நரேந்திர மோடிக்கு மட்டும் அளிக்கப்பட்டு வரும் எஸ்பிஜி பாதுகாப்புக்கு ஒரு நாளைக்கு 1.62 கோடி ரூபாய் செலவு ஆவது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டப்படி எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை( கருப்பு
பூனைப்படை) இனி பிரதமர் பதவியில் உள்ளவர்களுக்கு (மோடிக்கு) மட்டும் தான்
அளிக்கப்படும். மற்றவர்களுக்கு துணை ராணுவப்படை பாது காப்பு
அளிக்கப்படுகிறது. இந் நிலையில் திமுகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்
தயாநிதி மாறன் மக்களவையில் எஸ்பிஜி பாதுகாப்பு மற்றும் மத்திய ரிசர்வ்
காவல் படையில் தற்போது உள்ள வீரர்களின் விவரங்கள் குறித்து கேள்வி
எழுப்பினார்.
இதற்கு எழுத்துப்பூர்வமாக மத்திய உள்துறை
இணைய மைச்சர் ஜி கிஷான் ரெட்டி பதில் அளித்தார். அவர் நாடாளுமன் றத்தில்
பதில் அளித்து பேசுகையில் எஸ்பிஜி பாதுகாப்பு பிரதமரை மட்டுமே
பாதுகாக்கிறது, பாது காப்பு காரணங்களுக்காக எத் தனை பாதுகாவலர்கள் என்ற
விவரங்களை வெளியிட முடி யாது. இதேபோல் விஅய்பிக்களை பாதுகாக்கும்
சிஆர்பிஎப் வீரர் களின் விவரம் குறித்தும் பாது காப்பு காரணங்களுக்கான
வெளியிட முடியாது என்றார். எனினும் சிஆர்பிஎப் வீரர்கள் நாட்டில் 56
முக்கிய விஅய்பிக்களை பாதுகாக் கிறார்கள் என்றார்.
2020-_21 ஆம் ஆண்டு மத்திய நிதி நிலை
அறிக்கையில் சிறப்பு கமாண்டோக்கள் 3,000 பேர் கொண்ட எஸ்பிஜிக்கு ஒதுக்கீடு
செய்யப்பட்டதன் அடிப்படை யில் தயாநிதி மாறன் எழுப்பிய இந்த கேள்வி
முக்கியத்துவம் பெறுகிறது. உயரடுக்கு எஸ்பிஜி படைக்கு 2020_-21 ஆம் ஆண்டில்
ரூ. 592.55 கோடியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில்
ஒதுக்கி உள் ளார்.
இது கடந்த ஆண்டை ஒப் பிடும் போது 10 சதவீதம் அதிகம் ஆகும்.
கடந்த ஆண்டு எஸ்பிஜி சட்டம்
திருத்தப்படுவதற்கு முன் னர், நான்கு விஅய்பிகளின் பாது காப்பிற்கு
உயரடுக்கு எஸ்பிஜி பாதுகாப்பு பொறுப்பு வகித்தது. அதாவது பிரதமர் மோடி மட்
டுமில்லாமல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது குழந்தைகள்
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய நான்கு பேருக்கு எஸ்பிஜி
பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் 2019_-20 ஆம் ஆண்டில் நான்கு
விஅய்.பி.க்களை பாதுகாக்க எஸ்பிஜிக்கு பட் ஜெட்டில் 540.16 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன் படி ஒரு தனிநபரை பாதுகாக்க ஆகும்
செலவு ரூ .135 கோடி, அதாவது மோடி மற்றும் சோனியா காந்தி உள்ளிட்ட நான்கு
விஅய்பிகளைப் பாது காப்பதற்கான சராசரி செலவு தலா ரூ .135 கோடி.
ஆனால் இப்போது ரூ. 592.55 கோடி
ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே மோடிக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு என்பதால்
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 340 சதவீதம் அதிகம் ஆகும். அதாவது தினமும்
பிரதமர் மோடியின் எஸ்பிஜி பாதுகாப் புக்கு 1.62 கோடி ரூபாய்.செலவு ஆகும்.
No comments:
Post a Comment