Thursday, February 20, 2020

35,000 ஊழியர்கள் நீக்கம்: எச்எஸ்பிசி வங்கி அதிரடி


பன்னாட்டு அளவில்  எச்எஸ் பிசி வங்கி ரூ.7 லட்சம் கோடி  முதலீட்டை முடிவு செய்துள் ளது. 3 ஆண்டுகளில் 35,000 பேரை பணி நீக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளது. இங்கி லாந்தைச் சேர்ந்த எச்எஸ்பிசி வங்கி, ஆசிய நாடுகளில் உள்ள தனது கிளைகளை எல்லாம் ஹாங்காங்கில் உள்ள தலை மையகம் மூலம் இயக்கி வரு கிறது.
கடந்த 2008ஆம் ஆண்டில் பன்னாட்டு அளவில் ஏற் பட்ட பொருளாதார நெருக் கடியில் சிக்கி எச்எஸ்பிசி வங்கி தடுமாறியது. இதைய டுத்து, தனது தனியார் வங்கி சேவை கிளைகள் மற்றும் முதலீடு தொழில்களை ஒன் றாக இணைத்து நஷ்டத்தை குறைக்க நடவடிக்கை எடுத் தது. அதன் பின்னர், அது போன்ற ஒரு நிலை வங்கிக்கு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் வங்கி யின் தொழிலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதுபோல் அய்ரோப்பிய யூனியனில் இருந்து விலகும் இங்கிலாந் தின் முடிவால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதை யடுத்து மற்ற வங்கிகளுடன் போட்டி போட்டு தொழில் செய்வது பெரும் சவாலாக மாறியது. இதையடுத்து, தனது முதலீட்டில் சுமார் 100 பில்லியன் டாலர் (ரூ.7 லட்சம் கோடியை) திரும்பப் பெறவும், தனது மொத்த வங்கி ஊழியர்கள் 2,35,000 பேரில் சுமார் 2 லட்சம் பேரை மட்டும் வைத்துக்கொண்டு அடுத்த மூனறு ஆண்டுகளில் சுமார் 35,000 பேரை நீக்குவது என்றும் முடிவு செய்துள்ளது.இவ்வாறு வங்கியின் இடைக் காலத் தலைவர் நோயல் கியூன் தெரிவித்துள்ளார் என் பது குறிப்பிடத்தக்கது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...