டில்லியில் வன்முறை நிகழ்ந்த பகுதிகளில்
பயன்படுத்தப்பட்ட 350 துப்பாக்கிக் குண்டுகள், கள்ளத் துப்பாக்கிகள்
கண்டெடுக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டில்லியில் குடியுரிமை திருத்தச்
சட்டத்திற்கு ஆதரவாக ஏவிவிடப்பட்ட வன்முறை உலக மக்கள் மத்தியில் பெரும்
அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.
இந்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடுபவர்கள் மீது டில்லி காவல்துறையின் துணை யுடன் இந்துத்வா கும்பல் கொடூரத் தாக் குதல் நடத்தியது.
இந்தக் கொடூரத் தாக்குதலில் இதுவரை 45
பேர் கொல்லப்பட் டனர். 200-க்கும் மேற்பட்டோர் படு காயங்களுடன் மருத்துவமனை
களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை கொல்லப்பட்ட வர்களில் 30 பேரை மட்டுமே காவல் துறையினர் அடையாளம் கண் டுள்ளனர்.
மேலும் கொல்லப்பட்டவர் களின் உடல்களை உற
வினரிடம் ஒப்படைக்காமலும் டில்லி காவல் துறை இழுத்தடிப்ப தாக பாதிக்
கப்பட்ட உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளர்.
இந்நிலையில், கொல்லப்பட்ட வர்களில்
பெரும்பாலானோர் இஸ் லாமியர்கள் என்பதும் தெரியவந் துள்ளது. தீ
வைக்கப்பட்டும், ஆசிட் வீசப்பட்டும், கொடூர ஆயுதங்களால் தாக்கப்பட்டும்,
குத்தப்பட்டும், கண்ணீர்ப்புகைக் குண்டுகள் தாக்குதலாலும் பலர் படுகொலை
செய்யப்பட்டுள்ளனர். அது மட் டுமின்றி வன்முறையாளர்கள் நடத் திய
துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் காயமடைந்தவர்களை எடுத்துக்
கொண்டால் அவர்களில் 82 பேரின் உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளன
எனும் தகவல் காவல்துறை மற்றும் மருத் துவத் துறை வட்டாரங்கள் மூலம்
வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும், இந்தக் கலவரத்தின் போது அருகில்
உள்ள உத்தரப் பிரதேசம் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த தொழில்முறை ரவுடிகள் பலரை
பணம் கொடுத்து அழைத்து வந்து வன்முறையில் ஈடுபடுத்தி உள்ளனர். அவர்கள்
கள்ளத் துப் பாக்கிகள் மூலம் கொடூரத் தாக் குதல் நடத்தியுள்ளனர்.
வன்முறை நிகழ்ந்த பகுதிகளில்
பயன்படுத்தப்பட்ட 350 துப்பாக்கிக் குண்டுகள், கள்ளத் துப்பாக்கிகளை
கண்டெடுத்துள்ளதாகவும், அந்த குண்டுகள் 32 எம்.எம், 9 எம்.எம், 315 எம்.எம்
.துப்பாக்கிகளுக்கு உரியவை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது.
அதுமட்டுமல்லாது, வன்முறையின்போது
பொதுமக்கள் உதவி கேட்டு டில்லி காவல்துறைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
சுமார் 11,500-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், டில்லி
காவல்துறை அதை திட்டமிட்டு பொருட்படுத்தவில்லை என்றும் தகவல்
வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment