மியான் மரில் கடந்த 2017ஆம் ஆண்டு
ராணுவத்தின் தீவிரமான ஒடுக்குமுறை நடவடிக்கைக ளால் பாதிக்கப்பட்ட ரோகிங்
கியா மக்கள் உயிருக்குப் பயந்து வெளிநாடுகளுக்கு தப் பிச் சென்றனர். 7
லட்சத்துக் கும் அதிகமான ரோகிங்கியாக் கள் இவ்வாறு வெளியேறினர். குறிப்பாக
வங்கதேசத்திற்கு சாரைசாரையாக சென்று அக திகளாக தஞ்சம் அடைந்தனர். அவர்கள்
ஏராளமான முகாம் களில் தங்கவைக்கப்பட்டுள்ள னர்.
பின்னர் அவர்களை மியான்மருக்கு அனுப்புவதற் கான பணிகளை வங்கதேச அரசு மேற்கொண்டது.
ஆனால், அந்த முயற்சி தோல்வி அடைந்தது. அதே
சமயம், வங்கதேசத்தில் உள்ள முகாம்களில் இருந்து அகதி கள் சிறந்த
வாய்ப்புகளை பெறுவதற்காக மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுக ளுக்கு வெளியேற
முயற்சித்து வருகிறார்கள். இதற்காக அவர்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான
கடல் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் செவ்வாய்க் கிழமை அதிகாலை
வங்கதே சத்தின் காக்ஸ் பஜார் முகா மில் இருந்து ரோகிங்கியா அகதிகளை ஏற்றிச்
சென்ற படகு, செயின்ட் மார்ட்டின் தீவு அருகே கடலில் மூழ்கி
விபத்துக்குள்ளானது. இதுபற்றி தகவல் அறிந்த மீட் புக்குழுவினர் அங்கு
சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 14 பேர் கடலில் மூழ்கி
உயிரிழந்திருப் பதாகவும், 70 பேர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பதாகவும்
வங்கதேச அதிகாரிகள் தரப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் கடலில்
மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படு கிறது. அவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.
No comments:
Post a Comment