Monday, January 6, 2020

சரிகிறது தொழில் வளம்

ரூ.23 ஆயிரம் கோடி சொத்துகளை விற்க எம்டிஎன்எல்  நிறுவனம் முடிவாம்

பொதுத்துறை நிறுவனமான மகாநகர் டெலி காம் நிகாம் லிமிடெட் (எம்டிஎன்எல்) நிறுவனம் வரும் நிதி ஆண்டிலிருந்து லாபம் ஈட்ட இலக்கு நிர்ணயித் துள்ளது. அதற்காக நிறுவனம் வசம் உள்ள ரூ.23 ஆயிரம் கோடி சொத்துகளை விற்க முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக முதலீடு மற்றும் பொது சொத்து நிர்வாகத் துறைக்கு விற்பனை தொடர்பான திட்ட அறிக்கையை எம்டி என்எல் நிர்வாகம் அளித் துள்ளது. இதில் முதல் கட்டமாக மும்பையில் உள்ள 36 ஏக்கர் நிலம், டில்லியில் உள்ள கடை களுடன் கூடிய அலுவலக வளாகம், நொய் டாவில் உள்ள அலுவலர் குடியிருப்பு உள்ளிட் டவற்றை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.6,200 கோடி யாகும். மும்பை மற்றும் டில்லியில் விற்பனை செய்வதற்காக அடை யாளம் காணப்பட்ட சொத்து களின் மதிப்பு ரூ.23 ஆயிரம் கோடியாகும்.
தற்போது 14,387 ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தை தேர்வு செய்துள்ளனர். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 1,700 கோடி சம்பள தொகை மீதமாகும் என்று அவர் குறிப்பிட்டார். இந்நிறுவனத்தில் உள்ள பணி யாளர்களின் எண்ணிக்கை 18,422 ஆகும்.
2020_21ஆ-ம் ஆண்டில் சொத்து விற்பனை மூலம் ரூ. 7 ஆயிரம் கோடியை திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தாக அவர் கூறினார்.
டில்லியில் மட்டும் 7 அலு வலக மற்றும் கடை வளாகங்கள் எம்டிஎன்எல்லுக்கு சொந்தமாக உள்ளன.
இது தவிர 398 அலுவலர் குடி யிருப்புகள் பல்வேறு வளாகங் களில் வாங்கப்பட் டுள்ளன. இவை அனைத்தையும் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குர் ஷித் லால் பகுதியில் உள்ள அலுவலகத்தை காலி செய்து விடமுடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 500 கோடி முதல் ரூ. 600 கோடி வரை வாடகை ஈட்ட முடியும் என அவர் தெரிவித்தார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...