகளில் சுதந்திரப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டபோது அதனை மழுங்கடிக்க இதனை ஒரு ஆயுதமாகப் பயன் படுத்தினர். அடிமை நாடுகளுடைய மக்களிடம் இதில் மிகுதியான ஆர்வத்தை ஏற்படுத்தி அவர்களை ஆடும்படி செய்தனர். இருபது ஓவர், ஒரு நாள்போட்டி என்பதெல்லாம் இப்போது உருவாக்கப்பட்டதுதான்.

அப்போது அய்ந்து நாட்கள் விளை யாடும் டெஸ்ட் மட்டுமே இருந்தது. உலகிலேயே அதிக நாட்களும், அதிக நேரமும் எடுத்துக் கொள்ளும் போட்டியாக இது இருந்தது. அடிமை நாடுகளின் இளைஞர்களிடம் இந்த விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத் துவதன் மூலம் சுதந்திரப் போராட்ட உணர்வுகளை மறக்கடிக்கலாம் என ஆஙகிலேயர்கள் கருதினர்.

உலகில் 200--க்கும் மேற்பட்ட நாடுகள் இருந்தபோதிலும் 15 நாடுகள் மட்டுமே கிரிக்கெட் விளையாடு கின்றன. அதிலும் இந்தியா, பாகிஸ் தான், பங்களாதேஷ், இலங்கை, ஆஸ் திரேலியா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள் என அனைத்து நாடுகளும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் அடிமை களாய் இருந்த நாடுகள்.

அய்ரோப்பிய நாடுகளில் உலகின் எந்த ஒரு நாட்டின் விளையாட் டையும் எளிதாகக் கற்றுக் கொண்டு அதில் முன்னணி வகிக்கின்றன. உதாரணமாக எமது தேசிய விளை யாட்டாகிய ஹாக்கியை அவர்கள் கற்றுக் கொண்டு பல்லாண்டுகளாக இந்தியாவின் மணிமகுடமாக இருந்த வெற்றி விளையாட்டிற்கு இப்போது அவர்கள் தலைமை தாங்குகின்றனர். அதுபோலவே வல்லரசு நாடுகளாகிய அமெரிக்கா, ரஷ்யா போன்றவை ஒலிம்பிக்கில் பல விளையாட்டுகளில் தங்கப்பதக்கங்களை குவிக்கின்றன. ஆனால் ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற முன்னேறிய நாடுகளோ கிரிக்கெட் விளையாட்டின் பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை. இதற்குக் காரணம் என்ன?

கடமை கண் போன்றது. காலம் பொன் போன்றது என்று சொல்லு வார்கள். முத்தமிழ்காவலர் கி-.ஆ.பெ. விசுவநாதம் அய்யா அவர்கள் இதனை மறுத்துரைப்பார், காலம் போன்றது அல்ல, அது உயிர்  போன்றது என்பார். பொன்னை இழந்தால் உழைப்பால் அதனைப் பெறமுடியும். ஆனால் காலத்தை நழுவ விட்டால் அது திரும்ப வரவே வராது அல்லவா! எந்த ஒரு முன்னேறும்  நாடும், நேர நிருவாகத் திற்கு அதிக முக்கியத்துவம் அளிப் பார்கள். நாட்டின் முக்கிய செல்வமாகிய இளைஞர்களின் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். அதனால்தான் அந்த நாடுகளில் கிரிக்கெட்டிற்கு எவ்வித முக்கியத்துவமும் அளிப்பதில்லை. உலகில் 200-க்கு மேற்பட்ட நாடுகளில் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஏனெனில் அவ் விளையாட்டு முன்பாதி 45 நிமிடம் பின் பாதி 45 நிமிடத்தில் முடிவடைந்து விடுகிறது, ஒலிம்பிக்கிலும் கிரிக்கெட் டிற்கு இடம் அளிக்கப்படுவதில்லை. ஒருசமயம் எண்ணெய் வள நாடுகள் ஒன்றுகூடி நம்நாட்டு இளைஞர்கள் வலிமை மிக்கவர்கள், அதனால் அவர்களுக்கு கிரிக்கெட்டை கற்றுக் கொடுத்தால் உலகளவில் பிரபலமடை வார்கள் என்று ஆலோசனை நடந்தது. ஆனால் ஒபர்ஸ் எனப்படும் எண் ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பு இதற்கு ஆதரவு அளிக்கவில்லை. நம் தேசத்தில் எண்ணெய் வளம் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு உட் பட்டது.

