Monday, January 6, 2020

ஏன் தாக்குதல் நடத்தினோம் என்று அமெரிக்கா வருந்தும் அளவிற்கு எங்கள் முடிவு இருக்கும்: ஈரான்


ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்கு தலில், ஈரானின் 2ஆவது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட் டார். இந்த தாக்குதலில், அவ ருடன் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ் மற்றும் 6 பேரும் கொல்லப்பட்டனர்.
இதனால் அமெரிக்காவுக் கும் ஈரானுக்கும் இடையில் அமைதியற்ற நிலை ஏற்பட்டு உள்ளது. பழிக்கு பழி வாங்கு வோம் என்று ஈரான் கூறி வரும் நிலையில், நாங்கள் 52 இடங்களை குறிவைத்துள் ளோம் என அமெரிக்க அதி பர் டிரம்ப் ஈரானை எச்சரித் துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்ச கத்தின் செய்தி தொடர்பாளர் அப்பாஸ் மவுசாவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அப்பாஸ் மவுசாவி கூறுகையில் ‘‘அமெ ரிக்காவுடன் நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால் எந்தவொரு சூழ்நிலைக்கும் தயாராக உள்ளோம். தளபதி கொல்லப்பட்டதற்கு தெஹ் ரான் பழிக்குப்பழி வாங்கியே தீரும். அதிகாரிகள், அமெ ரிக்கா ஏன் தாக்குதல் நடத்தி னோம் என்று வருந்தும் அள விற்கு முடிவை எடுப்பார்கள். அதே சமயம் போரை முன்னி லைப் படுத்தாது’’ என்றார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...