தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின
திருத்தச் சட்டம், 2018 இந்திய அரசியல மைப்புபடி செல்லும் என்று
உச்சநீதிமன்றம் உறுதி செய் துள்ளது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின
பிரிவினர் மீது ஜாதிய முறையில் நடத்தப்படும் தாக்குதல்கள், கொடுமைகள்
போன்றவற்றை தடுக்கும் வகை யில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு
தாழ்த்தப்பட்டோர் மற் றும் பழங்குடியினர் வன் கொடுமை தடுப்பு சட்டம்
கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டத்தின்படி, புகார் தாரரின்
புகாரை ஏற்று, எந்த வித விசாரணையுமின்றி குற்றம் சாட்டப்பட்டவரை கைது
செய்ய முடியும். இந்த சட்டம் முறைகேடாக பயன்படுத்தப் படுவதாக புகார்கள்
எழுந்தன. இது தொடர்பான வழக்கில், கடந்த ஆண்டு மார்ச் மாதம், வன்கொடுமை
சட்டத்தின்படி கொடுக்கப் படும் புகார்களில் உடனடியாக யாரையும் கைது
செய்யக்கூடாது. உரிய விசா ரணைக்குப் பிறகே கைது நட வடிக்கையை மேற்கொள்ள
வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, இந்த சட்டத்தில் கடந்த
ஆண்டு மத்திய பாஜக திருத்தம் கொண்டு வந்து கடந்த ஆண்டு மழைக்கால
கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச
நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள்மீது நீதிப திகள்
ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அமர்வு விசாரணை நடத்தி வந்தது. ஏற்கெனவே
நடைபெற்ற விசாரணையின் போது, மசோதாவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள்,
மத்தியஅரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து பல் வேறு கட்ட விசாரணைகள்
நடை பெற்று முடிந்த நிலையில், நேற்று (10.2.2020) தீர்ப்பு வழங்கப் பட்டது.
தீர்ப்பில், மத்தியஅரசு கொண்டு வந்த தாழ்த்தப்பட் டோர் மற்றும்
பழங்குடியினர் திருத்தச் சட்டம், 2018 அரசியல மைப்பு படி செல்லுபடியாகும்
என்று கூறி உள்ளது.
No comments:
Post a Comment