இளைஞர்களே நாட்டின் நிரந்தர செல்வம். அவர்கள் தங்கள் நேரத்தை கடும் உழைப்பில் செலவிடவேண்டுமே தவிர, இம்மாதிரி பொழுதைப்போக்கும் விளையாட்டில் ஈடுபடுத்தலாகாது. வேண்டுமானால் விளையாடும் நாடுகளில் உள்ள வீரர்களை இங்கு விளையாடச் சொல்லிப் பார்த்துக் கொள்ளலாம். அதுதான் ஷார்ஜா கிரிக்கெட். ஆனால் அந்த நாட்டினர் விளையாட அனுமதி இல்லை. சில நாடுகள் தங்கள் நாட்டில் கிரிக்கெட்டிற்கு எவ்வித முக்கியத் துவமும் அளிக்காததுடன் மற்ற நாடு களில் விளையாடும் போட்டிகளையும் தங்கள் நாட்டுத் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புவதில்லை.

இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடி. உலகிலேயே அதிக இளைய சமுதாயத்தைக் கொண்ட நாடு இந்தியா! அவர்களை கல்வியிலும் தொழிலிலும் ஈடுபடுத்தும் நாடு. வெகுவிரை-வில் முன்னேறி உலகின் தலைசிறந்த வல்லரசுகளில் ஒன்றாகத் திகழும். ஆனால் மத்திய- மாநில அரசுகளும் மக்கள் தொடர்பு சாத னங்களும் வேறு எந்த விளையாட்டிற் கும் இல்லாத முக்கியத்துவத்தை இந்த விளையாட்டுக்கு மட்டும் அளிப்பது எவ் விதத்திலும் நாட்டிற்கு உகந்தது இல்லை.

பெருமளவு பணம் புரளும் இந்த விளையாட்டில் ஊழலுக்கும் பஞ்ச மில்லை. மேட்ச் பிக்சிங் என்று முன் கூட்டியே சூதாட்டத்திற்கு ஏதுவாக விளையாட்டை அமைத்து மக்களை முட்டாள் ஆக்குகின்றனர்!

பணம் பெற்றுக்கொண்டு இவ்வாறு விளை யாடியது உண்மைதான் என தென் ஆப்பிரிக்கா முன்னாள் கேப்டன் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது அனைவரும் அறிந்ததே. இவ்வாறு ஆடியதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு வீரர்கள் பணம் பெற்றுக் கொண்டு போலியாக ஆடக்கூடாது என கடுமையாக எச்சரிக்கை செய்தது.

இந்தியாவின் பாரம்பரியமான ஹாக்கி விளையாட்டில் இந்தியா கொடிகட்டிபறந்தது-. மூன்றுமுறை ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றுத் தந்தார் தயான் சந்த் என்ற இந்தியாவின் மாவீரர். இந்த கிரிக்கெட் போட்டியில் நன்றாக விளையாடிய டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என பலரும் பரிந்துரைக் கிறார்கள். முதலில் தாயான்சந்துக்கு அல்லவா அந்த விருதை அளிக்க வேண்டும். டெண்டுல்கரின் ஒருநாள் வருமானம் 1/2 கோடி என தெரிவிக் கப்படுகிறது. இதில் எவ்விதப் பெருமையும் இல்லை.

வசதி உள்ள அவர் தனது ஒவ்வொரு நாள் வருவா யிலும் 50 லட்சத்தை தான் வைத்துக் கொண்டு அல்லது 1 கோடியை கூட தான் வைத்துக் கொண்டு மீதியை ஏழைகளுக்கு கொடுக்கிறார் என்றால் அது வல்லவா பெருமை. இருப்பினும் அவரிடம் விளையாட்டுத் திறமையுடன் சிறந்த பண்பும் உண்டு. அவரது தந்தையாரின் அன்புக் கட்டளைப்படி மதுவினை தொடாது இருப்பதுடன் எவ்வளவு வருவாய் வந்தாலும் மது வுக்கான விளம்பரங்களில் நடிப்ப தில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறார். 

அகில இந்திய அளவில் பூரண மதுவிலக்கு பிரச்சாரம் செய் வதற்கு அவர் முற்றிலும் தகுதியானவர் ஆவார். மது ஒழிப்புப் பிரச்சார இந்திய தூதராக அவர் செயல்பட்டால் அந்த மனித நேயத்திற்காக அவருக்கு தாராளமாக பாரத ரத்னா விருது அளிக்கலாம்.

பாரத ரத்னா விருது பெற முற்றிலும் தகுதியான மற்றொரு விளையாட்டு வீரரும் இந்தியாவில் அதிலும் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வர் என்பதில் நாம் மிகவும் பெருமைப்படலாம். உலகிலேயே அறிவுத்திறன் மிக்க விளையாட்டாக பல நூற்றாண்டுகளாக விளையாடப் பட்டு வருவது சதுரங்கம். இது இந்தி யாவில் மன்னர்களால் விளையாடப் பட்டு வெளிநாடுகளுக்குச் சென்றது என்றும் சொல்வார்கள்.

இத்தகைய சிறப்புமிக்க விளையாட்டில் அமெரிக்கா, அய்ரோப்பா, ரஷ்யா நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. அந்த ஆதிக்கத்தை முற்றாக முறியடித்து உலக சாம்பியன் ஆனார் நமது திரு.விஸ்வ நாதன் ஆனந்த். அந்த பட்டத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண் டுள்ளார். அத்தகைய மாபெரும் விளை யாட்டு வீரருக்கு இந்தியப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் கொடுத்ததற்குக் கூட சில சிக்கல்கள் எழுந்தன.

கேரம் விளையாட்டில் உலகப் பட்டம் வென்றவரும் ஒரு தமிழச்சி தான். அந்த இளவழகிக்குப் பாராட்டு தெரிவிக்க அவரது வீட்டிற்குச் சென்றபோது குடிசை போன்ற சிறய வீட்டில் வசித்தது கண்டு பிரமித்துப் போனேன். அந்த அளவிற்கு ஏழ்மை யான குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். பேட்மிட்டனில் பிரகாஷ் படுகோனே, டென்னிசில் திரு.ரமேஷ் கிருஷ்ணன், திரு.விஜய் அமிர்தராஜ், திருமதி சானியா மிஸ்ரா, இரட்டையர் திரு மகேஷ்பூபதி, பயஸ் இவர்கள் எல்லாம் சர்வதேச அளவில் சாதனை படைத் துள்ளார்கள். பில்லியட்ஸ் போன்ற விளையாட்டிலும், ஓட்டப்பந்தயத்திலும் மில்காசிங், திருமதி பி.டி.உஷா ஆகி யோர் உலகம் கவர்ந்த விளையாட்டு வீரர்கள்.

கபடி எனப்படும் சடுகுடு விளை யாட்டில் இந்தியா தான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. திறமையான பல விளையாட்டு வீரர்கள் வெளிநாட்டிற்குப் பயிற்சிக்குச் செல்லப் பணம் இல்லாமல் தவிக்கின்றனர். இவ்வளவு மக்கள் தொகை கொண்ட நமது இந்தியா ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் கூட வெல்ல முடியாததற்குக் காரணம், அரசும் தனியார் நிறுவனங்களும் திறமைமிக்க வீரர்களை ஊக்குவிக் காததுதான். கிரிக்கெட்டிற்கு செலவிடும் பணத்தில் ஒரு பங்கில் இம்மாதிரி விளையாட்டிற்குப் பயிற்சி அளித்தாலே இந்தியா ஒலிம்பிக்கில் பல தங்கங்களை வெல்லமுடியும்.

