நீதிபதியின்
பதவி பறிப்பு
புதுடில்லி,
பிப். 29 அரசுப் பணியில் சேர்ந்த
பெண் ஊழி யர்களுக்குப் பாடம்
நடத்திய நீதிபதி ஒருவர், இரட்டை
அர்த்தம் தொனிக்கப் பேசிய தால் வேலையை
இழக்க நேரிட்டது.
ஜார்கண்ட்
மாநிலம் ராஞ்சியில் உள்ள அரசு நிர்வாக
பயிற்சி மய்யத்தின் துணை இயக்குநராக இருந்தபோது
அந்த நீதிபதிக்கு அரசுப் பணிக்குத் தேர்வு
செய்யப் பட்ட பெண் ஊழியர்களுக்குப்
பாடமும், பயிற்சியும் அளிக் கும் பொறுப்பு
அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ‘சபல’ பேர் வழியான
அந்த நீதிபதி பாடம் நடத்துவதாகச்
சொல்லிக்கொண்டு, ஆபாசமாகப் பேசியுள்ளார். சம்பந்தமே இல்லாமல் அரு வருக்கத் தக்க
வகையில் பாடம் நடத்தி இருக்கிறார்.
இரட்டை அர்த்தம் தொனிக்க ‘பாடம்' போதிப்பதும் உண்டு.
இதனால் முகம் சுழித்த பெண்
ஊழியர்கள் ஒரு கட்டத்தில் பொறுமை
இழந்து புகார் அளித்து விட்டனர்.
அவர் மீது இன்னொரு வழக்கும்
பதிவானது. ஜார் கண்ட் மாநிலம்
கோட்டாவில் உள்ள குடும்ப நல
நீதிமன்ற முதன்மை நீதிபதியாக இருந்த
போது சலவைத் தொழிலாளி ஒருவரின்
தலையில் இரும்புக் கம்பியால் சூடு வைத்துள்ளார். காரணம்?
அவரின் உடை களை சலவைக்காரர்
சரியாகத் தேய்க்கவில்லையாம், அந்த கோபத்தில் அவருக்கு
நீதிபதி கொடுத்த தண்டனை இது.
இந்த இரு வழக்குகளை
விசாரித்த ஜார்கண்ட் உயர்நீதி மன்றம், அந்த நீதிபதிக்குக்
கட்டாய ஓய்வு வழங்கி வீட்டுக்கு
அனுப்பி விட்டது. இதனை எதிர்த்து அவர்
உச்ச நீதிமன்றத்துக்குப் போனார்.
வழக்கை
நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் , தீபக்
குப்தா ஆகியோர் விசாரித்தனர். பாடம்
நடத்தியபோது அந்த நீதிபதி மிகவும்
மோசமான ஆபாச வார்த்தைகளைப் பேசி
யதைக் கண்டறிந்தனர்.
உச்சநீதிமன்றத்
தீர்ப்பு
‘‘நீதித்துறையில்
ஒரு சின்ன பிழையைக் கூட
பொறுத்துக் கொள்ள முடியாது என்று
கண்டித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அவருக்குக் கட் டாய ஓய்வு
கொடுத்தது சரியே'' என்று தீர்ப்பு
எழுதி ஜார்கண்ட் உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதிப்படுத்தினர்.
No comments:
Post a Comment