- மின்சாரம்
தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து
நீதிபதிகள் வந்தது தொடர்பாக - திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி
தெரிவித்தது வருந்தத்தக்கது - கட் சியின் தலைவர் கண்டித்த நிலையில் அவர்
பகிரங்கமாக வருத்தம் தெரிவித்து விட்டார்.
ஆனால் பார்ப்பனர் சங்கத்தினர் வேறு விதமாக
பார்ப்பனர்களைப்பற்றி ஆர்.எஸ். பாரதி தரக் குறை வாகப் பேசி விட்டார் என்று
கூறி அவரை ஜனாதிபதி எம்.பி. பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும்;
அவர் குறிப்பிட்ட சிலரின் பெயர்களைச் சொல்லி அவர்களிடம் மன்னிப்புக் கோர
வேண்டும் என்றும் பார்ப்பன சங்கம் எச்சரித்துள்ளது. அவ்வாறு
தெரிவிக்காவிட்டால் ஆர்.எஸ். பாரதி வீடு முன் பார்ப்பனர்கள் ஆர்ப்பாட்டம்
நடத்துவார்களாம்.
நங்கநல்லூரில் கடந்த 29ஆம் தேதி பார்ப்பனர் சங்கம் கூடி முண்டா தட்டியுள்ளது.
மத்தியில் பிஜேபி ஆட்சி வந்த காலந்தொட்டு
பார்ப்பனர்களுக்குக் கொஞ்சம் 'வீரம்' பிறந்து விட்டது. தொலைக்காட்சி
விவாதங்களில்கூட அவர்களின் அரட்டைச் சத்தம் அதிகமாகவே கேட்க ஆரம்பித்து
விட்டது.
முதலில் அவர்களை நோக்கி ஒரு கேள்வி...
அது என்ன பிராமணர் சங்கம்? நீங்கள் பிராமணர்கள் என்றால் நாங்கள் யார்? சூத்திரர்கள் என்று சொல்லாமல் சொல்லுவதாகத்தானே பொருள்?
சூத்திரன் என்றால் ஏழு வகைப்படும். அதில்
ஒன்று விபசாரி மகன் என்று உங்கள் மனுதர்ம சாஸ்திரம் (அத்தியாயம் 8 சுலோகம்
415) சொல்லுகிறதே !
இந்த இழி சொல்லைத் தாங்கிக் கொண்டு பார்ப்பனர் அல்லாத மக்கள் பொறுமையாக இருப்பதைப் பலகீன மாகக் கருதுகிறீர்களா?
தமிழன் - உழைப்பில் தமிழ் மன்னர்கள்
கட்டிய கோயில் கருவறைக்குள் நாங்கள் சென்றால் சாமி தீட்டுப் பட்டு விடும் -
தீட்டுக் கழிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறிக்
கூறியதற்குப் பிறகும் நாங்கள் எப்படி வாளாயிருப்பது? - கோழைத்தனம் என்று
முடிவுக்கு வந்து விட்டீர்களா?
ஆண்டுக்கு ஆண்டு ஆவணி அவிட்டம் என்ற
பெயரில் பூணூலை புதுப்பித்துக் கொள்கிறீர்களே- கேட்டால் நாங்கள் துவி ஜாதி,
இரு பிறப்பாளர் என்று இறுமாப்புடன் நடந்து கொண்டு இருக்கிறீர்களே-
அப்படியென்றால் நாங்கள் யார்? இதற்குப் பிறகும் நாங்கள் சகித்துக்
கொண்டிருக்கிறோமே - இதனை எங்கள் ஏமாளித்தனம் என்று கணக்குப்போட்டுக் கொண்டு
இருக்கிறீர்களா?
காந்தியாரை நாதுராம் கோட்சே என்ற பச்சைப்
பார்ப்பன இந்து வெறியன் சுட்டுக் கொன்றபோது மும்பையில் பார்ப்பனர்கள்
தாக்கப்பட்டார்களே! வீடுகள் சூறையாடப்பட்டனவே - அந்த நிலை தமிழ் நாட்டில்
ஏற்பட்டு விடக் கூடாது என்று பார்ப்பனர் அல்லாத மக்களின் ஒப்பற்ற தலைவர்
தந்தை பெரியார் மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு மக்களைத் தடுத்து நிறுத்தினாரே
- அந்த மனிதநேய உயர் பண்பாட்டை கேலி செய்கிறீர்களா?
அன்று கண் ஜாடை காட்டியிருந்தால் என்ன நடந் திருக்கும் என்று கொஞ்சம்கற்பனை செய்து பாருங்கள் - உண்மை புரியும்.
சூத்திரர்களும், வைசியர்களும், பெண்களும்
பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கூறும் கீதையை தேசிய நூலாக்க வேண்டும்
என்று கூறும் அளவுக்குத் திமிர் பிடித்து அலைகிறீர்களே - நியாயமாக இந்த
சூத்திரர்களும், வைசியர்களும், பெண்களும்தானே பெரும்பான்மை மக்கள். இவர்கள்
திரண்டு எழுந்தால் நிலைமை என்ன ஆகும் என்று ஒரு சிறிதளவாவது எண்ணிப்
பார்த்தீர்களா?
தீண்டாமை க்ஷேமகரமானது என்று உங்கள் ஜெகத்குரு சாமிநாதன் (சந்திரசேகரேந்திர சரஸ்வதி) கூறிடவில்லையா?
