செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள,
'நாசா' அனுப்பவிருக்கும் ரோவருக்கு, 13 வயது சிறுவன் பரிந்துரைத்த,
'விடாமுயற்சி' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, நாசா
எனப்படும், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், இந்த ஆண்டு,
'ராக்கெட்'டை விண்ணில் செலுத்தவுள்ளது. அந்த ராக்கெட்டில் இணைக்கப்படும்
ரோவர், அடுத்த ஆண்டு துவக்கத்தில், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும்
வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகளில், நாசா ஆராய்ச்சியாளர்கள்
முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், அந்த ரோவருக்கு பெயர் வைக்க,
சமீபத்தில் ஒரு போட்டி நடத்தப்பட்டது. அமெரிக்க பள்ளிகளில் நடத்தப்பட்ட
அந்த போட்டியில், 28 ஆயிரத்திற்கும் அதிகமான பெயர்களை, மாணவ - மாணவியர்
பரிந்துரை செய்தனர். அதிலிருந்து, சிறந்த ஒன்பது பெயர்களை, 4,700
நடுவர்கள், 'இணைய' ஓட்டெடுப்பு மூலம், தேர்வு செய்தனர். அதில், அனைவராலும்
ஏற்கப்பட்ட, 'விடாமுயற்சி' என்ற பெயர், ரோவருக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த
பெயரை, 13 வயது சிறுவன் அலெக்சாண்டர் மாதர் என்பவர், பரிந்துரை
செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment