Wednesday, August 3, 2011

தொழிலாளர்


மாமூல் சம்பளத்தில் பாதிக்குக் குறைவாகக் குறைப்பதைப் பம்பாய் நெசவு ஆலைத் தொழிலாளர்கள் கண்டிக்கிறார்கள். இதற்கறிகுறியாகவே ஒரு மாத நோட்டீஸ் கொடுத்து நேற்று 23ஆம் தேதியிலிருந்து இன்றுடன் ஏழு தினங்கள் பொது வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் வேலை நிறுத்தக்காரர்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரமேயாகும்.

இன்று வரை சுமார் ஒரு லட்சத்துக்கு மேல் தொழிலாளர்கள். வேலை நிறுத்தத்தில் கலந்திருக்கிறார்கள். பல தலைவர்கள் கைது செய்யப்பட்டும் இதுவரையில் மில் முதலாளிகளோ சர்க்காரோ சமாதானம் செய்ய முன் வரவில்லை. பம்பாய் கார்ப்பரேஷன் தலைவர் இன்று சமாதானத்துக்கு முயல்கிறார்.

டெல்லியிலும், நாகபுரியிலும், காராச்சியிலும் உள்ள நெசவுத் தொழிலாளிகள் அனுதாபங்காட்டுகிறார்கள். விரைவில் பரிகாரம் ஒரு முடிவேற்படுமா?

- புரட்சி - கட்டுரை - 29.4.1934

Tuesday, August 2, 2011

தொண்டு ஏந்தியவர்கள், துண்டு ஏந்தவும் தயங்காதீர்!


தொண்டு ஏந்தியவர்கள், துண்டு ஏந்தவும் தயங்காதீர்!


தென் கிழக்காசியாவின் சாக்ரட்டீஸ் என்று அய்.நா. யுனெஸ்கோ மன்றம் பாராட்டி தந்தை பெரியார் அவர்களுக்கு விருது வழங்கியபோது. அது எவ்வளவு  பொருத்தமானது, துல்லியமானது என்பதை தந்தை பெரியார் அவர்களது எழுத்துக்கள், பேச்சுகளை குடிஅரசு களஞ்சியத்தில் படிக்கும்போது மிகவும் தெளிவாக, புரியாதவர்களுக்கும் புரியும்.

இங்கு சுட்டிக்காட்டப்படும் ஒரு அருமையான பகுதி 1944 குடிஅரசு ஏட்டில் வெளியான அய்யா அவர்களது சொற்பொழிவிலிருந்த சிந்தனை முத்துக்கள் - வாழ்வியல் சிந்தனை வீச்சுகள்!

வாலிபர்களே, இளைஞர்களே, நீங்கள் முதலில் உங்கள் மனத்தை நீங்கள் பரிசுத்தமாக வைத்துக் கொண்டு தைரியமாய்ப் பேச வேண்டும். பொது வாழ்வில் மானத்தைப் பார்க்காதீர்கள். எவ்வளவு தூரம் உணர்ச்சியோடு, உறுதியோடு உங்கள் மனமறிய நீங்கள் குற்றமற்றவர்களாக நல்ல ஒழுக்கம் உள்ளவர்களாக இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு துணிந்து தொண்டாற்ற முடியும்.

ஒருவன் தன் சொந்த காரியத்தைப் பொறுத்தமட்டில்தான் மானத்தையும், காலத்தையும் கவனிக்க வேண்டும்.  பொதுநலம், பொதுத் தொண்டு என்று வந்துவிட்டால், இவை இரண்டையும் லட்சியம் செய்யக் கூடாது. இதை மானத்திலும், காலத்திலும் கவலை கொண்ட திருவள்ளுவரே கூறியுள்ளார்.

மனத்துள்ளே குற்றம் குறை இருந் தால், வெளியில் செய்யும் காரியமும் குறையுடையதாகவே இருக்கும் என்பதை நான் விஞ்ஞான (சயின்ஸ்) முறைப்படி கூறுகிறேன்.

ஆகையினால் வாலிபத் தோழர்களே, உண்மை, ஒழுக்கம், தைரியம் ஆகிய மூன்றையும் நீங்கள் தொண்டு காரியத் திற்குத் துணிவுடன் நடத்தினீர்களேயா னால் வெற்றி உங்களை வந்து பணியும், உங்கள் எதிரிகள் நாசமாவார்கள்! - எவ் வளவு சிறப்பான அறிவுரைக் கொத்து பார்த்தீர்களா இளைஞர்களே, வாலிபர்களே!

பொது வாழ்க்கை என்பதற்கும், தனி வாழ்க்கை என்பதற்கும் உள்ள வேறு பாட்டினை எவ்வளவு அருமையாக ஒரு வாழ்வியல் பேராசிரியராக நின்று தந்தை பெரியார் விளக்குகிறார் பாருங்கள்!

தனக்கென பிறரிடம் உதவி கேட்டால் அது யாசகம், பிச்சை மிகவும் கேவலமாகக் கருதப்படும் இழி தன்மை.

ஆனால் அதே நபர், ஒரு பொதுக் காரியத்திற்காக, ஒரு பள்ளிக்கூடம் கட்டு வதற்கு, மருத்துவமனை கட்டுவதற்கு, பொது மக்களுக்குப் பயன்படும் நூலகம் - படிப்பகம் கட்டுவதற்கு பிறரிடம் சென்று நன்கொடை திரட்டினால் அது யாசகம் ஆகாது; பிச்சை ஆகாது! மாறாக தொண்டறம் ஆகும்! இதைச் செய்யக்கூட கால, நேரம் பார்க்க வேண் டாம் என்கிற வள்ளுவர் குறளை மிக அருமையாக விளக்கியுள்ளார் தந்தை பெரியார்!

குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும் (குறள் - 1028)

இதை ஒரு ஆழ்ந்த சிந்தனையாளர் நிலையில் நின்று குறளுக்கு விளக்கம் தருகிறார் வள்ளுவரை புலவர்களின் சிறைக் கூடத்திலிருந்து விடுதலை செய்த தந்தை பெரியார் அவர்கள்!

மானத்திலும், காலத்திலும் கவலை கொண்ட வள்ளுவர் என்று விளக்கி  திருவள்ளுவர், மானம் பற்றியும், காலத்தின் அருமை பற்றியும் மிகுதியும் கவலை கொண்டு வலியுறுத்திய மாமனிதர். அவரே அதற்குரிய தன்மையும், அவசியமும் நிலைக்கேற்ப மாறுபடுகின்றது என்று கூறுகிற அழகை பெரியார் எப்படி விளக்கிய தோடு, வாழ்ந்தும் காட்டினார் பார்த் தீர்களா?

எனவே பொதுப் பணி - பொதுத் தொண்டுக்கு வரும் நண்பர்கள் - குறிப்பாக இளைஞர்கள் வெட்கப்படா தீர்கள் - கூச்சப்படாதீர்கள் பிறரிடம் கேட்கப் பெறுவதற்கும், ஒன்றை உருவாக்குவதற்கும்!

தொண்டை ஏந்தியவர்கள், துண்டையும் ஏந்த வெட்கப்படாதீர்கள்! காலம் கருதிடச் சொன்னவர் இதற்கு விதி விலக்கு தந்துள்ளார் - மறவாதீர்!

கைதாவாரா சு.சாமி?

கைதாவாரா சு.சாமி?

தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இங்கு வரவேற்பா?

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம், வெளிநடப்பு!

புதுடில்லி, ஆக. 2- ஈழத்தில் தமிழர்களைப் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்த இலங்கை அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்திய நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரவேற்பு கொடுத்ததற்கு இந்திய நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பினை தமிழக உறுப்பினர்கள் தெரிவித் தனர்.

பேனா பெண்ணும் நாணி குனிகிறாள்!

கோவையில் கவி ஞர் சிற்பிக்குப் பாராட்டு விழா. மகிழ்ச்சியே!

அவ்விழாவில் கலந்து கொண்ட தின மணி ஆசிரியர் திரு வாளர் வைத்தியநா தய்யர் அமுத ஊற்றாக சில வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.

கவிஞர்களே, விர சத்தை விலக்கிக் கவிதை எழுதுவீர்!

ஆம், அப்பாவி தமிழ் மக்களைக் கொன்றது நாங்கள்தான்! ஒப்புக் கொள்கிறார் ராஜபக்சேவின் உடன்பிறப்பு!


கொழும்பு, ஆக. 2- இலங் கையில் இறுதிக்கட்ட போர் நடந்த போது, அப்பாவி மக் களை கொத்துக் குண்டுகள் வீசி, இலங்கை ராணுவம் கொன்றது என்ற உலக நாடுகளின் குற்றச்சாட்டை, முதன்முறையாக அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இலங்கையில், 2009 இல் விடு தலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின் போது, அப்பாவி மக்கள் மீது ராணுவம் கொத்துக் குண்டுகள் வீசியது. இதில், ஆயிரக் கணக்கான மக்கள் மடிந்தனர்.

வரவேற்கத்தக்க முடிவு எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வுக்கு முதலமைச்சர் எதிர்ப்பு


சென்னை, ஆக. 2- மருத்துவப் படிப்பில் சேர நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்! செய்யட்டும்!!

கருநாடக மாநிலத்தில் லோக் அயுக்தா அறிக்கையில் கருநாடக மாநில முதல் அமைச்சர் அவர் அமைச்சரவையில் உள்ள ரெட்டி சகோதரர்களின் ஊழல்பற்றி விலாவாரியாக அலசப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் தலைவரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான சந்தோஷ் ஹெக்டே செய்தியாளர்களிடம் கூறியுள்ள தகவல் மிகப் பெரிய அளவில் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.

2008ஆம் ஆண்டு சட்ட விரோத சுரங்கங் களின் செயல்பாடுகள் குறித்து இடைக்கால அறிக்கை கொடுக்கப்பட்டது. ஆனாலும் தவறு களைச் சரி செய்ய எந்தவித முயற்சியையும் கருநாடக மாநில பா.ஜ.க., அரசு மேற்கொள்ள வில்லை என்று கூறியுள்ளார்.

சமச்சீர் கல்வி ஒரு சிறு கணக்கு - இழப்பு? 300 கோடி மணி நேரம்

ஒன்னே கால் கோடி (1.25 கோடி) பள்ளி மாணவர்கள் நேரடி யாகப் பாதிக்கப்படுகிறார்கள். சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படாததால்.

ஒன்னே கால் கோடி (1.25 கோடி) பள்ளி மாணவர்களின் தாய் தந்தையரை கணக்கில் கொண்டால்; மொத்தம் மூணே முக்கால் கோடி (3.75 கோடி) மனிதர்கள், சமச்சீர் கல்வி கொண்டு வரப்படாததால் பாதிக்கப்படுகிறார்கள்.

தொண்டு ஏந்தியவர்கள், துண்டு ஏந்தவும் தயங்காதீர்!

தென் கிழக்காசியாவின் சாக்ரட்டீஸ் என்று அய்.நா. யுனெஸ்கோ மன்றம் பாராட்டி தந்தை பெரியார் அவர்களுக்கு விருது வழங்கியபோது. அது எவ்வளவு பொருத்தமானது, துல்லியமானது என்பதை தந்தை பெரியார் அவர்களது எழுத்துக்கள், பேச்சுகளை குடிஅரசு களஞ்சியத்தில் படிக்கும்போது மிகவும் தெளிவாக, புரியாதவர்களுக்கும் புரியும்.

இங்கு சுட்டிக்காட்டப்படும் ஒரு அருமையான பகுதி 1944 குடிஅரசு ஏட்டில் வெளியான அய்யா அவர்களது சொற்பொழிவிலிருந்த சிந்தனை முத்துக்கள் - வாழ்வியல் சிந்தனை வீச்சுகள்





ஊர் சிரிக்கும் பா.ஜ.க.,

பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி ஊழலுக் கும், வன்முறைக்கும் பெயர் எடுத்த கட்சியாகி விட்டது.