உலகத்தில் உயர்ந்த சோப்பைப் போட்டு குளிப்
பாட்டினாலும் பஞ்சமர்களின்மீது படிந்த தீட்டு என்ற அழுக்கைப் போக்கவே
முடியாது என்ற சிருங்கேரி சங்கராச்சாரியார் நடமாடியது எல்லாம் எப்படி?
சென்னை அண்ணாநகர் சிறீகிருஷ்ணா கார்டனில்
2005 டிசம்பரில் 'பிராமணர்' சங்க வெள்ளி விழா மாநாடு என்று கூறி அரிவாளைத்
தூக்கிக் காட்டினீர்களே- யாரைப் பலி கொள்ள?
அப்பொழுதுகூட இந்நாட்டுப் பெரும்பான்மை
மக்கள் 'விரதம்' கடைப்பிடித்தார்களே - அவர்கள் வீர மற்றவர்கள் என்ற
நினைத்து விட்டீர்கள் - அப்படித் தானே?
இந்தியா முழுவதும் பெரியார், அம்பேத்கர் பதாகை இளைஞர்கள், மாணவர்களின் கைகளில் வந்து விட்டன என்பது உங்களுக்குத் தெரியுமா?
தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்களால்
ஊட் டப்பட்ட தன்மான உணர்வுத் தீ இப்பொழுது இந்தியத் துணைக் கண்டம்
முழுவதும் பீறிட்டு நிற்கிறதே - புரிந்து கொண்டீர்களா?
ஏன்? நாடாளுமன்றத்திலேயே கூட "பெரியார் வாழ்க!" என்ற முழக்கத்தின் இடியோசை கேட்கிறதே!
இது காலத்தின் குறி... இதனைப் புரிந்து கொள்ள வில்லையானால் நட்டம் எங்களுக்கல்ல.
மீண்டும் நினைவூட்டுகிறோம். தந்தை
பெரியார் மறைந்து 47 ஆண்டுகளுக்குப் பின்பும் உயிர்த் துடிப் போடு மண்ணைப்
பிளந்து விண்ணைத் தொடுகிறார். அன்றாடம் அவர்தான் தலைப்புச் செய்தி!
தமிழ்நாட்டில் 234 சட்டப் பேரவை உறுப்பினர்களில் உங்களுக்கு ஒன்றே ஒன்றைத்தான் தமிழ்நாட்டு மக்கள் 'பிச்சை' போட்டிருக்கிறார்கள்.
கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று சொன்
னவர் தான் பெரியார். ஆனாலும் பெரியார் சிலைமீது ஒரு சிறு கல்லை
போட்டால்கூட பட்டைப் போட்ட வரும், குங்குமம் தரித்தவரும் கையிலே தடியோடு
வீதிக்கு வீதி வந்து நிற்கின்றார்களே? அதன் "விந்தை" என்னவென்று தெரியுமா?
இங்கு நாத்திகம் என்பது பெரும்பான்மையினர்
நலம்; ஆத்திகம் என்பது சிறுபான்மையினர் நலம் என்று தவத்திரு குன்றக்குடி
அடிகளார் சொன்னதன் பொருள் புரியுமா பூணூல் கூட்டமே?
குடியரசு தலைவர் தாழ்த்தப்பட்டவர்
என்பதால் 2019ஆம் ஆண்டிலும்கூட கோயிலுக்குள் நுழையவிட மாட்டோம் எனும்
உங்களின் ஆணவத் திமிரை என்னவென்று சொல்லுவது!
தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டிலேயே
ஒரு திமுக எம்.பி.யின் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் என்று எச் சரிக்கும்
அளவுக்கு திமிர் தலை கொழுத்து நிற்கிறதா?
1971 மீண்டும் திரும்ப வேண்டுமா?
ஆச்சாரியாரே (ராஜாஜி) இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதியிழந்து விட்டது
என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்ட பிறகு - நீங்கள் எல்லாம்
எம்மாத்திரம்?
வீட்டை முற்றுகையிட்டுப் பாருங்கள்...
பார்க்கலாம் - வெடி மருந்துக் கிடங்கில் தீவட்டியைத் தூக்கி எறிய
ஆசைப்படுகிறீர்களா, வாருங்கள் சந்திப்போம்!
நாங்களும் தமிழர்கள்தான் என்று சந்தர்ப்பத்தைக் கருதி தளுக்காகப் பேசும் பார்ப்பனர்கள் நங்கநல்லூரில் கூடியிருக்கிறார்கள்.
பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நாராயணன்
திருப்பதி போன்றவர்கள் கலந்து கொண்டுள்ளனர். பாரதிய ஜனதா என்பது பார்ப்பன
ஜனதாதான் என்பது இப் பொழுது விளங்கிடவில்லையா?
பார்ப்பனர்களுக்காக வக்காலத்து வாங்கும் அப் பாவி தமிழர்கள் இருந்தால், அவர்களும் சிந்திக்க - இது தான் தக்க தருணம்!
சிந்தியுங்கள் - செயல்படுங்கள்!
குறிப்பு: இது ஆர்.எஸ். பாரதிக்காக மட்டுமல்ல; - பார்ப்பனர்கள் மிரட்டக் கிளம்பியுள்ளனர் என்பதை மய்யப்படுத்திதான்!
No comments:
Post a Comment