Friday, February 28, 2020

ஜி.அய்.சாட்-1 செயற்கைக்கோள் மார்ச் 5இல் ஏவப்படும்: இஸ்ரோ தகவல்


புவி கண்காணிப்பு மற்றம் வானிலை ஆய்வுகளுக்கான, 'ஜிஅய்சாட் - 1' செயற்கைக்கோள், வரும் மார்ச், 5ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது' என, 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரோ, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. இந்த ஆண்டு, நாட்டின் பாதுகாப்புக்காக மட்டும், 10 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவ, இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.புவி கண்காணிப்பு, வானிலை ஆய்வு, பேரிடர் மீட்பு பணிகள் ஆகியவற்றுக்காக, இரண்டு, 'ஜியோ இமேஜிங்' செயற்கைக் கோள்களை தயாரிக்க, இஸ்ரோ முடிவு செய்தது. இதற்கு, 'ஜிஅய்சாட்- 1, ஜிஅய்சாட் - 2' என, பெயரிடப்பட்டது.இதில், ஜிஅய்சாட் - 1அய், மார்ச் மாதத்திலும், ஜிஅய்சாட் - 2அய், ஐன் மாதத்திலும் விண்ணில் செலுத்த, இஸ்ரோ திட்டமிட்டது.
இதன்படி வரும், மார்ச் 5ஆம் தேதி, ஜிஅய்சாட் - 1 விண்ணில் செலுத்தப்பட உள்ளது என, இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம், சிறீஅரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தின், இரண்டாவது தளத்திலிருந்து, 5ஆம் தேதி மாலை, 5:43 மணிக்கு, ஜிஅய்சாட் - 1 விண்ணில் செலுத்தப் பட உள்ளது. ஜி.எஸ்.எல்.வி., - எப் 10 ராக்கெட், இந்த செயற்கைக் கோளை விண்ணுக்கு சுமந்து செலகிறது.
ஜி.எஸ்.எல்.வி., வரிசையில், விண்ணுக்கு இஸ்ரோ செலுத்தும், 14ஆவது ராக்கெட் இது. ஜிஅய்சாட் - 1 செயற்கைக்கோள், 2,275 கிலோ எடை கொண்டது. விண்ணில் செலுத்தப்பட்ட பின், இது புவி கண் காணிப்பு, வானிலை ஆய்வு பணிகளில் ஈடுபடும் என, இஸ்ரோ தெரிவித்துள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...