இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான
நாராயணமூர்த்தி யின் மருமகன் ரிஷி சுனக் (39) . இந்திய வம்சாவளியான ரிஷி
இங்கிலாந்து நாட்டின் யார்க் ஷிரி மாகாணத்தில் உள்ள ரிஷ்மவுண்ட் தொகுதி
நாடா ளுமன்ற உறுப்பினராவார். இவருக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள்
அக்ஷதாவுக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் முடிந்தது.
ரிஷி சுனக் இங்கிலாந்தில் தற்போது
ஆட்சியில் உள்ள பழமைவாத கட்சியின் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசின்
நிதித்துறையில் முக் கிய பொறுப்பில் இருந்துவந் தார்.
இதற்கிடையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்
நடந்துமுடிந்த தேர்தலில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சி வெற்றி
பெற்ற போது நாட் டின் அப்போதைய நிதி அமைச் சராக இருந்த சஜீத் ஜாவித் தனது
பதவியில் இருந்து வில கினார். இதனால் நிதி அமைச் சர் பதவி காலியாக
இருந்தது.
இந்நிலையில், போரிஸ் ஜான்சன் தனது
அமைச்சரவை யில் நேற்று புதிய மாற்றங்களை அறிவித்தார். அதில் ரிஷி சுனக்
கிற்கு இங்கிலாந்து நாட்டின் நிதி அமைச்சர் பதவி வழங் கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் பிரதமருக்கு அடுத்த
நிலையில் மிகவும் சக்திவாந்த பதவியாக கருதப்படும் நாட்டின் நிதி அமைச்சர்
பதவி இந்திய வம்சாவளியும், இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்
நாராயணமூர்த்தி யின் மருமகனுமான ரிஷிக்கு வழங்கப்பட்டுள்ளது இங்கி லாந்து
வாழ் இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment