இப்பிரச்சினைகளில் பொரு ளாதார வல்லுநர்கள்
கூறும் ஆலோசனைகளுக்கு மோடி அரசு மதிப்பளிப்பது இல்லை. இதனால், 'நாட்டை
அழித்த பழி தங்கள் மீது வந்துவிடுமோ?' என்று பயந்து, பல்வேறு பொருளாதார
வல்லுநர்கள், தங்களின் பதவியையே துறந்து போய் விட்டனர்.
மோடியின் நிர்வாக அலங் கோலத்தைச் காணச்
சகிக்காத சிலர்,மறைமுகமாக மட்டுமன்றி நேரடியாகவும் விமர் சனங்களை வைத்து
வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு ஊழல்பட்டம் கட்டி, அவர்களைக் கொத்துக்
கொத்தாக பணி நீக்கம் செய்யும் வேலையில் மோடி அரசு இறங்கியுள்ளது.
மற்றொரு புறத்தில், அரசியல் சாசனத்திற்கு
விரோதமான முறையில், சட்டப்பிரிவு 370 நீக்கம், குடியுரிமைத் திருத்தச்
சட்டம் மற்றும் குடியுரிமைப் பதிவேடு போன்ற மக்கள் விரோதச் சட்டங்களை
நிறைவேற்றியதன் மூலம், நாட்டையும் ஒரு கொந்தளிப்பான நிலைக்கு மோடி அரசு
தள்ளியிருக்கிறது.
இத்தகைய மோடி அரசின் செயல்கள், நாடு
முழுவதும் உள்ள அய்ஏஎஸ், அய்பிஎஸ், அய்ஆர்எஸ் அதிகாரிகளி டையே கடுமையான
அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருப்பது, அவர்களின் சமூக
வலைத்தள கருத்துப் பகிர்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
நாட்டின் அரசமைப்பு நெறிமுறைகளை
மாற்றுவதற்கான முயற்சிகள், மூத்த அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரிகளை
எதேச்சதிகாரமான முறையில் பழிவாங்குதல் போன்ற மோடி அரசின் நடவடிக்கைகள்,
அரசு ஊழியர்கள் மத்தியில் ஒருவிதமான அமைதியின்மையை ஏற்படுத்தி இருப்பதாக
அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மூடிய வாட்ஸ் ஆப் குழுவில், தனது கருத்தை
பகிர்ந்துள்ள அய்ஏஎஸ் அதிகாரி ஒருவர், "நம்மை நாமே முட்டாளாக்க வேண் டாம்;
நமக்கு இந்த அரசால் எந்தபாதுகாப்பும் இல்லை. நாட்டின் அரசமைப்புக்கும்
கூட பாதுகாப்பு இல்லை.தற்போது இருப்பது ஒரு முதலாளி - அடிமை உறவு" என்றும்
புலம் பியுள்ளார்.
மற்றொரு அய்ஏஎஸ் அதிகாரி, ஜெர்மன்
லுத்தரன் ஆயர் மார்ட்டின் நீமல்லரின் புகழ்பெற்ற கவிதை வரிகளைப் பதிவிட்டு,
குமுறலை வெளிப் படுத்தியுள்ளார். அரசமைப்பு, நாட்டின் ஜனநாயக மற்றும்
மதச் சார்பற்ற அடித்தளத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அந்த கருத்துக்கள்
அமைந் துள்ளன.
ஏற்கெனவே, நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்
நடைபெற்ற நேரத்தில், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் தேர்தல்
விதிகளை மீறியது தொடர்பாக, மூன்று தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா
கடுமையான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். இந் நிலையில், தேர்தலில்
வெற்றிபெற்று பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்த நிலையில், அசோக் லவாசா வருமான
வரித் துறை மூலம் குறி வைக்கப்பட் டிப்பதையும் சிலஅதிகாரிகள் அச்சத் துடன்
பகிர்ந்துள்ளனர்.
அதேபோல அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதி காரிகள்
காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக இருக்கிறார்களா? என்பதை வேவுபார்த்து,
மத்திய அரசு அவர்கள் மீதும் புலனாய்வு அமைப்புக்களை ஏவிவிடுவதாகவும் அதி
காரிகள் கூறியுள்ளனர்.
முன்னாள் நிதி ஆயோக் தலைமை நிர்வாக
அதிகாரி சிதுன்சிறீ குல்லர் உட்பட 6 அய்ஏஎஸ் அதிகாரிகள், அய்என்எக்ஸ்
மீடியா வழக்கில் சிபிஅய் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதையும் அவர்கள்
உதாரணமாகக் காட்டியுள் ளனர்.
இந்த 6 அய்ஏஎஸ் அதிகாரிகள் மற்றும்
தேர்தல் ஆணையர் அசோக் லவாசா ஆகி யோர் பழிவாங்கப்பட்டது மட்டுமன்றி,
முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் கார்க் அல்லது முன்னாள் மனிதவள
மேம்பாட்டுச் செயலாளர்கள் ஆர். சுப்பிரமணியம் மற்றும் ரினா ரே போன்ற பல
அதிகாரிகள் நடவடிக்கைக்கு உள் ளாக்கப்பட்டதையும் விவாதித்துள்ளனர்.
இவற்றையெல்லாம் குறிப்பிட்டு பதிவிட்டுள்ள
மூத்த உயர் அதிகாரி ஒருவர், "இது போன்ற இடுகைகளை நான் குழுக்களில்
பகிரும்போது, சில அதி காரிகள் என்னுடன் உடன்படுகிறார்கள் என்றும், சிலர்
தனிப் பட்ட முறையில் எனக்குச் செய்திகளை அனுப்பு கிறார்கள், சில சமயங்களில்
அவர்கள் என்னை எச்சரிக்கையாக இருக்கச் சொல்கிறார்கள்" என்று
தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தங்களுக்குள்ளான மனப்
புழுல்கள்களை பகிரங்கமாக அல்லாமல் மூடிய வாட்ஸ் ஆப் (Offline Whatsapp)
குழுக்கள் மூலமாக பகிர்ந்துகொள்ளும் அதிகாரிகள், தங்களை வழக்குகள், நட
வடிக்கைகள் மூலம் மத்திய அரசு அச் சுறுத்த நினைக்கலாம்; இதனால் உண் மையில்
மத்திய அரசுக்குத்தான் பின்ன டைவு ஏற்படும் என்றும் எச்சரிக்கை
செய்துள்ளனர்.
No comments:
Post a Comment