வன்முறைக்கு எடுத்துக்காட்டு குஜராத் மாநிலம். ஊழலுக்கு ஓர் எடுத்துக்காட்டு கருநாடகம் என்று ஆகி விட்டது.16,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது என்று லோக் அயுக்தா விசாரணை அறிக்கை வெளிவந்த நிலையில் உடனடியாக எடியூரப்பா பதவி விலகி இருந்தால், கொஞ்சம் மரியாதையாவது விஞ்சி இருக்கும்.அவரைப் பதவி விலகச் செய்வதற்கு பாரதிய ஜனதா கட்சி அதன் தலைமைப் பட்டப்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கடும் நெருக்கடியின் விளைவாக இப்பொழுது எடியூரப்பா பதவி விலகி இருக்கிறார். இதன்மூலம் பா.ஜ.க.வுக்குப் பெருமை வந்துவிடப் போவதில்லை. மாறாக பா.ஜ.க.வின் மட்டகரமான மனப் போக்கைத் தான் இது வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.இதற்கு முன்பும்கூட வீட்டுமனையைத் தம் உறவினர்களுக்கு விநியோகித்ததில் எடியூ ரப்பா ஊழல் புரிந்துள்ளார் என்ற குற்றச்சாற்று எழுந்தது. அப்பொழுது பா.ஜ.க. தலைமை அவரைப் பதவி விலகச் செய்ய முழு முயற்சிகள் மேற்கொண்டு பெரும் தோல்வியைச் சுமந்தது.இந்தியாவின் தலைநகரமான டில்லியிலேயே சட்டப் பேரவை உறுப்பினர்களையும், கருநாடக மாநில பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை யும் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு, என்னை நீக்கிப் பாருங்கள் என்று சவால் விட்டார். வெட்ககரமான முறையில் பா.ஜ.க. மக்கள் மத்தியில் பெருத்த அவமானத்தைத் தேடிக் கொண்டது.சுருக்கமாகச் சொன்னால் பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைமை, ஒரு மாநிலத்தின் முதல் வரிடம் மண்டியிட்டது என்பதுதான் உண்மை. இப்பொழுதுகூட - எந்த நிர்பந்தத்துக்கும் எடியூரப்பா படிந்து போய்விடவில்லை. ஒரு அறிக்கை வெளி வந்ததால் நான் பதவி விலக வேண்டுமா என்று எதிர் கேள்வி விடுத்தார். அகில இந்தியத் தலைவர்கள் இரண்டு நாள்கள் பெங்களூருவில் உட்கார்ந்து எவ்வளவோ மன்றாடியும்கூட பிள்ளை பிழைக்கவில்லை.இன்று நாடாளுமன்றம் கூடும் நிலையில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிமீது ஊழல் புகார் ஆயுதத்தைக் கையில் தூக்கிக் கொண்டு பா.ஜ.க., புறப்பட ஆயத்தமாகிக் கொண்டு இருக்கும் நிலையில், ஊழல் புகாருக்கு ஆளாகியுள்ள பா.ஜ.க. முதல் அமைச்சர் பதவி விலகாவிட்டால், எதிர் விளைவைச் சந்திக்க வேண்டுமே என்ற உதறலால் கெஞ்சிக் கூத்தாடி எடியூரப்பாவை பதவி விலகச் செய்துள்ளனர்.எப்படி இருந்தாலும் இவ்வளவு அசிங்கம் நடந்ததற்குப் பிறகு பா.ஜ.க.வினர் கையில் ஏந்தும் ஊழல் எதிர்ப்புக்கு எந்தவிதமான மரியாதையும் கிடையாது. தார்மீக நெறியில் பலத்த அடி வாங்கி வீங்கிப் போன நிலையில் அக்கட்சி கொடுக்கும் குரல் அருவருப்பான தாகவே கருதப்படும்.முதல் அமைச்சர் எடியூரப்பா மட்டுமல்ல, அமைச்சரவையில் பாதிப் பேர்களுக்குமேல் லஞ்ச ஊழலில் திளைத்தவர்கள்தான் என்ற குட்டு உடைபட்டுப் போய்விட்டது.நியாயப்படி அமைச்சரவையே பதவி விலகல் கடிதங்களைக் கொடுத்துச் சரணா கதி அடைந்திருக்க வேண்டும். அதனைச் செய்யாத நிலையில் எடியூரப்பா மட்டும் பதவி விலகியது கூட ஓர் ஏமாற்று வேலையே!கருநாடக மாநில அரசு கோமாநிலையில் இருப்பதாக உச்சநீதிமன்றம் வேறொரு வழக்கில் ஏற்கெனவே கூறியதையும் இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. ஆட்சி நிருவாகத்தில் பக்தியையும், மதத்தையும், ஊழலையும் ஊர்வலம் வரச் செய்த ஒரு ஆட்சி கருநாடகத்தில் நல்ல அளவு அவமானப்பட்டு விட்டது!தலையணையை மாற்றுவதால் தலைவலி போகப் போவதில்லை. முதல் அமைச்சரை மாற்றுவதாலேயே கருநாடக மாநில பா.ஜ.க. ஆட்சியின் யோக்கியதைக்கு புதிதாக மரியாதை கிடைக்கப் போவதில்லை என்பதுதான் யதார்த்த நிலை!









