அண்ணா திமுகவை நிறுவி விட்டு அதை
வளர்க்கும் வேலைகளில் இறங்கிய போது, மேடை மேடையாக பேசியது பேராசிரியரும்,
கலைஞரும் தான். காசில்லா அன்பழகனுக்கு பயண காசு கொடுத்து மேடையில் ஏறி பேச
வைக்கும் அளவிற்கு - கலைஞருக்கும், அன்பழகனுக்கும் நட்பு இருந்தது. மிகவும்
நெருக்கம் அந்த நட்பு தான் சோதனை காலத்திலும் கை கொடுத்தது. அண்ணா இறந்த
போது, கலைஞருக்கு உறுதுணையாக இருந்தவர் பேராசிரியர் அவர்கள்தான். அதே போல்,
அண்ணாவிற்கு பின் எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்த பின் கூட பேராசிரியர்
அவர்கள் கலைஞருக்கு உறுதுணையாக இருந்தார். திமுக மூன்று முறை வரிசையாக
தேர்தலில் தோற்ற போதும் அவர்கள் கலைஞர் பக்கமே நின்றார்.
அதே போல், மிக முக்கியமான காலகட்டமான
நெருக்கடி நிலை காலத்திலும் முத்தமிழ் அறிஞர் கலைஞரும் - இனமானப்
பேராசிரியர் அன்பழ கனும் ஒன்றாகவே இருந்தனர். இந்தியாவில் அப்போது நடந்த
கைது பெரிய பிரச்சினையை உண்டாக்கியது. நிறைய பேர் கட்சி மாறினார்கள். ஆனால்
கலைஞர், பேராசிரியர் நட்பு மட்டும் ஆலமரம் போல உறுதியாக வளர்ந்து கொண்டே
இருந்தது.
No comments:
Post a Comment