Monday, March 9, 2020

"காந்தியார் அதிர்வார்"

கேள்வி: இந்தியாவில் மதச் சுதந்திரம்பற்றி அமெ ரிக்கா கவலை தெரிவித் துள்ளதே?
பதில்: உலகிலேயே மதச் சுதந்திரம் உள்ள ஒரே நாடு பாரதம் மட்டுமே... அதனால் அமெரிக்கா ரொம்பவும் கவலைப்பட வேண்டாம்.
‘விஜயபாரதம்', ஆர்.எஸ்.எஸ். வார இதழ்,6.3.2020
அமெரிக்க அதிபர் டிரம்பை அழைத்து, படா டோபமாக  வரவேற்பு - அய்ஸ் கட்டி மழையெல் லாம் பொழிந்து தூள் கிளப்பினீர்கள். அதற் குள் அமெரிக்கா கசந்து விட்டதா?
26.1.2015  இந்திய குடி யரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக மூன்று  நாள் பயணமாக இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது பயணத்தின் இறுதி நாளான ஜனவரி 27-ஆம் தேதி அன்று புதுடில்லியில் மாண வர்கள் மற்றும்  பொது மக்கள் மத்தியில் உரையாற் றினார். அப்போது பிரதமர் மோடியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே பேசிய ஒபாமா, ‘‘இந்தியா வின் வளர்ச்சிக்கு மத சகிப்புத்தன்மை மிகவும் அவசியம். மத சகிப்புத் தன்மை இல்லாமல் இந் தியா இல்லை'' என்று  பேசினார்.
இந்திய சுற்றுப்பய ணத்தை முடித்துவிட்டு அமெரிக்க வெள்ளை மாளிகையில் 30.1.2015  அன்று இந்திய சுற்றுப் பயணம் குறித்து கருத்து தெரிவித்த பராக் ஒபாமா "காந்தியார்மீது இந்தியா வைத்திருக்கும் அதே நன்மதிப்பை அமெரிக் காவும் கொண்டுள்ளது. மிக அற்புதமான, பன்முகத் தன்மை கொண்ட அழ கான நாடாக இந்தியா உள்ளது. அங்கு பார்த்த ஒவ்வொரு கலாச்சாரத் தையும் கண்டு நானும், மிஷேலும் (ஒபாமா துணை வியார்) வியப்படைந்தோம். ஆனால், இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மதக் கோட்பாடு களும், அவர்களது  கலாச் சார நிகழ்ச்சிகளும் தொடர்ந்து குறிவைக்கப் படுகின்றன. அதனால்  இந்தியாவில் ஏற்பட்டிருக் கும் ‘‘மத சகிப்புத் தன்மை யின்மையை'' இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட காந்தியார் கண்டிருந்தால் அதிர்ந்து போயிருப்பார்'' என்றார்.
இவற்றையெல்லாம் நாட்டு மக்கள் மறந்திருப் பார்கள் என்று நினைக்க வேண்டாம், ‘விஜயபார தங்களே!'
- மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...