Monday, August 1, 2011

விடுதலை செய்திகள் 01-08-2011

அ.தி.மு.க. அரசின் அடக்குமுறையைக் கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! மு.க. ஸ்டாலின் உள்பட லட்சக்கணக்கானோர் கைது!

அனுமதியளித்தும் பின்னர் ரத்து செய்த ஜனநாயக விரோதம்!

சென்னை, ஆக.1- அ.தி.மு.க. அரசின் அடக் குமுறையை கண்டித்து, தமிழகம் முழு வதும் தி.மு.க. தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு தி.மு.க. பொரு ளாளர் மு.க. ஸ்டாலின் தலை மையில் நடைபெற்ற கண் டன ஆர்ப்பாட்டத்தில் ஆயி ரக்கணக்கானோர் பங் கேற்று கைது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப் பாட்டத்தில் லட்சக் கணக்கானோர் பங்கேற்றனர்.

ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் அறப் போராட்டம் நடத்துவது, ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது இயல்பான ஒன்றாகும். சட்ட ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்திடாமல் அறப் போராக ஆர்ப்பாட்டம் நடத்திடத்தான் தி.மு.க. அனுமதி கேட்டது. இதனை அனுமதிப்பது ஒரு ஜனநாயகக் ஆட்சியின் கடமையாகும்.

பா.ஜ.க. ஆட்சியின் லட்சணம்!

பெல்லாரி மாவட்டத்தில் 10868 ஹெக்டேர் நிலப்பரப்பில் நடைபெற்று வந்த இரும்புத் தாது வெட்டி எடுக்கும் சுரங்கப் பணிகளை நிறுத்தி வைக்குமாறு ஜூலை 29 ஆம் தேதி உச்சநீதி மன்றம் ஆணையிட்டும் அதனைத் துச்சமாக மதித்து, மறுநாளே (30ஆம் தேதி) 49 லாரிகளில் இரும்புத் தாது எடுத்துச் செல்லப்பட்டது.

இதைச் செய்தவர்கள் கருநாடக பா.ஜ.க. ஆட்சியில் அமைச்சர் களாக இருக்கும் ரெட்டி சகோ தரர்கள். இந்த யோக்கியர்கள் தான் அடுத்த கட்சிக்காரர் களைப் பார்த்து ஊழல் ஊழல் என்று ஊளையிடுகின்றனர்.

ஒழுக்கக் கேடும், பக்தியும் - இரட்டைப் பிள்ளைகள்!

அடேயப்பா, எடியூரப்பாவின் பக்தி... இன்னது என்று யாரும் வரையறுத்துக் கூற முடியாது. மூச்சுக்கு முந் நூறு தடவை என்பார் களே - அது ஆர்.எஸ். எஸில்., பயிற்சி பெற்று பா.ஜ.க. சார்பில் முதல் அமைச்சராக இருந்த இந்த எடியூரப்பாவுக்குத் தான் நூற்றுக்கு நூறு பொருந்தும்.

தமிழக எம்.பி.க்களின் தலையாய கவனத்துக்கு..

கேள்வி: தெற்கு ரயில்வேயில் கேரளாவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு, தமிழகம் குறிப்பாக புறக்கணிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாற்று பற்றி....

ஊர் சிரிக்கும் பா.ஜ.க.,

பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி ஊழலுக் கும், வன்முறைக்கும் பெயர் எடுத்த கட்சியாகி விட்டது.

வன்முறைக்கு எடுத்துக்காட்டு குஜராத் மாநிலம். ஊழலுக்கு ஓர் எடுத்துக்காட்டு கருநாடகம் என்று ஆகி விட்டது.

16,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது என்று லோக் அயுக்தா விசாரணை அறிக்கை வெளிவந்த நிலையில் உடனடியாக எடியூரப்பா பதவி விலகி இருந்தால், கொஞ்சம் மரியாதையாவது விஞ்சி இருக்கும்.






தோழர்களே! சாகத் துணிவு கொள்ளுங்கள்

Print
இந்த திராவிட வாலிபர் சங்க ஆண்டு விழாவுக் குத் தலைமை வகித்து தலைமை முன்னுரை நிகழ்த்துவது என்கின்ற சம்பிரதாய நிகழ்ச்சிப்படி நான் ஏதாவது பேசவேண்டும். அப்படிப் பேசுவதில் திராவிடர் என்பதுபற்றியும், நீங்கள் பெரிதும் இளைஞர்கள் ஆனதால் நானும் முதியோனாய் இருப்பதால் உங்களுக்குச் சிறிது அறிவுரை வழங் குவது என்கின்ற தன்மையிலும் சில வாக்கியங்கள் சொல்வது பொருந்துமெனக் கருதுகிறேன்.
நாம் திராவிடர்
நாம் நம்மைத் திராவிடர் என்று ஏன் சொல்லுகிறோம்?
இந்தநாடு திராவிட நாடு, நாம் இந்நாட்டு மக்கள், இந்நாட்டுப் பழங்குடி மக்கள், இந்நாட்டில் மேன்மையாய் நாகரிகத்தில் சிறந்து மானிகளாய் வீரர்களாய் வாழ்ந்தவர்கள்



மண் குதிரையை நம்பிய கதை!

கடந்த வார துக்ளக்கில் சமச்சீர் கல்வி தொடர்பாக ஒரு வார்த்தைகூட எழுதாத திருவாளர் சோ ராமசாமி இந்த வார இதழில் (3.8.2011) தன் ஆற்றாமையை வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு புலம்பித் தீர்த்துள்ளார்.

கடைசியில் வேறு வழியில்லாமல் அ.தி.மு.க. அரசுக்கு ஊரோடு ஒத்துப் போகச் சொல்லியிருக்கிறார்.

சென்ற அரசின் சமச்சீர், சமத்தாழ்வுதான்; அதை நீதிமன்றம் ஏற்றது சரியல்ல; கொள்கை முடிவில் நீதிமன்ற குறுக்கீட்டாகத்தான் இது காட்சியளித்தது.

ஆனால் சரியோ, தவறோ, நீதிமன்றம் அதற்கு ஒப்புதல் அளித்தபோது - நிச்சயமற்ற தன்மை தொடர்வதால், மாணவர்களுக்கு ஏற்படுகிற பிரச்சினையை மனதில் கொண்ட புதிய அரசு, இந்த ஆண்டு அதையே அமல் செய்து, அடுத்த ஆண்டுக்கு மாற்றங்களுடன் கூடிய புதியமுறையை வகுத்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் அப்பீல்கள் செய்து, தமிழக அரசு மாணவர்களின் குழப்பத்தை நீட்டித்தது; இது தவிர்க்கப்பட்டி ருக்க வேண்டும் என்ற விமர்சனத்தில் நியாயம் இருக்கிறது என்று துக்ளக் தலையங்கம் கூறுகிறது.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...