ஒரு சிறிய சம்பவம். அலுவலகத்தில் இருந்து எனது அறைக்கு அதற்குரிய வாடகை பேசி வந்தேன். கீழே இறங்கியதும் அந்த ஆட்டோ ஓட்டுநர் அன்பாக அய்யா மேலும் ஒரு 50 ருபாய் கொடுக்க முடியுமா என்று கேட்டார். ஏன் இப்படி கேட்கிறாய் என்ற போது அய்யா இன்று முழுவதும் நீங்கள் ஒருவர் தான் சவாரி. அத்துடன் நான் காலையிலேயே ஆட்டோ எடுத்து வந்துவிட்டேன். வரும்போது ஒரு கடையில் தொலைக்காட்சி கிரிக்கெட் விளையாட்டை ஒளிப்பரப்பிக் கொண்டு இருந்தார்கள். விளையாட்டு முடியும் வரை அங்கேயே இருந்ததால் வேறு எங்கேயும் செல்ல முடியவில்லை என்றார்.

உலகப் போட்டியை இந்தியாவில் ஒரு கோடி பேர் பார்த்ததாக பெருமைப் பட்டுக் கொள்கிறோம். அவர்கள் 10 கோடி மணித்துளிகள் வீணாவதை யாரும் உணர்வதில்லை. இது எத்தனை மாதங்கள், எத்தனை வருடங்களுக்கு சமம் என்பதை நீங்களே கணக்கு போட்டுப் பாருங்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கான உழைப்பு வீணா கிறது என்பதை மக்களும் அரசாங்கமும் உணர வேண்டாமா? இதனால் தான் வல்லரசு நாடுகளை வளர்ந்து வரும் நாடுகளோ, வளர துடிக்கும் நாடுகளோ, கிரிக்கெட் விளையாட்டை ஆதரிப்ப தில்லை.

ஆகையினால் நான் பகிர்ந்து கொள்ளும் கருத்து இரண்டுதான். 1.கிரிக்கெட்டை விட பழைய விளையாட்டுகளில் நம் வீரர்கள் உலக சாதனை படைத்திருந்தும் அந்த விளை யாட்டுகளோ அதன் வீரர்களுக்கோ உரிய அளவில் ஆதரவோ கவுரவமோ அளிக்கப்படுவதில்லை. அவ்வாறு அளிக்கப்பட்டால் ஒலிம்பிக்கில் இடம்பெற முடியாத  கிரிக்கெட் ஒன்றே இந்தியாவின் சிறந்த விளையாட்டு என்பது போல் அரசும் மக்கள் தொடர்பு சாதனங்களும் ஊக்குவிப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.

2. வளர்ந்து வரும் எந்த நாட்டிற்கும் நேர நிருவாகம் என்பது மிக முக்கியமானது. அதிலும் பெரும் மக்கள்தொகை கொண்ட இளைய சமுதாயத்தைப் பெரும்பான்மையாகக் கொண்ட நம் நாட்டிற்கும் உழைப்பே உயர்வைத்தரும் என்பதை நோக்கமாகக் கொண்டு நேரத்தை வீணடிக்கும் எந்த விளையாட்டிற்கும் அரசு அனுமதி அளித்தல் கூடாது.

கிரிக்கெட்டும் 20 ஓவர் கொண்டதாக மற்ற எல்லா விளையாட்டிற்கும் சமமான ஆதரவும்; ஊக்கமும் அளிக்கப்பட வேண்டும். இந்திய இளைஞர்களே மைக்ரோசாப்ட் போன்ற நிறுவன வளர்ச்சிக்கு பெரிதும் காரணம் என அந்த நிறுவனத்தின் தலைவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.

அப்படிப்பட்ட திறன் கொண்ட உழைப்பில் ஆர்வம் கொண்ட இந்திய இளைஞர்கள் நேரத்தை வீணாக்காமல், ஒன்றுபட்டு உழைப்பார்களே ஆனால் இந்தியா உலகிலே தலைசிறந்த நாடாகும் என்பதில் அய்யம் இல்லை. ஆதித்தனாரால் வளர்க்கப்பட்ட சடுகுடு என்னும் கபடி ஒலிம்பிக் விளையாட் டில் சேர்த்துக் கொள்ள பரிசீலிக்கப் படுகிறது என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
தகவல் :சி.நடராசன், சென்னை 40
(நன்றி: அன்புப்பாலம், செப்டம்பர் 2011

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...