Monday, March 2, 2020

ராஜ்நாத் சிங்கின் இரட்டை வேடக் கருத்து

"அன்று பிரார்த்தனை செய்கிறேன்" என்றவர் "இன்று கைது சரிதான்" 
ஜம்மு-காஷ்மீர் சிறப்புத் தகுதி ரத்து செய்தது முதல் 7 மாதங்களுக்கும் மேலாக காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்களை சிறையில் வைத்துள்ளனர். இந்த நடவடிக்கை சரியானதுதான் என்று ராஜநாத்சிங் கருத்து தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு இவர், அவர்கள் விடுதலை யாக நான் 'பிரார்த்தனை' செய்கி றேன் என்று கூறியிருந்தது குறிப் பிடத்தக்கதாகும்
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலங் களுக்கு சிறப்புத் தகுதி வழங்கிய சட்டப்பிரிவு 370-அய் மத்திய அரசு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்துசெய்தது.அதே போல் அம்மாநிலத்தை ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டங்களை யொட்டி, முன்னெச்சரிக்கை நட வடிக்கையாகப் பல கட்டுப்பாடு களை மத்திய அரசு அப்பகுதிகளில் விதித்தது. அணிவகுப்பு மற்றும் பேரணிகளைத் தடை செய்தல், இணையதளச் சேவை மற்றும் அலைபேசி சேவைகளைத் தடை செய்தல் ஆகியவையும் இதில் அடங்கும். பாதுகாப்புக்காக ராணுவ வீரர்களை அப்பகுதியில் அதிக அளவில் நிறுத்தியதுடன், முக்கிய அரசியல் தலைவர் பலரையும் சிறையில் வைத்தனர்.
காஷ்மீரின் முன்னாள் முதல மைச்சர்கள் பாரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உட்பட பல முக்கிய தலை வர்கள் இன்னும் விடுவிக்கப்பட வில்லை.  சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்படுவதற்கு முன்பு, அச்சு றுத்தும் அறிக்கைகளை வெளியிட் டதாகக் கூறி, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாரூக் அப்துல் லவை கடந்த செப்டம்பர் மாதம் தடுப்புக் காவலில் வைத்தனர். இவரைத் தொடர்ந்து, மெகபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா ஆகியோரும் இந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர். இவர் களை விடுதலை செய்ய வேண்டு மென அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கருத்துகளைத் தெரிவித்துவருகின் றனர்.
இந்த நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், காஷ்மீர் பிரச்சினை குறித்துப் பேசியுள்ளார். அதில், ``காஷ்மீர் அமைதியாக உள்ளது. அங்குள்ள சூழல் முன்னேறி வரு கிறது. இதைத் தொடர்ந்து தடுப்புக் காவலில் இருக்கும் அரசியல்வாதி களை விடுவிப்பதற்கான நடவடிக் கைகளும் எடுக்கப்படும். அரசாங் கம் யாரையும் துன்புறுத்தவில்லை” என்றார். காஷ்மீரின் நன்மைக ளுக்காக அரசால் சில நடவடிக் கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எல் லோரும் அதை வரவேற்க வேண் டும். தடுப்புக்காவலில் உள்ள காஷ் மீர் தலைவர்கள் ஃபாரூக் அப் துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்தி ஆகியோர் விரைவில் விடுதலையாக வேண்டும் என 'பிரார்த்தனை' செய்கிறேன். விடுதலையான பின்னர், அவர்கள் காஷ்மீரின் நிலையை மேம்படுத்த உழைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தடுப்புக் காவலில் அடைக்கப் பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு, பனிபோர்த்திய பின்னணியில் தாடியுடன் இருக்கும் உமர் அப் துல்லாவின் புகைப்படம், சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து, சமூக ஆர் வலர்கள் பலரும் காஷ்மீரின் நிலை குறித்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், பாதுகாப்புத்துறை அமைச் சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ராஜ்நாத்சிங் 23.2.2020 அன்று சண்டிகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய போது ஜம்மு காஷ்மீரின் நிலை குறித்து அரசு உன்னிப்பாக கவ னித்து வருகிறது. பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் விரைவில் விடு தலை பெறவும், காஷ்மீர் மேம்பாட் டிற்காக அவர்கள் பாடுபட வேண் டும் எனவும் நான் 'பிரார்த்தனை' செய்துகொள்கிறேன்” என்று கூறியிருந்தார். ஆனால் இன்று மீண்டும் அவர்களை சிறையில் வைத்திருப்பது சரியான முடிவு என்று கூறியுள் ளார்.  காஷ்மீரில் என்ன நடக்கிறது என்றே வெளியுலகிற்கு தெரியாத நிலை நிலவுகிறது. ஃபரூக் அப்துல் லாவின் விடுப்பு விண்ணப்பம் மூன் றுமுறை நிராகரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மத்திய அரசின் ஒரு முக்கியமான அமைச்சர், அந்தத் தலைவர்களின் விடுதலை குறித்து பட்டும்படாமல் பேசியுள்ளார்.


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...