Friday, March 6, 2020

ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் ஏவும் பணி ஒத்திவைப்பு - இஸ்ரோ அறிவிப்பு


இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் செயற்கை கோள்களை பொருத்தி விண்ணில் செலுத்தி வருகிறது. மேலும் பூமி கண்காணிப்பு, காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே அறிந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான செயற்கைகோள்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது பூமி கண்காணிப்புக்காக ஜிசாட்-1 என்ற செயற்கைகோளை இஸ்ரோ தயாரித் துள்ளது.
இதனை ஆந்திர மாநிலம் சிறீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தில் உள்ள 2-ஆவது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-10 என்ற ராக்கெட் மூலம் இன்று (வியாழக்கிழமை) மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...