Friday, February 28, 2020

உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும்!


சீனாவை உலுக்கி வரும், கரோனா வைரஸ் உலக நாடுகளுக்கும் பரவினால், உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் அபாயம் உள்ளது என, மூடிஸ் என்ற பிரபல அமெரிக்க வர்த்தக மற்றும் நிதிச்சேவை நிறுவனம், எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இது தொடர்பாக, மூடீஸ் அனலிடிக்ஸ் அமெரிக்க நிறுவனத்தின், தலைமை பொருளாதார வல்லுனர் மார்க் ஸாண்டி, நேற்று வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவித்துள்ளதாவது:
சீன பொருளாதாரத் திற்கு பலத்த அடியை கொடுத்துள்ள, கொரோனா வைரஸ் தாக்குதல், இப்போது, ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் நோய் தாக்கம், பல விதங்களில், உலக பொருளா தாரத்தை பாதிக்கும் அபாயம் உள்ளது. சுற்றுலா சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் நோய், அங்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், அந்நாட்டின் சுற்றுலா பயணம் மற்றும் தொழில் முழுமையாக முடங்கியுள்ளது.உலக விமான நிறுவனங்கள், சீனாவுக்கு தங்களின் பயண சேவையை நிறுத்தியுள்ளன. சொகுசு கப்பல் நிறுவ னங்கள், ஆசியா  பசிபிக் பகுதியை தவிர்க்கின்றன.இது, அமெரிக்கா உட்பட உலகின் முக்கிய சுற்றுலா மையங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், ஆண்டுக்கு, 30 லட்சம் சீன சுற்றுலா பயணியர், அமெரிக்கா செல்வது வழக்கம். அது, கடந்த சில மாதங்களாக தடைபட்டுள்ளதால், அமெரிக்காவின் சுற்றுலா துறை படுத்து உள்ளது.அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் பிற நாட்டினரில், சீனர்கள் தான், அதிகமாக செலவு செய்ப வர்கள்.இந்நிலையில், இத்தாலியின் மிலன் நகரில், கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட் டுள்ளதால், அய்ரோப்பிய கண்டத்தின் முக்கிய சுற்றுலா கேந்திரமாக விளங்கும் இத்தாலியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சீன தொழிற்சாலைகள் பல மூடப்பட்டுள்ளதால், அங்கிருந்து வரும் உதிரி பாகங்களை நம்பியுள்ள அமெரிக்காவின், ஆப்பிள், நைக், ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள், பல விதமான பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. இதனால், உதிரி பாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை ஏறும் அபாயம் உள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...